திருடன கண்டுபிடிக்குற மைக்ரோவீடியோ வந்தது போல....
உடம்புல உள்ள வியாதிய கண்டுபிடிக்க எக்ஸ்ரே வந்தது போல.....
தான் காதலியோட மனசுல யார் இருக்காங்க அப்பிடின்னு தெரிஞ்சுக்கிடவும்,
தன் மனைவி இன்னைக்கு என்ன மன நிலையில இருக்குறாங்கன்னு தெரிஞ்சுகிடவும்,
தன் மகன்,மகள் யாரையாவது காதலிக்கிறாங்களான்னு தெரிஞ்சுக்கிடவும்,
தன் சொந்தக்காரவங்க வீட்டுக்கு போனா மரியாதை கிடைக்குமான்னு தெரிஞ்சுக்கிடவும்,
தனக்கு எப்போ பதவி உயர்வு,சம்பள உயர்வு கிடைக்கும்ன்னு தெரிஞ்சுக்கிடவும்,
தனக்கு எப்போ காதல் வரும்ன்னு தெரிஞ்சுகிடவும்.
தனக்கு இன்னைக்கு பஸ் மற்றும் ட்ரெயினில் முன் பதிவு கிடைக்குமான்னு தெரிஞ்சுகிடவும்,
தன்னோட தேர்வு வினாத்தாள் முன்னமே தெரிஞ்சுக்கிடவும்,
தன்னிடம் கடன் வாங்கும் நண்பர் திரும்ப பணம் தந்துடுவாரான்னு தெரிஞ்சுகிடவும்,
தனக்கு எப்போ இறப்பு வரும்ன்னு தெரிஞ்சுகிடவும்,
ஒரு விஞ்ஞான கருவி கிடைக்குமா?
கிடைக்காதுல்ல......
அப்புறம் ஏன் கருவுல வளரும் குழந்தை ஆணா பெண்ணான்னு தெரிஞ்சுக்கிடவும் ஆளாய் பறக்குறீர்கள்? பிறப்பது ஆணாயினும் பெண்ணாயினும் ஒண்றாய் எடுத்துக்கிட வேண்டியதுதான......
நேற்று என் உறவினர் மகளுக்கு வயிற்றில் இருக்கும் குழந்தை ஆண் என ஸ்கேன் மூலம் கண்டுபிடித்து விட்டார்களாம்...பேரானந்தத்தில் தொல்லை பேசினார்கள்....
தடை போட்டாலும் காசு வாங்கிக்கொண்டு உண்மை நிலையை தெரிவிக்கும் அந்த மருத்துவரை கண்டிப்பதா?
இல்லை ஆண்குழந்தையா பெண்குழந்தையானு தெரிஞ்சுக்கிட விரும்பும் இதுபோல நண்பர்களை தண்டிப்பதா?
கிளைமாக்ஸ் பாத்துட்டு முழு படம் பாக்குறது சுவர்ஸ்யமா?
இல்லை ஆரம்பத்துல இருந்து படம் பாத்துட்டு கடைசியில கிளைமாக்ஸ் பாக்குறது சுவார்ஸ்யமா?
54 comments:
உண்மை தான்
எந்த குழந்தையானாலும் சுகம் தான் என்பது அது நீண்ட நாட்கள் கிடைக்காதவர்களுக்கு எளிதில் விளங்கும்.
செம பில்டப்போட ஆரம்பிச்சு..
ரொம்ப வெயிட்டான விசயத்தை அதன் தீவிரம் குறையாமல் அளித்துள்ளீர்கள்
பாராட்டுக்கள் வந்ந்த்
அருமையா சொல்லிருக்கீங்க
ஆமாம் மறந்தே போய்விட்டது ,
உங்களை பள்ளி அனுபவத்தை பத்தி எழுத சொல்லி அழைத்தேனே
இன்னும் நீங்க எழுதலியே ஏன் ?...
ஆமா எப்படி எல்லாம் சிந்திக்கிறாங்க...
நல்ல கருத்து..
சூப்பர்மா. செவுல்ல அறைஞ்ச மாதிரி சொல்லிட்டீங்க. கிளாஸ்.
Super Vasanth.
