September 13, 2009

செங்கல்லும், நானும்,,,



அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும்

ரோட்டுல நடந்து போகும் போது ஒரு சின்ன பிஞ்சு சுமக்கிற செங்கல்லை நான் எடுத்த பேட்டி

நான் : செங்கல்லே உனக்கு மனசாட்சியே இல்லியா?

செங்கல் : ஏன் இவ்ளோ கனத்தை இந்த பிஞ்சின் தலையில் வைக்கிற மனுஷனுக்கு மனசாட்சி இருக்கும் பொழுது எனக்கு இருக்க கூடாதா?

நான் : அப்போ ஏன் இந்த பிஞ்சின் வலி தெரியாம நீயும் அந்த மனுஷனுக கூட சேர்ந்து அந்த பிள்ளைக்கு வலி குடுக்குற?

செங்கல் : நான் என்ன பண்றதுப்பா? அந்த பிள்ளைக்கு அப்பா அம்மா இறந்து போயிட்டாங்க,சொந்த பந்தமும் உதவலை சாப்பாட்டுக்கு வழியில்லாத அந்த பிள்ளைக்கு நானும் உதவாட்டி பாவம் பட்டினியா கிடந்து செத்துடுமே...

நான் : அதுக்காக அதோட இளமையிலே வறுமையின் கொடுமைய அனுபவிக்கணும்ன்னு நீ விரும்புகிறாயா?

செங்கல் : கண்டிப்பா இல்லை,எனக்கும் அந்த பிஞ்சு படிச்சு டாக்டராவோ,எஞ்சினியராவோ ஆகணும்ன்னு ஆசைதான்,ஆனா விதி விளையாடுதே..

நான்: மனுசங்க தான் விதி சதின்னு நினைக்கிறாய்ங்கன்னா நீயுமா?

செங்கல் : ஆம் நண்பரே விதின்னு சொல்லாம வேற என்ன சொல்றது? அந்த பிஞ்சு பிறந்ததும் அவங்க அம்மா அப்பா விபத்துல இறந்து போயிட்டாங்களே அது விதியில்லியா? அதுக்கப்பறம் அந்த பிள்ளைக்கு சேர வேண்டிய சொத்தையெல்லாம் அவங்க சொந்தக்காரய்ங்க எடுத்துக்கிட்டு இந்த பிள்ளைய அநாதையா விட்டுட்டு போயிட்டாங்களே அது விதியில்லியா?

நான் : சரி இந்த மாதிரி அப்பா அம்மா இறந்து போகாமலயே நிறைய குழந்தைகள் சின்ன வயசுலயே வேலைக்கு போறாங்களே?

செங்கல் : அது ஒரு வேளை அவங்க அப்பாவுக்கு உடம்புக்கு முடியாமலோ அவங்க அப்பா போதைக்கு அடிமையாகி அதனால அந்த குடும்பத்தோட வறுமையின் காரணமாகவோ இருக்கலாம்!

நான்: அப்போ இதுவும் விதியா?

செங்கல் : இல்லை இது அந்த குடிகார அப்பனோட திமிருன்னு தான் சொல்லுவேன்..

நான் : இந்த மாதிரி தகப்போனோட தவறான நடவடிக்கைகளால் மட்டுமே இந்த குழந்தைகள் இந்த நிலமைக்கு ஆளாகுறாங்களா?

செங்கல்: இல்லை இன்னும் தன்னோட தவறான பழக்கத்தால் குழந்தை பெற்றுக்கொண்டு அந்த குழந்தைகளை குப்பை தொட்டியிலோ,கோவிலிலோ விட்டுச்செல்லும் பெண்களால், தன்னோட குழந்தைகளை சரியா புரிந்துகொள்ளாமல் அவங்களை சின்ன வயசுலயே கொடுமை பண்ணுற ஈகோ பிடிச்ச பெற்றோர்களால்,அடிச்சு திருத்துறோம்ன்ற பேர்வழியில குழந்தைகள அடிக்கு சில வாத்தியார்களால் ஊரைவிட்டு ஓடி வரும் குழந்தைகள் இங்கு ஏராளம்.

