ம்..ஒரு கை பார்த்திடலாம்
நீயும் நானும் பிறப்பில் ஒன்றுதான்..
ம்..அதிலென்ன சந்தேகம்?
இருந்தாலும் உனக்கும் எனக்கும் பல வித்யாசங்கள் உண்டு சில ஒற்றுமைகள் உண்டு இருந்தாலும் நானே உன்னை விட சிறந்தவன்..
நான் இதை ஒற்றுக்கொள்ள மாட்டேன்
ஏன்? நீ என்ன சொல்வது இதை படிக்கும் நண்பர்கள் கூறுவார்கள் இறுதியில் நீயா நானாவென்று...
அதையும் பார்க்கலாம் நான் யார் தெரியுமா? உனக்கும் உன் பாட்டனுக்கும் பாட்டன்..
ஹ ஹ ஹா
என்ன சிரிக்கின்றாய் ?
சிரிக்காமல் அழுக சொல்கிறாயா?
சொல்வதை முழுதும் கேட்டுவிட்டு அப்புறமாக சிரி,
ம்ம் சரி சொல்
நானும் நீயும் ஒன்றுதான் ஒற்றுக்கொள்கிறேன் ஆனால் உன்னைவிட என்மேலே அனைவருக்கும் விருப்பம்..
அதுசரி நான் தோற்றத்தில் ஒரே மாதிரியானவன் நீயோ பலவித தோற்றமுடையவன்.அதனால் என்ன உபயோகம் நீயே சொல்
ஙே!!!!எனக்கு சேதம் என்றால் சண்டையிட்டு கொள்ளுமளவிறக்கு நான் அவசியம்
ம்க்கும்..அது அநாவசியம்என க்கு சேதமென்றால் மனு கொடுக்குமளவிற்க்கு நான் அத்யாவசியம்..இப்போசொல் நீ பெரியவனா நான் பெரியவனா?
ம்ஹூம்..அதனாலென்ன என்னால் மக்கள் பயனடையவில்லையா?
ம்க்கும்..அது ஒரு மன தைரியமா கூட வைத்துக்கொள்ளலாம்..கண்ணில்லாதவனுக்கு உன்னால் உதவ முடியுமா?
இல்லை..
இப்படி சொல்ல உனக்கு வெட்கமாக இல்லை? என்னால கண்ணிருப்பவர்களுக்கு கூட உதவ முடியும்..இதுக்கென்ன சொல்கிறாய்?
வாஸ்தவம் தான் ஆனாலும் எனக்குன்னு வீடு கூட இருக்கு உனக்கிருக்கா?
அந்த வீடு நீயே கட்டியிருந்தால் உனக்கு கும்பிடு போடுவதில் நியாயமிருக்கு இப்ப சொல் அந்த வீடு நீயா கட்டினாயா?
இல்லதான் அதுக்கென்ன எனக்குன்னு வீடு இருக்கு உனக்குன்னு ஒதுங்க வீடு இருக்கா?
வீடு இருக்கா இல்லையான்றது முக்கியமில்லை வீடு கட்டி வாழ்றவங்களுக்கு நம்மால எதுனாலும் பயனிருக்கான்றதுதான் முக்கியம் இப்ப சொல் வீடுகட்டி இருக்கும் இருக்கும் உன்னால் வீடில்லாதவங்களுக்கு உதவ முடியுமா?
ம்ஹூம் அதுக்கு நான் என்ன செய்வது எனக்கு வீடு இருக்கு அது போதும்
இதுதான் சுயநலம் அந்த வீடில்லாதவங்களுக்கும் நான் தான் உதவி செய்றேன் இப்போ சொல் நீ பெரியவனா நான் பெரியவனா?
நானும் பலருக்கு உதவி செய்றேன்
அதெல்லாம் மறைமுகமா சோம்பேறிகளுக்கு உதவுகிறாய் நான் நேரிடையாவே பலருக்கு வழிகாட்டு கிறேன் இப்போ சொல்லு நீ பெரியவனா நான் பெரியவனா?
ஙே!!!
உனக்கே என்னோட உதவியில்லாமல் இருக்க முடியாது நீயென்ன சொல்றது இப்போ இவங்க சொல்வாங்க நீ பெரியவனா நான் பெரியவனான்னு இல்லையா நண்பர்களே
இவன் இறைவன்
இவன் தெருவிளக்கு
இப்போ சொல்லுங்க யாரு பெரியவன்?
37 comments:
me the firstttt????
எப்படி இப்படிலாம் வசந்த்......ம்ம்ம் நல்லாயிருக்கு...
ஙே ன்னு முழிச்சவர்தான் பெரியவர். :)
சத்தியமா நீதான் வசந்து:))
வசந்து,பதிவு நல்லாருக்கு.
சிந்தனாசக்தி அபாரம்.இங்க உண்மை சொல்ல வந்தா அடிக்க வருவாங்கப்பா !
nnggeh..!
நீங்கதான் வசந்த்!நன்றி வானம்பாடிகள்!
சத்தியமா நீங்கதான் சாமி... நீங்கதான் பெரியவர்...
அய்யோ அய்யோ..........நீங்க நீங்கதாங்க பெரியவர்.
நீங்க பெரியவர்.
