என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கும் மான் கூட்டத்திற்க்கு முதற்க்கண் என் வணக்கத்தையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டு அடுத்து இங்கு வருகை தந்திருக்கும் பரவலாக தன்னுடைய பெயரால் நம் பொது எதிரிகளான மனிதர்களை அலற வைத்துக்கொண்டிருக்கும் பன்றிக்கூட்டத்தையும்,தொடர்ந்து நம்முடைய பொது எதிரி மனிதர்களின் தூக்கத்தை கெடுப்பது மட்டுமல்லாமல் இரத்தத்தையும் குடித்துக்கொண்டிருக்கும் கொசுக்கூட்டத்தையும்,மனிதர்களை தன்னுடைய சேட்டைகளால் சிதைத்துக்கொண்டிருக்கும் குரங்கு கூட்டத்தையும்,அவ்வப்போது மனிதர்களை அசால்ட்டாய் அசிங்கப்படுத்திக்கொண்டிருக்கும் காக்கா கூட்டத்தையும்,பார்வையாலே பயமுறுத்தும் பாயும் சிங்கக்கூட்டத்தையும் , மேலும் பரவலாக திரண்டிருக்கும் காட்டு விலங்குகள் ,பறவைகள் அனைவரையும் வருக வருக என்று இருகால் கூப்பி வணங்குகிறேன்.
வரப்போகும் காடாளுமன்ற தேர்தலில் நம் இனத்திலிருந்து பிரிந்து சென்று மதம் எனும் பித்து பிடித்து திரியும் யானை கூட்டத்தையும்,தொடர்ந்து மனிதர்களுக்கு விசுவாசியாய் இருக்கும் நாய் கூட்டத்தையும் , எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் மனிதர்களுக்கு இரையாகிப்போகும் மாடு,ஆடு,கோழி கூட்டத்திரற்க்கும்,மனிதனை தூக்கத்திலிருந்து எழுப்பும் அலாரமாகிப்போன சேவல் கூட்டத்தையும்,சினிமா நடிகைகளின் மடியில் தஞ்சமாகிப்போன பூனை கூட்டத்தையும் எதிர்த்து நம் ஐக்கிய வனநாயக முற்போக்கு கூட்டணி போட்டியிடுகிறது.
என்னுடைய தேர்தல் வாக்குறுதிகள்
1.தொடர்ந்து நமக்கு இயலாத கைகளால் வாக்கு இடும் முறை நீக்கப்பட்டு கால்களால் வாக்குகளிடப்படும் முறை அறிமுகப்படுத்தப்படும்.
2.பல நூறாண்டுகள் நம் முன்னோர்கள்,சகாக்கள் மனிதர்களின் காட்ச்சிப்பொருளாக கூண்டுகளில் அடைப்பட்டிருப்பதை எதிர்த்து அவர்கள் நிரந்தரமாக விடுதலையாக முயற்சிகள் எடுக்கப்படும்.
3.காடுகள் மனிதர்களால் அழிக்கப்படுவதைக்கண்டித்து கறுப்பினத்தலைவரும் அமெரிக்க காடாளுமன்ற அதிபருமான சிம்பன்சியிடம் கோரிக்கை விடப்படும்.
4.முன்பே நமக்கு நாம் எங்கு சென்றாலும் நம் தாகம் தீர ஆறுகளும் , ஓடைகளும் நீர் நிறைந்திருந்தது. இப்பொழுது அதுவும் இந்த மனிதனின் கேடு விளைவிக்கும் செயல்களால் நீர் வற்றி காணப்படுவதால் நாம் நீருக்கு நீண்ட தூரம் சென்று நம் தாகம் தீர்க்க இயலாததால்,காட்டுக்குள் அங்கு அங்கு சிறு நீர்தொட்டிகள் அமைக்கப்படும்.
5.பல நூறாண்டுகளாக நாமே நம்மளை அடித்து கொன்று தின்கிறோம் மனிதர்களைப்போல அத்தகைய செயல்கள் இனிமேல் நடைபெறாது நமக்காக ஜாதிகளால் பிரிந்து தன்னைத்தானே அடித்து கொல்லும் மனிதர்களை வேட்டையாடி தின்பதற்க்கு வழிவகை செய்யப்படும்.
