August 21, 2009

அரசாங்கமே கொஞ்சம் காதை குடுத்து கேளுங்க...

அரசாங்கமே கொஞ்சம் காதை குடுத்து கேளுங்க...
தேவை மீட்டர்....

கொஞ்ச காலத்துக்கு முன்னாடி கார்ப்பரேசன் தண்ணீருக்கு பயன் படுத்திய தண்ணீரின் அளவை அறிந்து கொள்ள வாட்டர் மீட்டர் பொருத்தப்பட்டிருக்கும் இப்போவும் சில இடங்களில் பயன்பாட்டில் இருக்கு.

அதுமாதிரி

நிலத்திலிருந்து எடுக்கும் புதையல் , மற்ற பொருள்கள் அரசாங்கத்துக்குத்தான் சொந்தம்ன்னு அரசு சொல்லுது,அப்போ நிலத்திலிருந்து எடுக்கும் நீரும் அந்தந்த அரசாங்கங்களுக்கும் சொந்தம்ன்னு நினைச்சுக்கிட்டு ஒவ்வொரு நிலத்தடி நீர் பயன்படுத்துபவர்களின் பம்பிலும் இந்த மாதிரி வாட்டர் மீட்டர் பொருத்தணும்ன்றது என்னுடைய கருத்து . இதன் மூலம் நிலத்தடி நீர் உபயோகத்தின் அளவை பொருத்து விவசாயம் நீங்கலாக ஏனைய பயன்பாட்டிற்க்கு நிலத்தடி நீர் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் அரசு கட்டணம் விதிப்பதின் மூலம் நிலத்தடி நீர் பயன்பாட்டின் அளவை குறைக்கலாம்.விவசாயிகளும் ரொம்ப இல்லைன்னாலும் கொஞ்சமாவது பயன்படும்ன்னு நினைக்கிறேன் நீங்க என்ன சொல்றீங்க? செயல்படுத்துமா அரசாங்கம் இல்லை இதிலும் ஊழல் முறைகேடுகள் பண்ணி காசு பாத்துடுவாங்களா அரசியல்வாதிகள் , ஏன்னா சுடுகாட்டு கூரையிலே ஊழல் செஞ்சவங்க இந்த மாதிரி விஷயத்தில் காசு பாக்காம விடுவாங்களா என்ன?

அடுத்தது

சாயக்கழிவு,ரசாயன கழிவு ,அதிக சாக்கடை நீர் வெளியிடும் குழாய்களிலும் இதுமாதிரியான வாட்டர் மீட்டர்கள் பொருத்தி வெளியிடப்படும் சாக்கடை நீரின் அபாயங்களை பொருத்து அவற்றுக்கும் கட்டணம் விதித்து அதிகப்படியான ரசாயன கழிவுகள் பூமியில் கலப்பதை தவிர்க்கலாம்.இதனால் கட்டணத்துக்கு பயந்து தொழில் நிறுவனங்கள் தொழிற்ச்சாலைகளுக்குள்ளே சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முன் வந்து அதன் மூலம் கழிவு நீரின் வெளிப்பாடும் குறையும் நீர் சுத்திகரித்து பயன்படுத்துவதனால் நீர் வீணாவது குறையும்ன்னு நினைக்கிறேன் நீங்க என்ன சொல்றீங்க? வீட்டிலிருந்து வெளியேறும் சாக்கடை நீரையும் சுத்திகரித்து பயன்படுத்தும் எளிய கருவி ஒன்று கண்டுபிடித்து மக்களுக்கு தரலாமே தொலைக்காட்சி வழங்குவதற்க்கு பதிலா இப்படி உபயோகமான உதவி அரசு செய்யலாமே?

அடுத்து

தொழிற்ச்சாலை மற்றும் வாகனங்களிலிருந்து வெளியேறும் மாசு (புகை) வெளியேற்றும் குழாய்களிலும் இதுமாதிரி மீட்டர் பொருத்தி வெளியேறும் புகைக்கு கட்டணம் விதிக்க வேண்டும் இதன் மூலம் காற்று மாசுபடுத்டுறது கொஞ்சம் குறையும் ஏன்னா எதிர்வரும் காலத்தை முன்னிட்டு குடும்பக்கட்டுப்பாடு பண்ணுற அரசு இதுமாதிரி கட்டுப்பாடுகளையும் விதிக்கவேண்டும்.

