சும்மா கற்பனையா நம்ம நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் பேசிய பராசக்தி வசனத்தை ஒரு அனானி பேசுவதாக கற்பனையில் ...................
இந்த பதிவுலகம் விசித்திரம் நிறைந்த பல பதிவுகளை சந்தித்து இருக்கிறது,
புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது,
ஆகவே இப்பதிவு விசித்திரமல்ல,
பதிவிடும் நான் புதுமையான மனிதனுமல்ல,
வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான்.
பதிவுகளிலே அனானியாய் பின்னூட்டமிட்டேன்,பிரபல பதிவர்களை திட்டினேன்
குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்.
நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று,
இல்லை நிச்சயமாக இல்லை. பதிவுகளிலே அனானியாய் பின்னூட்டமிட்டேன்.
பதிவு நன்றாக இல்லை என்பதற்காக அல்ல. பதிவுலகம் பிரபல பதிவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக. பிரபல பதிவர்களை திட்டினேன் அவர் பிரபலம் என்பதற்காக அல்ல. பதிவு பகல் வேஷமாகி விட்டதைக் கண்டிப்பதற்காக.
உனக்கேன் இவ்வளவு அக்கறை, பதிவுலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் – அதைப் போல.
என்னைஅனானி, அனானி என்கிறார்களே, இந்த அனானியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நிடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள பதிவுகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். பாட்டொலிக்கும் விட்ஜெட்கள் இல்லை என் பதிவில், படங்களுக்கு பாம்புகள் நெளிந்திருக்கின்றன. நல்லவர்களை தீண்டியதில்லை நான். ஆனால் தீயவர்களை தீண்டியிருக்கிறேன். கேளுங்கள் என் கதையை! பதிவர்களே! தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.
தமிழ்நாட்டிலே இத்திருவிடத்திலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு. தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? கத்தார்! அது லேப்டாப் வாங்க உதவியது. என்னை பதிவன் ஆக்கியது. அறிவை வளர்க்க நல்ல பதிவுகளை காண வந்தேன். மோசடி பதிவுகளில் ஈடுபட்டு இதோ குற்றவாளிக் கூண்டிலே உங்கள் முன் நிற்கிறாரே இந்த பிரபலபதிவர், இவர் வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன். நேரத்தை பறிகொடுத்தேன். பின்னூட்டங்களை எதிர்பார்த்து மெலிந்தேன் நலிந்தேன், கடைசியில் பைத்தியமாக மாறினேன்.
அன்று காண வந்த பதிவை கண்டேன். நல்ல எண்ணமற்ற பதிவாக. ஆம் , பதிவின் பெயரோ முட்டை தோசை. நல்ல சாப்பாட்டின் பெயர். ஆனால் பதிவிலே விசயமில்லை. நன்றாக இருந்த பதிவுலகம் சீரழிந்துவிட்டது. கையில் கீபோர்ட். கண்களிலே காமம். பலரும் அந்த சூடான முட்டை தோசையை தேடினார்கள்,நானோ சுவையான முட்டை தோசையை தேடினேன்.
தோசைக்கு ஓட்டு போட்டனர் பலர். அவர்களிலே காளையர் சிலர் அந்த பதிவரின் பதிவில் உள்ள படத்தை கேட்டனர். பின்னூட்ட வழக்கிலே ஈடுபட்டு உங்கள் முன் நிற்கிறானே இக்கொடியவன் வேணு, இவன் பகட்டாக இந்த பதிவிற்க்கு பின்னூட்டமிட முயன்றான். நானும் ஆபாச பின்னூட்டம் போட்டிருந்தால் முட்டைதோசை அப்போதே குப்பைக்கு போயிருக்கும்.
