நித்யா 24 வயது திருமண வயதை அடைந்த பெண் இப்போ நடக்குற வரன் தேடல் அவளுக்கு சுத்தமா பிடிக்கலை போட்டோ பாத்து செலக்ட் பண்றதை விட சேலைக்கடைக்கு போய் பிடிச்ச சேலை எடுத்துகிடுற மாதிரி தனக்கு வரப்போற வரனையும் செலக்ட் பண்ணுற மாதிரி வரன் கடைன்னு ஒண்ணு இருந்தா எப்பிடியிருக்கும்?! என்ன எல்லாம் ஒண்ணுதானே காசு போட்டு வாங்குறோம் சரியான ஆளை தேர்ந்தெடுக்க வேணும்தானே அப்படியே அவள் நினைத்தது மாதிரியே வரன் கடை இருந்திருந்தால்..!!!
இனி வரன் கடைக்கு நித்யா போனதுபற்றிய கற்பனை சுவாரஸ்யங்கள்.....
அங்காடி உள்ளே நுழைந்ததும் அங்காடி உரிமையாளர் நித்யாவை வரவேற்று வாங்க மேடம் வாங்கன்னு சொல்லிட்டு கடைப்பையனிடம் அம்மாவை அந்த மணமகன் பிரிவுக்கு கூட்டிட்டு போயி என்னமாதிரி வேணும் எந்த விலையில் வேணும்ன்னு கேட்டு நல்லவரா பாத்து எடுத்துப்போடுடான்னு சொல்லி அடுத்துவந்த வாடிக்கையாளரை கவனிக்க போய்விட்டார்....
கடைப்பையன் நித்யாவை முதலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த எஞிசினியரு வரிசைக்கு கூடிட்டு போய் முதல்ல இருந்த ஒருத்தரை காட்டி மேடம் இவரு பெங்களூர்ல கம்ப்யூட்டர் எஞ்சினியரா இருக்காரு ரொம்ப சம்பளம் வாங்குறாரு இவரை வாங்குனா உங்களுக்கு ஒரு லேப்டாப்பும் இலவசமா தர்றோம்..மேட்சிங் சரியான்னு கூட நீங்க அந்த மேட்சிங் கண்ணாடில போய் பாத்துட்டு சொல்ல எங்க கடையில வசதியிருக்கு. இவரோட விலை 50 சவரன் நகை மட்டும்தான் தள்ளுபடி காலம்ன்றதுனால திருமண செலவை இவரே செய்துடுவார்...மெயிண்டெனன்ஸ் செலவு ஜாஸ்தி போக வர காரு,பைக்,இதெல்லாம் கொடுத்தாதான் ரொம்ப நாளைக்கு கூடவே வருவார்ன்னு கடைப்பையன் சொல்லவும் நித்யா அவரை மேட்சிங் பாத்துட்டு..மேட்சிங் சரியில்லப்பா அடுத்த ஆளக்காட்டு பாக்கலாம்ன்னு அடுத்த ஆளை நோக்கி போனாள்...
அடுத்து இருந்த எஞ்சினியரு வரிசையில யாரும் பிடிக்காமல் போகவே அதற்க்கு அடுத்து இருந்த டாக்டரு வரிசைக்கு கடைப்பையன் கூட்டிட்டு போயி முதல்ல இருந்த சிவப்பான கலர் டாக்டர காட்டிட்டு மேடம் இவரு டாக்டருக்கு படிச்சவரு அரசாங்க மருத்துவ மனையில இருக்காரு தனியாவும் ஆஸ்பத்திரி வச்சுருக்காரு உங்க கலருக்கு இவரு கொஞ்சம் மேட்ட்சிங் ஆவாரு பாருங்க இவரை வாங்கினா ஆயுள்முழுதும் இலவச மருத்துவத்துக்கான கூப்பன் கொடுக்குறோம்..இவரோட விலை 75 சவரன் நகை..ரொம்ப நாளைக்கு கூடவே வருவாரு ஏன்னா எந்த கெட்ட பழக்கமும் இல்லை..என்ன இவருக்கு மெயிண்டனன்ஸ் செலவுன்னு பார்த்தா ஒரே ஒரு 4 அடுக்கு நர்சிங் ஹோம் போதும்..அப்புறம் நீங்க கவலைப்பட வேண்டியதே இல்லை உங்களுக்கு தொல்லையே கொடுக்கமாட்டார்.
