August 10, 2010

எந்திரனுக்கு அடுத்து கோகோ..!

சுமார் 300 வருடங்கள் முன்னோக்கி சென்று பார்க்கும் பொழுது அந்த காலம் எந்திரன் எனும் ரோபோக்கள் வாழும் ரோபோக்கள் காலம் என்று அழைக்கப்படுகிறது இந்த ரோபோக்கள் காலத்தில் சில நிகழ்வுகள் எப்படியிருக்கும் என்று ஒரு மகா மொக்கை கற்பனை உலகத்திற்க்கு உங்களை அழைத்து செல்கிறேன்...!

CC33 எனும் கணவரும் CC95 எனும் மனைவியும் திருவாளர் கணவருக்கு இரண்டு மாதங்களாக காது கேட்காத காரணத்தினால் The Robot Service center  எனும் ரோபோக்களின் மருத்துவமனைக்கு சென்று அங்கு Er.TT11 எனும் மருத்துவரை பார்க்கிறார்கள் அவர்களை பரிசோதித்த Er.TT11 மிஸ்டர் CC33 உங்களின் முக்கிய சத்தங்களை உணர பயன்படும் ஒயர் ஒன்று ஷார்ட் ஆகியிருந்ததால் இருந்த பிராபலம் இப்பொழுது சரி செய்யப்பட்டது என்றார்..

ரோபோக்களின் திருமண தளமான Robot Matrimonial .comல் மணமகன் தேவை எனும் பகுதியில் நல்ல 25% சார்ஜ் மட்டுமே தீர்ந்த மணமகளுக்கு அதே சார்ஜ் அளவே தீர்ந்து போன , AB மாடலைச்சேர்ந்த சேர்ந்த மணமகன் தேவை போன்ற விளம்பரங்கள் காணமுடிந்தது.




சென்னை ரிட்சி ஸ்ட்ரீட் எனும் இடத்தில் ரோபோக்களின் இனப்பெருக்கத்திற்க்கென்றென புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய தொழிற்சாலை நிறுவும் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது மடிக்கணிணிகள், மொபைல்கள் எனும் பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தொல்பொருள்துறை இலாக அதிகாரி Mr.DH3456 செய்தியாளர்களிடம் தெரிவித்தார் என எலக்ட்ரிக் டிவியில் நியூஸ் ஓடிக்கொண்டிருந்தது அந்த நியூஸ் ரீடர் AA2231 ஒவ்வொரு செய்திகளின் முடிவிலும் ஓவர் ஓவர் என்று கூறி அழகாக செய்திகளை விவரித்துக்கொண்டிருந்தார்"

அதே எலக்ட்ரிக் தொலைக்காட்சியின் அன்றைய சிறப்பு பார்வையாக பண்டைய காலத்தில் வாழ்ந்து வந்த மனித நாகரீகங்கள் பற்றியும் , அழிந்துவரும் மனித இனம் இன்னும் 345 பேர்களே வாழ்ந்து வருகின்றனர் என்றும் ,நம் மெமரி சிப்களை அவர்களுக்கு பொருத்தியாவது அவர்களை அழியாமல் காப்பது நம் கடமை எனவும் சிறப்பு பார்வையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த ரோபோக்களின் காலத்தில் மிகப்பெரிய மின்சாரபுரட்சி ஏற்பட்டது நீர்,காற்று எனும் மின்சாரத்தை தயாரிக்கும் மூலங்கள் தீர்ந்து போன சூழலில் சூரிய சக்தி மின்சாரம் எனும் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட விதியின் படியே அனைத்து ரோபோக்களும் சூரிய சக்தியை மின்சாரமாக மாற்றிக்கொள்ளும் பேட்டரியுடன் இயங்கின..

