September 2, 2009

ப்ராக்ரஸ் ரிப்போர்ட்

நாம் எல்லாம் ஆரம்ப பள்ளியிலிருந்து மேல் நிலை பள்ளிவரை படிக்கும் பொழுது அந்த அந்த மாதத்துக்கான தேர்வு வைத்து அதற்க்கான தேர்ச்சி அறிக்கை(ப்ராக்ரஸ் ரிப்போர்ட்) ஆசிரியர்கள் த்யாரித்து கொடுப்பது உண்டு .அந்த தேர்ச்சி அறிக்கையில் வகுப்பில் அதிக மதிப்பெண் வாங்கும் மாணவனுக்கு முத்ல் ரேங்கும் அடுத்தடுத்து மதிப்பெண் பெறுபவட்கள் முறையே இரண்டாம் மூன்றாம் ரேங்க் என வரிசையாக ரேங்க் பெறுவதுண்டு.

இந்த ரேங்க் நடைமுறையால் என்ன பயன் ? ரெண்டாவது ரேங்க் எடுத்தவன் முதல் ரேங்க் வாங்குறவன அடுத்தவாட்டியாவது முந்தணும்,மூன்றாம் ரேங்க் எடுத்தவன் அடுத்தவாட்டி ரெண்டாவது ரேங்க் வாங்கணும்ன்னு நினைப்போம்.

இதுல போட்டி மட்டுமே கண் முன்னாடி நிக்கும்.ஆனா அவங்க என்ன ஆகப்போராங்கன்னு சின்ன வயசுல இருந்து விதைக்கணுன்னு நினைக்கிறது என்னோட ஆசை.

அது மட்டுமில்லமல் கடைசி ரேங்க் வாங்குறவனுக்கு ஒரு தூண்டுதல் தேவை.

அதுக்கு ப்ராக்ரஸ் ரிப்போர்ட் எனும் தேர்ச்சி அறிக்கையில் ரேங்க் பிரிவில்

எதிர்காலம்ன்னு போட்டு கீழ உள்ள மாதிரி பிரிக்கலாம்...

1. 1 To 3 ரேங்க் வாங்குறவங்களுக்கு- I.A.S. ,I.P.S, ஆகலாம்..

2. 4 To 6 ரேங்க் வாங்குறவங்களுக்கு- டாக்டர்,எஞ்சினியர்,ஆசிரியர் ஆகலாம்..

3. 7 To 10 ரேங்க் வாங்குறவங்களுக்கு- மேனேஜர் ஆகலாம்..

4. 11 To 20 ரேங்க் வாங்குறவங்களுக்கு- குமாஸ்தா ஆகலாம்..

5. தேர்ச்சி பெறாதவங்களுக்கு - ஆபிஸ் பாய் ஆகலாம்..

(மேலே குறிப்பிட்டவையில் மேலும் சில சேர்த்துக்கொள்ளலாம்)

என்று குறிப்பிட்டு கொடுக்கும் போது கடைசி ரேங்க் வாங்குறவன் நாம் போய் ஆபிஸ் பாய் ஆகுறதான்னு நினைச்சு ஒரு உத்வேகத்துல மென்மேலும் நன்றாக படித்து அட்லீஸ்ட் மேனேஜராவது ஆயிடனும்ன்னு நினைப்பான்

சிலநேரம் கடைசி ரேங்க் வாங்குறவன் என்னய மாதிரி எஞ்சினியர் ஆவதற்க்கும் வாய்ப்புண்டு.........

இதன் மூலம் சின்ன வயசுலயே அவங்க வேலை பார்க்கும் துறைகளை அவங்களே தேர்ந்தெடுத்துக்குவாங்க

ஆனா அதே இடத்துல தேங்கிடகூடாது அதுதான் இதுல ஒரு மைனஸ் பாயிண்ட்

இது எப்டி இருக்கு?

1. 1 To 3 ரேங்க் வாங்குறவங்களுக்கு- I.A.S. ,I.P.S, ஆகலாம்..

2. 4 To 6 ரேங்க் வாங்குறவங்களுக்கு- டாக்டர்,எஞ்சினியர்,ஆசிரியர் ஆகலாம்..

3. 7 To 10 ரேங்க் வாங்குறவங்களுக்கு- மேனேஜர் ஆகலாம்..

4. 11 To 20 ரேங்க் வாங்குறவங்களுக்கு- குமாஸ்தா ஆகலாம்..

5. தேர்ச்சி பெறாதவங்களுக்கு - ஆபிஸ் பாய் ஆகலாம்..

டிஸ்கி:திட்டுறவங்க எல்லாம் திட்டுங்கப்பா....(இந்த பதிவுலயாச்சும் திட்டு வாங்கிக்கிறேன் சூப்பர் அருமை கலக்கல்ன்னு கேட்டு கேட்டு சலிச்சுபோச்சு)

95 comments:

பீர் | Peer said...

சமீபத்தில் நீயா நானா வில் தலைப்பு, 'மதிப்பெண் அவசியமா' என்பதாக. முதல் மதிப்பெண் வாங்கும் ஒரு +2 மாணவிக்கு இந்தியாவின் நிதியமைச்சர் யாரென்று தெரிந்திருக்கவில்லை. :(

இன்றும் நம் பள்ளிக்கல்வி வரலாறுகள் சரியான வரலாற்றை சொல்லித்தருவதில்லை.

எதிர்காலத்தில் சம்பாதிக்க இன்று அதிக மதிப்பெண் வாங்குவது மட்டுமே நோக்கமாக இருக்கவேண்டுமா?

எதிர்கால சமூகத்தில் நல்ல நிலையில் இருக்க இன்று அதிக மதிப்பெண் வாங்குவது அவசியமா?

