யாருக்கு சுதந்திரம்?
நம்மளுக்கு சுதந்திரம் கிடைச்சாச்சு ஆகஸ்ட் 15 1947 லில்
ஆனா
உண்மையான சுதந்திரம் யாருக்கு கிடைத்தது?
வட்டிக்கு பணம் கொடுக்கும்
பண முதலைகளுக்கு......
அசையா சொத்துக்கள் சேர்க்கும்
அரசியல்வாதிகளுக்கு....
லஞ்சம் வாங்குற அரசு,
காவல்துறை அதிகாரிகளுக்கு....
பெண்களை திருட்டுத்தனமாக
ஆபாச படம் எடுப்பவர்களுக்கு....
விவாகரத்து பண்ணாமல்
மறுமணம் புரிபவர்களுக்கு.....
வரிகட்டாமல்
நாட்டை ஏமாற்றுபவர்களுக்கு.....
கல்விக்கு அளவுக்கு மீறி
கட்டணம் வசூலிப்பவர்களுக்கு....
கட்டணமில்லாமல் அரசு
வசதிகளை அனுபவிப்பவர்களுக்கு....
வாய்தா வாங்கி
ஏ சி சிறையில் தூங்கும் `நல்லவர்`களுக்கு.....
கலப்படத்தில்
கல்லாவை நிரப்பும் கயவர்களுக்கு....
தேர்தலில் கள்ள ஓட்டு ப்போடும்
விசுவாசிகளுக்கு...
சாதிகளில்லையடி பாப்பான்னு படிச்சு டாக்டராகி
சாதிக்கட்சி நடத்துபவர்களுக்கு.....
காவல் துறையின் காவலோடு?
ரேஷன் அரிசி கடத்துபவர்களுக்கு....
ஆபாசத்தை தூண்டும் எழுத்துக்களை
வெளியிடும் பத்திரிக்கைகளுக்கு....
சிறார்களை பணியிலமர்த்தும்
நிறுவனங்களுக்கு....
மதவெறியில் ரயில்,பேருந்துகளை
எரிப்பவர்களுக்கு....
சாமியின் பேரில் உலாவரும்
போலிச்சாமியார்களுக்கு....
இவர்கள் மட்டுமே இச்சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள்
தேவையா இந்த சுதந்திரம்?
அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
யூத்ஃபுல் விகடனின் சுதந்திர தினத்துக்கான சிறப்பு பக்கத்திற்க்காக வெளியான படைப்பு பார்க்க கிளிக்கவும்
தமிழ் மணம், தமிழிஷ்ல் வாக்களிக்க மறவாதீர்
62 comments:
நம்ம மாதிரி இடுகை எழுதறவங்கள பட்டியல்ல விட்டுட்டீங்க
சுதந்திர தின வாழ்த்துக்கள்
தங்கள் படைப்பு வந்துள்ளதா அறிந்து கொள்ளுங்கள்
http://valaivikadan.blogspot.com/2009/08/blog-post_12.html
என்ன சொல்ல???:((
ரொம்ப நல்லா எழுதிருக்கிங்க வசந்த்!!
விகடனில் தங்கள் படைப்பு வெளிவந்ததற்க்கும் மற்றும் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்!!
அருமையான பதிவு வசந்த். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் வசந்த்!!ரொம்ப நல்லா இருக்கு!!!
உங்க கருத்தோடு நான் ஒத்து போகலை
ஏன்னா
இவங்கள்ளாம் எப்போதுமே இப்படிதான் இருக்காங்க
இவங்களுக்கு தனியா ஒரு சுதந்திரமா
;)
//நம்ம மாதிரி இடுகை எழுதறவங்கள பட்டியல்ல விட்டுட்டீங்க//
Repeaatuuuuuuuuu
சூடான சுதந்திரதின இடுகை.
நூற்றுக்கு நூறு உண்மையான வரிகள்.
அழகா எழுதி இருக்கீங்க அண்ணா... வாழ்த்துக்கள்- இந்த இடுகைக்கும், வலை விகடனில் இடம் பெற்ற மேகமும் நானும் இடுகைக்கும்!! :)
சுதந்திர தின வாழ்த்துக்கள்...!!
காலத்துக்கு ஏற்ற பதிவு வசந்த்.... இப்போ சுதந்திரத்தில சு ஐ நீக்கிவிட்டு தந்திரத்தை மட்டுமே எல்லோரும் பயன்படுத்துகின்றனர்.
