- இந்தியால இருந்து கத்தார்க்கு விமானத்துல வரும்போது மேகக்கூட்டத்துக்கிட்ட நான் எடுத்த பேட்டி.......
நான்: ஏன் நீங்க எல்லாருமே ஒரே உயரத்துல பறக்குறீங்க?
மேகம்:எங்களுக்குள்ள உயர்ந்த ஜாதி ,தாழ்ந்த ஜாதி கிடையாது அதான் எல்லாரும் இவ்வளவு உயரத்துல பறக்குறோம்.....
நான்:ஏன் நீங்க ஒரே இடத்துல நிக்காம போய்ட்டே இருக்கீங்க?
மேகம்:என்ன இப்படி கேட்டுட்டீங்க காசு பணம் சேக்குறதுக்காக ஓடல எங்கயாவது ஒரு நல்ல மனுஷன் இருக்கானான்னு தேடுவோம் கிடைச்சுட்டான்னு வச்சுக்கங்களேன் நாங்க எல்லாரும் சேர்ந்து கும்மியடிச்சுடுவோம்ல மழையா....
நான்:ஏன் நீங்க எல்லாம் ஒரே வெள்ளைக்கலரா இருக்கீங்க?
மேகம்:கருப்பு,வெள்ளைன்ற பேதம் எங்களுக்குள்ள வந்துடக்கூடாதுன்னுதான்..கோபம் வந்தா,சந்தோசம் வந்தா மட்டும் சாம்பல் கலரா மாறிடுவோம்...
நான்:ஏன் நீங்க அங்க ஒருத்தர் இங்க ஒருத்தர்ன்னு ஒவ்வொரு வடிவத்துல சிதறி சிதறி கிடக்குறீங்க?
மேகம்: நாங்க ஒண்ணும் உங்கள மாதிரியில்ல வேற வேற வடிவமா இருந்தாலும் ,சிறியவடிவமா இருந்தாலும் பெரிய வடிவமா இருந்தாலும் ஒருத்தருக்கொருத்தர் கைகோர்த்து ஒண்ணுக்குள்ள ஒண்ணாயிடுவோம்.
நான்:அப்பறம் இவ்வளவு பெரிய விமானம் உங்கள கிழிச்சுட்டுப்போகுதே உங்களுக்கு இரத்தமோ,அழுகையோ வராதா?
மேகம்:ஆமா இரத்தம் இருந்தாத்தானே வர்றதுக்கு எங்களுக்கு இரத்தமே கிடையாது ஏன்னா? அதுலயும் பல குரூப் இருக்குறதால!...எதுக்கு அழுவணும்? நாங்கதான் கிழிஞ்சாலும் உடனே சேர்ந்துடுவோமே!...
நான் : அப்போ அப்போ நிலாவ மறைச்சுக்கிறீங்களே ஏன்?
மேகம்: மனுஷங்களான உங்க கண்ணு பட்டு நிலாவுக்கு சேதாரம் ஆகிவிடகூடாதுன்னுதான்...
நான்:ஏன் நீங்க அப்போ அப்போ ப்ரவுன் கலரா மாறிடுறீங்க?
மேகம்:எல்லாம் உங்க தயவுதான் நீங்க தான் வித விதமா கெமிக்கல் கல்ந்து கட்டி விடுறீங்கள காத்துல..மழைவிழும்போது கூட மாறுவோம்...
நான்:கடைசியா ஒரு கேள்வி, நீங்க ஏன் தரையில பறக்க மாட்டேன்றீங்க?எப்போ தரைக்கு வருவீங்க?
மேகம்: நீங்கதான் எல்லா இடத்தையும் பட்டா போட்டுட்டீங்களே! நாங்க தரைக்கு வர்றதா சான்ஸே இல்ல நீங்க எல்லாம் என்னைக்கு ஒருத்தருக்கொருத்தர் அடிச்சுக்கிடாம விட்டுக்கொடுத்து,இன மொழி வேறுபாடு இல்லாம ,இயற்க்கை வளங்களை அழிக்காம ஒண்ணா கும்மி அடிக்கிறீங்களோ அன்னைக்குத்தான் நான் தரையில் மிதப்பேன்....என்னையும் மதிச்சு பேட்டி எடுத்ததுக்கு மிக்க நன்றி நண்பரே.....
