அன்றும் வழக்கம் போல் மீனாவின் வீட்டிற்க்கு சென்று மீனாவையும் தன்னுடைய உந்துவளையில் அழைத்துக்கொண்டு நரம்புகலமர் வகுப்பிற்க்கு சென்று கொண்டிருக்கும் பொழுது பாதிவழியிலே அவனுடைய உந்துவளை நின்றுவிட்டது என்ன வென்று பார்த்தால் உந்துவளையில் கன்னெய் இல்லை.பக்கத்தில் கன்னெய்கிடங்கு எங்கிருக்கிறது என்று பார்த்தான் . சற்று தூரம் உந்துவளையை தள்ளிகொண்டே கன்னெய் கிடங்கு சென்று உந்துவளையின் கன்னெய் கிடங்கு முழுதும் நிரப்பிகொண்டு மீண்டும் மீனாவை உந்துவளையில் ஏற்றிக்கொண்டு நரம்புகலமர் வகுப்பிற்க்கு சென்றான்.
செல்லும் வழியில் இருவரும் ஒரு சிற்றுண்டி விடுதியில் அவனுக்குபிடித்த வேகப்பமும் அவளுக்கு பிடித்த வனிக்கொடியும் சாப்பிட்டனர் சப்பிட்டுவிட்டு மீண்டும் மீனாவினை உந்து வளையில் ஏற்றிக்கொண்டு பயணத்தை தொடர்ந்தான் மீனாவின் பட்டுக்கல்தூள் வாசம் அவனை என்னவோ செய்தது அந்த வாசனையின் நுகர்வில் கவனம் சிதறி அடுத்து இருக்கும் சைகை விளக்கை கவனிக்காமல் சாலையை கடக்க இடப்புறம் இருந்து வந்த சீருந்தின் மீது மோதி பல அடி தூரம் தூக்கி எறியப்பட்டான் .
அவனுடைய அரணம் அங்கொன்று இங்கொன்றாக சிதறியது உந்துவளையிலிருந்த சிறிய கடாவி அவனுடைய உச்சந்தலையை பதம் பார்த்தது.மீனா அருகிலிருந்த கற்காரை சாலையின் மீது தூக்கி எறியப்பட்டிருந்தால் நல்ல வேளையாக தான் அன்று அணிந்திருந்த சேலையின் மீது வெயர்வி அணிந்திருந்ததால் அவளுடைய மானம் காற்றில் பறக்கவில்லை.காயமும் சிறிதாகதானிந்திருந்தது மயக்கத்திலிருந்தாள்.
அருகிலிருந்த யாரோ ஒருவர் திரிவூர்திக்கு அழைப்பு விடுக்க சிறிது நேரத்தில் திரிவூர்தி வந்தது அதிலிருந்த செவிலியர்கள் டோலியில் குமாரை வைத்து திரிவூர்தியில் ஏற்றி கொண்டு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.அங்கு அவனுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட பொழுதும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூளையில் சேதம் ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலே அவன் உயிர் பிரிந்தது....குமார் உந்து வளையில் நன்றாக அப்பியசி பெற்றவன் தான் இருந்தாலும் அவன் தலையந்தளகம் அணியாததால் அன்று அவனுடைய உயிர் பிரிந்தது...எனவே உந்து வளையில் பயணிக்கும் பொழுது தலையந்தளகம் கட்டாயம் அணியுங்கள்....
பயன்படுத்தபட்டிருக்கும் தூய தமிழ்ச் சொற்கள்
நரம்புகலமர் - வயலின்
உந்துவளை - மோட்டார் சைக்கிள்
தலையந்தளகம் - ஹெல்மெட்
கன்னெய் - பெட்ரோல்
வேகப்பம் - பிஸ்ஸா..
வனிக்கொடி - வெண்ணிலா ஐஸ்கிரீம்
பட்டுக்கல்தூள் - டால்கம் பவுடர்
சைகை விளக்கு - சிக்னல் விளக்கு
சீருந்து - கார்
அரணம் - செருப்பு
கடாவி - ரிவெட்
கற்காரை - கான்கிரீட்
வெயர்வி - ஸ்வெட்டர்
திரிவூர்தி - ஆம்புலன்ஸ்
டோலி - ஸ்ட்ரெச்சர்
அப்பியசி - ப்ராக்டிஸ்
இதன் முந்தைய இடுகை வாசிக்க இங்கே...