நித்யா ம்ஹ்ஹும்ன்னு உதடு பிதுக்கி வேண்டாம்பா விலை ஜாஸ்தியா இருக்கு அடுத்த ஆளக்காட்டுன்னு சொல்லவும்.கடைப்பையன் அடுத்து இருக்குற பிஸ்னெஸ்மேன் வரிசைக்கு கூட்டிட்டு போய் அதில இருந்த ஒருத்தரை காட்டி மேடம் இவரு ஊர்ல ரெண்டு பெரிய டிவி ஷோரூம் வச்சுருக்காரு நல்ல வசதி கை நிறைய சம்பாதிக்கிறாரு ஆள் கொஞ்சம் கலர்தான்னாலும் நீட்டானவரு குனிஞ்ச தலை நிமிராம இருப்பாரு என்ன கொஞ்சம் ஞாபக மறதி ஜாஸ்தி கொஞ்சம் நிறைய தண்ணியடிப்பார். இவரை நாங்க ஆடித்தள்ளுபடி விலையிலே கொடுக்கிறோம் இவரோட விலை 40 சவரன் நகை மட்டுமே...
யப்பா ஆளவிடுங்க சாமி அடுத்த ஆளை காட்டுங்கன்னு நித்யா தெரிச்சு ஓடிபோய் அடுத்த ஆளைப்பாக்க போக மேடம் இவருதான் எங்க கடையிலே ரொம்ப சீப்பா கிடைக்கிறவரு சொந்தமா லேத் மெசின் வச்சுருக்காரு தினம் 300 400 வருமானம் கருப்பானவரு உங்களுக்கு மேட்ச் ஆக மாட்டாரு அதிக நாளைக்கு கூடவே வருவாரு வீடு கூட சின்னதுதான் விலையும் ரொம்ப கம்மி இவரு வேணாம் மேடம்ன்னு சொல்ல விலைய சொல்லுப்பான்னு நித்யா கேக்க இவருக்கு விலைன்னு பாத்தா நீங்க என்ன கொடுக்குறீங்களோ அதையே வாங்கிகிடுவோம் ஒழிஞ்சது சனியன் ரொம்ப நாளா கடையில் இருக்கு போய் தொலைய மாட்டேன்னுதுன்னு வித்துடுறோம்...
நித்யா யோசனையில்....மூழ்கி அவரும் வேணாம்ன்னு போயிட்டாள்..
அவளும் இந்த காலத்து பெண் தானே...அவ மட்டும் விதி விலக்கா ஆணுக்கு நிகர் பெண் சரிசமம் வரதட்சிணைன்னு ஆண்கள் பேசறாங்க அழகுன்னு பெண்கள் பேசுறாங்க இருவரும் தராசுதட்டாய்...மனசு பாத்து யாரும் மணம் புரிவதில்லை ஏன்? திருமணம் எல்லாம் வியாபார சந்தையா மாறிட்டு இருக்கு ...(நோ சீரியஸ்)
98 comments:
இங்கு சிதறியிருப்பது அத்தனையும் கற்பனை என்பதை தவிர வேறொன்றுமில்லை.....
யாருக்குத்தெரியும். ஒருநாள் நடந்தாலும் நடக்கலாம்.
மனசு பாத்து யாரும் மணம் புரிவதில்லை ஏன்? திருமணம் எல்லாம் வியாபார சந்தையா மாறிட்டு இருக்கு ...(நோ சீரியஸ்) ....................எவ்வளவு பெரிய சீரியஸ் விஷயத்தை சிரிச்சிக்கிட்டே சொல்லிட்டீங்க. சூப்பர்!
சூப்பரோ சூப்பர்...
வருங்காலத்தில் நடந்தாலும் நடக்கலாம்.
மலிவு விலையில் மாப்பிள்ளைகள் !
பணத்தைக் கண்டதும் மனம் மாறிவிடுகிறது சிலசமயங்களில்.
என்றாலும் அங்கே சந்தோஷம் நிலைப்பதில்லை.
:-)
கலக்கல் கற்பனை மாப்ஸ்...நானும் கொஞ்சம் அந்த கற்பனைகுள்ள போய் பாத்தேன்...கடைகடையா ஏறி எறங்கி லாஸ்ட்டா ''ஒண்ணுமே பிடிக்கலன்னு பா ஒன்னு வாங்குன ஒன்னு ப்ரீ ஆபார் போடும் பொது பாத்துக்கலாம்...''