நான்:மிக்க நன்றி மேகக்கூட்டங்களே உங்கள் ஆசை விரைவில் நிறைவேற இறைவனை பிரார்த்திக்கொள்கிறேன்....
57 comments:
நல்ல பதிவு!
மேகத்தை வைத்து பல செய்திகளையும் பதிவு செய்துள்ளீர்கள்.. நல்ல சிந்தனை.
நல்ல பதிவு!
மேகத்தை வைத்து பல செய்திகளையும் பதிவு செய்துள்ளீர்கள்.. நல்ல சிந்தனை.
நல்லா இருக்குங்க...
//ச.செந்தில்வேலன் said...
நல்ல பதிவு!
//
நல்ல இடுகை!
//ஏன் நீங்க எல்லாம் ஒரே வெள்ளைக்கலரா இருக்கீங்க?
//
வெள்ளை வேஸ்ட்:
கருப்புதான் மழை கொடுக்கும்
//நாங்கதான் கிழிஞ்சாலும் உடனே சேர்ந்துடுவோம்ல!...//
அடடே...,
எப்படி தல.., தூங்கும்போது கூட சிந்திப்புதானா?
//நீங்கதான் எல்லா இடத்தையும் பட்டா போட்டுட்டீங்களே! //
ஏதாவது புரட்சிக் கூட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா..?
ஆஹா எப்படியும் பேட்டி எடுக்கலாமேன்னு இப்பதான் எனக்குத்தெரியும்.....
அடுத்து யார பேட்டி எடுக்கிறதா உத்தேசம்.....
நல்ல கற்பனை
பதிவு அருமை. சில திருத்தங்கள். மேகங்கள் கருமையாய் இருப்பதும் உண்டு. மற்றபடி நான் ஆச்சரியப்படுவது என்னவென்றால் இது போன்ற பதிவு எழுதுவதற்கு ஒரு இளமையான மனமும் நிதானமான சிந்தனைகளும் தேவை. அது உங்களுக்கு சாத்தியப்பட்டிருக்கிறது. அருமை. தொடர்ந்து எழுதுங்கள்.
பதிவு அருமை. சில திருத்தங்கள். மேகங்கள் கருமையாய் இருப்பதும் உண்டு. மற்றபடி நான் ஆச்சரியப்படுவது என்னவென்றால் இது போன்ற பதிவு எழுதுவதற்கு ஒரு இளமையான மனமும் நிதானமான சிந்தனைகளும் தேவை. அது உங்களுக்கு சாத்தியப்பட்டிருக்கிறது. அருமை. தொடர்ந்து எழுதுங்கள்.
//வெள்ளை மேகம் வண்ணம் மாறி,
வந்தால் தானே பெய்யும் மாரி//
வாரே..வாரே..வா...
//வெள்ளை மேகம் வண்ணம் மாறி,
வந்தால் தானே பெய்யும் மாரி//
வாரே..வாரே..வா...
அடுத்தது நிலா கிட்ட பேட்டி எடுப்பீங்களா?
யோவ்... அந்த நிலா இல்ல.. இது வேற நிலா!!
வழக்கம்போல் வித்தியாசமான பதிவு நல்ல கருத்துக்களுடன்.
Super..
நல்ல சிந்தனை வஸந்த்
அதுவும் பிரியத்தோடு ...
வஸந்த் வித்தியாசமான சிந்தனை & கேள்விகளும் பதிலும்
அடுத்து என்னா பாலைவனம் பதில் சொல்லப்போகுதா...
வசந்த்...வித்யாசமான பேட்டித்தான் மேகத்தோட, மத்தவங்க மாதிரி பக்கத்திலுருக்கும் பயனிகளுடன் ஞானிமாதிரி மொக்கைப்போடாமே, பேசஞ்சர் கூட பேஸ்ட் போடாமே....
