June 16, 2010

செவ்வாய் & வாரத்தின் எட்டாவது நாள்





அடுத்த வருடத்திலிருந்து, ஒரு வாரத்திற்கு எட்டு நாட்கள்.

வாரத்தில் சேர்க்கப்படும் எட்டாவது கிழமைக்கு என்ன பெயர் வைக்கலாம்?







யுரேனஸ் (OURSDAY) நம்மநாள் - எப்பிடி நம்ம தமிழ்பெயர்? :))))))
(யுரேனஸ் என்பது ஒளராஸ் என்ற கிரெக்க கடவுளின் பெயரிலிருந்து உருவானது பெரும்பாலான கோள் களின் பெயர்கள் இப்படி மருவியே வந்திருக்கிறது எப்டி நம்ம பேரு?)

அந்தக் கிழமை எந்த இரண்டு கிழமைகளுக்கு நடுவே வரவேண்டும் என்று நினைக்கிறீர்கள், ஏன்?

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கு இடையில்..

வாரம் எட்டு நாள் என்று செய்வதாலும், புதிய கிழமை ஒன்று அதிகமாகச் சேர்வதாலும், என்னென்ன மாற்றங்கள் உலகில் ஏற்படும் என்று நினைக்கிறீர்கள்?

Nothing use, காலண்டர்களில் இதுவரை அச்சிட்டுவந்த முறையில் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டியிருப்பதால் நிறைய பணம் விரயம் ,ஆதலால் காலண்டர் டயரிகளின் விலை கூடும், அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களின் அலுவலக கணக்கு வழக்கு மாற்றத்தினால் ஆண்டு இறுதி கணக்குவழக்கில் பயங்கர இடி விழலாம், வாரத்திற்க்கு எட்டுநாட்களாக இருப்பினும் விடுமுறை ஒரு நாள் என்பதால் சந்தோசம் ஒன்றும் ஏற்படப்போவதில்லை, அந்த நாளுக்கு ஆங்கிலத்தில் விரைவில் ஏதோ ஒரு பெயரை வைத்துவிடுவார்கள் ஆனால் தமிழில் அதற்க்கு பெயர்வைப்பதற்க்கு நிறைய போராட்டங்கள் கண்டனங்கள் சமயத்தில் ஆட்சி கவிழ்ப்பும் நிகழ வாய்ப்பிருக்கிறது, வாரத்தில் ஒரு நாள் அதிகமாவதால் தொலைக்காட்சிகள் அந்த நாளுக்கு புரோகிராம்களை எப்பவும் போல் அரைப்பார்கள் இனி ஐந்து நாள் சீரியல் ஆறாக கூட உயரும், டேட் வாட்ச் கட்டியிருக்குறவன் எல்லாம் அதை தூக்கி குப்பையில் போட வேண்டி வரும், உலகத்தில் இருக்கும் அனைத்து மொபைல்,கம்ப்யூட்டர்ஸ் எல்லாத்திலும் டேட் அண்ட் டைமிங்ஸ் மாற்றியே ஆக வேண்டும் தேவையில்லாத வெட்டிச்செலவு,இன்னும் இன்னும் பல லாம்....

****************************************************************************************************************


இப்படி எங்கள் பிளாக்கில் கேள்வி கேட்டு நம் அறிவுப்பசியை தூண்டிவிட்டுவிட்டனர் அவர்களுக்கான எனது பதில் தேடப்போய் கிடைத்த யோசனைகள் சில தகவல்களும் சேர்த்து....

முதலில் ஏழு நாட்கள் பற்றி ..

SUNDAY - ஞாயிறு - சூரியன் - (கோள்கள் அனைத்தும் இதை சுற்றியே வருகிறது)

MONDAY(MoonsDay) - திங்கள் - (சந்திரன் இரண்டு நிலவுடைய கோள்)

TUESDAY ( Mars- The Red Planet) - செவ்வாய் - ( பெரும்பாலும் கார்பன் - டை - ஆக்ஸைடு நிரம்பிய கோள்)

WEDNESDAY (Mercury) - புதன் - (பூமியின் மிகச்சிறிய கோள் ) வாரத்தின் மத்திய நாள்

THURSDAY (Jupiter) - வியாழன் - 63 நிலவுகளுடைய கோள்

FRIDAY (Venus - The God of Love & Sex ) - வெள்ளி - காலையில் தெரியும் நட்சத்திரம்

SATURDAY (Saturn) - சனி - வளையங்கள் நிரம்பிய கோள்

இதெல்லாம் எங்களுக்கும் தெரியும் இப்போ எதுக்கு சொல்லிகிட்டு இருக்கன்னு கேட்க்க வர்றீங்க சரி வாங்க ..