6.காடாளுமன்றத்தில் நமக்குள்ளே அடித்துக்கொள்பவர்கள் நம்முடைய வனவிலங்கு நீதிமன்றம் மூலம் தண்டிக்கப்பட்டு காடு கடத்தப்படுவார்கள்.
7.நம்முடைய தந்திரி கூட்டத்தில் ஓநாய் தந்திரியாக செயல் படும்.
8.காடாளுமன்றம் நடைபெற தனிக்காடு ஒன்று நம்மால் ஏற்ப்படுத்தப்படும்.
9.நம் வருங்கால சந்ததியினர் படிப்பறிவு பெற நிறைய விலங்கு கூடங்கள் அமைக்கப்படும்.
10.நம் காடாளுமன்ற முந்நாள் தலைவர் டைனோசருக்கு நம் காடாளுமன்றத்தில் சிலை வைக்கப்படும்.
11.புதர்களில் மனிதர்கள் காதல் புரிவதை தடுத்து அவர்களை படம் பிடிக்க பாம்புப்படை செயல்படும்.
12.மனிதன் அரை குறை ஆடைகளோடுதிரிகிறான் விரைவில் அவனும் அம்மனமாக திரியும் நாள் வரும் என்பதால் ஐந்தறிவு பெற்ற நாம் அவனைப்போலல்லாமல் உலக காடுவாழ்இனங்களில் முதல் முறையாக நமக்கான ஆடைகள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு அனைவருக்கும் இலவசமாய் வழங்கப்படும்.
13.நம்மோட காடுகளை பட்டா போட மனுஷன் யாரு? அவற்றை அவர்களிடமிருந்து பிடுங்கி நம்மினங்கள் அவரவர் வாழ தனித்தனி இடங்கள் பட்டா போட்டுத்தரப்படும்.
14.தேர்தலில் ஜெயித்து காடாளுமன்ற உறுப்பினராகிய பின் தன் காட்டுதொகுதிக்கு வராமலிருக்கும் உறுப்பினரின் இருகால்களும் வெட்டி அத்தொகுதி வாழ் விலங்குகளுக்கு சூப்பாக கொடுக்கப்படும்.
15. நம்மின பெருமைகளை விளக்கும் டிஸ்கவரி சேனல் அரசு சேனலாக மாற்றப்பட்டு கட்டணமில்லாமல் அனைவருக்கும் வழங்கப்படும்.
இவ்வாக்குறுதிகள் கண்டிப்பாக முதல் காடாளுமன்ற கூட்டத்திலே நிறைவேற்றப்படும் என அனைத்து வன சகோதரர்களுக்கும்,தாய்மார்களுக்கும்,தந்தைமார்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இத்தேர்தலில் தங்கள் பொன்னான வாக்குகளை நம்முடைய மான்கொம்பு சின்னத்தில் வாக்களிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
காடு எங்கும் நம் ஐக்கிய வன நாயக முற்போக்கு கூட்டணிக்கு பேனர்கள் அமைத்து இக்கூட்டம் சிறப்பாக நடைபெற உதவிய ஐக்கிய வன நாயக முற்ப்போக்கு கூட்டணியின் இளைஞர் பிரிவுகளுக்கு நன்றிகள்
67 comments:
கலக்கல் அறிக்கை!
/////14.தேர்தலில் ஜெயித்து காடாளுமன்ற உறுப்பினராகிய பின் தன் காட்டுதொகுதிக்கு வராமலிருக்கும் உறுப்பினரின் இருகால்களும் வெட்டி அத்தொகுதி வாழ் விலங்குகளுக்கு சூப்பாக கொடுக்கப்படும்./////////
;-))))))))
பல நூறாண்டுகளாக நாமே நம்மளை அடித்து கொன்று தின்கிறோம் மனிதர்களைப்போல அத்தகைய செயல்கள் இனிமேல் நடைபெறாது நமக்காக ஜாதிகளால் பிரிந்து தன்னைத்தானே அடித்து கொல்லும் மனிதர்களை வேட்டையாடி தின்பதற்க்கு வழிவகை செய்யப்படும்.
///
இப்படி நடந்தால்........நினைத்துப்பார்க்க முடியவில்லை!!