நான்: சரி அப்போ இதுமாதிரி ஓடி வரும் குழந்தைகளை இங்கு இருக்கும் முதலாளிகளாவது சரியா புரிஞ்சு நல்லவிதமா நடத்துறாங்களா?

செங்கல் : கண்டிப்பா இல்லை , இங்கு இந்த பிஞ்சுகள் அனுபவிக்கிற கொடுமைக்கு அளவேயில்லை, ரெண்டுவேளை சோத்த போட்டுட்டு மூணு ஆள் வேலை வாங்குறாய்ங்கப்பா, அதுக்கு இந்த பிள்ளைகளுக்கு காசும் குடுக்குறது இல்லை ஏன்னா கேக்க ஆளில்லாத அநாதைகள் தானே அவங்க.

நான் : சரி வாத்தியார் அடிக்குறார்ன்னுதானே இங்க வர்றாங்க இங்க வந்தவங்களாவது முன்னேறுவதற்க்கு வாய்ப்பு இருக்குதா?

செங்கல் : இல்லவேயில்லை, இங்க இந்த கொடுமை பண்ற முதலாளிகள் கிட்ட மாட்டிக்கிடுற அவங்க சில காலம் கழிச்சு வெளியுலகம் போயி அங்கேயும் கஷ்டப்படுறாங்க, காசில்லாம திருட ஆரம்பிக்குறாங்க , தீய பழக்கங்களுக்கு அடிமையா ஆகுறாங்க சிலர் தீவிரவாதிகளாகவும் ஆகிடுறாங்க..

நான் : அய்யோ அப்போ இதுக்கு தீர்வுதான் என்ன?

செங்கல் : நம்ம அரசாங்கமும் இது மாதிரி குழந்தை தொழிலாளர்கள் வேலைக்கு வைப்பதை தடுத்துக்கொண்டுதான் வருது இருந்தாலும் சில லஞ்ச பேய் அரசு அதிகாரிகளால் இன்னும் குழந்தை தொழிலாளர்கள் கொடுமை அனுபவிச்சுக்கிட்டுத்தான் இருக்காங்க, அதனால அரசாங்கம் குழந்தை தொழிளார்கள் தடை சட்டத்தை இன்னும் கடுமையாக்கனும், ஆசிரியர்கள் குழந்தைகளை அடிச்சுத்திருத்தணும் அப்படின்ற எண்ணத்தை கைவிடணும்,பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சரியா புரிஞ்சு அன்பா நடத்தணும் .

நான்: கடைசியா உன்னிடம் ஒரே ஒரு கேள்வி கடவுள் உன் கண் முன்னாடி வந்து நின்னால் இந்த செங்கல் சுமக்குற பிள்ளை மாதிரியான குழந்தைகளுக்குன்னு நீ என்ன கேட்பாய்?

செங்கல் : கடவுள்ன்னு ஒருத்தர் இருந்தார்ன்னா இது மாதிரியெல்லாம் நடக்கவிடாம பண்ணிருப்பாரே என்னை பொறுத்த அளவு கடவுளே இல்லைன்னு தான் சொல்வேன், நீங்க கேட்டதுக்காக வேணும்ன்னா, பொம்மை விற்க்கும் கடை மாதிரி, அம்மாவும் அப்பாவும் விற்க்கும் கடை ஒண்ணு கேப்பேன், ஹார்லிக்ஸ்,பூஸ்ட் பாட்டில்ல அடைச்சு விற்க்கிற மாதிரி அன்பையும் , பாசத்தையும் அடைச்சு விற்க்கும் பாட்டில் கேட்பேன், இளமையில் வறுமையே கூடாதுன்னு கேட்பேன்.

நான் : கல்லாய் சில மனிதர்களின் மனசு இருக்கும் போது வெறும் செங்கல்லான உனக்குள்ளும் இவ்வளவு பெரிய மனசு இருக்கும்ன்னு நினைக்கும் போது மிக்க மகிழ்ச்சியா இருக்கு செங்கல் நண்பா...தங்களை பேட்டியெடுத்ததில் மிக்க மகிழ்ச்சி.மிக்க நன்றி.



போங்கடா நீங்களும் உங்க பட்டாசும் ,வறுமையும்


..



