October 19, 2009

பிரதர்ஸ்

அண்ணா வணக்கம்ங்ணா

என்னையபத்தி சுயவிளம்பரம் செய்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க..
முதல்ல நான் யாருன்னு நீங்க நல்லா தெரிஞ்சுக்கிடணும்ன்னுதான் இத சொல்லவர்றேன்,நாங்க சகோதரர்கள் அஞ்சுபேருங்க இதேமாதிரியே எங்க சித்தப்பன் குடும்பத்துலயும் அஞ்சு பேர் இருக்காய்ங்க , நாங்க அஞ்சுபேரும் ஒரேமாதிரியில்லீங்க ஒவ்வொருத்தனும் ஒருதினுசா திரியிறனுங்க பெரியாளு இருக்கானே போலீஸ்டேசனே கதின்னு கிடக்கறவன் எப்பபாரு இதுல ஒரு கேசு அதுல ஒரு கேசுன்னு மைய தடவிட்டே திரியுறவன் ஆமாங்க தெனாவட்டு ஜாஸ்திங்க அவனுக்கு எதுலனாலும் ஜெயிச்சுட்டா போதும்ங்க இவன் பண்ணுற அழும்பு தாங்காதுங்க ஆட்டிட்டே திரிவானுங்க..

அடுத்தவன் நாந்தானுங்க எனக்கு இருக்குற ஒரேகெட்ட பழக்கம் பல பேர காட்டிக்குடுக்குறது,,சில பேரோட வாழ்க்கைக்கு திசைகாட்டியாவும் இருந்துருக்கேனுங்க...பல முட்டாள்களை படிக்காதவனுங்கள பாவமா நினைச்சு டெல்லிக்கு அனுப்பிவச்சுருக்கேன் ஆனா அவிங்க என்னைய மதிக்குறதேயில்லீங்க சுகவாசியா ஏரோபிளேன்ல போறாய்ங்க வாரானுங்க ரொம்ப அழும்பு பண்றாய்ங்க..என்னோட கெட்ட நேரம் இப்போ எங்க ஜாதிதலைவருதான் அங்க ஆட்சி பண்றதுக்கு உதவிருக்காரு அதனால போனா போகட்டும் அப்பிடின்னு விட்டுட்டேன்...இப்போ கூட இதை முழுசும் படிச்சபின்னாடி எனக்கு நன்றி சொல்வீங்க பாருங்க..அதுதான் என்னோட ஸ்டைல்...வக்கனையாவும் பேசுவேனுங்க ...ரஜினிசாருக்கு கூட உதவியிருக்கேன்னா பாத்துக்கங்க என்னோட புகழை...

அடுத்தது இவரு எல்லாருக்கும் மத்தியஸ்தம் பண்றவருங்க எங்க அஞ்சுபேர்லயே ரொம்ப வளர்ந்தவரு இவருதான் இவரோட உயரத்துக்கு பயந்தே பலரு ஓடிப்போயிடுவாங்க நையாண்டிக்கு பேர் போனவருங்க நாந்தான்ற அகம்பாவம் இவருக்கு ரொம்ப ஜாஸ்தி..அதுவும் உண்மைதாங்க இவரு இல்லாட்டி நாங்க யாருமே எழுதபடிச்சுருக்க முடியாதுங்க..அதுமட்டுமில்லாம இவரு இல்லாட்டி ஒரு துரும்பகூட எங்களால அசைக்கமுடியாதுங்க அவ்வளவு வலிமை படைச்சவரு...

அடுத்தது எங்க அஞ்சுபேர்லயேவும் ரொம்ப வசதியானவரு இவருங்க அதனாலவோ என்னவோ எப்பவும் மிடுக்காவே திரிவாரு..நாங்க அஞ்சு பேர் எங்கயாவது சேர்ந்து போனா இவரு மட்டும் தனிச்சுதெரிவாரு அவ்வளவு சுயதம்பட்டம் பிடிச்சவரு இவரால யாருக்கும் புரயோசனமில்லீங்க வெத்துவேட்டு சரி கூடப்பொறந்தவனாச்சேன்னு விட்டுவச்சுருக்கோம் ..

அடுத்து கடைக்குட்டி இவரு எங்க வீட்ல செல்லம்ன்றதுனால இவரை எந்த வேலையும் செய்ய விடுறதில்லை,சில நேரம் எங்களுக்கெல்லாம் தெரியாம குகைக்கெல்லாம் போயிட்டு வருவாரு அவ்ளோ தைரியமானவரு , அதுமட்டுமில்லாம எங்க ஊர்ல ஒவ்வொரு ஜோடியையும் கல்யாணத்துல சேர்த்துவைக்கிற பெருமை இவரையே சாரும் ,இவரு இல்லாம எங்களால சோத்தை கூட பிசையமுடியாது ரொம்ப செல்லம்....


