August 7, 2010

கவிஞருடன் ஒருநாள் !!!!

கவிஞர் : சித்திரையிரவின்
                     நித்திரை கலைந்திருக்கிறேன்
                     நித்திரையில் வந்தவளால்
                     புண்பட்ட இதழ் இதமடைய
                     சூடான தேநீர் தருவாயா?
                     தந்தால் சொல்கிறேன்
                     நித்திரையில் வந்தவள்
                     யாரென்று!

கவிஞர் மனைவி : தூ காலங்காத்தாலே ஆரம்பிச்சுட்டீகளா ராஸா? எந்திரிச்சு பல்லு கூட விலக்கலை ஊத்தவாய்ல கவிதை சொல்ல ஆரம்பிச்சுட்டாரு...போங்க போயி பல் விலக்குங்க அப்புறம் டீ சாப்டலாம்...

கவிஞர் : ஏன் விலக்குகிறேன்
                     என்றே தெரியாமல் தினமும்
                     விலக்குகிறேன்
                     விரல் வலிக்க
                     விலக்கி விலக்கி
                     பார்த்தும் விலகவில்லை
                     பற்கள் இது என்ன மரபோ?

கவிஞரின் மனைவி : செருப்பு நேத்து ராத்திரி தின்ன பிரியாணி வாய்ல நின்னு ஊசிப்போய் இங்க கப்படிக்குது சீக்கிரம் பல்ல விலக்கிட்டு வாருமய்யா!

கவிஞர் : சூடான தேநீர் கேட்டேன்
                     சூடான்காரன் தேநீர்
                     கொடுக்கிறாய் ஏன்?
                     பாலில் தேநீர் உருவாக்கும்
                     வித்தை கற்கவில்லையா
                     பெண்ணே?

கவிஞரின் மனைவி : வெங்காயம் பால்காரனுக்கு மூணு மாச கடன் பாக்கி இதுல பால் டீ வேணுமாம்ல குடுத்தத குடிச்சுட்டு வேலைக்கு கிளம்ப வேண்டிய வேலைய பாருங்க ராஸா!!!!

கவிஞர் : ஒரு வாளி கடலில்
                     நான் குளிக்கும்
                     ஆனந்த குளியலே
                     ஒரு கவிதையாய்...
                     ஒருவேளை
                     ஆனந்த விகடனில்
                     வருமோ?

கவிஞரின் மனைவி : பிபிசியில வரும் பிச்சுபுடுவேன் பிச்சு குளிச்சுட்டு சீக்கிரம் வாங்க சாப்பாடு எடுத்து வச்சுருக்கேன் தின்னுட்டு கிளம்புங்க...

கவிஞர் : இலைச்சோறு
                     சாப்பிடாமல்
                     இளைத்துவிட்டேன்
                     என்கிறேன்
                     நீயோ பழைய
                     சோறு சாப்பிடுங்கள்
                     பருத்து விடுவீர்கள்
                     என்கிறாய் எந்த ஊர்
                     நியாயம் இது?

கவிஞரின் மனைவி : மீந்தது யார் தின்னுவா உங்களை தவிர ? என் ராசா இல்ல மதியானத்துக்கு சூடா கொடுத்தனுப்புறேன் சாப்பிட்டு கிளம்புங்க என் கண்ணுல்ல...

கவிஞர் : பொடி போட்டுக்கொண்டே
                     பொடிநடையாய்
                     நடக்கிறேன்
                     பொறம்போக்கு
                     வீட்ல சொல்லிட்டு
                     வந்துட்டியா?
                     என்கிறான் சைக்கிள்
                     ஓட்டும் பொடிப்பையன் !

மனைவியின் மனசாட்சி : பிசினாரி காசு கொடுத்து பஸ்ல போக மாட்டீங்களாக்கும்?

