எனக்கு உன் மீதான காதல் கொஞ்சம் அதிரசமும் முறுக்கும் சேர்ந்து சாப்பிடுவது போன்ற அனுபவத்தை கொடுக்கிறது என்றதும் கொல்லென சிரித்துவிட்டாள் "போடா தின்னிப்பண்டாரம்" என்றவாரே, ஆம் உன் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும் நான் உன்னை மட்டுமே தின்னும் தின்னிப்பண்டாரமென்று...
ஒவ்வொருநாளும் ரொம்ப அழகாகிகிட்டே வர்றியே எனக்கும் உன் அழகை கொஞ்சம் கொடுக்கமாட்டியா? என்று உன் ஆருயிர்த்தோழி உன்னிடம் கேட்டபோது பக்கத்திலிருந்த நான் உன்னுடைய கைக்குட்டையை பிடுங்கி தோழியிடம் கொடுத்து "இந்தாங்க பிடிங்க இந்த கைக்குட்டைதான் இவளோட அழகெல்லாம் சேமித்துவைத்திருக்கிற பேங்க் இதுல உங்களுக்கு எவ்வளவு அழகு வேணும்னாலும் எடுத்துகிடலாம் செக் இல்லாமலே என்றேன்" உன் தோழி என்னை திட்ட ஆரம்பித்திருந்தாள் நீ சிரிக்க ஆரம்பித்திருந்தாய்...!
கடைவீதிக்கு சென்றிருந்த போது அங்கிருந்த ஒரு புடவைக்கடையில் புடவைகட்டியிருந்த பொம்மையைப்பார்த்து அழகா இருக்குல்ல என்றாய் நீ, நான் அதன் அங்க அழகுகளை வர்ணித்து அந்த பொம்மைக்கு மட்டும் உயிர் இருந்திருந்தால் அதைத்தான் காதலித்திருப்பேன் என்றேன் நீ என்னை கெட்ட வார்த்தையில் திட்ட திட்ட சிரித்துக்கொண்டிருந்த என்னைப்பார்த்து "இவ்ளோ அசிங்கமா திட்டுறேனே உனக்கு சூடு சுரணையே இல்லையா" என்றாய் ஹும் "கெட்டவனா இருந்த என்னையே நல்லவனா மாற்றிய சக்தி உனக்கிருக்கிறப்போ நீ பேசும் கெட்ட வார்த்தைகள் மட்டும் நல்லவார்த்தையாய் மாறியிருக்காதா என்ன?" என்றேன் "உன்னையெல்லாம் திருத்தவே முடியாதுடா" என்று தலையிலடித்துக்கொண்டாய்...!
"திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன" என்று எவன் சொல்லிவிட்டுச்சென்றான் முதலில் அவனைக்கூப்பிட்டு அந்த பழமொழியை மாற்றச்சொல்லவேண்டும் என்றேன் ஏன் என்றாய்? இல்லை இல்லை "நான் ஒரு சொர்க்கத்தையே திருமணம் செய்யப்போகிறேனே" அப்போ அந்த பழமொழி தப்புத்தானே? அதான் என்றேன் வெட்கப்பட்டாய் நீ...
காலை டிபன் பரிமாறிக்கொண்டிருந்த உன்னிடம் "உனக்கு ஏன் தாலிகட்டுனேன்னு நினைச்சு நினைச்சு வருத்தமா இருக்குடி" என்றேன் நான் , "ஏன் இப்போ நான் உன்னை என்ன கொடுமை பண்ணேன்னு இவ்ளோ சலிச்சுக்கிற என்றாய்" முகவாயை சிலிப்பியபடி "இல்லை நானும் தினமும் அவுட்டாகிகிட்டே இருக்கேன் இந்த தாலி மட்டும் அவுட்டே ஆகாம நாட் அவுட் பேட்ஸ்மேனா விளையாடிகிட்டே இருக்கே அதான்" என்றேன், "ச்சீ போடா வெட்கங்கெட்டவனே" என்கிறாய்...
கவிதை எழுதி எழுதி எதுவும் சரிவராமல் அதை கசக்கி தூரத்திலிருந்த குப்பைத்தொட்டியில் போட்டுக்கொண்டிருந்தாய் நான் அதை நான் வீடியோவாக என் கேமிராவில் படம்பிடித்துக்கொண்டிருந்தேன் "ஏண்டா இதெல்லாம் படம்பிடிக்கிற"என்றாய் கொஞ்சம் சிணுங்கலாக, இல்லை "பிற்காலத்தில் நம் மகனிடம் உன்னோட அம்மா ஒரு கவிதைப்பந்து வீராங்கனை என்று போட்டுக்காட்டவேண்டுமே அதான்" என்றேன் நீயோ "போடா பொறுக்கி" என்றாய்...