பல நாள் கேட்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு பழைய கேள்வியை இப்போது நீங்களும் எழுப்பியிருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் இணையதளத்தில் விஜயின் படத்தை வைத்திருக்கிறீர்கள். ஒரு நடிகன் ஒரு ஆணின் புகைப்படத்தை வைத்து ரசிக்கிறீர்கள். ஏன் நீங்கள் ஒரு நடிகையின் புகைப்படத்தை வைக்கவில்லை? நடிகைகள் எல்லாம் ஒழுங்காக நடிக்கவில்லையா? ஒரு ஆண் நீங்களே ஒரு நடிகையின் புகைப்படத்தை வைக்காத போது எந்த பெண்ணும் தன் பிளாகில் வைக்க விரும்ப மாட்டாள். ஆக இதற்கான காரணத்தை ஆராயுங்கள். அந்த காரணங்கள் நிவர்த்தி செய்யப்பட்டால் அதன் பிறகு பெண் குழந்தை தான் வேண்டும் என எல்லா பெற்றோரும் ஆலாய் பறப்பார்கள். சிந்தித்து பாருங்கள்.
ஆண் குழந்தைக்கு தான் எல்லோரும் பிரியப்படுவார்கள். முன்னேற்றப்பட வேண்டியது சமுதாயம்.
இது என்னுடைய கருத்து தவறிருந்தால் மன்னிக்கவும்.
// VISA said...

இது என்னுடைய கருத்து தவறிருந்தால் மன்னிக்கவும்.//
ஆண்களும் பெண்களும் வேறு வேறு என்று யார் கூறினார்கள்
உங்கள் பாணியிலே கூறுகிறேன் ஒரு
நாவல் எழுதுகிறீர்கள் அதன் முழு படைப்பையும் அணு அணுவாய் ரசித்து இறுதியில் க்ளைமாக்ஸ் படிப்பது நல்லதா?
இல்லை கிளைமாக்ஸ் படிச்சுட்டு முழு நாவல் படிக்குறது நல்லதா?
நீங்களே சொல்லுங்க விசா?
தொடர்ச்சியா உங்கள் விஜய் எதிர்ப்பினால் படத்தை தூக்கிட்டேன்.
படம் போடுற மாதிரி இப்போ நடிகைகள் யாரும் போஸ் குடுக்குறதில்லையே........
நல்ல பதிவு வசந்த். கடைசி செக்கன் வரைக்கும் என்ன குழந்தைங்கிற அந்த த்ரில்ல ரெண்டு தடவை அனுபவிச்சிருக்கேன்.
ஸ்கேன் பண்ணி குழந்தை எந்த வித குறையும் இல்லாம இருக்கான்னு பார்த்தா மட்டும் போதாதா?
நல்ல பதிவு வசந்த்... இவர்கள் இயற்கையின் அற்புதங்களை செயற்கையின் உதவியால் பாழாக்குபவர்கள்.
சிந்திக்க வேண்டிய கருத்து வஸந்த், அதை நனறாக சொல்லி இருக்கின்றீர்கள். திருந்த வேண்டும்.
therintha vishayam thaan remba azhaga solliyirukkeenga:)
viththiyaasamaa solleeyirukkeenga:)
vaazhththukal!!
நல்ல சிந்தனை நண்பரே..........
சில சமயம் நான் சொல்ல வருவதை சொல்லாமல் உளறி கொட்டி விடுவதுண்டு. அதற்கு ஒரு உதாரணம் உங்களுக்கு நான் போட்ட பின்னூட்டம்.
1. நீங்கள் சொல்வது போல் இறுதி வரை காத்திருந்த பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா என தெரிந்து கொள்வதில் ஒரு திரில் இருப்பது உண்மை. அதை நான் மறுக்கவில்லை. அப்படியில்லாமல் அதற்கு முன்பே ஸ்கேன் செய்து பார்ப்பது மிகவும் அற்பத்தனமான காரியம். பாருங்கள் எத்தனை குழந்தைகள் கேடாக பிறக்கிறது ஊனமாக பிறக்கிறது மூளை வளர்ச்சி இல்லாமல் பிறக்கிறது. அப்படி இருக்கும் போது நமக்கு நல்ல ஆரோக்கியத்தோடு ஒரு குழந்தை கிடைத்தால் போதும் என்று பெற்றோர்கள் நினைக்காமல் ஆணா பெண்ணா என சோதித்து பார்ப்பது மிகவும் பத்தாம் பசலித்தனம். உங்களின் அந்த கருத்தை நானும் வழி மொழிகிறேன்.