கூலா சொல்லிடுவாங்கலளோனு ?? பயமா இருக்கு மாப்ஸ்...
ஐயையோ நான் வரல இந்த ஆட்டத்துக்கு...ஆளவிடு...
தம்பி கல்யாணத்துக்கு ரெடியாயிட்டீங்க
;) ;) ;)
சூப்பர்...
அருமையான சிந்தனை தான். வரதட்சணைக்கு எதிராக எத்தனை பேசினாலும் மறைமுகமாக அது அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது.
நாம் என்னதான் வரதட்சனை பற்றி பேசினாலும் வரதட்சனை பிரட்சனை இருந்து கொண்டுதான் இருக்கிறது. நல்ல சிந்தனை வசந்த்.
நல்ல சிந்தனை....
நல்லா யோசிக்கிறீங்க வசந்த்.
விபரீதமான கற்பனை..
நடந்தாலும் வியப்பதற்கொன்றுமில்லை..
நன்றாக இருந்தது வசந்த்..
நல்ல கற்பனை
:-))
நல்லா சொன்ன.. (நோ காமெடி)
வசந்த் மச்சான்....
ஒரு சந்தேகம்,
நாடோடிகள் படத்துல வர்ற BANNER அரசியல்வாதிக்கு வாசகம் எழுத ஒரு குழு இருக்குறா மாதிரி...,
உங்களுக்கும் தினமும் என்ன பதிவு எழுதுறதுன்னு ஐடியா குடுக்க பத்து பேர் கொண்ட ஒரு குழு செயல் படுதாமே, உண்மையா ?
//அடித்து நொறுக்கப்பட்ட ஆடித் தள்ளுபடி விலைகள்//
ஹா ஹா....சூப்பரப்பு...
நடக்ககூடிய சாத்தியங்கள் உள்ளவை சூப்பர் கற்பனை.
கூடவே கஃல்ப்ல குப்ப கொட்றவங்களையும் கடையில் சேர்த்திருக்கலாம்.(ஊர்ல பொண்ணு கேட்டா தெரிச்சு ஓடறாங்க சகா)
கற்பனை நல்லாத்தான் இருக்குது. ஆனா, ஒருவேளை நிஜமாயிட்டா...ஆண்கள் பாவம்தான் :)
/மனசு பாத்து யாரும் மணம் புரிவதில்லை ஏன்? திருமணம் எல்லாம் வியாபார சந்தையா மாறிட்டு இருக்கு ...//
நல்ல கேள்வியும்,இடுகையும்...
வாவ் நல்ல அழகான கற்பனை( சீக்கிரம் நடக்கும்).........
இனி வரும் காலங்களில் வீதிகளில் நடக்கும் போது விளம்பர அட்டைகள் பாக்கலாம்....
"இங்கு மாப்பிள்ளை விற்பனைக்கு"
ரொம்ப சூப்பர் வசந்த். இது இனி நடந்தாலும் நடக்கும்.
நல்லா இருக்கு வசந்த் கற்பனை........!
பெண் சிசு கொலை...ஆண் பெண் விகிதம் சரிவு......
நீங்க சொல்ற மாதிரியே ஒரு நாள் நடந்தாலும் நடக்கலாம்...!
:-) :-)
ஆண்களை எல்லாம் ரெம்ப உயர்வான நிலைக்கு கொண்டு போயிட்டீங்க
இந்தப்பதிவுல் முற்றுப்புள்ளியே காணுமே பாஸ் :)
இஞ்சினியருக்கு 50 பவுன்.. டாக்டருக்கு 75 பவுன்...
பாஸ், எந்த காலத்துல இருக்கீங்க நீங்க? இப்பல்லாம் ஒரு மளிகைக்கடையில சேல்ஸ்மேனா இருக்கவங்க கூட இதுக்கு ஒத்துக்குறதில்ல!!
//seemangani said...
''ஒன்னு வாங்குன ஒன்னு ப்ரீ ஆபார் போடும் பொது பாத்துக்கலாம்...''//
ஒரு பொண்ணுக்கு மேலே இருக்க குடும்பத்துக்குக் கைகொடுக்கும் ஆஃபர்...
சுவாரஸ்யமாக இருக்கு வசந்த், நம்ம பயபுல்லைங்க இப்புடி ஆகிட்டாங்களே!!
பாஸு இப்பவே இதுதானே நடந்துகிட்டு இருக்கு.