ரோ.பி.101 (ரோபோக்களுக்கு பின்) என்ற வருடத்தில் அதிக சக்திவாய்ந்த மெமரிசிப்களுடன் தயாரிக்கப்பட்டிருந்த QQ2990 எனும் மாடல் ரோபோக்கள் இனத்திற்க்கும், ரோபோக்களின் மிகப்பழமை வாய்ந்த WW3000 எனும் மாடல் ரோபோக்கள் இனத்திற்க்கும் இடையே மிகப்பெரிய யுத்தம் ஒன்று ஏற்பட்டது இந்த யுத்தத்தில் WW3000 எனும் மாடலைச்சேர்ந்த ரோபோக்கள் QQ2990 மாடல் ரோபோக்களால் சிறைபிடிக்கப்பட்டு அவர்களின் அனைத்து மெமரி சிப்களின் மெமரிகளும் அழிக்கும்படியான கொடுமையான தண்டனை The Courts of QQ Robots எனும் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது.

ரோ.பி.123 என்ற வருடத்தில் நிலாவிற்க்கு சுமார் 1கோடி ரோபோக்கள் பூமியிலிருந்து புலம் பெயர்ந்து சென்றிருப்பதாகவும் வரும் காலங்களில் இது இருமடங்காக உயராலாம் என விண்வெளி ஆராய்ச்சியாளர் Mr.QQ3356 தெரிவித்தார்.

ரோபோக்களின் உயிர் எனப்படும் மெமரி சிப்களை தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருளின் பற்றாக்குறையால் ரோபோக்களின் எண்ணிக்கை உயர்வது தடுக்கப்பட்டிருந்தது ஒரு கட்டத்தில் மூலப்பொருட்கள் அனைத்தும் தீர்ந்த நிலையில் ரோபோக்கள் தங்களுக்கு அடுத்த சந்ததிகளை வேறொரு gogo எனும் மூலப்போருட்கள் மூலம் தயாரித்து சோதனைக்கு விட்டிருந்தனர் . 

இந்த புதியவகை gogo எனும் கனிமத்தினை உருவாக்கவும்,புதிய சந்ததிகள் அழியாமல் இருக்கவும் gogotree எனும் செயற்கை மரங்கள் பூமியெங்கும் நடப்பட்டன.இந்த செயற்கை மரங்களுக்கு உரமாக செயலிழந்து இறந்துபோனதாக கருதப்பட்ட ரோபோக்களின் பாகங்கள் உரங்களாக செலுத்தப்பட்டதால் பூமியெங்கும் வியாபித்திருந்த ரோபோக்கழிவுகள் முற்றிலும் நீக்கப்பட்டது...

இந்த புதுவகை சந்ததிகள் சூரிய மின்சாரத்திலே இயங்குபவையாகவும் இவற்றின் மூளையாக புதிய வகை gogo எனும் கனிமத்தினால் ஆன மெமரி சிப்கள் பயன்படுத்தப்படுபவையாகவும் இருந்தன இவற்றிற்க்கும் Gogo என்றே பெயரிடப்பட்டது நாளடைவில் ரோபோக்களின் இனம் அழிந்து இந்த Gogo எனும் சந்ததியினரால் பிரபஞ்சம் நிரம்பியிருந்தது... 


அப்பொழுது ரோ.பி 1023 என்ற வருடத்தில் மனித இனத்தின் கடைசி உயிரினமும் அழிந்ததாக கோகோக்களின் பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்பட்டன...

(கோ.பி) கோகோக்களுக்கு பின் என்ற காலமும் வரலாம்...!

..

45 comments:

சீமான்கனி said...

நான்தான் பஸ்ட்டு....ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ

Gayathri said...

உங்க பதிவ படிச்சுட்டு அசந்து போய்டேன்...எப்படி இப்படிலாம் தோணுதுங்க?? அனைவரும் எந்திரன் சினிமாவே கதின்னு இருக்க நீங்க எந்திர உலகுக்கே கூட்டி கிட்டு போய்டீங்க...மிக மிக அருமை...வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

சென்னை ரிட்சி ஸ்ட்ரீட் எனும் இடத்தில் ரோபோக்களின் இனப்பெருக்கத்திற்க்கென்றென புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய தொழிற்சாலை நிறுவும் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது ]]

அட!!!

