July 30, 2010

பதிவுலகில் நான் எப்படிப்பட்டவன்?- OPEN TALK

Calm Drizzle மேடம் தொடர அழைத்த தொடர் பதிவு...




1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?




2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?


ப்ரியமுடன் என்னும் அடைமொழி மட்டும் சேர்த்துகிட்டது அப்பா ,அம்மா வைத்த உண்மையான பெயர் வசந்தகுமாரன்; 


பதிவுலகம் எனக்கு வைத்த பல பெயர்களில் காமெடிபீஸ் எனும் பெயர் அப்லாஸ் வாங்கி முதலிடத்தில் இருக்கிறது;


இன்னும் நிறைய பெயர்கள் இருக்கிறது பின்னூட்டங்களில் அவர்களே திருவாய் மலர்வார்கள் பாருங்கள் ஏனென்றால் இடுகையில் வெடி வைத்திருக்கிறேன்.






3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.


கேள்வியே தப்புங்க...வலைப்பதிவுலகத்தில் கண் பார்வை வைத்ததைப்பற்றின்னு வந்திருக்கவேண்டும் :)


தினமும் செய்தித்தாள் வாசிப்பது என்னோட பழக்கம் அப்படி ஒரு நாள் தினமலர் செய்தித்தாள் வாசித்துகொண்டிருக்கும்பொழுது கண்ணில் பட்டதுதான் தமிழிஷ் விளம்பரம்; அதில் நுழைந்து வாசித்த பொழுது ஏராளமான சுவாரஸ்யமான பதிவுகள் அதிலிருந்த அனைத்து பதிவுகளையும் வாசிக்க ஆரம்பித்தேன்;பின்பு அதிலிருந்த பின்னூட்ட சுவாரஸ்யங்களை பார்த்து நானும் பின்னூட்டம் போட வேண்டும் என்பதற்க்காக 2008 டிசம்பர் மாதம் அனைவருக்கும் வணக்கம் என்று விளையாட்டாக ஆரம்பித்து அதன் பின்பு நான்கு மாதங்கள் கழித்து நான் படித்து ரசித்த கவிதைகள் ஜோக்ஸ்ன்னு இடுகைகள் எழுதினேன்..அதற்கெல்லாம் ஒன்றும் பெரிதாக வரவேற்பில்லை


பின்பு சொந்தமாக சில இடுகைகள் எழுத ஆரம்பித்தேன் முதன் முதலில் சங்கமம் நடத்திய போட்டிக்காக பேருந்தின் புலம்பல்கள் என்று ஒரு இடுகை பரவாயில்லை ரகம் அப்புறமும் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படியான இடுகைகள் இடவில்லை பசங்க படம் வந்திருந்த நேரம் பசங்க ஒரு ஒப்பீட்டுப்பார்வைன்னு ஒரு போஸ்ட் விளையாட்டா போட்டது மறுநாள் யூத்ஃபுல் விகடனின் குட்பிளாக்ஸ்ல் வந்திருந்தது , அப்பொழுது தோன்றிய சிந்தனைதான் பதிவுலகில் நாம் தாக்குபிடிக்க வேண்டுமென்றால் வித்தியாசமான ரசிக்கும்படியான இடுகைகள் இடவேண்டும் என்று பின்பு இதுவரை யூத்ஃபுல்விகடனில் 24 இடுகைகள் குட் பிளாக்ஸிலும் ,  7 கவிதைகளும்,ஒரு கவிதை டிசம்பர் மின்னிதழிலும், பின்பு ஒரு லவ்வர்ஸ்டே ஸ்பெசல் இடுகை , ஒரு சுதந்திர தின சிறப்பு இடுகை என 34 இடுகைகள் வெளியாகி இருக்கிறது, என்னளவில் யூத்ஃபுல் விகடன் இளைய மற்றும் புதிய பதிவர்களுக்கு பூஸ்ட் மாதிரி. அந்த ஊக்கத்தின் காரணமாக நண்பர்களின் உற்சாக மூட்டலின் காரணமாக இப்போ வரைக்கும் வித்தியாசமாக இடுகைகள் இடுவது தொடருகின்றது,தமிழ் வாசகர்கள் எப்பொழுதும் வித்தியாசமான பார்வையை ரசிப்பார்கள் என்பது இன்றுவரை என்னளவில் பொய்யாகவில்லை,விளைவு நிறைய நண்பர்கள் கிடைத்தனர்;


ப்ரியமுடன் வசந்த் என்ற வலைப்பதிவிற்க்கு சென்றால் ரசிக்கலாம்,சிரிக்கலாம்,சிந்திக்கலாம்,மாறாக சில நேரம் சிலரால் காறித்துப்பவும் படலாம்...என்று இந்த ஒன்றரை வருட பதிவுலகத்தில் நான் பதிவுலகத்தை பற்றி ஓரளவு அறிந்து வைத்திருக்கிறேன்.


