காதலியல்
காதல் சும்மா எடுத்தார் கைப்பிள்ளை மாதிரி யார்வேண்டுமானலும் காதலிக்கலாம், காதல் திருக்குறள் மாதிரி பொதுவுடைமை. ஆனால் அதை எடுப்பதற்க்கு முன்னால் அது தரக்கூடிய வலி சந்தோஷம் துக்கம் இழப்பு எல்லாத்தையுமே தாங்கிக்கொள்ளக்கூடிய மனநிலை நம்மிடம் இருக்கிறதா என்று ஒரு முறைக்கு பலமுறை காதல்மீட்டர் மூலம் அறிந்துகொண்டு எடுக்கவேண்டும்..
என்னடா இது காதல்மீட்டர் கேள்விப்படாத மீட்டரா இருக்கே அப்படின்றவங்களுக்கு இந்த மீட்டரைப்பற்றி சொல்லி விடுகிறேன்.இந்த காதல்மீட்டர் உங்கள் உடம்பில்தான் இருக்கிறது . ஏதாவது ஒரு காதல் ஜோடியை வழியில் பார்த்ததும் உங்களுக்கும் அதே போல் காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் வருமாயின் காதல் மீட்டர் வொர்க் ஆகுதுன்னு அர்த்தம். மாறாக ச்சீய்ய் இதெல்லாம் ஒரு பொழப்புன்றவங்களுக்கு அந்த மீட்டரே வேலை செய்யவில்லையென்று வைத்துக்கொள்ளலாம்.
ஆனால் எனக்கு காதலர்களைப்பார்த்தால் மட்டுமில்லாமல் எதைப்பார்த்தாலும் காதல் ஃபீவர் அதிகமாகிவிடுகிறது என்னோட காதல் மீட்டர் அளவுக்கு மீறியே வேலைசெய்கிறது அதனால் ஏற்பட்ட பின்விளைவுகளே பின்வருவன.. ( முடியலைல)
பழநிக்குச்சென்று
முருக பெருமானைப்பார்த்து
முருகா போற்றியென்று
சொல்வதற்க்கு பதில்
கவிதா போற்றியென்று
சொன்னதும் முருகன்
வேலையெடுத்து
குத்திடுவேன் ஓடிவிடு
என்பதுமாதிரியே
போஸ் கொடுக்கிறார்..
வேலையெடுத்து
குத்திடுவேன் ஓடிவிடு
என்பதுமாதிரியே
போஸ் கொடுக்கிறார்..
கடைக்குப்போய்
கால்கிலோ கத்தரிக்காய்
என்ன விலைன்னு
கேட்டு வாங்கிவாடான்னு
அம்மா சொன்னதும்
கடைக்குச் சென்று
கடைக்காரரிடம்
கால்கிலோ காதல்
என்ன விலையென்று
கேட்டு மானம் போகிறது...
புறநானூறு
எழுதியவர்களைப்பற்றி
பாடம் நடத்திக்கொண்டிருக்கும்
தமிழாசிரியரிடம்
ஏன் ஐயா காதல்நானூறென்று
யாரும் எழுதவில்லை
என்று கேட்டு காதலியின் முன்
ஆசிரியரிடம் குட்டு
வாங்கியதுதான் மிச்சம்...
காதலியும் நானும்
ஒரே பேருந்தில்
அருகருகே அமர்ந்து
பயணித்து கொண்டிருக்கும்
பொழுது எங்கப்பா போகணும்
என்று கேட்டுவரும்
நடத்துனரிடம்
காதலூருக்கு ரெண்டு டிக்கெட்
என்றேன் உடனே அவர்
பயணச்சீட்டுக்கு பதில்
வசைச்சீட்டு கொடுத்து
மானத்தை பேருந்தில் ஏற்றுகிறார்...
கணக்குப்பாடத்தில்
கணக்குகளை விரைவில்
போட்டு முடிப்பதற்க்கு
கால்குலேட்டர்
இருக்கின்ற மாதிரி
என்னுடைய காதல்பாட
கணக்குகளை சீக்கிரம்
போட்டு முடிக்க ஒரு
காதல்குலேட்டர்
இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்டா
என்றேன் நண்பனிடம்
துப்பிவிட்டான்...