47 comments:
நன்று, நன்றி!!
//தமிழ் பதிவு//
தமிழ் இடுகை!
//தமிழ் வார்த்தைகள்//
தமிழ்ச் சொற்கள்
பழமை ஐயா மிக்க நன்றி மாற்றிவிட்டேன் ஐயா...
எங்கே கிடைக்கின்றன இந்த தமிழ்ச் சொற்கள்?
தங்களுக்கு போன ஜென்ம ஞாபகம் எதுவும் வந்துவிடவில்லையே, வசந்த் ஐயா அவர்களே !
அல்லது தமிழ் தேசம் பெற்றெடுத்த தமிழ் மகனாய், தமிழ்ப்பணி புரிய மனம் கொண்டீரா?
அல்லது கொலைவெறியே தானா ? ......இதுதான் காரணமா ????
ஏம்பா.. நல்லாத்தானே இருந்தீக..
திடீர்னு என்ன ஆச்சு..
இல்ல நாங்க நல்லா இருக்கிறது புடிக்கலையா??
திடீர்னு ஏன் இப்டி பண்றீக..
அவ்வ்வ்வ்..
தமிழிஷ்ல ஓட்டு போட போனா அங்கன சிவாஜி வேற மிரட்டுறாரு..
ஆவ்வ்வ்வ்..
எனக்கு இந்த இடுகை பிடிச்சிருக்கு
நல்லா இருக்கு டா..மாப்பி...
நல்லவேளை...நான் என்னனவோ நெனச்சுட்டேன்..போ...
உன்னை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருந்தேன் நேரம் இருந்தால் எழுது...
http://ganifriends.blogspot.com/2010/03/blog-post_08.html
ஆயிரத்தில் ஒருவன் எத்தனை வாட்டி பார்த்தீங்க ;)
------------------
இடுக்கை ரொம்ப பிடிச்சிருக்கு வசந்த்.
உந்துவளை - ரொம்ப ரொம்ப
நல்ல இடுகை.. பேச்சுத்தமிழிலயே ஆங்கிலம் கலக்காம எழுத முயற்சி செய்யுங்களேன்?
பச்சு முடுச்சா பேஜாரா கீது!
ஐயா எதுவும் கட்சி ஸ்டார்ட் பண்ண
போறிங்களா.....இல்ல பா.மா.க வுடன்
கூட்டணியா....
நல்ல முயற்சி.....
அடேங்கப்பா.. தமிழ்ல ஏதாச்சும் எழுதுங்க வசந்த் :))
VOW!!! - வாயை முட்டை வடிவில் குவித்து மூடுதல்!!!
செம்மொழி மாநாட்டுல "உங்களுக்கு எருது..சாரி..விருது கொடுக்க ஏற்பாடு பண்ணட்டுமாப்பு"
வாழ்த்துக்கள் நல்ல முயற்சி.
கிரேட். இதன் தமிழ் வார்த்தையை சொல்றேனுங்க
வசந்த!!! நல்ல முயற்சி!! பாராட்டுக்கள்!
வசந்த் ஐயாவுக்கு செம்மொழி மாநாட்டிற்கு அழைப்பு வந்துள்ளதோ?!
நல்ல முயற்சி
நன்று, நன்றி
தூயதமிழில் இடுகை நல்லாருக்கு.
அருமையான தமிழ் பதிவு வாழ்க வளமுடன் வளர்க தமிழ் மொழி
அருமை.
இருந்தாலும் ஒவ்வொரு வார்த்தையும் ஏன் அப்படி மொழி பெயர்க்கப் பட்டது என்பதை அறிவது மேலும் சுவாரசியம் கூட்டும்.
உதாரணத்திற்கு,
//
கன்னெய் - பெட்ரோல்
//
இதில் கன்னெய் என்பது கல் + நெய், என்று குறிப்பதாக எண்ணுகிறேன்.
கச்சா எண்ணை (Crude Petroleum Oil) பாறைகளுக்கு அடியில் உள்ள படிமங்களில் சிறைப் பட்டு இருக்கும், அதனால், கல்லிலிருந்து எடுக்கப் படும் நெய் என்பது மிகவும் சரியான சொல்லாக இருப்பதாக எண்ணுகிறேன்.