தேவை மீட்டர்

அடுத்து

பெட்ரோல்,டீசல் மூலம் இயங்கும் வாகனங்கள் ஒருநாளைக்கு இத்தனை லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல்தான் பயன்படுத்தவேண்டும் என்று (அதன் உபயோகத்தை பொருத்து) கட்டுப்பாடுகள்விதிக்க வேண்டும்.இதன் மூலம் டீசல் பெட்ரோலுக்கு செலவாகும் பணம் குறையுமே நீங்க என்ன சொல்றீங்க?

மீட்டர் வட்டிக்கு பணம் வாங்குற மக்கள் இந்த மீட்டர்களை ஏத்துகிடுவாங்களா?

இளமைவிகடனில் குட் ப்லாக்ஸ் பகுதியில் இவ்விடுகை

91 comments:

தேவன் மாயம் said...

ஒவ்வொரு நிலத்தடி நீர் பயன்படுத்துபவர்களின் பம்பிலும் இந்த மாதிரி வாட்டர் மீட்டர் பொருத்தணும்ன்றது என்னுடைய கருத்து///

இந்த மீட்டர் கட்டாயம் தேவை!!

தேவன் மாயம் said...

தொழிற்ச்சாலை மற்றும் வாகனங்களிலிருந்து வெளியேறும் மாசு (புகை) வெளியேற்றும் குழாய்களிலும் இதுமாதிரி மீட்டர் பொருத்தி வெளியேறும் புகைக்கு கட்டணம் விதிக்க வேண்டும் இதன் மூலம் காற்று மாசுபடுத்டுறது கொஞ்சம் குறையும்///

டாப் வசந்த்!! யோசனை !!

தேவன் மாயம் said...

வசந்த் ! 3/3 ஓட்டுப்போட்டாச்சு!!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அளவுகோல் என்றும் அவசியம்தான்..,

நட்புடன் ஜமால் said...

எல்லாம் நல்ல யோசனைகள் வசந்த்

முதல்ல இலஞ்ச மீட்டர் வைக்குனும் அப்பதான் இதெல்லாம் உபயோகப்படும்

மக்களுக்கு ...

ஈரோடு கதிர் said...

வசந்த்...

இதை திருப்பி திருப்பி சொல்லுவோம்... ஒருநாள் நடக்கும், கண்டிப்பாக நடக்கனும்...

இல்லாவிடில் இன்று தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது போல், ஆக்ஸிசனை விலை கொடுத்து வாங்க வேண்டி வரும்

sakthi said...

ரொம்ப யோசித்து எழுதியுள்ளீர்கள்

நன்று

சித்து said...

என்ன சார் சொல்றீங்க?? இது இந்தியா சார். இங்க இதெல்லாம் நடக்காது.

நாணல் said...

nadantha nalla than irukum... nadakkuma.... ????

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல யோசனைகள்..:-)))))

blogpaandi said...

Good suggestion.

க.பாலாசி said...

//நிலத்தடி நீர் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் அரசு கட்டணம் விதிப்பதின் மூலம் நிலத்தடி நீர் பயன்பாட்டின் அளவை குறைக்கலாம்.விவசாயிகளும் ரொம்ப இல்லைன்னாலும் கொஞ்சமாவது பயன்படும்ன்னு நினைக்கிறேன் நீங்க என்ன சொல்றீங்க//

நிலத்தடி நீரின் பயன்பாடு என்பது அத்தியாவசிய தேவைகளை பொருத்தே அமைகிறது. இதில் ஏழையாகட்டும் பணக்காரராகட்டும் இருவருமே ஒரே நிலையில்தான் இருக்கிறார்கள். ஏற்கனவே நகர்புறங்களில் நிலத்தடி நீர் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் இவ்வாரான மீட்டர் பொருத்தப்படுமாயில் அதனால் பாதிப்புக்குள்ளாவது கிராமப்புரத்து ஏழைகளாகவே இருப்பார்கள். நகர்புறங்களை காட்டிலும் கிராமப்புறங்களில் ஊழல் அதிகம். இதிலும் சில்லரைப்பார்க்க அரசியல்வாதிகள் முயலமாட்டார்கள் என்று சொல்லிவிடமுடியாது.

தங்களின் மற்ற மூன்று கருத்துக்களுடன் ஒத்துப்போகிறேன். அவசியமான பதிவு.

நன்றி வாழ்த்துக்கள்.

யோ வொய்ஸ் (யோகா) said...