நல்ல பதிவு வசந்த்,
அருமையான பதிவு வசந்த
சும்மா நச்
சவுக்கடி
விகடனில் வந்ததற்கும் சுதந்திர தினத்துக்கும் வாழ்த்துகள்!
சுதந்திர தின வாழ்த்துக்கள் வசந்த்...
நாம் இன்னும் என்னென்ன செய்ய வேண்டி இருக்கிறது என்கிற உங்கள் படைப்பு கவனத்திற்குரியது...
விகடன் முத்திரைக்கும் வாழ்த்துக்கள்....!
சுதந்திர தின வாழ்த்துக்கள் வசந்த்...
எல்லோருக்கும் நல்லா ஆப்பா வச்சிருக்கீங்க!
என்னது, இந்தியாவுக்கு சுதந்திரம் கெடைச்சிருச்சா? ;-)
மிகவும் அருமையான பதிவு.
நன்றாக இருக்கிறது.
சுதந்திர தினத்தன்று சாக்லேட் ரொம்ப சூடா இருக்கே. நல்லா இருக்கு வசந்த்
சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் இதைப் படித்தேனும் திருந்தட்டும்.
சுதந்திரதின வாழ்த்துக்கள் வசந்த்!
தந்திரவாதிகளின் லிஸ்ட் சுதந்திர தினத்தன்று!! நாமளாவது சரியா இருப்போம் வஸந்த். வாழ்த்துக்கள் நம் நண்பர்கள் அனைவருக்கும்.
கலக்கிட்டீங்க வசந்த்
என் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
நல்லா சொன்னீங்க தல
கதிர் நீங்க சுதந்திரமாத்தான் எழுதுறீங்கன்னு மனசத்தொட்டு சொல்லுங்க:)
நன்றி கதிர்
//valaivikadan said...
சுதந்திர தின வாழ்த்துக்கள்
தங்கள் படைப்பு வந்துள்ளதா அறிந்து கொள்ளுங்கள்
http://valaivikadan.blogspot.com/2009/08/blog-post_12.html//
நன்றி வலைவிகடன்
//அன்புடன் அருணா said...
என்ன சொல்ல???:((//
சொல்றதுக்குமா சுதந்திரம் இல்லை ப்ரின்ஸி மேடம்
//Mrs.Menagasathia said...
ரொம்ப நல்லா எழுதிருக்கிங்க வசந்த்!!
விகடனில் தங்கள் படைப்பு வெளிவந்ததற்க்கும் மற்றும் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்!!//
நன்றி மேனகா சத்யா மேடம்
// சுசி said...
அருமையான பதிவு வசந்த். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.//
நன்றி சுசி
// Thamarai selvi said...
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் வசந்த்!!ரொம்ப நல்லா இருக்கு!!!//
நன்றி தாமரை செல்வி மேடம் தங்கள் வலைப்பூ முகவரி எங்கே?
// நட்புடன் ஜமால் said...
உங்க கருத்தோடு நான் ஒத்து போகலை
ஏன்னா
இவங்கள்ளாம் எப்போதுமே இப்படிதான் இருக்காங்க
இவங்களுக்கு தனியா ஒரு சுதந்திரமா
;)//
ஆமா அண்ணா எப்பவுமே சுதந்திரமா திரியும் காட்டுப்பறவைகள் இவர்கள்
நன்றி ஜமால் அண்ணா....
//குறை ஒன்றும் இல்லை !!! said...
//நம்ம மாதிரி இடுகை எழுதறவங்கள பட்டியல்ல விட்டுட்டீங்க//
Repeaatuuuuuuuuu//
வருகைக்கு மிக்க நன்றி ராஜ்
// துபாய் ராஜா said...
சூடான சுதந்திரதின இடுகை.
நூற்றுக்கு நூறு உண்மையான வரிகள்.//
சூடாக்கியது இவர்களின் நெருப்பை விடை கொடிய செயல்கள்
மிக்க நன்றி துபாய் ராஜா
ஆமா நீங்க வெறும் துபாய்ராஜாவா?
இல்ல துபாய்க்கே ராஜாவா?:)
// "பிரியங்கா" said...