------------------

நல்லதொரு கதைக்களம் - இதையே மற்றுமொரு முயற்சி செய்து கொடுங்க வசந்த்

Unknown said...

மாப்ள கை குடுங்க... அசத்திடீங்க... என்னமா எழுதுறாரு மாப்ள...

vinthaimanithan said...

கொஞ்சம் டிங்கரிங், பட்டி பாருங்க ஓய்! நியூஸ் வாசிக்கிற சாயல் தெரியுது! என்னடா இப்டி சொல்றானேன்னு தப்பா எடுத்துக்காதீரும்!

சுசி said...

//அதே எலக்ட்ரிக் தொலைக்காட்சியின் அன்றைய சிறப்பு பார்வையாக பண்டைய காலத்தில் வாழ்ந்து வந்த மனித நாகரீகங்கள் பற்றியும் , அழிந்துவரும் மனித இனம் இன்னும் 345 பேர்களே வாழ்ந்து வருகின்றனர் என்றும் ,நம் மெமரி சிப்களை அவர்களுக்கு பொருத்தியாவது அவர்களை அழியாமல் காப்பது நம் கடமை எனவும் சிறப்பு பார்வையில் தெரிவிக்கப்பட்டது.
//

இந்த பத்தி படிக்கும் போது நிஜமா பயமா இருந்துதுப்பா..

என்ன ஒரு கற்பனை வளம் உங்களுக்கு.. :))

Mahi_Granny said...

என்ன சொல்லுவது எனத் தெரியவில்லை உங்க கற்பனைத் திறன் பற்றி. நல்லா இருங்க தம்பி

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு வசந்த். :-)

ஜெயந்த் கிருஷ்ணா said...

மிகவும் அருமையான கற்பனை...

பிற்காலத்தில் இது போன்று நடந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை...

sakthi said...

அற்புதமான கற்பனை வளம் பா வசந்த்

வாழ்த்துக்கள்

Unknown said...

மிக அருமை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சூப்பர். என்ன மாப்பு ரொம்ப நாளா ஆளக் காணோம்..

எல் கே said...

ithu sari illa.. ithai oru todar kathaya eluthalaamnu iruntha nee munthikitta

kavisiva said...

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த செய்தியில் "சிறப்புப்பார்வை"ன்னு போடறதை மாத்திக்கவே மாட்டாங்களா :(
நல்ல கற்பனை வசந்த்.
எல்லாம் சரி கோகோ காலத்திலும் ப்ளாக் இருக்குமா? அப்போ அதுக்கு என்ன பேரா இருக்கும்? கோகோ காலத்தில் வசந்த் ஒரு கோகோவாக இருந்தால் எப்ப்டீல்லாம் பதிவு போடுவார்?

ஹி ஹி ஒண்ணுமில்லீங்க ஜெய்லானியின் சந்தேக பதிவுகள் படிச்சதுல எனக்கும் சந்தேக வியாதி வந்திடுச்சு :(

Hai said...

இனிய கற்பனை.

சுவையான படைப்பு.

அருமை.

sudhanthira said...

உங்கள் பதிவு நன்றாக உள்ளது
கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி
Link:www.secondpen.com/tamil/what is jaiku?

சின்னப்பயல் said...

கலக்கறீங்க...வசந்த்..:-)

ராமலக்ஷ்மி said...

அருமை அருமை.

//நல்ல 25% சார்ஜ் மட்டுமே தீர்ந்த மணமகளுக்கு அதே சார்ஜ் அளவே தீர்ந்து போன , AB மாடலைச்சேர்ந்த சேர்ந்த மணமகன் தேவை போன்ற விளம்பரங்கள் காணமுடிந்தது.//

சரியாப் போச்சு:)))!