இன்றுமுதல் வசந்த் டயலாக்

லஞ்சம் இல்லா பூமி கேட்டேன்
பஞ்சம் இல்லா வீடு கேட்டேன்
வஞ்சம் இல்லா மனிதன் கேட்டேன்//

இனி இது வேறையா இனி எப்படியும் தினமும் பஞ்ச் வசந்த் வாசிக்கலாம் என நினைக்கிறேன். எப்படியோ கலக்குங்கண்ணா

பி.கு. நன்றி வசந்த் என்பதிவில் பின்னூட்டம் போட முடியாது என கூறியதற்கு, இப்போ அதை சரி பண்ணிவிட்டேன்.

வால்பையன் said...

வழிமொழிகிறேன்!

குரு said...

//லஞ்சம் இல்லா பூமி கேட்டேன்
பஞ்சம் இல்லா வீடு கேட்டேன்
வஞ்சம் இல்லா மனிதன் கேட்டேன்//

???!!!?!??!!?!?!!

I dont understand these sentence...What is the meaning for them???

By the Way, Im coming from INDIA

நையாண்டி நைனா said...

நல்லா.. இருக்கே மக்கா....

Raju said...

சூப்பரா எழுதியிருக்கீங்க.
புது டெம்ப்ளேட் நல்லா இருக்கு நண்பா.

தினேஷ் said...

முதல்ல இலஞ்ச மீட்டர் வைக்குனும் அப்பதான் இதெல்லாம் உபயோகப்படும்

மக்களுக்கு ..

உண்ம

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்ல கருத்துப் பதிவு போஸ்ட்.

அரசாங்கத்தின் காதுக்கு எட்டுவது எப்போது ?

இது நம்ம ஆளு said...

உங்கள் கருத்துகள் அனைத்தும் மற்றவர்களை கண்டிப்பாக சிந்திக்க வைக்கும .

இனி வரும் காலங்களில் இதை நிச்சியம் பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்

கார்ல்ஸ்பெர்க் said...

//வழிமொழிகிறேன்!//

-நானும்..

Sukumar said...

//வழிமொழிகிறேன்!//

-நானும்.

Muneeswaran said...

vasanth, ungal karuthukku nandri.

1) Ungal vittil water meter irukka?
athai muraipadi alavu eduthu than thanneer bill kattkirergalaa?
eppothum aduthavargalai kurai sollatheergal muthalil neengal eppadi irukkeergal endru parungal.

2)Entha factoryla vathu eppadi kalivu abathu vilaivikkuthunu ungalukku theriyumaa? appadi iruntha antha factory mela nenga complaint koduthirukkingalaa?

3)Neenga solla varathu enakku puriyavillai!. payanpatti poruthu piripathal eppadi diesel payanpaddu kuraiyum. epo oru bike oru varathukku ethanai km pogumnu solla mudiyuma? summar 60km pogumnu vachukonga avan 70kmku poduvan. apo eppadi kuraiyum.

Government ella valiyilum ethai thaduthu kondu than varkirathu. atharkku nengal thunai irunthal mattum pothum. iruthiyaga
" thirudanai parthu thirunthavittal thiruttai olikka mudiyathu"
first live a good citizen yourself.
mannikkavum...............

இராகவன் நைஜிரியா said...

அருமையான கருத்துக்கள். மீட்டர் பொருத்துவது அவசியம் தான். ஆனால் இதிலேயும் காசு பார்க்க ஆரம்பித்து விடுவார்களே என்பதை நினைக்கத்தான் வருத்தமாக இருக்கின்றது.

Suresh Kumar said...

நல்ல கருத்துக்கள் தான் ஆனால் இந்தியாவில போய்.....................

நாஞ்சில் நாதம் said...

1.சரியான யோசனை. அளவுகோல் என்றும் அவசியம்தான்.

2. சாயக்கழிவு,ரசாயன கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் தொழிற்ச்சாலைகள் அதிகமாக உள்ள இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. (Comman Effulent Treatment Plant)உதாரணமாக திருப்பூர், ஈரோடு, ராணிபேட்டை, வாணியம்பாடி உண்மை என்னண்ணா பல இடங்களில் treatment plant சரிவர இயங்கவில்லை. முதல் கட்ட சுத்திகரிப்பு மட்டும் செய்கிறார்கள். ஒவ்வொரு தொழிற்ச்சாலையும் தனக்கு ஒரு தனி ரசாயன கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் கண்டிப்பாக செயல்படும் முறையில் வைத்திருக்க வேண்டும். இதை தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம் கண்காணிக்கும்.

