மீசையை அழகாக்க முன்னும் பின்னுமாய் வளர்ந்திருந்த முடிகளை வெட்டிக்கொண்டிருந்த பொழுது கத்தரிக்கோல் எப்படி கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் என்று தோன்றிய சிந்தனை அபத்தமாய் இருந்தாலும் அந்த நிமிடத்திலிருந்து மனம் கத்தரிக்கோலை சுற்றி சுற்றியே வந்து கொண்டிருந்தது.சரி இணையத்தில் தேடிப்பார்க்கலாமென்ற பொழுது கத்தரிக்கோல் என்று தட்டச்சு செய்யும் விரல்களை தற்செயலாக கவனித்தேன் ஆட்காட்டி விரலும் நடுவிரலும் சேர்ந்து முன்னொரு காலத்தில் எளிதில் வெட்டுப்படும் பொருள் எதையோ வெட்டிதீர்த்திருக்கின்றன போலும் அந்த நிமிடமே விடை கிடைத்தது.
அப்பாடா என்று தலையில் வைத்ததுதான் தாமதம் அடுத்த தேடலுக்கான பொறிதட்ட தினமும் வேலை நேரம் முழுவதும் அணிந்திருக்கும் தலைக்கவசத்தின் ரிஷி மூலம் மீது தேடல் திரும்பியது எளிதில் கண்டுபிடிக்க கூடிய விடைதானென்ற பொழுதும் மனம் அதன் ஆதியை கண்டறிய பாடாய் பட்டுகொண்டிருந்தது.போனால் போகட்டும் அதையும்தான் தேடிப்பார்ப்போமே என்று தேட தேட விடை கிடைத்த பாடில்லை . தேடலின் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து ஆமை வேகத்தில் தேடிக்கொண்டிருக்கிறேன் என்று எண்ணும் பொழுதுதான் அதற்கான விடையும் கிடைத்தது.
தேடலில் கிடைத்த வெற்றியை நினைத்து ஒரு சிகரெட்டை பற்றவைக்கும்பொழுது தீக்குச்சியின் ரிஷி மூலத்தை நோக்கி மனம் அடுத்த தேடலை தொடங்கியது . விடை கிடைப்பது எளிதாய் இருக்கும் என்று எண்ணியது தவறு போலும் தேடி தேடி களைத்து பொறுமையிழந்து காலருகினில் இருக்கும் கல்லை எட்டி உதைத்ததுதான் தாமதம் அந்தக்கல் சிறிது தூரம் தள்ளியிருக்கும் இன்னொரு கல்லின் மீது பட்டு நெருப்பாய் தெரித்து தேடலுக்கான விடையையும் தந்தது..
தேடல் மதியவேளையிலென்பதால் நா வறண்டு குளிர் பானம் ஒன்றை உறிஞ்சுகுழாயிலிருந்து உறிந்து கொண்டு இருக்கும் பொழுது உறிஞ்சுகுழாயின் ரிஷி மூலம் அறியவேண்டும் என்ற அவா ஏற்பட்டது நாவின் வறட்சியைவிட இந்த தேடலின் வறட்சி மிகவும் வாட்டியது , அடக்கமுடியாததொன்றுமல்ல இவ்வறட்சி கொஞ்சம் தேடினால் கிடைத்துவிடும் என்று நினைத்து கொண்டே கடற்கரையோரம் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது கடல் நீரில் மீன்களை துலாவியோ இல்லை நீரினை துலாவியோ நின்று கொண்டிருந்த கொக்கின் வறட்சியோடு என் தேடலின் வறட்சியும் சேர்ந்து ஒரே நேரத்தில் அடங்கிப்போனது.
அறைக்கு திரும்ப நேரமாகிவிட்டதா என்று கைக்கடிகாரத்தை பார்க்க அடுத்த தேடல் ஆரம்பித்து விட்டது வேலை நேரம் முடிந்தபடியால் அலுவலகத்த்ல் மேலாளர் அறை சென்று கையெழுத்திட்டு திரும்புகையில் எதேச்சையாக கைபட்டு உலக உருண்டை சுற்ற ஆரம்பித்திருந்த நிலையில் விடையும் கிடைத்துவிட்ட படியால் நிம்மதியோடு வீடு திரும்பினேன்...