மொத்தம் 9+1 கோள்களில் சூரியனுக்கு ஒரு நாளும் மீதி 6கோள்களுக்கும் ஓவ்வொன்றிருக்கும் ஒவ்வொரு நாள் என மொத்தம் 7 நாட்கள் பிரிக்கப்பட்டிருக்கிறது

இந்த ஒரு துணைக்கோள் நிலா மற்ற ஐந்து கோள்கள் போக மீதம் எஞ்சியிருப்பது 4 கோள்கள்

அவையாவன பூமி,யூரேனஸ்,நெப்டியூன்,புளூட்டோ

வார நாட்களுக்கு பெயர் வைக்கும் பொழுது ஏன் பூமியை மறந்துவிட்டனர் என்று தெரியவில்லை.. இப்போ வார நாட்களை ஆய்ந்ததில் இந்த மர மண்டையில் உதித்தவை...

நம் வார நாட்கள் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும்




1.ஞாயிறு (
SUNDAY)


2.புதன் (WEDNESDAY)
3.வெள்ளி (FRIDAY)
4.செவ்வாய் (TUESDAY)
5.வியாழன்(THURSDAY)
6.சனி (SATURDAY)
7.யுரேனஸ் (OURSDAY) நம்மநாள் - எப்பிடி நம்ம தமிழ்பெயர்? :))))))
(அல்லது செவ்வாயின் இரு நிலவுகளின் பெயர்களான போபாஸ்,டைமாஸ் என்ற பெயர்களின் முதல் எழுத்து எடுத்து போடை என்றும் நாளாடைவில் அதுவும் மருவி போர்டே ஆகவும் வாய்ப்பிருக்கிறது..)

(யுரேனஸ் என்பது ஒளராஸ் என்ற கிரெக்க கடவுளின் பெயரிலிருந்து உருவானது பெரும்பாலான கோள் களின் பெயர்கள் இப்படி மருவியே வந்திருக்கிறது எப்டி நம்ம பேரு?)

இப்போ என்னோட கேள்வி பூமியில் இருப்பதால் பூமியின் பெயரை தவிர்த்திருக்கலாம் அப்புறம் ஏன் பூமியின் துணைக்கோளான சந்திரன் அதாங்க Moons Day அப்படின்ற MONDAY வை இதில் சேர்த்தார்கள்?

பார்க்க படம்



சூரியனை சுற்றிவரும் கோள்கள் சூரியனிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக அதன் வரிசையிலே வைத்திருக்கலாமே பின் ஏன் SUNDAY, MONDAY, TUESDAY, WEDNESDAY, THURSDAY, FRIDAY , SATURDAY என்று வரிசை மாறியிருக்கிறது? ஏன் பூமியின் துணைக்கோள் சந்திரன் இந்த வார நாட்களில் சேர்த்திருக்கிறார்கள்?

இல்லை இவைகள் யாவும் நிலம் காற்று நெருப்பு இவற்றைவைத்து வரிசைபடுத்தப்பட்டதா?

விடை தெரிந்த நண்பர்கள் இதற்க்கான ரகசியங்கள் தெரிவிக்கவும்...

இப்போ நாம் செவ்வாய் கிரகத்தில் பிறந்திருந்தால் அதாவது பூமியில் இருக்கும் சீதோஷன நிலை அங்கு இருக்கும் பட்சத்தில் கால நிலை, வார நாட்கள் இப்படி அமைந்திருக்க கூடுமோ?
செவ்வாயில் மனித உருவில் இருக்கும் சிலை போன்ற படிமங்கள் காட்டும் நாசாவின் புகைப்படம்


1.ஞாயிறு (
SUNDAY)


2.புதன் (WEDNESDAY)
3.வெள்ளி (FRIDAY)
4.பூமி (EARTHDAY)
5.வியாழன்(THURSDAY)
6.சனி (SATURDAY)
7.யுரேனஸ் (OURSDAY)