புதிய பதிவர்கள் தோசைக்கு பின்னூட்டட்டமிட முன்வந்தார்கள். பிரதி உபகாரமாக அவர்கள் பதிவுக்கும் பின்னூட்டம் கேட்டனர். அதில் தலையானவன் இந்த சோப்பு.முட்டை தோசையில் உள்ளது உண்மையான ஜோக்கான்னு கேட்டிருக்கிறான் – பிரபலபதிவரின் பெயரால்,நல்ல மனசுக்காரரின் பெயரால். அவர் பதிவுலகத்தில் ஏதாவது எழுதியபடியாவது இருந்திருப்பார். அவரை பதிவுலகை விட்டு போகத்தூண்டியது இந்த சோப்புதான். தன் வலைப்பூவை இரக்கமற்ற பதிவுலகத்தில் விட்டுச் செல்ல அவர் விரும்பவில்லை. தன் வலைப்பூ ஆதரவற்றுத் துடித்துச் சாவதைக் காண அவர் விரும்பவில்லை. அவரே ஹேக்செய்துவிட்டார். விருப்பமானவர்களைக் விரட்டுவது விந்தையல்ல. உலக உத்தமர் காந்தி, அஹிம்சா மூர்த்தி ஜீவகாருண்ய சீலர், அவரே நோயால் துடித்துக் கொண்டிருந்த கன்று குட்டியைக் கொன்றுவிடச் சொல்லியிருக்கிறார், அது கஷ்டப்படுவதைக் காணச் சகிக்காமல். அந்த முறையைத்தான் கையாண்டிருக்கிறார் அவர். இது எப்படி குற்றமாகும்?
என் அபிமானம் விட்டுக் கொடுத்திருந்தால், ஜூனியர் விகடனில் ஒரு வாரம்,ஆனந்த விகடனில் ஒரு வாரம் – இடுகைகளை விலை கூறியிருந்தால், குங்குமத்தில் ஒரு வாரம் – இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை. இதைத்தானா இந்த பதிவுலகம் விரும்புகிறது?
பிரபலம் எனும் பகட்டு என் அபிமானத்தை மிரட்டியது. பதிவுகளை அடுத்தடுத்து இட்டார். ஓட்டு என் அபிமானத்தை துரத்தியது. மீண்டும் பதிவுகள் இட்டார் ஓட்டுபெட்டியில்லாமல். பின்னூட்டம் என் அபிமானத்தை பயமுறுத்தியது. எழுதினார் எழுதினார் எழுதிக்கொண்டே இருந்தார். அந்த பின்னூட்ட்டத்தைத் தடுத்திருக்கவேண்டும். காட்டத்தைப் போக்கியிருக்கவேண்டும். இன்று சட்டத்தை நீட்டுவோர். செய்தார்களா? எழுதவிட்டார்களா என் அபிமானத்தை?
அரசு வக்கீல்: குற்றவாளி யார் யார் பதிவுகளுக்கு பிரபலங்களாக மாறுகிறார்.
அனானி: யார் பதிவுமில்லை. அதுவும் என் பதிவுதான். என் அபிமானத்தின் பதிவு. பதிவுலகின் மானத்தை அழிக்க எண்ணிய மாபாவிக்கு புத்தி புகட்ட நான் அனானியாய் பின்னூட்டமிட்டது என்ன தவறு? நான் அனானியாக பின்னூட்டமிட்டது ஒரு குற்றம். வலைப்பூவை ஹேக் செய்தது ஒரு குற்றம். நான் பிரபலத்தை தாக்கியது ஒரு குற்றம். இத்தனைக் குற்றங்களுக்கும் யார் காரணம்?முட்டை தோசைக்கு அலையவிட்டது யார் குற்றம்? பதிவின் குற்றமா? அல்லது பிரபலமென்ற பெயரைச் சொல்லி ஃபாலோவர்ஸை வளர்க்கும் வீணர்களின் குற்றமா? ஆபாச பதிவெழுதும் கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்? பதிவர்களின்ன் குற்றமா? அல்லது பெண்பதிவருக்கு ஆபாச பின்னூட்டமிடும் வஞ்சகர்களின் குற்றமா? கடவுள் பெயரால் காம லீலைகள் நடத்தும் போலிப்பதிவர்ளை பதிவுலகிலே பதிவிட விட்டது யார் குற்றம்? கடவுளின் குற்றமா? அல்லது பிரபலங்களின் பெயரைச் சொல்லி காலட்சேபம் நடத்தும் கயவர்களின் குற்றமா? இக்குற்றங்கள் களையப்படும் வரை அனானிகளும் முட்டை தோசைகளும் குறையப்போவதில்லை. இதுதான் எங்கள் வாழ்க்கை பதிவுலகில் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்.
சாராயம்:இதில் எழுதியிருப்பது அனைத்தும் கற்பனையே யாரையும் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல.
தமிழிஷ்,தமிழ்மணத்தில் வாக்களிக்க மறவாதீர்கள்
40 comments:
எப்படி எல்லாம் சிந்திக்கிறாங்க...... ரொம்பவே அசத்திட்டிங்க.....