ஆனால் நான் சொல்ல வருவது வேறொன்று.
2. பெற்றோர்கள் நிறைய பேர் ஆண் குழந்தை தான் வேண்டும் என எதிர் பார்ப்பதை பற்றியது. இன்னும் பெண்கள் அவர்கள் அடைய வேண்டிய நிலையை அடைய வில்லை என்பது தான் வருத்தம். அப்படி அடையும் ஒரு காலத்தில் எல்லா பெற்றோரும் தங்களுக்கு பெண் குழந்தை வேண்டும் என்று விருப்ப படுவார்கள்.
இது தான் நான் சொல்ல வந்தது. விஜய் பற்றி ஒரு உதாரணத்துக்கு கூறினேன். சினிமாவில் ஹீரோ வர்ஷிப் இருக்கிறது என்பதை குறிக்கவே அதை சொன்னேன். சினிமாவில் பெண்கள் எப்போதும் ஒரு சாகச காறியை போல் இருப்பதில்லையே. ஹீரோவுக்கு கிடைக்கும் அதே முக்கியத்துவம் ஹீரோயினுகு கிடைப்பதில்லையே. இப்படி நிறைய துறைகளில் சமுதாயத்தில் வாழக்கையில் குடும்பத்தில் ஆக...நான் சொல்ல வந்தது அதுவே. மற்றபடி விஜய் படத்தை நீங்கள் வைத்திருப்பதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நமக்கு பிடித்த ஹீரோவின் படத்தை வைத்துக்கொள்வதில் தவறேதும் இல்லையே?
தவறாக புரிந்து கொள்ளாதீர்கள். விஜய் எதிர்பாளன் அல்ல நான். முன்னர் சொல்லி இருப்பேனா தெரியாது ஆனால் நான் ஒரு ரஜினி பைத்தியம். ஹீ ஹீ ஹீ.....
//தொடர்ச்சியா உங்கள் விஜய் எதிர்ப்பினால் படத்தை தூக்கிட்டேன்.//
அய்யா சாமி முதல்ல அந்த படத்த அங்க போடுங்க. :):):)
வசந்த் நீங்க நம்ம விஜய் படத்த தூக்கினா சுசி நாங்க எல்லாம் வருத்தப்படுவமில்ல...
சூப்பர் வசந்த். அருமையா சொல்லிருக்கீங்க.
//கிளைமாக்ஸ் பாத்துட்டு முழு படம் பாக்குறது சுவர்ஸ்யமா?
இல்லை ஆரம்பத்துல இருந்து படம் பாத்துட்டு கடைசியில கிளைமாக்ஸ் பாக்குறது சுவார்ஸ்யமா?//
இதான் ஜூப்பரு.
---
/நீங்கள் உங்கள் இணையதளத்தில் விஜயின் படத்தை வைத்திருக்கிறீர்கள். ஒரு நடிகன் ஒரு ஆணின் புகைப்படத்தை வைத்து ரசிக்கிறீர்கள். ஏன் நீங்கள் ஒரு நடிகையின் புகைப்படத்தை வைக்கவில்லை? நடிகைகள் எல்லாம் ஒழுங்காக நடிக்கவில்லையா?//
இதெல்லாம் ஓவரு.
---
விஜய் படத்த வைங்க வசந்த். உங்களுக்குப் பிடிச்ச படத்த வைக்கிறதுல தப்பேதும் இல்ல.
வசந்த் நான் அடுத்த தடவை வரும்போது விஜய் படம் இருக்க வேண்டும்...
//சந்ரு said...
வசந்த் நான் அடுத்த தடவை வரும்போது விஜய் படம் இருக்க வேண்டும்...//
போட்டாச்சு போட்டாச்சு.......யப்பா நான் விட்டாலும் நீங்க விட மாட்டிங்க போல.......
கருத்து சொல்றாராம்...!
:-)
நல்லாயிருக்கு வசந்த்!!
nice post..,keep it up
என்னது நீங்க விஜய் ரசிகரா..
போச்சு ரஜ்குமாருக்கு நடிகர்ன்னாலே புடிக்காது. இப்ப என்ன பண்ண போறார். :)
பதிவு சூப்பர். சரியான கேள்வி.
