July 31, 2009

பப்புவின் கேள்விகள்

பப்பு கேட்ட கேள்விகள்


நேற்று என்னோட குட்டி ஃப்ரண்ட் பப்புவ கூட்டிட்டு டவுனுக்கு போனப்ப அவன் கேட்ட கேள்விகள்...

1.ரோட்டுஓரமா வச்சுருந்த மிகப்பெரிய கல்யாண பேனர்கள பாத்துட்டு ஏன் மாம்ஸ் நம்ம சொந்த காரவங்க எல்லாம் சின்னதா பத்திரிக்கை அடிச்சு வீட்ல கொண்டுவந்து குடுக்குறாங்க இவங்க ஏன் மாம்ஸ் இவ்ளோ பெரிய பத்திரிக்கை அடிச்சு ஊர் பூரா குடுக்காம ஒட்டி வச்சுருக்காங்க? வாங்க ஆளில்லையா? சொந்தபந்தம் யாரும் இல்லியா இவங்களுக்கு?

2. எ பட போஸ்டர பாத்துட்டு ஏன் மாம்ஸ் பக்கத்துல இருக்குற அந்த பட ஹீரோயின் கலர் கலரா ட்ரஸ் போட்ருக்காங்க இந்த படத்துல இருக்குற ஹீரோயின் மட்டும் கறுப்புகலரா அதுவும் இத்துனூண்டு ட்ரெஸ் போட்ருக்கு?படம் லோ பட்ஜெட்டா?

3.தியேட்டர்ல எச்சில் துப்பாதீர்ன்னு எழுதிருக்குற வாசகம் பாத்துட்டு
ஏன் மாம்ஸ் எச்சில் துப்பாதீர்ன்னு எழுதுனதுக்கு பக்கத்துல துப்பி வச்சிருக்காங்க அப்போ இனிமேல் எச்சில் துப்புங்கன்னு எழுதுனாத்தான் துப்ப் மாட்டாங்களோ?

4.பஸ்ல படியில்நிற்காதீர்ன்னு எழுதிருக்கே அப்போ படியில உக்காரலாமா மாம்ஸ்?

5.பத்திரிக்கைகளின் அறிவுத்திறன் போட்டி க்கு விடையனுப்புச்சாத்தான் நாமளுக்கு அறிவு இருக்குன்னு அர்த்தமா மாம்ஸ்?

6.பாயிண்ட் டூ பாயிண்ட் எக்ஸ்பிரஸ்ன்னு நம்ம அரசாங்க பஸ்ல வெளிப்பக்கம் எழுதிருக்கு உள்ள ட்ரைவர் சீட்டுக்கு முன்னாடி மித வேகம் மிக நன்றுன்னு எழுதிருக்கே ஏன் மாம்ஸ்?

7.ஜன்னலுக்கு வெளிய பிச்சக்காரன் காசு கேட்டு வாங்குறான் ஜன்னலுக்கு உள்ள இந்த கண்டக்டர் கேக்காம மிச்ச காச வச்சுக்கிறான் அப்போஅந்த பிச்சக்காரனும் கண்டக்டரும் ஒண்ணா மாம்ஸ்?

8.வீட்டுக்கு ஒன்று நாட்டுக்கு நன்றுன்னு குடும்ப கட்டுப்பாடு விளம்பரம் வருதே அந்த ஒரு குழந்தை திடீர்ன்னு உடல் நலம் இல்லாம போயிட்டு இறந்துருச்சுன்னா அந்த குடும்பத்த கவர்ன்மெண்ட் கவனிச்சுகிடுமா மாம்ஸ்?

9. வான் வழியா ஒலி அலைவரிசயா வர்றதால வானொலின்னு சொல்றீங்க அப்போ டீ.வி.க்கும் ஒளி வானத்துவழியாத்தான வருது அப்போ அதை வானொளின்னு தான சொல்லணும் அப்பறம் ஏன் தொலைக்காட்சின்னு சொல்றீங்க இல்லாட்டி வானொலிய தொலையொலின்னு சொல்லலாம்ல?

