December 30, 2009

பம்பரம்...!


கூட்டுவாழ்க்கையினின்று
கட்டவிழ்த்து விடப்பட்ட
அக்னிகுஞ்சொன்று தொய்ந்துபோன
தொவையலாய் தொட்டுச்செல்லும்
மேகமாய் உரச எத்தனிக்கையில்
அகப்படும் அந்தாதியாய்
வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கும்
ஆதர்ச வேளையிலிருந்து
ஆத்மா ஒன்று வெளிப்படுகிறது...

அணில்குட்டியிடம் அன்றில்போய்
ஆண்யானையின் வீராப்பு
அன்றே அகப்பையில்
அகப்பட்டு அட்டையாய்
ஒட்ட எத்தனிக்கையில் ஓடாது
குமிழ்ந்து குட்டுப்படுகையில்
குட்டையில் ஊற்றப்பட்ட
தண்ணீராய் ஓடுகிறது மனது...

சுற்றிவிடப்பட்ட பம்பரம்
சுதியேற்றிவிடப்பட்டு சுற்றி சுற்றி
போதையில்லாமலே
ஓட்டையொன்றுமிட்டு
ஓடிப்போக நினைக்கையில் பிடிபட
சாட்டையொன்று
சத்தமின்றி சத்துகுறைவாய்
விரலிடுக்கிலிருந்து கோணப்
புன்னகை சிந்துகிறது...

சூம்பிப்போன விரலாய் இன்னும்
என் மோதிரவிரல் காரணம்
கதவிடுக்கோ கத்தியோ அல்ல
காற்றாடிநூலும் அல்ல
நங்கூரப்புன்னகையும்
நாணல் வட்டமும்
அதுகொண்டு இசைக்கப்பட்ட
இசையும் அல்ல...
என்றோ கேட்கப்பட்ட கேள்வியும்
அதற்கான விடையற்ற பதிலும்...




45 comments:

Anonymous said...

கேள்விகளுக்கு விடை இன்னதென்று தெரிந்துவிட்டால் தேடல் ஏது. வாழ்க்கையில் சுவை ஏது!!!

சுசி said...

பிரமாதம் உ பி.

அசத்துறீங்க போங்க.

வார்த்தைகள் சும்மா துள்ளி விளையாடுது.

சீமான்கனி said...
This comment has been removed by the author.
சீமான்கனி said...

சத்தமின்றி சத்துகுறைவாய்
விரலிடுக்கிலிருந்து கோணப்
புன்னகை சிந்துகிறது...

அடடே ..மாப்ளே வரிகள் நெஞ்சை தொடுது பம்பரம் விட்ட நாட்களை கண்முன்னே இழுத்து வந்து விடுகிறது சாட்டை....

என்றோ கேட்கப்பட்ட கேள்வியும்
அதற்கான விடையற்ற பதிலும்...

ப்பி...ப்பி....ப்பி....
டும்..டும்...டும்...

அருமை மாப்ஸ் எனக்கு பலூன் உனக்கு பம்பரமா???இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...மாப்பிளே...

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை

balavasakan said...

அருமை வசந்து... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Paleo God said...

என்றோ கேட்கப்பட்ட கேள்வியும்
அதற்கான விடையற்ற பதிலும்..//

ஆயிரமாயிரம் அர்த்தங்கள் சொல்கிறது ... அஷோக் அவர்களுடைய கவிதையை படித்து விட்டு இங்கு வந்தால்... ரெண்டு பேருமே இன்னிக்கு என்ன ஒரு வழி பண்ணிட்டீங்க போங்க ...::))

ஹேமா said...

வசந்து....கவிதையும் பம்பரமாய் எதையோ சொல்ல வேகமாய்த் தொடங்கிச் சுழன்று ...விடையற்ற கேள்வியோடு !

VISA said...