நீங்க சொன்னது மாதிரி கொஞ்சம் வருஷத்துல வரலாம். அப்புறம் எந்த ரூம்ல உட்கார்ந்து யோசிக்கிறீங்கன்னு தெரியலை
//அப்புறம் எந்த ரூம்ல உட்கார்ந்து யோசிக்கிறீங்கன்னு தெரியலை//
அதேதான் பின்னோக்கி...
அந்த ரூம் அட்ரஸ் கொஞ்சம் குடுத்தார்னா, நாமளும் போய்உட்கார்ந்துட்டு வரலாம்.
- சிவன் (எ) தீபன்
வசந்த,
அதைவிட சீஃப்பா செகண்ட் ஹேண்ட் கடை ஓண்ணு வைக்கலாம்னு இருக்கேன்...
வசதி எப்படி....
மாப்பிள்ளைகள் எல்லாம் ...{காட்சிக்கு இருப்பவர்கள்}
எங்கோ படித்த மாதிரி...இருக்கிறது மாப்பிள்ளைகளே!
உஷார்!!
இந்தக் காலத்தில் இவ்வளவு சிரமமா??
ஆமாமா!! என் பேத்தியும் இப்படித்தான்
தெரிவு செய்து கட்டிக்கப் போறாளாம்!
அவ கூட்டாளிகிட்ட பேசினது....என்
கேட்காத காதில...கொஞ்சமாய் நுழைந்த
தகவல் அப்பு இது.
இப்படியாவது கன்னிகளைச் கரைசேர்கலாம்
என்று வசந்துத் தம்பி யோசனை சொன்னாலும்...
ஏட்டிக்கு போட்டி போடுதுங்களே இந்தப் பொம்மனாட்டிங்க....
Elei maapla...unnayellam tsunami vitrucheda......(machi...unaku tamilmanathla vota potu en kadamaya niraivetriten..vote pathalaina sollu ingana singaporela oru 40 kalla votukku naan erpaadu panren..namaku varalaaruthan mukkiyam.......)
நல்ல வேளை அதுபோல வருவதுக்கு முன்னே... எனக்கெல்லாம் கல்யாணம் முடிந்துவிட்டது... கற்பனை நல்லாயிருக்கு வசந்த்.
சூப்பர்
நல்ல ஐடியா . பக்கத்தில் பக்கத்தில் நிறையக் கடைகள் வரும்போது இன்னும் சீப் ஆகும்....
கடைக்காரர் 'இது சீப்தாம்மா' என்று சொல்லும் போது அந்த ஆணோ பெண்ணோ 'அப்போ ரெண்டாக் குடுங்க'ன்னு கேட்பாங்களோ..? பெண்ணுக்கும் கடை வைப்பாங்க இல்லே...
கல்யாணம் பற்றிய யோசனை வந்து கிலி பிடித்து விட்டது என்று நினைக்கிறேன். கவலைப் படாதேப்பா. நீ பிறக்கும் போதே உன் தலையில் எழுதியது தான் . ... நடக்கப் போகிறது. அதற்குப் போய் இப்படிப் பயப்பிடலாமோ!
Good presentation.
சரியான சவுக்கடி வசந்த் என்ன சொல்லி பாராட்டுவதென்றே தெரியவில்லை! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!!
வித்தியாசமான் கற்பனை
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள்
நல்ல அழகான கற்பனை.. ஆழமான கருத்துக்கள்! கலக்குங்க வசந்த்!
Nalla karpanai..
கடையில வேலை பார்க்கிறது யாரு
நல்ல கதையா இருக்கே வசந்த்
:-)))
நீங்க தப்பிச்சிட்டீங்க அப்டீங்கற தைரியம்???
கடசீல வந்தேன்னு மாப்ப என் கிட்ட குடுத்திடாதீங்க உபி..
கதை நல்லா இருக்கு..,
பாராட்டுக்கள்..,
மாப்பிள்ளையோ வாங்களையோ மாப்பிள்ளை. கூவி கூவி யாரோ விற்கிறாங்களாம். விற்கப்போறாங்களாம்..
பிரியமான சகோ கற்பனையானலும் செம நச்.
// ஸ்ரீ.கிருஷ்ணா said...
இங்கு சிதறியிருப்பது அத்தனையும் கற்பனை என்பதை தவிர வேறொன்றுமில்லை.....
//
கண்டிப்பா கற்பனைதான் ஸ்ரீகிருஷ்ணா
ஆனால் ஒரு நாள் நடக்கப்போகுது பாருங்க நன்றி கிருஷ்ணா..!