என்னுடைய பிறந்தநாளுக்கு
புத்தாடை உடுத்தி
கொண்டாடிய நான்
என் காதல் பிறந்தநாளுக்கு
காதலுக்கு புத்தாடையெடுக்க
துணிக்கடைக்கு சென்றேன்
யாருக்கு துணி என்ன சைஸ்
என்ற சேல்ஸ்மேனிடம்
ஒரு வயது காதலுக்கு
என்றேன் சேல்ஸ்மேனும்
துப்பிவிட்டான்..
காதலியை நினைத்து
ஒரு வேலைகூட
செய்யாமல் வீட்டின்
மூலையில் உட்கார்ந்திருந்தேன்
என்னடா ஆச்சு என்று
கேட்ட அப்பாவிடம்
காதற்காடு காதல்சாமி
காதல்சாரத்தை
கட்பண்ணிட்டார்ப்பா
அதான் உடம்பு வேலை
செய்யமாட்டேன்னுது
என்று சொன்னதும்
அவரும் அவர் பங்கிற்க்கு
துப்பிவிட்டார்...
வாடா இன்னிக்கு
எங்கயாவது வெளியில போகலாம்
என்று காதலி சொன்ன சந்தோஷத்தில்
நண்பனை அலைபேசியில் அழைத்து
மச்சி இன்னிக்கு
சரக்கடிக்கப்போறேண்டா அதனால
காலேஜ்ல வாத்தியார் கேட்டா
நான் லீவ்ன்னு சொல்லிடு என்றேன்
எந்த பார் என்ன சரக்கு
சைட் டிஷ் என்ன ஆர்டர் பண்ணப்போற
நானும் வர்றேன்டா என்று
ஆவலாய் கேட்ட நண்பனிடம்
காதல் பாருக்கு போய்
காதல் பிராண்ட் சரக்கு அடிக்கப்போறேன்
சைட் டிஷ் காதலிதாண்டா என்று
சொல்லி முடிப்பதற்க்கு முன்பே
அருகில் அமர்ந்திருந்த காதலியும்
துப்பிவிட்டாள்...
இப்படி
எதைப்பார்த்தாலும்
காதலாய் தோன்றி
காதல்பித்து பிடித்து திரியும்
உன்னை என்ன செய்யலாமென்று
என்னிடம் கேட்ட அம்மாவிடம்
காதல்பாக்கத்திலிருக்கும்
காதல் ஆஸ்பிட்டலுக்கு
போய் செக் பண்ணிட்டு
வர்றேன்ம்மா என்றேன்
அம்மாவும் துப்பிவிட்டார்...
இப்பொழுது உங்கள் முறை வரிசையாக துப்பிவிட்டு செல்லவும்...
.
29 comments:
ஊரெல்லாம் கிறிஸ்துமஸ் கொண்டாடுற நாள்ல உனக்கு காதல்மஸ் கேட்குதா? படவா ரொம்ப ஓவராத்தான் போய்கிட்டு இருக்க நீ பீ கேர்ஃபுல்...
ஒரு மார்கமாத்தான் திரியுறீங்க...
வெளங்கிடும்...
புறநானூறு பற்றிய காவிதையினை படித்தேன்.... உண்மையில் காதல் கந்தஷஷ்டி கவசம், காதல் சுப்ரபாதம் என்ற பெயரில் எல்லாம் உன்னிமேனனின் ஆல்பம் பாடல்கள் இருக்கின்றன... தெரியுமா...?
இனிய காதல்மஸ் வாழ்த்துக்கள் அண்ணே
//புறநானூறு
எழுதியவர்களைப்பற்றி
பாடம் நடத்திக்கொண்டிருக்கும்
தமிழாசிரியரிடம்
ஏன் ஐயா காதல்நானூறென்று
யாரும் எழுதவில்லை
என்று கேட்டு காதலியின் முன்
ஆசிரியரிடம் குட்டு
வாங்கியதுதான் மிச்சம்...//
விட்டா ஏன் லவ்வாரயிணம் எழுதலைன்னு கேட்பீங்கபோல.....
ஹிஹிஹி
நல்லாருக்குண்ணே
//பழநிக்குச்சென்று
முருக பெருமானைப்பார்த்து
முருகா போற்றியென்று
சொல்வதற்க்கு பதில்
கவிதா போற்றியென்று
சொன்னதும் முருகன்
வேலையெடுத்து
குத்திடுவேன் ஓடிவிடு
என்பதுமாதிரியே
போஸ் கொடுக்கிறார்...//
ம்ம்ம்... காதல்பக்தி முத்திடுச்சா...