அன்று அதிக மதிப்பெண் வாங்கியவர்கள் எல்லாம் இன்று அதிகம் சம்பாதிப்பவர்களாகவும், நல்ல நிலையிலும் இருக்கிறார்களா?

சுயதொழிலில் முன்னேறிய பலரும், பள்ளிக்கல்வியில் தோற்றவர்களே.

என்னைக்கேட்டால், விடா முயற்சியும் தன்னம்பிக்கையுமே மிக முக்கியம் என்பேன்.

(தொடரும் பின்னூட்டங்களையும் பார்ப்போம்)

Unknown said...

எனக்கென்னமோ ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாதுங்கறதுதான் சரியோன்னு தோணுதுங்க..

அ.மு.செய்யது said...

20 க்கு மேல் ரேங்க் வாங்குபவ‌ர்க‌ளும் ஃபெய்ல் ஆகுப‌வ‌ர்க‌ளும்
ப்ளாக‌ர் ஆக‌லாம் ?!?!?!?!?!

அப்பாவி முரு said...

//திட்டுறவங்க எல்லாம் திட்டுங்கப்பா....(இந்த பதிவுலயாச்சும் திட்டு வாங்கிக்கிறேன்//

அதுக்கு திட்டறதுக்கு உரிமை உள்ளவங்ககிட்ட கேட்டா,

போன் நெம்பி வழியும்ல...

blogpaandi said...

மொத்த மதிப்பெண்கள் நிரல் மதிப்பெண் அட்டையில் இல்லையே...............
எங்கள் பள்ளி மதிப்பெண் அட்டை மஞ்சள் வண்ணத்தில் இருக்கும்.

Pebble said...

//5. தேர்ச்சி பெறாதவங்களுக்கு - ஆபிஸ் பாய் ஆகலாம்..//
Enn, software engineer aahi, america kooda pohalam ;).

தேவன் மாயம் said...

அட ஏன் வசந்த்!!! உலகப்படத்தில் எந்த நாடு எங்கே இருக்குன்னு குத்துமதிப்பா சொல்லச்சொல்லுங்க! நிறையப்பேருக்குத்தெரியாது!!! ஒட்டுப்போட்டாச்சு!!

ஜெட்லி... said...

//20 க்கு மேல் ரேங்க் வாங்குபவ‌ர்க‌ளும் ஃபெய்ல் ஆகுப‌வ‌ர்க‌ளும்
ப்ளாக‌ர் ஆக‌லாம் ?!?!?!?!?!//

super ...:))

Unknown said...

/// 1 To 3 ரேங்க் வாங்குறவங்களுக்கு- I.A.S. ,I.P.S, ஆகலாம்..///

இல்ல்ல்லையே நான் home maker தான் ஆகி இருக்கேன்...so sad!!

நட்புடன் ஜமால் said...

என்னோட ரிப்போர்ட்ல உங்கட பேர் போட்டிருக்கு ... ;)

Admin said...

//சிலநேரம் கடைசி ரேங்க் வாங்குறவன் என்னய மாதிரி எஞ்சினியர் ஆவதற்க்கும் வாய்ப்புண்டு.........//

அதுக்குள்ள இது வேறயா....

Admin said...

//டிஸ்கி:திட்டுறவங்க எல்லாம் திட்டுங்கப்பா....(இந்த பதிவுலயாச்சும் திட்டு வாங்கிக்கிறேன் சூப்பர் அருமை கலக்கல்ன்னு கேட்டு கேட்டு சலிச்சுபோச்சு)//

எப்படி திட்டனும் என்று சொல்லுங்க திட்டுறான்

யோ வொய்ஸ் (யோகா) said...

//20 க்கு மேல் ரேங்க் வாங்குபவ‌ர்க‌ளும் ஃபெய்ல் ஆகுப‌வ‌ர்க‌ளும்
ப்ளாக‌ர் ஆக‌லாம் ?!?!?!?!?!//

ரிப்பீட்டு

Anonymous said...

//சுயதொழிலில் முன்னேறிய பலரும், பள்ளிக்கல்வியில் தோற்றவர்களே.

என்னைக்கேட்டால், விடா முயற்சியும் தன்னம்பிக்கையுமே மிக முக்கியம் என்பேன்.//

நண்பரின் இந்த கருத்தை ஆமோதிக்கிறேன்..மார்க் மட்டுமே வாழவைக்கும் என்ற நம்பிக்கை வெகுஆபத்து...இப்போது பத்தாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்ய ஆலோசிப்பதே தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களின் தற்கொலைகளை தடுக்கவே...

Anonymous said...

ப்ரோகிரஸ் ரிபோர்ட் அவசியமே அத்தியவசியமில்லை.மற்றபடி உங்கள் பதிவு புது முயற்சி திட்டனும் என்று நீ ஆசைப்பட்டதால் தான் அந்த முதல் கமெண்ட்....

ஊக்குவித்தலும் உற்சாகப்படுத்தலும் அவசியம்....

கடைனிலை மாணவர்கள் உடைந்துவிடக்கூடாது என்பதிலும் கவனம் அவசியம்....

இது நம்ம ஆளு said...

சிலநேரம் கடைசி ரேங்க் வாங்குறவன் என்னய மாதிரி எஞ்சினியர் ஆவதற்க்கும் வாய்ப்புண்டு.........

சிங்கம் களம் இறங்கிடிச்சு :)

Anonymous said...

வசந்த்,

இத வச்சு கதை மாதிரி ஒண்ணு நான் எழுதியிருக்கே பாருங்க

ஈரோடு கதிர் said...

சரி எந்த ரேங்க் வாங்கறவங்கள
அரசியல்வாதியா / வ்லைப்பதிர்வரா / பின்னூட்டம் போடுற அனானியா எடுத்துக்கறதுனு சொல்லாத வசந்த்க்கு கடுமையான கண்டனம்.

திட்டிட்டேன் போதுமா..