கவிஞர் : ஓடிபோய் பஸ் ஏறி
                     பிடிங்க துட்டு
                     கொடுங்க சீட்டு
                     என்றேன் ஓட்டுனரிடம்
                     யோவ் கண்ணாடிய சரியா
                     போடுமய்யா நடத்துனர்
                     பின்னாடி இருக்கார்
                     என்றவரிடம்
                     எப்படிச்சொல்வேன்
                     மனைவியின் பிக்கல்
                     தாங்காமல் மேலோகத்திற்க்கு
                     செல்ல சீட்டு கேட்டது
                     அவரிடம் தானென்று !

மனைவியின் மனசாட்சி : சார் அவருக்கு ஒரு சீட்டு கொடுத்துடுங்க சார்!!!!!

முற்றும்...




.

52 comments:

velji said...

கவிஞருக்கு சீட்டு கொடுக்க வீட்டுக்குள்ளேயே ஆள் இருக்கா..ஹா..ஹா..

சுவராசியமான கவிதையும்,உரையும்!

சீமான்கனி said...

ஐ வடை...

சுசி said...

நானும் என்னமோ வசந்த் இன்னைக்கு கவிதைல கலக்க போறார்னு வந்தா.. வந்துச்சு பாரு தூ..

அங்க ஆரம்பிச்சேன் சிரிக்க..

அசத்திட்டேள் போங்கோ :))))

vanathy said...

vasanth, super. haha..

sathishsangkavi.blogspot.com said...

வசந்த் வித்தியாசமான சிந்தனையில் கலக்கீட்டிங்க...

உண்மையிலேயே கவிஞர் வீட்டில் இப்படி நடக்குதோ என்னமோ?

Unknown said...

me the 6th..............

different way of thinking

nice.anna

Unknown said...

நல்லா இருக்குங்க. அதிலும் பழைய சோறு பிரமாதம்.

kavisiva said...

இப்படி கவிதை(?!) எழுதிட்டு கமெண்டையும் நீங்களே எழுதிட்டா நாங்க என்னத்த எழுதறது?

ஆனால் நல்லா சிரிச்சேன் வசந்த்.

கவிஞர் : சித்திரையிரவின்
நித்திரை கலைந்திருக்கிறேன
நித்திரையில் வந்தவளால்
புண்பட்ட இதழ் இதமடைய
சூடான தேநீர் தருவாயா?
தந்தால் சொல்கிறேன்
நித்திரையில் வந்தவள்
யாரென்று!

கவிஞர் மனைவி: அது கனவுல புண்பட்ட இதழ் இல்லை என் கவிஞரே குறட்டை சத்தம் தாங்காமல் நான் போட்ட சூடுதான்!

கவிஞர் : ஏன் விலக்குகிறேன்
என்றே தெரியாமல் தினமும்
விலக்குகிறேன்
விரல் வலிக்க
விலக்கி விலக்கி
பார்த்தும் விலகவில்லை
பற்கள் இது என்ன மரபோ?

கவிஞர் மனைவி: என்னது பல்லு விலக மாட்டேங்குதா ராசா? இங்க வாங்க மொத்தமா கழற்றி எடுத்துடறேன்

கவிஞர் : சூடான தேநீர் கேட்டேன்
சூடான்காரன் தேநீர்
கொடுக்கிறாய் ஏன்?
பாலில் தேநீர் உருவாக்கும்
வித்தை கற்கவில்லையா
பெண்ணே?

கவிஞரின் மனைவி : கம்முன்னு கொடுத்ததை குடி இல்லேன்னா சூடா சூடானுக்கு அனுப்பிடுவேன் ஜாக்கிரதை

கவிஞர் : ஒரு வாளி கடலில்
நான் குளிக்கும்
ஆனந்த குளியலே
ஒரு கவிதையாய்...
ஒருவேளை
ஆனந்த விகடனில்
வருமோ?

கவிஞரின் மனைவி : ம்ம்ம்ம் ஜூனியர் விகடனில் வரும் லொள்ளு செய்த கணவனை மனைவி குத்திக் கொலைன்னு

கவிஞர் : இலைச்சோறு
சாப்பிடாமல்
இளைத்துவிட்டேன்
என்கிறேன்
நீயோ பழைய
சோறு சாப்பிடுங்கள்
பருத்து விடுவீர்கள்
என்கிறாய் எந்த ஊர்
நியாயம் இது?

