நேற்று என்னோட குட்டி ஃப்ரண்ட் பப்புவ கூட்டிட்டு டவுனுக்கு போனப்ப அவன் கேட்ட கேள்விகள்...
1.ரோட்டுஓரமா வச்சுருந்த மிகப்பெரிய கல்யாண பேனர்கள பாத்துட்டு ஏன் மாம்ஸ் நம்ம சொந்த காரவங்க எல்லாம் சின்னதா பத்திரிக்கை அடிச்சு வீட்ல கொண்டுவந்து குடுக்குறாங்க இவங்க ஏன் மாம்ஸ் இவ்ளோ பெரிய பத்திரிக்கை அடிச்சு ஊர் பூரா குடுக்காம ஒட்டி வச்சுருக்காங்க? வாங்க ஆளில்லையா? சொந்தபந்தம் யாரும் இல்லியா இவங்களுக்கு?
2. எ பட போஸ்டர பாத்துட்டு ஏன் மாம்ஸ் பக்கத்துல இருக்குற அந்த பட ஹீரோயின் கலர் கலரா ட்ரஸ் போட்ருக்காங்க இந்த படத்துல இருக்குற ஹீரோயின் மட்டும் கறுப்புகலரா அதுவும் இத்துனூண்டு ட்ரெஸ் போட்ருக்கு?படம் லோ பட்ஜெட்டா?
3.தியேட்டர்ல எச்சில் துப்பாதீர்ன்னு எழுதிருக்குற வாசகம் பாத்துட்டு
ஏன் மாம்ஸ் எச்சில் துப்பாதீர்ன்னு எழுதுனதுக்கு பக்கத்துல துப்பி வச்சிருக்காங்க அப்போ இனிமேல் எச்சில் துப்புங்கன்னு எழுதுனாத்தான் துப்ப் மாட்டாங்களோ?
4.பஸ்ல படியில்நிற்காதீர்ன்னு எழுதிருக்கே அப்போ படியில உக்காரலாமா மாம்ஸ்?
5.பத்திரிக்கைகளின் அறிவுத்திறன் போட்டி க்கு விடையனுப்புச்சாத்தான் நாமளுக்கு அறிவு இருக்குன்னு அர்த்தமா மாம்ஸ்?
6.பாயிண்ட் டூ பாயிண்ட் எக்ஸ்பிரஸ்ன்னு நம்ம அரசாங்க பஸ்ல வெளிப்பக்கம் எழுதிருக்கு உள்ள ட்ரைவர் சீட்டுக்கு முன்னாடி மித வேகம் மிக நன்றுன்னு எழுதிருக்கே ஏன் மாம்ஸ்?
7.ஜன்னலுக்கு வெளிய பிச்சக்காரன் காசு கேட்டு வாங்குறான் ஜன்னலுக்கு உள்ள இந்த கண்டக்டர் கேக்காம மிச்ச காச வச்சுக்கிறான் அப்போஅந்த பிச்சக்காரனும் கண்டக்டரும் ஒண்ணா மாம்ஸ்?
8.வீட்டுக்கு ஒன்று நாட்டுக்கு நன்றுன்னு குடும்ப கட்டுப்பாடு விளம்பரம் வருதே அந்த ஒரு குழந்தை திடீர்ன்னு உடல் நலம் இல்லாம போயிட்டு இறந்துருச்சுன்னா அந்த குடும்பத்த கவர்ன்மெண்ட் கவனிச்சுகிடுமா மாம்ஸ்?
9. வான் வழியா ஒலி அலைவரிசயா வர்றதால வானொலின்னு சொல்றீங்க அப்போ டீ.வி.க்கும் ஒளி வானத்துவழியாத்தான வருது அப்போ அதை வானொளின்னு தான சொல்லணும் அப்பறம் ஏன் தொலைக்காட்சின்னு சொல்றீங்க இல்லாட்டி வானொலிய தொலையொலின்னு சொல்லலாம்ல?


இந்தமாதிரியே நீ கொஸ்டின் கேட்டுட்டே இருந்தேன்னு வை நான் உன் கூட ஃப்ரண்ட்ஸிப் கட் பண்ணிடுவேன்னு சொல்லி சமாளிச்சுட்டு வந்தேன்....
