June 28, 2010

என் பூரிக்கட்டையே என் பூரிக்கட்டையே

எல்லாருக்கும் வணக்கம் இந்த பாடலை ஒரு முறை கேட்டுவிட்டு அந்த மெட்டிலே கீழுள்ள பாடல்களை வாசிச்சுட்டு எப்பிடி மேட்ச் ஆச்சா இல்லியான்னு சொல்லுங்க ஃப்ரண்ட்ஸ்....




வீடியோ ஓபன் ஆகதவங்க இங்க கிளிக்குங்க...


*******************************





என் பூரிக்கட்டையே என் பூரிக்கட்டையே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் கோதுமை என்று தெரிந்தும் நீ
ஏன் உருண்டையொன்று கேட்கிறாய்
வட்டங்கள் கோளங்கள் இரண்டில்
என்ன தரப்போகிறாய்
உருட்டுவதை உருட்டிவிட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்?


- கோதுமை

**********************************************************








என் தோசைக்கல்லே என் தோசைக்கல்லே
என்னை என்ன செய்யப்போகிறாய்?
நான் இட்லி மாவு என்று தெரிந்தும் நீ
ஏன் தோசை சுடப்போகிறாய்?
வெங்காய தோசை,மசால் தோசை இரண்டில்
என்ன சுடப்போகிறாய்
சுடுவதை சுட்டுவிட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்?


- இட்லி மாவு


*********************************************************








என் மிக்ஸியே என் மிக்ஸியே
என்னை என்ன செய்யப்போகிறாய்?
நான் தக்காளி என்று தெரிந்தும் நீ
ஏன் அரைக்கப்பார்க்கிறாய்?
தக்களிச்சட்னி, காரசட்னி இரண்டில்
என்ன அரைக்கப்போகிறாய்?
அரைப்பதை அரைத்துவிட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்?


- தக்காளி

*********************************************************



என் கொடநாடே என்கொடநாடே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் அரசியல்வாதியென்று தெரிந்தும் நீ
ஏன் என் கையில் சிக்கினாய்?
களிக்கஞ்சி , ஜெயில் கம்பி இரண்டில்
என்ன தரப்போகிறாய்?
தருவதை தந்துவிட்டு
ஏன் இன்னும் என்னிடமே இருக்கிறாய்?


- ஜெ.ஜெ.


*********************************************************




என் மட்டையே என் மட்டையே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் பந்தென்று தெரிந்தும் நீ
ஏன் அடிக்கப்பார்க்கிறாய்?
சிக்ஸர்கள்,பவுண்டரிகள் இரண்டில்
என்னத்தரப்போகிறாய்?
அடிப்பதை அடித்துவிட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்?


- பந்து

*********************************************************






என் போலீஸே என் போலீஸே
என்னை என்ன செய்யப்போகிறாய்?
நான் சாமானியன் என்று தெரிந்தும் நீ
ஏன் லஞ்சம் கேட்கிறாய்?
அபராதமா, அவமானமா இரண்டில்
என்னத்தரப்போகிறாய்?
வாங்குவதை வாங்கிவிட்டு 
ஏன் இன்னும் கேட்கிறாய்?


- சாமானியன்

*********************************************************












என் கீ போர்டே என் கீ போர்டே
என்னை என்ன செய்ய போகிறாய்?
நான் பிளாக்கர் என்று தெரிந்தும் நீ
ஏன் வேலைசெய்யமறுக்கிறாய்?
கவிதைகள், காமெடிகள் இரண்டில்
என்ன தரப்போகிறாய்?
எழுதியவை எழுதியபின்
ஏன் பப்ளிஷ் ஆக மறுக்கிறாய்?

- பிளாக்கர்

********************************************************




என் ஈழமே என் ஈழமே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நன் தமிழன் என்று தெரிந்தும் நீ
ஏன் உயிரை கேட்கிறாய்?
மண்ணா, மரணமா இரண்டில் 
எதை தரப்போகிறாய்?
தருவதை தந்துவிட்டு
ஏன் இன்னும் உயிர்பலிகள் கேட்கிறாய்?


- ஈழத்தமிழன் (மன்னிக்கவும்)

*********************************************************


49 comments:

சீமான்கனி said...

Me the 1st.....

சீமான்கனி said...

மாப்பியே என் மாப்பியே என்னை என்ன செய்ய போகிறாய் நான் படிப்பேன் என்று தெரிந்தும் நீ ஏன் வித்யாசமாய் யோசிக்கிறாய்..
அழுகவா ??சிரிக்கவா ??என்னை என்ன செய்ய சொல்கிறாய்...
பண்ணுவதை பண்ணிவிட்டு ஏன் பக்கவாட்டில் சிரிக்கிறாய்...

Anonymous said...

என்ன வசந்த் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டை இந்த பாடு படுத்திடீங்க!:)
இருந்தாலும், வித்யாசமா நல்லாதான் இருக்கு.

Chitra said...

மாப்பியே என் மாப்பியே என்னை என்ன செய்ய போகிறாய் நான் படிப்பேன் என்று தெரிந்தும் நீ ஏன் வித்யாசமாய் யோசிக்கிறாய்..
அழுகவா ??சிரிக்கவா ??என்னை என்ன செய்ய சொல்கிறாய்...
பண்ணுவதை பண்ணிவிட்டு ஏன் பக்கவாட்டில் சிரிக்கிறாய்...

...... ha,ha,ha,ha,ha.... righttu!

Mahi_Granny said...

superb vasanth

Unknown said...

கடவுளே கடவுளே
என்னை என்ன செய்யச் சொல்கிறாய்
இது கடியென தெரிந்தும் நீ கமென்ட் போடச் சொல்கிறாய்.....

உட்காந்து யோசிப்பிங்களோ. நல்லா இருக்குங்க.

goma said...

aahaa aahaa

ராமலக்ஷ்மி said...

வேடிக்கையாய் ஆரம்பித்து நடுநடுவே சமூகத்தின் மீதான ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

Unknown said...

ஏன் மாப்ள .. என்னாச்சு ...

kavisiva said...

நல்லாத்தான இருந்தீங்க?!

ஆனால் இதுவும் நல்லாத்தான் இருக்கு

அன்புடன் அருணா said...

சரிஇ ன்னும் என்னென்ன பாட்டெல்லாம் உல்டாவாகப் போகிறாதோ!

கார்க்கிபவா said...

என் பின்னூட்டமே என் பின்னூட்டமே
இவனை என்ன செய்ய போகிறாய்?
இவன் மொக்கைவாதி என்று தெரிந்தும் நீ
ஏன் கெட்ட வார்த்தை பேசினாய்?
செம்மொழியா ஆங்கிலமா?
எதில் இவனை திட்ட போகிறாய்
திட்டுவதை திட்டிவிட்டு ஏன்
மாடரேஷனை கேட்கிறாய்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாப்பு கொடநாடு சாமானியன் ரெண்டும் சூப்பர். எல்லாம் கலக்கல் வரிகள்.

சாந்தி மாரியப்பன் said...

கொடநாடும், போலிசும் செமகலக்கல் :-)))))))

தமிழ் உதயம் said...

உங்கள் கற்பனை திறனை மெச்சுகிறோம்.

Kiruthigan said...

ஈழ தமிழனை வச்சு காமடி பண்றீங்க...
வாழ்க வழமுடன்..

நாடோடி said...

வித்தியாச‌மான‌ க‌ற்ப‌னை...

பின்னோக்கி said...

எல்லாப் பாடலிலும் உங்கள் பஞ்ச்ச் தெரிகிறது. விரைவில் சினிமாவுக்கு பாட்டு எழுத அழைப்பு வரலாம்.

பொன் மாலை பொழுது said...

வசந்து, என் கண்டனங்களை தெரிவிகின்றேன்.
ஒரு நல்ல, உணர்வுபூர்வமான பாடலை இப்படி கிண்டல் அடித்ததற்கு. :)
கே. பாலச்சந்தர் இங்கெல்லாம் வரமாட்டார் என்ற கொழுப்போதானே :)
Anyhow வாழ்த்துக்கள் விரைவில் சினிமாவில் வாய்ப்புக்கள் வரலாம்.

Anonymous said...

ஊருக்குப்போய் வந்ததிலிருந்து ஒரு மார்க்கமாத்தான் இருக்கீங்க :)

பிரேமி said...

வசந்த்த்த்த்த்...............ஏஏஏன்ன்ன்ன்ன்........எப்புடி? இப்படியெல்லாம்??? உங்களால் மட்டும் யோசிக்க முடிகிறது? ஓ..! நீங்க தேனீனீனீக்காரங்களோ!!!!!!!!!