விட்டால் நீண்டு கொண்டே செல்லும் என்பதால் இத்துடன் நிறுத்திகொள்கிறேன்..









4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?


எனக்கு சமாளிப்பிக்கேசன் வராதுங்க மாட்டிக்கிடுவேன்...
ஆரம்பத்தில் வாசிக்கும் அனைத்து பதிவுகளுக்கும் பின்னூட்டங்களும் ஓட்டுக்களும் போடுவதுண்டு;இப்பொழுது நிறைய நேரப்பற்றாக்குறையின் காரணமாக அனைவர் பதிவுகளும் படிப்பது மட்டுமே உண்டு தற்பொழுது புதிதாக எழுதுபவர்கள்,ரசிக்க வைக்கும், சிரிக்க வைக்கும் பதிவுகள்,சமுதாய சிந்தனை மிக்க பதிவுகளுக்கு மட்டுமே பின்னூட்டங்கள் ஓட்டுக்கள்.இதை கூறியதினால் யாரும் என்னுடைய கழுத்திற்க்கு கத்தி வைக்கபோவதும் கிடையாது, என்னுடைய மானம் கப்பலேற போவதும் கிடையாது . ஆனால் பாருங்கள் இன்று வரையிலும் பிரபலம் ஆகவே இல்லை என்பது வருத்தம் தரும் செய்தி...





5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்? 


உண்டு என்னோட சொந்த தங்கை பற்றிய சொர்க்கத்துக்கு ஒரு கடிதம் இடுகை எழுதியதும் எழுத்தோசை தமிழரசி அவர்கள் அதற்க்கு எழுதுகிறேன் ஒரு கடிதம் என்ற பதில் இடுகை எழுதினார் அதுவும் அவரது மகளின் கையாலே எழுத வைத்தார் என்பது சிறப்பு விளைவு சந்த்யா எனும் தங்கை கிடைத்தாள், சுதா , வேணி, கோகிலா,எனும் பதிவுலகம் சாராத என் வலைப்பூ படிக்கும் தங்கைகள் கிடைத்தனர்.பின்பு தமிழரசி அவர்களின் நேர்காணல் தேவதை இதழில் வந்த பொழுது என்னுடைய கடிதமும் அவரின் பதில்கடிதமும் அவ்விதழில் இடம்பெற்றது. எந்த வித பயனும் தராத யூஸ்லெஸ் எதிர்கவிதைகள் மத்தியில் பதில்கடிதம் எழுதி சிறப்பான உறவுகள் கிடைத்தது இந்த வலைப்பூவினால் கிடைத்த பயன்.



6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?


முன்பு என்னுடைய வலைப்பூவின் பெயரின் கீழ் 100% எண்டெர்டெயின்மெண்ட் மட்டும் என்று எழுதியிருக்கிறேன் . அது எதுவரை சாத்தியம் என்று தெரியவில்லை . என்னை பொருத்த வரையிலும் இந்த வலைப்பூ எனக்கும் என்னோட வலைப்பூ படிக்கிறவங்களுக்கும் நல்ல டைம் பாஸ்ன்னுதான் நான் சொல்லுவேன்.மிஞ்சிபோனால் என்னுடைய வலைப்பூ படிப்பவர்கள் 300 பேர் இருக்கலாம் இவர்களுக்கு கருத்து சொல்லி நான் கருத்து கந்தசாமியாக விரும்பவில்லை. வரும் 300 பேரை சின்னதா சிரிக்க வைத்து திருப்பி அனுப்பி வைப்பதே போதுமானதாக இருக்கிறது, ஏனென்றால் நான் எழுத்தாளனோ ,கவிஞனோ கிடையாது பலர் சொல்வது மாதிரி காமெடி பீஸ், மொக்கை.எக்ஸெஸ்ட்ரா... போதுண்டாப்பா நிறுத்து.





7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?


மொத்தம் மூன்று ஒன்று நீங்கள் இப்பொழுது வாசித்துகொண்டிருக்கும் ப்ரியமுடன் வசந்த், இன்னொன்று நானும் என் நெருங்கிய நண்பர்கள் சிலரும் மட்டுமே படிக்க என் சொந்த விஷயங்கள் பற்றிய நிசப்தம், இன்னொன்று இப்பொழுது நான் இந்த வலைத்தளத்தில் கவிதை எழுதினால் ரெஸ்பான்ஸ் ரொம்ப மிகவும் குறைவாக இருக்கின்றது என்பதாலும்,என்னால் கவிதையெழுதாமல் இருக்க முடியவில்லை என்பதாலும் கவிதைக்கென்று தூரல் எனும் வலைப்பதிவு,நண்பர்கள் சீமான்கனி, ரமேஷ், ஜெயகுமார்,அருண்பிரசாத் இன்னும் சில இளைய தலைமுறை பதிவர்கள் சேர்ந்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்ல கருத்துக்கள் பரிமாறி கொள்ள இன்னொன்றும் ஆரம்பிக்கும் திட்டம் இருக்கிறது.24 அம்ச திட்டத்துல ஒண்ணான்னு யாரோ கேட்குறாங்க பாருங்க.