46 comments:

blogpaandi said...

கல்லுக்குள் ஈரம்.

கவிக்கிழவன் said...

கடவுள்ன்னு ஒருத்தர் இருந்தார்ன்னா இது மாதிரியெல்லாம் நடக்கவிடாம பண்ணிருப்பாரே

உருக்கமான சிந்தனை மனசு வலிக்குது

Starjan (ஸ்டார்ஜன்) said...

பேட்டி ரொம்ப அருமை

அப்துல்மாலிக் said...

உண்மை

மனசு வலிக்கிறது பிஞ்சுகளின் வலியை நினைத்தால்

அன்புடன் அருணா said...

செங்கலுக்குள் உள்ள ஈரம் கூட மனிதனுக்கு இல்லையா????இந்தக் கேளவியைக் கேட்காமல் இருக்க முடிவிலலை....

photos said...

அனைத்தும் சிந்திக்கப்பட வேண்டிய விடயமே....

Admin said...

நல்ல சிந்தனை வசந்த்

மனிதர்கள் உணர்ந்ததால் சரிதான் உணர்வார்களா?

vasu balaji said...

மனுசன கல்நெஞ்சன்னு சொல்றது கல்லுக்கு அவமானம். அசத்திட்டீங்க வசந்த் மறுபடியும்.

ஹேமா said...

வசந்த்,நகைச்சுவையோட உங்கள் சிந்தனைகள் சமூகத்தோட ஒட்டிக்கிடக்கிடக்கு.பாராட்டுக்கள்.

கல்லுக்குள்ளயும் ஈரம் இருக்கு வசந்த்.மனுஷன் தான் ஈரமில்லாம அந்தக் கல்லைச் சுமக்க வைக்கிறான்.
கல்லுக்குள்ள இருக்கிற இரக்கம் யாராவது ஒரு மனுஷனுக்குள்ள இருந்தா...!

ஜெட்லி... said...

டச் பண்ணிட்ட வஸந்த் ....

ஜெட்லி... said...

டச் பண்ணிட்ட வஸந்த் ....

Vidhoosh said...

pesa mudila...

Anonymous said...

நல்லாயிருக்குன்னு பாராட்டும் பதிவல்ல..... இந்தியாவின் வருங்கால தூண்கள் இப்படி கல் மண் சுமந்து கூன் விழுந்து நம்மை குற்றவாளியாய் பார்க்கும் அந்த பார்வையின் பொருள் அறிந்தும் என்ன செய்ய போகிறோம் என்று வெறும் கேள்வி கனைகளை மட்டுமே தொடுத்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் என்னை என் மனசாட்சி முன் தலை குனிய செய்கிறது.....................

Anonymous said...

இப்ப எல்லாம் பதிவை படிக்கவே பயமாயிருக்கு ஆம் மனதை வெகுவாக பாதிக்கிறது நேற்று கவிக்கிழவன் பதிவு கதிரின் குடியைப் பற்றிய பதிவு இங்கு கல் மனம் கரையுமா? என கேட்கும் இந்த பதிவு இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறோமே என்று வேதனை.....

Anonymous said...

வெறும் கருத்துக்கல்ல இந்த கல்லோடு போட்டி நாம் அந்த சுமை இறக்க யோசிக்கவே!!!

துபாய் ராஜா said...

அருமையான கருத்தை அழகாக கூறியிருக்கிறீர்கள்.

Unknown said...

அழகான பேட்டி..அருமையான கருத்து..கடைசி கேள்வி மிகவும் அருமை.

பாலா said...

:((((

கலையரசன் said...

செங்கலும், நானுமுன்னு சொன்னவுடனே.. உன் தலையில் உள்ளத பத்தி எழுதறியோன்னு நினைச்சேன்! பட்... உன் ஃபீலிங் எனக்கு பிடிச்சிருக்கு!!

VISA said...

ஒரு குழந்தை எம்மாம் பெரிய செங்கல்ல தூக்கிட்டு போகுது. அது கிட்ட இரண்டு செங்கல வாங்கி அதுக்கு உதவி பண்ணாம அது தல மேல இருக்குற செங்கல் கிட்ட மைக் புடிச்சு பேட்டி எடுத்த வசந்த் தலை மேல இரண்டு செங்கல போடுங்கப்பா.....:)
கற்பனையும் பேட்டியும் அருமை.