அழகா எழுதி இருக்கீங்க அண்ணா... வாழ்த்துக்கள்- இந்த இடுகைக்கும், வலை விகடனில் இடம் பெற்ற மேகமும் நானும் இடுகைக்கும்!! :)
சுதந்திர தின வாழ்த்துக்கள்...!!//
நன்றி பிரியா
// சந்ரு said...
காலத்துக்கு ஏற்ற பதிவு வசந்த்.... இப்போ சுதந்திரத்தில சு ஐ நீக்கிவிட்டு தந்திரத்தை மட்டுமே எல்லோரும் பயன்படுத்துகின்றனர்.//
ஆமாம் சந்ரு இவர்கள் தந்திரத்தனமான குள்ள நரிகள்
நன்றி சந்ரு
// பீர் | Peer said...
நல்ல பதிவு வசந்த்,//
நன்றி பீர் முகமது வருகைக்கும் கருத்துக்கும்
// sakthi said...
அருமையான பதிவு வசந்த
சும்மா நச்
சவுக்கடி//
ஆயிரம் சவுக்கடி குடுத்தாலும் இவங்க திருந்த மாட்டாங்க சகோதரி
நன்றி சக்திக்கா
// பரிசல்காரன் said...
விகடனில் வந்ததற்கும் சுதந்திர தினத்துக்கும் வாழ்த்துகள்!//
ரொம்ப மகிழ்ச்சி கிருஷ்ணா சார்
// Sukumar Swaminathan said...
சுதந்திர தின வாழ்த்துக்கள் வசந்த்...
நாம் இன்னும் என்னென்ன செய்ய வேண்டி இருக்கிறது என்கிற உங்கள் படைப்பு கவனத்திற்குரியது...
விகடன் முத்திரைக்கும் வாழ்த்துக்கள்....!//
நன்றி சுகுமார்
// ஜெகநாதன் said...
சுதந்திர தின வாழ்த்துக்கள் வசந்த்...
எல்லோருக்கும் நல்லா ஆப்பா வச்சிருக்கீங்க!//
ஆமா ஜெகன்
திருந்திவிடுவார்கள் என்ற நம்பிக்கையில்
நன்றி ஜெகநாதான்
// Joe said...
என்னது, இந்தியாவுக்கு சுதந்திரம் கெடைச்சிருச்சா? ;-)//
என்னாச்சு ஜோ சப்பான்ல இருக்கீகளா?
இல்ல இன்னும் பெங்களூர்தானா இல்ல மெட்ராசா ?
வருகைக்கு நன்றி ஜோ
// யோ (Yoga) said...
மிகவும் அருமையான பதிவு.
நன்றாக இருக்கிறது.//
நன்றி யோகராஜா
//S.A. நவாஸுதீன் said...
சுதந்திர தினத்தன்று சாக்லேட் ரொம்ப சூடா இருக்கே. நல்லா இருக்கு வசந்த்//
நன்றி நவாஸ்
// ராமலக்ஷ்மி said...
சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் இதைப் படித்தேனும் திருந்தட்டும்.
சுதந்திரதின வாழ்த்துக்கள் வசந்த்!//
வருகைக்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி மேடம்
//ஷஃபிக்ஸ் said...
தந்திரவாதிகளின் லிஸ்ட் சுதந்திர தினத்தன்று!! நாமளாவது சரியா இருப்போம் வஸந்த். வாழ்த்துக்கள் நம் நண்பர்கள் அனைவருக்கும்.//
லிஸ்டில் விடுபட்டோர் ஏராளம் ஷஃபி
மிக்க நன்றி ஷஃபி
// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
கலக்கிட்டீங்க வசந்த்
என் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்//
வருகைக்கு மிக்க நன்றி ஷேக்
//அபுஅஃப்ஸர் said...
நல்லா சொன்னீங்க தல//
நன்றி அபு
சரியான தருணம் சரியான பதிவு வசந்த்!ஜெய்ஹிந்த்..
///நன்றி தாமரை செல்வி மேடம் தங்கள் வலைப்பூ முகவரி எங்கே?///
வசந்த் எனக்கு வலைப்பூ இல்லை, மேனகாவோட(she is one of my good friend) பிளாக்ல மட்டும் பதிவு எழுதிகிட்டு இருந்தேன்..அங்கதான் உங்களோட முகவரி, profile பார்த்தேன்..தேனி என்று பார்த்ததும் உள்ளே வந்தேன்,எல்லாமே ரொம்ப அழகா எழுதி இருந்தீங்க அதனால reply எழுதினேன்..நன்றி வசந்த்..