8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?


முக்கியமான கேள்வி ஆனா பாருங்க இங்க என்னோட கோபத்தை எழுத ஆரம்பிச்சா என்னோட கை நிக்காதுங்க சீக்கு வந்த கை பாவம் கீ போர்ட் மன்னிச்சு விட்டுடலாம்.


பொறாமை விசா சார் மேல அவர் எழுதுற எழுத்து மேல அவர் மாதிரியே கதை எழுத முடியலையேன்னு, அமிர்தவர்ஷினி அம்மா இவங்கள போல எழுத முடியலையேன்னு,நிறைய தடவை பொறாமை பட்டிருக்கிறேன் ரெண்டுபேருமே கதை எழுதுவதில் அவர்களுக்கென்ற பாணி வைத்திருக்கிறார்கள் விசா சார் ட்விஸ்ட் கதை எழுதுவதில் வல்லவர்.அமிர்தவர்ஷினி அம்மா காட்சி விவரணை முதற்கொண்டு வட்டார பேச்சு வழக்கில் அட்டகாசமா எழுதி அப்ளாஸ் வாங்குற ஆளு..எப்பவும் அமைதியான அட்டகாசமான கவிதைகள் எழுதும் ராமலக்ஷ்மி மேடம், எப்பவாது எழுதினாலும் எள்ளல்,நக்கலு,நையாண்டின்னு கலக்குற மாப்ள வெளியூர்க்காரன், நகைச்சுவை,கதை, கவிதைன்னு கலந்துகட்டி அடிக்கிற கார்க்கி, பரிசல்,ஆதி,நர்சிம் இவங்க எழுத்து மேல பொறாமை நிறையவே இருக்கு...பீட் பண்ண முடியாத பொறாமை...





9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..


தமிழரசிதான் சக பதிவரை பாராட்டி ஊக்குவிப்பதில் அவர் பாணி தனி ஆரம்பத்தில் நான் வெறும் புகைப்படங்களாக மட்டும் இடுகைகள் இட்டுக்கொண்டிருந்த பொழுது அவர் எனக்கு தந்த அறிவுரைகள் சில இந்த அறிவுரைகள்தான் இப்போ நான் உங்க முன்னாடி பதிவெழுதுறதுக்கு காரணம்.






அன்புள்ள வசந்த்
நான் தமிழ்..எப்படியிருக்கீங்க? நலமா? உங்கள் பதிவுகள் எல்லாம் சிறப்பாக இருக்கிறது
மற்றும் உங்களுக்கு ஒரு விஷயத்தை சொல்லவே மெயில் பண்ண்னேன்..இதை
கமெண்ட் செக்‌ஷனில் சொல்ல விருப்பமில்லை...இங்கு நீங்க மிக விரைவில்
பிரபலமான பதிவர்....உங்க பதிவுகள் அனைத்துமே நல்லாயிருக்கு...ஆனால் நீங்கள்
இதை மட்டுமே தொடர்ந்தால் உங்க பதிவுக்கு வருபவர்கள் விரைவில் சலிப்படைவர்
இப்பவே உங்களுக்கு வரும் பின்னுட்டங்களைப் பாருங்கள்..எல்லாம் ஒரே மாதிரியானவை
மற்றும் இதை தவிர வேறு சொல்லவும் இயலாது...ஆதாலால் நீங்க எதாவது சற்று மாற்றி தாருங்கள்
முக்கியமாக எழுத்து வகையில்.....இன்னிலை தொடர்ந்தால் இது ஒரு ட்ரேட்மார்க் மாதிரி ஆகிவிடும்
ஆதலால் எழுதுங்கள் கவிதை என்று மட்டுமல்ல நிகழ்வுகள் அனுபவம் கட்டுரை என எழுதுங்கள்
என் கருத்து உங்களை வலிக்க வைத்தால் மன்னிக்கவும்....எனக்கு சொல்லனும் என்று தோன்றியது சொன்னேன்..



இயற்கை வளம் அழிக்கப்படாமல் செழிக்க...அல்லது இயற்கையின் முக்கியத்துவங்கள்...
கிராமங்களில் மக்களின் அறியாமை அதை ஒழிக்க வழிமுறைகள்
கல்வியின் முக்கியத்துவம்
கலாச்சார மாற்றத்தில் எல்லை மீறல்
வறுமை
முதியோர் இல்லங்களும் அன்பு இல்லங்களும் குறைய அறிவுறுத்தல்
சமுதாய அக்கறை
உதவும் மனப்பான்மை
லஞ்சம்
ஒரு தலைப்பு எடுத்து அதன் தேவை அவலம் தேவைப்படும் சீர்த்திருத்தம் விளைவு பலன் இவைகளை அதில் அலசுங்கள் அதாவது சொல்லுங்கள்...என்னுடைய உதவி தேவைப்படின் அவசியம் செய்கிறேன்......
இதில் ஒன்றைப் பற்றி எழுத ஆரம்பியுங்கள் உங்கள் ஆர்வம் தானாகவே வளரும் எண்ணங்களும் நமக்குள் அதிகரிக்கும்..மற்றும் நன்றி வசந்த் ’

-தமிழ்


பின்ன விஜய்ன்னு ஒரு வாசகர் எப்பவும் என்னோட போஸ்ட் படிச்சு அடுத்த நிமிஷம் எனக்கு மெயில் பண்ணுவார் என்னோட வாழப்பிறந்தவள் எனும் இடுகையை பாராட்டி..