நாடோடி said...

ரோபோக்க‌ளின் க‌ற்ப‌னை உல‌க‌ம் ந‌ல்லா இருக்கு வ‌ச‌ந்த்.

கார்க்கிபவா said...

ஹிஹிஹி

அருண் பிரசாத் said...

நல்ல கற்பனை வசந்த், இயந்திரன் மனிதனை ஆளும் காலம் வந்தாலும் ஆச்சரியபடுவதர்க்கு இல்லை

Jey said...

பயபுள்ள, நாலு நாளா பிசியாருக்கேனு சொல்லும்போதே , இதுமாதிரி எக்குத்தப்பா ஒரு பதிவு இருக்கும்னு நினைச்சேன்.....
அப்படியே ரோபோ கவுஜ எழுதினா எப்படி எழுதிருக்கும்னு ஒரு நாலு வரி எழுதிருக்கலாம்...

Busy said...

Hats Off Vasanth !!!!

Good Creativity !!!

Madhavan Srinivasagopalan said...

Very nice unimaginable thoughts

I remember the TV serial of later 80's in DD-Madras in which everyone is given alphanumeric code. for eg. a Character with name 'Nila' is Identified as 11343E.

They had to get permission for doing anything.. including to plan for a baby. I forgot the name of serial..

(PS Not Mega serial.. during that time any serial cannot have more than 13 episodes.. with only 1 episode per week)

Anonymous said...

அஞ்சு வருசம் அல்லது பத்து வருசம் முன்னோக்கி யோசிக்கலாம்..
ஆனா இப்படியா???
அந்த திருமண தகவல் மையம் யோசனை நல்லா இருக்கே..
கோ கோஓஓஓஓஓஓஓஓஓ...

பின்னோக்கி said...

முன்னோக்கி பார்த்து எழுதிய கற்பனை நன்று என்று பாராட்டும் பின்னோக்கி :)

Anonymous said...

hey vasanth really you are good creater....innum kangal imaikka marukiradhu.......

R.பூபாலன் said...

QQ2990 மாடல் ரோபோக்கள் WW3000 எனும் மாடலைச்சேர்ந்த ரோபோக்களின் மெமரி சிப்களை அழிக்கும் போது ஒரு சிப் மட்டும் எப்டியோ escape ஆகி கி.பி.20 ம் நூற்றாண்டுல PVASANTH1717 னு ஒரு ரோபோகிட்ட வந்து ஒட்டிகிச்சு...

இப்ப அந்த சிப்ப வேசுகிட்டு கொலை வெறில பதிவுகளை போட்டு பதிவுலகதையே கொடுமை படுத்திட்டு இருக்கறதா ஆராய்ச்சியாளர் Mr.QQ3356 தெரிவித்திருக்கின்றார்.


அய்யய்யோ , இந்த அநியாயத்த கேட்க ஆளே இல்லையா....? ..

.
.
.
.
.
.
நல்லா இருந்துச்சு வசந்த் அண்ணா

தேவன் மாயம் said...

கற்பனையில் வசந்தை மிஞ்ச ஆள் இல்லை!!

Kala said...

வதந்த்,
ஒரு செய்தி காதுல விழுந்தது....
சங்கர் அடுத்த படத்துக்கு
தயாராம்,ஏனென்றால்.....
வலைபோட்டுத் தேடியதில்
வலை யில் சிக்கியது நீங்கள்தானாம்
அவரின் கதாசிரியர்.

Anonymous said...

ரூம் போட்டு யோசிக்கறீங்க

யோ வொய்ஸ் (யோகா) said...

பேர்களை வைத்து ஆட்களை கண்டுபிடிக்க முடியாமல் போய்டுமே.

நல்லா யோசிக்கிற மாப்ள

Sindhu said...

romba nalla muyarchi........