//சின்ன அம்மிணி said...
யாருக்குத்தெரியும். ஒருநாள் நடந்தாலும் நடக்கலாம்.
//
கண்டிப்பா நடக்கும் மேடம்
மிக்க நன்றி சின்ன அம்மிணி மேடம்!
// Chitra said...
மனசு பாத்து யாரும் மணம் புரிவதில்லை ஏன்? திருமணம் எல்லாம் வியாபார சந்தையா மாறிட்டு இருக்கு ...(நோ சீரியஸ்) ....................எவ்வளவு பெரிய சீரியஸ் விஷயத்தை சிரிச்சிக்கிட்டே சொல்லிட்டீங்க. சூப்பர்!
//
ம்ம் மிக்க நன்றி சித்ரா மேடம்
//இராகவன் நைஜிரியா said...
சூப்பரோ சூப்பர்...
வருங்காலத்தில் நடந்தாலும் நடக்கலாம்.
//
ஆமாண்ணா நடக்கத்தான் போவுது நாமலும் பாக்கத்தான் போறோம் அரவிந்த் பாவம் அவ்வ்வ்
நன்றி ராகவன் அண்ணா...!
//ஹேமா said...
மலிவு விலையில் மாப்பிள்ளைகள் !
பணத்தைக் கண்டதும் மனம் மாறிவிடுகிறது சிலசமயங்களில்.
என்றாலும் அங்கே சந்தோஷம் நிலைப்பதில்லை.
//
ஆமா ஹேம்ஸ்
பணந்தானே முக்கியமா ஆயிடுச்சு சந்தோசத்தை யார் பாக்குறாங்க
மிக்க நன்றி ஹேமா
//சந்தனமுல்லை said...
:-)
//
நன்றி சந்தனமுல்லை மேடம்..!
//seemangani said...
கலக்கல் கற்பனை மாப்ஸ்...நானும் கொஞ்சம் அந்த கற்பனைகுள்ள போய் பாத்தேன்...கடைகடையா ஏறி எறங்கி லாஸ்ட்டா ''ஒண்ணுமே பிடிக்கலன்னு பா ஒன்னு வாங்குன ஒன்னு ப்ரீ ஆபார் போடும் பொது பாத்துக்கலாம்...''
கூலா சொல்லிடுவாங்கலளோனு ?? பயமா இருக்கு மாப்ஸ்...
ஐயையோ நான் வரல இந்த ஆட்டத்துக்கு...ஆளவிடு...
//
ஹ ஹ ஹா
பயப்படாதீங்க மாப்ஸ்
நன்றி சீமான் கனி
// நட்புடன் ஜமால் said...
தம்பி கல்யாணத்துக்கு ரெடியாயிட்டீங்க
;) ;) ;)
//
அண்ணா வீட்லதான் சீக்கிரம் முடி முடின்னுட்டு நச்செடுக்கறானுக நீங்களுமா அவ்வ்வ் பயமா கெடக்கு நீங்க வேற ...
நன்றி ஜமால் அண்ணா
//T.V.Radhakrishnan said...
சூப்பர்...//
நன்றி டி.வி.ஆர். சார்
//VISA said...
அருமையான சிந்தனை தான். வரதட்சணைக்கு எதிராக எத்தனை பேசினாலும் மறைமுகமாக அது அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது.
//
ஆமா விசா சார் என்னதான் பண்ணுனாலும் ஒழியவே ஒழியாது போல இதுக்கு ஒரு புரட்சி பண்ணினாத்தான் உண்டு போல..!
நன்றி விசா சார்..!
// சந்ரு said...
நாம் என்னதான் வரதட்சனை பற்றி பேசினாலும் வரதட்சனை பிரட்சனை இருந்து கொண்டுதான் இருக்கிறது. நல்ல சிந்தனை வசந்த்.
//
நன்றி சந்ரு
//Balavasakan said...
நல்ல சிந்தனை....//
நன்றி வாசு
//முகிலன் said...
நல்லா யோசிக்கிறீங்க வசந்த்.
//
ஹ ஹ ஹா ஆமா முகிலன் முடி கொட்டுது இப்போல்லாம் ரொம்ப..!
நன்றி முகிலன்
//முனைவர்.இரா.குணசீலன் said...
விபரீதமான கற்பனை..
நடந்தாலும் வியப்பதற்கொன்றுமில்லை..
நன்றாக இருந்தது வசந்த்..