அழகான வார்த்தைகள். நேர்த்தியாய் கோர்த்திருகிறீர்கள். ஆனால் நான் எதிர்பார்த்து வந்த பீலிங் மிஸ்ஸிங். தலைப்பை பார்த்துவிட்டு வந்ததில் கொஞ்சம் ஏமாற்றமே. காரணம் ஒரு காலத்தில் பம்பரம் சிறுவர்கள் மத்தியில் பிரசித்தமான விளையாட்டு. எனவே அதை குறித்தான ஒரு நரேஷனாக இருக்கும் என்று தான் வந்தேன். அப்படி ஒரு பதிவு எழுத முயற்சியுங்கள். வாசிக்க ஆவலோடு இருக்கிறோம்.

Ramesh said...

சும்மா இருந்த உசிரொன்று
சும்மா வந்த புன்னகையில்
சிக்கி முக்கித் தவிக்குது
ஆனால்..
//என்றோ கேட்கப்பட்ட கேள்வியும்
அதற்கான விடையற்ற பதிலும்...//

நம்ம மனசையும் பிசைந்து எடுக்குது வசந்த்....
புத்தாண்டுவாழ்த்துக்கள்

அன்புடன் நான் said...

கவிதை புரிந்துக்கொள்ள கரடு முரடா இருக்குங்க (என் அறிவுக்கு)

கலையரசன் said...

யாருக்காக இந்த கவிதை???

இப்ப பயபுள்ளைங்க... கோவம் வந்தா கவித எழுத ஆரம்பிச்சுடுதுங்க!!

Anonymous said...

கவிதை களத்தில் வசந்த்... நல்லாயிருக்குங்க...

நட்புடன் ஜமால் said...

சுற்றிவிடப்பட்ட பம்பரம்
சுதியேற்றிவிடப்பட்டு சுற்றி சுற்றி
போதையில்லாமலே
ஓட்டையொன்றுமிட்டு
ஓடிப்போக நினைக்கையில் பிடிபட]]


ஹா ஹா ஹா ...

Deepan Mahendran said...

முதல் பாரா...அழகான வரிகள்....!!!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வசந்த் மச்சான்...!!!

முனைவர் இரா.குணசீலன் said...

படமும் கவிதையும் நன்றாகவுள்ளன..

அன்புடன் அருணா said...

நல்லாருக்கு!

S.A. நவாஸுதீன் said...

///////ஓடிப்போக நினைக்கையில் பிடிபட
சாட்டையொன்று
சத்தமின்றி சத்துகுறைவாய்
விரலிடுக்கிலிருந்து கோணப்
புன்னகை சிந்துகிறது...///////

அருமை வசந்த். இப்படித்தான் நல்லா ஏத்திவிட்டுட்டு குளிர் காயுது ஒரு கூட்டம்

கடைக்குட்டி said...

கோணப்புன்னகை சிந்துதா?? ///

யப்பா.. இப்போதான் ஜெட்லியோட அதிர்ச்சி முடிஞ்சு உங்க கட பக்கம் வந்தா .. நீங்க இந்தப் பக்கம் எனக்கு சம்பந்தமே இல்லாத பக்கம் எழுதி வெச்சு இருக்கீங்க..

நல்லாத்தான் இருக்கு.. வழக்கமான மொக்கைகளுக்கு நடுவில் தொடரவும் :-)

வால்பையன் said...

//சூம்பிப்போன விரலாய் இன்னும்
என் மோதிரவிரல் காரணம்
கதவிடுக்கோ கத்தியோ அல்ல
காற்றாடிநூலும் அல்ல
நங்கூரப்புன்னகையும்
நாணல் வட்டமும்
அதுகொண்டு இசைக்கப்பட்ட
இசையும் அல்ல...
என்றோ கேட்கப்பட்ட கேள்வியும்
அதற்கான விடையற்ற பதிலும்...//


எனக்கு சுண்டுவிரல்!

Starjan (ஸ்டார்ஜன்) said...

தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும் ...
மனம் தேடித்தேடி அலைகிறதே !!

ஜெட்லி... said...

