October 30, 2009

A,B,C

A :இன்னைக்கு குமார் வீட்டுக்கு போகணும்

B :பாத்துப்போ அங்க குழியிருக்கு

C :அந்த நாலாவது வீடுதான் குமார் வீடு



B : இதுதான் குமார்

C : குமார் நல்லாயிருக்கியா?

A : எங்கடா குமார் உன்னோட குழந்தைகள்?


(குமார் காபி வேணுமான்னு கேட்க்க)

A : காபி குடிச்சா நல்லாயிருக்கும்

B :?

C : சரிடா..



(தொலைக்காட்சி ஓடிட்டு இருக்கு)

A : செய்திகள் வைடா

C : சன் செய்திகள் தானே !

B : ஆங்..அதுதான்


(குமாரின் வீட்டை விட்டு வெளியே கிளம்பி நடக்கையில் ஒரு பிச்சைக்காரனை பார்க்கும் பொழுது)

B : பிச்சைக்காரன் வர்றான்

C : சீ

A : காசு போடுடா

டிஸ்கி:

இங்கே ABC மூணுமே சேர்ந்து நான் தான் ,A - மனசு, B-கண், C-மூளை, நினைத்து மீண்டும் படிங்க இப்போ சொல்லுங்க ஒரு செயல் நடவடிக்கை நடக்கும் பொழுது இம்மூன்றில் எதைப்பொருத்து இயங்குகிறது நம் உடல்?...உதாரணத்துக்கு சாலையில் இருசக்கர வாகனத்தில் நீங்கள் செல்லும் போது ரெட் சிக்னல் விழுகிறது இப்போ எதன் கட்டளை மிக முக்கியம் எது முதலில் வேலை செய்கிறது? சிக்னலை பார்த்ததும் அது சினல்தான்னு சொல்வது மூளை நிற்கணும்ன்னு நினைக்கிறது மனசு,கண் இது ரெட் சிக்னல்ன்னு புரிய் வைக்குது..இப்போ சொல்லுங்க எதன் கட்டளை முக்கியம்? மூணும் முக்கியம்ன்னு சொல்லக்கூடாது..

53 comments:

shabi said...

ஏன் இப்பூடி.... முடியல

shabi said...

first ..............

vasu balaji said...

வசந்தோட மூளை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

இப்படி ஒரு கடினமானக் கேள்வியை கேட்டுட்டீங்க..இருங்க யோசித்துட்டு வரேன்..இப்போதைக்கு பிரசென்ட் போட்டுக்கறேன்

பீர் | Peer said...

குமார், இந்த உலகத்துக்கு ஏதோ சொல்ல வாரீங்கன்னு தெரியுது..

இராகவன் நைஜிரியா said...

நிச்சயமாக மூளைத்தான். மூளை செயல் இழந்தால், மனசும் கிடையாது, கண்ணும் கிடையாது.

கட்டளை முதலில் மூளையில் பிறப்பிக்க படுகின்றது. மேலும், சிக்னலைப் பார்ப்பதும், அது ரெட் சிக்னல் என்று புரிந்து ப்ரேக் போடுவதற்கு எல்லாமே மூளை சொல்லுகின்ற கட்டளைகள். அனிச்சை செயல் என்று ஒன்று கேள்விப் பட்டு இருக்கின்றீர்களா, அப்போது மட்டும் தண்டுவடத்தில் இருந்து கட்டளைகள் வருகின்றன.

இப்போ அடுத்து ஒரு சின்ன விசயம், கத்தாரில் ரெட் சிக்னலைப் பார்த்தவுடன் ப்ரேக் போடும் கால்கள், சென்னையில் அந்த பக்கம், இந்த பக்கம் திரும்பி பார்த்து, போலீஸ் இல்லை என்றால் நிற்காமல் போகின்றதே.. அப்போது மனசா கட்டளைப் போடுகின்றது. அப்போதும் கண்களை மூளை போலீஸ் இருக்கா பாரு அப்படின்னு கட்டளைப் போடுது, கண் பிம்பத்தில் போலீஸ் இல்லை என்றவுடன், போ என்ற கட்டளை கிடைக்கின்றது.