3.தொழிற்ச்சாலைகளிலிருந்து வெளியேறும் மாசு (புகை)
வெளியேற்றும் குழாய்களிலும் மீட்டர் உண்டு. ஆனா கட்டணம் வசூலிக்கபடுவதிலை.

4.இன்னும் சில வருடங்களில் பெட்ரோல்,டீசல் தட்டுப்பாடு வந்துவிடும்

/// மீட்டர் வட்டிக்கு பணம் வாங்குற மக்கள் இந்த மீட்டர்களை ஏத்துகிடுவாங்களா? //

கேள்விக்குறிதான்

இரவுப்பறவை said...

நல்ல சிந்தனை...

ஹேமா said...

சமூகச் சிந்தனை தெளிவா இருக்கு வசந்த்.செயல்படுத்தணும்.

sarath said...

சரியான யோசனை. எப்படியும் செயல்படுத்தணும்.

சுந்தர் said...

நல்ல ஆலோசனை, ஆனால் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்காத ஹெல்மெட் சட்டம் போலதான் ஆகி விடும் ..,

குடந்தை அன்புமணி said...

நல்ல யோசனைகள் நண்பா...
ஆனால் இதெல்லாம் நிறைவேறணும்னா ‘முதல்வன்’ டைப்பில ஒரு முதல்வர் வந்தாத்தான் நடக்கும்.

தமிழ் said...

/லஞ்சம் இல்லா பூமி கேட்டேன்
பஞ்சம் இல்லா வீடு கேட்டேன்
வஞ்சம் இல்லா மனிதன் கேட்டேன்/

கலக்கல்

துபாய் ராஜா said...

நல்லதொரு சமுதாய அக்கறையுள்ள பதிவு.இந்த யோசனைகளை அமல்படுத்தினால் வீட்டிற்கும், நாட்டிற்கும்,நாம் வாழும் இந்த பூமிப்பந்திற்கும் மிக நல்லது.

பீர் | Peer said...

நல்லாருக்கு வசந்த்,

அன்புடன் அருணா said...

பூங்கொத்துக் கொடுத்துக் கொடுத்து கையெலலாம் வலிக்குது....வாங்கிக்கோங்க ....இன்னொன்று!!

Thamira said...

முதலிரண்டு யோசனைகள் நியாயமானதென்றே எனக்கு தோன்றுகிறது.

(நீங்க ரொம்ப சிந்திப்பீங்கன்னு சொன்னாங்க.. அது நெசம்தான் போல.. ஹிஹி..)

என்.கே.அஷோக்பரன் said...

அருமையான எண்ணம் - செயல்படுத்தினால் நாட்டுக்கும் மக்களுக்கும் எதிர்காலச் சந்ததிக்கும் மிக நல்லது. தங்களது எண்ணத்தை ஏனையவர்கள் பயன்படுத்த எழுத்துமூல அத்தாட்சியையும் இப்பதிவிலேயே வழங்கிவிடுங்கள் - யாராவது இதை நடைமுறைப்படுத்துவார்கள் என எதிர்பார்ப்போம். நான் அறிந்த சில மக்கள் நலன் அமைப்புக்களுக்கும் இந்ததத் தகவலை அனுப்புகிறேன்.

ப்ரியமுடன் வசந்த் said...

//டாப் வசந்த்!! யோசனை !!//

நன்றி தேவா சார்

ப்ரியமுடன் வசந்த் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
அளவுகோல் என்றும் அவசியம்தான்..,//

நன்றி தல வருகைக்கு கருத்துக்கும்

ப்ரியமுடன் வசந்த் said...

//நட்புடன் ஜமால் said...
எல்லாம் நல்ல யோசனைகள் வசந்த்

முதல்ல இலஞ்ச மீட்டர் வைக்குனும் அப்பதான் இதெல்லாம் உபயோகப்படும்

மக்களுக்கு ...//

ஆமாண்ணா

நன்றி ஜமால் அண்ணா

ப்ரியமுடன் வசந்த் said...

// கதிர் - ஈரோடு said...
வசந்த்...

இதை திருப்பி திருப்பி சொல்லுவோம்... ஒருநாள் நடக்கும், கண்டிப்பாக நடக்கனும்...

இல்லாவிடில் இன்று தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது போல், ஆக்ஸிசனை விலை கொடுத்து வாங்க வேண்டி வரும்//

ஆமா கதிர் இதுமாதிரி இன்னும் நிறை யோசனைகள் உண்டு

கொஞ்சம் கொஞ்சமாய் வெளியிடலாம்
நன்றி

ப்ரியமுடன் வசந்த் said...

