October 28, 2009

வாழ்க மருத்துவர் ராமதாசு

காலையில் எனக்கு பிடித்த கொசுவுசட்டை போட்டுக்கொண்டு குசினிக்கு போய் போறாணையின் மூலம் அடுக்கு ரொட்டி இரண்டு சாப்பிட்டேன்

அப்புறமாக கேட்பொலியில் வட்டு இட்டு பார்த்தால் பாடல் ஒலிக்கவில்லை என்னவென்று சோதனைசெய்ய பிடிப்பானை பார்க்க அதுவும் சரியாகத்தான் இருந்தது பின், சுற்று முறிப்பான் இருக்குமிடம் போய் பார்த்த பொழுது சரியாக காபந்து செய்து இருக்கிறது நல்ல வேலை என் கேட்பொலி தப்பியது..

தனியாக அறையில் இருந்தால் பொழுது போகவில்லையென்று வெளியே அங்காடி வீதிக்கு போய்விட்டு சில பொருள்கள் வாங்கலாமென்று வீதிப்பக்கம் மழைச்சாரல் சரியென்று குடை தேடினேன் கிடைக்கவில்லை உள் அறையில் இருந்த மழைப்பாகை எடுத்துப்போட்டுக்கொண்டு நடந்தேன்..

வானத்தைப்பார்த்தேன்,ஒரு பறனை சென்று கொண்டிருந்தது மழைத்துளிகளின் நடுவிலும் தெளிவாக தெரிந்தது,சாரலியம் பழுதடைந்தாலும் அவ்வப்பொழுது இது மாதிரியான மழை பொழிவது மனதுக்கு இதமாய் இருந்தது..இந்த மழைக்கு தோப்பி குடித்தால் எப்படியிருக்கும் என்று நினைத்தவாறே நடந்துகொண்டிருக்கும் பொழுது அங்காடி வந்துவிட்டது..

பல் பொருள் அங்காடிக்கு சென்று அதன் உரிமையாளரிடம் எனக்கு தேவையான பொருள்களை ஒரு காகிதத்தில் எழுதி கொடுத்தேன் உரிமையாளர் அவையனைத்தையும் வாசித்துவிட்டு என்னை முறைத்து பார்த்து அந்த காகிதத்தை என்னிடம் திரும்ப கொடுத்துவிட்டு இதிலிருக்கும் பொருள்கள் எதுவும் எங்கள் அங்காடியில் விற்பதில்லை என்று கூறி விட்டார்..

ஏன் அப்படி கூறினார் என்று நான் எழுதிய பட்டியலை நான் திரும்ப வாசித்தேன்

1.தூம்பு

2.குமளிப்பழம்

3.பழப்பாகு

4.திடக்கூழ்

5.பசலிப்பழம்

6.கழுவுநீர்

7.பாற்சாறு

8.கொப்பி

9.நொசிவிழைகயிறு

10.சைத்தான் எண்ணெய்

11.தூவல்

12.காலகம்

ஏன் எல்லாமே சரியாகத்தானே எழுதியிருக்கிறேன் பிறகேன் உரிமையாளர் என்னை திட்டினார்?

சரி அடுத்த அங்காடிக்கு போவோம் என்று நடையை தொடர்ந்த பொழுது ஒரு தானி என்னை கடந்தது ...

பயன்படுத்தபட்டிருக்கும் தூய தமிழ் வார்த்தைகள்



கொசுவு சட்டை- டி சர்ட்

குசினி-சமையலறை

போறாணை-ஓவன்

அடுக்கு ரொட்டி-சாண்ட்விட்ச்

கேட்பொலி-ஆடியோ பிளேயர்

வட்டு- சிடி

பிடிப்பான் - சாக்கெட்

சுற்று முறிப்பான் - சர்க்யூட் பிரேக்கர்

காபந்து - பாதுகாப்பு

மழைப்பாகை - ரெயின் கோட்

பறனை - விமானம்

சாரலியம் - ஓசோன்

தோப்பி - பீர்

தூம்பு - ட்ரைன் பைப்

குமளிப்பழம் - ஆப்பிள்பழம்

பழப்பாகு - ஜாம்

திடக்கூழ் - ஜெல்லி

பசலிப்பழம் - கிவி ஃப்ரூட்

கழுவு நீர் - லோசன்

கொப்பி - நோட்புக்

நொசிவிழை கயிறு - நைலான் கயிறு

சைத்தூன் எண்ணெய் - ஆலிவ் ஆயில்

தூவல்-பேனா

காலகம்-சோடா


தொடர்வேன்...

48 comments:

பீர் | Peer said...

ஹலோ... எச்சூச்மீ.. இங்கிட்டு வசந்த் வந்தாப்டியா?

பீர் | Peer said...

