தேவாசார் மியூசிக் போட்டு பட்டி தொட்டியெல்லாம் பிரபலமான சூரியன் படத்துல வர்ற இந்த பாட்டை கேட்டதும் நம்ம முருகன் கோச்சுகிட்டதும் அதுக்கப்புறமான சுவாரஸ்யங்கள் எல்லாம் நகைச்சுவைக்காக மட்டுமே....!
பனி கொட்டும் இரவு பால் வண்ண நிலவு ஏங்குது உறவாட
கங்கை போலே காவிரி போலே ஆசைகள் ஊறாதா
சின்ன பொண்ணு செவ்வரி கண்ணு ஜாடையில் கூறாதா
பதினெட்டு வயது இளமொட்டு மனது ஏங்குது பாய் போட
இதுக்கப்புறம் நடந்த பின்னூட்ட் சுவாரஸ்யங்கள்...
61 comments:
இது என்ன விநாயகருக்கு வந்த சோதனை
ஹி...ஹி...ஹி....
அட என்ன மாப்ஸ்....பிளையார் பாவம் இல்லையா...அவர போய் இப்டி மாட்டி விட்டுடீங்களே...
பி.கு :- சிரிபதர்க்கு மட்டுமே...யாரும் சீரியஸ் ஆகவேண்டாம்...
மாப்ஸ் சொல்லாம விட்டத நான் சொல்லிகுறேன் ...
எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க...
தொகுப்பில் உழைப்பு தெரிகிறது. வாழ்த்துக்கள்.
கலக்கல் உபி.
என்ன ஒரு கற்பனை.. அதிலேம் என் அப்பன் விநாயகன டோட்டல் டேமேஜ் செஞ்சிட்டீங்க போங்க.
இன்னைக்கு கனவில மொத்தமா வந்து மிரட்ட போறாங்க.
என்ன வசந்து.. வழக்கமா நான்தான் கடசீல வருவேன்.
எல்லாரும் வேட்டைக்காரன் பாக்க போய்ட்டாங்களா என்ன?
புது வீடு சூப்பரா இருக்குப்பா.
அசத்துங்க.. அசத்துங்க..
வசந்து...பிள்ளையார் பாவம்தானே.இப்பிடியா சாபம் குடுக்கிறது.யார் குடுத்த சாபமோ அந்த மனுசனுக்கு இவ்ளோ நாளும் பொண்ணு கிடைக்கல.
நல்ல சிந்தனை.வசந்த் ,ரொம்ப நாளுக்கு அப்புறம் உங்க அடையாளம்.
ஏன் இந்த கொலை வெறி? நல்லா சிரிப்புதான் போங்க.
ண்ணா... நீங்க கற்பனைய காதலிங்க... அதுக்காகா ஒரு எலிஜிபில் பேச்சிலருக்கு ரோஜாவா... பாவம்ணா அவரு. அடுத்த பதிவில் ஒரு அசின் இல்ல அனுஷ்கா மாதிரி ஒரு நல்ல புள்ளையா பார்த்து போடுங்கண்ணா...!
லொள்ளு சபா!
உங்க பதிவுக்கு இவங்கல்லாம் இப்படி பின்னூட்டம் போட்டிருக்காங்க, தல!
முருகன் said : ஆரம்பிச்சுட்டாங்கயா....... ஆரம்பிச்சுட்டாங்க!
விநாயகர் said : விடு முருகா.....எவ்வளவோ பார்த்துட்டோம்....இதப் பார்க்க மாட்டோமா...?
கயிலாச நாதர் said: எல்லாம் புடிச்சிருக்கு....வசந்து.....முருகனுக்கும் எனக்கும் இடையில நாரதர் வேலை பார்த்ததுதான்........
நாரதர் said : //கயிலாச நாதர் said: எல்லாம் புடிச்சிருக்கு....வசந்து.....முருகனுக்கும் எனக்கும் இடையில நாரதர் வேலை பார்த்ததுதான்........// ஆமா....மகாதேவா....என் வேலைக்கு உலை வச்சுடுவார் போலிருக்கு....