வெற்றி நிச்சயம்.. அப்படியே சிங்கம்,புலிக்கெல்லாம் எலும்பு குடுத்தீங்கண்ணா ஓட்டு நிச்சயம்!!!
இந்த இடுகையின் உள் அர்த்தம் நன்கு விளங்குகின்றது.
காடை எல்லாம் அழித்து, இந்த மண் அழிய காரணம் இந்த மனிதர்கள்.
மனிதர்களிடம் இருந்து மண்ணை யார் காப்பாறப் போகின்றார்களோ...
நல்லாத்தான் யோசிக்கறீங்க.....
உங்க பதிவு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. :))
எப்படிங்க இப்படியெல்லாம்??
கலக்குங்க, கலக்குங்க..
எப்படி வசந்த் இப்படி எல்லாம் யோசிக்க உங்களால் மட்டும் முடியிது...
நல்ல இடுகை....
ஆழமான கருத்துக்களை சொல்லி இருக்கிங்க வசந்த் தொடருங்கள்..
கலக்கல் வசந்த்
என்னமோ போங்க..,
//எப்படி வசந்த் இப்படி எல்லாம் யோசிக்க உங்களால் மட்டும் முடியிது...
நல்ல இடுகை....
ஆழமான கருத்துக்களை சொல்லி இருக்கிங்க வசந்த் தொடருங்கள்..
//
repeat
அண்ணன் இராகவன் நைஜீரியாவை வழிமொழிகிறேன்.
உனக்குள்ளே ஏதோ இருந்திருக்கு ராஸா
கலக்கல் பதிவு ...
ஆஹா 150க்கு பின் வண்டி பறக்குது..
கருத்தும், நகைப்பும் கலந்த மிக அருமையான இடுகை நண்பா...
சில கருத்துகள் மனிதனை வெட்கமடையச் செய்யும்...
ஆழந்து படித்தால் மனதில் தைக்கும் உண்மையும் கூட
பாராட்டுகள்
நல்ல பதிவு வசந்த் :-))
கலக்கல்.. வித்தியாசமா யோசிக்கறீங்க..
வர... வர... உன் எழுத்துக்கள் சுவாரசியமாகிட்டு வருது வசந்து மாப்பி..
வாழ்த்துக்கள் 100 அடிக்க போறதுக்கு!
உண்மைய அருமையா சொல்லி இருக்கீங்க வசந்த்.
//எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் மனிதர்களுக்கு இரையாகிப்போகும் மாடு,ஆடு,கோழி கூட்டத்திரற்க்கும்,//
ஏன் இப்படி, இன்னும் சாப்பிட்டது ஜீரணம் ஆகலையோ?
எனது மூதாதையர்கள் குரங்காக இருந்தபடியாலும், நானும் அவர்களின் வழித்தோன்றலாகவே வந்தபடியாலும் எனது நல்ல ஓட்டினை, கள்ள ஓட்டாக ஐக்கிய வனநாயக முற்போக்கு கூட்டணிக்கு பதிவிடுகிறேன்.
அயல் காடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுல்ல சந்தன மரங்கள், இரத்த வங்கிகளின் இருப்பு ஆகியவற்றை சாதுரியமாக இருட்டடிப்பு செய்த எதிர் கட்சி தலைவரை கண்டிக்கிறேன்.
சொந்த காரங்களுக்கு வாக்கு கேட்கிறீங்களோ? ஏன் நீங்கள் போட்டியிடவில்லை..
அட்டகாசமான, அதிரடியான, அம்சமான அறிக்கை. வேறு என்ன சொல்ல. நீங்க தொடர்ந்து கலக்குங்க வசந்த்.
கல கலன்னு இருக்கு வஸந்த்!! தேர்தல் வாக்குறுதிகள் தான் ரொம்ப நீளமா இருக்கு, நம்மாளுங்க சொல்றது மாதிரி!!
பிரமாதம் :)
அந்த மணியன் பாம்பு புடிக்கிற கோஷ்டிகளை புடிச்சி குடுக்குற மாதிரி ஒரு வாக்குறுதியோ இல்ல பஞ்ச டயலாக்கோ சேர்த்திருக்கலாம் :))))
சின்னமும், வேட்பாளர்கள் ஐடியா சூப்பர்.