இப்படி பல நேரங்களில் பல்லின் இடுக்கில் மாட்டி தவிக்கும் சிறு துகளை துலாவி துலாவிதேடும் நாவின் தேடலோடு என் தேடலும் ஒற்றுப்போகிறது துகள் கிடைத்ததும் துப்பியோ அல்லது விழுங்கியோ விட்டதும் அடங்கிப்போகும் அந்த கன நேர நிம்மதியை வார்த்தைகளால் எப்படி விவரிக்க இயலாதோ அப்படியே என் தேடலுக்கான விடைகள் கிடைத்ததும் மனம் அடையும் நிம்மதியையும் வார்த்தைகளால் விவரிக்க இயலவில்லை.இதை எழுதி முடித்திருந்த நேரம் மனம் அடுத்த தேடலுக்கான விடையை நோக்கி விரைகின்றது...
டிஸ்கி : ஏதேனும் ஒரு விஷயம் பற்றி இடுகை எழுத ஆரம்பிக்கும்பொழுது இடுகையில் இருக்கும் ஏதெனும் தெரியாத விஷயங்கள் பற்றி அறிய தேட ஆரம்பிக்கும் பொழுது இடுகையின் சாரம்சம் சுத்தமாக மறந்து தேடல் தொடங்கி கிடைத்த விடையின் தேடல் என்று சங்கிலி தொடராக நீண்டு தேடி தேடி கிடைக்கும் சொற்ப நேரமும் போய்விடுகிறது இதனால் இடுகை இடவும் நாட்கள் எடுத்துக்கொள்கிறது இன்னும் சில நாட்கள் இப்படியே போனால் சுத்தமாக இடுகையே எழுத முடியாத அளவிற்க்கு சென்றுவிடுமோ என்ற பயம் வாட்டுகிறது.இதை தவிர்க்க வழியேதும் இருக்கிறதா?அறிந்தவர்கள் கூறவும் :(
.
38 comments:
அந்த வழி தெரிந்தால் நாங்களும் எழுத மாட்டமா ...
பல விடயங்கள் இப்படி எனக்கும் தோன்றும் வசந்த் - ஆனால் உங்களை போன்று அதன் கடைசி வரை சென்று கண்டு பிடித்ததில்லை
எப்பனா முயற்சி செய்து பார்க்கிறேன்
விடாத தேடல். விடாது தேடல்.
ரை...ட்...டு...,
உனக்கு கால் கட்டு போட வேண்டிய நேரம் நெருங்கிருச்சி பங்காளி... அது மட்டும் தெளிவா தேடி கண்டு பிடுச்சிட்டேன்...
வாழ்க்கையே ஒரு தேடல்தானே வசந்த்!
தேடல் இல்லாத வாழ்க்கை சுவாரஸிமா இருக்காதுதானே... சோ, தேடுங்க.. தேடுங்க... தேடிக்கிட்டே இருங்கு:)
மனசை ஒருமுகப் படுத்தினால் இந்த பிரச்சினை சரியாகிவிடும். தியானம் செய்து பாருங்களேன்!
//இப்படி பல நேரங்களில் பல்லின் இடுக்கில் மாட்டி தவிக்கும் சிறு துகளை துலாவி துலாவிதேடும் நாவின் தேடலோடு என் தேடலும் ஒற்றுப்போகிறது துகள் கிடைத்ததும் துப்பியோ அல்லது விழுங்கியோ விட்டதும் அடங்கிப்போகும் ///
அடடா...அருமை மாப்பி..என் இப்போதைய நிலைமையும் தேடல்தான்...சரி அதவிடு ...வீட்டுல அம்மா "அத" தேடி முடிச்சுடாங்கனு கேள்விப்பட்டேன் வாழ்த்துகள்....
Priya said...
//வாழ்க்கையே ஒரு தேடல்தானே வசந்த்!
தேடல் இல்லாத வாழ்க்கை சுவாரஸிமா இருக்காதுதானே... சோ, தேடுங்க.. தேடுங்க... தேடிக்கிட்டே இருங்கு:)//
பிரியா நீங்கவேற.... இதெல்லாம் போய் சீரியஸா எடுத்துகிட்டு...
