அது பழைய கால விளக்கு போல தென்பட்டது...வசந்த் அதை வாங்கி அதிலுள்ள மண்ணை துடைத்துக்கொண்டிருக்கும் போது அந்த அசரிரீ ஒலித்தது...
ஒரு மங்கலான வெளிச்சம் தோன்றியது...
என் அருமை மானுடரே என்று ஆரம்பித்த அசரிரீ தொடர்ந்து என்னை இவ்விளக்கிலிருந்து விடுவித்தமைக்கு மிக்க நன்றி நண்பர்களே..இன்றிலிருந்து நான் உங்கள் அடிமை உங்களுடைய ஆசைகளை நிறைவேற்றும் அடிமை..என்று கூறிய அச்ர்ரீ தொடர்ந்து கேளுங்கள் தங்கள் நிறைவேறா ஆசைகளை நான் நிறைவேற்றி வைக்கிறேன் என்று கூறியது.
இதைக்கேட்ட கணேஷும் வசந்தும் மிக ஆச்சர்யத்தோடு அவ்விளக்கை நோக்கி எங்கள் இருவருக்கும் சக்கரை நோய் இருப்பதனால் வீட்டில் எதுவும் இனிப்பு பலகாரங்கள் கொடுப்பதில்லை எனவே எங்கள் நாக்கு மரத்துவிட்டது,இப்போ எங்களுக்கு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இனிப்பு பலகாரம் வேண்டும் என்று கூறினர்.உடனே அந்த அசரிரீ அப்படியே ஆகட்டும் என்று கூறி அவர்கள் முன்பு தட்டு நிறைய கிருஷ்ணா ஸ்வீட்ஸ் பலகாரங்களை கொண்டுவந்து வைத்தது.இருவரும் அவற்றை ஆசையோடு உண்டுவிட்டு ஆஹா அற்புதம் என்று கூறினர்.ஆசையாக உண்ணும் இருவரையும் பார்த்த அந்த விளக்கு பூதம் தங்கள் இரண்டாவது ஆசை என்ன என்று வினவியது?
அதற்க்கு இருவரும் தங்களுக்குள் பேசியவாறே விளக்கு பூதத்திடம் முதலில் கணேஷ் நான் இப்போ இருக்குற ஒரு வசதியான குடும்பத்தின் இளைஞனாக வேண்டும் எனவும், வசந்த் நான் இப்போ இருக்குற ஒரு ஏழைக்குடும்பத்தின் இளைஞனாக மாற வேண்டும் என்று கூறியதும் அப்படியே ஆகட்டும் என்று கூறி மறைந்தது விளக்கு பூதம்.
இப்போ கணேஷின் இளைமை காலத்தை பார்ப்போம்....
அவ்வூரிலேயெ மிக பிரபலமான ஒரு தொழிலதிபரின் மகனாக கணேஷ் மாறிவிட்டிருந்தார்.(இன்னும் என்ன ர்ர் மாறிட்டான்).ஒரு பணக்கார தோரணையுடன் அவர்கள் வீட்டை வலம் வந்தான்.
அங்கே அவன் செய்த ஆட்டம் பாட்டத்திற்க்கு அளவே இல்லாமல் போய்விட்டது.காசு வந்தா எல்லாரும் போடுற ஆட்டம் தான்.
ஆட்டம் பாட்டங்கள் என்ன என்ன என்று பார்ப்போமா?
1.முதலில் சிகரெட் பிடிப்பது எப்படின்னு கத்துக்கிட்டான்
2.மது வாசனை அறிந்து பிராண்ட் கண்டுபிடிக்கும் அளவிற்க்கு தேர்ந்த குடிகாரன் ஆகிவிட்டான்
3.ஒரு பணஆசை பிடித்த மாதுவின் காதல் போதைக்கும் அடிமை ஆகிவிட்டான்.
4.தினம் வித விதமான பெண்கள் டேட்டிங்ன்ற பேர்ல அவன் ஆசையை தீர்த்து
வைத்தனர்.