ஈரோடு கதிர் said...

இடுகையை பாராட்டக்கூட மனம் வரவில்லை... வெறும் அடர்த்தியான குறுகுறுக்கும் மௌனம் மட்டுமே...

சமூக சிந்தனை தொடரட்டும் வசந்த்

சுந்தர் said...

மன்னிக்கவும் ,இதை நன்றாய் இருக்கு , அருமை என கூற முடிய இயலவில்லை .

அவமானமாக இருக்கிறது. .

யோ வொய்ஸ் (யோகா) said...

சில நேரங்களில் சிரிக்க வைக்கிறீர்கள், சில நேரங்களில் ரொம்பவே யோசிக்க வைக்கிறீர்கள்

லோகு said...

நெகிழ்ச்சியான பதிவு..

கலகலப்ரியா said...

ம்ம்.. வீடியோ பார்க்க முடியும்னு தோணல..! வார்த்தையும் வரல..!

முனைவர் இரா.குணசீலன் said...

செங்கல் : கடவுள்ன்னு ஒருத்தர் இருந்தார்ன்னா இது மாதிரியெல்லாம் நடக்கவிடாம பண்ணிருப்பாரே என்னை பொறுத்த அளவு கடவுளே இல்லைன்னு தான் சொல்வேன், நீங்க கேட்டதுக்காக வேணும்ன்னா, பொம்மை விற்க்கும் கடை மாதிரி, அம்மாவும் அப்பாவும் விற்க்கும் கடை ஒண்ணு கேப்பேன், ஹார்லிக்ஸ்,பூஸ்ட் பாட்டில்ல அடைச்சு விற்க்கிற மாதிரி அன்பையும் , பாசத்தையும் அடைச்சு விற்க்கும் பாட்டில் கேட்பேன், இளமையில் வறுமையே கூடாதுன்னு கேட்பேன்.


நான் : கல்லாய் சில மனிதர்களின் மனசு இருக்கும் போது வெறும் செங்கல்லான உனக்குள்ளும் இவ்வளவு பெரிய மனசு இருக்கும்ன்னு நினைக்கும் போது மிக்க மகிழ்ச்சியா இருக்கு செங்கல் நண்பா...தங்களை பேட்டியெடுத்ததில் மிக்க மகிழ்ச்சி.மிக்க நன்றி./

நெகிழச் செய்த வரிகள் !

உண்மை வலிக்கிறது.

S.A. நவாஸுதீன் said...

வசந்த்!! உங்களின் ஒவ்வொரு பதிவும் ஏதாவது ஒரு வகையில் மனதில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இன்னும் இது இந்தியாவில் நீடித்துக் கொண்டிருப்பதுதான் வேதனைக்குறிய விஷயம். எத்தனை சட்டம் போட்டாலும் ஆங்காங்கே முனீஸ்வரிகளும் சித்ராக்களும் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அமுதா கிருஷ்ணா said...

very bad...

அன்புடன் மலிக்கா said...

வசந்த்,தாங்களின் எழுத்து நடை
சமூக சிந்தனை அனைத்தும் அருமை

கல்லுக்குள் கசியும் ஈரம்
கல்நெஞ்சம் படைத்த மனிதருக்குள்ளும் கசிய வேண்டிகொள்வோம்

தேவன் மாயம் said...

5/5 க்குத் தகுதியான பதிவு!

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்களின் பதிவுகள் அனைத்துமே சமூகச்சிந்தனைகளை சிந்திப்பது மாதிரியே அமைவது குறித்து மகிழ்ச்சி

SUFFIX said...

குழந்தை தொழிலார்களின் அவலம். இவர்களின் வறுமையை தனக்கு சாதகமாக பயன் படுத்தும் கல் நெஞ்சம் படைத்த சிலர். இதற்க்கு தீர்வு இந்த சிறார்களுக்கு அவசியமான கல்வி புகட்டுவதே. நல்ல இடுகை வஸ்ந்த்.

