September 25, 2009

பிரியாணி - விமர்சனம்


பிரியாணி - விமர்சனம்

நிறைய பேர் சினிமா படத்துக்கு விமர்சனம் எழுதுறாங்க,ஒரு சேஞ்சுக்கு நாம சாப்பிடுற பிரியாணிக்கு விமர்சனம் எழுதலாம்முன்னு....

கதை: ஒரு கடையில இருந்து வாங்குன அரிசி,எப்பிடி இறைச்சிகடையில வாங்குன ஆட்டிறைச்சியோட சேர்ந்து பிரியாணி ஆகுதுன்றதுதான் கதை,

கதையோட ஹீரோ யாருன்னு பார்த்தா ஆட்டிறைச்சிதாங்க ஹீரோ,கதையோட கரு எல்லாமே ஆட்டிறச்சிய சுத்தி சுத்திதான் நடக்குது....

மூலக்கடை செட்டியார் கடையில பிரியாணி அரிசி வாங்குறதுல இருந்து ஆரம்பிக்குது கதை,அப்படியே ராஜி கடையில வாங்குன ஆட்டிறைச்சியும்,அரிசியோட தங்க மணி பையில வாங்கிட்டு வரும்போதே தொட்டு தொட்டு பேசி உறவாடிட்டு மெல்ல காதல் வளருது,

வீட்டுக்கு வந்ததும் பிரியாணி அரிசி குளிக்க ஆரம்பிக்குது,அப்பறம் ஆட்டிறைச்சியும் குளிக்க ஆரம்பிக்குது அப்போ ரெண்டுபேருக்கும் தனித்தனி சோலோ சாங்க் ஒண்ணு வருது, அரிசிதாங்க முதல்ல தன்னோட காதல்சொல்லணும்ன்னு நல்லா விளக்கி வச்ச பாத்திரத்துல தண்ணியோட சேர்ந்து கொதிக்க ஆரம்பிக்குது.

அப்பறம் அரிசியோட காதலை புரிஞ்சுகிட்ட ஆட்டிறைச்சியும் டொபுக்குன்னு பாத்திரத்துக்குள்ள விழுந்து அரிசியோட சேர்ந்து கடபுட கடபுடன்னு ஒரு டூயட் சாங்க்ல தன்னோட காதல சொல்லிடுது,

படத்துல தங்கமணி ஆட்டிறச்சிய துண்டு துண்டா வெட்டும்போது வர்ற ஃபைட் சீன் இதுவரைக்கும் தமிழ் சினிமா பாத்திராதது,கிராஃபிக்ஸ் காட்சியில படத்தோட டைரக்டர் தங்கமணி புகுந்து விளையாடியிருக்கார்,

அப்பறம் படத்தோட சைட் ஆர்ட்டிஸ்ட்களான தக்காளி,வெங்காயம்,பச்சைமிளகாய் வெட்டும்போது வர்ற ஃபைட் சீனும் எதார்த்தமா இருக்கு, என்ன வெங்காயத்தோட ஃபைட் சீன் வரும்போது மட்டும் நம் கண்ணுல தண்ணீர் வர்றது நிஜம்,

Then,தக்காளி,வெங்காயம் வதக்கும் சீன்ல நம்ம மனசு அப்பிடியே லயித்துவிடுகிறது,இவங்கதான் இந்த மட்டன் பிரியாணி கதை சிறப்பா வர்றதுக்கு காரணம் என்பதை மறுப்பதற்க்கில்லை,

அப்பறமா பிரியாணியோட வாசனைக்கு சேர்க்கப்பட்ட புதினாவும்,பிரியாணி மசாலாவும் தங்களோட கேரக்டரை சிறப்பா செஞ்சுருக்காங்க..படத்தோட ஹீரோ ஆட்டிறைச்சியும்,ஹீரோயின் பிரியாணி அரிசியும் போட்டி போட்டு தங்களோட திறமைய வெளிப்படுத்தியிருக்காங்க...

கடைசியா எல்லாரும் சேர்ந்து எப்படி பிரியாணி சுவையா வந்துச்சுன்றது தங்கமணி பரிமாறும்போது எல்லாரும் சாப்பிட்டு தெரிஞ்சுக்கோங்க..

படத்தோட ப்ளஸ்பாயிண்டே கதை நடக்கும்போதே பக்கத்து வீட்டுக்காரர்களை நம்ம வீட்டுக்கு வரவைக்குற அளவுக்கு வாசனையா நம்ம தங்கமணியோட டச்சிங் பெர்ஃபார்மன்ஸ் பட்டைய கிளப்புது,அதிலும் அந்த உப்பு கரெக்ட்டா சேர்த்த விதத்தில டைரக்டர் தங்கமணி தான் அனுபவசாலின்னு நிரூபிச்சுடுறார்.



