திருமணம்
கடந்த மாதம் நடந்த என்னுடைய திருமணம் சொந்தபந்தங்கள் , நண்பர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. பதிவுலகின் எஸ்ரா என்றழைக்கப்படும் நண்பர் கார்த்திகைபாண்டியன் நேரில் வந்திருந்து வாழ்த்தினார். ஏனைய நண்பர்கள் தொலைபேசியிலும் மெயிலிலும் முகப்புத்தகத்திலும் வாழ்த்தினார்கள் . தோழி ரேவதி தன் வலையில் பதிவொன்றிட்டு தன் அன்பினை வெளிப்படுத்தினார். அவருக்கும் வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
மேலும் தேனி மற்றும் ஆண்டிபட்டி இன்ஸ்பெக்டர்கள் , தேனி டி எஸ் பி , ஆண்டிபட்டி டி எஸ் பி , கோவில்பட்டி டி எஸ் பி மற்றும் ஏராளமான காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு திருமணத்தை சிறப்பித்தனர் . மேலும் கவிஞர் ஞானபாரதி அவர்களும் கலந்து கொண்டு திருமணத்தை சிறப்பித்தார்.
அப்பா மற்றும் உறவினர்கள் எவ்வளவோ சொல்லியும் திருமணத்திற்க்கு கோட் சூட் அணிந்து கொள்ளவில்லை ..எனக்கு பட்டுவேஷ்டி பட்டுசட்டை அணிந்திருப்பதே பிடித்திருந்தது...
திருமணத்திற்க்கு பிறகொரு நாள் நான் தூங்கி கொண்டிருந்த பொழுது என் கையில் POOH கார்ட்டூனை வரைந்திருக்கிறாள். உடலிலும் முகத்திலும் ஓவியம் வரையும் கலையும் கற்றிருக்கிறாள்.இந்த கார்ட்டூனை பற்றி தெரியாதவர்கள் இந்த பதிவை படித்திடலாம்... என்ன பார்க்குறீங்க? ஆமா ஆமா பெட் கவர்லயும் அந்த கார்ட்டூன்தான் அவ்வ்வ் ...
ப்ரியமுடன் வசந்த்..

மாங்கல்யம் தந்துனானே....
என்னுடைய நட்புகள்....
கார்த்திகேய பாண்டியனுடன்..
அப்பா மற்றும் உறவினர்கள் எவ்வளவோ சொல்லியும் திருமணத்திற்க்கு கோட் சூட் அணிந்து கொள்ளவில்லை ..எனக்கு பட்டுவேஷ்டி பட்டுசட்டை அணிந்திருப்பதே பிடித்திருந்தது...
திருமணம் முடிந்து வேறொரு நாள் வைகை அணைக்கு சென்றிருந்த பொழுது எடுத்த புகைப்படம்..
ஜோவின் கலைத்திறன்...
நான் சொல்லித்தருகிறேன் கவிதை எழுதிப்பழகு என்றேன் ஒருமுறை, இன்னொருமுறை இல்லை இல்லை நீயே என் மீதான காதலில் கவிதை எழுதிவிடுவாய் என்றேன் இரண்டையும் வைத்து கார்ட்டூன் ஒன்று வரைந்திருக்கிறாள்
என்னை மாதிரி வரைந்தாளாம் அவ்வ்...
முதன்முறை அவளைப்பார்க்க அவள் ஊருக்கு சென்றபொழுது கிளியூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற வாசகத்துடன் கூடிய அவளே செய்த பொக்கேவை கொடுத்தாள்.. கிளியூர்ன்னா என்னாவாம்?கிளியூர் படிச்சீங்கன்னா புரியும்..
திருமணத்திற்க்கு பிறகொரு நாள் நான் தூங்கி கொண்டிருந்த பொழுது என் கையில் POOH கார்ட்டூனை வரைந்திருக்கிறாள். உடலிலும் முகத்திலும் ஓவியம் வரையும் கலையும் கற்றிருக்கிறாள்.இந்த கார்ட்டூனை பற்றி தெரியாதவர்கள் இந்த பதிவை படித்திடலாம்... என்ன பார்க்குறீங்க? ஆமா ஆமா பெட் கவர்லயும் அந்த கார்ட்டூன்தான் அவ்வ்வ் ...
திருமணத்திற்க்கு முதல்நாள் ஃபேசியல் பண்ணும்போது எடுத்தது த்ருஷ்டிக்கு ஹிஹிஹி...பயந்துடாதீக...
24 comments:
மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ. வாழ்க பல்லாண்டு கவியும் சுவையும் போல.
ஹேய் வசந்த், வாழ்த்துகள். புகைப்படங்கள் அருமை. நீடூழி நீங்கள் இருவரும் வாழ வேண்டும்.
அனுஜன்யா
வாழக! நலமுடன்!
வாழ்க பல்லாண்டு!
புலவர் சா இராமாநுசம்
புகைப்படங்கள் அருமை! மனமார்ந்த வாழ்த்துக்கள்! :)
வாழ்த்துகள்...முதல்ல தேனிலவு இதெல்லாம் முடிங்க பாஸ்...அப்புறம் பொறுமையா வேலை தேடுவோம்...