ஆனா இடுகை வழக்கம் போல் அருமை

க.பாலாசி said...

//சரி எந்த ரேங்க் வாங்கறவங்கள
அரசியல்வாதியா / வ்லைப்பதிர்வரா / பின்னூட்டம் போடுற அனானியா எடுத்துக்கறதுனு சொல்லாத வசந்த்க்கு கடுமையான கண்டனம்.//

//5. தேர்ச்சி பெறாதவங்களுக்கு - ஆபிஸ் பாய் ஆகலாம்..//

5. தேர்ச்சி பெறாதவர்களுக்கு - அரசியல் வாதியாகி அடுத்தவர் அண்ட்ராயரை உருவும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக சொல்லலாம்...

vasu balaji said...

எந்தக் காலத்துல இருக்கீங்க. ம்ம். ஆபீஸ்பாய் வேலைக்கு எட்டாம்பு தகுதின்னு தான் அரசாங்கம் சொல்லுது. ஆனா அதுக்கு விண்ணப்பிக்கிறவங்க முதுநிலை பட்டம் வாங்கிட்டு பண்றாங்க. ஆகக் கூடி எப்புடி படிச்சாலும் வேலை தான் யதார்த்தம். அதை விட படிப்பைத் தவிர வேற என்ன சிறப்பிருக்குன்னு வாத்தியும் பார்க்க மாட்டாரு. நாமளும் பார்க்க மாட்டோம். மார்க் மட்டும் போடாம ஊக்கப் படுத்தணும்ங்கற கருத்துக்கு நான் ஜே போடுறேன். இன்னும் கொஞ்சம் விரிவா மத்த விடயங்களும் கருத்தில் கொண்டு ஊக்கப் படுத்துதல் சிறப்புன்னு நினைக்கிறேன். ஊக்கப் படுத்துறத எழுதிட்டு திட்டுங்கன்னு கேட்டா எங்கள பார்த்தா எப்புடி தெரியுது?

கலையரசன் said...

அடிங்.. வெண்னை! அறிவு இருக்கா உனக்கு.. ஓசியில பிளாக் கிடச்சா என்ன வேனா எழுதிடுவியா நீ.. டாராந்துடுவ! கீசிடுவேன்!!

ஹி.. ஹி.. நீதானப்பா திட்ட சொன்ன.. அதான்!

கலகலப்ரியா said...

**ç%&//&%°+"*ç%&/ ithu kkonjam decent thittu.. :P ..thamodaran ennoda report a thirudittaan teacher.. :((

லோகு said...

இதுக்குத்தான் நான் பள்ளிக்கூடம் பக்கமே போகலை.. ரேங்க் கார்ட்ல இருக்கற பெயரெல்லாம் கற்பனையா.. நிஜமா..

அமிர்தவர்ஷினி அம்மா said...

:) அட !

கார்ல்ஸ்பெர்க் said...

//சிலநேரம் கடைசி ரேங்க் வாங்குறவன் என்னய மாதிரி எஞ்சினியர் ஆவதற்க்கும் வாய்ப்புண்டு//

- நம்மள மாதிரின்னு சொல்லுங்க :)

S.A. நவாஸுதீன் said...

என்னாச்சு வசந்த். இது உங்க பேர்ல வேறு யாரும் போட்ட பதிவா. இருபதுக்கு மேல உள்ள எங்கள பத்தி எல்லாம் ஒன்னும் சொல்லறதுக்கு இல்லையாக்கும். (போதுமா)

ஹேமா said...

வசந்த்,சிந்தனை விரிசல் நகைச்சுவையோடு கூடி.புள்ளிகள் வெறும் சும்மாதான்.வாழ்வில் அனுபவமும் முயற்சியுமே ஒரு மனிதனை முன்னேற்றும்.

Radhakrishnan said...

வெகுவாக ரசித்தேன்.

பள்ளிக்குப் போகாதவங்க எல்லாம் ஆடு மாடு மேய்க்கப் போகலாம்னு எழுதிட்டீங்களோனு நினைச்சேன்.

எல்லாமே ஒரு 'திட்ட'த்தோடு தான் வைச்சிருக்காங்க. அந்த 'திட்ட'ப்படி எல்லாமே நடந்திருச்சினா எல்லோருமே ஒழுங்காப் படிப்பாங்கதான். சுயதொழில் படிப்புனு வைச்சி அவங்க அவங்க திறமையினால் சாதிக்கட்டும்னு வழி சொல்லி வைச்சிருக்காங்க.

நல்லதொரு 'திட்ட'மிட்ட இடுகை. மிக்க நன்றி வசந்த் அவர்களே.

சுசி said...

ஏம்பா... என்ன பதிவு போட்டிருக்கீங்க நீங்க... இப்டி பதிவு போட்டா நாங்க சூப்பர், கலக்கல், அசத்தல்னு தானே சொல்லுவோம்...

Menaga Sathia said...

// 1 To 3 ரேங்க் வாங்குறவங்களுக்கு- I.A.S. ,I.P.S, ஆகலாம்..// நான் இந்த ரேங்க் தான் எடுப்பேன் ஆனா ஹவுஸ் ஒய்பாக தான் இருக்கேன்.

Beski said...

//சிலநேரம் கடைசி ரேங்க் வாங்குறவன் என்னய மாதிரி எஞ்சினியர் ஆவதற்க்கும் வாய்ப்புண்டு.........//

:)))) கரீட்டு, என்ன மாதிரி... :)

சுந்தரா said...

மூணாவது வகுப்பு ரிப்போர்ட்டை வச்சு எதையும் முடிவுபண்ணிட முடியாது. சிலகுழந்தைகள் கொஞ்சம் விளையாட்டுத்தனம் குறைஞ்சதும் நல்லா படிக்க ஆரம்பிச்சிடுவாங்க...