படம் நன்றி : http://sashiga.blogspot.com


மொத்தத்தில் இந்த மட்டன் பிரியாணி சாப்பிடுற எல்லாரோட மனசையும் வயித்தையும் நிறைய வைக்குதும அப்பிடின்றதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

மட்டன் பிரியாணி-சுவையாய்...

மீண்டும் அடுத்த வாரம் ஒரு சிறந்த உணவின் விமர்சனத்தில் சந்திப்போம்....






53 comments:

shabi said...

மட்டனைப் பற்றி எழுதியதால் சிக்கன் சங்கத்தை சேர்ந்தவர்களிடமிருந்து கடும் ககண்டனம்

shabi said...

ME THE FIRST ,,,,,,,,,,,,,,,,,,,

ILA (a) இளா said...

ரசித்தேன், ருசிக்கதான் முடியவில்லை

shabi said...

சோக்காகீதுப்பா...................

சென்ஷி said...

:-))

கிரேட்!

இராகவன் நைஜிரியா said...

அருமையான விமர்சனம்.

இவ்வளவு விரிவாக சமையல் கலைப் புத்தகத்தில் கூட போட்டு இருக்கமாட்டார்கள்.

வாழ்க உம் தொண்டு..

Menaga Sathia said...

ஆஹா கலக்கல் வசந்த்.முகப்பில் என்னடா நம்ம பிரியாணி படம் இருக்கேன்னு நினைத்து படித்து பார்த்தால் கதை,திரைக்கதை,காதல் நு அட்டகாசமா இருக்கு.நன்றி வசந்த்!!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வசந்த்.

அடடா என்னவொரு அருமையான விமர்சனம். கண்டிப்பாக பார்க்கிறேன்.

உங்களுடைய பதிவுகள் அனைத்துமே கலக்கல். எப்படிங்க இந்த மாதிரி யோசனை எல்லாம் வருது :)

பா.ராஜாராம் said...

அப்பாடி...மனசுக்கு நிம்மதியான விமர்சனம்.தைரியமா வந்து பின்னூட்டம் போடலாம்!

Beski said...

விமர்சனத்திற்கு நன்றி.
கட்டாயம் நாளைக்கு பிரியாணிதான்.

கடைசிவரை ஹீரோ படத்தைப் போடவே இல்லையே?

vasu balaji said...

வடிவேலுவ மாடு, யானைல்லாம் தொரத்துனா மாதிரி ஊரு பக்கம் வந்திங்களோ தொங்குற ஆடு கூட முட்டும். சன் டிவில ரம்ஜான் அன்னைக்கு திரை விமர்சனம் பார்த்துகிட்டே பிரியாணி ஒரு வெட்டு வெட்டினாப்போல இருக்கு. அழிச்சாட்டியத்துக்கு ஒரு அளவில்லை:))

Starjan (ஸ்டார்ஜன்) said...

வெள்ளி விழா காண வாழ்த்துக்கள்

ஹேமா said...

அட...வசந்த்,வெள்ளிக்கிழமையும் அதுவுமா.அசத்தல் விமர்சனம்.

கலகலப்ரியா said...

பிரியா ஆணி.. ஓடிப் போயிடுடி..

Malini's Signature said...

புரட்டாசி மாசத்துலே பிரியாணியா?.....அதுவும் ஆட்டிறைச்சியா!!!!!!!!!!!! அதனாலே நான் படிக்கலைங்க :-)

பழமைபேசி said...

அருமை

VISA said...

யப்பா சாமி...எப்படி இப்படியெல்லாம். ரொம்ப நல்ல இருந்திச்சு. ஒரு லைன் விடாம படிக்க வச்சிட்டீங்க. அரிசி ஹீரோயின் குளிக்கிற சீன் படத்துல இருக்கா?

ஜெட்லி... said...

படித்தவுடன் பிரியாணி சாப்பிட தோனுது...
ஆனா இப்போ மணி காலை ஏழு..
. நல்ல விமர்சனம் .... முடிஞ்ச
ரெண்டு பார்சல் அனுப்பி வைங்க வஸந்த்

அத்திரி said...

விமர்சனம் நல்லாயிருக்கு..ஆனா சிக்கனை மறந்துட்டீங்களே

ஈரோடு கதிர் said...

ப்ளீஸ்...ப்ளீஸ்...ப்ளீஸ்...ப்ளீஸ்...ப்ளீஸ்...ப்ளீஸ்...ப்ளீஸ்...ப்ளீஸ்...ப்ளீஸ்...ப்ளீஸ்...ப்ளீஸ்...ப்ளீஸ்...ப்ளீஸ்...