சீக்கிரம் கால்கட்டுக்கு ஏற்பாடு பண்ணவேண்டியதுதான்
ஹிஹிஹி
//காதல் பாருக்கு போய்
காதல் பிராண்ட் சரக்கு அடிக்கப்போறேன்//
அதுசரி.. காதல் சாமியை கும்பிட்டா இப்டித்தானே புத்தி போகும்..
காதல்குலேட்டரும் புகைப்படமும் சூப்பர்.
"ஊரெல்லாம் கிறிஸ்துமஸ் கொண்டாடுற நாள்ல உனக்கு காதல்மஸ் கேட்குதா? படவா ரொம்ப ஓவராத்தான் போய்கிட்டு இருக்க நீ பீ கேர்ஃபுல்..."
நான் சொல்றதுக்கு முன்னாடி முந்திகிட்டா எப்டி....?
Why Comment Moderation.....?
இப்பொழுது உங்கள் முறை வரிசையாக துப்பிவிட்டு செல்லவும்
நீங்க ஒருத்தர் துப்புனதே இவ்ளோ கொடுமையா இருக்கே இனி வ்ரவங்கல்லாம் வேற thuppuvaangalaaa
kalakantudhu vasanth thambi super ippadiye ezhudhungal vetri pera vazhthukal
ரொம்ப முத்திடுச்சு வசந்த்
கவிதா வா பேர்
நன்று :))
குளிரு ரொம்ப அதிகமோ......?
ஆமா என்ன புதுசா மாடரேசன்?
என்னய்யா இது போடுற கமென்ட்லாம் கெணத்துல போட்ட கல்லு மாதிரி கெடக்கு....!
hayyoo... bosssuuuu..
Pattaiya kelapputhu..
kathalukethu kaalamum neramum..
mmm..ellam oru marrkamathan suthuraingappaa...
vasanth thambi happy cristmas
தூஊஊஊஊ துப்பியாச்சுங்க, ரொம்ப ந்ல்லாயிருக்கு :-)
Happy Christmas
//ஏதாவது ஒரு காதல் ஜோடியை வழியில் பார்த்ததும் உங்களுக்கும் அதே போல் காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் வருமாயின் காதல் மீட்டர் வொர்க் ஆகுதுன்னு அர்த்தம்./
வேற மாதிரி காதலிக்கணும் அப்படின்னு தோனிச்சுனா அதுக்கு என்ன அர்த்தம் அண்ணா ..? ஹி ஹி ஹி
//கடைக்காரரிடம்
கால்கிலோ காதல்
என்ன விலையென்று
கேட்டு மானம் போகிறது..//
அட பாவமே ..? கேக்குறது தான் கேக்குறீங்க ஒரு கிலோ , கேட்டிருக்கலாம்ல .!
அட இத்தனை பேர் துப்பிட்டாங்களா ..?
விடுங்க அண்ணா , நான் துப்ப மாட்டேன் .. ஹி ஹி ஹி ..
உண்மைலேயே எனக்கு பிடிச்சிருக்கு .!
காதல்நிதி கிட்ட புகார் கொடுங்க :-)))))
அம்மாகிட்ட சொல்லி சீக்கிரமே கால்கட்டு போடணும் :-))
முதல் பத்தி முற்றிலும் உண்மை.
ஆமா கொஞ்ச காலமா ஒரு மார்க்கமாத்தான் இருக்க உடனடியா சரிபண்ணனும்..
சாமி வருகுது காதல் சாமி வருகுது நீ கேக்காத வரமெல்லாம் கேட்டுத் தருகுது :)
மச்சி காதல் தின்று காதல் குடித்து காதல் வாழ்வு வாழ காதல் சாமி காதல் கொடுக்கட்டும் :)
அசை போட்டுகிட்டே எழுதுங்க.. நாங்க அப்படியே ஓரமாய் நின்று கவனிக்கிறோம்.. சுழிக்கு பதிலா பிள்ளையார் படமேவா? :)
வட்டில் = சாப்பிடும் தட்டு?
அவ துப்பிட்டா... துப்பட்டாவைத்து துடைக்க வேண்டியது தானே...
Post a Comment