//
நன்றி குணா சார்
//Rajeswari said...
நல்ல கற்பனை
:-))
//
மிக்க நன்றி ராஜி மேடம்
//கலையரசன் said...
நல்லா சொன்ன.. (நோ காமெடி)
//
மாப்பி நன்றிடா
// சிவன். said...
வசந்த் மச்சான்....
ஒரு சந்தேகம்,
நாடோடிகள் படத்துல வர்ற BANNER அரசியல்வாதிக்கு வாசகம் எழுத ஒரு குழு இருக்குறா மாதிரி...,
உங்களுக்கும் தினமும் என்ன பதிவு எழுதுறதுன்னு ஐடியா குடுக்க பத்து பேர் கொண்ட ஒரு குழு செயல் படுதாமே, உண்மையா ?
//
ஹ ஹ ஹா
தீபன் அப்டியெல்லாம் இல்லப்பா
சும்மா அப்டியே யோசிச்சதுதான்..
நன்றி தீபன் மச்சான்..!
//கரிசல்காரன் said...
நடக்ககூடிய சாத்தியங்கள் உள்ளவை சூப்பர் கற்பனை.
கூடவே கஃல்ப்ல குப்ப கொட்றவங்களையும் கடையில் சேர்த்திருக்கலாம்.(ஊர்ல பொண்ணு கேட்டா தெரிச்சு ஓடறாங்க சகா)
//
ஹ ஹ ஹா
சொல்லவேயில்ல சகா எப்போ மெரேஜ்?
நன்றி கரிசல்காரன்
// சுந்தரா said...
கற்பனை நல்லாத்தான் இருக்குது. ஆனா, ஒருவேளை நிஜமாயிட்டா...ஆண்கள் பாவம்தான் :)
/
ஆண்கள் மட்டுமில்லை மேடம் பெண்களும் பாவம் தான் மேடம்..!
:)
நன்றி சுந்தரா
// பூங்குன்றன்.வே said...
/மனசு பாத்து யாரும் மணம் புரிவதில்லை ஏன்? திருமணம் எல்லாம் வியாபார சந்தையா மாறிட்டு இருக்கு ...//
நல்ல கேள்வியும்,இடுகையும்...
//
நன்றி பூங்குன்றன்
// Sangkavi said...
வாவ் நல்ல அழகான கற்பனை( சீக்கிரம் நடக்கும்).........
இனி வரும் காலங்களில் வீதிகளில் நடக்கும் போது விளம்பர அட்டைகள் பாக்கலாம்....
"இங்கு மாப்பிள்ளை விற்பனைக்கு"
//
ம்ம் ஆமா பாஸ்
நன்றி கவி...
//S.A. நவாஸுதீன் said...
ரொம்ப சூப்பர் வசந்த். இது இனி நடந்தாலும் நடக்கும்.
//
ம்ம் அதான் கற்பனை பண்ணி பாத்தன் நவாஸ் நன்றிப்பா...!
// லெமூரியன்... said...
நல்லா இருக்கு வசந்த் கற்பனை........!
பெண் சிசு கொலை...ஆண் பெண் விகிதம் சரிவு......
நீங்க சொல்ற மாதிரியே ஒரு நாள் நடந்தாலும் நடக்கலாம்...!
:-) :-)
//
ஆமா லெமூரியன் கருத்துகளுக்கும் முதல் வருகைக்கும் மிக்க நன்றி..
:)
//tamiluthayam said...
ஆண்களை எல்லாம் ரெம்ப உயர்வான நிலைக்கு கொண்டு போயிட்டீங்க
//
கிகிகிகி
அப்டியா சொன்னேன்...!
நன்றி தமிழுதயம்
//அமிர்தவர்ஷினி அம்மா said...
இந்தப்பதிவுல் முற்றுப்புள்ளியே காணுமே பாஸ் :)//
புரிந்தது அமித்து அம்மா
இதே மாதிரியே எழுத ட்ரைப் பண்றேன்
நன்றி அ.அ.
//ஹுஸைனம்மா said...
இஞ்சினியருக்கு 50 பவுன்.. டாக்டருக்கு 75 பவுன்...
பாஸ், எந்த காலத்துல இருக்கீங்க நீங்க? இப்பல்லாம் ஒரு மளிகைக்கடையில சேல்ஸ்மேனா இருக்கவங்க கூட இதுக்கு ஒத்துக்குறதில்ல!!
//seemangani said...