5.சீட்டு,ரேஸ் , சினிமான்னு பொழுது போக்குறதுக்கு என்ன என்ன இருக்கோ அத்தனையும் அனுபவித்தான்.
6.இது போதாதுன்னு இண்டெர்நெட் ஆபாச படங்களுக்கும் அடிமை ஆகிவிட்டான்.
7.ஒரு பெரிய சினிமா நடிகனின் ஆஸ்தான ரசிகனாகி அவன் பிறந்த நாளைக்கு
பேனருக்கு பாலபிஷேகம் பண்ணுற அளவுக்கு பிரியம் வச்சுட்டான்.
8.பிரபல அரசியல் கட்சியின் இளைஞர் தலைவராயிட்டான்.
9.அந்த ஊர்லயே இல்லாத இருசக்கர வாகனத்தை சீனாவில இருந்து இறக்குமதி பண்ணி ஊரையே ஒரு ரவுண்ட் வந்து அலப்பரைய கூட்டினான்.
10.வீட்டுல இல்லாத எலக்ட்ரானிக் சாதனங்கள் என்று கூறும் அளவில் அனைத்து எலக்ட்ரானிக் சாதனங்களையும் வாங்கி வீட்டை எலக்ட்ரானிக் குப்பையாக்கினான்.
திடீர்ன்னு அவங்க அப்பா இறந்து போனதால சொத்து எல்லாம் அவங்க சொந்த குலச்சாமி பேருக்கு போயிடுச்சு(அப்படித்தான் அவங்க அப்பா உயில் எழுதியிருந்தார்).
சொத்து போனதோடு அவனோட வசதி வாய்ப்புகளும் பறிபோச்சு.அத்தோடு தினமும் குடிக்க முடியாதலால் கை கல் நடுக்கம் எடுத்தது . டாக்டர் எல்லாம் அவன பரிசோதிச்சு பார்த்துட்டு கைய விரிச்சுட்டாங்க . பணம் இருக்கும் போது கூடயிருந்த நட்புக்கள் இப்போ அவன் நோய் வாய்ப்பட்டதும் அவன் பக்கம் தலை வச்சு கூட படுக்குறது இல்லை.
இப்போதான் அவன் மனசுக்கு பட்டது தனக்கு கிடைச்ச பணவசதி வாய்ப்பை நாம சரியா பயன்படுத்தலையோன்னு.சரியா பயன் படுத்தியிருந்தா இந்நேரம் ஊர் போற்றும் பெரிய பிஸினெஸ் மேன் ஆயிருக்கலாம்.அழகான அமைதியான குடும்ப பொண்ணை காதலிச்சுருந்தா அவளோட அமைதியா குடும்பம் நடத்தியிருக்கலாம்,இந்நேரம் வாழ்க்கை ரசனையா வாழ்ந்திருக்கலாம்ன்னு நினைச்சு நினைச்சு வருந்தும் பொழுதுதான் அவனுக்கு பூதத்தின் ஞாபகம் வந்தது.திரும்பவும் பூதத்தை கூப்பிட விரையும் போது பூதம் கூறியது உன்னோட கதைய பார்த்தாச்சு இனி வசந்த் கதையும் பாக்கணுமே அதுவரைக்கும் நீ பண்ணுன அட்டகாசத்தின் கொடுமையெல்லாம் அனுபவிச்சுக்கிட்டே இரு அப்படின்னு சொல்லி பூதம் மறைந்து விட்டது..
அடுத்த இடுகையில் வசந்தின் அட்டகாசம் தொடரும்........

தலைப்புவிளக்கம்
இளமையில் இனிமையும் இன்னல்களும் பார்ட் 1 கவிதை அரசி தமிழரசியின் தொடர் பதிவின் தொடர்ச்சி
இளமையில் இனிமையும் இன்னல்களும் பார்ட் 1 கவிதை அரசி தமிழரசியின் தொடர் பதிவின் தொடர்ச்சி
டிஸ்கி:ஏதோ தத்தக்கா பித்தக்கான்னு எழுதியிருக்கேன் ரொம்ப அறுவையா இருந்துச்சுன்னா மன்னிச்சுடுங்கப்பா.(சத்தியமா இதுல கருத்து சொல்லவில்லை)
31 comments:
aahaa.. bhoodham kilambidichiyya..