மனசு என்பது இது இரண்டுக்கும் அப்பாற்பட்டது.

மகாபாரத்தில் யக்ஷன் தருமரிடம் ஒரு கேள்வி கேட்பார். உலகத்திலேயே மிகவும் வேகமானது எது என்று. அவர் சொல்லுவார் மனசு என்று. நினைத்த மாத்திரத்தில் நாம் நினைத்த இடத்தில் இருப்பதுதான் மனசு.

என்னால முடிஞ்ச அளவு குழப்பிட்டேன்...

ப்ரியமுடன் வசந்த் said...

ராகவன் சார் நான் உயிரோட இருக்குறதைப்பத்தி பேசலை ஒரு செயல் நடக்கும் போது அதற்க்கு எது காரணமா இருக்கு?

இராகவன் நைஜிரியா said...

செயல் நடப்பதற்கு காரணம் மூளை. மனசல்ல.

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

நிச்சயமாக மூளைத்தான். மூளை செயல் இழந்தால், மனசும் கிடையாது, கண்ணும் கிடையாது.//

athu..! i wanted to say da same.. neway.. thambi nee pattaiya kilappu..!

இராகவன் நைஜிரியா said...

// பிரியமுடன்...வசந்த் said...
ராகவன் சார் நான் உயிரோட இருக்குறதைப்பத்தி பேசலை ஒரு செயல் நடக்கும் போது அதற்க்கு எது காரணமா இருக்கு? //

ஒருத்தன் உசிரோட இருந்தாலும், மூளை வேலை செய்தால் தான் யோசிக்க முடியும். யோசிக்கும் போதுதான் மனசு என்ற கேள்வி வரும்.

இராகவன் நைஜிரியா said...

// A :இன்னைக்கு குமார் வீட்டுக்கு போகணும்


B :பாத்துப்போ அங்க குழியிருக்கு

C :அந்த நாலாவது வீடுதான் குமார் வீடு
//

இங்கு குமார் வீட்டுக்கு போகணும் என்று சொல்லுவதும் மூளைத்தான். அதுதான் இன்னிக்கு இந்த அஜெண்டா இருக்கு என்று பதிவு பண்ணி வச்சு இருக்குங்க. மனசையும் இதையும் போட்டு மனச குழப்பிக்காதீங்க.

இராகவன் நைஜிரியா said...

// shabi said...
ஏன் இப்பூடி.... முடியல //

அதுக்காகத்தானே...

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
வசந்தோட மூளை. //

அது... இதுதான் அண்ணனோட டச்.

இராகவன் நைஜிரியா said...

// பீர் | Peer said...
குமார், இந்த உலகத்துக்கு ஏதோ சொல்ல வாரீங்கன்னு தெரியுது.. //

இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் இனி பிரியமுடன் வசந்த், பிரியமுடன் வச்ந்தானந்தா என்று அழைக்கப் படுவார்.

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...
//இராகவன் நைஜிரியா said...

நிச்சயமாக மூளைத்தான். மூளை செயல் இழந்தால், மனசும் கிடையாது, கண்ணும் கிடையாது.//

athu..! i wanted to say da same.. neway.. thambi nee pattaiya kilappu..!//

என்னால முடிஞ்ச அளவு பட்டய கிளப்பிட்டேன்.

இராகவன் நைஜிரியா said...

// பிரியமுடன்...வசந்த் said...
ராகவன் சார் நான் உயிரோட இருக்குறதைப்பத்தி பேசலை ஒரு செயல் நடக்கும் போது அதற்க்கு எது காரணமா இருக்கு? //

அதுக்கு இதையெல்லாம் மீறி ஒரு விஷயம் இருக்கு.. அதுக்கு பேரு விதி அப்படின்னு சொல்லுவாங்க.