 உங்களின் இந்த கவிதையின் முலம்...ஒரு நல்ல சமுதாய நோக்கம் தெரிகிற‌து..உண்மையில் இதைப்போன்ற கவிதைகள்தான் தேவை நாட்டுக்கும், மனிதர்களுக்கும்...
மற்ற கவிதைகள்...நமது திருப்திக்கு...அதுவும் அழகுதான்.. மனம் ஒன்றில் கவர்ந்து இலுக்கப்படும்போது...அதில் இலயிக்கும் போது கவிஞர்களுக்கு கவிதை ப்ரவாகிக்கும்....அது ஜனரஞ்சகமான் ஒன்றோ...
ஆனால் சமுதாயத்தின் அப்போதய நிலமையை உள்ளடக்கிய கவிதைகலள் போற்றப்படவேண்டியவை...உங்களின் இந்த கவிதை அதில் சேர்த்தி...


வாழப்பிறந்தவள்...  இந்த உதாரணம் நன்றாக இருக்கிறது...எப்படியும் வாழலாம் என்ற வாழ்க்கை ஒரு வாழ்க்கையே அல்ல...இப்படித்தான் வாழவேண்டும் என்ற குறிக்கோலோடும், அப்படியே வாழும் வாழ்க்கைத்தான் உண்மையான் வாழ்க்கை என்கிறது உங்கள் கவிதை... நமக்காக வாழாமல் பிறருக்காக வாழும் வாழ்க்கையே உண்மையானது / சிறந்தது...

பட்டிணத்தார் என்று நினைக்கிறேன்..... கூறியதாக கூறுவர்....அதாவது ஒவ்வொரு மனிதன் அவரை கடந்து போகும்போதும், மாடு போகிறது,,நாய் போகிறது..இப்படியாக அவர் அவர்களின் குணாதிசியத்திர்க்கேற்ப்ப கூறுவாரம்...ஒரு சமயம் வல்லலார் இராமலிங்க அடிகள் செல்லும்போது...இதோ மனிதன்...போகிறான் என்றாராம்...
அதுப்போல் உங்கள் கவிதை....

இழந்திவள்..பெற்ற விருது இந்த ஏகே 47... சாமானிய‌மான‌ ஒன்று அல்ல‌..

சராச‌ரிபெண்ணும் அல்ல‌...truly yours ...vijai




பின்பு விசா சாரோட அறிவுரையும் ஐடியாவும்...
உங்க மூலக்கதைக்கு கிட்டதட்ட 60% விஷயங்கள் சேகரிச்சாச்சு இன்னும் கொஞ்சம் கிரியேட்டிவிட்டி தேவைப்படுவதால் வெயிட்டிங் சார்...


இதுபோல இன்னும் நிறைய நண்பர்கள் ஆதரவுடனும் அன்புடனும் உங்களை மகிழ்விப்பது மட்டுமே செய்வேன் என கூறிகொள்கிறேன் ...





10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...


இடுகை நீளமாகிவிட்டது என்பதால் இந்த கேள்வி சாய்ஸில் விடப்படுகிறது...


(வெடி தேடுனவங்களுக்கு வெடி எங்கயுமே இருந்திருக்காதே வவ்வவ்வவ்வே இது தற்பெருமையோ, சுய சொறிதலோ அல்ல என் வலைப்பூ படிக்கும் நண்பர்களுக்கு என்னிடம் இருந்து சில பகிர்வுகள் அவ்வளவே)

இவ்வளவு நேரம் பொறுமையுடன் படித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் இனிமேல் உன்னை தொடர்பதிவுக்கே கூப்பிட மாட்டேண்டா சாமீன்னு Calm Drizzle ஓடறாங்க....சிரிக்க சிரிக்க இடுகை எழுதுற என்னைய சீரியசா எழுத வச்சுட்டீங்களே மேடம்? 


தொடர்பதிவை தொடர 







ஆகியோர் அழைக்கப்படுகிறார்கள்



55 comments:

Priya said...

ம்ம்.. நல்ல பதில்கள் வசந்த்!

சாந்தி மாரியப்பன் said...

தொடர்ந்ததுக்கு மொதல்ல நன்றி சொல்லிக்கிறேன்.