(இப்ப நான் பின்னூட்டம் போடணுமா என்ன?)
கொல்றீங்களே..... இனி பதிவு எழுதறத விட பின்னூட்டம் போடறது ரொம்ப கஷ்ட்டமாயிடும் போல.... super sir.
ரோஜாவுக்கு புள்ளயாருதான் கரெக்டு ! செல்வமணி மணியடிக்கதான் லாயக்கு !
என்னாமாதிரி ல்லாம் யோசிக்கிறீங்கய்யா... முடியல... அப்புசாமி ஆளைக்காப்பாத்துடா...
eppudi?
ஒஹோ ரோஜாவுக்கு தொப்பையும் தும்பிக்கையும்தான் பிடிக்குமா? அறிய புதிய தகவல்..!!!
NO COMMENTS இந்த பதிவில் சாமி இருப்பதால் நான் இதில் விளையாடலை...
கலக்கல் சகா
விநாயகாருக்கு ரோஜாவா ????? என்ன கொடுமை முருகா இது?
கலக்கல் சகா
விநாயகாருக்கு ரோஜாவா ????? என்ன கொடுமை முருகா இது?
வழக்கமான வசந்த டச்+கொஞ்சம் கடின உழைப்பு(படங்கள்) தெரிகிறது..நல்லா இருக்கு!!!
அனானி said....
இவனுக்கு வேற வேலையே இல்ல போல...?
சூப்பர் வசந்த். உங்க கிட்ட எதிர்பாக்குறதே இப்படிப்பட்டதுதான்.
ஏன் மாமே விநாயகரை இப்படி சோதிக்கிற!!
ஹா ஹா ஹா. பரமசிவன் குடும்பத்தையும் விடலையா?
எல்லாத்தையும் மீறி இந்த இடுகையில் உங்க உழைப்புதான் என்னை பிரமிக்கவைக்குது வசந்த். ரொம்ப டாப்பு
ஹா ஹா ஹா............ என்ன திருவிளையாடல் அப்பனே இது?????
நல்லா இருக்கு வசந்த்...!
ஆனா ரோஜா என்ட்ரிக்கு அப்புறம் டல்லாகிடுது...!
கற்பனை நல்லாருக்கு நண்பரே.....
வசந்த் உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சா இல்லையா
பிள்ளையார் மேல ஏன் இந்தக் கொலை வெறி
அட்டென்ட்ஸ் மட்டும் போட்டுட்டு போயிடுறேன் வசந்த்.
சூப்பரப்பு...
சகோ நானும் வந்துட்டு போயிட்ட்டேஏஏஏஏஏஏஏஎன்..
கலக்கல்..
ரொம்ப மெனக்கட்டு இருக்கீங்க... பாராட்டுக்கள்..
ஏங்க வசந்த்... பிள்ளையாருக்கு ஒரு தமிழ் பொண்ணா பார்த்திருக்கலாமே.
உங்க கற்பனையை வியக்கிறேன்..... பாராட்டுக்கள்.
உக்காந்து யோசிப்பிங்களோ???
:D
//ஏங்க வசந்த்... பிள்ளையாருக்கு ஒரு தமிழ் பொண்ணா பார்த்திருக்கலாமே. //
:P
உக்காந்து யோசிப்பிங்களோ???
:D
//ஏங்க வசந்த்... பிள்ளையாருக்கு ஒரு தமிழ் பொண்ணா பார்த்திருக்கலாமே. //
:P
:-))
எப்டிங்க தோழா....உங்களால மட்டும்...இவ்ளோ சூப்பரா செய்ய முடியுது....
ரியலி சூப்பர்....
எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை
“உங்கள்” கற்பனை எதையெதை எங்ஙெங்கு
வைக்க வேண்டுமோ!அதையதை அங்கங்கு
வைக்க வேண்டும். இது நையாண்டிக் கற்பனை
அப்புறம் ரொம்ப திட்டிருவன்.....அதனால்
நான் மெளனவிரதம்......