ஒரு தேடலின்போதே அடுத்த தேடலுக்கான ஆரம்பம் தொடங்கிவிடுவது
ஏன்னு எனக்கும் புரியல. தெரிஞ்சா எங்களுக்கும் சொல்லுங்க :-)))).
பதிவு நல்லா இருக்கு. அழகா எழுதி இருக்கீங்க. எதுக்கு பயம் வசந்த்? உங்களோட இந்த மனநிலைக்கு காரணம் களைப்பும், சலிப்பும்தான். இது எல்லாருக்குமே சில சமயம் எற்படறதுதான். இதை நாமேதான் சரி பண்ணிக்கணும். இதை வளர விட்டால், அப்பறம் எல்லா விஷயத்திலுமே சுவாரசியம் குறைந்து விடும், எதையுமே சிறப்பா பண்ண முடியாது. கொஞ்ச நாள் உங்க தேடலை எல்லாம் நிறுத்திட்டு, உங்க மனசுல என்ன எழுத தோன்றதோ அதை மட்டும் எழுதுங்க, இல்லை எதை சுவாரசியமா நினைக்கறீங்களோ அதை பண்ணுங்க, அதுவும் இல்லைன்னா அப்படியே ஓரிரு நாட்கள் எதை பத்தியும் நினைக்காம சும்மா விட்டுடுங்க, எல்லாம் தானா சரி ஆகிவிடும்.
ஆமாம் வசந்த், "தூறல்" நின்னு போச்சா!
ஒரே வழிதான் வசந்து..
தேடிக்கிட்டே இருங்க.. அப்போதான் எங்களுக்கு நல்ல பதிவு கிடைக்கும் :))
ஆமா.. ஆதிய எதுக்கு அம்புட்டு தேடினிங்க?? புலம்பல்கள் பக்கம் போனா இருப்பாரே.. ரொமாண்டிக் லுக்கோட :)
தேடல் என்றுமே வாழ்வின் உயர்ச்சிதான் வசந்த்.
இன்னும் தேடல் தொடரட்டும்.
தேடல் இல்லாமல் வாழ்க்கையா..
/துகள் கிடைத்ததும் துப்பியோ அல்லது விழுங்கியோ விட்டதும் அடங்கிப்போகும்/
உண்மையோ உண்மை!
வாழ்க்கையே ஒரு தீரா தேடல்தானே வசந்த்! தேடல் இல்லேன்னா வாழ்க்கை போரடித்து விடும். டேக் இட் ஈசி :)
இன்னும் சில நாட்கள் இப்படியே போனால் சுத்தமாக இடுகையே எழுத முடியாத அளவிற்க்கு சென்றுவிடுமோ என்ற பயம் வாட்டுகிறது.இதை தவிர்க்க வழியேதும் இருக்கிறதா?அறிந்தவர்கள் கூறவும் :(
//
இது தொண்டையில இருந்தது.. வசந்த் சொல்லிவிட்டார்!
இந்த தேடல் இல்லைனா வாழ்க்கை சுவரஸ்யமா இருக்குமா வசந்த்?..
தேவா கூட சேராத சேராதனு சொன்னா கேட்டீங்களா? எப்படி இருந்த நீங்க இப்படி ஆகிட்டீங்க.
ஏதேனும் ஒரு விஷயம் பற்றி இடுகை எழுத ஆரம்பிக்கும்பொழுது இடுகையில் இருக்கும் ஏதெனும் தெரியாத விஷயங்கள் பற்றி அறிய தேட ஆரம்பிக்கும் பொழுது இடுகையின் சாரம்சம் சுத்தமாக மறந்து தேடல் தொடங்கி கிடைத்த விடையின் தேடல் என்று சங்கிலி தொடராக நீண்டு தேடி தேடி கிடைக்கும் சொற்ப நேரமும் போய்விடுகிறது இதனால் இடுகை இடவும் நாட்கள் எடுத்துக்கொள்கிறது இன்னும் சில நாட்கள் இப்படியே போனால் சுத்தமாக இடுகையே எழுத முடியாத அளவிற்க்கு சென்றுவிடுமோ என்ற பயம் வாட்டுகிறது
......இதுதான், TOOMUCHBLOGTHINKANOKIPHOBIA .......
You will be fine!!!
தேடுங்க தேடுங்க நல்லா தேடுங்க.