இந்தமாதிரியே நீ கொஸ்டின் கேட்டுட்டே இருந்தேன்னு வை நான் உன் கூட ஃப்ரண்ட்ஸிப் கட் பண்ணிடுவேன்னு சொல்லி சமாளிச்சுட்டு வந்தேன்....



29 comments:

Raju said...

விவகாரமான பாப்பாதான்.

Suresh Kumar said...

பப்பு விவரமாதான் கேக்குது என்ன

ஜெட்லி... said...

வஸந்த் இதெல்லாம் பப்பு கேட்ட மாதிரி தெரியிலேயே....
உங்க அடிமனசுல இருந்து வந்த மாதிரி இருக்கு ?/?/

Menaga Sathia said...

பப்பு நல்லா விவகாரமான பிள்ளைதான்.எவ்வளவு அறிவுபூர்வமா யோசிக்கிறான்.

. said...

எல்லாமே நல்லா இருக்கு!!

முக்கியமா...
//.ஜன்னலுக்கு வெளிய பிச்சக்காரன் காசு கேட்டு வாங்குறான் ஜன்னலுக்கு உள்ள இந்த கண்டக்டர் கேக்காம மிச்ச காச வச்சுக்கிறான் அப்போஅந்த பிச்சக்காரனும் கண்டக்டரும் ஒண்ணா மாம்ஸ்?//

:)அருமையா இருக்குதுங்க அண்ணா!!

//இந்தமாதிரியே நீ கொஸ்டின் கேட்டுட்டே இருந்தேன்னு வை நான் உன் கூட ஃப்ரண்ட்ஸிப் கட் பண்ணிடுவேன்னு சொல்லி சமாளிச்சுட்டு வந்தேன்....//

வேணாம் வேணாம்... அப்பரம் நாங்க எப்டி சிரிக்கறது??:(

RAMYA said...

வெவரமான கேள்வி மட்டுமல்ல விவகாரமான கேள்வியும் கூட
பப்பு உஷாரு :))

RAMYA said...

//
7.ஜன்னலுக்கு வெளிய பிச்சக்காரன் காசு கேட்டு வாங்குறான் ஜன்னலுக்கு உள்ள இந்த கண்டக்டர் கேக்காம மிச்ச காச வச்சுக்கிறான் அப்போஅந்த பிச்சக்காரனும் கண்டக்டரும் ஒண்ணா மாம்ஸ்?
//

அறிவு அறிவான கேள்விகள்!
முத்து முத்தான கேள்விகள் !

மொத்தத்திலே பப்பு ரொம்ப புத்திசாலி

குறை ஒன்றும் இல்லை !!! said...

//ஜெட்லி said...

வஸந்த் இதெல்லாம் பப்பு கேட்ட மாதிரி தெரியிலேயே....
உங்க அடிமனசுல இருந்து வந்த மாதிரி இருக்கு ?/?/
//

repeatttttttteeeeee

தேவன் மாயம் said...

பப்பு நெம்ப வெவரமா இருக்கும் போல இருக்கே!!!

ஹேமா said...

வசந்த்,குழந்தைங்க கேக்கிறதுக்கு பக்குவமா பதில் சொல்லணும்.
அவங்க எல்லாம் தெரிஞ்சுதான் கேக்கிறாங்க.

நட்புடன் ஜமால் said...

இது நல்ல ஐடியாப்பா

நாமளா சொல்ல முடியாததை இன்னுமொரு ஒரு நபரை உறுவகம் செய்து ...

அருமை வசந்த்.

யோ வொய்ஸ் (யோகா) said...

கொஞ்சம் ஓவரா தான் போராயின்களோ? ஐயோ ஐயோ

ஈரோடு கதிர் said...

//பஸ்ல படியில்நிற்காதீர்ன்னு எழுதிருக்கே அப்போ படியில உக்காரலாமா மாம்ஸ்?//

பப்பு குட்டிக்கு ரொம்ப குறும்பூ

//அப்போஅந்த பிச்சக்காரனும் கண்டக்டரும் ஒண்ணா மாம்ஸ்?//
நெத்தியடிட பப்பு செல்லம்

தினேஷ் said...

குறும்பு

இராகவன் நைஜிரியா said...