சமூகத்தின் அவலங்களை நான் அலசும் கோணம் வேறு..ஆனால் உங்கள் பாணி அதிலும் அசத்தல் வசந்த்....ஆமா உண்மையாகவே வியப்பாக உள்ளது இதையெல்லாம் கூடவா படங்களை வைத்து வார்த்தைகளை அமைத்து வசந்த்க்குன்னு ஒரு ஸ்டைல் வெல்டண் கருத்துக்கள் அனைத்தும் முத்துக்கள்..ஆம் பின்பற்ற தொடங்கினால் மேம்படும் சமுதாயம்...( ஒரு விஷயம் இப்ப எல்லாம் நீங்க விஜய் படம் போடுவதில்லையாம் உங்க ப்லாக்ல என் மகள் காரணம் கேட்க சொன்னாங்க அட்லீஸ்ட் மெயிலாவது பண்ணிடு வசந்த்)
இப்போது எல்லாம் உங்கள் எழுத்து அதன் வடிவம் நடை என எல்லாம் சிறப்பாக இருக்கிறது ஒரு இளைஞனின் சமூக சிந்தனை வியப்பில் ஆழ்த்துகிறது வாழ்த்துக்கள் வசந்த்...
ப்ளைட்டுல போகும் போது பேட்டி எடுத்த்டிங்களா.
சூப்பர்.
அடுத்து சூரியனா? பாத்துங்க சுமோ வரப்போகுது..
என்னமா யோசிக்கிறாங்க.. இதான் மல்லாக்க படுத்து வானத்தை பாத்து யோசிக்கிறதோ?
நல்லா இருக்கு உங்க பேட்டி..
பக்கத்துல நிக்கிற பிலிப்பினோ ஏர் ஹொஸ்றஸை விட்டிட்டு எங்கோ கிடக்கிற மேகத்தை பாத்துட்டு இருந்தீங்களா?? ஜன்னல் சீட்டு போல இருக்கு,..
கத்தார்ல எங்க? நானும் இங்கதான் இருக்கேன்,..
அண்ணே சூப்பர்னே ,,
நல்லா ஷாக் குடுத்தேனே . இன்னும் எத்தனை மேக போட்டி போட்டாலும் இந்த கலிசட பயலுகள திருத்த முடியாதுனே,,,
//ச.செந்தில்வேலன் said...
நல்ல பதிவு!
மேகத்தை வைத்து பல செய்திகளையும் பதிவு செய்துள்ளீர்கள்.. நல்ல சிந்தனை.//
நன்றி செந்தில் வாழ்த்துக்கும் வருகைக்கும்
//
பழமைபேசி said...
நல்லா இருக்குங்க... //
வாங்க சார்
//SUREஷ் (பழனியிலிருந்து) said...
//நாங்கதான் கிழிஞ்சாலும் உடனே சேர்ந்துடுவோம்ல!...//
அடடே...,
எப்படி தல.., தூங்கும்போது கூட சிந்திப்புதானா?//
சிந்திக்க வைக்கிறாய்ங்க தல நன்றி
// சந்ரு said...
ஆஹா எப்படியும் பேட்டி எடுக்கலாமேன்னு இப்பதான் எனக்குத்தெரியும்.....
அடுத்து யார பேட்டி எடுக்கிறதா உத்தேசம்.....//
பேட்டி எடுக்க நான் ரெடி பேட்டி கொடுக்க நீங்க ரெடியா?
நன்றி ச ந் ரு
// KISHORE said...
நல்ல கற்பனை//
நன்றி கிஷோர் தொடர் வருகைக்கும் கருத்துக்களுக்கும்
அருமையான அர்த்தமுள்ள பதிவு!
// VISA said...
பதிவு அருமை. சில திருத்தங்கள். மேகங்கள் கருமையாய் இருப்பதும் உண்டு. மற்றபடி நான் ஆச்சரியப்படுவது என்னவென்றால் இது போன்ற பதிவு எழுதுவதற்கு ஒரு இளமையான மனமும் நிதானமான சிந்தனைகளும் தேவை. அது உங்களுக்கு சாத்தியப்பட்டிருக்கிறது. அருமை. தொடர்ந்து எழுதுங்கள்.//
ஹய்யா மனசு குதிக்குதுங்க வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி விசா
// அப்பாவி முரு said...