இவ்ளோ நேரம் எங்களைப்பத்தி பெருமையா சொன்ன வசந்துக்கு என்னைய வச்சே பின்னூட்டம் போடுங்க பார்ப்போம்...அப்பிடியே மூத்தவரையும் கொஞ்சம் கவனிச்சுட்டு போனீங்கன்னா ரொம்ப புண்ணியமா போகும்....

40 comments:

பழமைபேசி said...

//திசைகாட்டியாவும் இருந்துருக்கேனுங்க//

பலே பலே.... ஏன் உங்ககிட்ட (திசைகாட்டியில) இருக்குற சேவல் காத்து வீசுறதுக்கு எதுக்கவே இருக்கு?

பழமைபேசி said...

//ரொம்ப புண்ணியமா போகும்....//

நீங்க நல்லவரு...பிரியமானவரு... இஃகிஃகி!

அப்பாட, இன்னைக்கு சித்த புண்ணியம் சேத்தாச்சுபா!

ஹேமா said...

என்ன வசந்த்,என்னை உங்க மூணாவது எதிரின்னு சொல்லிட்டீங்க.ரொம்பக் கவலையாப்போச்சு.எழுதினதே உங்களுக்காகத்தான்.நீங்களும் ஒரு புரியாக் கவிதை எழுதினப்போ நாங்க எவ்ளோ கஸ்டப்பட்டிருப்போம்.
அப்புறமா கவிதைக்கு விளக்கம் சொல்றேன்.எப்பவும் போல யரையோ திட்டியிருக்கேன் கொஞ்சம் நாகரீகமான வார்த்தைகளால்.
அவ்வளவும்தான்.

உங்க எண்ணங்களைப் பதிவாக்கிற விரல்களுக்கே இண்ணைக்குப் பாராட்டா.நல்லது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம்ம்ம்...

ஈ ரா said...

ஒருத்தன் சொன்னான்
அஞ்சு விரலும் ஒரே மாதிரியா
இருக்குன்னு?

அதுக்கு பதிலு
அதனாலென்ன ? ரெண்டு கையும்
ஒரே மாதிரிதான இருக்கு!

இன்னிக்கு தான் தெரிஞ்சுகிட்டேன்
அவிங்க சித்தப்பன் பசங்க -
பங்காளிங்க ன்னு...

வாழ்த்துக்கள் வசந்த்...

ஜெட்லி... said...

ரூம் போட்டு யோசிப்பானோ??

என்னாமா திங்க் பண்றீங்க.....

ஸ்ரீராம். said...

சில பேருக்கு ஆறு உடம்பொறப்பு இருக்கும். பயன்தான் இருக்காது. அந்த ஆறாவது உடன்பிறப்பா என்னை சேர்த்துக்குங்க... .!

VISA said...

பஞ்ச பூதங்களுக்கு தான் இந்த பஞ்சா.....?

கௌதமன் said...

ஆஹா வசந்த்ஜி -- பின்னிட்டீங்க !!
வித்தியாசமான, சுவையான பதிவு.
வாழ்த்துக்கள்.
எங்கள் குடும்பத்து ஐவரும்,
எங்கள் சித்தப்பா குடும்பத்து ஐவரும் சேர்ந்து,
உங்க சந்நிதானத்தில் வணங்கி நிற்கிறோம்!

தீப்பெட்டி said...

:)

vasu balaji said...

இதுக்குத்தான் நேத்து அம்புட்டு நேரம் ஒன்னும் பேசாம உக்காந்து யோசிச்சியா? இப்புடி குழப்பிட்டு இதுக்கு பதில்னு யோசிக்காம அடுத்த இடுகை போடுறதா? சரி, அத படிச்சிக்கிறேன். ஏதோ ப்ளாக் பத்தின்னு புரியுது.

ஈரோடு கதிர் said...

சாமீமீமீமீய்.... ஏதாவது உள்குத்து இருக்கா

நாஸியா said...

எனக்கு ஒன்னும் வெளங்கல! :(

Suresh Kumar said...

என்ன சொல்ல ?

தேவன் மாயம் said...

அடுத்தவன் நாந்தானுங்க எனக்கு இருக்குற ஒரேகெட்ட பழக்கம் பல பேர காட்டிக்குடுக்குறது,,சில பேரோட வாழ்க்கைக்கு திசைகாட்டியாவும் இருந்துருக்கேனுங்க...பல முட்டாள்களை படிக்காதவனுங்கள பாவமா நினைச்சு டெல்லிக்கு அனுப்பிவச்சுருக்கேன் ///


நல்லா இருங்க!!!

vasu balaji said...

யோவ். என்ன எழுதன்னு தெரியாம உள்ளங்கைய பார்த்துகிட்டு விரல பத்தி இடுகை போட்டியே. சும்ம சொல்ல கூடாது வசந்த். உன்ன அடிச்சிக்க ஆளே இல்ல. அந்த குகை மேட்டர் தான் கொஞ்சம் குழப்புச்சி. அப்புறம் மூக்குன்னு..தூ தூ.=))
பிரமாதம்.