ஹி...ஹி...ஹி...ஹி...ஹி...ஹி....
கலக்கல்.
எப்புடியேல்லாம் கற்பனை. ஹி..ஹி
வயிறு குலுங்க சிரித்தேன். முடியல்ல..
பாவம் பிள்ளையார்!!
பிள்ளையார் மேல என்ன கோபம்?
பொருளடக்கத்தை விட சொல்லப்பட்ட விதம் அருமை...பொறுமையாரொம்பக் கஷ்டப் பட்டுருப்பீங்க போல...
ம்ம்ம் - நகைச்சுவையின் - கிண்டலின் உச்சம் - ம்ம் நல்லாத்தான் இருக்கு - ஆனா எங்க பிள்ளையார இழுத்திருக்க வேண்டாமோ - பாவம் அவரு தேமேன்னு உக்காந்திருகாரு - ரோஜாவா ம்ம்ம்ம்ம்
உழைப்பு மற்றும் இடுகை இடுவதில் உள்ள ஈடுபாட்டிற்கு நல்வாழ்த்துகள் வசந்த்
கடவுளே இந்த பயல காப்பாத்துப்பா..:)
பாஸ்.. உங்க கற்பனை கலை கட்டுது..
பிள்ளையாரின் தும்பிக்கை
ரோஜாவின் நம்பிக்கை
இப்படியும் சொல்லலாமா?
எல்லாம் அவன் செயல்
Nalla karpanai
Pls visit
டீலா-நோ-டீலா அதிர்ஷ்டம் vs துரதிர்ஷ்டம்...http://elivalai.blogspot.com/
அருமையான தொகுப்பு நண்பரே்...ம்ம்ம்...எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா..
வாழ்க வளமுடன்,
வேலன்
லொ(ஜொ)ள்ளூ ...
ஆட்டக் கடிச்சு, மாட்டை கடிச்சு... கடைசியா கடவுளையும் இப்படி இழுத்து விட்டிகளே பங்காளி...
உங்க குறும்புக்கு ஒரு அளவில்லையா?? :-))
சின்னம்மிணி ரொம்ப நன்றிங்...
சீமான்கனி மாப்பு ட்ர்ராக்குறீக நன்றிப்பா
துபாய் ராஜா ஸ்பெசல் நன்றிப்பா
சுசிக்கா இதுக்கு முந்துன போஸ்ட்டுக்கு நீங்கதான் ஆப்சண்ட் வேட்டைக்காரன் போயிட்டீங்களான்னு நாந்தான் கேக்கணும் நன்றிக்கா
நன்றி ஹேம்ஸ் ம்ம் மாறிட்டு இருக்கேன் முன்னமாதிரியே...
சித்ரா ரொம்ப நன்றி மேடம்
அரசூரான் மிக்க நன்றிப்பா அவங்க எல்லாம் இப்போ யாரை காதலிக்குறாங்களோ தெரிலயே...
நன்றி பாரா
நன்றி பெ.சொ.வி. கலக்கிட்டீங்க போங்க ரொம்ப ரசித்து சிரித்தேன்...
பலாபட்டறை ம்ம் நன்றிப்பா
ராஜன்ராதாமணாளன் குசும்பு நன்றிப்பா
வாசு ரொம்ப நன்றிப்பா
விசா ம்ம் அப்டித்தான்...
அண்ணாமலையான் நன்றிப்பா
தமிழரசி மேடம் நன்றிங்க..
கரிசல்காரன் சகா விடுங்க சகா இதுவும் கடந்துபோகும் :)
பூங்குன்றன் ரொம்ப மகிழ்ச்சிப்பா :)
கலையரசன் உனக்கு இப்பிடி ஏட்டிக்கு பூட்டியா கமெண்ட் போட்டே பழக்கமாயிடுச்சுடா சரி விடு உனக்காக இனி போஸ்ட்டே போடலை போதுமா ? வாசகர் விருப்பம் முதன்மையானது :)
சந்தனமுல்லை மேடம் நன்றி
அதிபிரதாபன் ம்ம் இனி ட்ரைபண்றேன் ...