கவிஞரின் மனைவி : பழைய சோறு வேண்டாமா ராசா. இந்தாங்க சூடா சுடுதண்ணி குடிச்சுட்டு கிளம்புங்க

கவிஞர் : பொடி போட்டுக்கொண்டே
பொடிநடையாய்
நடக்கிறேன்
பொறம்போக்கு
வீட்ல சொல்லிட்டு
வந்துட்டியா?
என்கிறான் சைக்கிள்
ஓட்டும் பொடிப்பையன் !

மனைவியின் மனசாட்சி : யோவ் ஒழுங்கா ஓரமா நடந்து போய்யா. பையன் ஏதோ சொல்லிட்டாங்கறதுக்காக பஸ்ஸுல ஏறின ராத்திரிக்கு சுடுதண்ணி கூட கிடையாது சொல்லிட்டேன்

கவிஞர் : ஓடிபோய் பஸ் ஏறி
பிடிங்க துட்டு
கொடுங்க சீட்டு
என்றேன் ஓட்டுனரிடம்
யோவ் கண்ணாடிய சரியா
போடுமய்யா நடத்துனர்
பின்னாடி இருக்கார்
என்றவரிடம்
எப்படிச்சொல்வேன்
மனைவியின் பிக்கல்
தாங்காமல் மேலோகத்திற்க்கு
செல்ல சீட்டு கேட்டது
அவரிடம் தானென்று !

மனைவியின் மனசாட்சி : ட்ரைவர் சார் ட்ரைவர் சார் நீங்க அவருக்கு சீட்டு கொடுத்து என்னோட சான்சை கெடுத்துடாதீங்க சார். நானே கொடுத்துக்கறேன்

Mahi_Granny said...

"ஒருவேளை ஆனந்த விகடனில் வருமோ ?" ஆ. விகடனில் என்ன கவிஞர் வசந்தின் தனிப் படைப்பாகவே வரும் . had trouble in sending comment for 2hrs

sakthi said...

மாத்தி மாத்தி யோசிச்சு ஒரு மாதிரி ஆயிட்டே போ!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யார் அந்த கவிஞர் மாப்பு?

Madhavan Srinivasagopalan said...

//மனைவியின் மனசாட்சி : சார் அவருக்கு ஒரு சீட்டு கொடுத்துடுங்க சார்!!!!!//

superb.

priyamudanprabu said...

kalakkal

Anonymous said...

வசந்த்,, ஹிஹி இது தமிழுக்கு எழுதினது தானே :)) குட்

Jey said...

யோவ் ரொம்ப சிரிக்க வைக்காதையா, வயிரு வலிக்குதில்ல.....

அப்புரம் நீரு எழுதினது கவிதையெல்லாம் கிடையவே கிடையாது, எனக்கெல்லாம் புரியுரா மாதிரி எழிதிட்டா அது கவுஜ கணக்குல சேராது ஒய்.

Jey said...

// velji said...
கவிஞருக்கு சீட்டு கொடுக்க வீட்டுக்குள்ளேயே ஆள் இருக்கா..ஹா..ஹா..///

இல்லை வேல்ஜி, இவரு வீட்ல மட்டும்தான் சீட்டு குடுக்க, ஆள் உருவாயிருக்காக, பின்னே இந்த மொக்கைலேர்ந்து தப்பிக்க என்ன வழி?

Jey said...

பங்காளி ஒரே ஆச்சர்யம் போ, பின்னூட்டம் போட்டவுடனேயே புப்லிஷ் ஆகுது... வழக்கமா 5 மணி ஃஏரத்துக்கு அப்புறம் தான் புப்ளிஷ் ஆகும்.... அசத்திட்ட போ... ம்ஹூம் இன்னொரு ஓபன் கிரவுண்ட்.... நோட் பண்ணுங்கயா ..நோட் பண்ணுங்கயா...

VISA said...

கலக்கிட்ட அப்பு

நாடோடி said...