முயற்சியும் பயிற்சியும் சேர்ந்துட்டா அடுத்தது முன்னேற்றம்தான்...

மொத்தத்தில்,ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டுக்கும் பிரபலமாவதற்கும் சம்பந்தம் இல்லேன்னுதான் தோணுது...

முனைவர் இரா.குணசீலன் said...

மதிப்பெண் மாணாக்கர்களின் வாழ்க்கையைக் காட்டுவன அல்ல. மாறாக அவர்களின் நினைவுத் திறனை மட்டுமே காட்டுகிறது. அதனால் அவர்களை ஊக்குவிக்குவித்தலால் உயர்நிலை அடையச் செய்யலாம். அதனால் தங்களைத் திட்டமுடியாது. நடைமுறைப் படுத்தினால் நன்றாகத் தான் இருக்கும்! இந்த யோசனை சொன்னதற்குத் தங்களைத் திட்ட வேண்டும் என்ற கேட்டதற்கு வேண்டுமானால் திட்டலாம்

வழிப்போக்கன் said...

அப்ப 100% வேலைவாய்ப்புன்னு சொல்லுங்க...
:)))

சத்ரியன் said...

//திட்டுறவங்க எல்லாம் திட்டுங்கப்பா...//

இந்தா வந்துட்டேன் வசந்த்,

எவ்வளவு நல்லவனா இருக்கியே.கேட்டு வாங்கி கட்டிக்கவெல்லாம் ஒரு தைரியம் வேணும். உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.அதனால இன்னிக்கி திட்டாம விடுறேன்.

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

//சிலநேரம் கடைசி ரேங்க் வாங்குறவன் என்னய மாதிரி எஞ்சினியர் ஆவதற்க்கும் வாய்ப்புண்டு.........//

ஆஹா ... நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு எஞ்சினியர் ஆயுட்டீங்க .. வாழ்த்துக்கள்!!! (இதை தானே எதிர்பார்த்தாய் மனோகரா ... !!! ) ரைட்டு.....

VISA said...

Super Super Super idea illa ithu.

//5. தேர்ச்சி பெறாதவங்களுக்கு - ஆபிஸ் பாய் ஆகலாம்..//
So we will not study anyway we will get office boy job that is enough. he he he.

SUFFIX said...

//7 To 10 ரேங்க் வாங்குறவங்களுக்கு- மேனேஜர் ஆகலாம்..//

ஹா ஹா.. பாவம் அந்த டேமஜரு!!

SUFFIX said...

111 Followers, எண் சூப்பரா இருக்கு, இன்னும் வளர வாழ்த்துக்கள் வஸ்ந்த்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

I am pass

அன்புடன் அருணா said...

//20 க்கு மேல் ரேங்க் வாங்குபவ‌ர்க‌ளும் ஃபெய்ல் ஆகுப‌வ‌ர்க‌ளும்
ப்ளாக‌ர் ஆக‌லாம் ?!?!?!?!?!//
ஹஹாஹாஹா....
அது தவிர வசந்த் என்னைக் கேடடால் ரேங்க் எப்போது கேரியரைத் தீரமானிபபதில்லை....

Azhagan said...

Unfortunately, our education system does not really"educate". As per the system we have, one who can memorize the text book and reproduce on exam papers are "brilliant rank holders". How many of the rank holders really understand what they read?.
The system has no way of evaluating the actual talents of any student. It happens sometimes by pure chance. We, the parents also don't want our children to "learn" and grow up as a good human being, instead we want them to score 99.9% in +2 and become a "doctor or Engineer".

"உழவன்" "Uzhavan" said...

நல்ல யோசனைதான்..

குறை ஒன்றும் இல்லை !!! said...

என்னமோ போங்க..

சுந்தர் said...

படிப்பை வைத்து எதிர்காலம் தீர்மானிக்க முடியாது நண்பரே ! வேண்டாம் இந்த விபரீத யோசனை ?!

Menaga Sathia said...

see this link
http://sashiga.blogspot.com/2009/09/blog-post_7864.html

ப்ரியமுடன் வசந்த் said...

//பீர் | Peer said...
சமீபத்தில் நீயா நானா வில் தலைப்பு, 'மதிப்பெண் அவசியமா' என்பதாக. முதல் மதிப்பெண் வாங்கும் ஒரு +2 மாணவிக்கு இந்தியாவின் நிதியமைச்சர் யாரென்று தெரிந்திருக்கவில்லை. :(

இன்றும் நம் பள்ளிக்கல்வி வரலாறுகள் சரியான வரலாற்றை சொல்லித்தருவதில்லை.

எதிர்காலத்தில் சம்பாதிக்க இன்று அதிக மதிப்பெண் வாங்குவது மட்டுமே நோக்கமாக இருக்கவேண்டுமா?

எதிர்கால சமூகத்தில் நல்ல நிலையில் இருக்க இன்று அதிக மதிப்பெண் வாங்குவது அவசியமா?

அன்று அதிக மதிப்பெண் வாங்கியவர்கள் எல்லாம் இன்று அதிகம் சம்பாதிப்பவர்களாகவும், நல்ல நிலையிலும் இருக்கிறார்களா?

சுயதொழிலில் முன்னேறிய பலரும், பள்ளிக்கல்வியில் தோற்றவர்களே.

என்னைக்கேட்டால், விடா முயற்சியும் தன்னம்பிக்கையுமே மிக முக்கியம் என்பேன்.

(தொடரும் பின்னூட்டங்களையும் பார்ப்போம்)//

நன்றி @ பீர்

(நானும் அதேகருத்தைத்தான் கூறுகிறேன் மதிப்பெண் மற்றும் தரவரிசை தேவையற்றது ஒரு மாற்று மற்றும் ஊக்கம் மட்டுமே மாணவர்களுக்கு தேவை)

ப்ரியமுடன் வசந்த் said...