ஆனா //கத்தரிக்கோல் எப்படி கண்டுபிடிக்கப்பட்டிருக்கும்// யாருங்க உங்களை இப்படி எல்லாம் யோசிக்க வைக்கிறது :-)
தேடினேன் வந்தது ..வசந்த் தேடினது கிடைச்சது ..ஹி ஹி சும்மா ..எப்போதும் போல சூப்பர் போஸ்ட் ,பகிர்வுக்கு நன்றி.
நிறைய பணம் சம்பாதிங்க சந்தோசமா இருங்க மாப்ள ,...
உங்களுக்கு ப்ளாகோஃபோமியானு வியாதி ஆரம்பிக்கிதுனு நெனக்கிறேன்.. சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க. அப்புறம் அம்னீசியா வந்துடும். நாங்களாவது நிம்மதியா இருப்போம்ல..
தேடலில் கிடைத்த வெற்றியை நினைத்து
ஒரு சிகரெட்டை பற்றவைக்கும்பொழுது \\\\\\\
ஓஓஓ...இதெல்லாம் நடக்கிறதா?
நான் சுத்தச் சொக்கத்தங்கம் என்றல்லவா
இவ்வளவு நாட்களும் நினைத்திருந்தேன்!
வசந்த் தேடல் தேடலென்று.....
அளவுக்கு அதிகமாய்ச் சிந்திக்க
வேண்டாம்
தேடலில் தொலையக் கூடும் உங்கள்
நின்மதி
அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சு
உங்கள் சிந்தனைகளை அரைமணி நேரம்
தியானம்,யோகா,உடற்பயிற்ச்சி,மெதுவோட்டம்,
ஜிம் போன்ற எதிலாவது....செலவு செய்யுங்கள்
வரவு நன்றாக அமையும் நண்பரே!
"தேடாதே...தொலைந்து போவாய்..." - சுஜாதா வரிகள்.
"ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கையில்லை.." - தலைவர் பாட்டு.
"தேடினேன் வந்தது..." - வசந்த் குரல்...!
தேடிக்கிட்டே இருங்க.. அப்போதான் எங்களுக்கு நல்ல பதிவு கிடைக்கும்
@ ஜமால் அண்ணா எப்பவாதா? ஏன் எப்பவுமே முடியாது? :)) நன்றிண்ணா
@ ராமலக்ஷ்மி மேடம் நன்றி
@ ஜெயக்குமார் இதுக்குத்தான் நான் யார்கிட்டயும் சொந்த விஷயங்களை பகிர்ந்துகிடறதே இல்லை :(( சாரி
@ ப்ரியா கண்டிப்பா தேடல் இல்லாத வாழ்க்கை சாத்தியம் இல்லைதான் நன்றி ப்ரியா
@ எஸ்.கே. அப்படியே ஆகட்டும் நன்றி நண்பா அறிவுரைக்கு..
@ சீமான்கனி டேய் கொலவெறியில் இருக்கேன் ஓடிடு !
@ சாரல் மேடம் யாருமே அதுக்கு விடை சொல்லவே இல்லையாம் :( நன்றி
@ மீனாக்ஷி மேடம் நீண்ட நாட்கள் கழித்து தங்கள் பின்னூட்டத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி மேடம் ஒரு வேளை இந்த நிலைக்கு சலிப்பும் களைப்பும் காரணமாய் இருக்கும் பட்சத்தில் தேடல் சோம்பேறித்தனமாய் இருந்திருக்குமே ! இந்த வலைத்தளத்தில் மத்தவங்களுக்கு உருப்படியா எதுவுமே சொல்லவில்லை ஆனால் எனக்கு நான் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன் . இப்படியிருக்கையில் இன்னும் இன்னும் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற தேடலைத்தான் சொன்னேன் மேடம் யெஸ்...