41 comments:
அன்பின் வசந்த் - தம்பதிகளுக்கிடையே ஊடல் - கொஞ்சல் - இயல்பானது - கற்பனை வளம் கொடி கட்டிப் பறக்கிறது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ம்ம்ம் .. பொண்ணு பார்க்க ஆரம்பிக்கலாம் வசந்த்
கற்பனைகள் அற்புதம்!!
கற்பனைகள் அருமை நண்பரே.. காதலுக்கே காதலிக்க கற்று கொடுப்பாய் போலிருக்கே..
காதல் இளவரசன் என்றால் சும்மாவா...
//"கெட்டவனா இருந்த என்னையே நல்லவனா மாற்றிய சக்தி உனக்கிருக்கிறப்போ நீ பேசும் கெட்ட வார்த்தைகள் மட்டும் நல்லவார்த்தையாய் மாறியிருக்காதா என்ன?" என்றேன் "உன்னையெல்லாம் திருத்தவே முடியாதுடா" என்று தலையிலடித்துக்கொண்டாய்...!//
செம கலக்கல் அண்ணே,
//"திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன" என்று எவன் சொல்லிவிட்டுச்சென்றான் முதலில் அவனைக்கூப்பிட்டு அந்த பழமொழியை மாற்றச்சொல்லவேண்டும் என்றேன் ஏன் என்றாய்? இல்லை இல்லை "நான் ஒரு சொர்க்கத்தையே திருமணம் செய்யப்போகிறேனே" அப்போ அந்த பழமொழி தப்புத்தானே? அதான் என்றேன் வெட்கப்பட்டாய் நீ...//
கற்பனைக் காதலன்னு சும்மாவா...
செம டச்சிங்...
அண்ணே உங்களுக்கு வரபோறவங்க கொடுத்து வச்சவங்க
தொடரட்டும் உங்கள் பணி
வாழ்க வளமுடன்
வூடல். கூடல், சொர்க்கம் . ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நடக்கட்டும்..........
ரைட்டு..கற்பனை காதலன்...கற்பனைல புகுந்து விளையாடிருகீங்க..
சுவாரஸ்யமான உரையாடல்....சூப்பர்.
நிறைய எடிட் பண்ணினா ட்விட்டர்ல போடலம்! :)
காதல் இளவரசன் வசந்த் வந்துட்டாரு எல்லோரும் ஓடுங்க ஓடுங்க ஓடுங்க
"பிற்காலத்தில் நம் மகனிடம் உன்னோட அம்மா ஒரு கவிதைப்பந்து வீராங்கனை என்று போட்டுக்காட்டவேண்டுமே அதான்"
..... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி... அப்புறம், அடுக்களையில் இருந்து தட்டு வீசி வரும் போது சொல்லி காட்டலாம் அல்லவா? ஹா,ஹா,ஹா,.....
//காதல் இளவரசன் வசந்த் வந்துட்டாரு எல்லோரும் ஓடுங்க ஓடுங்க ஓடுங்க//
ரமேஷ் ரொம்ப நல்லவன் (சத்தியமா), அது காதல் இளவரசனா அல்லது "காதல் புலிகேசியா". தெளிவா சொல்லுங்க.
பொண்ணு பார்த்தாச்சா வசந்த் :)
யோவ் பிச்சு உதருறியே..
செம கலக்கல் டா மச்சி..
ம் ம் ............எப்படி தான் இப்படி எல்லாம் யோசிக்கிறாங்களோ
//உன் மீதான காதல் கொஞ்சம் அதிரசமும் முறுக்கும் சேர்ந்து சாப்பிடுவது போன்ற //
கூடவே ஒரு கட்டிங் கேட்டு பரு செருப்பால அடிப்பா..........
ஆஹா கலக்கலான வரிகள் எழுத்து சித்தன்யா நீ
super super!
யப்பா வரப்போற பெண் ரொம்ப குடுத்துவைத்தவள் !!!!
நடக்கட்டும் ரொமான்ஸ் ராஜ்ஜியம்!!!
ரொமான்ஸ் மேட்டருக்கு நல்ல நல்ல ஐடியாவா கொடுக்கிறீங்க கலக்கல் :)
அள்ளி வீசுறீங்க தலைவா....