திவுலகின் மானத்தை அழிக்க எண்ணிய மாபாவிக்கு புத்தி புகட்ட நான் அனானியாய் பின்னூட்டமிட்டது என்ன தவறு? நான் அனானியாக பின்னூட்டமிட்டது ஒரு குற்றம். வலைப்பூவை ஹேக் செய்தது ஒரு குற்றம். நான் பிரபலத்தை தாக்கியது ஒரு குற்றம். இத்தனைக் குற்றங்களுக்கும் யார் காரணம்?முட்டை தோசைக்கு அலையவிட்டது யார் குற்றம்? பதிவின் குற்றமா? அல்லது பிரபலமென்ற பெயரைச் சொல்லி ஃபாலோவர்ஸை வளர்க்கும் வீணர்களின் குற்றமா?
போதுமா மனசுக்குள்ள இருக்கிறது எல்லாம் வெளியே வருது !!!!
ஆஹா!
இப்படி ஒரு வாய்ப்பு இருக்கா
அருமை வசந்த் ...
:-))
//என் அபிமானம் விட்டுக் கொடுத்திருந்தால், ஜூனியர் விகடனில் ஒரு வாரம்,ஆனந்த விகடனில் ஒரு வாரம் – இடுகைகளை விலை கூறியிருந்தால், குங்குமத்தில் ஒரு வாரம் – இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை. இதைத்தானா இந்த பதிவுலகம் விரும்புகிறது?//
ஏய் நீ யாரை சொல்ற?
//எப்படி எல்லாம் சிந்திக்கிறாங்க...... ரொம்பவே அசத்திட்டிங்க.....
//
ரீப்பீட்டே
எப்படியோ.. நல்லாயிருக்கு
வெரி குட் கிரியேட்டிவிட்டி. அதற்கேற்ப வசனங்கள் சுட சுட....பதிவு 100% ஹிட்.
எனது முட்டை தோசை தொடர்பான பதிவிற்கு எதிர்பதிவாக இது இருக்கமுடியாது.
அனல் பறக்கும் வசனங்கள் தல..,
முட்டைதோசை தொடர்பான பிற பதிவுகளை நான் பார்க்கவில்லை. தொடுப்புகள் கொடுக்குமாறு அனானிகளை கேட்டுக் கொள்கிறேன்
நானும் உங்களுக்கு நண்பர் விருது வழங்கியுள்ளேன்
என்ன சிந்தனை!!! தாங்கலை சாமி!!!
தொடர்ந்து அசத்துங்க!!
வசந்த்... அருமை...
//பின்னூட்டங்களை எதிர்பார்த்து மெலிந்தேன் நலிந்தேன், கடைசியில் பைத்தியமாக மாறினேன்//
முடியல.... என்னால ஆபிஸ்ல வேல பாக்க முடியல....
படிக்க படிக்க சிரிச்சு, சிரிச்சு...
ஆபிஸ் ஸ்டேப் எல்லாம் என்ன லூசு மாதிரி பாக்றாங்க வசந்த்
தயவுசெய்து இவ்வளவு காமெடியா எழுதற நிறுத்துங்க....
இல்லனா அழுதுறுவேன்....
அவ்வ்வ்வ்வ்வ்
அப்படினா அது நீதானா நண்பா...
******
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது பா... சூப்பர்..
நல்லா இருக்குங்கண்ணா... நல்ல கர்ப்பனைத் திறன் உங்களுக்கு!!
ஆனா எனக்கு தான் ஒரு சில எடத்துல புரியல!!;) நான் அனுப்பிய மின்னஞ்சல் வந்து சேர்ந்ததா உங்களுக்கு? நீங்க பதில் ஏதும் போடலியா... அதான் கேட்கிறேன்.. சரியான முகவரிக்கு தான் அனுப்பிநேனானு ஒரு சந்தேகம்! அவ்வளவு தான்...:)
யப்பா எத்தனை நாள் ஆனது வசனம் எழுத....சூப்பர் அப்பு...வாயும் வயிரும் வலி படிச்சி சிரிச்சி..ஹேய் வசந்த் எப்படியோ ரொம்ப நாள் ப்ளான் பண்ணி சொல்ல வேண்டியதை சொல்லிட்ட போல,,,,ஹஹ்ஹஹா செழிக்கட்டும் உன் கற்பனை வளம்...
தோசை ரொம்ப காரமா இருக்கு வசந்த்.
உள்குத்து இருக்கான்னு கேட்க முடியாது ஏன்னா கற்பனைன்னு முதலிலேயே சொல்லிட்டிங்க.