// பட்டிக்காட்டான்.. said...
எனக்கென்னமோ ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாதுங்கறதுதான் சரியோன்னு தோணுதுங்க..//

ஆம் தோழரே சரியாக கூறினீர்கள்
(சிலருக்கு மட்டுமே அப்படி)

நன்றி பட்டிக்காட்டன் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

ப்ரியமுடன் வசந்த் said...

//அ.மு.செய்யது said...
20 க்கு மேல் ரேங்க் வாங்குபவ‌ர்க‌ளும் ஃபெய்ல் ஆகுப‌வ‌ர்க‌ளும்
ப்ளாக‌ர் ஆக‌லாம் ?!?!?!?!?!//

அப்படியா சங்கதி

நன்றி அ.மு.செய்யது தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும்

ப்ரியமுடன் வசந்த் said...

//அப்பாவி முரு said...
//திட்டுறவங்க எல்லாம் திட்டுங்கப்பா....(இந்த பதிவுலயாச்சும் திட்டு வாங்கிக்கிறேன்//

அதுக்கு திட்டறதுக்கு உரிமை உள்ளவங்ககிட்ட கேட்டா,

போன் நெம்பி வழியும்ல...//

ஆஹா விடமாட்றீங்களே முரு

நன்றி நண்பரே

ப்ரியமுடன் வசந்த் said...

// blogpaandi said...
மொத்த மதிப்பெண்கள் நிரல் மதிப்பெண் அட்டையில் இல்லையே...............
எங்கள் பள்ளி மதிப்பெண் அட்டை மஞ்சள் வண்ணத்தில் இருக்கும்.//

இப்போ கலரா முக்கியம் தோழா

நன்றி பாண்டி தங்கள் வருகைக்கு

ப்ரியமுடன் வசந்த் said...

// Anonymous said...
//5. தேர்ச்சி பெறாதவங்களுக்கு - ஆபிஸ் பாய் ஆகலாம்..//
Enn, software engineer aahi, america kooda pohalam ;).//

ம்ம்....

ப்ரியமுடன் வசந்த் said...

// தேவன் மாயம் said...
அட ஏன் வசந்த்!!! உலகப்படத்தில் எந்த நாடு எங்கே இருக்குன்னு குத்துமதிப்பா சொல்லச்சொல்லுங்க! நிறையப்பேருக்குத்தெரியாது!!! ஒட்டுப்போட்டாச்சு!!//

உண்மைதான் சார்

நன்றி தேவா சார்

ப்ரியமுடன் வசந்த் said...

// ஜெட்லி said...
//20 க்கு மேல் ரேங்க் வாங்குபவ‌ர்க‌ளும் ஃபெய்ல் ஆகுப‌வ‌ர்க‌ளும்
ப்ளாக‌ர் ஆக‌லாம் ?!?!?!?!?!//

super ...:))//

ஆஹா நீங்களும்மா ஜெட்லி

நன்றிப்பா

ப்ரியமுடன் வசந்த் said...

//Thamarai selvi said...
/// 1 To 3 ரேங்க் வாங்குறவங்களுக்கு- I.A.S. ,I.P.S, ஆகலாம்..///

இல்ல்ல்லையே நான் home maker தான் ஆகி இருக்கேன்...so sad!!//

ப்ச் என்ன பண்றது சகோதரி

மதிப்பெண்ணை நினைக்காம எதிர்காலத்தை நினைச்சு படிச்சுருக்கலாம்(எந்த காலேஜ் ஜெய்ராஜ் அன்னபாக்கியம் காலேஜா)

நன்றி சகோ தொடர் வருகைக்கும் கருத்துக்களுக்கும்

ப்ரியமுடன் வசந்த் said...

// நட்புடன் ஜமால் said...
என்னோட ரிப்போர்ட்ல உங்கட பேர் போட்டிருக்கு ... ;)//

என்னோட அண்ணன் தானே நீங்க மட்டும் எப்பிடி இருப்பீங்க?

நன்றி சகோதரரே .......

ப்ரியமுடன் வசந்த் said...

// சந்ரு said...
//சிலநேரம் கடைசி ரேங்க் வாங்குறவன் என்னய மாதிரி எஞ்சினியர் ஆவதற்க்கும் வாய்ப்புண்டு.........//

அதுக்குள்ள இது வேறயா....//

ஆமாப்பா...ஆமா அந்த சோகக்கதையெழுதனும்னா ஒரு ப்லாக் பத்தாது......

ப்ரியமுடன் வசந்த் said...

//சந்ரு said...
//டிஸ்கி:திட்டுறவங்க எல்லாம் திட்டுங்கப்பா....(இந்த பதிவுலயாச்சும் திட்டு வாங்கிக்கிறேன் சூப்பர் அருமை கலக்கல்ன்னு கேட்டு கேட்டு சலிச்சுபோச்சு)//

எப்படி திட்டனும் என்று சொல்லுங்க திட்டுறான்
//

நீங்க எப்பிடி வேணும்னாலும் திட்டலாம் பாருங்க நம்ம மாமு கலை எப்பிடி திட்டிருக்காருன்னு.....

நன்றி சந்ரு

ப்ரியமுடன் வசந்த் said...

//Geetha Achal said...
இந்த பதிவினை கொஞ்சம் பார்க்கவும்.
http://geethaachalrecipe.blogspot.com/2009/09/blog-post.html

அன்புடன்,
கீதா ஆச்சல்//

ரொம்ப நன்றி மேடம் என்னையும் மதிச்சு விருது குடுத்ததுக்கு

விருது வைக்குறதுக்கு ப்லாக்ல இடமே இல்லாம போச்சு..அதனால விருதுக்குன்னு தனியா ப்லாக் தொடங்கப்போறேன்....

ப்ரியமுடன் வசந்த் said...