கால நேரங்கள்

செவ்வாய் சூரியனை சுற்றிவர 686.98 நாட்கள் எடுத்துக்கொள்வதால் இங்கு கால நிலை பூமியைவிட தோராயமாக இரண்டுமடங்கு அதிகமாகிறது அதனடிப்படையில் செவ்வாயும் தன்னைத்தானே சுற்றிவர ஏறக்குறைய பூமியை ஒட்டியே காணப்படுகிறது , செவ்வாய் கிரகம் ஒருமுறை தன்னைத்தானே சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரம் 24மணி நேரம் 38 நிமிடங்கள் இதனால் ஒரு நாளுக்கு 24மணி நேரம் 38 நிமிடங்கள் என்று வைத்துக்கொண்டால் ஒரு நாளுக்கு 40 நிமிடங்கள் பூமியை விட அதிகம் அதுதவிர்த்து இங்கு ஒரு வருடத்திற்க்கு 686 நாட்கள் ,321 நாட்கள் பூமியைவிட அதிகம் ஆகையால் அங்கு,
ஒரு வருடத்திற்க்கு 98 வாரங்கள் வரும்

ஒரு வருடம் முடிவதற்க்குள் போதும் போதென்றாகிவிடும்...

ஒரு வருடம் 23 மாதம் கொண்டதாய் இருக்கும் ஆகையால் இன்னும்
பதினொன்று மாதங்களுக்கு புதிதாக பெயர் வைக்க வேண்டியிருக்கும்...

ஆங்கிலம் மட்டுமின்றி தமிழுக்கும் புதிதாக 11 மாதங்களுக்கு பெயர்கள் வைத்திருக்க வேண்டியிருக்கும்..

ராசிகளும் 23 ஆக உயர்ந்திருக்கலாம்

அப்படியன்றி மாதங்கள் 12 ஆக வைத்துகொள்வேமேயானால் மாதத்திற்க்கு 57 நாட்களாக மாறியிருக்கும்...

மாத சம்பளம் இரண்டாக பிரித்து கொடுக்கப்படலாம்...

அப்போ நம்ம ஆயுள்காலம் பூமியைவிட செவ்வாயில் குறைவு கால விபரப்படி மற்றபடி வாழ்நாள் ஒரே அளவாய்த்தான் இருக்கும்

ஓட்டுப்போடும் வயது 9 ஆகவும்,

திருமண வயது 10 ஆகவும் மாறியிருக்கும்

இப்படி ஒவ்வொரு கோளுக்கும் விரிவாக எழுதப்போனா உங்களிடமிருந்து அடியோ உதையோ விழுகலாம் என்பதால் இது பற்றி இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்... தேவைப்படும்பொழுது மீண்டும் கண்டிப்பாக தூசு தட்டுவோம்...

இந்த இடுகையில் தவறான விபரங்கள் இருப்பின் மன்னித்து தங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.இந்த இடுகை எழுத காரணமான எங்கள் பிளாக் உரிமையாளர்கள் அனைவருக்கும் , மேலும் தகவல்கள் தெரிந்து கொள்ள உதவிய கூகுள், தமிழ் , ஆங்கில விக்கிபீடியா ,http://iau-comm4.jpl.nasa.gov/XSChap8.pdf என்ற பிடிஎஃப் தளம் உருவாக்கியவர்களுக்கும் மற்றும் இந்த இடுகை வாசித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்....

44 comments:

Kala said...

வசந்த் பூமி சுற்றுகிறதோ இல்லையோ
என் தலை வேகமாகச் சுற்றுகிறது
அதனால் ஒன்றும் ஏறாது
இந்த மண்டையில்!

விஞ்ஞானிக்கி என் வாழ்த்துகள்

Chitra said...

ஏழு நாட்கள் போதாதென்று இனி, எட்டு நாட்களும் இப்படி நல்லா யோசித்து, "Oursday" அன்று ஸ்பெஷல் பதிவு போடலாம்..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...

ஸ்ரீராம். said...

தூண்டப் பட்ட சிந்தனைகளின் விளைவு நன்றாக உள்ளது.

Unknown said...