''ஒன்னு வாங்குன ஒன்னு ப்ரீ ஆபார் போடும் பொது பாத்துக்கலாம்...''//
ஒரு பொண்ணுக்கு மேலே இருக்க குடும்பத்துக்குக் கைகொடுக்கும் ஆஃபர்...
//
சூப்பர் ஹூசைனம்மா
மிக்க நன்றி
// SUFFIX said...
சுவாரஸ்யமாக இருக்கு வசந்த், நம்ம பயபுல்லைங்க இப்புடி ஆகிட்டாங்களே!!
//
நன்றி சஃபி :)
//அக்பர் said...
பாஸு இப்பவே இதுதானே நடந்துகிட்டு இருக்கு.//
ஆமாவா அக்பர்?
நன்றிப்பா..
//பின்னோக்கி said...
நீங்க சொன்னது மாதிரி கொஞ்சம் வருஷத்துல வரலாம். அப்புறம் எந்த ரூம்ல உட்கார்ந்து யோசிக்கிறீங்கன்னு தெரியலை
//
இங்க கத்தார்ல கம்பெனி குடுத்த ரூம்லதான் வேற எங்க
ஹ ஹ ஹா
நன்றி பின்னோக்கி சார்
//கண்ணா.. said...
வசந்த,
அதைவிட சீஃப்பா செகண்ட் ஹேண்ட் கடை ஓண்ணு வைக்கலாம்னு இருக்கேன்...
வசதி எப்படி....
//
ஹ ஹ ஹா
இதுவும் ஜூப்பர்...
நன்றி கண்ணா
//Kala said...
மாப்பிள்ளைகள் எல்லாம் ...{காட்சிக்கு இருப்பவர்கள்}
எங்கோ படித்த மாதிரி...இருக்கிறது மாப்பிள்ளைகளே!
உஷார்!!
இந்தக் காலத்தில் இவ்வளவு சிரமமா??
ஆமாமா!! என் பேத்தியும் இப்படித்தான்
தெரிவு செய்து கட்டிக்கப் போறாளாம்!
அவ கூட்டாளிகிட்ட பேசினது....என்
கேட்காத காதில...கொஞ்சமாய் நுழைந்த
தகவல் அப்பு இது.
இப்படியாவது கன்னிகளைச் கரைசேர்கலாம்
என்று வசந்துத் தம்பி யோசனை சொன்னாலும்...
ஏட்டிக்கு போட்டி போடுதுங்களே இந்தப் பொம்மனாட்டிங்க....
//
யக்கா சொல்லவேயில்ல பேத்தியோட ஆசையா அவ்வ்வ்வ்வ்
நல்ல வரனா கிடைக்கட்டும் பாத்து நல்ல வரனா வாங்கி குடுங்கக்கா
சாயம் வெளுக்காதவராப்பாத்தி தள்ளுபடி விலையில வங்கிடுங்க
:))))))))
நன்றி கலாக்கா
//Veliyoorkaaran.. said...
Elei maapla...unnayellam tsunami vitrucheda......(machi...unaku tamilmanathla vota potu en kadamaya niraivetriten..vote pathalaina sollu ingana singaporela oru 40 kalla votukku naan erpaadu panren..namaku varalaaruthan mukkiyam.......)
//
வாடா மாப்ள எங்கடா போயிட்ட பதிவு எழுதுறதும் கம்மியா இருக்கு ஏன்?
வோட்டுக்கா மாப்ள எழுதுறோம் சும்மா நம்ம டைரி மாதிரி எழுதுறோம் வோட்டுக்கு எழுதுறதுக்கு வோட்டு விழுவலை மைனஸ் விழுவுதுன்னு கவலைப்படறதுக்குன்னு ஒரு கூட்டமே இருக்குடா அந்த மாதிரி நான் இல்லை..
இந்த உன்னை மாதிரிய்யே ஒரு நாலைந்து சொந்த பந்தங்கள் கிடைச்சதே ரொம்ப சந்தோசம் அடிக்கடி வாடா மாப்ள...
// சி. கருணாகரசு said...
நல்ல வேளை அதுபோல வருவதுக்கு முன்னே... எனக்கெல்லாம் கல்யாணம் முடிந்துவிட்டது... கற்பனை நல்லாயிருக்கு வசந்த்.
//
ஹ ஹ ஹா
நன்றி கருணாகரசு..!
//Patta Patti said...