கண்மணி/kanmani said...

அரசாங்கம் அதிரடியா முடிவெடுத்து இந்த மாதிரி அநாதைகளை இரட்சித்தாலொழிய இந்தக் கொடுமை மாறாது.
இளம் வயது வேதனை,வெறுப்பு,வலி பெரும்பாலானவர்கள குற்றங்கள் செய்ய ஆரம்பித்துவிடுகின்றனர்;(

சுரேஷ்குமார் said...

பொதுவாக நான் பின்னுட்டம் இடுவதை தவிர்ப்பேன் அதற்க்கு சில காரணங்கள் உண்டு.ஆனால் இதற்க்கு பின்னுட்டம் இடாமல் செல்ல மனமில்லை.ஆழமான,அனைவரும் யோசிக்க வேண்டிய பதிவு.

sarathy said...

"கற்க கசடற..."

இவர்கள் தலையில் உள்ள கற்கள்
கசடாகி,
கற்கட்டும் கசடற...

Unknown said...

இப்படி ஒரே பதிவில் வலி, ஏமாற்றம், கண்ணீர், ஏக்கம் அத்தனையும் உணரவைத்து சிந்திக்கவும் வைத்துவிட்டீங்கள் வசந்த்!

தமிழ் அமுதன் said...

நல்ல பதிவு வசந்த் ...!

சுசி said...

அருமையா எழுதி இருக்கீங்க வசந்த்.
கடவுள் கிட்ட செங்கல் கேக்கப் போறது நச்..

ராமலக்ஷ்மி said...

மனதை உருக்கும் பதிவு.

நட்புடன் ஜமால் said...

தீப்பெட்டிக்குள் குழந்தைகளின் பிஞ்சு விரல்கள் - யாரோ ...

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி @ ப்லாக் பாண்டி

நன்றி @ கவிக்கிழவன்

நன்றி @ சேக்

நன்றி @ அபு

நன்றி @ பிரின்ஸ்

நன்றி @ போட்டொஸ்பெசல்

நன்றி @ சந்ரு

நன்றி @ பாலா சார்

நன்றி @ ஹேமா

நன்றி @ ஜெட்லி சரண்

நன்றி @ வித்யா

நன்றி @ தமிழரசி

நன்றி @ துபாய்ராஜா

நன்றி @ ஃபாயிசா

நன்றி @ பாலா

நன்றி @ கலை

நன்றி @ விசா

நன்றி @ சுந்தர்

நன்றி @ யோகா

நன்றி @ லோகு

நன்றி @ ப்ரியா

நன்றி @ குணா

நன்றி @ நவாஸ்

நன்றி @ அமுதா கிருஷ்ணா

நன்றி @ மலிக்கா

நன்றி @ தேவா சார்

நன்றி @ அமித்து அம்மா

நன்றி @ கண்மணி

நன்றி @ சுரேஷ்குமார்

நன்றி @ சாரதி

நன்றி @ தாமரை

நன்றி @ ஜீவன்

நன்றி @ சுசி

நன்றி @ ராமலஷ்மி மேடம்

நன்றி @ ஜமால் அண்ணா

Porkodi (பொற்கொடி) said...

:( enna solradhu, sila samayam mownam thaan sirandha badhila enaku thonudhu :(((

யோ வொய்ஸ் (யோகா) said...

ஏன் இரண்டு மூன்று நாளாக பதிவு எதனையும் காணாம்?

Veliyoorkaran said...

வசந்த் சார்..ஒரு வழியா இந்த கூட்டத்துல உங்கள தேடி கண்டுபுடிச்சிட்டேன்...இனிமே நீங்க எழுதற ஒவ்வொரு பதிவிற்கும் இந்த தம்பிகிடேர்ந்து விமர்சனம் பத்திரி ரெய்டு..(சென்னை பாஷை) வந்துகிட்டே இருக்கும்...So,உஷார் பத்திரி ரெய்டு...

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி பொற்கொடி

நன்றி யோகா

நன்றி வெளியூர்காரன்

யாரோ ஒருவர் said...

பாவம் பிஞ்சுகள்,இது போல் ந்றைய குழந்தைகள் கல் சுமக்குது