உங்க பாணியில சிரிக்கச்சிரிக்க எழுதியிருப்பீங்கன்னு நெனைச்சேன்,ம்ம். கொஞ்சமா ஏமாத்திட்டீங்க. ச்சான்ஸ் கிடைச்சா அடுத்ததடவையும் மாட்டிவிட்டுடுவேனே.. சிரியஸா எழுதறவரை விடமாட்டோமாக்கும் :-)))

Madhavan Srinivasagopalan said...

me, first.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ஆ.. என்னையா.. கொஞ்சம் ஷாக்காகத் தான் இருக்குது (ஐ மீன் இன்ப அதிர்ச்சி :)) ).. முத வாட்டியா எழுதப் போறேன்.. நன்றி வசந்த்..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

பதிவெழுதுதல் பற்றிய உங்க பார்வைய மெச்சறேன்..

VISA said...

ரொம்ப சிரத்தை எடுத்து எழுதியிருக்கீங்க.
நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்க முடிஞ்சுது. மகிழ்ச்சி.

Subankan said...

//ப்ரியமுடன் வசந்த் என்ற வலைப்பதிவிற்க்கு சென்றால் ரசிக்கலாம்,சிரிக்கலாம்,சிந்திக்கலாம்//

உண்மை. தொடர்ந்து கலக்குங்க வசந்து :)

Paleo God said...

ஒவ்வொரு பதிலையும் படமா போட்டிருக்கலாம்ல! :)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

ஆஹா.. இப்படி எல்லாம் கூட பதிவ படிக்க வைக்க டெக்னிக்கா..??

அடடா.. ஏமாந்து போயி முழு பதிவும் , வெடிகுண்டு தேடி படிச்சிட்டேனே...!!
ஹ்ம்ம்ம். எல்லா பதிலும் சூப்பர் :-))
வாழ்த்துக்கள்.. தொடருங்கள்..

பின்னோக்கி said...

புதிய பதிவர்களை உற்சாகப்படுத்தும் உங்களுக்கு நன்றி.

பல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.

ஆஹா... எப்படா கூப்பிடுவாங்கன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன் :). தொடர்ந்துடுவோம். (இந்த பின்னூட்டத்த படிக்குறத்துக்கு முன்னாடி என் பதிவு வந்துடும் பாருங்க)

kavisiva said...

நல்லாருக்கு வசந்த்.

சொர்க்கத்துக்கு ஒரு கடிதம் பதிவு இப்பதான் படித்தேன். மனம் கனத்து விட்டது. என்னையறியாமல் கண்ணீர் கண்ணை மறைக்கிறது. கண்டிப்பா உங்கள் தங்கையே உங்களுக்கு மகளாக பிறப்பாள். இதுக்கு மேல் எதுவும் எழுத முடியவில்லை.

Jey said...

ஒரு மார்க் கேள்விக்கு, ஒருபக்கம் எழுதுரதா, என்னை கிண்டல் பண்ணாங்க, நான் பரவாயில்லை போல..):.

open talk- னு தலைப்புல சொன்னா மாதிரி, பதில் சொல்லிரிக்கீரு... படிக்க சுவரஸ்யமா இருந்தது. உமக்கு வந்த அட்வைஸ் கடிதத்தை எங்கள் பார்வைக்கு வைத்ததற்கு நன்றி.

pudugaithendral said...

ரசித்தேன்

Veliyoorkaran said...

@Vasanth..///

எலேய்...ஏண்டா மச்சி என்ன கூப்புடல...ராஸ்கல்..(ஏண்டா என்ன யாருமே தொடர் பதிவெழுத கூப்புட மாட்றீங்க...!) :)

Prathap Kumar S. said...

அய்யா ராசா...போதுன்டா சாமி... நான் நினைக்கிறேன் இந்த பதிவை ரொம்ப நாளா எழுதிவச்சுருக்கே.... யாராவது இந்த மாதிரி தொடர்பதிவுக்க கூப்பிடமாட்டாடங்கன்னு வெயிட் பண்ணி போட்டிருக்கே...:))

சரி சரி....மனசில இருக்கறதெல்லாம் கொட்டிட்ட மாதிரி இருக்கு...நல்லாருடே...

Veliyoorkaran said...

@Vasanth..//
மாப்ள நான்தான் நானூறாவது பாலோவர் உனக்கு...! (அல்ரெடி ரெண்டு கள்ள வோட்டு போட்ருக்கேன்..பார்த்து பியுச்ச்சர்ல பெருசா செய்யு மாப்ள...!.) :)

Gayathri said...

அழகாய் எழுதிருகிங்க...இந்த பதிவுலகம் ஒரு ஒருவருக்கும் தரும் அனுபவம் புதிது..மற்றவர்களை ஊக்குவிப்பது எப்படி என்று நம் பதிவுலகில் கற்று கொள்ளலாம்..

வாழ்த்துக்கள்...

Mahi_Granny said...