// யோ வாய்ஸ் said...
//20 க்கு மேல் ரேங்க் வாங்குபவ‌ர்க‌ளும் ஃபெய்ல் ஆகுப‌வ‌ர்க‌ளும்
ப்ளாக‌ர் ஆக‌லாம் ?!?!?!?!?!//

ரிப்பீட்டு//

நீங்களுமா யோகா?

அடடடே

மிக்க நன்றி யோகா

ப்ரியமுடன் வசந்த் said...

//தமிழரசி said...
//சுயதொழிலில் முன்னேறிய பலரும், பள்ளிக்கல்வியில் தோற்றவர்களே.

என்னைக்கேட்டால், விடா முயற்சியும் தன்னம்பிக்கையுமே மிக முக்கியம் என்பேன்.//

நண்பரின் இந்த கருத்தை ஆமோதிக்கிறேன்..மார்க் மட்டுமே வாழவைக்கும் என்ற நம்பிக்கை வெகுஆபத்து...இப்போது பத்தாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்ய ஆலோசிப்பதே தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களின் தற்கொலைகளை தடுக்கவே...//

அதத்தாம் நானும் சொன்னேன்...தமிழ்

ப்ரியமுடன் வசந்த் said...

//தமிழரசி said...
ப்ரோகிரஸ் ரிபோர்ட் அவசியமே அத்தியவசியமில்லை.மற்றபடி உங்கள் பதிவு புது முயற்சி திட்டனும் என்று நீ ஆசைப்பட்டதால் தான் அந்த முதல் கமெண்ட்....

ஊக்குவித்தலும் உற்சாகப்படுத்தலும் அவசியம்....

கடைனிலை மாணவர்கள் உடைந்துவிடக்கூடாது என்பதிலும் கவனம் அவசியம்....//

யெஸ் அவசியம்....

நன்றி தமிழரசி

ப்ரியமுடன் வசந்த் said...

// இது நம்ம ஆளு said...
சிலநேரம் கடைசி ரேங்க் வாங்குறவன் என்னய மாதிரி எஞ்சினியர் ஆவதற்க்கும் வாய்ப்புண்டு.........

சிங்கம் களம் இறங்கிடிச்சு :)//

ரொம்ப ஆதரவு இருக்கு போல நமக்கு நன்றி இது நம்ம ஆளு....

ப்ரியமுடன் வசந்த் said...

// வித்யா said...
:)//

நன்றி வித்யா

ப்ரியமுடன் வசந்த் said...

//வடகரை வேலன் said...
வசந்த்,

இத வச்சு கதை மாதிரி ஒண்ணு நான் எழுதியிருக்கே பாருங்க//

படிச்சேன் சார் நல்லாயிருந்தது அதுமாதிரிதான் சார் நடக்குது இப்போ நிறையா.....

ப்ரியமுடன் வசந்த் said...

// கதிர் - ஈரோடு said...
சரி எந்த ரேங்க் வாங்கறவங்கள
அரசியல்வாதியா / வ்லைப்பதிர்வரா / பின்னூட்டம் போடுற அனானியா எடுத்துக்கறதுனு சொல்லாத வசந்த்க்கு கடுமையான கண்டனம்.

திட்டிட்டேன் போதுமா..

ஆனா இடுகை வழக்கம் போல் அருமை//

நன்றி கதிர்

ப்ரியமுடன் வசந்த் said...

//க.பாலாஜி said...
//சரி எந்த ரேங்க் வாங்கறவங்கள
அரசியல்வாதியா / வ்லைப்பதிர்வரா / பின்னூட்டம் போடுற அனானியா எடுத்துக்கறதுனு சொல்லாத வசந்த்க்கு கடுமையான கண்டனம்.//

//5. தேர்ச்சி பெறாதவங்களுக்கு - ஆபிஸ் பாய் ஆகலாம்..//

5. தேர்ச்சி பெறாதவர்களுக்கு - அரசியல் வாதியாகி அடுத்தவர் அண்ட்ராயரை உருவும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக சொல்லலாம்...//

முதல்ல அந்த ஆப்சன் தான் சேர்க்கலாம்ன்னு இருந்தேன் பாலாஜி

நன்றி பாலாஜி

ப்ரியமுடன் வசந்த் said...

// வானம்பாடிகள் said...
எந்தக் காலத்துல இருக்கீங்க. ம்ம். ஆபீஸ்பாய் வேலைக்கு எட்டாம்பு தகுதின்னு தான் அரசாங்கம் சொல்லுது. ஆனா அதுக்கு விண்ணப்பிக்கிறவங்க முதுநிலை பட்டம் வாங்கிட்டு பண்றாங்க. ஆகக் கூடி எப்புடி படிச்சாலும் வேலை தான் யதார்த்தம். அதை விட படிப்பைத் தவிர வேற என்ன சிறப்பிருக்குன்னு வாத்தியும் பார்க்க மாட்டாரு. நாமளும் பார்க்க மாட்டோம். மார்க் மட்டும் போடாம ஊக்கப் படுத்தணும்ங்கற கருத்துக்கு நான் ஜே போடுறேன். இன்னும் கொஞ்சம் விரிவா மத்த விடயங்களும் கருத்தில் கொண்டு ஊக்கப் படுத்துதல் சிறப்புன்னு நினைக்கிறேன். ஊக்கப் படுத்துறத எழுதிட்டு திட்டுங்கன்னு கேட்டா எங்கள பார்த்தா எப்புடி தெரியுது?//

கருத்துக்கு நன்றி பாலா சார்

நான் ஊக்கப்படுத்துறதத்தான் சொன்னேன்.......

ப்ரியமுடன் வசந்த் said...

// கலையரசன் said...
அடிங்.. வெண்னை! அறிவு இருக்கா உனக்கு.. ஓசியில பிளாக் கிடச்சா என்ன வேனா எழுதிடுவியா நீ.. டாராந்துடுவ! கீசிடுவேன்!!