(ரோபோக்களின் உயிர் எனப்படும் மெமரி சிப்களை தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருளின்)

antha stagela nano tech moolam memory chip e kooda kaanama poiralamillaya.......

செ.சரவணக்குமார் said...

செமையா இருக்கு வசந்த்..

கலக்கலா எழுதியிருக்கீங்க.

தமிழன்-கோபி said...
This comment has been removed by the author.
தமிழன்-கோபி said...

என்னோட பெயருக்கு (கோபி) இப்படி ஒரு அர்த்தம் இருக்குறத இன்னிக்குதான் தெரிஞ்சுகிட்டேன்....
எந்திரன் படம் பார்த்த மாதிரி இருக்கு...

சாந்தி மாரியப்பன் said...

இதெல்லாம் நிஜமாவே நடந்தாலும் நடக்கும். அய்யோ.. பயமாருக்குதே :-))))(அப்பவும் மேட்ரிமோனியல் மேட்சிங்மோனியலாத்தான் இருக்குது)

ப்ரியமுடன் வசந்த் said...

@ சீமான்கனி மாப்ள நீ ரொம்ப வளர்ந்துட்ட மீத பஸ்ட்டு போடறத நிப்பாட்டுங்க ப்ளீஸ்..

@ காயத்ரி மிக்க நன்றிங்க!

@ ஜமால் அண்ணா மைண்ட்ல வச்சுகிட்டேன் நானும் யோசிச்சேன் இத வேற விதங்களிலும் எழுதலாம்ன்னு ம்ம் மாசத்துக்கு ஒரு தடவை எந்திரன் போஸ்ட் போட்றலாம்..நன்றிண்ணா

@ செந்தில் மாம்ஸ் மிக்க மகிழ்ச்சி

@ விந்தை மனிதன் மிக்க நன்றிங்க பாருங்க நான் அதை நியூஸ் மாதிரிதான் சொல்லணும்ன்னு நினைச்சேன் அதுமாதிரிதான் சொல்லியிருக்கேன்னு நினைக்கிறேன் எனக்கு கதை எழுத வராதே பாஸ் :( ம்ம் இருந்தாலும் ட்ரை பண்றேன் மிக்க நன்றி வழிகாட்டுதலுக்கு..

@ சுசி பயமா நீங்களா ஹெ ஹெ ஹே யார்கிட்ட காது குத்துறீங்க ? நன்றி சுசி

@ மஹிம்மா மிக்க நன்றிம்மா

@ பாரா அண்ணா நன்றிண்ணா

@ வெறும்பய ம்ம் நன்றி பாஸ்

@ சக்தி சகோ நன்றி..!

ப்ரியமுடன் வசந்த் said...

@ கலா நேசன் நன்றி தல

@ ரமேஷ் மாம்ஸ் அடப்பாவிகளா மூணு நாள்தானய்யா எழுதுலை அதுக்கேவா அய்யய்யோ விட்டா நீ யார்ன்னு கேப்பீங்க போலயே ம்ஹ்ஹும் இனி பாவம் நீங்க கடவுள்தான் உங்கள காப்பாத்தணும்..!

@ எல் கே ஹ ஹ ஹா வடபோச்சே நன்றி எல் கே

@ கவி சிவா அதெப்பூடி மாறும் ? கோகோ காலத்துல லேப்டாப்பே இல்லாதப்போ ப்ளாக் எப்பூடியிருக்கும் அவங்க எல்லாம் அறிவாளிங்க பாஸ் எப்படி ப்ளாக் எழுதுவாங்க :)))
நன்றி கவி

@ அரைகிறுக்கன் நன்றிங்க

@ சின்னப்பயல் அடடே நன்றி தல

@ ராமலக்ஷ்மி மேடம் நன்றிங்க :)

@ ஸ்டீபன் நன்றி நண்பா

@ கார்க்கி நன்றி சகா :)

@ அருண் பிரசாத் ம்ம் அதேதான் நன்றி அருண்

ப்ரியமுடன் வசந்த் said...