இவ்வளவு அறிவோட கேள்வி கேட்பவர்கள் எனக்கும் உங்களுக்கும் நண்பர்களாக இருக்க முடியாதே... எப்படி இது?

நம்ப முடியவில்லை

VISA said...

ஞாயமான கேள்விகள்

அதுல கூட பாருங்க நம்ம ஆளுங்க எச்சில் துப்பாதீர்ன்னு எழுதினதுக்கு மேல துப்பல. அது பக்கத்துல தான் துப்பியிருக்கானுவ...புத்திசாலி மக்கள்

வழக்கம் போல வசந்த பஞ்ச் இருக்கு.

Starjan (ஸ்டார்ஜன்) said...

யோசி ஸ்டார்ஜன் யோசி !!!....

நல்ல கேள்விகள்

SUMAZLA/சுமஜ்லா said...

உங்க கற்பனை கதாபாத்திரம் பப்புவின் வாயிலாக எத்துணை அறிவுப்பூர்வமான கேள்விகள். பாராட்ட வேண்டியது பப்புவை அல்ல, இந்த சிந்தனையின் மூளைக்கு சொந்தக்காரரை!

sakthi said...

நல்ல கேள்விகள் பப்பு ஆனா காலத்தின் கொடுமை எங்களால் தான் ப்தில் சொல்ல முடியலை

sakthi said...

டெம்பிளேட் அழகு ஆனால் ஏன் தமிலிஷ் பெட்டியை காணவில்லை

கலையரசன் said...

என்னைய மாதிரியே இருக்கான் பப்பு...

Anonymous said...

//8.வீட்டுக்கு ஒன்று நாட்டுக்கு நன்றுன்னு குடும்ப கட்டுப்பாடு விளம்பரம் வருதே அந்த ஒரு குழந்தை திடீர்ன்னு உடல் நலம் இல்லாம போயிட்டு இறந்துருச்சுன்னா அந்த குடும்பத்த கவர்ன்மெண்ட் கவனிச்சுகிடுமா மாம்ஸ்?//

சைனா இப்ப இதுதான் பெரிய கேள்வியா இருக்கு. அங்கே ஒரு தம்பதியருக்கு ஒரு குழந்தை தான் அலொவ்ட். :(

S.A. நவாஸுதீன் said...

புது டெம்ப்ளேட் ரொம்ப நல்லா இருக்கு வசந்த். எட்டாவது கேள்விதான் ரொம்ப யோசனை பண்ண வைச்சது.

அப்துல்மாலிக் said...

யோசிக்க வைக்குதுயா குழந்தைகளின் கேள்விகள்

இதற்கெல்லாம் பதில் அடுத்த பதிவிலா?

கார்த்திகைப் பாண்டியன் said...

பல கேள்விகள் ரொம்ப நியாயமானவை..:-)))

SUFFIX said...

பப்புவோட பார்வை சரியில்லை, சாக்கிரதையா ரோட்டுல அழைச்சிட்டு போங்க, நீங்களும் அவனோட சேர்ந்து ஜொள்ளாம இருந்தா சரி!!

photoulakam said...

பப்பு ரொம்ப விபரமான ஆளுதான் உங்களைப்போல...

சிங்கக்குட்டி said...

//இனிமேல் எச்சில் துப்புங்கன்னு எழுதுனாத்தான் துப்ப் மாட்டாங்களோ?// அது பப்பு இல்லப்பு .... துப்பும் மக்களுக்கு ஆப்பு :-))

சத்ரியன் said...

// வான் வழியா ஒலி அலைவரிசயா வர்றதால வானொலின்னு சொல்றீங்க அப்போ டீ.வி.க்கும் ஒளி வானத்துவழியாத்தான வருது அப்போ அதை வானொளின்னு தான சொல்லணும் அப்பறம் ஏன் தொலைக்காட்சின்னு சொல்றீங்க இல்லாட்டி வானொலிய தொலையொலின்னு சொல்லலாம்ல?//

வசந்த்,

என் பங்குக்கு எதாவது ஒரு கொஸ்டின் கேக்கனுமே. ஒன்னும் தொன மாட்டேங்குதே.... என்னா செய்வேன்.. நான் என்னா செய்வேன்..