//sakthi said...
ரொம்ப யோசித்து எழுதியுள்ளீர்கள்

நன்று//

நன்றி சக்தி

ப்ரியமுடன் வசந்த் said...

// சித்து said...
என்ன சார் சொல்றீங்க?? இது இந்தியா சார். இங்க இதெல்லாம் நடக்காது.//

ஏன் சித்து நடக்கும் வேணுன்னா பாருங்க இந்த யோசனைகள் ஒரு நாளாவது உபயோகப்படுத்தப்படும்

நன்றி சித்து

ப்ரியமுடன் வசந்த் said...

//நாணல் said...
nadantha nalla than irukum... nadakkuma.... ????//

கண்டிப்பா நடக்கும்

நன்றி நாணல்

ப்ரியமுடன் வசந்த் said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
நல்ல யோசனைகள்..:-)))))//

நன்றி கார்த்தி

ப்ரியமுடன் வசந்த் said...

// blogpaandi said...
Good suggestion.//

நன்றி பாண்டி

ப்ரியமுடன் வசந்த் said...

//க. பாலாஜி said...
//நிலத்தடி நீர் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் அரசு கட்டணம் விதிப்பதின் மூலம் நிலத்தடி நீர் பயன்பாட்டின் அளவை குறைக்கலாம்.விவசாயிகளும் ரொம்ப இல்லைன்னாலும் கொஞ்சமாவது பயன்படும்ன்னு நினைக்கிறேன் நீங்க என்ன சொல்றீங்க//

நிலத்தடி நீரின் பயன்பாடு என்பது அத்தியாவசிய தேவைகளை பொருத்தே அமைகிறது. இதில் ஏழையாகட்டும் பணக்காரராகட்டும் இருவருமே ஒரே நிலையில்தான் இருக்கிறார்கள். ஏற்கனவே நகர்புறங்களில் நிலத்தடி நீர் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் இவ்வாரான மீட்டர் பொருத்தப்படுமாயில் அதனால் பாதிப்புக்குள்ளாவது கிராமப்புரத்து ஏழைகளாகவே இருப்பார்கள். நகர்புறங்களை காட்டிலும் கிராமப்புறங்களில் ஊழல் அதிகம். இதிலும் சில்லரைப்பார்க்க அரசியல்வாதிகள் முயலமாட்டார்கள் என்று சொல்லிவிடமுடியாது.

தங்களின் மற்ற மூன்று கருத்துக்களுடன் ஒத்துப்போகிறேன். அவசியமான பதிவு.

நன்றி வாழ்த்துக்கள்.//

ஊழல் இல்லாத இடம் எங்க இருக்கு பாலாஜி முதலில் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும் அப்பறம் பழகிட்டா மின் கட்டணம் செலுத்துவது போல பழகிடும்

நன்றி பாலாஜி தங்கள் கருத்துக்கு

ப்ரியமுடன் வசந்த் said...

// யோ வாய்ஸ் said...
இன்றுமுதல் வசந்த் டயலாக்

லஞ்சம் இல்லா பூமி கேட்டேன்
பஞ்சம் இல்லா வீடு கேட்டேன்
வஞ்சம் இல்லா மனிதன் கேட்டேன்//

இனி இது வேறையா இனி எப்படியும் தினமும் பஞ்ச் வசந்த் வாசிக்கலாம் என நினைக்கிறேன். எப்படியோ கலக்குங்கண்ணா

பி.கு. நன்றி வசந்த் என்பதிவில் பின்னூட்டம் போட முடியாது என கூறியதற்கு, இப்போ அதை சரி பண்ணிவிட்டேன்.//

சரி பண்ணியாச்சா மிக்க நன்றி யோ

ப்ரியமுடன் வசந்த் said...

//வால்பையன் said...
வழிமொழிகிறேன்!//

நன்றி தல

ப்ரியமுடன் வசந்த் said...

// Mrs.Menagasathia said...
இந்த லிங்கினை பார்க்கவும்.//

நன்றி மேனகா மேடம் வருகைக்கும் விருதுக்கும்

ப்ரியமுடன் வசந்த் said...

//// குரு said...
//லஞ்சம் இல்லா பூமி கேட்டேன்
பஞ்சம் இல்லா வீடு கேட்டேன்
வஞ்சம் இல்லா மனிதன் கேட்டேன்//

???!!!?!??!!?!?!!

I dont understand these sentence...What is the meaning for them???

By the Way, Im coming from INDIA//

உங்களுக்கு கொஞ்சம் லொள்ளு ஜாஸ்திங்ணா

நன்றிங்ணா//

ப்ரியமுடன் வசந்த் said...