வாழ்த்துகள்...முதல்ல தேனிலவு இதெல்லாம் முடிங்க பாஸ்...அப்புறம் பொறுமையா வேலை தேடுவோம்...
மனம் நிறைய மகிழ்ச்சி தொற்றிக்கொண்டது உன் பதிவை பார்க்கையில்,அதிலும் திருமண புகைப்படங்கள் நிறைந்த இந்த அப்டேட் இரட்டிப்பு சந்தோஷத்தை தந்தது வசந்த்... என்றைக்கும் மனமொத்த தம்பதியராய் நீவிர் இருப்பீர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை...அத்துணை புகைப்படமும் கொள்ளை அழகு, அது என்ன கடைசி போட்டா ஒஹ கண் திருஷ்டி, ரைட்டு நீ கிளப்பு, இந்த மகிழ்ச்சி எப்போதும் உங்களுக்கு நீடித்து இருக்க, அன்பெனும் ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன், வாழ்த்துக்கள் நண்பா :)
அன்பு வசந்த், திருமண வாழ்த்துகள்.
நல்ல வேலை கிடைக்கும்.
புகைப்படங்கள் அனைத்தும் சூப்பர். தங்கள் மனைவின் கலை உணர்வை ரசிக்கிறேன். அன்பு மலர இல்வாழ்வு சிறக்கட்டும்.
இனிய திருமண வாழ்த்துகள் வசந்த்:)! அருமையான பகிர்வு.
மனமார்ந்த வாழ்த்துகள்.....
இனிய திருமண வாழ்த்துகள் வசந்த்..
ஜோடிப்பொருத்தம் பிரமாதம்.. அம்மாட்ட சொல்லி திருஷ்டி சுத்திப் போடுங்க.
வசந்தோட வசந்தியின் ஆர்ட்டும் ஜூப்பரு :-)
அக்காவும் நீங்களும் பிரமாதமான பொருத்தம். உங்கள் சிந்தனைக்கு ஒரு ஓவியரும் கிடைத்துவிட்டார். ஜாடிக்கேற்ற மூடியாக வாழ்க பல்லாண்டு
வாழ்த்துகள் வசந்த்.....
Greetings.. --for happy married life..
&
Best wishes for getting a job in India.. as per your parents' & wife's wishes..
வாழ்த்துகள் வசந்த்!
வசந்து...சந்தோஷமாயிருக்கு பதிவும் படங்களும் கண்டு.திருஷ்டி சுத்திப்போடுங்கோ.ஜோ....உங்களுக்கும் நான் ஹலோ சொல்லிக்கொள்கிறேன்.
இரண்டு தரம் போன் பண்ணி தாழம்பூவே வாசம் வீசு பாட்டு மட்டுமே கேட்க முடிஞ்சுது.
உங்கள் திருமணத்திறகு அடுத்தநாள் இலண்டன் ஐபிசி வானொலியில் ப்ரியமுடன் வசந்த் ன் சில காதல் கவிதைகள் ஒலிபரப்பி பாடல்கள் போட்டார்கள்.நான் அந்தக் கவிதைப்பக்கத்தில் உடனேயே தெரிவித்திருந்தேன்.வானொலிக்கும் தொலைபேசி எடுத்து நன்றியும் சொல்லியிருந்தேன்.அத்தனை சந்தோஷம் எனக்கு.
ஒருவருக்கொருவர் ஈடுகொடுக்கும் அழகான அன்பான ஜோடி.என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் வசந்துக்கும் ஜோவுக்கும் !
Congrates appu!!!1
இல்லற வாழ்க்கை என்றுமே இனிமையாய் அமைந்திட வாழ்த்துகள்...!
இனிய திருமண வாழ்த்துகள் வசந்த்..பூங்கொத்தும்!!
வாழ்த்துகள் சகோ
இன்றைய பதிவு நான்கு சமூக வலைத்தளங்கள் ஒரே விட்ஜெட்டில்
வாழ்க வளமுடன்....வாழ்த்துகள் வசந்த். ஜனவரியில் சென்னையில் ஒரு புதிய வேலையில் இணையப் போவதாகச் சொல்லியிருந்த ஞாபகம். அது என்னாச்சு.... விரைவில் நல்ல வேலையில் அமர வாழ்த்துகள்.
இருவர் துவங்கும் வாழ்வு இனிமையாய் அமைந்திட வாழ்த்துக்கள் மாப்ஸ் ....
(மாப்ஸ் நான் கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்)
வாழ்த்துகள் வசந்த்..! இப்போதுதான் பதிவைப் பார்த்தேன். காலதாமதம் என்றாலும் வாழ்த்துவது எங்கள் கடமையல்லவா? இல்லற வாழ்வில் செழித்தோங்க, என்றும் வாழ்வு இனிமையாய் இருக்க என்னுடைய வாழ்த்துகள்...!!
தங்களது துணைவியார் வரைந்த படங்களும் நன்றாக இருந்தது. அவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவியுங்கள்..!
Post a Comment