அந்த மணியன் பாம்பு புடிக்கிற கோஷ்டிகளை புடிச்சி குடுக்குற மாதிரி ஒரு வாக்குறுதியோ இல்ல பஞ்ச டயலாக்கோ சேர்த்திருக்கலாம் :))))
சின்னமும், வேட்பாளர்கள் ஐடியா சூப்பர்.
நல்லா யோசிக்கறீங்க வசந்த்!!ஐடியா சூப்பர்...
CLASS PERFORMANCE மாதிரி CLASS POSTING....... இது வெறும் கற்பனை திறன் இல்லை இந்த சமுதாயத்தின் மீது உனக்குள்ள ஈடுபாடு அதன் பலவீனங்களை சகிக்கமுடியாமையின் வெளிப்பாடு...ஒரு லட்சிய இளைஞனுக்கு இருக்கவேண்டிய ஆக்கபூர்வமான எண்ணங்கள் உணர்வுகள் நீ எங்களுக்கு எல்லாம் ஒரு வழி காட்டுகிறாய் உன் எழுத்துக்கள் மூலமாக..வாழ்த்துக்கள்..இதில் உனக்கு நிகர் நீ தான் வசந்த்.....
இன்றைய வசந்த் டயலாக்
மானை தின்பவனும்
மண்ணை தின்பவனும்
மனுஷனே இல்லை.
aaha aaha
mudiyala vasanth
காடுகள் மனிதர்களால் அழிக்கப்படுவதைக்கண்டித்து கறுப்பினத்தலைவரும் அமெரிக்க காடாளுமன்ற அதிபருமான சிம்பன்சியிடம் கோரிக்கை விடப்படும்.
அப்படிப் போடு
பல நூறாண்டுகளாக நாமே நம்மளை அடித்து கொன்று தின்கிறோம் மனிதர்களைப்போல அத்தகைய செயல்கள் இனிமேல் நடைபெறாது நமக்காக ஜாதிகளால் பிரிந்து தன்னைத்தானே அடித்து கொல்லும் மனிதர்களை வேட்டையாடி தின்பதற்க்கு வழிவகை செய்யப்படும்.
ஏற்கெனவே இதுல் பாதி நடக்குது
.புதர்களில் மனிதர்கள் காதல் புரிவதை தடுத்து அவர்களை படம் பிடிக்க பாம்புப்படை செயல்படும்.
என்ன ஒரு நல்ல எண்ணம்
நம்மின பெருமைகளை விளக்கும் டிஸ்கவரி சேனல் அரசு சேனலாக மாற்றப்பட்டு கட்டணமில்லாமல் அனைவருக்கும் வழங்கப்படும்.
நல்ல விஷயம்
இத்தேர்தலில் தங்கள் பொன்னான வாக்குகளை நம்முடைய மான்கொம்பு சின்னத்தில் வாக்களிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்
பணம் உண்டா???
100 பாலோயர் அடிக்க போவதற்கு வாழ்த்துக்கள்
குறுகிய காலத்தில் 150 இடுகைகளுக்கும் வாழ்த்துக்கள்
தாமத வருகைக்கு மன்னிக்கவும் சகோ
//தமிழ் பிரியன் said...
கலக்கல் அறிக்கை!//
நன்றி தமிழ்பிரியன்
//தேவன் மாயம் said...
பல நூறாண்டுகளாக நாமே நம்மளை அடித்து கொன்று தின்கிறோம் மனிதர்களைப்போல அத்தகைய செயல்கள் இனிமேல் நடைபெறாது நமக்காக ஜாதிகளால் பிரிந்து தன்னைத்தானே அடித்து கொல்லும் மனிதர்களை வேட்டையாடி தின்பதற்க்கு வழிவகை செய்யப்படும்.
///
இப்படி நடந்தால்........நினைத்துப்பார்க்க முடியவில்லை!!//
அது நன்றி தேவா சார்
//குறை ஒன்றும் இல்லை !!! said...
வெற்றி நிச்சயம்.. அப்படியே சிங்கம்,புலிக்கெல்லாம் எலும்பு குடுத்தீங்கண்ணா ஓட்டு நிச்சயம்!!!//
இதுவும் நல்ல ஐடியா தான்
நன்றி ராஜ்
// இராகவன் நைஜிரியா said...