இங்கு சவுதியில் பெண் குழந்தை பிறந்தா சந்தோசம். ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒவ்வொரு மாதிரி.
இப்போதெல்லாம் அதை பற்றி சொல்லுவதில்லை என்று நினைக்கிறேன்.
2 மாதம் முன்பு கூட ஸ்கேன் பண்ணும்போது நான் என்ன குழந்தை என்று கேட்கமாட்டேன் என்று பெற்றோரும், நான் என்ன குழந்தை என்று சொல்லமாட்டேன் என்று டாக்டரும் ஒரே ஸ்டாம்ப் பத்திரத்தில் கையெழுத்திடுகிறார்களாம்
அரசாங்கம் இதில் அதிக கவனம் செலுத்தினால் நல்லது
VISA said...
பல நாள் கேட்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு பழைய கேள்வியை இப்போது நீங்களும் எழுப்பியிருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் இணையதளத்தில் விஜயின் படத்தை வைத்திருக்கிறீர்கள். ஒரு நடிகன் ஒரு ஆணின் புகைப்படத்தை வைத்து ரசிக்கிறீர்கள். ஏன் நீங்கள் ஒரு நடிகையின் புகைப்படத்தை வைக்கவில்லை? நடிகைகள் எல்லாம் ஒழுங்காக நடிக்கவில்லையா? ஒரு ஆண் நீங்களே ஒரு நடிகையின் புகைப்படத்தை வைக்காத போது எந்த பெண்ணும் தன் பிளாகில் வைக்க விரும்ப மாட்டாள். ஆக இதற்கான காரணத்தை ஆராயுங்கள். அந்த காரணங்கள் நிவர்த்தி செய்யப்பட்டால் அதன் பிறகு பெண் குழந்தை தான் வேண்டும் என எல்லா பெற்றோரும் ஆலாய் பறப்பார்கள். சிந்தித்து பாருங்கள்.
ஆண் குழந்தைக்கு தான் எல்லோரும் பிரியப்படுவார்கள். முன்னேற்றப்பட வேண்டியது சமுதாயம்.
இது என்னுடைய கருத்து தவறிருந்தால் மன்னிக்கவும்.
சமுதாயம் என்பது எதுங்க? நீங்க நான் எல்லாரும் சேர்ந்தது தான் சமுதாயம்..உண்மையை சிந்திக்க வைக்கும் இந்த பதிவில் விஜய் பத்தி தேவையில்லாத சந்தேகம்...பெண்ணை பெருமை படுத்த உதாரணமா கிடைக்கலை உங்களுக்கு இதை உங்களுக்கு வலிக்கனுமுன்னு சொல்லலைப்பா...கோவம் வேண்டாம்..
ஹேய் வசந்த சாரி நான் ரொம்ப லேட்...இந்த உண்மையை வலியாய் உணர்ந்தவள் நான்...உங்களுடைய வேர்வை பதிவு இளமை விகடனில் நீட் பகுதியில் வந்திருக்கு வாழ்த்துக்கள்....
சந்தியாவும் வருத்தப்படும் விஜய் படத்தை எடுத்திட்டால்.....
//சந்ரு said...
வசந்த் நீங்க நம்ம விஜய் படத்த தூக்கினா சுசி நாங்க எல்லாம் வருத்தப்படுவமில்ல...//
இது சந்ருவுக்கு - என்னையும் கோத்து விட்டுட்டீங்களே சந்ரு. இதுக்கு அப்புறமும் நான் சும்மா இருக்கக் கூடாதுதான். பொங்கி எழ முன்னம் வசந்தே விஜய் படத்த போட்டுட்டாரு.
இது வசந்துக்கு - என் பதிவில உங்களுக்கு ஒரு விருது காத்திருக்குங்க, வாழ்த்துக்கள்.
//போச்சு ரஜ்குமாருக்கு நடிகர்ன்னாலே புடிக்காது. இப்ப என்ன பண்ண போறார்//
ஆஹா.. இப்படியே உசுப்பேத்துங்க..
//பதிவு சூப்பர். சரியான கேள்வி.
இங்கு சவுதியில் பெண் குழந்தை பிறந்தா சந்தோசம். ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒவ்வொரு மாதிரி.//
இது எனக்கா? இருக்காதுன்னு நம்பரேன்
// நட்புடன் ஜமால் said...