// நையாண்டி நைனா said...
நல்லா.. இருக்கே மக்கா....//

எல்லாம் உங்க உசுப்பேத்தலால் விளைந்ததுதான்

நன்றி நைனா

ப்ரியமுடன் வசந்த் said...

// டக்ளஸ்... said...
சூப்பரா எழுதியிருக்கீங்க.
புது டெம்ப்ளேட் நல்லா இருக்கு நண்பா.//

நன்றி நண்பா

ப்ரியமுடன் வசந்த் said...

// சூரியன் said...
முதல்ல இலஞ்ச மீட்டர் வைக்குனும் அப்பதான் இதெல்லாம் உபயோகப்படும்

மக்களுக்கு ..

உண்ம//

நன்றி சூரியன்

ப்ரியமுடன் வசந்த் said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
நல்ல கருத்துப் பதிவு போஸ்ட்.

அரசாங்கத்தின் காதுக்கு எட்டுவது எப்போது ?//

அனைத்து துறைக்கும் மெயில் பண்ணிட்டேன் அமித்து அம்மா சிஎம்முக்கும் அனுப்பிட்டேன்

நடக்கும்

நன்றி அமித்து அம்மா

ப்ரியமுடன் வசந்த் said...

// இது நம்ம ஆளு said...
உங்கள் கருத்துகள் அனைத்தும் மற்றவர்களை கண்டிப்பாக சிந்திக்க வைக்கும .

இனி வரும் காலங்களில் இதை நிச்சியம் பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்//

கண்டிப்பா பயன்பாட்டிற்க்கு வரும்

நன்றி இது நம்ம ஆளு

ப்ரியமுடன் வசந்த் said...

// கார்ல்ஸ்பெர்க் said...
//வழிமொழிகிறேன்!//

-நானும்..//

நன்றி கார்ல்ஸ்பெர்க்

ப்ரியமுடன் வசந்த் said...

//Sukumar Swaminathan said...
//வழிமொழிகிறேன்!//

-நானும்.//

நன்றி சுகுமார்

ப்ரியமுடன் வசந்த் said...

//Muneeswaran said...
vasanth, ungal karuthukku nandri.

1) Ungal vittil water meter irukka?
athai muraipadi alavu eduthu than thanneer bill kattkirergalaa?
eppothum aduthavargalai kurai sollatheergal muthalil neengal eppadi irukkeergal endru parungal.

2)Entha factoryla vathu eppadi kalivu abathu vilaivikkuthunu ungalukku theriyumaa? appadi iruntha antha factory mela nenga complaint koduthirukkingalaa?

3)Neenga solla varathu enakku puriyavillai!. payanpatti poruthu piripathal eppadi diesel payanpaddu kuraiyum. epo oru bike oru varathukku ethanai km pogumnu solla mudiyuma? summar 60km pogumnu vachukonga avan 70kmku poduvan. apo eppadi kuraiyum.

Government ella valiyilum ethai thaduthu kondu than varkirathu. atharkku nengal thunai irunthal mattum pothum. iruthiyaga
" thirudanai parthu thirunthavittal thiruttai olikka mudiyathu"
first live a good citizen yourself.
mannikkavum...............//

இப்பொ முதல் கேள்விக்கு

நாங்க கிராமத்துல இருக்குறோம் அங்க வாட்டர் மீட்டர் எல்லாம் கிடையாது இரு மாதங்களுக்கு ஒருமுறை தவறாது தண்ணீர் வரி செலுத்துகிறோம்

இரண்டாவது கேள்விக்கு

2)Entha factoryla vathu eppadi kalivu abathu vilaivikkuthunu ungalukku theriyumaa? appadi iruntha antha factory mela nenga complaint koduthirukkingalaa?

கம்ப்லெயிண்ட் குடுத்த மனுக்களுக்கு நீங்க வந்து நடவடிக்கையெடுங்களேன் கலக்டர் ஐயா

மூணாவது

தேவையில்லாம ஈ சி ஆர் ரோட்ல ரைடிங் பண்ணி எரிபொருள் செலவு செய்பவர்களுக்கு காசு திமிருல...
நீங்களும் அப்படித்தான்னு நினைக்கிறேன் அதான் கோவம் வருது

நாலாவது

Government ella valiyilum ethai thaduthu kondu than varkirathu. atharkku nengal thunai irunthal mattum pothum.

ம்க்கும் நடத்திட்டாலும்....