அந்த ஹாட் ஸ்பாட் படத்த மாத்துங்க... ப்ளீஸ்...ப்ளீஸ்...


பிரியாணி...
கலக்கீட்டீங்க வசந்த்...

ரசித்து படித்தேன்...

பையில் வரும்போதே காதலும். டூடட்டும் சூப்பர்..

வாழ்த்துகள்

ராமலக்ஷ்மி said...

நான் சைவம். ஆகையால் இந்த டெம்ப்ளேட் நல்லாயிருக்கு(கண்ணுக்கு இதமாய்) எனக் கூறி விடை பெறுகிறேன்:)!

Anonymous said...

ம்ம்ம்ம்ம் எல்லாரும் உன்னையே பாராட்டிட்டா அப்பறம் நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம் அதான் இப்ப எல்லாம் எழுதறத குறைச்சிட்டோம்.....

ம்ம்ம்ம் சும்மா இருந்த மனசை கெடுத்திட்ட இப்ப பார் பிரியாணி சாப்பிடனுமின்னு ஏங்குது.....

Suresh Kumar said...

ஐ பிரியாணி வர்ச்தனம் நல்லா இருக்கே . வித்தியாசமா இருக்கு

Jaleela Kamal said...

ஆஹா திரை கதை வசனம் பிரியாணிட்யில் சூப்பரா தயாரித்து விட்டீர்கள்.


ஹா ஹா படிச்சி நல்ல சிரிச்சாச்சு

ஆனால் மட்டனையே சொன்னதால்,
(மீன், இறால், சிக்கன் எல்லோரும் ஏன் எங்களை பற்றி ஒன்றும் சொல்லல என்று கடுமையா எதிர்பு தெரிவிக்கிறார்கள் .

//கொஞ்சம் வீட்டு கதவை திறந்து பாருங்கள் அங்கு எல்லோரும் கியுவில் நிற்கிறார்களாம். அடுத்த பிரியாணி படத்துக்கு நீங்க தான் திரை கதை வசனம் எழுதனும்மு அதுவும் ஒத்த காலுல்ல நிற்கிறார்களாம். //

மாதேவி said...

ஆகா! புரியாணி அசத்தல் விமர்சனம்.

"ஆட்டிறச்சிய துண்டு துண்டா வெட்டும்போது வர்ற ஃபைட் சீன்... ரசித்தேன்.

VISA said...

http://truetamilans.blogspot.com/2009/09/blog-post_22.html

read the comments in that link. they have written something about both of us :)

அன்புடன் அருணா said...

இந்தப் படம் இப்போ எதிர்பாராத ரிலீஸ்!!!

SUFFIX said...

ஹி..ஹி..ஹி.. சூப்பர்!!

க.பாலாசி said...

பிரியாணி நல்லாருக்கு வசந்த்....

Anonymous said...

kikikikiki

அன்புடன் மலிக்கா said...

வசந்த் பிரியாணிக்குள் இத்தனை விசயங்களா? விமர்சனம் சூப்பர்

நட்புடன் ஜமால் said...

சில விமர்சணங்களை படிச்சி நொந்து போய் இருக்கு மனதிற்கு இதமாக இருந்தது இந்த விமர்சணம்.

அருமை முயற்சி ...

வாழ்த்துகள்.

யாழினி said...

ஹா...ஹா...ஹா... வசந்த் நல்ல நகைச்சுவை. விமர்சனம் நல்லாயிருக்கு!

சிங்கக்குட்டி said...

கலக்கல் வசந்த் :-)) எந்த கடையில நீ அரிசி வாங்கின? :-))

குறை ஒன்றும் இல்லை !!! said...

என்னங்க .. இந்த ஹாட் ஸ்பாட்டு நல்லாவே இல்ல. அதுவும் இல்லாம பிரியாணி பத்தி வேர எழுதி இருக்கீங்க.. ஏதாச்சும் சம்பந்தம் இருக்கா!!

Thenammai Lakshmanan said...

cinema kaati biriyabi potta aalai naan ippaththaan parkuren

nejamavay sappudamunumnu ennam vanthuruchu vasanth..

enga antha thalappakatti????
vidu juteeee
naanum mail la rendu parcel anuppi vaikkuren

Thenammai Lakshmanan said...

athuvum menagasathiya panna biriyaaniya

ippudi sudapudathu vasanth biriyaniyai

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

ஏன்பா வசந்த் எங்கே இருந்து பிரியாணி ரெசிப்பி எடுத்தாய்? கெட்டிக்காரப் பயல் தான்.
பிழைச்சிடுவாய். வரப் போற மகராசி பாடு பரவாயில்லை.

சுசி said...

நீங்க பிரியாணில்லாம் செய்வீங்களா வசந்த்...
விமர்சனம் சூப்பர்.
இருந்தாலும் நவராத்ரி சமயத்திலா??? அவ்வ்வ்வ்...

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி சபி (முதல் வருகைக்கும்)

நன்றி இளா(முதல் வருகைக்கும்)

நன்றி சென்ஷி

நன்றி ராகவன் சார்

நன்றி மேனகா மேடம்

நன்றி செந்தில் அண்ணா

நன்றி ராஜாராம் அண்ணாத்தே

நன்றி பெஸ்கி (யோவ் உனக்கு குசும்பு ஜாஸ்தியா)

நன்றி பாலா சார் ( ஹி ஹி)

நன்றி சேக்

நன்றி ஹேமா (இதுக்கெல்லாமா நாள் கிழமை பார்ப்பாங்க)

நன்றி ப்ரியா ( யக்கா வர வர உங்க அலும்பு தாங்க முடியலை)

நன்றி ஹர்ஷினி அம்மா(நானும் ஊர்ல இருந்திருந்தா இந்நேரம் சைவம்தான் ஆனா இப்போ இருக்குறது அரபு நாடாச்சே)

நன்றி பழமை பேசி சார்

நன்றி ஜெட்லி சரண்

நன்றி அத்திரி சார்

நன்றி கதிர் சார்(படத்த தூக்கிட்டேன்)

நன்றி ராமலஷ்மி மேடம்( ஆகா நீங்க அப்போ எதிர் கட்சியா)

நன்றி தமிழரசி(சீக்கிரம் பதிவு போடாட்டி அதுக்கு ஒரு பதிவு போட வேண்டி வரும்)

நன்றி சுரேஷ்குமார்

நன்றி ஜலீலா

நன்றி மாதேவி (முதல் வருகைக்கும்)

நன்றி விசா

நன்றி அருணா பிரின்ஸ்

நன்றி சஃபி

நன்றி பாலாஜி

நன்றி தூயா (முதல் வருகைக்கும்)

நன்றி மலிக்கா

நன்றி ஜமால் அண்ணா

நன்றி யாழினி

நன்றி சிங்க குட்டி (செட்டியார் கடையில)

நன்றி தேனம்மை(முதல் வருகைக்கும்)

நன்றி ஜெஸ்வந்தி ( அவளத்தான் எதிர் பார்த்துட்டு இருக்கேன் பிரியாணி சாப்பிட வைக்கிறதுக்கு எங்க இருக்காளோ)

நன்றி சுசி (நான் சூப்பரா சமைப்பேன் இல்லாட்டி இங்க எப்படி காலம் ஓட்ட முடியும்?)

நன்றி

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி ராஜ்குமாரன் படத்த தூக்கிட்டேன்..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

'சுவை' மிகுந்த பதிவு.

நல்ல சரியான அளவிலே
காரம், உறைப்பு, உப்பு
எல்லாம் கலந்திருக்கீங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எனக்கு ஒரு பிரியாணி பிளாக்குல கிடைக்குமா?

யோ வொய்ஸ் (யோகா) said...

நான் சைவ உணவு மட்டும் சாப்பிடுபவன் ஐயா. என்னிடம் இப்படியா?

Deepa said...

சான்ஸே இல்ல!
சூப்பர்.

:-))))

சந்தனமுல்லை said...

:))) super!!

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி நிஜாமுதீன்

நன்றி ரமேஷ்

நன்றி தீபா

நன்றி சந்தன முல்லை

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி யோகா...நல்லதுதான்

இளந்தமிழன் said...

எனக்கு மிகவும் பிடித்த உணவு. நல்ல நகைச்சுவையான சிந்தனை. இனி எப்பொழுது பிரியாணி சாப்பிட்டாலும் இந்த பதிவுதான் நினைவுக்கு வரும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அட!

பட விமர்சன பாணியிலேயே சொல்லியிருக்கீங்க.

ரொம்பவும் நல்லாருக்கு பதிவு :)

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி @ ^ இளந்தமிழன்

நன்றி @ ^ அமித்து அம்மா

யாரோ ஒருவர் said...

பிரியாணி ரொம்ப சூப்பரா வந்திருக்கு,ஆனா கொஞ்சம் காரம் மிஸ்ஸிங்,பாத்தா இஞ்சி,பூண்டு மேட்டர மறந்துட்டீங்க வஸந்த்!

சிவகுமார் சுப்புராமன் said...

மிகவும் சிறப்பான ஆக்கம் வசந்த்! பாராட்டுக்கள்!