//இப்படி ஒவ்வொரு கோளுக்கும் விரிவாக எழுதப்போனா உங்களிடமிருந்து அடியோ உதையோ விழுகலாம் என்பதால் இது பற்றி இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்... //

அது. (இத ரெட் அஜித் மாதிரி படிங்க )

kavisiva said...

ரொம்....ப யோசிக்கறீங்க வசந்த். ரொம்ப வெளியில் சுத்தாதீங்க.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வசந்த்...!!!!!!!

அன்புடன் நான் said...

வசந்த் நீங்க உங்க பாதையிலே சவாரி செய்யுங்க..... இது ரொம்ப குழப்புது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாப்ளே என்னய்யா ஜொள்ள வர்ற சத்தியமா எனக்கு ஒண்ணுமே புரியலை...

நாடோடி said...

ரெம்ப‌ குழ‌ப்புது வ‌ச‌ந்த்.. ஆனால் உழைப்பு தெரிகிற‌து.. அதுக்கு வாழ்த்துக்க‌ள்..

நட்புடன் ஜமால் said...

நிறைய தகவல் தெரிந்துகொண்டேன்

நன்றிப்பா

நம்மநாள் - தூள் :)

தமிழ் உதயம் said...

ரெம்ப யோசிச்சு இருக்கீங்க. மகிழ்ச்சி.

அன்புடன் அருணா said...

ஆறு நாளுக்கப்புறம் விடுமுறைங்கிறது மாறி ஏழு நாட்களுக்கு அப்புறம் விடுமுறை...!!! ம்ம்ம்.நஷ்டம்தான்! சாரி கஷ்டம்தான்!

simariba said...

வசந்த் ???!!!! இப்படியெல்லாம் யோசிக்கறிங்க.... அப்படியே astronomyla PhD sign பன்னிடுங்க!!!
இல்லனா செவ்வாயில் மனிதர்கள் இருந்தால் என்னன்ன நடக்கும்னு சிறுகதை எழுதுங்க!! வாழ்த்துக்கள்.

க.பாலாசி said...

புவியியலுக்கே எனக்கு இங்கிலீஸ்ல என்னான்னு தெரியாதுங்க... அவ்ளோ கஷ்டப்பட்டு படிச்சேன்.. இதெல்லாம் படிக்க படிக்க இன்னும் தலைய சுத்துது... ரொம்ப மெனக்கெட்டு எழுதியிருக்கீங்க... அதுக்கு ஒரு சபாஷ்....

கார்க்கிபவா said...

ஸப்பா.. இப்பவே கண்ண கட்டுதே

சீமான்கனி said...

அடேயாப்பா ஏ......ன் மாப்பி இப்டி???அநியாயத்துக்கு யோசிக்கிற...

படிச்சு முடிச்சு யோசிக்க ஆரம்பிச்சா....மயக்கமா வருது மாப்பி...எனக்கு இப்போ படிச்சது எல்லாம் மறந்து போச்சு...ஆமா??நான் இப்போ எங்க இருக்கேன்???

அமுதா கிருஷ்ணா said...

என்னத்த சொல்றது?

SUFFIX said...

பல புதிய தகவல்கள் தெரிந்து கொள்ள் முடிந்தது வசந்த், அந்த செவ்வாய் கிரக படம், உபயம் போட்டோ ஷாப் தானே:)

அருண் பிரசாத் said...

எதோ சொல்ல வர்றிங்க னு மட்டும் புரியுது. நமக்கும் இந்த HISTORY GEOGRAPHY கும் ஆகாது, FREE யா விடு


நல்ல பதிவு நண்பா

பின்னோக்கி said...

மிக பயங்கரமான ஆராய்ச்சியா இருக்கே. ஒரு நாள் சேருவதால் இவ்வளவு பிரச்சினையா?. அதனால் தான் நிறைய பேர் சேராமல் தனியாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

வசந்த்., உங்களை செவ்வாய்க் கிரகவாசி தேடிக்கிட்டிருக்காரு. :))

சுசி said...

//மற்றும் இந்த இடுகை வாசித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்....//
ரைட்டு.. இனி எங்க திட்ட?? பாராட்டிடறேன்..

ஊருக்கு போய் வந்ததில இருந்து சிந்தனை வித்தியாசமாதாம்பா இருக்கு உங்களுக்கு..