உங்களுக்கு நன்றி இனிமேல் இந்த பக்கம் வராதீங்க

இது என்னோட ஒரு சின்ன குத்தூசிதான் .....
செயல்படுத்துறது அரசாங்கத்தோட கையிலதான் இருக்கு

ப்ரியமுடன் வசந்த் said...

//இராகவன் நைஜிரியா said...
அருமையான கருத்துக்கள். மீட்டர் பொருத்துவது அவசியம் தான். ஆனால் இதிலேயும் காசு பார்க்க ஆரம்பித்து விடுவார்களே என்பதை நினைக்கத்தான் வருத்தமாக இருக்கின்றது.//

ஆமா சார்

நன்றி ராகவன் சார்

ப்ரியமுடன் வசந்த் said...

//Suresh Kumar said...
நல்ல கருத்துக்கள் தான் ஆனால் இந்தியாவில போய்.....................//

நம்புவோம் சுரேஷ்

ப்ரியமுடன் வசந்த் said...

//நாஞ்சில் நாதம் said...
1.சரியான யோசனை. அளவுகோல் என்றும் அவசியம்தான்.

2. சாயக்கழிவு,ரசாயன கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் தொழிற்ச்சாலைகள் அதிகமாக உள்ள இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. (Comman Effulent Treatment Plant)உதாரணமாக திருப்பூர், ஈரோடு, ராணிபேட்டை, வாணியம்பாடி உண்மை என்னண்ணா பல இடங்களில் treatment plant சரிவர இயங்கவில்லை. முதல் கட்ட சுத்திகரிப்பு மட்டும் செய்கிறார்கள். ஒவ்வொரு தொழிற்ச்சாலையும் தனக்கு ஒரு தனி ரசாயன கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் கண்டிப்பாக செயல்படும் முறையில் வைத்திருக்க வேண்டும். இதை தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம் கண்காணிக்கும்.

3.தொழிற்ச்சாலைகளிலிருந்து வெளியேறும் மாசு (புகை)
வெளியேற்றும் குழாய்களிலும் மீட்டர் உண்டு. ஆனா கட்டணம் வசூலிக்கபடுவதிலை.

4.இன்னும் சில வருடங்களில் பெட்ரோல்,டீசல் தட்டுப்பாடு வந்துவிடும்

/// மீட்டர் வட்டிக்கு பணம் வாங்குற மக்கள் இந்த மீட்டர்களை ஏத்துகிடுவாங்களா? //

கேள்விக்குறிதான்//

ஆஹ்ஹா நர்சிம் சார் இடுகைல போட்ட பின்னூட்டத்தின் விளைவா

நன்றி நாஞ்சில் நாதம் சார்

ப்ரியமுடன் வசந்த் said...

//இரவுப்பறவை said...
நல்ல சிந்தனை...//

நன்றி இரவுப்பறவை

ப்ரியமுடன் வசந்த் said...

//ஹேமா said...
சமூகச் சிந்தனை தெளிவா இருக்கு வசந்த்.செயல்படுத்தணும்.//

கண்டிப்பா நன்றி ஹேமா

ப்ரியமுடன் வசந்த் said...

//sarath said...
சரியான யோசனை. எப்படியும் செயல்படுத்தணும்.//

நன்றி சரத்

ப்ரியமுடன் வசந்த் said...

//சுந்தர் said...
நல்ல ஆலோசனை, ஆனால் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்காத ஹெல்மெட் சட்டம் போலதான் ஆகி விடும் ..,//

முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை

நன்றி சுந்தர்

ப்ரியமுடன் வசந்த் said...

//குடந்தை அன்புமணி said...
நல்ல யோசனைகள் நண்பா...
ஆனால் இதெல்லாம் நிறைவேறணும்னா ‘முதல்வன்’ டைப்பில ஒரு முதல்வர் வந்தாத்தான் நடக்கும்.//

எப்படின்னாலும் நடக்கணும்

நன்றி அன்புமணி சார்

ப்ரியமுடன் வசந்த் said...

// திகழ்மிளிர் said...
/லஞ்சம் இல்லா பூமி கேட்டேன்
பஞ்சம் இல்லா வீடு கேட்டேன்
வஞ்சம் இல்லா மனிதன் கேட்டேன்/

கலக்கல்//

நன்றி திகழ்மிளிர்

ப்ரியமுடன் வசந்த் said...