க‌விஞ‌ரின் க‌விதையும், ம‌னைவியின் உரையும் ந‌ல்லா இருக்கு வ‌ச‌ந்த்...

க‌விசிவா என்ன‌ புல் பார்ம்ல‌ இருக்கீங்க‌ போல‌.. ஹி..ஹி..

நர்சிம் said...

நல்லா எழுதி இருக்கீங்க பிரபு.

நர்சிம் said...

வசந்த்.

Katz said...

இம்... ஒரே கவிதை மழைதான்...

Anonymous said...

kaalam kaalamaai kavingnargal pozhappu pondattikitta thittu vanguvadhu thana.....

சிநேகிதன் அக்பர் said...

கவிஞரோட நிலமை ரொம்ப பாவம் :)

கவிதை டைமிங்கா இருக்கு வசந்த்

சத்ரியன் said...

வசந்த் ராஸா,

நாங்க எல்லாம் கவிதைன்ற பேர்ல எதுனா தொடர்ந்து எழுதவா? வேணாமா?

( நல்லதொரு மாறுபட்ட சிந்தனை வசந்த்.)

Unknown said...

மாப்ள நீ ஒரு மாசத்துக்கு காதல் கவிதைகளா படிச்சா கண்டிப்பா திருந்துவே...

க.பாலாசி said...

செம கலகலப்பா இருக்குங்க வசந்த்...

R.பூபாலன் said...

* எவ்வளவு அருமையான வரிகள்.

* ஒவ்வொரு கவிதைகளும் உள்ளத்தை தொடுகின்றன.

* ஒவ்வொரு கவிஞரின் வீட்டிலும் நடப்பதை நகைச்சுவையாக சொல்லிவிட்டீர்கள்.....

* நன்றாக இருக்கிறது வசந்த் அண்ணா....

-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
இப்புடிலாம் சொல்லி உங்கள பாராட்டுவோம்னு பாத்தீயலோ....
-
-
-
-
-
-ச்சும்மா சொன்னனே .
ச்சும்மா சொன்னனே .
ச்சும்மா சொன்னனே .

இப்ப என்ன பண்ணுவிங்க....?
இப்ப என்ன பண்ணுவிங்க....?

நாங்கல்லாம் பல்லு தேய்க்காம மனுஷ மக்களோட பேசவே மாட்டோம்பா...!

R.பூபாலன் said...

* எவ்வளவு அருமையான வரிகள்.

* ஒவ்வொரு கவிதைகளும் உள்ளத்தை தொடுகின்றன.

* ஒவ்வொரு கவிஞரின் வீட்டிலும் நடப்பதை நகைச்சுவையாக சொல்லிவிட்டீர்கள்.....

* நன்றாக இருக்கிறது வசந்த் அண்ணா....

-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
இப்புடிலாம் சொல்லி உங்கள பாராட்டுவோம்னு பாத்தீயலோ....
-
-
-
-
-
-ச்சும்மா சொன்னனே .
ச்சும்மா சொன்னனே .
ச்சும்மா சொன்னனே .

இப்ப என்ன பண்ணுவிங்க....?
இப்ப என்ன பண்ணுவிங்க....?

நாங்கல்லாம் பல்லு தேய்க்காம மனுஷ மக்களோட பேசவே மாட்டோம்பா...!

ஜெயந்தி said...

கவிஞர்களை சரியாக காட்டிக்கொடுத்துவிட்டீர்கள். இந்த கவிஞர்கள் தொல்லை தாங்கல.

பா.ராஜாராம் said...

உதை, படவா! :-))

பின்னோக்கி said...

நகைச்சுவையான கற்பனை.

அப்புறம் யார் அந்த கவிஞர்ன்னு சொல்லவே இல்லையே. பா.ரா கோபப்படுறதப் பார்த்தா !! :)

சேலம் தேவா said...

கவிதைய வச்சு கலக்கீட்டீங்க!!!

தமிழ் உதயம் said...

நன்றாக இருக்கிறது வசந்த் ... கவிதை,கற்பனை.

Anonymous said...