உண்மை தான்
எந்த குழந்தையானாலும் சுகம் தான் என்பது அது நீண்ட நாட்கள் கிடைக்காதவர்களுக்கு எளிதில் விளங்கும்.
//
ஆமாம் அண்ணா .......
//கதிர் said...
செம பில்டப்போட ஆரம்பிச்சு..
ரொம்ப வெயிட்டான விசயத்தை அதன் தீவிரம் குறையாமல் அளித்துள்ளீர்கள்
பாராட்டுக்கள் வந்ந்த்//
நன்றிகள் கதிர்
// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமையா சொல்லிருக்கீங்க
ஆமாம் மறந்தே போய்விட்டது ,
உங்களை பள்ளி அனுபவத்தை பத்தி எழுத சொல்லி அழைத்தேனே
இன்னும் நீங்க எழுதலியே ஏன் ?...//
விரைவில் எழுதுறேன் நண்பா.....
// சந்ரு said...
ஆமா எப்படி எல்லாம் சிந்திக்கிறாங்க...//
வருகைக்கு நன்றி சந்ரு
//கார்த்திகைப் பாண்டியன் said...
நல்ல கருத்து..//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா
// S.A. நவாஸுதீன் said...
சூப்பர்மா. செவுல்ல அறைஞ்ச மாதிரி சொல்லிட்டீங்க. கிளாஸ்.//
நன்றிகள் நவாஸ் தொடர் உற்சாகப்படுத்தலுக்கு........
//வினோத்கெளதம் said...
Super Vasanth.//
thankS vinoth
// சுசி said...
நல்ல பதிவு வசந்த். கடைசி செக்கன் வரைக்கும் என்ன குழந்தைங்கிற அந்த த்ரில்ல ரெண்டு தடவை அனுபவிச்சிருக்கேன்.
ஸ்கேன் பண்ணி குழந்தை எந்த வித குறையும் இல்லாம இருக்கான்னு பார்த்தா மட்டும் போதாதா?//
வருகைக்கும் கருத்துக்கும் விருதுக்கும் நன்றி சுசி
// reena said...
நல்ல பதிவு வசந்த்... இவர்கள் இயற்கையின் அற்புதங்களை செயற்கையின் உதவியால் பாழாக்குபவர்கள்.//
நன்றி ரீனா தங்கள் கருத்துக்கும் முதல் வருகைக்கும்.......
// ஷஃபிக்ஸ் said...
சிந்திக்க வேண்டிய கருத்து வஸந்த், அதை நனறாக சொல்லி இருக்கின்றீர்கள். திருந்த வேண்டும்.//
நன்றி நண்பா.......
// இரசிகை said...
therintha vishayam thaan remba azhaga solliyirukkeenga:)
viththiyaasamaa solleeyirukkeenga:)
vaazhththukal!!//
நன்றி ரசிகை தங்கள் முதல் வருகைக்கு....
//முனைவர்.இரா.குணசீலன் said...
நல்ல சிந்தனை நண்பரே..........//
வருகைக்கு நன்றி குணா....
//
எவனோ ஒருவன் said...
சூப்பர் வசந்த். அருமையா சொல்லிருக்கீங்க.
//கிளைமாக்ஸ் பாத்துட்டு முழு படம் பாக்குறது சுவர்ஸ்யமா?
இல்லை ஆரம்பத்துல இருந்து படம் பாத்துட்டு கடைசியில கிளைமாக்ஸ் பாக்குறது சுவார்ஸ்யமா?//
இதான் ஜூப்பரு.
---
/நீங்கள் உங்கள் இணையதளத்தில் விஜயின் படத்தை வைத்திருக்கிறீர்கள். ஒரு நடிகன் ஒரு ஆணின் புகைப்படத்தை வைத்து ரசிக்கிறீர்கள். ஏன் நீங்கள் ஒரு நடிகையின் புகைப்படத்தை வைக்கவில்லை? நடிகைகள் எல்லாம் ஒழுங்காக நடிக்கவில்லையா?//
இதெல்லாம் ஓவரு.
---
விஜய் படத்த வைங்க வசந்த். உங்களுக்குப் பிடிச்ச படத்த வைக்கிறதுல தப்பேதும் இல்ல.//
நன்றி எவனோ ஒருவன்
//கலையரசன் said...