சூப்பர்
/
நன்றி பட்டா பட்டி தலைவர் போட்டோ எல்லாம் போட்டு சிரிப்ப மூட்டுறீங்க கலக்கல்...!
:))
// ஸ்ரீராம். said...
நல்ல ஐடியா . பக்கத்தில் பக்கத்தில் நிறையக் கடைகள் வரும்போது இன்னும் சீப் ஆகும்....
கடைக்காரர் 'இது சீப்தாம்மா' என்று சொல்லும் போது அந்த ஆணோ பெண்ணோ 'அப்போ ரெண்டாக் குடுங்க'ன்னு கேட்பாங்களோ..? பெண்ணுக்கும் கடை வைப்பாங்க இல்லே...
//
உங்க கமெண்ட் படிச்சதும் சிரிச்சுட்டே இருந்தென் ரொம்ப நேரம் ஸ்ரீராம்
சூப்பர்ப் என்னைய விட நீங்க ரொம்ப நல்லா கற்பனை பண்றீங்க ஸ்ரீராம்
நன்றி ஸ்ரீராம்
//ஜெஸ்வந்தி said...
கல்யாணம் பற்றிய யோசனை வந்து கிலி பிடித்து விட்டது என்று நினைக்கிறேன். கவலைப் படாதேப்பா. நீ பிறக்கும் போதே உன் தலையில் எழுதியது தான் . ... நடக்கப் போகிறது. அதற்குப் போய் இப்படிப் பயப்பிடலாமோ!
//
பயமாத்தேன் கெடக்கு ஜெஸ்ஸம்மா
என்ன பண்றதுன்னு ஒரே ரோசனையாவே இருக்கு..
நன்றி ஜெஸ்ஸம்மா..!
//யாழினி said...
சரியான சவுக்கடி வசந்த் என்ன சொல்லி பாராட்டுவதென்றே தெரியவில்லை! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!!
//
மிக்க நன்றி யாழினி...!
:)
//kggouthaman said...
Good presentation.
//
மிக்க நன்றியும் சந்தோசமும் கௌதம் சார்
//நினைவுகளுடன் -நிகே- said...
வித்தியாசமான் கற்பனை
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள்//
நன்றிங்க நிகே...!
// ஜான் கார்த்திக் ஜெ said...
நல்ல அழகான கற்பனை.. ஆழமான கருத்துக்கள்! கலக்குங்க வசந்த்!
//
நன்றி ஜான் கார்த்திக் முதல் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி :)
//ramasamy kannan said...
Nalla karpanai..//
மிக்க சந்தோஷம் கண்ணன் முதல் வருகைக்கும் நம்ம்ம ஏரியாக்காரன்றதிலயும்
:)
//thenammailakshmanan said...
கடையில வேலை பார்க்கிறது யாரு
நல்ல கதையா இருக்கே வசந்த்
:-)))
/
கதையா சொன்னேன் தேனக்கா அவ்வ்
நன்றி தேனம்மை
:)
//சுசி said...
நீங்க தப்பிச்சிட்டீங்க அப்டீங்கற தைரியம்???
கடசீல வந்தேன்னு மாப்ப என் கிட்ட குடுத்திடாதீங்க உபி..
//
ஹ ஹ ஹா
ஏங்கா இப்டி ஒரு கொல வெறி
நன்றி சுசிக்கா..!
:)
//பேநா மூடி said...
கதை நல்லா இருக்கு..,
பாராட்டுக்கள்..,//
நன்றி பேநா மூடி
//அன்புடன் மலிக்கா said...
மாப்பிள்ளையோ வாங்களையோ மாப்பிள்ளை. கூவி கூவி யாரோ விற்கிறாங்களாம். விற்கப்போறாங்களாம்..
பிரியமான சகோ கற்பனையானலும் செம நச்.
//
ஹ ஹ ஹா
மிக்க நன்றி சகோ..
:)
வித்தியாசமான அனா கொஞ்சம் சீரியசான கற்பனை..
நல்லாஇருக்கு...
நினைத்து நினைத்து சிாித்ேதன்,,,நினைத்து நினைத்து சிாித்ேதன்,,,
///திருமணம் எல்லாம் வியாபார சந்தையா மாறிட்டு இருக்கு ///
மாறிட்டு இருக்கு இல்ல. மாறிடுச்சு
அன்புடன்
ராம்
www.hayyram.blogspot.com
கற்பனை ரொம்ப ஜாலியா இருக்கு!
சிந்தனைகள் சிறப்பு நண்பா!!
Post a Comment