வசந்த்... எப்பிடி எப்பிடி பா உங்களால் இப்பிடி எல்லாம் யோசிக்க முடியறது ?சூப்பர் ..ரொம்ப சிரித்தேன் ..ரசித்தேன் ..நன்றி

Starjan (ஸ்டார்ஜன்) said...

கலக்கல் வசந்த்.

அ.சந்தர் சிங். said...

கவிஞர் : ஒரு வாளி கடலில்
நான் குளிக்கும்
ஆனந்த குளியலே
ஒரு கவிதையாய்...
ஒருவேளை
ஆனந்த விகடனில்
வருமோ?

கவிஞரின் மனைவி : பிபிசியில வரும் பிச்சுபுடுவேன் பிச்சு குளிச்சுட்டு சீக்கிரம் வாங்க சாப்பாடு எடுத்து வச்சுருக்கேன் தின்னுட்டு கிளம்புங்க...



migavum arumai.

padithen

rasiththen

siriththen.

சாந்தி மாரியப்பன் said...

அந்தக்கவிஞ்சர் யாருங்க :-))))

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

:))) உங்க வூட்டுக்காரம்மா இப்பிடித் தான் இடிக்கப் போறாங்க.. சாக்கிரதை..

கவிசிவாவோட பின்னூட்டமும் கலக்கல்..

ஹேமா said...

யாரும் இப்பிடி ஒரு பதிவு போட்டே இருக்கமாட்டாங்க !

Kala said...

நித்திரையில் வந்தவள்
யாரென்று!\\\\\

கவிஞரே!எனக்கு மட்டும் உங்கள் திருவாயால்
மலர்தருளுங்கள் யாரந்த வசந்தகுமாரியென்று?

இவைகள் கற்பனையா? நிஜமா?எனக் கேட்கமாட்டேன்
ஏனென்றால்......!!......??

'பரிவை' சே.குமார் said...

சுவராசியமான கவிதையும்,உரையும்!

ஜெய்லானி said...

தெனமும் வீட்டில இப்பிடி பட்ட பூசதானா நடக்குது சொல்லவே இல்ல..!!

Anonymous said...

நாளா தான் இருக்கு.
ஆனா கவிஞரோட மனைவி அநியாயத்துக்கு மரியாதையா பேசுறாங்க..

ராமலக்ஷ்மி said...

ஊருக்குப் போய் வந்து பார்த்தால் ஒவ்வொரு பதிவும் ஒரு சிக்ஸராய்!

இந்தப் பின்னூட்டம் இந்தப் பதிவுக்கானது:)!

ப்ரியமுடன் வசந்த் said...

@ வேல் ஹ ஹ ஹா ம்ம் நன்றி வேல்

@ சீமான்கனி மாவு வடைதான் கேள்வி பட்டிருக்கேன் இதென்னடா ஐ வடை ஓ நீ வடையா? நன்றி மாப்ள

@ சுசி திட்டலைல ? அப்பா சந்தோஷம் நன்றி

@ வானதி நன்றிங்க

@ சங்கவி உங்களுக்குத்தான் தெரியும் என்கிட்ட கேட்டா எப்டி?
நன்றிங்க

@ சிவா நன்றி பாஸ்

@ கவிசிவா :)))))))))))))

விழுந்து விழுந்து சிரிச்சாச்சு நல்ல சென்ஸ் ஆஃப் ஹுயூமர் இருக்கு உங்களுக்கும் முதல் கவிதைக்கு போட்ட கமெண்ட்தான் டாப்பு...
நன்றி கவிசிவா

@ மகிம்மா ஹ ஹ ஹா வேணாங்க நாடு தாங்காது மிக்க நன்றிம்மா...

@ ரமேஷ் மாம்ஸ் நீங்களாக்கூட இருக்கலாம் நன்றி மாம்ஸ்

@ மாதவன் சார் மிக்க நன்றி

ப்ரியமுடன் வசந்த் said...