//துபாய் ராஜா said...
நல்லதொரு சமுதாய அக்கறையுள்ள பதிவு.இந்த யோசனைகளை அமல்படுத்தினால் வீட்டிற்கும், நாட்டிற்கும்,நாம் வாழும் இந்த பூமிப்பந்திற்கும் மிக நல்லது.//

ஆமா ராஜா நன்றி

ப்ரியமுடன் வசந்த் said...

// பீர் | Peer said...
நல்லாருக்கு வசந்த்,//

நன்றி பீர்

ப்ரியமுடன் வசந்த் said...

//அன்புடன் அருணா said...
பூங்கொத்துக் கொடுத்துக் கொடுத்து கையெலலாம் வலிக்குது....வாங்கிக்கோங்க ....இன்னொன்று!!//

நன்றி பிரின்ஸ்

ப்ரியமுடன் வசந்த் said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
முதலிரண்டு யோசனைகள் நியாயமானதென்றே எனக்கு தோன்றுகிறது.

(நீங்க ரொம்ப சிந்திப்பீங்கன்னு சொன்னாங்க.. அது நெசம்தான் போல.. ஹிஹி..)//

என்ன சார் பண்றது உங்களுக்கு புரியுது என்னோட சீப் இன்னும் எனக்கு ப்ரொமோசன் தராம் வச்சுருக்கார் அதான் என்னோட குரு நர்சிம் சார்

சரி குடுக்கும் போது குடுக்கட்டும்

ப்ரியமுடன் வசந்த் said...

//என்.கே.அஷோக்பரன் said...
அருமையான எண்ணம் - செயல்படுத்தினால் நாட்டுக்கும் மக்களுக்கும் எதிர்காலச் சந்ததிக்கும் மிக நல்லது. தங்களது எண்ணத்தை ஏனையவர்கள் பயன்படுத்த எழுத்துமூல அத்தாட்சியையும் இப்பதிவிலேயே வழங்கிவிடுங்கள் - யாராவது இதை நடைமுறைப்படுத்துவார்கள் என எதிர்பார்ப்போம். நான் அறிந்த சில மக்கள் நலன் அமைப்புக்களுக்கும் இந்ததத் தகவலை அனுப்புகிறேன்.//

மிக்க மகிழ்ச்சிங்க

பயன் படுத்துறதுக்குதானே யோசனைகள்

யார் வேண்டுமானாலும் பயன் படுத்திக்கிடலாம் என்று உறுதி கூறுகிறேன் போதுமா அஷோக் சார்

ப்ரியமுடன் வசந்த் said...

இவ்விடுகையை தன்னுடைய பதிவில் வெளியிட்டு அறிமுகம் தந்த குருநாதர் திரு நர்சிம் அவர்களுக்கு மிக்க நன்றிகலந்த வணக்கங்கள்....

சுசி said...

சூப்பர் சிந்தனைகள் வசந்த்..

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப நல்ல விஷயங்கள்தான்.

SUFFIX said...

நல்லா இருக்கு வஸ்ந்த் யோசனை, நடைமுறை படுத்த நாமளும் ஒத்துழைக்கனும்

Admin said...

அவசியமான பதிவு வசந்த்...

ப்ரியமுடன் வசந்த் said...

//சுசி said...
சூப்பர் சிந்தனைகள் வசந்த்..//

நன்றி சுசி

ப்ரியமுடன் வசந்த் said...

// S.A. நவாஸுதீன் said...
ரொம்ப நல்ல விஷயங்கள்தான்.//

நன்றி நவாஸ்

ப்ரியமுடன் வசந்த் said...

// ஷ‌ஃபிக்ஸ் said...
நல்லா இருக்கு வஸ்ந்த் யோசனை, நடைமுறை படுத்த நாமளும் ஒத்துழைக்கனும்//

நன்றி ஷஃபி

ப்ரியமுடன் வசந்த் said...

// சந்ரு said...
அவசியமான பதிவு வசந்த்...//

நன்றி சந்ரு

vasu balaji said...

மத்ததெல்லாம் கருத்தில் கொண்டாலும் கார் விஷயம் காதிலேயே விழாது. அருமையான ஆலோசனைகள்.

selventhiran said...

சபாஷ்!

ப்ரியமுடன் வசந்த் said...

// செல்வேந்திரன் said...
சபாஷ்!//

நன்றி தலைவா

"உழவன்" "Uzhavan" said...

நல்ல யோசனைகள்.
அப்படியே ஏற்கனவே இருக்கிற மீட்டர்களை (ஆட்டோ) எப்படி பயன்படுத்துறதுனும் சொல்லுங்க :-)

ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு.