தயாரிப்பு நிறுவனம் , படத்தில் நடித்தவர்கள்,இசையமைப்பாளர் என படத்தில் பணிபுரிந்தவர்கள் அனைவரும் ஃபேமஸ் ஸ்டார்ஸ் அறிமுகமே வேண்டியது இல்லை,
இந்திய அளவில் அனைத்து சினிமா ரசிகர்களின் இதய துடிப்பை கடந்த சில நாட்களாகவே எகிறவைத்து கொண்டிருக்கும் எந்திரன் திரைப்படத்தில் நிச்சயம் கொடுத்த பணத்திற்கும் மேலாகவே படத்தில் பணி புரிந்திருக்கும் அனைவரும் தங்கள் உழைப்பை கொட்டியுள்ளனர்.
கதை
மனிதன் இட்ட கட்டளைப்படி இயங்கும் ரோபோ தன்னுடைய சிந்தனைகளின் படி இயங்க ஆரம்பித்தால், ரோபோக்களுக்கும் மனிதனைப்போல உணர்ச்சிகள் இருந்தால் என்னவெல்லாம் நடக்கும் இதுதாங்க படத்தோட ஒன்லைன்...
ரஜினி
ஆர்ப்பாட்டமே இல்லாத அறிமுக காட்சி பஞ்ச் டயலாக்ஸ் எதுவும் கிடையாது படத்தில், விஞ்ஞானி ரஜினி, ரோபோ ரஜினி என இருவேடங்கள் சூப்பர்ஸ்டாருக்கு. வயசானாலும் இன்னும் இவரோட ஸ்டைலும் வேகமும் இவரைவிட்டு இன்னும் போகவே இல்லை . ஷங்கர் என்னும் விஞ்ஞானியிடம் சிக்கிய ரோபோவாக தன்னுடைய ஸடைலில் நகைச்சுவை,வில்லத்தனம் கொஞ்சம் காதல் என கலந்து அசத்தியிருக்கிறார் மனிதர்.குறிப்பாக இடைவெளிக்கு பிறகு வரும் வில்லத்தனமான நடிப்பு அட்டகாசம்.ரோபோ போலவே டான்ஸ் ஆடுவது இன்னும் அட்டகாசம் .இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம் அத்தனை திறமைகளையும் அட்டாகாசப்படுத்தியிருக்கிறார். படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை ரோபோவாக வரும் ரஜினியின் நகைச்சுவைக்காட்சிகளில் தியேட்டரே அதிர்கிறது.முக்கியமாக ட்ராஃபிக் போலீஸிடம் ரோபோ ரஜினி வரும் ஐந்து நிமிடமும் பட்டாசு கிளப்பியிருக்கிறார் காமெடியில். ட்ரெயின் சண்டைக்காட்சி பிரம்மிக்கவைக்கிறது.ஒரே ஒரு குறை இந்தபடத்தில் சூப்பர்ஸ்டாரின் ஸ்டைல் சீன்கள், பஞ்ச் டயலாக்ஸ் மிஸ்ஸிங்...கிளி மாஞ்சாரோ பாடலில் சூப்பர் ஸ்டார் கொள்ளை அழகாய் இருக்கிறார்...
ஷங்கர்
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் , ஃபேண்டசி எனும் ப்ராம்மாஸ்திரத்திரத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் பிரம்மா இந்தப்படத்திற்க்கும் தன்னுடைய பிரம்மாண்டம் எனும் அஸ்திரத்தையும், ரஜினி எனும் நடிப்புலக பிரம்மாண்டத்தையும் வைத்து ஒரு ஆர்ட்டிஃபிகல் இண்டெலிஜெண்ட் திரைப்படத்தை காமெடி , காதல், கிராபிக்ஸ் கலந்து கொடுத்து தமிழ் சினிமாவை ஒருபடி மேலே எடுத்துசென்றிருக்கிறார் .
ஐஸ்வர்யா ராய்
ஐஸ்வர்யா ராய் ரஜினிக்கு இணையான கேரக்டர், படத்தின் திருப்பு முனை காட்சிகள் ஐஸ்வர்யாவை சுற்றியே நடக்கிறது . ரோபோ ரஜினியும் ஐஸ்வர்யா ராயும் இணைந்து வரும் காதல்காட்சிகள் ரசனை. 35 வயசான என்ன ? என்ன இருந்தாலும் ஐஸ்வர்யா ராய் ஐஸ்வர்யா ராய்தான்யா . ரோபோ ரஜினிக்கு தன் மீது வரும் ஒரு விதமான ஈர்ப்பு பின் அது தவறென ரோபோ ரஜினிக்கு புரியவைக்கும் காட்சிகளில் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் இந்த 50கிலோ தாஜ் மஹால்.கிளிமாஞ்சாரோ பாடலில் இவர் போடும் டொட்ட்ட்டாய்ங்களுடன் நம்மளையும் டொட்டாய்ங்க் போடவைக்கிறார். அதிர்ஷ்டக்கார ஆளுதான் அபிஷேக் பச்சன்.
ஒளிப்பதிவு
கிளிமாஞ்சாரோ,காதல் அணுக்கள் பாடல் காட்சிகள் எடுக்கப்பட்ட லொக்கேசன்களும் கண்ணுக்கு விருந்து , சண்டைக்காட்சிகளில் ரத்னவேலுவின் கேமராவும் அட்டகாசம் .
இசை
பூம் பூம் ரோபோடா இந்த வருடம் குழந்தைகளின் விருப்பப்பாடல்களாக மாறப்போவதில் ஆச்சரியமில்லை . புதிய மனிதா , கிளி மாஞ்சாரோ பாடல்களும் கேட்க கேட்க இனிமையாய் இருக்கின்றது. பின்னணி இசையிலும் விளையாடியிருக்கிறார் இசைப்புயல்.இன்னும் ரோபோக்கள் துப்பாக்கி சுடும் சண்டைகாட்சிகளில் வரும் சத்தம் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா ....
கிராபிக்ஸ் காட்சிகள்
இந்த திரைப்படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் ஹாலிவுட் படத்திற்கு இணையான தரத்துடன் பிரம்மிக்க வைக்கின்றன.கிளைமாக்ஸ் சண்டைக்காட்சிகளிலும் ரயிலில் ரஜினி போடும் சண்டைகாட்சிகளிலும் ஒரே மாதிரியான பல ரோபோ ரஜினி டான்ஸ் அண்ட் சண்டையிடும் காட்சிகளுக்கு மட்டுமே நாம் வாங்கிய டிக்கெட் சரியாப்போச்சு...
எந்திரன் - தியேட்டர்காரர்களுக்கு இந்திரன்...
/
44 comments:
thalaivar vaalgaa
விமர்சனம் அருமை
மொத்தத்தில் இது ரஜினி படமில்ல ஷங்கர் படம் என்கிறீர்கள்..
இன்னொரு விமர்சனம்
http://tamilpp.blogspot.com/2010/09/blog-post.html
நன்றி பாஸ்! படம் நல்லவிதமா வந்திருக்குன்னு சொல்றீக! படத்தைப் பார்க்க ஆசைய தூண்டி விட்டிருக்கீக. பார்க்கலாம் எல்லா அமளி துமளி எல்லாம் ஓய்ஞ்சப்பின்னாடி 1 மாசம் கழிச்சப்பின்னாடி பார்க்கலாம்ன்னு நினைக்கிறேன்.
நன்றி தல!
இது முதல் விமர்சனம் போல் தெரியவில்லை...படத்தை பார்க்கும் ஆவல் வருகிறது!
விமர்சனம் அருமை...நான் ஞாயிற்றுக்கிழமை புக் பண்ணி இருக்கேன்...இன்னும் மூனு நாள் இருக்கேன்னு இருக்கு..உங்க விமர்சனத்தைப் படிச்சதும்..
படத்த லேட்டா பார்த்துக்கலாம்னு
நினைச்சேன்...! ஒடனே பார்க்க தூண்டுது உங்க விமர்சனம்...!
சூப்பர் மாம்ஸ்
முதல் ஆளா பாத்துட்டீங்க போல..
ஆர்வத்தைத் தூண்டுகிறது உங்கள் விமர்சனம்.கண்டிப்பா பாத்துடுவேன்.
grrrrr... evening show than poren ma..:-((((
grrrrr... evening show than poren ma..:-((((
அழகில் நீ சந்திரன்
அன்பில் நீ மந்திரன்
நீஉலகை அதிரவைக்கும் எந்திரன்!!!
கட் அவுட் வாசகம் பா
படம் காலைல தானே ரிலீஸ் ஆகிறது.. அதெப்படி 10 மணிக்கி முன்னாடியே விமர்சனம் ?
Is the called Q paper out b4 the exam?
விமர்சனம் நல்லா இருக்கு வசந்த். நேற்றைக்கு NDTV யில் மும்பையில் 72 வயது கிழவர் "ரஜினி படம் முத நாள் பாக்கறதுக்கு கொடுத்து வச்சுருக்கனும்" அப்படின்னு பேட்டி கொடுக்கறார்.. சந்தேகமே இல்லை.. காந்த்.... காந்தம்... ரஜினி காந்த்..
"தலைக் கல்லாம் தலைடா " அப்படின்னு போஸ்டர் ஒட்டியிருந்தாங்க... "தலைக்கெல்லாம் தலைவன் டா " அப்படின்னு வச்சுருக்கணும்.
correct ha kettinga madhavan. how did you wrote review before 10 O'clock
நல்லாயிருக்கு விமர்சனம். முதல் தடவையா எழுதும் விமர்சனம், மின்னல் வேகத்திலும்:)!
சூப்பர் விமர்சனம்..
நான் செவ்வாய் பார்க்க போறேன்
மாப்பி என்ன??? இவ்வளவு விரைவாய் விமர்சனமா???கலக்கல் ம்ம்ம்ம்...விமர்சனம் படிக்கும்போது இப்போவே பார்க்கணும் போல இருக்கு....ம்ம்ம்ம்..நடத்து...நடத்து...
வாவ் அதுக்குள்ள பார்த்துட்டீங்களா. அதிர்ஷ்டம்
அசத்தல் விமர்சனம்..சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டர்தான்...
ஆஹா இப்பவே பாக்கனும்போல இருக்கே?
//தான் உருவாக்கிய ரோபோவினை அறிமுகப்படுத்தும் காட்சிகளில் கடவுள் இருக்கிறாரா இல்லையா என ரோபோட்டிடம் ஒரு அறிவாளி கேட்க அதற்கு ரோபோ ரஜினி கடவுள்ன்னா யார் என்று திருப்பி கேள்விகேட்க மனிதரைப் படைத்தவர்தான் கடவுள் என்கிறார் கேள்வி கேட்டவர் அப்போ என்னைப்படைத்தது இந்த வசீகரன் (விஞ்ஞானி ரஜினி) எனும் கடவுள் இருக்கிறார் என்னும்போது தியேட்டரில் விசில் சத்தம் அடங்க வெகு நேரமானது.//
நான் பார்த்த திரையரங்கிலும் இதே நிலைமைதான், ஆர்ப்பாட்டம் பண்ணியவர்களில் நானும் ஒருவன் என்று கூறுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. சூப்பர் காட்சி.
இவ்வளோ சீக்கிரம் விமர்சனமா? எவ்வளோ டிக்கட் விலை?
அசத்தல் தான். சூப்பர்... சூப்பர்...
அருமையான விமர்சனம். 2 திருத்தம். 1.ஐஸ்க்கு வயசு 37 2.மூலக்கதை சுஜாதாவின் என் இனிய இயந்திரா நாவல்
கலக்கல் வசந்த்,. வள வள கொல கொலவென்று இல்லாமல் தெளிவான விமர்சனம்
"gulf cinema theater " செம ரஷாமே ,.. என் ப்ரண்டு போய்ட்டு வந்துட்டான்,,.
//படம் காலைல தானே ரிலீஸ் ஆகிறது.. அதெப்படி 10 மணிக்கி முன்னாடியே விமர்சனம் ?
Is the called Q paper out b4 the exam?//
avar gulfla irukar. anga nethe release
என்னது ? தமிழ் சினிமாவை ஒரு படி உயர்த்தீட்டாங்க ?அறிவியல் படம் என்றால் இதுவா ?
http://ethamil.blogspot.com/2010/10/blog-post.html
சரியோ தெரியவில்லை எழுதிவிட்டேன் ...
விமர்சகரே நன்றி ;)
(கிளிமாஞ்சாரோ தூக்கம் போச்சி மாஞ்சாரோ)
புறக்கணிப்போம் எந்திரனை
ஒட்டுமொத்த தமிழ் இளைஞர்களின்
சிந்தனைகளை முடக்கி
அரிதார அழகிகளின் அங்கங்களை காட்டி
அதில் தொழில் செய்து
தமிழை கொன்று
தமிழின வேதனைகளை
இருட்டடிப்பு செய்த
தொலைக்காட்சி சவப்பெட்டியின்
சங்கை நெறிக்க...!!
புறக்கணிப்போம் எந்திரனை
தமிழ் சமுதாயத்தின்
சாபக்கேடாகிப்போன
ஒரு தனிமனிதனிடமிருந்து..
திரயுலக்கத்தின்
மாய உலகில் மூழ்கிக்கிடக்கும்
தமிழ் இளைஞர்களை மீட்டுக்க
புறக்கணிப்போம் எந்திரனை
சொந்த (எந்திரன்) ஆதாயதிர்க்காக
IIFA வை புறக்கணித்து,
தமிழர்களின் உணர்வுகளை
புரிந்து கொண்டதாக தம்பட்டம் அடித்த
அரிதார அழகியின் கோட்டம் அடக்க..!!
புறக்கணிப்போம் எந்திரனை
மாப்ளே விமர்சனம் சூப்பர் ...
மிக அருமையான படம் எந்திரன். பார்க்கத் தூண்டும் உங்கள் விமர்சனம்.
ரஜினி ரஜினிதான். வேறெதும் சொல்ல முடியல.. கண்டிப்பா பார்க்கணும்.
முழுசா படிக்கல.. கடேசி வரிகள் மட்டும்.. என்னிக்காவது பாத்தா, பின்னாடி படிச்சுக்கறேன்..
ரியல் விமர்சனமா. இல்லை இதுல ஏதாச்சும் ட்விஸ்ட் இருக்கா?
விமர்சனம் செய்வதிலும் கெட்டிக்காரன்தான் நீங்க வசந்து.அருமையா எழுதியிருக்கீங்க.
ரஜனி படம் பிடிக்காவிட்டாலும் ஏதோ ஒரு ஈர்ப்பு அவர் நடிப்பில்.
பார்க்கவே வேணும் !
அதுக்குள்ளே பார்த்துடீங்களா...
பார்க்க ஆர்வம் தூண்டும் விமர்சனம்..
Thanks 4 sharing Your Review - உங்கள் விமர்சனத்திற்கு நன்றி
by
TS
டாப் 60 ரோபோட் எந்திரன் ஸ்டில் படங்கள்
வசந்த்....
சுருக்கமான, ஆனால், நிறைவான விமர்சனம்....
படம் நிஜமாவே பட்டாசு....
ரஜினி என்னும் 10,000 வாலா, திரையில் வெடித்து சிதறுகிறது... அந்த கொண்டாட்டத்தில் நாம் அனைவரும் பங்கு கொள்கிறோம்.... மிக்க மகிழ்ச்சியுடன்...
”எந்திரன்” திரைப்படம் கண்டோர் அனைவரின் மனங்களையும் கொள்ளை கொள்ளும் “மந்திரன்”
வசந்த்....
சுருக்கமான, ஆனால், நிறைவான விமர்சனம்....
படம் நிஜமாவே பட்டாசு....
ரஜினி என்னும் 10,000 வாலா, திரையில் வெடித்து சிதறுகிறது... அந்த கொண்டாட்டத்தில் நாம் அனைவரும் பங்கு கொள்கிறோம்.... மிக்க மகிழ்ச்சியுடன்...
”எந்திரன்” திரைப்படம் கண்டோர் அனைவரின் மனங்களையும் கொள்ளை கொள்ளும் “மந்திரன்”
வசந்த்....
சுருக்கமான, ஆனால், நிறைவான விமர்சனம்....
படம் நிஜமாவே பட்டாசு....
ரஜினி என்னும் 10,000 வாலா, திரையில் வெடித்து சிதறுகிறது... அந்த கொண்டாட்டத்தில் நாம் அனைவரும் பங்கு கொள்கிறோம்.... மிக்க மகிழ்ச்சியுடன்...
”எந்திரன்” திரைப்படம் கண்டோர் அனைவரின் மனங்களையும் கொள்ளை கொள்ளும் “மந்திரன்”
எல்லா அண்ணன்களும் இப்டிதாம்ப்பா இருக்கீங்க.
சினிமாவுக்கு கிளம்பும்போது மட்டும்
கழட்டி விட்டுட்டு போயிடுறீங்க.....
நான் அம்மாகிட்ட சொல்லித்தரேன் பாரு.......
வசந்த்,
நீங்க திரைவிமர்சனமும் தொடர்ந்து எழுதலாம்.
சிறப்பான திரைப்பார்வை!
விமர்சனம் அருமை.
எப்பா நீங்க தான் பாக்கி ....எழுதீட்டீங்களா.......
// அதிர்ஷ்டக்கார ஆளுதான் அபிஷேக் பச்சன். //
லொள்ள காமிச்சுட்டீங்க இல்ல.......ஹஹஅஹா .......
உண்மையிலேயே ஹாலிவுட்-க்கு நிகரான பிரமிக்க வைக்கும் தொழில் நுட்பம்தான்! எந்திரன்+ரஜினி=அசத்தல்!
Post a Comment