//சுற்றிவிடப்பட்ட பம்பரம்
சுதியேற்றிவிடப்பட்டு சுற்றி சுற்றி
போதையில்லாமலே
ஓட்டையொன்றுமிட்டு
ஓடிப்போக நினைக்கையில் பிடிபட
சாட்டையொன்று
சத்தமின்றி சத்துகுறைவாய்
விரலிடுக்கிலிருந்து கோணப்
புன்னகை சிந்துகிறது...
//

நல்ல வரிகள்

SUFFIX said...

வாவ் வசந்த்!! நீங்களா? அசத்துறீங்களே.

Unknown said...

தேடல் தானே வாழ்க்கை ......

TCTV said...

enakku puriyavae illa
(mmmmmmmmmmmmmm)
aluvuraen


any way happy new year

ஸ்ரீராம். said...

காதல் வந்தால்தான் கவிதை வரும்...கோபம் போய் காதலா....என்ன கேள்வியோ என்ன பதிலோ எனக்கு ஒண்ணும் புரியவில்லை...அது சரி கவிதைக்கு படம் எங்கிருந்து எடுத்தீர்கள்? பழைய 'நடனம்' படம்... பழைய பைண்டிங் புக் ஏதும் வைத்திருப்பீர்கள் போல...

Ashok D said...

அன்பு தம்பி.. உங்கள் பம்பர விளையாட்டு நல்லாயிருக்கு :)

ருத்ர வீணை® said...

என்னமா யோசிக்கறாங்க !! அருமை வசந்த்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நல்லாதானே போயிட்டிருந்தது...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வசந்த்..
சும்மா டமாசு பண்ணினேன்...
கவிதை ஸுப்பர்.

Kala said...

சூம்பிப்போன விரலாய் இன்னும்
என் மோதிரவிரல் காரணம்….????

தெரியும் ம்ம்மம....மூஊஊஊஊச்சு
விடமாட்டேன்

என்றோ கேட்கப்பட்ட கேள்வியும்
அதற்கான விடையற்ற பதிலும்...!!!

ஓஓ தெரியும் தெரியும்
பாவம் வசந்துப் புள்ள! இதைப் படித்தாவது
புரிந்து கொண்டு சம்பந்தப்பட்டவர்கள்
விடையளிக்க... தந்தேன் வரம் மகனே!!

மோதிர விரல் இன்னும் காலியாமுங்கோ!
அறிக்கை விட்டிருக்கின்றார்..
விண்ணப்பங்கள் மூன்று மார்க்கமாகவும்
சென்றடைய முயற்சி!முயற்சி!!
.

சிநேகிதன் அக்பர் said...

நல்ல கவிதை.

புத்தாண்டு வாழ்த்துகள் வசந்த்.

கமலேஷ் said...

கலகுறீங்க நண்பா...
ரொம்ப நல்ல இருக்கு...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

M.S.R. கோபிநாத் said...

எனக்கு இன்னும் பல தடவை படித்தால் புரியும் போல ..

புத்தாண்டு வாழ்த்துக்கள் . வாழ்க வளமுடன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

இங்க எல்லாருமே நல்லாயிருக்குன்னு சொல்லி இருக்கிறதால.. சூப்பரப்பு.. (ஆனா உண்மையில எனக்கு புரியல.. அவ்வ்வ்வ்.. வார்த்தைகளின் தேர்வு நன்று ஆனால்அர்த்தம் எனக்குப் புரியல தல..)

ராமலக்ஷ்மி said...

பம்பரமாய் சுழன்றிருக்கின்றன வார்த்தைகளும் கவிதையிலே.

//என்றோ கேட்கப்பட்ட கேள்வியும்
அதற்கான விடையற்ற பதிலும்..//

அருமை வசந்த்.

நிலாமதி said...

கவிதையும் வலிகளும் அழகாய் இருக்கு...........புத்தாண்டு வாழ்த்துக்கள். நட்புடன் நிலாமதி

Thenammai Lakshmanan said...

