December 3, 2009

கிளிப்பேச்சைக்கேட்க வா

நான் ஒரு ஜோடிக்கிளி கண்டேன்..

கீச் கீச்சென்று அவைகள் பேசுவதை கேட்ட எனக்கோ அதை மொழி பெயர்க்க ஆசை

இதோ

கூண்டுக்குள்ளவே வாழ்க்கைன்னு இருக்குற ஒரு கிளி பொழுதொன்று சாயும் வேளையில் தன் கீச்சு குரலால் பாட ஆரம்பிச்சுச்சு இதை அந்த வழியா புதுசா போயிட்டு இருந்த ஒரு ஆங்கிளி கேட்டு அந்த குரல் மேல் ஒரு வித ஈர்ப்பு கொண்டு அந்த குரல் வந்த திசை நோக்கி தன் இறகையும் வாழ்க்கையையும் திருப்பியது..

அங்க போயி அந்த ஆங்கிளி அந்த பெங்கிளி ஒரு கூண்டுக்குள்ளாற அதோட முகமும் உடலும் தெரியாத மாதிரி அதன் கண்கள் மட்டும் தெரியுற மாதிரி அடஞ்சு போய் கிடக்குறத பார்த்து ரொம்பவும் மனசு கஷ்டப்பட்டு பெங்கிளிட்ட கேக்குது ஏன் இப்படி கூண்டுக்குள்ளவே வாழ்றீங்கன்னுச்சா அதுக்கு அந்த பெங்கிளி நான் இப்படி வாழ்றதுக்குன்னே படைக்கப்படலை ஒரு சில பாவிகளால் இப்படி என் வாழ்க்கை ஆகிவிட்டது..நானும் உங்களைப்போலவே என் ஆசையும் கனவும் தீர இறக்ககட்டி பறந்தவள்தான் பக்குவ வயது வந்ததும் என்னை மாதிரியே இருக்குற கூண்டுக்கிளியின் நிலை என் இனம் இப்படி கூண்டுக்குள்ளயே இருக்குன்னு நெஞ்சு கொதித்து அதற்க்காக வீறு கொண்டு எழுந்த போது பாவிகளின் பார்வை என் மீதும் விழுந்தது நானும் பெண் தானே முடியவில்லை அவர்களின் நயவஞ்சகத்தந்திரத்தில் விழ்ந்து சில காயமும் பட்டு இப்படி அடஞ்சு கிடக்கேன்னுச்சு

இதக்கேட்டதும் ஆங்கிளி வருத்தபட்டு ஏய் பெண்ணே நான் உன்னோடு சிறகு விரித்து இந்த உலகம் பூரா சிறகடித்து பறக்க ஆசைப்படுறேன் உன் அழகான குரல் கேட்டு வந்தேன் உன் அழகு முகம் காட்டமாட்டாயா என்னிடம்ன்னு கேட்டுச்சா அதக்கேட்டதும் பெங்கிளி சீய்ய்ய்ய்ன்னு வெட்க்கப்பட்டுட்டே நான் ஒன்றும் நீங்கள் நினைப்பது போல் இல்லை நான் ஒரு கூண்டுக்கிளி இப்படியே இருந்து வாழப்பழகிக்கிறேன்னுச்சா அதுக்கு அந்த ஆங்கிளி சொல்லுது நீ வரலைன்னா நான் இந்த இடம் விட்டு நகராமல் உன் ஆசை குரல் கேட்டுட்டே கடைசி வரைக்கும் இருந்துடுவேன்னுச்சு..

இதக்கேட்ட பெங்கிளி இவ்வளவு அன்பு இருக்கும் உங்களை அடைய கொடுத்து வைத்திருக்க வேண்டும் எனக்கு அந்த கொடுப்பினை இல்லை நான் சொல்வதை புரிந்து கொள்ளுங்கள் என்னைவிட அழகாய் ஒருத்தி இருப்பாள் உங்களுக்குன்னே நான் இப்படியே வாழணும்ன்னு ஆசைப்படுறேன்னுச்சு...

ஆங்கிளி பெங்கிளியிடம் கேக்குது பெண்ணே நீ இப்படி கூண்டுக்குள்ளே இருக்கோமே உனக்கு இந்த உலகத்தை உன் இறகை புதிய இளந்தளிர் போல் விரித்து சிறகடித்து
பறக்க ஆசையில்லையான்னு கேட்டுச்சா அதுக்கு அந்த பெங்கிளி சொல்லுச்சு எனக்கும் உங்களைப்போல் சிறகடித்து பறக்க ஆசைதான் ஆனால் என் இனம் பூரா இப்படி கூண்டுக்குள்ளே அடஞ்சு போய் கிடக்குறதுக்குன்னே படைக்கப்பட்டிருக்கிறோமேன்னுச்சு..