பழமைபேசி said...

ஆகா...

பழமைபேசி said...

ஆகா...

Starjan (ஸ்டார்ஜன்) said...

மனசிருந்தா மார்க்கம் உண்டு

Rajalakshmi Pakkirisamy said...

: ):) :)

ஹேமா said...

அட... வசந்த்,இப்பிடியெல்லாம் யோசிக்கிறீங்களே !உங்களை யோசிக்க வைக்கிறது மூளையேதான்.
மூளையின் கட்டளைக்குச் செயல்படுகிறது மனம்.

பிரபாகர் said...

ஐ, வசந்த் பதிவு

பாத்து ஜாக்கிரதையா படி, விவரமான ஆளு

நல்லாருக்கு. வித்தியாசமா இருக்கு.

ABC எல்லாம் போட்டுக்குங்க வசந்த்.

பிரபாகர்.

ராமலக்ஷ்மி said...

B-ஆல் பார்த்துப் படித்ததில்
C-க்கு புரிந்து B-க்குப் பிடித்தும் போனதில் பின்னூட்டம் + ஓட்டுக்கள்:))!

சகாதேவன் said...

A. இன்னிக்கி வஸந்த் பதிவு படிக்கணும்
B. அதோ எழுதியிருக்கிறாரே
C. இப்படி ஏதாவது இருக்கும்னு
சொன்னேனே?

சகாதேவன்

thiyaa said...

நான் இராகவனின் கருத்துடன் ஒத்துப் போறான்
மூளைதான் . மனசு என்ற ஒன்றே மூளைக்குள் தான் இருப்பதாக நம்பப்படுகிறது

தீப்பெட்டி said...

நல்ல சிந்தனையா இருக்கே..
என்னோட ஓட்டும் மூளைக்குத் தான்..

புலவன் புலிகேசி said...

எங்களுக்கெல்லாம் ஒரே குழப்பமா இருக்குதுங்கோ........

ராமலக்ஷ்மி said...

//B-ஆல் பார்த்துப் படித்ததில்
C-க்கு புரிந்து B-க்குப் பிடித்தும் போனதில்//

சாரி, ‘A'-க்குப் பிடித்துப் போனதில்..

ஹி, B தடுமாறிப் போனதில் எழுத்து மாறிப் போச்சு:))))!

ஜெட்லி... said...

வஸந்த் உன்னை வச்சி பார்க்கும் போது
மூளை தான் முக்கியம்னு தோனுது...

ஈரோடு கதிர் said...

மூளைக்கு ஓட்டு

தமிழ் அமுதன் said...

;;))))

Admin said...

எப்படித்தான் உங்களால மட்டும் இப்படி யோசிக்க முடியிதோ தெரியல்ல

Rajan said...

இதுக்கு பேர் தான் மூல முத்திப்போ!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வசந்த்.. கிரியேட்டிவிடி சிகரமா இருக்கீங்க.. கலக்கல் :)

சத்ரியன் said...

//ஏன்னா நான் அறிவில்லாதவன் //

ஏம்ப்பா வசந்த்,

A B C -

இவ்வளவும் உனக்குள்ள இருந்துதானா வருது? நான் ஒத்துக்கறேன்.

நண்பன் வசந்த் " அறிவில் ஆதவன்" தான் !

Ashok D said...

இராகவன் பின்னோட்ட பதிவு நல்லாயிருந்தது :)

சிநேகிதன் அக்பர் said...

மூளைதான்.

அதுதான் உங்களைக்கூட இப்படி எழுத வைக்கிறது.

க.பாலாசி said...

முதல்ல நமக்கு உயிர் வேணும்ங்றதுதான் என்னோட் திங்க். நீங்க என்ன சொல்றீங்க...

SUFFIX said...

A:)B:)C:)

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...
//இராகவன் நைஜிரியா said...