//இவன் இறைவன்
இவன் தெருவிளக்கு
இப்போ சொல்லுங்க யாரு பெரியவன்?//
ஹிஹி இல்லை நானே!
the link you find between things is normally unseen.you deserve appreciation.
தம்பி வசந்துத்தான் பெரியவர்னு போடலாம்னா, நிறைய பேர் போட்டுட்டாங்க. பாத்துட்டு நான் ஙே ன்னு முழிச்சதுதான் மிச்சம். நம்மள எல்லாரும் சொல்லனும்னா இந்த மாதிரி பதிவ போட்டா போதும்னும் தெரிஞ்சிகிட்டேன்.... ஹி...ஹி
பிரபாகர்.
தெருவிளக்கையும் அதை வைத்தவனையும் படைத்தவன் இறைவன் எனக் கொண்டால்,அபபடி ஒரு சக்தி இருப்பதாகக் கொண்டால், (அவன் நல்லவனா கெட்டவனா என்பது அவன் நமக்குக் கொடுக்கும் அனுபவத்தைப் பொறுத்தது) அவனே பெரியவன்.
நீங்கள் ராஜேந்திரகுமார் ரசிகரா வசந்த்? வால்தான் பாக்கி படித்திருக்கிறீர்களா?
இந்த பதிவ படிச்சிட்டு இருந்தப்பவே வீட்டுல கரன்ட் போயிடிச்சு. தெருவிளக்கு எரியல.
ஒரு தெருவிளக்கு எரிஞ்சா அந்த தெருவுக்கு வெளிச்சம்.
ஆனா ஒரு தெரு எரிஞ்சா அந்த ஊருக்கே வெளிச்சம் அந்த ஊரு எரிஞ்சா அந்த மாவட்டத்துக்கே வெளிச்சம் அந்த மாவட்டம் எரிஞ்சா அந்த மாநிலத்துக்கே வெளிச்சம்.
இப்படி இறைவனின் பெயரால் மதம்பிடித்து பிரிவினைவாதத்தால் ஊரையே எரிக்க வல்லமை வாய்ந்த இறைவனின் பெரும் நாமம் பெரியது என்பது என் கருத்து.
வசந்த்,
இந்த மாதிரி இடத்துக்கெல்லாம் வந்தமா, வாசிச்சமா மொக்கையா ஒரு பின்... போட்டுமான்னு போயிடறேன் சாமி.
ohmm nadakkattum
நல்ல பதிவு அற்புதம் ............ஆனால் உண்மையிலேயே கடவுள் இருக்கிறாரா .............நல்ல சிந்தனை ..........கடவுள் இருந்தாலுமே என்னிடம் கேட்க நூறு கேள்வி உள்ளது ,,,,,,,,,சிந்தனை
சும்மா பிச்சிட்டீங்க பாஸ்
ஆங்.. ரைட்டு.. நடத்துங்க...
எப்படி இப்படி எல்லாம்......
//கண்ணில்லாதவனுக்கு உன்னால் உதவ முடியுமா?
என்னால கண்ணிருப்பவர்களுக்கு கூட உதவ முடியும்//
அண்ணே நீங்க SSLC பெயில்னே... நான் எட்டாவது பாஸ்ணே....
வஸந்த் மச்சி சிந்தனையை தூண்டும் பதிவு..:)
வித்தியாசமா யோசிக்கிறதே உங்களுக்கு வேலையாப் போச்சு. சாதாரணமா யோசிங்க இனிமே. அதுதான் இனி உங்களுக்கு வித்தியாசமா இருக்கும்.
:) வித்தியாசமா இருக்கு.
நல்ல சிந்தனை வசந்த்
%*^(( +(+_(_ ^ &^$^$^& %$#%$#
//சிரிக்காமல் அழுக சொல்கிறாயா?//
இங்கே அழுக என்றால் அழுகும் என்று பொருள் படுவதால் அழச் சொல்றியா? என்று போட்டு படித்துக்குவோம்.
அங்கே யாரோ யார்ரா இவன் தமிழ் வாத்தியார் மாதிரின்னு சொல்றாங்க இல்லே?
ரேகா ராகவன்
//நான் இதை ஒற்றுக்கொள்ள மாட்டேன்
ஏன்? நீ என்ன சொல்வது இதை படிக்கும் நண்பர்கள் கூறுவார்கள் இறுதியில் நீயா நானாவென்று...//
நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு.....
நைஸ்....
:-))))))))))))))
அச்சோ என்ன அறிவு என்ன அறிவு. கொட்டுது, வசந்துங்ககங்கண்ணா.
இதோ கூடையை கொண்டுவந்திருக்கேன் கொட்டியதை அள்ளிக்கிட்டுபோகலாமுன்னு..
வஸந்த் நீங்க சொல்றத வச்சி பார்த்த தெரு விளக்கு
தான் பெரியது நண்பரே...
மச்சி,
வர வர ரொம்ப யோசிக்கிறீங்க. நடத்துங்க.
(அப்றம், இந்தக் கலர் ரீடர்ல சரியா தெரியல, லைட் கலர் முடிந்த வரை தவிர்க்கவும்)
அனைவருக்கும் மிக்க நன்றிகள்
ஙே!!!!
ஙே!!!!
இதிலென்ன சந்தேகம்
தெருவிளக்கு தான் ...
உயர்ந்தது...
Post a Comment