தமிழ் மதுரம் said...

வசந்த! நகைச்சுவையிலை பிய்ச்சு உதறிட்டீங்க.. போங்கோ. அருமையான பதிவு. நல்லாத் தான் யோசிக்கிறீங்கப்பா.

Kala said...

வசந்தே வசந்தகுமாரே
எங்களை ஏன் இப்படிக் கொல்கிறாய்
நாங்கள் உங்கள் தளம் வருவது தெரிந்தும்
ஏன் பூரி சுட்டுப் போட்டிருந்தாய்
அதன் சுவை தெரியாமல் எங்களை
என்ன சொல்லச் சொல்கிறாய்


{ஆமா அந்தப் பாடல் ஏதோ கதை
சொல்கிறதே..}

அன்புடன் நான் said...

வித்தியாசாமான கற்பனைதான்.....
மிக அதிகமா சிந்திக்கிறீங்க....

Menaga Sathia said...

ha ha very nice vasanth!!

சுசி said...

சூப்பரா பொருந்துது வசந்த்.

கலக்கலா அரசியலையும் சேர்த்துட்டிங்க :))

மாதேவி said...

:))) கலக்குங்க.

க ரா said...

சாமனியன பத்திய கவிதை சூப்பருங்க. பின்றீங்க.

ஆ.ஞானசேகரன் said...

நல்லாயிருக்கு....

கடைசி மனம் கசக்க செய்கின்றது

Anonymous said...

ஒ வசந்த் சூப்பர் தான் நீங்க எப்பிடி எல்லாம் யோசிகரங்களோ இப்பிடில்லாம் எழுத ..எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு ..

கௌதமன் said...

நன்றாக இருக்கின்றன. கொஞ்சம் அதிகமாகவே இழுத்துவிட்டீர்களோ என்றும் ஓர் எண்ணம.

Ashok D said...

அடங்கமாட்டிங்களா தம்பி... நான் கவிதைய சொன்னேன் :)

நட்புடன் ஜமால் said...

நீண்ட நாட்களுக்கு பிறகு

வெகுவாக இங்கு இரசித்தது :)

பனித்துளி சங்கர் said...

ஆஹா அருமை நண்பரே அனைத்தும் என்னை மிகவும் ரசிக்க வைத்தது குறிப்பாக பூரி பாடல் மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி

Allinone said...

கலக்கல் நகைச்சுவை

ஹுஸைனம்மா said...

உங்க கவிதை(!!)களால், எல்லாரையுமே கவுஞர்கள் ஆக்கிட்டீங்க!! :-)))

Gayathri said...

நீங்க சினிமாவுல பாட்டெழுதலாமே..ஒரே மாதிரியான பாடல்க்ளை கேட்டு போர் அடுச்சு போன நேரத்துல உங்க கவிதை அருமையா இருக்கு கவிஞ்ஞரே

தமிழன்-கோபி said...

:) உங்க கிட்ட இன்னும் எதிர் பார்க்கிறோம்

AkashSankar said...

ரூம் போட்டு யோசிச்சீங்களா...பாஸ்....

பா.ராஜாராம் said...

:-))) ஜாலி, வசந்த்!

உங்க மேல் கோபம்.

எப்போ கவிஞன் ஆனான் உங்க அண்ணன்? :-)

Santhini said...

Very nice !!

ப்ரியமுடன் வசந்த் said...

சீமான்கனி பிச்சு உதறிட்ட மாப்ள நன்றி...

மீனாஷி மேடம் எனக்கும் இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் மேடம் அடிக்கடி கேட்டதுனால வந்த ஒரு வித பற்றுன்னு கூட வச்சு என்னை மன்னிச்சுடுங்கோ... நன்றி மேடம்...

சித்ராம்மா சிரிச்சுட்டீங்க அதுக்கு நன்றி..

மஹி ரொம்ப நன்றிங்க...

கலா நேசம் ஆகா இருக்கட்டும் இருக்கட்டும் நன்றி பாஸ்

கோமதி மேடம் எப்டி இப்டில்லாம் நன்றி மேடம்

ராமலஷ்மி மேடம் மிக்க நன்றி நகைச்சுவை கலந்து ஆதங்கங்களை சொல்றது எனக்கு பிடிச்சுருக்கு மேடம்..