@ ஜெயக்குமார் இப்புடி உசுப்பேத்தி உசுப்பேத்தி ரணகளமாக்குறதே வேலையாப்போச்சி பங்கு உங்களுக்கு நன்றி

@ பிசி மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் பாஸ்

@ மாதவன் சார் நான் பொறந்ததுக்கப்புறம்ன்னு நினைக்கிறேன் 1989 வாக்குல பொதிகைல என் இனிய இயந்திரான்னு சுஜாதா சார் படைப்பு வந்துச்சு அதவா சொல்றீங்க நன்றி மாதவன்..

@ இந்திரா ஹெ ஹெ ஹேய்ய்ய் நன்றி தாயி...

@ பின்னோக்கி சார் அதே அதே நன்றி சார்

@ தமிழரசி மேடம் எல்லம் தங்கள் ஆசிர்வாதம் தான் நன்றி

@ பூபாலன் வர வர கொழுப்பு கூடிடுச்சு என்ன செய்யலாம்? நன்றி பூபாலன்

@ தேவன் சார் மிக்க மகிழ்ச்சி சார்

@ கலா அப்படியா ஜொள்ளவே இல்ல ஹீரோயின் கூட....

@ அகிலா மேடம் கிகிகிகி :)

@ யோகா நன்றி மாப்பு குழப்புறயேய்யா

@ ப்ரியா ஆகா நானோ டெக்னாலஜி எல்லாம் நான் இன்னும் படிக்கவே இல்லியே கொஞ்சூண்டு ரோபோட் பத்தி வாசிச்சேன் அத வச்சு எழுதுனதுதான் இன்னும் நிறைய படிக்கணும் போல இருக்கு நீங்க சொல்றத பார்த்தா நன்றி ப்ரியா...!

@ சரவணக்குமார் அண்ணா நன்றிண்ணா

@ தமிழன் நன்றி பாஸ்

@ சாரல் மேடம் :))) நன்றி மேடம்

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

அடடா. இப்படி கலக்குறீங்க..!!

சீமான்கனி said...

அட நீவேற போ மாப்பி போனவாரம்தான் ssw0000னு எனக்கு பேரு வச்சாங்க...இன்னும் பாட்டரி புல் சார்ஜ்ல இருக்கு நீதான் அதிகமா யூஸ் பண்ணற...

Anonymous said...

Sollivida enni pala naal arugil varuven:
Undhan paarvai paarthadhum,
Adhu mattum podhum ena ninaithu vilagi viduven.
En manadhil ulladhu therindhum vilaiyaadum penne,
Nee etru kolvai endrey thodarkiren un nizhalai.
Thodarven enrum;
I LOVE YOU

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி ஆனந்தி

நன்றி சீமான்கனி உதபடப்போற மாப்ள..

@ soso ஆவ்வ்வ்வ் தலைவா இடம் மாறி வந்துட்டீங்கன்னு நினைக்கிறேன் இந்த கொடுமையக்கேட்க ஆள் இல்லையா ஆவ்வ் ஆவ்வ்வ்...அதான் பக்கத்துலயே ஃபேஸ்புக் போட்டோவேற போட்டு வச்சுருக்கேனே அதுல இருந்து தெரியலையா நான் வசந்தி இல்ல ராஸா வசந்த் இன்னொருவாட்டி இப்பிடி சொன்னீங்க கொலக்கேசாகிப்புடும் ஆமா...

Madhavan Srinivasagopalan said...

//ப்ரியமுடன் வசந்த் said...
@ மாதவன் சார் நான் பொறந்ததுக்கப்புறம்ன்னு நினைக்கிறேன் 1989 வாக்குல பொதிகைல என் இனிய இயந்திரான்னு சுஜாதா சார் படைப்பு வந்துச்சு அதவா சொல்றீங்க நன்றி மாதவன்..//

s..s.. the same