இந்த இடுகையின் உள் அர்த்தம் நன்கு விளங்குகின்றது.
காடை எல்லாம் அழித்து, இந்த மண் அழிய காரணம் இந்த மனிதர்கள்.
மனிதர்களிடம் இருந்து மண்ணை யார் காப்பாறப் போகின்றார்களோ...//
அதுதான் தெரியலை ராகவன் சார்
நன்றி
// வானம்பாடிகள் said...
Superb//
நன்றி பாலா
// துபாய் ராஜா said...
நல்லாத்தான் யோசிக்கறீங்க.....
உங்க பதிவு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. :))//
நன்றி ராஜா
//கார்ல்ஸ்பெர்க் said...
எப்படிங்க இப்படியெல்லாம்??
கலக்குங்க, கலக்குங்க..//
நன்றி கார்ல்ஸ்பெர்க்
//sarathy said...
Very nice...//
நன்றி சாரதி
// சந்ரு said...
எப்படி வசந்த் இப்படி எல்லாம் யோசிக்க உங்களால் மட்டும் முடியிது...
நல்ல இடுகை....
ஆழமான கருத்துக்களை சொல்லி இருக்கிங்க வசந்த் தொடருங்கள்..//
நன்றி சந்ரு
//முரளிகண்ணன் said...
கலக்கல் வசந்த்//
நன்றி முரளி
// SUREஷ் (பழனியிலிருந்து) said...
என்னமோ போங்க..,//
நன்றி தல
//ஜெட்லி said...
//எப்படி வசந்த் இப்படி எல்லாம் யோசிக்க உங்களால் மட்டும் முடியிது...
நல்ல இடுகை....
ஆழமான கருத்துக்களை சொல்லி இருக்கிங்க வசந்த் தொடருங்கள்..
//
repeat//
நன்றி ஜெட்லி
//Cable Sankar said...
அண்ணன் இராகவன் நைஜீரியாவை வழிமொழிகிறேன்.//
நன்றி கேபிள் சார்
// நட்புடன் ஜமால் said...
உனக்குள்ளே ஏதோ இருந்திருக்கு ராஸா
கலக்கல் பதிவு ...//
நன்றிங்ணா
// கதிர் - ஈரோடு said...
ஆஹா 150க்கு பின் வண்டி பறக்குது..
கருத்தும், நகைப்பும் கலந்த மிக அருமையான இடுகை நண்பா...
சில கருத்துகள் மனிதனை வெட்கமடையச் செய்யும்...
ஆழந்து படித்தால் மனதில் தைக்கும் உண்மையும் கூட
பாராட்டுகள்//
நன்றி கதிர் பாராட்டுகளுக்கு
// சிங்கக்குட்டி said...
நல்ல பதிவு வசந்த் :-))//
நன்றி சிங்ககுட்டி
// லோகு said...
கலக்கல்.. வித்தியாசமா யோசிக்கறீங்க..//
நன்றி லோகு
//கலையரசன் said...
வர... வர... உன் எழுத்துக்கள் சுவாரசியமாகிட்டு வருது வசந்து மாப்பி..
வாழ்த்துக்கள் 100 அடிக்க போறதுக்கு!//
நன்றி மாமு....
// சுசி said...
உண்மைய அருமையா சொல்லி இருக்கீங்க வசந்த்.//
நன்றி சுசி
//க. பாலாஜி said...
//எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் மனிதர்களுக்கு இரையாகிப்போகும் மாடு,ஆடு,கோழி கூட்டத்திரற்க்கும்,//
ஏன் இப்படி, இன்னும் சாப்பிட்டது ஜீரணம் ஆகலையோ?
எனது மூதாதையர்கள் குரங்காக இருந்தபடியாலும், நானும் அவர்களின் வழித்தோன்றலாகவே வந்தபடியாலும் எனது நல்ல ஓட்டினை, கள்ள ஓட்டாக ஐக்கிய வனநாயக முற்போக்கு கூட்டணிக்கு பதிவிடுகிறேன்.//
ஜீரணமாகாமல் இருந்தததால் தான் இந்த இடுகை
நன்றி பாலாஜி
//நையாண்டி நைனா said...