ஹேமா said...

"எங்கள் புளொக்" ல யோசிச்சே ராத்திரி தலை வலி.இப்போ வசந்த் நீங்களுமா ! ஆனால் எல்லாரும் சேர்ந்து கவலைகளை மறக்க யோசனை சொல்லிகிட்டு வாறீங்க.அதான் நிஜம்.

எல் கே said...

vasanth vendam vitrunga aluthuruven

ஹுஸைனம்மா said...

கடைசில போட்டிருக்க கணக்குகள், உங்க பொறுமையைச் சொல்லுது.

முக்கியமா,
//ஓட்டுப்போடும் வயது 9 ஆகவும்,
திருமண வயது 10 ஆகவும் மாறியிருக்கும்//

இதுக்காகவாவது வாரம் எட்டு நாளாக்கணும்!! :-)))))

சாந்தி மாரியப்பன் said...

ஒரு நாள் கூடுதலா ஆனா இவ்ளோ ப்ராப்ளமா :-))))

Subankan said...

ஸ்ஸஸஸஸபாஆஆஆஆஆஆஆ......

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

முனைவர் வசந்த்!
பெயர் எப்படி, நல்லாயிருக்கில்ல???

Unknown said...

நல்ல கண்டு பிடிப்பு. அரசுக்கு பரிந்துரை செய்யுங்கள்.
அரசு ஊழியர்கள் வயிற்றில் பால் வார்த்ததுப் போல் இருக்கும்.
உங்கள் ஆராய்ச்சி இன்னும் தொடரட்டும்.
வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

நம்ம நாள்- நல்லாயிருக்கு வசந்த்.

இதனால் ஏற்படக் கூடிய குழப்பங்கள் தலைசுற்றினாலும் சுவாரஸ்யம் நீங்க பட்டியலிட்ட விதம்:)!

prince said...

ஏற்கனவே இல்லாத மூளைய குடைந்து கொண்டிருக்கிறேன். இதுல இது வேறயா நடத்துங்க ராசா நடாத்துங்க!!

சிநேகிதன் அக்பர் said...

விஞ்ஞானி வசந்த் வாழ்க!

உண்மையிலேயே இவ்வளவு தகவல்களை சேகரித்ததற்கு வாழ்த்துகள் வசந்த்

Unknown said...

உங்களது சிரத்தைக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

பயங்கரமான ஆராய்ச்சி. சுவாரஸ்யம் பட்டியலிட்ட விதம்:)!

பனித்துளி சங்கர் said...

ஆஹா பல தகவல்கள் புதுமையாக அறிந்துகொண்டேன் நண்பரே .புகைப்படங்கள் அனைத்தும் அருமை பகிர்வுக்கு நன்றி

தாராபுரத்தான் said...

யார் ஆட்சி நடக்கிறதுன்னு தெரியாம..ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கறீங்க..

Anonymous said...

NICE ONE VASANTH...

பிரேமி said...

அட நாராயணா! என்னாச்சு வசந்திற்கு? ஏன் இந்த சிந்தனை? வசந்தை நினைத்தால் பயமா இருக்கு! யாராவது வைத்தியம் செய்ங்க...............

கௌதமன் said...

உங்க பின்னூட்டம் படித்தவுடன், அங்கேயே பாராட்ட வேண்டும் என்று நினைத்தேன். இங்கே பாராட்டிவிடுகின்றேன்.
சிம்ப்ளி சுபர்ப்.
உழைப்பு + வித்தியாசமான கோணத்தில் சிந்தனை இரண்டுக்குமே பாராட்டுகள்.

Santhini said...

nalla aaraaicchi...

ப்ரியமுடன் வசந்த் said...

கலா தலை சுத்துச்சா? சரி சரி ரெண்டு விக்ஸ் மாத்திரை வாங்கி போட்டுக்கோங்க :))

சித்ராம்மா வருகைக்கு நன்றி...

ஸ்ரீராம் இன்னும் நிறைய இதே போன்ற சிந்தனைகள் கெளப்புங்க...

கலா நேசன் ஆவ்வ்வ் அப்டியா ?

கவி ஆமாங்கோ 59 டிகிரி வெயில் வாட்டுதே...