34 பிரபல இடுகைகள் 300 followers . great .

Anonymous said...

வசந்த் உங்க பேட்டியும் பதிலும் அருமை .பகிர்வுக்கு நன்றி

Anonymous said...

உன் மௌனத்தை மொழி பெயர்த்தேன்
என்னோடு தான் பேசிக்கொண்டு இருக்கிறாய் புரிகிறது.
அன்பின் முகவரிக்கு அலைவரிசை தேவை இல்லை...
விழி நீர் மட்டும் விடையாய் தந்து
வசந்தம் வாசல் பார்க்காது
இதற்கு வானமே எல்லை என அறிந்தேன்.....

sakthi said...

இவ்வளவு பெரிய இடுகையா

உன்னைப்பற்றிய விவரங்களை அறிந்து

கொண்டதில் மகிழ்ச்சி

ஆனால் பாருங்கள் இன்று வரையிலும் பிரபலம் ஆகவே இல்லை என்பது வருத்தம் தரும் செய்தி...


நீயே இன்னும் பிரபலமாகலைன்னு சொன்னா அப்போ நாங்க!!!!

பிரபலம் இதற்கு அர்த்தம் என்ன வசந்த்

Jey said...

கமெண்ஸ் போட்டு 2 மணி நேரமாச்சு, கானோமே?!!! காக்கா தூக்கிட்டு போயிருச்சா??????

சுசி said...

காமெடி பண்ணாதிங்க.. நீங்க பிரபலம் இல்லைன்னு யார் சொன்னது??

நல்ல பதில்கள் வசந்த்.

Srividhya R said...

Good answers! And you are the fastest blogger (in tamil)!

ஹேமா said...

ம்ம்ம்...மனசில இன்னும் இருக்கு சொல்லாம !

சௌந்தர் said...

சீமான்கனி இந்த மாதிரி ரெண்டு பதிவு போடனும் ஹா ஹா ஹா

Anonymous said...

//ஆனால் பாருங்கள் இன்று வரையிலும் பிரபலம் ஆகவே இல்லை என்பது வருத்தம் தரும் செய்தி...

//

இதுதான் தன்னடக்கம் அப்படீங்கறது

சத்ரியன் said...

Open Talk

நாடோடி said...

ரெம்ப‌ வித்தியாச‌மா சொல்லியிருக்கீங்க‌... வாழ்த்துக‌ள்..

Menaga Sathia said...

உங்களுக்கே உரிய நகைச்சுவையில் சொல்லிருக்கிங்க..தொடருங்கள் வசந்த்...சிலநேரம் உங்கள் த்ங்கைக்கு எழுதிய கடிதம் படிப்பேன்...ஏனோ தெரியவில்லை அந்த பதிவு மட்டும் அடிக்கடி படிப்பேன்..400க்கு வாழ்த்துக்கள்...

பா.ராஜாராம் said...

விபரங்கள் அடங்கிய நல்ல பதில்கள் வசந்த குமாரன்! :-)

அருண் பிரசாத் said...

// நண்பர்கள் சீமான்கனி, ரமேஷ், ஜெயகுமார்,அருண்பிரசாத் இன்னும் சில இளைய தலைமுறை பதிவர்கள் //

யாருன்னு தெளிவா சொல்லுங்க அப்பு

நட்புடன் ஜமால் said...

ஷங்கர்-ஜி சொன்னதையே நானும் எதிர்ப்பார்த்தேன் ...

வால்பையன் said...

நல்லாயிருக்கு

சிநேகிதன் அக்பர் said...

நகைச்சுவையுடன் கூடிய நல்ல பதில்கள் வசந்த்.

Unknown said...

அன்பின் வசந்த்...,

//மிஞ்சிபோனால் என்னுடைய வலைப்பூ படிப்பவர்கள் 300 பேர் இருக்கலாம் //

இல்லை.,என்னைப்போல இன்னும் பலர் உண்டு.உங்களின் "சொர்க்கத்துக்கு ஒரு கடிதம்"
பதிவும் அதற்க்கு தமிழரசி அவர்கள் கண்ணீரால் நம்பிக்கை ஊட்டிய "எழுதுகிறேன் ஒரு கடிதம்"
என இவ்விரண்டு பதிவுகளையும் இப்போதுதான் படித்தேன்-விழிநீரை துடைத்தபடியே படித்து நெகிழ்ந்தேன்.
சகோதரர்களுடன் பிறந்த நான் முதன் முறையாக தங்கை இல்லையே... என்ற ஏக்கம் இப்போது வருகிறது. நன்றி...

மங்குனி அமைச்சர் said...

ஓ, இங்கயும் இந்த படம் தான் ஓடுதா ? படம் நல்லாஇருக்கு சார்

யோ வொய்ஸ் (யோகா) said...

////ப்ரியமுடன் வசந்த் என்ற வலைப்பதிவிற்க்கு சென்றால் ரசிக்கலாம்,சிரிக்கலாம்,சிந்திக்கலாம்////

அந்த நம்பிக்கையிலதான் வாசிக்க வாறேன் மாப்பு, இதுவரைக்கும் அந்த நம்பிக்கை பொய்க்கவில்லை நண்பா

Unknown said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

சீமான்கனி said...

//எந்த வித பயனும் தராத யூஸ்லெஸ் எதிர்கவிதைகள் மத்தியில் பதில்கடிதம் எழுதி சிறப்பான உறவுகள் கிடைத்தது இந்த வலைப்பூவினால் கிடைத்த பயன்.//

இந்த பதில் படிக்கும்போது மனசுக்கு ரெம்ப சந்தோஷமா இருந்துச்சு மாப்பி...

//பதிவர்கள் சேர்ந்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்ல கருத்துக்கள் பரிமாறி கொள்ள இன்னொன்றும் ஆரம்பிக்கும் திட்டம் இருக்கிறது.//


ஆவலாய்....

நிசப்தம் பற்றி தெரியாம போச்சே அதான் வருத்தம் மாப்பி...ரசிக்கும் படியான பதில்கள் மாப்பி நிறைய தெரிஞ்சுகிட்டேன்...

vanathy said...

வசந்த், நல்லா இருக்கு. எனக்கு உங்கள் பெயர் தான் மிகவும் பிடித்திருக்கு. முதன் முதலில் சந்தனாவின் ப்ளாக் பக்கம் உங்கள் கமன்ட் பார்த்திருக்கேன். நான் மிகவும் பிஸியான,கொஞ்ச சோம்பல் பிடித்த,( 90% ) நேரத்தின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிற நபர். உங்கள் பதிவுகள் படிக்க ஆரம்பித்ததே நீங்கள் என் follower ஆக சேர்ந்த பின்னர் தான். உங்கள் ப்ளாக் பக்கம் வந்தால் கொஞ்ச நேரம் டென்ஷன், கவலை மறந்து இருக்கலாம்.

ஸ்ரீராம். said...

எளிமையான இனிமையான பகிர்வு...பதிவு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாப்பு jey கூட சேராதன்ன கேக்குறியா. இப்ப உக்காந்து பக்கம் பக்கமா எழுதுறீங்களே...

பெசொவி said...

உங்கள் பதிவுகளைப் போலவே, உங்கள் மனம் திறந்த இந்தப் பதிவும் அருமை. தொடர்பதிவு எழுத என்னை அழைத்தமைக்கு நன்றி, விரைவில் எழுதுகிறேன்

Athiban said...

பதிவு அருமை. இந்தப் பதிவு கீழ்கண்ட வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற பதிவுகளை படிக்க..

http://senthilathiban.blogspot.com/2010/07/blog-post_31.html

பெசொவி said...

தொடர்பதிவு எழுதிட்டேன் வசந்த், படிச்சு உங்க கருத்தை சொல்லுங்க!
http://ulagamahauthamar.blogspot.com/2010/08/blog-post.html

ப்ரியமுடன் வசந்த் said...

@ ப்ரியா நன்றி

@ சாரல் மேடம் அதென்னவோ தெரியலீங்க தொடர் பதிவுன்னாலே சீரியஸா எழுத ஆரம்பிச்சடறேன் இது ஒரு வியாதி போல எனக்கு நன்றி மேடம்

@ மாதவன் சார் 3ர்ட்

@ சந்தனா நன்றி தொடர்ந்தமைக்கும்

@ விசா சார் நன்றி சார்

@ சுபா மிக்க நன்றி மச்சி !!!

@ ஷங்கர் அண்ணா அப்படித்தான் நினைச்சேன் பட் எழுதனும்னு தோணியதால எழுதிட்டேன்..
நன்றிண்ணா..


@ ஆனந்தி மேடம் ம்ம் புரிஞ்சு போச்சா நன்றி மேடம்..!

@ பின்னோக்கி சார் தொடர்ந்தமைக்கு நன்றி சார் :))))

@ கவி மிக்க நன்றிங்க உங்கள் வாழ்த்துகளுக்கு கைமாறு என்கிட்ட இல்ல நன்றி நன்றி மட்டுமே...!

@ ஜெயக்குமார் தொடர்ந்து உங்க பதிவு படிக்கிறதால வந்த வினை பங்காளி நன்றி

ப்ரியமுடன் வசந்த் said...

@ புதுகை தென்றல் மேடம் மிக்க நன்றி

@ வெளிய்யூர்ரு மாப்ள நீதான் நாறடிச்சுருந்தியே சிரிச்சு வயிறு புண்ணாயி போச்சுடேய் அங்க பின்னூட்டம் போட்ட உங்க குரூப்பெல்லாம் சேர்ந்து நாறடிச்சுடுவீங்க அதான் கமெண்ட் போடலை நான் ஒரே ஒரு நல்ல ஓட்டு மட்டும் போட்டேன் மாப்ள...!
400வது பின்னாடி வாரதுக்கும் நன்றி மாப்ள

@ நாஞ்சிலு எப்பிடி மாப்ள கண்டுபிடிச்ச?