செந்தில் மாப்ள நன்றி ஒண்ணும் ஆகல பயப்படாதீங்கோ...

கவி சிவா ஹா ஹா ஹா ஏன் இப்டி? ஏதாச்சும் ஒண்ணும் சொல்லுங்க...

பிரின்ஸ் போதும் பிரின்ஸ் இந்த் போஸ்ட் பிளாப் லிஸ்ட்டுக்கு பொனதால திரும்ப ட்ரை பண்ண மாட்டேன்...

கார்ர்க்கி தலைவா இந்த டாபிக் நீங்க எழுதியிருந்தா இன்னும் சூப்பரா வந்திருக்கும்...

ப்ரியமுடன் வசந்த் said...

ரமேஷ் மாப்ள நன்றி

சிவாஜி சங்கர் நன்றிங்க

சாரல் மேடம் மிக்க நன்றி

ரமேஷ் சார் மிக்க மகிழ்ச்சி சார்

கிருத்திகன் மன்னிக்கவும்...

நாடோடி நண்பா நன்றிங்க

பின்னோக்கி சார் அய்யய்யோ...

கக்கு மாணிக்கம் சார் வேணாம் சார் நான் டைரக்டர் ஆகத்தான் ட்ரை பண்றேன்... :)))

அகிலா மேடம் ஆமாவா ? இல்லியே நான் மாறுனது மாதிரி எனக்கு தெரியலியே...

சந்தோஷி டீச்சர் அதேதான் எப்பிடி கொட்டுனோம் வலிக்கலியே வலிக்கலியே...

கமல் நண்பா மிக்க நன்றி

கலா வழக்கம்ப்போலவே கல கலப்பான கமெண்ட்...

கருணாகரசு சார் அதனாலத்தான் என்னால இவ்ளோ நாளா ஹிட் கொடுக்க முடியுது...

மேனகா மேடம் நன்றி...

சுசிக்கா ஆமாக்கா நன்றி..

மாதேவி மேடம் நன்றி நன்றி

இராமசாமிகண்ணன் நன்றிங்க நண்பா

ப்ரியமுடன் வசந்த் said...

ஞானம் நன்றி நண்பா

சந்த்யா மேடம் உங்க பிளாக் படிக்க செம காமெடியா இருக்கு அடுத்த போஸ்ட்ல இருந்து கண்டிப்பா கமெண்ட்ஸ் உண்டு..நன்றி மேடம்

கவுதம் சார் எழுதி முடிச்சப்பிறகு எதை தூக்குறதுன்னு தெரியாம எல்லாத்தையும் போ(ஸ்)ட்டுட்டேன் சார்...

அஷோக் அண்ணா நான் அடங்குனா நல்லாவா இருக்கும் இப்படியே போகுதுண்ணா..

ஜமால் அண்ணா நெசமாவா சொல்றிங்க ஹைய்யா...

சங்கர் நன்றி

அன்நவுன் நன்றி நன்றி

ஹூசைனம்மா ஹா ஹா ஹா ஆமா மேடம்...

காயத்ரி அப்படின்னா சந்தோசம்ங்க...

தமிழன் மச்சி இதுல உள்குத்து எதுவும் இல்லியே

ராச ராச சோழன் நன்றிங்க..

ராஜாராம் அண்ணா நீங்க ரோம்ப தூரத்துல தெரியுற ஸ்டார் ஆயிட்டீங்கண்ணா நான் இன்னும் வானத்தையேதான் பார்த்துட்டு இருக்கேன்..

சாந்தினி மேடம் நன்றி...

vanathy said...

இலங்கை, கொடநாடு & போலீஸ் எனக்கு பிடித்திருக்கு.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

இதுவும் நல்ல கற்பனை.. பாராட்டுக்கள் வசந்த்..

ப்ரியமுடன் வசந்த் said...

வானதி நன்றிங்க..

சந்தனா நன்றிங்க...

"தாரிஸன் " said...

எப்படி இப்படியெல்லாம்?????
இதுக்கெல்லாம் ரூம் போட்டு யோசிபிங்கோலோ ????
இருந்தாலும் நல்லா இருக்கு....

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி தாஸிஸ் அருண்.. ரூம் இல்லீங்க வீடே எடுத்து யோசிப்போம்... :))