ஹி.. ஹி.. நீதானப்பா திட்ட சொன்ன.. அதான்!//

இத இத இதத்தான் எதிர்பார்த்தேன்...

நன்றி கலை மாம்ஸ்

ப்ரியமுடன் வசந்த் said...

//கலகலப்ரியா said...
**ç%&//&%°+"*ç%&/ ithu kkonjam decent thittu.. :P ..thamodaran ennoda report a thirudittaan teacher.. :((//

வருகைக்கு நன்றி ப்ரியா

அது என்னா பாஷை தாயீ

ப்ரியமுடன் வசந்த் said...

// லோகு said...
இதுக்குத்தான் நான் பள்ளிக்கூடம் பக்கமே போகலை.. ரேங்க் கார்ட்ல இருக்கற பெயரெல்லாம் கற்பனையா.. நிஜமா..//

பாதிபேர் நிஜம் பாதி பொய்

நன்றி லோகு

ப்ரியமுடன் வசந்த் said...

// அமிர்தவர்ஷினி அம்மா said...
:) அட !//

நன்றி அமித்து அம்மா

ப்ரியமுடன் வசந்த் said...

// கார்ல்ஸ்பெர்க் said...
//சிலநேரம் கடைசி ரேங்க் வாங்குறவன் என்னய மாதிரி எஞ்சினியர் ஆவதற்க்கும் வாய்ப்புண்டு//

- நம்மள மாதிரின்னு சொல்லுங்க :)//

எத்தி பேர் போட்டிக்கி

நன்றி அருண்கார்த்திக்

ப்ரியமுடன் வசந்த் said...

//S.A. நவாஸுதீன் said...
என்னாச்சு வசந்த். இது உங்க பேர்ல வேறு யாரும் போட்ட பதிவா. இருபதுக்கு மேல உள்ள எங்கள பத்தி எல்லாம் ஒன்னும் சொல்லறதுக்கு இல்லையாக்கும். (போதுமா)//

உண்மையா வாழ்த்துறவங்களுக்கு திட்டக்கூட தெரியாதுன்னு புரியுது நவாஸ் நன்றி...

ப்ரியமுடன் வசந்த் said...

// ஹேமா said...
வசந்த்,சிந்தனை விரிசல் நகைச்சுவையோடு கூடி.புள்ளிகள் வெறும் சும்மாதான்.வாழ்வில் அனுபவமும் முயற்சியுமே ஒரு மனிதனை முன்னேற்றும்.//

சரியான் கருத்து ஹேமா நன்றி

ப்ரியமுடன் வசந்த் said...

// வெ.இராதாகிருஷ்ணன் said...
வெகுவாக ரசித்தேன்.

பள்ளிக்குப் போகாதவங்க எல்லாம் ஆடு மாடு மேய்க்கப் போகலாம்னு எழுதிட்டீங்களோனு நினைச்சேன்.

எல்லாமே ஒரு 'திட்ட'த்தோடு தான் வைச்சிருக்காங்க. அந்த 'திட்ட'ப்படி எல்லாமே நடந்திருச்சினா எல்லோருமே ஒழுங்காப் படிப்பாங்கதான். சுயதொழில் படிப்புனு வைச்சி அவங்க அவங்க திறமையினால் சாதிக்கட்டும்னு வழி சொல்லி வைச்சிருக்காங்க.

நல்லதொரு 'திட்ட'மிட்ட இடுகை. மிக்க நன்றி வசந்த் அவர்களே.//

திட்டன்னு சொன்னதக்கூட வேறமாதிரி எடுத்துக்கிட்டு வாழ்த்திய தங்களை என்னவென்று பாராட்டுவது நன்றி தோழரே.......

ப்ரியமுடன் வசந்த் said...

//சுசி said...
ஏம்பா... என்ன பதிவு போட்டிருக்கீங்க நீங்க... இப்டி பதிவு போட்டா நாங்க சூப்பர், கலக்கல், அசத்தல்னு தானே சொல்லுவோம்...//

மிக்க மகிழ்ச்சி சகோ...

நன்றி சுசி

ப்ரியமுடன் வசந்த் said...

// Mrs.Menagasathia said...
// 1 To 3 ரேங்க் வாங்குறவங்களுக்கு- I.A.S. ,I.P.S, ஆகலாம்..// நான் இந்த ரேங்க் தான் எடுப்பேன் ஆனா ஹவுஸ் ஒய்பாக தான் இருக்கேன்.//

நீங்களும் தாமரை மாதிரிதானா
ப்ச் என்ன சொல்றது ஆனா ஃப்ரான்ஸ் போயிட்டீங்களே...

நன்றி மேனஹா

ப்ரியமுடன் வசந்த் said...

//எவனோ ஒருவன் said...
//சிலநேரம் கடைசி ரேங்க் வாங்குறவன் என்னய மாதிரி எஞ்சினியர் ஆவதற்க்கும் வாய்ப்புண்டு.........//

:)))) கரீட்டு, என்ன மாதிரி... :)//

அடப்பாவிகளா

ஒரு கோஷ்டியே ஆரம்பிக்கலாம் போல தெரியுது....

நன்றி பெஸ்கி

ப்ரியமுடன் வசந்த் said...

//சுந்தரா said...
மூணாவது வகுப்பு ரிப்போர்ட்டை வச்சு எதையும் முடிவுபண்ணிட முடியாது. சிலகுழந்தைகள் கொஞ்சம் விளையாட்டுத்தனம் குறைஞ்சதும் நல்லா படிக்க ஆரம்பிச்சிடுவாங்க...

முயற்சியும் பயிற்சியும் சேர்ந்துட்டா அடுத்தது முன்னேற்றம்தான்...