S.A. நவாஸுதீன் said...

எல்லாரியும் கவணிச்சாச்சு. மூத்தவரையும் ஸ்பெசலா கவைச்சாச்சு.

//சில நேரம் எங்களுக்கெல்லாம் தெரியாம குகைக்கெல்லாம் போயிட்டு வருவாரு அவ்ளோ தைரியமானவரு//

ஹா ஹா ஹா. வசந்த் குசும்பு

Yousufa said...

கையில கிடச்சீங்க, நாங்க உடன்பொறப்பு அஞ்சு பேரும், சித்தப்பு புள்ளைங்க அஞ்சு பேரும் சேந்து உங்களை ஒரு வழியாக்கிருவோம்ல!!

இராகவன் நைஜிரியா said...

புரிஞ்ச மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு.

ஏன் இப்படி எல்லாம் கொடுமை படுத்திரீங்கன்னு மட்டும் புரிய மாட்டேங்குதுங்க.

என்னால முடிஞ்சது தமிழிஷ், தமிழ் மணம் இரண்டிலும் ஓட்டு போட்டு, ஒரு பின்னூட்டமும் போட்டாச்சுங்க.

Starjan (ஸ்டார்ஜன்) said...

என்னை பத்தி பெருமையா சொல்லிக்கிறது இல்லீங்க ...

இது முதலாம் நபர்

SUFFIX said...

யப்பா வசந்த், தாங்கலையா லொள்ளு, //அடுத்தவன் நாந்தானுங்க// ஆமா இவரைத்தான் எங்க வீட்டு எலி மேல‌ உள்ள சக்கரத்தை உருட்ட உதவி செய்வாருங்க!!

சுசி said...

அவ்வ்வ்வ்வ்.....

இவ்ளோ நேரம் எங்கள குழப்பி வச்ச வசந்துக்கு பின்னூட்டமும் போட்டு ஓட்டும் போட்டாச்சு...

நல்லாருப்பா....

grrrrrrrrr.......

க.பாலாசி said...

ஆமா நண்பா நீங்க யாரு குடும்பத்த பத்தி சொல்றீங்க? ஒண்ணும் புரியலையே?........

நர்சிம் said...

எனக்கு மிகப் பிடித்திருந்தது வசந்த்.நல்ல நடையில் நல்லா எழுதி இருக்கீங்க.

Beski said...

நல்ல வேளை புரிஞ்சது.

Rekha raghavan said...

என்னவோ நடக்குது
.
ரேகா ராகவன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

வித்தியாசமான சிந்தனை நண்பா..:-))

சிங்கக்குட்டி said...

நல்ல சிந்தனை வசந்த்.

மதியமே படித்து விட்டாலும், அங்கு பின்னூட்டம் போட வசதி இல்லை.

வாழ்த்துக்கள்.

கலகலப்ரியா said...

அசத்திப்புட்டா வசந்து... சூப்பரு..

சத்ரியன் said...

வசந்த்,

சிந்தனைச் சிங்கமே,
செம்மறி ஆடே, ச்சேச்சே...செங்கதிர்ச் சூரியனே,
புதுமைச் சித்தனே,
விரல்களின் வித்தகா, அவனே..!
இவனே...!
மவனே...!

அடச்....ச்ச்சே புகழுனும்னு யோசிச்சா ஒன்னும் தோனாது மனுசனுக்கு !

யப்பா. கலக்குறியேப்பா.

சத்ரியன் said...
This comment has been removed by the author.
velji said...

ரொம்ப மெனக்கடாத மாதிரியும் இருக்கு..ஆனா மேட்டரும் இருக்கு!
அருமை!

RAMYA said...

நையாண்டி நல்லாவே வந்திருக்கு
யோசனை பலமாத்தான் இருக்கு :))

அன்புடன் நான் said...

அந்த ஐந்து பெரும் சேர்ந்துதானே இந்த பதிவு போட்டது.... நல்லாயிருக்கு.

பா.ராஜாராம் said...

:-)))

யாழினி said...

ஐயா ராசா உங்கள புகழ்றத்துக்கும் இப்படியேதாவது புதுமையா கண்டு பிடித்து சொல்லுங்களேன்!

Veliyoorkaran said...

pangaali..una nerla paakanumeya naan...

ப்ரியமுடன் வசந்த் said...

முதல் முறை குருவின் ஆசி பெற்ற சந்தோசத்தில் பின்னூட்டம் அளித்த அனைத்து நண்பர்களுக்கும் இரு கைகூப்பி நன்றி சொல்லிக்கொள்கிறேன்

அன்புடன் அருணா said...

கொஞ்ச நாளா வசந்தைக் காணவில்லை!கண்டு பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ஒரு பின்னூட்டம் இலவசம்!