@ G3 நன்றி நன்றி

@ மஹிம்மா ம்ம் 300 இல்ல 400 ஹ ஹ ஹா உங்க வாழ்த்துக்கள் தான் என் வளர்ச்சியின் உரம் நன்றி..

@ சந்த்யா நன்றிப்பா

@ தமிழரசி கப்புன்னு புரிஞ்சுண்டேள் நன்றி பாஸ்..

@ சக்தி பிரபலம்னா பிராப்லம் சகோ..

@ சுசி காமெடி பண்றது நானா நீங்களா?

ப்ரியமுடன் வசந்த் said...

@ Altruist ஹலோ மாசத்துக்கு பத்து போஸ்ட் போடறதுக்குள்ளாற டங்குவார் அந்து போகுது இதுல நாந்தான் ஃபாஸ்டாம்ல ஹைய்யோ ஹைய்யோ மாசத்துக்கு 40 போஸ் போடறவங்கலாம் இருக்காங்க பாஸ்,,,

@ ஹேமா வேற எதும் சொல்றதுக்கு இல்லையே!!

@ சௌந்தர் ஹ ஹ ஹா நன்றிங்க

@ அகிலா மேடம் ம்ம் இல்லீங்க மேடம் நிசமாத்தான் சொன்னேன் நன்றி

@ சத்ரியன் நன்றிண்ணா

@ ஸ்டீபன் நன்றி நண்பா

@ மேனகா சகோ மிக்க மகிழ்ச்சி சகோ தங்கள் வாழ்த்துக்கும் நன்றி

@ பாரா அண்ணா நன்றிண்ணா

@ அருண் பிரசாத் நீங்கதான்

@ ஜமால் அண்ணா நன்றிண்ணா
ம்ம்

ப்ரியமுடன் வசந்த் said...

@ நன்றி அருண்

@ நன்றி அக்பர் அண்ணா

@ ரமேஷ் உணர்ச்சி வசப்படவச்சுட்டீங்க நன்றி பாஸ்

@ மங்குனி நன்றி தல

@ யோகா நம்பிக்கை வச்சுருக்குறதுக்கு நன்றி மாப்ஸ்

@ ஸ்வேதா புண்ணியம் என்கிட்ட நிறைய இருக்கு அத நீங்களே வச்சுக்கங்க...

@ வானதி ம்ஹ்ஹும் உங்க கமெண்ட்ஸ் எனக்கு வந்ததுக்கப்புறம்தான் நான் உங்களை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சேன் யெஸ் மிக்க மகிழ்ச்சி வாணி

@ ஸ்ரீராம் மிக்க நன்றி

@ ரமேஷ் ஹ ஹ ஹா அதேதான் மாம்ஸ் :)))))


@ பெ.சொ.விருப்பமில்லை நன்றி சார்
தொடர்ந்தமைக்கும்...!

@ தமிழ் மகன் :))))))))

Anonymous said...

பேட்டி அருமை..
ஏதோ காமெடி பண்ணிருப்பீங்கனு நெனச்சேன்.
ஆனா எதார்த்தமா எழுதியிருக்கீங்க.
நீங்க யார் மீது பொறாமையாக இருக்கீங்கன்னு பதில் சொன்னது நன்றாக இருந்தது.
உங்களுக்கு வந்த முதல் வாசகர் கடிதம் அருமை.
வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

வசந்த், பிரபலமில்லைன்னு சொன்னால்,அப்ப்றம் மத்தவங்க கதியை யோசிக்கறேன்:0
வெகு நல்ல பதிவு. பதிவுகளுக்கு ஒரு வித்யாசமான எடுத்துக்காட்டு. இப்படியே தொடர்ந்து எழுதணும்.நாங்கள் ரசிக்கணும்.

ராமலக்ஷ்மி said...

அருமை. சுவாரஸ்யம். வல்லிம்மா சொல்லியிருப்பதை வழிமொழிகிறேன்.
வாழ்த்துக்கள்.

ப்ரியமுடன் வசந்த் said...

@ இந்திரா மிக்க நன்றிங்க தாமத பின்னூட்ட பதிலுக்கு மன்னிக்கவும்

@ வல்லிம்மா மிக்க சந்தோஷம் தங்களோட அன்பும் ஆதரவும்தான் என்னை செலுத்துகிறது தாமத பின்னூட்ட பதிலுக்கு மன்னிக்கவும் :)

@ ராமலக்ஷ்மி மேடம் மிக்க நன்றி மேடம் :)

Jaleela Kamal said...

நல்ல விலாவாரியான பதில்கள்.

24 பதிவுகள் குட்பிலாக்ஸ் ஆஆஆ
வாழ்த்துக்கள்., நீங்க பெரீஈஈஈஈஈய ஆளுதான்