நல்ல முயற்சி. ஆனால் நினைவில் வைக்க சிரமமாய்த் தெரிகிறது சில வார்த்தைகள்:)!
முதல் வாசிப்பு கடினமாக இருந்தாலும், இரண்டாம் வாசிப்பு எளிதாக இருந்தது. நல்ல முயற்சி.
நல்ல முயற்சி...ஆனா நீங்க கீழே மட்டும் பயன்படுத்திய தமிழ் சொற்களுக்கு விளக்கம் கொடுக்காது இருந்தால் நான் முதலில் விளக்கத்தைப் படிக்காமலேயே உங்கள் கதையைப் படித்து புரியாமல் தலை சுத்தியது போல ஆகியிருக்கும் என்னைப் போன்ற சிலருக்கு...
தமிழ் வார்த்தைகள் மிக அருமை. நல்ல உரைநடை.
நல்லாருக்கு வசந்த்.
இரண்டு தூய தமிழ்வார்த்தைகளுக்குதான் அர்த்தம் தெரிந்தது வசந்த், வாழ்க தமிழ்.
உன்மையிலேய இவை தமிழ் தானா...
நீங்க தமிழ்கிட்ட.. இல்லை, தமிழ் உங்ககிட்ட ரொம்ப சரளமா விளையாடுது வசந்த்.. நல்லா இருக்கு..
கீழே டிக்ஷ்னரி போடாம இருந்திருந்திங்க ரொம்ப கஷ்டம்தான்.
:)
தூய தமிழ்ல கலக்கிட்டீங்க வசந்த் ஆனா டோலிதமிழ் வார்த்தையா
ஜயா சட்டாம்பிள்ளை அவர்களே!
ஓஓஓ....பாத்திருப்பது தமிழ் ஆசிரியையா???
இப்போதே ஒத்திகை போலும்....
ஒழுங்காக இனிமேல் கலப்படம் இல்லாமல்
தமிழ் வரட்டும்!!
இல்லாவிட்டால் முட்டி போடச்சொல்லி
சொல்லிக் கொடுப்பேன்
இதெல்லாம் நமக்கு சரிபட்டு வராது :-))
நல்ல முயற்சி. மகிழ்ச்சி
நற்றமிழ் சொற்கள்.... மாறுப்பட்ட முயற்சி... வாழ்க தமிழுடன் (மொழியுடன்)
வசந்த்,
சேரர்கள் பரம்பரையோ...?
(அது சரி... நான் எந்த நூற்றாண்டுல இருக்கேன் இப்போ...?)
பல தூய நம்சொற்களை அறியக் கொடுத்ததற்கு நன்றி.
தமிழ் பேசு தங்க காசு.
அருமை வசந்த்.
தமிழ் இடுகை என்று தலைப்பிட்டு ஆயிரத்தில் ஒரு இடுகை இட்டிருக்கிறீர்கள் ஐயா
ரொம்ப பிடிச்சிருக்கு வசந்த்...
மிக நன்று, நிறைய வார்த்தைகளை கற்று தந்தமைக்கு. இனிமேல் எனக்கு பைக்க பார்த்தாளே உந்துவளை என்று தான் ஞாபகம் வரும்...
நன்றி
எங்கே இருந்து மச்சி பிடித்த இவ்வளவு வார்த்தைகளை !!
அழகான முயற்சி..
நல்ல முயற்சி
உங்ககிட்டே தமிழ் டியூஷன் படிக்க ஃபீஸ் எவ்வ்ளோ??????
ஐயனே....என்னை மெய் சிலிர்க்க வைத்து விட்டீர்....
இதுவல்லவோ தமிழ்...இதுவல்லவா படிப்பு...
இதுக்குமேல நல்ல தமிழ் நமக்கு தெரியாது மச்சான்...
பதிவு கலக்கல்ஸ்...
அருமையைய்யா அருமை
தூய தமிழில் ரொம்ப நல்லா இருக்கு. ஆனா படிச்சு முடிச்சப்புறம்தான், கண்னை கட்டுது:-)
ஆனாலும் உங்கள் முயற்சிக்கு என் பாராட்டுக்கள் வசந்த்!
நரம்புகலமர் என்பது Guitar Playerஐக் குறிக்கிறது.
நரம்புகலம் Guitar ஐக் குறிக்கிறது.
வெற்றி பெற வாழ்த்துகள்
Post a Comment