எல்லாஞ்சரி.. தலைப்பும் தமிழ்ல போட்டிருக்கலாமே...

ஹேமா said...

ஓ....வசந்தம் இன்று மருவு தமிழோடு விளையாடுதோ !

ஜெட்லி... said...

சில வார்த்தைக்கு மட்டும் தான் அர்த்தம் புரிந்தது..
அந்த மளிகை லிஸ்ட் சுத்தம்??.

பிரபாகர் said...

ஆரம்பிச்சிட்டாங்கய்யா, ஆரம்பிச்சிட்டாங்கய்யா! கலக்கல் வசந்த். தொடருங்கள். உண்மையில் மிக அருமை...

பிரபாகர்.

பிரபாகர் said...

பின்குறிப்பு.

எதுக்கும் ஜாக்கிரதை தம்பி... வழியில்லாம இருக்காங்க. அருவாளோட வந்துடப்போறாங்க.

VISA said...

// விஜய் இல்லைப்பா நான் தான்...//

இல்ல நாங்க நம்ப மாட்டோம் நீங்க விஜய் தான்

Malini's Signature said...

மளிகை கடை லிஸ்டே கொஞ்சம் தமிழ்லே சொல்லுங்க வசந்த்?

Malini's Signature said...

நிறைய தமிழ் வார்த்தைகளை (நான்) மறந்தது நினைவூட்டும் பதிவு.... சிந்திக்க வைக்குறது !!!!

Anonymous said...

நீங்க எந்த மொழிக்காரரு? இப்படி நல்ல தமிழ்ல எழுதறீங்க.:)

velji said...

அந்த அவமானம் கவிதையே better.

thiyaa said...

என்ன வசந்த் ஏன்?

ஈரோடு கதிர் said...

அருமை...

ஆனால் ஒரு ஐயம்
நீங்கள் நல்லவரா? கெட்டவரா?

அன்புடன் மலிக்கா said...

அய்யா தமிழ் புலவரே, இதுதானுங்களா பழங்காலதமிழ்.

மளிகைகடை லிஸ்டில் சைத்தான் எண்ணெய் ன்னு இருக்கே அது யாருக்குங்கோ, ஓ புரிஞ்சிபோச்சி...

வெண்ணிற இரவுகள்....! said...

ஆம் அற்புதமான பதிவு ,,,,,,,,,,,,,தமிழிலே தெரிந்து கொள்ள இன்னும் எவ்வளவோ உள்ளன

கார்த்திகைப் பாண்டியன் said...

முடியல..

Jerry Eshananda said...

மேட்டர் நல்லாகீதுபா

Suresh Kumar said...

வசந்த் நீங்க இதற்கான வழக்கு சொல்லையும் எழுதினால் எல்லோருக்கும் தெரியுமில்லையா ?

லெமூரியன்... said...

படித்து முடித்ததும் சற்று அவமானம் ஆகிவிட்டது...தமிழனாக இருந்து தமிழ் வார்த்தைக்கு பொருள் விளங்கவில்லையே என்று...ஆனால் பேச்சுத் தமிழ் வழக்கு இவற்றில் இருந்து ஆங்கிலயேர் காலத்திலேயே விடுபட்டு சென்றுவிட்டதே....இருந்தாலும் இப்படி ஒரு தோழர் உதவியோடு மீண்டும் நல்ல தமிழ் கற்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது...தொடரட்டும் உங்கள் முயற்சி...என்றும் ஆதரவுடன்...

அகல்விளக்கு said...

எச்சூச் மீ.

வாஜ்ட் காயிங் ஆன் கியர்.

S.A. நவாஸுதீன் said...

மக்கள் தொலைக்காட்சியில் செய்திகள் தொடர்ந்து பார்த்தால்தான் புரியும்போல.

எல்லாம் சரி.

இது நல்ல பதிவா, நக்கலான பதிவா ஒரே குழப்பமய்யா. அடுத்த பகுதி வரட்டும். தெளிவடையலாம்

vasu balaji said...

கொசுக்கடி தாங்கல நாராயணா:))

சத்ரியன் said...

//எபெளட் மி

விஜய் இல்லைப்பா நான் தான்...

வீவ் மை கம்ப்ப்ளீட் ப்ரொ.:பைல்//

வசந்த்,

முடியல....

Ashok D said...

வசந்த...

ஏன்? ஏன்?

பின்னோக்கி said...

இவரோட பேரப்புள்ளைகள் எல்லாம் தமிழே படிக்குறது இல்லை. ஆனா நம்ம உயிர வாங்குவாங்க...

க.பாலாசி said...

ஆமா....தமில் நாட்..நீங் பேசுறத் எந் லாங்வேஜ்..