கருத்து சொல்றாராம்...!
:-)
நல்லாயிருக்கு வசந்த்!!//
மீண்டும் இந்தப்பக்கம் வர வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறீர்கள்
// இளமாயா said...
nice post..,keep it up//
வருகைக்கு நன்றி இளமாயா
//குறை ஒன்றும் இல்லை !!! said...
என்னது நீங்க விஜய் ரசிகரா..//
ஆமாங்ணா.....
// அக்பர் said...
போச்சு ரஜ்குமாருக்கு நடிகர்ன்னாலே புடிக்காது. இப்ப என்ன பண்ண போறார். :)
பதிவு சூப்பர். சரியான கேள்வி.
இங்கு சவுதியில் பெண் குழந்தை பிறந்தா சந்தோசம். ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒவ்வொரு மாதிரி.
//
வருகைக்கு நன்றி அக்பர்
//அபுஅஃப்ஸர் said...
இப்போதெல்லாம் அதை பற்றி சொல்லுவதில்லை என்று நினைக்கிறேன்.
2 மாதம் முன்பு கூட ஸ்கேன் பண்ணும்போது நான் என்ன குழந்தை என்று கேட்கமாட்டேன் என்று பெற்றோரும், நான் என்ன குழந்தை என்று சொல்லமாட்டேன் என்று டாக்டரும் ஒரே ஸ்டாம்ப் பத்திரத்தில் கையெழுத்திடுகிறார்களாம்
அரசாங்கம் இதில் அதிக கவனம் செலுத்தினால் நல்லது//
ஆமா அபு வருகைக்கு மிக்க நன்றி
//தமிழரசி said...
VISA said...
பல நாள் கேட்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு பழைய கேள்வியை இப்போது நீங்களும் எழுப்பியிருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் இணையதளத்தில் விஜயின் படத்தை வைத்திருக்கிறீர்கள். ஒரு நடிகன் ஒரு ஆணின் புகைப்படத்தை வைத்து ரசிக்கிறீர்கள். ஏன் நீங்கள் ஒரு நடிகையின் புகைப்படத்தை வைக்கவில்லை? நடிகைகள் எல்லாம் ஒழுங்காக நடிக்கவில்லையா? ஒரு ஆண் நீங்களே ஒரு நடிகையின் புகைப்படத்தை வைக்காத போது எந்த பெண்ணும் தன் பிளாகில் வைக்க விரும்ப மாட்டாள். ஆக இதற்கான காரணத்தை ஆராயுங்கள். அந்த காரணங்கள் நிவர்த்தி செய்யப்பட்டால் அதன் பிறகு பெண் குழந்தை தான் வேண்டும் என எல்லா பெற்றோரும் ஆலாய் பறப்பார்கள். சிந்தித்து பாருங்கள்.
ஆண் குழந்தைக்கு தான் எல்லோரும் பிரியப்படுவார்கள். முன்னேற்றப்பட வேண்டியது சமுதாயம்.
இது என்னுடைய கருத்து தவறிருந்தால் மன்னிக்கவும்.
சமுதாயம் என்பது எதுங்க? நீங்க நான் எல்லாரும் சேர்ந்தது தான் சமுதாயம்..உண்மையை சிந்திக்க வைக்கும் இந்த பதிவில் விஜய் பத்தி தேவையில்லாத சந்தேகம்...பெண்ணை பெருமை படுத்த உதாரணமா கிடைக்கலை உங்களுக்கு இதை உங்களுக்கு வலிக்கனுமுன்னு சொல்லலைப்பா...கோவம் வேண்டாம்..//
விடுங்க தமிழ் இத போயி சீரியசா எடுத்துட்டு......
// தமிழரசி said...
ஹேய் வசந்த சாரி நான் ரொம்ப லேட்...இந்த உண்மையை வலியாய் உணர்ந்தவள் நான்...உங்களுடைய வேர்வை பதிவு இளமை விகடனில் நீட் பகுதியில் வந்திருக்கு வாழ்த்துக்கள்....//
நன்றி தமிழ்
// தமிழரசி said...
சந்தியாவும் வருத்தப்படும் விஜய் படத்தை எடுத்திட்டால்.....//
அதான் திரும்பவும் போட்டாச்சு....
Post a Comment