மொத்தத்தில்,ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டுக்கும் பிரபலமாவதற்கும் சம்பந்தம் இல்லேன்னுதான் தோணுது...//

சும்மா எடுத்துக்காட்டுக்குத்தான் மூன்றாம் வகுப்ப்பு

மற்றபடி அனைத்து வகுப்புக்கும் எடுத்துக்கிடலாம்

வருகைக்கு நன்றி சகோதரி....

ப்ரியமுடன் வசந்த் said...

// முனைவர்.இரா.குணசீலன் said...
மதிப்பெண் மாணாக்கர்களின் வாழ்க்கையைக் காட்டுவன அல்ல. மாறாக அவர்களின் நினைவுத் திறனை மட்டுமே காட்டுகிறது. அதனால் அவர்களை ஊக்குவிக்குவித்தலால் உயர்நிலை அடையச் செய்யலாம். அதனால் தங்களைத் திட்டமுடியாது. நடைமுறைப் படுத்தினால் நன்றாகத் தான் இருக்கும்! இந்த யோசனை சொன்னதற்குத் தங்களைத் திட்ட வேண்டும் என்ற கேட்டதற்கு வேண்டுமானால் திட்டலாம்//

நன்றி குணா வருகைக்கும் கருத்துக்கும்

ப்ரியமுடன் வசந்த் said...

// வழிப்போக்கன் said...
அப்ப 100% வேலைவாய்ப்புன்னு சொல்லுங்க...
:)))//

அடப்பாவி நக்கலா

சின்னப்புள்ளைன்றது சரியா போச்சு

நன்றிப்பா

ப்ரியமுடன் வசந்த் said...

//சத்ரியன் said...
//திட்டுறவங்க எல்லாம் திட்டுங்கப்பா...//

இந்தா வந்துட்டேன் வசந்த்,

எவ்வளவு நல்லவனா இருக்கியே.கேட்டு வாங்கி கட்டிக்கவெல்லாம் ஒரு தைரியம் வேணும். உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.அதனால இன்னிக்கி திட்டாம விடுறேன்.//

ஹி ஹி ஹி

நன்றி தல

ப்ரியமுடன் வசந்த் said...

//நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...
//சிலநேரம் கடைசி ரேங்க் வாங்குறவன் என்னய மாதிரி எஞ்சினியர் ஆவதற்க்கும் வாய்ப்புண்டு.........//

ஆஹா ... நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு எஞ்சினியர் ஆயுட்டீங்க .. வாழ்த்துக்கள்!!! (இதை தானே எதிர்பார்த்தாய் மனோகரா ... !!! ) ரைட்டு.....//

வேற மாதிரி புரிஞ்சுட்டியே சரவணா

நன்றிப்பா

ப்ரியமுடன் வசந்த் said...

// karthick said...
கந்தசாமி போட்டியில் கலந்து கொள்ளுங்கள் .. பாரிஸுக்கு டிக்கெட் வெல்லுங்கள் www.safarikanthaswamy.com//

எந்த பாரீஸ் நம்ம பழைய சென்னை பஸ்நிலையத்துக்கா?

ப்ரியமுடன் வசந்த் said...

// VISA said...
Super Super Super idea illa ithu.

//5. தேர்ச்சி பெறாதவங்களுக்கு - ஆபிஸ் பாய் ஆகலாம்..//
So we will not study anyway we will get office boy job that is enough. he he he.//

நன்றி விசா

ப்ரியமுடன் வசந்த் said...

// ஷ‌ஃபிக்ஸ் said...
111 Followers, எண் சூப்பரா இருக்கு, இன்னும் வளர வாழ்த்துக்கள் வஸ்ந்த்.//

தங்கள் மன்மார்ந்த பாராட்டுக்கு மிக்க நன்றி சஃபி

ப்ரியமுடன் வசந்த் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
I am pass//

ஆல் பாஸா தல

நன்றி ஷேக்

ப்ரியமுடன் வசந்த் said...

//அன்புடன் அருணா said...
//20 க்கு மேல் ரேங்க் வாங்குபவ‌ர்க‌ளும் ஃபெய்ல் ஆகுப‌வ‌ர்க‌ளும்
ப்ளாக‌ர் ஆக‌லாம் ?!?!?!?!?!//
ஹஹாஹாஹா....
அது தவிர வசந்த் என்னைக் கேடடால் ரேங்க் எப்போது கேரியரைத் தீரமானிபபதில்லை....//

அதுதான் நானும் சொல்றேன் பிரின்ஸ்

நன்றி அருணா

ப்ரியமுடன் வசந்த் said...

//azhagan said...
Unfortunately, our education system does not really"educate". As per the system we have, one who can memorize the text book and reproduce on exam papers are "brilliant rank holders". How many of the rank holders really understand what they read?.
The system has no way of evaluating the actual talents of any student. It happens sometimes by pure chance. We, the parents also don't want our children to "learn" and grow up as a good human being, instead we want them to score 99.9% in +2 and become a "doctor or Engineer".//

விளக்கமான கருத்துக்கு மிக்க நன்றி அழகன்

ப்ரியமுடன் வசந்த் said...

//" உழவன் " " Uzhavan " said...
நல்ல யோசனைதான்..//

நன்றி உழவன்

ப்ரியமுடன் வசந்த் said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...
என்னமோ போங்க..//

எங்க போறது ராஜ்?

நன்றி

ப்ரியமுடன் வசந்த் said...

//சுந்தர் said...
படிப்பை வைத்து எதிர்காலம் தீர்மானிக்க முடியாது நண்பரே ! வேண்டாம் இந்த விபரீத யோசனை ?!//

ஏன்?

நன்றி சுந்தர்

நாகை சிவா said...

வசந்த்.. உங்க கருத்தில் எனக்கு முற்றிலும் உடன்பாடு இல்லை. உங்களுக்கு புரிய வைப்பதும் கடினம். நன்றி