//சாட்டையொன்று
சத்தமின்றி சத்துகுறைவாய்
விரலிடுக்கிலிருந்து கோணப்
புன்னகை சிந்துகிறது//

இன்னும் கோபம் தீரல்லைன்னு நினைகிறேன்.. கொஞ்சம் வருத்தமும் இருக்கே ஏன் ..?புத்தாண்டு மோதிர விரலுக்கு வைர மோதிரம் தரட்டும் ..

புத்தாண்டு வாழ்த்துக்கள் வசந்த்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அப்பு..
பம்பரம் உட்டதெல்லாம் போதும்..
அர்ஜெண்டா வெளியூர்காரனுக்கும் , உங்களுக்கும் ஒரு
மேட்டர முடிக்கச்சொல்லியிருக்கேன்..கமெண்டுல படிங்க..
http://pattapatti.blogspot.com/2009/12/blog-post_31.html

அதை முடிச்சுட்டு வந்து பம்பரம் உடுங்க..
நன்றி தலைவா..

அத்திரி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

வேலன். said...

அருமை நண்பரே...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்,
வேலன்.

சிநேகிதன் அக்பர் said...

உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

கண்மணி/kanmani said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

vasu balaji said...

மனம் நிறைந்த ஆசிகளும் புத்தாண்டு வாழ்த்தும்.. நிறைவாய் அமையட்டும் வரும் நாட்கள்..நைனா.

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி அகிலா...! சரியா சொன்னீங்க...

நன்றி சுசிக்கா..அவ்வ்வ் அப்டியெல்லாம் உசுப்பேத்திவிடாதீங்க அக்கா அப்புறம் வருத்தப்படுவீங்க...

நன்றி மாப்ள சீமான் கனி

நன்றி டி.வி.ஆர் சார்

நன்றி வாசு...

நன்றி பலாபட்டறை

நன்றி ஹேம்ஸ்...

நன்றி விசா சார் எழுதிடுவோம்...

நன்றி றமேஷ்

நன்றி கருணாகரசு வெறும் வார்த்தைகள் மட்டும்தான் கருணா கவிதையில்லைன்னு லேபில்ல போட்ருக்கேன் பாருங்க...

மாப்பி கவிதைன்னு ஒத்துகிட்டா சரிதான் நன்றி கலையரசன்

நன்றிங் தமிழ் மேடம்

நன்றி ஜமால் அண்ணா புரிஞ்சுடுச்சா அவ்வ்வ்...

நன்றி தீபன் மச்சான்

நன்றி குணா

நன்றி அருணா பிரின்ஸ்

நன்றி நவாஸ் கரெக்ட்டா சொன்னீங்க...

நன்றி கடைக்குட்டி அப்டியா ராஸா?

நன்றி வால் அதுசரி:)

நன்றி ஸ்டார்ஜன்

நன்றி ஜெட்லி

நன்றி சஃபி அட ம்ம்..

நன்றி பேநாமூடி ஆனந்த்

நன்றி சொர்ணா :)

நன்றி ஸ்ரீராம்..இல்லீங்க் கூகுள் கொடுத்ததுதான்...

நன்றி அசோக் அண்ணா...!

நன்றி ருத்ரவீணை

நன்றி பட்டா பட்டி :) வர்றேண்டி வெயிட்டு...

நன்றி கலா சரியாப்போச்சு ம்ஹ்ஹும் மாட்டிவிடுறீங்களே கலா...
:)

நன்றி அக்பர்

நன்றி கமலேஷ்

நன்றி கோபிநாத்

நன்றி கார்த்திக் சார் இல்லீங் சார் இது கவிதையில்லீங் சார் வெறும் வார்த்தைகள் தான்...

நன்றி ராமலக்ஷ்மி மேடம்

நன்றி நிலாமதி

நன்றி தேனம்மா

நன்றி அத்திரி

நன்றி வேலன்சார்

நன்றி அக்பர்

நன்றி கண்மணி

நன்றி நைனா :)

பின்னூட்டத்தில் வாழ்த்திய அனைத்து நண்பர்கள்,உற்றார்,உறவினர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளும் புத்தாண்டு வாழ்த்துகளும்..