இது வலிக்க வைக்கும் உண்மைதான்...
ரொம்ப ஆவேசத்துடன் எழுதி இருக்கீங்க போல???
:)))
தாமதமான பின்னூடத்துக்கு மன்னிக்கவும் வஸந்த்...
//வாய்தா வாங்கி
ஏ சி சிறையில் தூங்கும் `நல்லவர்`களுக்கு.....
//
இந்த வரி என் மனதுக்குள் ரொம்ப நாள் இருந்து
வருகிறது.....
// பா.ராஜாராம் said...
சரியான தருணம் சரியான பதிவு வசந்த்!ஜெய்ஹிந்த்..//
மிக்க நன்றி சார் முதல் வருகைக்கும் கருத்துக்கும்
// Thamarai selvi said...
///நன்றி தாமரை செல்வி மேடம் தங்கள் வலைப்பூ முகவரி எங்கே?///
வசந்த் எனக்கு வலைப்பூ இல்லை, மேனகாவோட(she is one of my good friend) பிளாக்ல மட்டும் பதிவு எழுதிகிட்டு இருந்தேன்..அங்கதான் உங்களோட முகவரி, profile பார்த்தேன்..தேனி என்று பார்த்ததும் உள்ளே வந்தேன்,எல்லாமே ரொம்ப அழகா எழுதி இருந்தீங்க அதனால reply எழுதினேன்..நன்றி வசந்த்..//
நன்றி சகோதரி மிக்க மகிழ்ச்சி ஆண்டிபட்டி நிறைய தடவை போயிருக்கேன் நிறைய நண்பர்கள் இருக்கின்றனர்
// anbudan vaalu said...
இது வலிக்க வைக்கும் உண்மைதான்...
//
ஒரு வால் பண்ணுற அட்டகாசமே தாங்க முடியல இதுல இன்னோரு வாலா
நன்றி அன்புடன்வாலு முதல் வருகைக்கும் கருத்துக்கும்
//வழிப்போக்கன் said...
ரொம்ப ஆவேசத்துடன் எழுதி இருக்கீங்க போல???
:)))//
ஆவேசத்தோடத்தான்
வேசத்துடன் அல்ல
நன்றி வழிப்போக்கன்
// ஜெட்லி said...
தாமதமான பின்னூடத்துக்கு மன்னிக்கவும் வஸந்த்...
//வாய்தா வாங்கி
ஏ சி சிறையில் தூங்கும் `நல்லவர்`களுக்கு.....
//
இந்த வரி என் மனதுக்குள் ரொம்ப நாள் இருந்து
வருகிறது.....//
மிக்க நன்றி ஜெட்லிஜி நீங்க வந்ததே சந்தோஷம் எதுக்கு மன்னிப்புஎல்லாம்?
வாழ்த்துகள் வசந்த்.
தேவையா சுதந்திரம்னு கேட்டு.. வாழ்த்து சொன்னா என்ன அர்த்தம்..ம்ம்..?
//வானம்பாடிகள் said...
வாழ்த்துகள் வசந்த்.//
நன்றிங்க
// கலகலப்ரியா said...
தேவையா சுதந்திரம்னு கேட்டு.. வாழ்த்து சொன்னா என்ன அர்த்தம்..ம்ம்..?//
ம்ம்ஹும்..... நன்றி கலகல
வாஸ்தவமான சிந்தனை.வாழ்த்துக்கள் வலி மிகுந்த சுதந்திரத்துக்கும்,விலை மதிப்பற்ற விகடனுக்கும்,வசந்த்!
//பா.ராஜாராம் said...
வாஸ்தவமான சிந்தனை.வாழ்த்துக்கள் வலி மிகுந்த சுதந்திரத்துக்கும்,விலை மதிப்பற்ற விகடனுக்கும்,வசந்த்!//
நன்றி ராஜாசார்
உண்மை வசந்த் இவர்கள் வாழத்தான் சுதந்திரம்..அது இன்னும் நம் அனைவரையும் சென்றடையாத நிலையில் 63வது சுதந்திரதின கொண்டாட்டம்..அப்பட்டமான அபத்தம்..உன்னுடைய இந்த பதிவை கண்டால் வெக்கி தலை குனிவர் ஆனால் வெட்கத்தின் விலை கேட்பாரோ என அஞ்சுகிறேன்...
Post a Comment