//வெள்ளை மேகம் வண்ணம் மாறி,
வந்தால் தானே பெய்யும் மாரி//
வாரே..வாரே..வா...//
கவித சூப்பர்ப் நன்றி முரு
// SUREஷ் (பழனியிலிருந்து) said...
//நீங்கதான் எல்லா இடத்தையும் பட்டா போட்டுட்டீங்களே! //
ஏதாவது புரட்சிக் கூட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா..?//
புரட்சியா அப்பிடின்னா?
எதோ எனக்கு தோணுச்ச்சு
அப்பிடியெல்லாம் வதந்திய கெளப்பாதீங்க தல தூக்கி என்ன உள்ள வச்சுடுவாய்ங்க,,,,,,
//கலையரசன் said...
அடுத்தது நிலா கிட்ட பேட்டி எடுப்பீங்களா?
யோவ்... அந்த நிலா இல்ல.. இது வேற நிலா!!//
உங்க தலைவி(தி)யப்பத்தியா?
// S.A. நவாஸுதீன் said...
வழக்கம்போல் வித்தியாசமான பதிவு நல்ல கருத்துக்களுடன்.//
நன்றி நவாஸ்
// வினோத்கெளதம் said...
Super..//
நன்றி வினோத்
// நட்புடன் ஜமால் said...
நல்ல சிந்தனை வஸந்த்
அதுவும் பிரியத்தோடு ...//
நன்றி ஜமால் அண்ணா
//அபுஅஃப்ஸர் said...
வஸந்த் வித்தியாசமான சிந்தனை & கேள்விகளும் பதிலும்
அடுத்து என்னா பாலைவனம் பதில் சொல்லப்போகுதா...//
இல்ல அபு உங்க கிட்டதான் பேட்டியெடுக்கலாம்ன்னு இருக்கேன்
// தமிழரசி said...
சமூகத்தின் அவலங்களை நான் அலசும் கோணம் வேறு..ஆனால் உங்கள் பாணி அதிலும் அசத்தல் வசந்த்....ஆமா உண்மையாகவே வியப்பாக உள்ளது இதையெல்லாம் கூடவா படங்களை வைத்து வார்த்தைகளை அமைத்து வசந்த்க்குன்னு ஒரு ஸ்டைல் வெல்டண் கருத்துக்கள் அனைத்தும் முத்துக்கள்..ஆம் பின்பற்ற தொடங்கினால் மேம்படும் சமுதாயம்...( ஒரு விஷயம் இப்ப எல்லாம் நீங்க விஜய் படம் போடுவதில்லையாம் உங்க ப்லாக்ல என் மகள் காரணம் கேட்க சொன்னாங்க அட்லீஸ்ட் மெயிலாவது பண்ணிடு வசந்த்)
இப்போது எல்லாம் உங்கள் எழுத்து அதன் வடிவம் நடை என எல்லாம் சிறப்பாக இருக்கிறது ஒரு இளைஞனின் சமூக சிந்தனை வியப்பில் ஆழ்த்துகிறது வாழ்த்துக்கள் வசந்த்...//
நன்றி இதைத்தவிர என்னால் என்ன சொல்லிவிட முடியும் தங்களுக்கு....
வாழ்த்துக்களுக்கும் நன்றி தமிழ்
சந்தியாவுக்கு விரைவில் விஜய் பற்றிய பதிவு வரும் சந்தியாவுக்காக...
//ஷஃபிக்ஸ் said...
வசந்த்...வித்யாசமான பேட்டித்தான் மேகத்தோட, மத்தவங்க மாதிரி பக்கத்திலுருக்கும் பயனிகளுடன் ஞானிமாதிரி மொக்கைப்போடாமே, பேசஞ்சர் கூட பேஸ்ட் போடாமே....//
நன்றி ஷஃபி
// அக்பர் said...
ப்ளைட்டுல போகும் போது பேட்டி எடுத்த்டிங்களா.
சூப்பர்.//
வாங்க அக்பர்
//குறை ஒன்றும் இல்லை !!! said...