நிச்சயமாக மூளைத்தான். மூளை செயல் இழந்தால், மனசும் கிடையாது, கண்ணும் கிடையாது.//

athu..! i wanted to say da same.. neway.. thambi nee pattaiya kilappu..!//

என்னால முடிஞ்ச அளவு பட்டய கிளப்பிட்டேன்.//

ஆ... சதி நடக்குதுடா தம்பி வசந்து... நான் உன்னைத்தான் தம்பின்னு சொன்னேன்.. ராகவாச்சார்யா.... இது எல்லாம் ரொம்ம்ம்ம்ம்ப்ப்ப்ப ஓவர் சொல்லிப்டேன் ஆமாம்..

S.A. நவாஸுதீன் said...

மூளைதான் வசந்த்.

அன்புடன் நான் said...

மூளையுள்ளவங்கலெல்ல்லாம் "மூளை" தான்னு சொன்ன பிறகு....
மூளைதான்.


இப்படி கண்ணகட்டுற விடயமாகவே... இருக்கே... ஒரு கலக்கல் கொடுங்க வசந்த்.

கார்த்திகைப் பாண்டியன் said...

ஐயா சாமி.. எங்கயோ போய்க்கிட்டு இருக்கீங்க..

vasu balaji said...

ஒரு தொடர் இடுகைக்கு கோத்து விட்டிருக்கேன் வா ராசா நம்ம திண்ணைக்கு.

Menaga Sathia said...

மூளைதான் வசந்த்...

Thenammai Lakshmanan said...

இந்த A B C ரொம்ப நல்லா சுருக்கமாக இருக்கு...

உண்மையாவே நீங்க A B C to Z எழுதியாகணும் ...

ஒரு தொடர் இடுகைக்கு உங்களை அழைத்து இருக்கிறேன் ...

சிறப்பாக எழுதுங்க...

என்னைப் பற்றியே இவ்வளவு பிரமாதமாக உண்மையைப் போட்டு உடைச்சு எழுதி இருக்கீங்க...

வாழ்த்துக்கள் வசந்த்

பின்னோக்கி said...

மனசுதாங்க முக்கியம்

சீமான்கனி said...

வணக்கம் நண்பரே....நான் சொல்லறேன்...எல்லாத்துக்கும் முக்கியம் ''அது..அது... அதுதான்''.... புரிஞ்சுருக்கும்னு நெனைக்குறேன்...

ஆ.ஞானசேகரன் said...

வித்தியாசமாக....

சுசி said...

B:ஐ... வசந்த் பதிவு....
A:என்னா எழுதுது பார் இந்த பய...
C:ஏய்.. ரொம்ப புகழாத.. அவருக்கு திட்ரதுதான் புடிக்கும்.

கலையரசன் said...

அடங்க மாட்டியா நீயி...

sarathy said...

//நான் ஒன்றும் இலக்கிய வாதியில்லை,இலக்கியம் எழுதி வளர்க்க போவதும் இல்லை நான் எழுதிதான் இலக்கியம் வளரப்போகுதா என்ன?//

அட விடுங்க வசந்த்...


வாங்க நாமெல்லாம் சேர்ந்து மரமும், செடியும் வளர்ப்போம்...

முடிந்தால் நாலு மாடு வளர்ப்போம்...
பாலாவது கறக்கலாம்....

ப்ரியமுடன் வசந்த் said...

முதல்ல எல்லாருக்கும் நன்றி

எல்லாரும் மூளைன்னு உங்க வாயாலயே சொல்லிட்டிங்க அப்புறம் ஏன் ஒருத்தரை திட்டும்போது உங்க மனசு கல்லான்னு திட்டுறீங்க?

உங்க மூளை என்ன கல்லான்னுதானே திட்டணும்?

என் மனசை புரிஞ்சுகிட மாட்டேன்னு காதலிகிட்ட ஏன் சொல்றீங்க என் மூளைய புரிஞ்சுகிட மாட்டேன்றீங்களேன்னு தான்ன சொல்லணும்

மாத்தி யோசிங்க மக்களே..வாழ்க வள முடன்...