ஜெட்லி நன்றி சரண் :)
நவாஸ் ஹ ஹ ஹா நன்றிப்பா :)
லெமூரியன் நன்றிங்க :)
பாலாசி நன்றி :)
தேனக்கா மிக்க நன்றி :)
அபரசிதன் நன்றிங்க :)
மலிக்கா நன்றி சகோ :)
பட்டாபட்டி நன்றிப்பா :)
பேநாமூடி ம்ம் நன்றிங்க )
கருணா மிக்க சந்தோசம் :)
சுரபி ம்ம் நன்றிங்க :)
உழவன் நன்றிங்க :)
கலாக்கா ஏன் திட்டிடுங்க பொது இடத்துல எழுதுனா வசவோ வாழ்த்தோ எதுனாலும் ஏத்துகிட்டுத்தான் ஆகணும்..நன்றிக்கா
உமா நன்றிங்க :)
சிவாஜி சங்கர் நன்றிப்பா :)
இலங்கன் நன்றி :)
அருணா பிரின்ஸ் நன்றி :)
ஸ்ரீராம் ஆமா ஸ்ரீ நன்றிப்பா
சீனா சார் ரொம்ப சந்தோசமா இருக்கு நன்றி சார்..
வினோத் நன்றிடா :)
ஜான் நன்றிப்பா :)
ஜோதி ம்ம் உங்க கோபம் புரியுது ஆனா இது நகைச்சுவைதானே ஏன் சீரியஸ் ஆவுறீங்க ஏன் கமெண்ட் டெலிட் பண்ணுனீங்க ?
அண்ணாமலையான் நன்றி
காதல்கவி நன்றி
ஸ்டார்ஜன் நன்றி
வேலன்சார் நன்றி சார்
ஜமால் அண்ணா நன்றிண்ணா
ரொம்ப கலக்கலா இருக்கு!
அட என்ன ஒரு கற்பனை.
கிராபிக்ஸ் அருமை. உங்களின் உழைப்பு தெரிகிறது.
//
ஜோதி ம்ம் உங்க கோபம் புரியுது ஆனா இது நகைச்சுவைதானே ஏன் சீரியஸ் ஆவுறீங்க ஏன் கமெண்ட் டெலிட் பண்ணுனீங்க ?//
உங்கள் படைப்புகளில் உள்ள கற்பனை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நான் ஒன்றும் பக்திமான் அல்ல. தீபாவளி மட்டும் கடவுளை வணங்கும் அளவிற்கே என் பக்தி. ஆனாலும் ஒரு நடிகையையும் கோடான கோடி மக்கள் வணங்கும் ஒரு கடவுளையும் இணைத்துப் பேசுவது எந்த அளவிற்கு அபத்தம். இதையே வேறு ஒரு மதத்து கடவுளை நக்கலடிக்க முடியுமா வசந்த்? இங்கே பின்னூட்டமிட்டவர்கள் அதைப்பற்றி யாரும் பேசாதது எனக்கு இன்னும் மனவருத்ததை தந்தது. முதலில் பின்னூட்டம் இட்டேன். பின்னர் அதுவே சர்ச்சை ஆகலாம் என எடுத்துவிட்டேன்.
நகைச்சுவை என்பது எதுவரை? ஒரு வார்த்தையால், ஒரு செயலால் யாரை புண்படுத்தினாலும் அதை நகைச்சுவையில் சேர்க்கமுடியாது என்பது என்னுடைய பார்வை.உங்களுக்கு கிடைத்த பாராட்டால் நாளை இதே மாதிரி நீங்கள் இன்னொரு பதிவு போடலாம். ஆனால் நான் இப்போது எழுதியது உங்களுக்கு நினைவிற்கு வந்து அதை தவிர்த்தால் எனக்கு அதுவே பெரிய சந்தோசம்தான். இது என் வெளிப்படையான கருத்து. தவறிருந்தால் மன்னிக்க,..