அதக்கேட்டதும் அந்த ஆங்கிளி சொல்லுச்சு நான் வேண்டுமென்றால் உன் சிறைக்கதவை திறந்து விடுகிறேன்னுச்சு..அதுக்கு அந்த பெங்கிளி சொல்லுது நான் இப்படியே வாழ்ந்து பழகிட்டேன் நான் இப்படியே இருந்துடுறதுதான் எனக்கும் உங்களுக்கும் நல்லதுன்னுச்சு..

இதுக்கேட்ட ஆங்கிளி கோபமா என்னை பிடிக்கலியா நான் அழகில்லையா என் கூட வர ஆசையில்லையான்னு கேட்டுச்சா அதுக்கு அந்த பெங்கிளி இவ்வளவு பாசம் அன்பா இருக்குற உங்களோட வர வாழ எனக்கு மட்டும் ஆசையில்லையா? அதை விட அன்பு நிறைய இருக்கு உங்கள் மேல ஆனால் கூண்டுக்கிளியாவே வாழ்ந்து பழகிட்ட எனக்கு என்னை சிறகடித்து பறந்து திரியும் உங்கள் இனம் ஏற்றுக்கொள்ளாது,இந்த உலகமும் அதை ஒற்றுக்கொள்ளாதுன்னுச்சு..

மிக கடுமையான கோபம் ஆங்கிளிக்கு ஏற்கனவே சிகப்பா இருக்கும் அதோட மூக்கு இன்னும் கொஞ்சம் சிவந்துடுச்சு நான் உலகத்துக்காக வாழ்றவனில்லைன்னும் எனக்காக எனக்கு பிடிச்ச மாதிரி வாழணும்ன்னு நினைக்கிறேன் எனக்கு மற்றவர்களின் விருப்பு வெறுப்பு அவசியமில்லை உனக்கு என் மேல் விருப்பம் இருந்தால் என்னுடன் வான்னுச்சா

அதுக்கு பெங்கிளி சொல்லுது ஒருதடவை சொன்னால் புரியாதா உங்களுக்கு நான் இப்படியே வாழ்ந்து பழகிட்டேன் இப்படியே இருந்துக்கிறேன் எப்பவும் என் மேல் இருக்கும் உங்க அன்பு போதும்ன்னுச்சு அதுக்கு ஆங்கிளி சொல்லுது சரி உனக்கு எப்ப விருப்பமிருக்கோ அப்போ ஒரு குரல் கொடு எப்போவும் உனக்காகாவே காத்திட்டு இருப்பேன்னுச்சு

பொறவு அந்த ஆங்கிளி தனக்கு கையில்லாம பிறந்தது வருத்தமா இருக்குன்னு சொல்லுச்சு ஏன்னு கேட்ட பெங்கிளிட்ட ஆங்கிளி சொல்லுது இவ்வளவு அன்பா இருக்குற உன் கை பிடித்து பால் போல் வெளித்த வான வீதியில் இருவரும் உலவர ஆசையா இருக்குன்னுச்சா அதுக்கு அந்த பெங்கிளி என்னைத்தான் அடச்சு வச்சுருக்காங்களேன்னுச்சு..

இல்லை நீயாத்தான் அடஞ்சுபோயிருக்க இப்போ நீ வருவியா வரமாட்டியான்னு ஆங்கிளி கேட்க முடியாதுன்னும் என்னைவிட்டு போய்டுங்கன்னும் பெங்கிளி அழுதுட்டே சொல்லுச்சு ஏன் அழுகிறாய்ன்னு பெங்கிளிட்ட ஆங்கிளி கேட்க ப்ச் உங்களால்தான்னு இவ்வளவு அன்பு இருக்கும் உங்களை பிரியனும்ன்னு நினைக்கும் போது அழமட்டும்தான் முடிகிறதுன்னுச்சு..

சரின்னு சொன்ன ஆங்கிளி அந்த பெங்கிளிட்ட பிரியா விடைபெற்று அந்த கூண்டுகிட்டயே திரும்புற வழியில அந்தப்பக்கமா வந்த ஒரு பெரிய லாரியில அடிபட்டு செத்துபோச்சு இதப்பார்த்துட்டு இருந்த பெங்கிளி இப்போவும் குரல் மட்டுமே கொடுத்துட்டு இருந்துச்சு கடைசீ வரைக்கும் அது வெளிய வரவேயில்லை அதன் கொள்கையையும்,கூண்டையும் விட்டு அப்போதான் எனக்கு , பெண்கள் கொள்கை பிடிமானம் மிக்கவர்கள் என்றும் எதற்காகவும் அதை விட்டுக்கொடுக்கமாட்டார்கள்ன்னும் புரிஞ்சது...