பதிவுலகின் தபூசங்கர் என உங்களுக்கு பட்டம் கொடுக்கிறோம்
செம கலக்கலான கவிதைக்கட்டுரை
கற்பனைகள் அருமை நண்பரே..!
தோழி அப்டேட்ஸ் ன் தொடர்ச்சியா வசந்த். :)
அருமை.
ரொம்ப முத்தி போறதுக்கள சீக்கிரம் கால் கட்டு போடுற வழிய பாருங்க
கற்பனை நல்லாத்தான் இருக்கு...
ம்ம்ம்ம்....................................
ஊடல் அருமை.
"திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன" என்று எவன் சொல்லிவிட்டுச்சென்றான் முதலில் அவனைக்கூப்பிட்டு அந்த பழமொழியை மாற்றச்சொல்லவேண்டும் என்றேன் ஏன் என்றாய்? இல்லை இல்லை "நான் ஒரு சொர்க்கத்தையே திருமணம் செய்யப்போகிறேனே" அப்போ அந்த பழமொழி தப்புத்தானே? அதான் என்றேன் வெட்கப்பட்டாய் நீ...
adappavi... pesiye pillaigala correct panniduveenga pola irukke...
"இல்லை நானும் தினமும் அவுட்டாகிகிட்டே இருக்கேன் இந்த தாலி மட்டும் அவுட்டே ஆகாம நாட் அவுட் பேட்ஸ்மேனா விளையாடிகிட்டே இருக்கே அதான்" என்றேன், "ச்சீ போடா வெட்கங்கெட்டவனே" என்கிறாய்...
marupadiyum adappavi...
pinreenga ponga...
பொண்ணு பாத்துக்கிட்டு இருக்காங்களா? பாத்தாச்சா?
:)-
frm.boopalan
உன்னையெல்லாம் திருத்தவே முடியாதுடா.......
////// உன்னையெல்லாம் திருத்தவே முடியாதுடா...///////
ச்சே வீட்ல தான் தொல்லை தாங்க முடியலை ...,இங்கயுமா ....,
//////// எனக்கு உன் மீதான காதல் கொஞ்சம் அதிரசமும் முறுக்கும் சேர்ந்து சாப்பிடுவது போன்ற அனுபவத்தை கொடுக்கிறது என்றதும் கொல்லென சிரித்துவிட்டாள் "போடா தின்னிப்பண்டாரம்" என்றவாரே, ஆம் உன் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும் நான் உன்னை மட்டுமே தின்னும் தின்னிப்பண்டாரமென்று... //////////
மச்சி ...,போன வாரம் செவ்வாய்கிழமை சாயங்காலம் 5.30 மணிக்கு பாரிஸ் கார்னர் சரவண பவன் வந்தியா.........,ஒன்னும் இல்ல சும்மா கேட்டேன்
//////// ஒவ்வொருநாளும் ரொம்ப அழகாகிகிட்டே வர்றியே எனக்கும் உன் அழகை கொஞ்சம் கொடுக்கமாட்டியா? என்று உன் ஆருயிர்த்தோழி உன்னிடம் கேட்டபோது பக்கத்திலிருந்த நான் உன்னுடைய கைக்குட்டையை பிடுங்கி தோழியிடம் கொடுத்து "இந்தாங்க பிடிங்க இந்த கைக்குட்டைதான் இவளோட அழகெல்லாம் சேமித்துவைத்திருக்கிற பேங்க் இதுல உங்களுக்கு எவ்வளவு அழகு வேணும்னாலும் எடுத்துகிடலாம் செக் இல்லாமலே என்றேன்" //////////
தாங்க்ஸ் மச்சி ...,இது தான் நாளைக்கி நான் போட போற பிட் ....,நன்றி நன்றி ...,
உ பி காதல் பொங்குது..
அசத்தல் வசந்து.. கவிதைப் பந்து சூப்பரேய்..
காதலில் திட்டு வாங்குவதில் ஒரு சுகம் இருக்கும்.
அதிலும் காதலியிடம்/மனைவியிடம் வேண்டுமென்றே திட்டு வாங்கும் சூழல்களை உருவாக்கிப் பின் திட்டு வாங்குவது தனி சுகம்.
இல்லையா வசந்த்???
வரும் தலைப்புகளை பார்க்கும் போது ஒரு முடிவோடத்தான் இருப்பீங்க போலிருக்கு?
கவிதையாய் வழியும் காதல் அழகு..
Post a Comment