நல்லா வந்திருக்கு எழுத்து நடை. வாழ்த்துக்கள்.
நீங்க இவ்வளவு எழுதி நான் பார்த்ததில்லை.
நானும் இவ்வள பெரிய பின்னுட்டம் முன்பு உங்களுக்கு போட்டதில்லை.
பொறி பறக்குது வசந்த். என்னமா கலக்குறீங்க. ரொம்ப சந்தோசமா இருக்கு நண்பா. தொடர்ந்து அசத்துங்க.
அனானி கொந்தளிக்கிறார் உங்கள் பதிவில்
"அனானியை போட்டு வாங்கும் வசந்தா நீங்க
படம் போட்டு கலக்கும் வசந்தா நீங்க"
சும்மா அயன் படப்பாடல்
கலக்கல் நண்பா
மக்களே திருந்துங்கய்யா, திருந்துங்க, பாவம் இந்த பச்சப்புள்ள வஸந்த், என்னமா நொந்து நூடுல்ஸ் ஆயிருக்கு!!
nice..;-))))
சும்மா போட்டு தள்ளுறீங்க.. எப்படி இதெல்லாம் சொல்லவே இல்ல
ஓகோ! அப்ப நீதான் அந்த ஆப்பனா? ரைட்டு..
சூப்பர் வசந்த்,எப்படிலாம் யோசிக்கிறீங்க.ரொம்ப நேரம் வாய்விட்டு சிரித்தேன்.தொடர்ந்து எழுதி அசத்துங்க வசந்த்!!
டெம்ப்ளேட் அழகாயிருக்கு!!
saththama sirichchuttenga......
kalakkal......
utkkaanthu yosippeengalo??
கடின உழைப்பு தெரிகிறது. அருமையான வசனங்கள்
பராசக்தி சிவாஜிக்கு பெயர் வாங்கி தந்தது. இந்த இடுகை உங்களுக்கு பல வாக்குகளை வாங்கி தந்து இருக்கிறது
ஏலே ரொம்ப சூப்பர்லே ..சிரிப்பு அடக்க முடியல ...ஆபிஸ்ல முதலாளி முறைக்கிறான்...நல்ல கற்பனைவளம் ..
//இதில் எழுதியிருப்பது அனைத்தும் கற்பனையே யாரையும் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல.//
இதுவும் காமெடிதான...
அருமையான, சுவையான நகை...
இனிப்பும் காரமும் இணைந்து வயிரை ரணமாக்கியது.
நன்றிகள், கவலையை மறந்து சிரிக்க வைத்தமைக்கு.
ரொம்ப அசத்தலான பதிவு + வித்தியாசமான கற்பனை....
வாழ்த்துக்கள் வசந்த்.....
:-))
கலக்கல்!
நன்றி
சந்ரு
சக்தி (ஆசையில்லீங்க கற்பனைதான்)
ஜமால் அண்ணா
சரவண குமரன்
அப்பாவி முரு (யாரையோ)
நன்றி
ஜெட்லி
ஞான சேகரன்
விசா
தல சுரேஷ்
தேவா சார்
ராஜ்
நன்றி கதிர்
லோகு
பிரியங்கா
தமிழரசி
அக்பர்(இனிமேதான் ஆட்டம் ஆரம்பம்)
நவாஸூதீன்
ஸ்டார்ஜன்
நன்றி
ஷஃபி
கார்த்திகை பாண்டியன்
யோ(யோவ் கூப்புட்டு பாத்தேன் வித்தியாசமான பேரா இருக்கு)
கலை(பிளேட்ட மாத்துற பாத்தியா)
மேனகா மேடம்
ரசிகை
நன்றி
உழவன்
உடன்பிறப்பு
கிறுக்கன்
பாலாஜி
சஃப்ராஸ்
சென்ஷி
Very nice...I am also an old tamil blogger only...I dont like this blog world... But if i saw some good articles like this I am impressed.
Good work friend.
கலக்கீட்டிங்க வசந்த்.......
மிகவும் ரசித்துப் படித்தேன்....
சில உண்மைகளைக் கூட அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்........
படித்தேன் படித்தேன் படித்துக்கொண்டேயிருந்தேன்.. ஒரு சில இடத்தில் போரடித்தது நீண்ட பதிவுதான் காரணமா..
இருந்தாலும் நல்லாயிருந்தது ரசித்தேன் முழுதும், ஒரு கற்பனாசக்திக்கு ஒரு சல்யூட்..
Post a Comment