தூரல் எப்பவும் விழறதில்லையே எப்பவாச்சும் விழும் ...மிக்க நன்றி மேடம்
@ சுசி ஆஹா கண்டிப்பா இன்னிக்கு இந்த போஸ்ட்ல ஒருத்தன் அனானியா கமெண்ட் போட்டு உசுப்பேத்திவிட்டுட்டான் இனி ஆண்டவனால கூட உங்களைபோல நண்பர்களை என்கிட்ட இருந்து காப்பாத்த முடியாது என் வழிக்கே திரும்ப போறேன் :) நன்றி
@ ஹேமா நன்றி :))
@ ஸ்டார்ஜன் அதானே! நன்றி ஷேக்
@ அருணா மேடம் 100% ஸ்யூர் நன்றி ப்ரின்ஸ்
@ கவி சிவா ஒகே ! நன்றி
@ தேவா சார் நீங்களுமா? நன்றி சார்
@ நாடோடி யெஸ் நன்றி ஸ்டீபன்!
@ அருண் பிரசாத் :)
@ சித்ரா மேடம் ஹிஹிஹி நன்றி
@ சிங்ககுட்டி ஹ ஹ ஹா :))
@ சந்த்யா நன்றிப்பா
@ செந்தில் மாம்ஸ் எதாவது ஒரு வரியாவது படிச்சீங்களா?
@ விசா சார் :)
@ இந்திரா அப்படியா? அப்படில்லாம் ஒண்ணுமில்லீங்க உங்க நிம்மதியா நான் ஏன் கெடுப்பானேன்?
@ கலா வெளுத்ததெல்லாம் பால்ன்னு நினைக்கற்து தப்புன்னு புரிஞ்சுருக்குமே! ம்ம் அதெல்லாம் இல்லாட்டி பேச்சலர் லைஃப் முழுமடையாதே! :)) அறிவுரைக்கு நன்றி மேடம்
@ ஸ்ரீராம் ஹ ஹ ஹா நன்றி !
@ கலா நேசன் தப்பு பண்றீங்க!
அந்த வழி தெரிந்தால் எனக்கும் நீங்கள் சொல்லுங்கள்... தலைவரே. நம்மகிட்டயும் சரக்கு இல்லாமப் போயிருச்சோன்னு பயமா இருக்கு.
யோவ் கொமாரு சரக்கில்லைன்னு எப்பய்யா சொன்னேன்? சரக்கு உனக்கு எத்தன கிலோ வேணும் சொல்லியனுப்பு? யார்கிட்ட வந்து சரகில்லைன்னுட்டு பிச்சுப்புடுவேன் பிச்சு
தேடல் எல்லா உயிர்க்கும் அவசியமானது சார்!அருமையான பதிவு சார்!
http://salemdeva.blogspot.com/
சங்கிலி தேடல்கள் அருமை. கூகிள் 2 நாட்களுக்கு முன் மெதுவாக இயங்கியதன் காரணம் புரிந்தது.
தம் ?? விட்டுவிடுங்கள் நண்பரே...
இதுல இருந்து என்ன தெரியுதுன்னா வசந்த் வெட்டியா உக்காந்துட்டு இருக்கார்னு..... சார் கொஞ்சம் வேலையும் பாருங்க !!!!!!!
@ தேவா நன்றி நண்பா!
@ பின்னோக்கி சார் அவசியம் விட்டுடறேன் சார் நன்றி
@ ப்ரியா எல்லாம் ஒரு கோர்வைக்காக எழுதியது அதுக்காக ஆபிஸ்ல உட்கார்ந்து எழுதியதாக எண்ணவேண்டாம் ஆவ்வ்...
நன்றி ப்ரியா...
நுனிப்புல் மேயாம நல்ல ஆழமாத் தேடுறீங்க வசந்த்.. நல்ல விஷயம்.. இடுகைக்கும் அதே.. ரெண்டுக்கு பதிலா ஒன்னக் குடுத்தாலும், நல்ல தரமாயிருக்கும்..
தேடல தொலைச்சுட்டு உக்காந்திருக்கற மாதிரி இருக்கு எனக்கு இப்போ.. எதயும் தேடிப்பாத்து படிச்சு ரொம்ப நாளாச்சு :((
@ சந்தனா அதே அதே ரெண்டுக்கு பதிலா ஒண்ணு பெட்டரா இருக்கும்ன்னு தேட ஆரம்பிக்கிறதுதான் முடிய மாட்டேன்னுது இடுகைக்கும் அதேதான்னா அப்போ இன்னொன்னு வாழ்க்கை?
ஏன் தேடலை தொலைச்சிட்டீங்க? நேரமில்லையா? நன்றி சந்தனா!
Post a Comment