@ பிரபு நன்றி மச்சி

@ மயில் கவிஞின்னு நான் போடலையே கவிஞர்ன்னுதான்னே சொல்லியிருந்தேன்...:)))

@ ஜெய் :)))))))) யோவ் உனக்கு ரெண்டு மூணு சைட் மெயில்ல அனுப்புறேன் படிச்சுட்டு உயிரோட இருந்தா பொழச்சு வாங்க பார்க்கலாம்...

@ விசா சார் மிக்க நன்றி

@ ஸ்டீபன் மிக்க நன்றி பாஸ்

@ நர்சிம் பேர் மறக்குற அளவுக்கு ஆய்ப்போச்சு போல :((((
நன்றி பாஸ்

@ வழிப்போக்கன் நன்றிங்க

@ தமிழரசி மேடம் அஃக அஃக உங்க வீட்டுக்காரு நிலமை பாவம்தான்...

@ அக்பர் அண்ணா ம்ம் நன்றி

@ சத்ரியன் அண்ணா ஹெ ஹெ ஹெ ஹெ ஹேய் கவிஞரே நீங்களே இப்டி சொல்லலாமா? நன்றிண்ணா

@ செந்தில் மாம்ஸ் அல் ரெடி படிச்சுட்டுத்தான் மாம்ஸ் இருக்கேன் தபூ சங்கரோட நெஞ்சவர்ணக்கிளி :)

ப்ரியமுடன் வசந்த் said...

@ சக்திக்கா அப்டித்தான் நானும் நினைக்கிறேன் நன்றி சகோ..

@ பாலாசி நன்றிங்க :)

@ பூபாலன் ஏன் இந்த கொ.வெறி :)))))

@ ஜெயந்தி மேடம் அதே அதே நன்றி மேடம்...

@ பாரா அண்ணா இதுக்கும் உங்களுக்கும் சம்பந்தமிருக்க மாரியே இருக்கு நீங்க மிரட்டுறதப்பார்த்தா? :) நன்றிண்ணா

@ பின்னோக்கிசார் அப்படித்தான் போல சார் நன்றி

@ சேலம் தேவா நன்றிங்க

@ தமிழ் உதயம் ரமேஷ் சார் மிக்க நன்றி

@ சந்த்யா நன்றிங்க

@ ஸ்டார்ஜன் மிக்க நன்றி தல

@ சிஎஸ் நன்றி நண்பரே :)

@ நேசமித்ரன் நன்றிங்கண்ணா..

@ சாரல் மேடம் மிக்க நன்றி ஒரு கவிஞரே இப்டி கேள்வி கேட்கலாமா?

@ சந்தனா நன்றிங்க

@ இராமசாமி கண்ணன் நன்றிங்க

@ ஹேமா ஏன் ? நன்றி

@ கலா ஏ.இ.கொ.வெ? நிஜம் கலந்த கற்பனை கலந்த நிஜம்ன்னு வச்சுகிடலாம் மேடம்! நன்றி

@ சே குமார் நனறி

@ ஜெய்லானி யோவ் வீடே இன்னும் கட்டல :) நன்றி தல

@ இந்திரா அநியாயத்துக்கு மரியாதையா பேசறவங்கதான் மனைவியாம்.. :)))) நன்றி

@ ராமலக்ஷ்மி மேடம் ஊர்ல இருந்து வந்தாச்சா? அப்பா ஒவ்வோரு போஸ்டும் படிச்சு பின்னூட்டம் அளித்தது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது மேடம் நன்றி..!

தருமி said...

// விலக்குகிறேன்
விரல் வலிக்க
விலக்கி விலக்கி//

ஒழுங்கா விளக்கியிருந்தா எல்லாம் நல்லா இருந்திருக்கலாம்.

Prathap Kumar S. said...

இதுலேருந்து என்னதெரியுதுன்னா...அந்த கவிஞரோட மனைவி ஒரு ஞானசூன்யம்...

நாமக்கல் சிபி said...

வசந்த்! அனுபவக் கவிதை அருமை!

-தோழன் மபா, தமிழன் வீதி said...

நல்ல கவிதை. சுவீட்ட எடு..... கொண்டாடு......!!!