அடுத்து சூரியனா? பாத்துங்க சுமோ வரப்போகுது..
என்னமா யோசிக்கிறாங்க.. இதான் மல்லாக்க படுத்து வானத்தை பாத்து யோசிக்கிறதோ?
நல்லா இருக்கு உங்க பேட்டி..//
வாங்க குறை ஒன்றும் இல்லை
சூரியன் கிட்ட நெருங்க முடியாது தான் ஆனாலும் பேட்டி எடுப்பேன்....
// jothi said...
பக்கத்துல நிக்கிற பிலிப்பினோ ஏர் ஹொஸ்றஸை விட்டிட்டு எங்கோ கிடக்கிற மேகத்தை பாத்துட்டு இருந்தீங்களா?? ஜன்னல் சீட்டு போல இருக்கு,..
கத்தார்ல எங்க? நானும் இங்கதான் இருக்கேன்,..//
கத்தார்ல வெஸ்ட்பே
நீங்க எங்க?
//சூரியன் said...
அண்ணே சூப்பர்னே ,,
நல்லா ஷாக் குடுத்தேனே . இன்னும் எத்தனை மேக போட்டி போட்டாலும் இந்த கலிசட பயலுகள திருத்த முடியாதுனே,,,//
திருந்துரதுக்கா பதிவு போடுறோம்
தெரிஞ்சுக்கிடுறதுக்காக
நன்றி சூரியன்
// SUMAZLA/சுமஜ்லா said...
அருமையான அர்த்தமுள்ள பதிவு!//
நன்றி சுமஜ்லா நீண்ட இடைவேளைக்கு பிறகு தங்கள் வருகைக்கு.....
எங்களையா பேட்டி எடுக்கப்போறிங்க.... ஆழ விடுங்கடா சாமி....
இளமை விகடனில் பிரியமுடன் வசந்தின் பதிவு.....மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது....வாழ்த்துக்கள்....
வித்தியாசமான பேட்டி.. (அது சரி....... கடலுக்குள் இருக்கும் மீன்களையும் ஒருக்க பேட்டி எடுங்களே அண்ணே.... கேட்கிரத்துக்கு ஆசையா இருக்கு.... லொள்..... )
வாழ்த்துக்கள்...
மகிழ்ச்சி. நான் தோஹாவ்ல - மன்சூரா,.. டைம கிடைச்சா போன் பண்ணுங்க,.. நம்ம பதிவர்கள் வேற யாரும் இங்க இருக்காங்களா??
3086721
சிந்திக்க வைத்த கற்பனை வசந்த்.. வாழ்த்துக்கள்
//சந்ரு said...
எங்களையா பேட்டி எடுக்கப்போறிங்க.... ஆழ விடுங்கடா சாமி....//
எங்க ஓடுனாலும் விடமாட்டேன்.....
// தமிழரசி said...
இளமை விகடனில் பிரியமுடன் வசந்தின் பதிவு.....மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது....வாழ்த்துக்கள்....//
என்னுடய பதிவு விகடனில் வந்ததுக்கு முதல்ல சந்தோஷ படுற ஆள் நீங்க தான் தமிழ் நன்றிகள் எழுத்தளவில் அல்ல
// சப்ராஸ் அபூ பக்கர் said...
வித்தியாசமான பேட்டி.. (அது சரி....... கடலுக்குள் இருக்கும் மீன்களையும் ஒருக்க பேட்டி எடுங்களே அண்ணே.... கேட்கிரத்துக்கு ஆசையா இருக்கு.... லொள்..... )//
வாங்க சஃப்ராஸ்
//jothi said...
மகிழ்ச்சி. நான் தோஹாவ்ல - மன்சூரா,.. டைம கிடைச்சா போன் பண்ணுங்க,.. நம்ம பதிவர்கள் வேற யாரும் இங்க இருக்காங்களா??//
கண்டிப்பா
// நாகா said...
சிந்திக்க வைத்த கற்பனை வசந்த்.. வாழ்த்துக்கள்//
thanks naagaa
// நாணல் said...
வாழ்த்துக்கள்...//
thanks naanal
Post a Comment