டி.வி.ஆர் சார் வருகைக்கு நன்றி என்னாச்சு பெய்ரை மட்டும் சொல்லி விட்டுட்டீங்க அந்தளவுக்கா பாதிச்சிடுச்சு அய்யகோ...

கருணாகரசு இந்த மாதிரி போஸ்ட்டும் அப்போ அப்போ போடணும்ங்க மனதிருப்திக்கு...

ரமேஷ் மாப்ள ம் நீங்க மேனேஜரு புரியலைன்னு எல்லாம் சொல்லக்கூடாது...

நாடோடி நண்பா ஆமாப்பா கிட்டத்தட்ட 10 மணி நேரம் ஆயிடுச்சு எழுத...

ஜமால் அண்ணா ஆமாவா சந்தோஷமே...

ரமேஷ் சார் நன்றி சார் கரெக்ட்டுதான்..

பிரின்ஸ் அதேதான்...

simariba ஆமாங்க சிறுகதையா நான் சிற்கதை எழுதுனா அவ்ளோதான் என்னோட வலைப்பதிவே தாங்காது ..

ப்ரியமுடன் வசந்த் said...

பாலாசி நண்பா சேம் சேம் பப்பி சேம்...

கார்க்கி இதோ வர்றேன்.....

சீமான்கனி மாப்ள பின்ன தேனின்னா சும்மாவா? பாத்துடி ஆபிஸ்ல பயந்துடப்போறாங்க...

அமுதா மேடம் ஒண்ணும் சொல்ற மாதிரி எழுதலியா அய்யய்யொ..

சஃபி தெரியலை சஃபி அவங்களோட தளத்தில் எடுத்தது

அருண் பிரசாத் ஃப்ரீயா வுடு மாமே..

பின்னோக்கி சார் அது அதுவேதான்...

ஷேக் எங்க அழைப்பு ஒண்ணையும் காணோம் ? :))

சுசிக்கா ம் ஆமாவே ஊர்ல கொஞ்சம் பிரெயின வாஷ் பண்ணிட்டு வந்தேனே...

ஹேமா அவ்ளோ தலைவலியா வந்துச்சு ?

ப்ரியமுடன் வசந்த் said...

எல் கே ஜி... ஹா ஹா ஹா...

ஹூசைனம்மா அம்புட்டு ஆசையா சகோ எட்டு நாள் ஆக்குறதில...

சாரல் மேடம் பிராப்ளம் இங்கே கிடையாது செவ்வாயில்

சுபா தாங்க்ஸ் மச்சி

நிஜாமுதின் ஆனந்த கண்ணீர் வருது தலைவா...

அபுல் பசர் :)))) அரசாங்க ஊழியர்கள் அப்பிடின்னாலும் விட்ருவாங்களா என்ன?

ராமலக்ஷ்மி மேடம் குழப்பம் எப்படின்னு எனக்கு தெரியலையே மேடம் ஒரு வேளை ப்ரசெண்டேசன் ஓஃப் வொர்க் சரியில்லைன்னு நினைக்கிறேன்....

ப்ரின்ஸ் ஆகா ஏன் பாஸ் இப்டி?

அக்பர் நன்றி

ஆறுமுகம் முருகேசன் மிக்க மகிழ்ச்சி நண்பா

ஜெஸ்ஸம்மா நன்றி நன்றி...

சங்கர் நன்றிப்பா

தாராபுரத்தான் ஐயா ஒண்ணும் புரியலியே...

தமிழரசி நன்றி பாஸ்... :))

சந்தோஷி மேடம் அடடா எம்புட்டு நல்லவங்க நீங்க?

கவுதம் சார் தங்கள் மனமார்ந்த பாராட்டுக்கள் எல்லாம் உங்கள் கிருபையே சார் இன்னும் நிறைய பேர் சிந்தனைகளை தூண்டுங்கள் ( சமீப காலமாக நிறைய மாற்றங்கள் எங்கள் ப்ளாக்கில் ஏதாவது ஒருத்தர் அடிச்சு ஆடுறவரை சேர்த்திருக்கீங்களா?)

சாந்தினி மேம் மிக்க நன்றி

கௌதமன் said...

வசந்த், நாங்க அஞ்சு பேருமே (ஒருத்தரை ஒருத்தர்) அடிச்சி ஆடுகின்றவர்கள்தான் !