அயல் காடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுல்ல சந்தன மரங்கள், இரத்த வங்கிகளின் இருப்பு ஆகியவற்றை சாதுரியமாக இருட்டடிப்பு செய்த எதிர் கட்சி தலைவரை கண்டிக்கிறேன்.//
கண்டுபிடிச்சுட்டீங்களே நைனா
// யோ வாய்ஸ் said...
சொந்த காரங்களுக்கு வாக்கு கேட்கிறீங்களோ? ஏன் நீங்கள் போட்டியிடவில்லை..//
நாங்க போட்டியெல்லாம் போடமாட்டோம்
போட்டியில்லாமலே ஜெயிப்போம்...
நன்றி யோ
//S.A. நவாஸுதீன் said...
அட்டகாசமான, அதிரடியான, அம்சமான அறிக்கை. வேறு என்ன சொல்ல. நீங்க தொடர்ந்து கலக்குங்க வசந்த்.//
நன்றி நவாஸ்
//ஷஃபிக்ஸ் said...
கல கலன்னு இருக்கு வஸந்த்!! தேர்தல் வாக்குறுதிகள் தான் ரொம்ப நீளமா இருக்கு, நம்மாளுங்க சொல்றது மாதிரி!!//
அப்படியா ஷஃபி
ஆனா இதுங்க ஏமாத்தாதுங்க
நன்றி
//இது நம்ம ஆளு said...
பிரமாதம் :)//
நன்றி இது நம்ம ஆளு
// அமிர்தவர்ஷினி அம்மா said...
அந்த மணியன் பாம்பு புடிக்கிற கோஷ்டிகளை புடிச்சி குடுக்குற மாதிரி ஒரு வாக்குறுதியோ இல்ல பஞ்ச டயலாக்கோ சேர்த்திருக்கலாம் :))))
சின்னமும், வேட்பாளர்கள் ஐடியா சூப்பர்.//
நன்றி அமிர்தவர்ஷினி அம்மா
// Mrs.Menagasathia said...
நல்லா யோசிக்கறீங்க வசந்த்!!ஐடியா சூப்பர்...//
நன்றி மேனகா மேடம்
//தமிழரசி said...
CLASS PERFORMANCE மாதிரி CLASS POSTING....... இது வெறும் கற்பனை திறன் இல்லை இந்த சமுதாயத்தின் மீது உனக்குள்ள ஈடுபாடு அதன் பலவீனங்களை சகிக்கமுடியாமையின் வெளிப்பாடு...ஒரு லட்சிய இளைஞனுக்கு இருக்கவேண்டிய ஆக்கபூர்வமான எண்ணங்கள் உணர்வுகள் நீ எங்களுக்கு எல்லாம் ஒரு வழி காட்டுகிறாய் உன் எழுத்துக்கள் மூலமாக..வாழ்த்துக்கள்..இதில் உனக்கு நிகர் நீ தான் வசந்த்.....//
நன்றி தமிழரசியாரே....
//100 பாலோயர் அடிக்க போவதற்கு வாழ்த்துக்கள்
குறுகிய காலத்தில் 150 இடுகைகளுக்கும் வாழ்த்துக்கள்
தாமத வருகைக்கு மன்னிக்கவும் சகோ//
தங்கள் வருகையே மகிழ்ச்சி சகோதரி
வாழ்த்துக்கள் நிறைவேறியது...
நன்றி
எல்லாம் சரி, ஒரு ஓட்டுக்கு எவ்வளவு தருவாங்க?
உங்களுக்கென்று தனிப்பாதையில் பயணிக்கிறீர்! அதில் தனித்து தெரிகிறீர்கள்! உங்கள் கற்பனை வளத்தை சமூக அக்கறையோடு பயன்படுத்துவது கண்டு அகமகிழ்கிறேன்.
//11.புதர்களில் மனிதர்கள் காதல் புரிவதை தடுத்து அவர்களை படம் பிடிக்க பாம்புப்படை செயல்படும்.//
சூப்பரான வரிகள்!
நன்றி சங்கர்(ஒரு ஓட்டுக்கு ஒரு எலும்புத்துண்டு)
நன்றி சுமஜ்லா
Post a Comment