அந்த வார்த்தைகளுக்கு அர்த்தங்களையும் சொல்லிடுங்க...நண்பா....

அன்புடன் நான் said...

பழப்பாகு// ஜாம்


திடக்கூழ்// ஐஸ் கிரீம் (பனிக்கூழ் என்றும் அழைக்கலாம்)

மற்ரவை புரியல...
ஒரு முடிவோடத்தான் இருக்கிங்க போல.

Yousufa said...

தோடா, ஆராச்சிம் போயி அந்த மைல்ஸாமிய இட்டாங்கோ, தலிவர் பேசறத டான்சேஸன் பண்ணனும்பா. ஒண்ணியும் பிர்யல!!

அன்புடன் அருணா said...

கொன்னுட்டீங்க வசந்த்!பூங்கொத்து!

அப்துல்மாலிக் said...

அய்யா! முடியலிய்யா! முடியலே!

தமிழ் முதிர்நிலை பட்டம் பயில்கிறீரா???

Menaga Sathia said...

மளிகை லிஸ்ட் புரியல வசந்த்?...

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான தமிழ் வார்த்தைகள்

ஜெனோவா said...

நண்பா , ரெண்டு பாகத்தையும் எழுதி முடித்தவுடன் ஒரு கையேடும் தரவேண்டுமென்பது எனது விண்ணப்பம் ;-)

வினோத் கெளதம் said...

Yey wat yaar..Y like tis..:)

Prathap Kumar S. said...

ஒண்ணுமே பிரியலியே நைனா... தமில்ல பதிவு போடுன்னு சொன்னா...வேற பாஷை போட்னுகீறியேபா....

ஸ்ரீராம். said...

மருத்துவருக்கு ஒரு காபி அனுப்பி விட்டீங்களா?

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

நலம் வசந்த்!நீங்க நலமா? ஏதோ தமிழ்ல எழுதிருக்கீங்கனு மட்டும் தெரியுது,அது கூட இராமதாசுனு நீங்க குறிப்பிட்டு இருக்கிறதாலதான், சில வார்த்தைகள் உச்சரிக்ககூட கஷ்டமா இருக்கு எனக்கு,ஆனால் தமிழ் அழகா இருக்கு வசந்த்!

சீமான்கனி said...

அண்ணே...வணக்கம் நே..... நல்லா இருக்கியளா...

கலகலப்ரியா said...

superb..

புலவன் புலிகேசி said...

நல்லா இருக்குண்ணே.....

Beski said...

எல்லாம் சங்ககால வார்த்திகளோ!

"உழவன்" "Uzhavan" said...

மண்டை கிர்ங்குது. போய்ட்டு அப்பால வாரேன்

ஆ.ஞானசேகரன் said...

பல வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியவில்லை நண்பா

விக்னேஷ்வரி said...

கண்ணைக் கட்டுது.

ப்ரியமுடன் வசந்த் said...

தமிழ்ல நான் மட்டும் புலவரில்லைங்க ஏதோ இது எழுதுனதுனால இன்னைக்கு கொஞ்சம் வார்த்தைகளின் தமிழ் பெயர் தெரிஞ்சுகிட்டேன்.. அவ்ளோதான்

கொசுவு சட்டை- டி சர்ட்

குசினி-சமையலறை

போறாணை-ஓவன்

அடுக்கு ரொட்டி-சாண்ட்விட்ச்

கேட்பொலி-ஆடியோ பிளேயர்

வட்டு- சிடி

பிடிப்பான் - சாக்கெட்

சுற்று முறிப்பான் - சர்க்யூட் பிரேக்கர்

காபந்து - பாதுகாப்பு

மழைப்பாகை - ரெயின் கோட்

பறனை - விமானம்

சாரலியம் - ஓசோன்

தோப்பி - பீர்

தூம்பு - ட்ரைன் பைப்

குமளிப்பழம் - ஆப்பிள்பழம்

பழப்பாகு - ஜாம்

திடக்கூழ் - ஜெல்லி

பசலிப்பழம் - கிவி ஃப்ரூட்

கழுவு நீர் - லோசன்

கொப்பி - நோட்புக்

நொசிவிழை கயிறு - நைலான் கயிறு

சைத்தூன் எண்ணெய் - ஆலிவ் ஆயில்

தூவல்-பேனா

காலகம்-சோடா

ப்ரியமுடன் வசந்த் said...

பின்னூட்டம் அளித்து ஆதரவும் ஊக்கமும் அளித்து என்னை மேலும் உற்சாகப்படுத்தும் நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள்

sbr said...

ithu vetkappada vendiya vishayamee anRi veetikkai vevakaaram alla. vasathiyaai irukkiRathenbathaRkaaka ellam seyya mudiyuma enna..
Ithu Ramados'kku aatharavaana karuthu alla