நண்பா ஜோதி இதுல என்ன இருக்கு ஜோதி அவங்க அவங்க என்ன என்னமோ எல்லாம் போடுறாங்க இதுக்கு போய்ட்டு சரி விடுங்க இது எப்டி எழுதுனேன்னு சொன்னா சிரிப்பீங்க ஆமா போன ஆவணியில அவிட்டம் வந்தப்போ பூணுல் போடலியான்னு விநாயகர் கனவுலவந்து கோச்சுட்டார் ஏன்னா இந்தியால இருந்தா வருட வருடம் தோத்திரம் சொல்லி போடுற மாதிரியே போட்ருக்கலாம் இங்க எப்டி சாத்யம் முடியாதே அதனால எனக்கும் விநாயகருக்கும் ரொம்ப நாளாவே வாக்கு வாதம் வந்து உன்னைய என்ன பண்றேன் பார்ன்னு கோவம் வந்து போட்டதுதான் இந்த போஸ்ட் ரொம்பவும் ஆச்சாரமான குடும்பத்தில இருந்து வந்து தினமும் சாமி கும்புடுறவந்தான் இதே பிள்ளையார நான் என்னோட சின்ன வயசுல இருந்தே எனக்கு பிடிச்சதெல்லாம் செய்து குடுக்குற ஒரு ஃப்ரண்டாத்தான் பார்க்கிறேனே ஒழிய கடவுளா இல்லை ..
இது யார்மனசையாவது புண் படுத்தியிருந்தா தயவு செய்து மன்னிச்சுடுங்க
இனி எழுதுறதே பெரிய விஷயமா இருக்கும்போது இதுமாதிரி இனி எழுதமாட்டேன் உங்களுக்காகவே,,,
இதுக்கு போயி மன்னிப்பு கேட்டுட்டு அவங்க அவங்க நேர்முகமாவோ மறமுகமாவோ டார் டாரா கிழிச்சு தொங்கவிட்டுட்டு இருக்காங்க அதுக்கே ஒண்ணும் பெரிசா வருத்தமில்லை ஜோதி நீங்க தமிழன் மனசுல இருக்குறதை நேரா சொல்றீங்க உங்களை போயி நான் தப்பா நினைப்பேனா...
ஹேண்ட் சேக் ஒக்கே...இப்போ கத்தார்ல இல்லியா?
கண்டிப்பாக நிறையபேர் என்ன என்னமோ எழுதுகிறார்கள். வசந்த் அந்த மாதிரி எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை.நீங்கள் என்பதால் அந்த பின்னூட்டம் கூட போட்டேன்.
இதே கத்தார்தான் வாழ்க்கை வசந்த். பிப்ரவரியில் தாய்மண்ணை மிதிக்க ஆசை.
கண்டிப்பாக நிறையபேர் என்ன என்னமோ எழுதுகிறார்கள். வசந்த் அந்த மாதிரி எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை.நீங்கள் என்பதால் அந்த பின்னூட்டம் கூட போட்டேன்.
இதே கத்தார்தான் வாழ்க்கை வசந்த். பிப்ரவரியில் தாய்மண்ணை மிதிக்க ஆசை.
வசந்த்,
முருகனுக்கு வந்த சோதனை...ம்ம்ம்ம்!
(யாரங்கே..எல்லாரும் வாங்கப்பா,வாங்கம்மா...இந்தாளுக்கு முதல்ல முடிச்சு போட்டுட்டு மறு வேலைய பாப்போம்.)
//வசந்த்,
முருகனுக்கு வந்த சோதனை...ம்ம்ம்ம்!
(யாரங்கே..எல்லாரும் வாங்கப்பா,வாங்கம்மா...இந்தாளுக்கு முதல்ல முடிச்சு போட்டுட்டு மறு வேலைய பாப்போம்.)
//
எல்லாரும் அதுலயே குறியா இருக்காய்ங்கப்பா...
நன்றி சத்ரியன்
Post a Comment