ரொம்ப சூப்பர் கதை
எங்கயிருந்து இதெல்லாம் ...
எப்டி இப்படில்லாம்..
கணேஷ் வசந்தோட கேரக்டரையே மாத்திட்டீங்களே...
ப்ராக்ரஸ் ரிப்போட் டிஸ்கி நினைவு வருது.. :(
//அவ்வூரிலேயெ மிக பிரபலமான ஒரு தொழிலதிபரின் மகனாக கணேஷ் மாறிவிட்டிருந்தார்.(இன்னும் என்ன ர்ர் மாறிட்டான்).ஒரு பணக்கார தோரணையுடன் அவர்கள் வீட்டை வலம் வந்தான். //
அப்போ வசந்த்????
// தமிழரசியின் தொடர் பதிவின் தொடர்ச்சி //
தொடர் இடுகையின் தொடர்ச்சி...
ம்ம்... ஆரம்பம் ரொம்ப அசத்தலாகத்தான் இருக்கு..
// திடீர்ன்னு அவங்க அப்பா இறந்து போனதால சொத்து எல்லாம் அவங்க சொந்த குலச்சாமி பேருக்கு போயிடுச்சு(அப்படித்தான் அவங்க அப்பா உயில் எழுதியிருந்தார்). //
ரொம்ப நல்ல அப்பா..
//மது வாசனை அறிந்து பிராண்ட் கண்டுபிடிக்கும் அளவிற்க்கு தேர்ந்த குடிகாரன் ஆகிவிட்டான்
//
எப்படி இதெல்லாம்...
நல்லா இருக்கு வசந்த்.. ஒன்னு மட்டும் தான் புரியல.. எதோ "இன்டர்நெட்ல ஆபாச படம்னு" எழுதி இருக்கீங்க.. அப்படினா?
ம்ம். நடக்கட்டும். நடக்கட்டும்.
:)
வித்யா
கனேஷ் கைல இருந்து வசந்த் விளக்கை வாங்கி தேய்ச்சப்பவே டவுட்டு. சரியா போச்சி. வசந்த் கதைய பார்ப்பம்.
OH கணேஷ் மாற பூதம் தான் காரணமா? அப்ப திருந்திக்கலாம்....
ஏனுங்க
இந்த கணேஷ் வசந்த்
சுஜாதா பெத்த புள்ளைங்களா?
வசதி வாய்ப்பும் கிடைக்கும் போது பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் என்ன நிலை என்பதற்கு கணேஷ் ஒரு உதாரணம்....எப்படி இருக்க வேண்டாம் என்பதை கதையின் வடிவில் உணர்த்தி விட்டாய்..ஆனால் பூதமும் கை விட்டது தான் பாவம்...
வசந்த் தலைப்பை நீங்க மேலே சொல்லியிருக்க வேண்டும்....சில சமயம் தலைப்பு என்ன? என்ன சொல்ல வரார் வசந்த் என்ற யோசனையிலேயே படிப்பது போல உள்ளது...
இளமையில் ஒரு இளைஞன் எப்படி இருக்க கூடாது என்பதற்கு கணேஷை பற்றி சொல்லி அதில் இளமையில் இன்னல்களை சொல்லிட்டீங்க...பார்க்கலாம் இந்த வசந்த் என்ன பண்றார் என்று?
எதுவும் உழைப்பால் கிடைத்தால் தான் அதன் அருமை தெரியும் என்பதையும் சொல்லிட்ட வசந்த்....
//பிரபல அரசியல் கட்சியின் இளைஞர் தலைவராயிட்டான்.// இளையதளபதி யவா சொல்லுறீங்க ??
சூப்பர். அடுத்த பதிவு எப்போது என்று துடிக்க வச்சுட்டீங்களே?
ரேகா ராகவன்.
அப்படினா நீங்க நெஜாமலுமே யூத் இல்லையா..
இ.இ.இ. - ரொம்ப வித்தியாசமான ரூட்ல போறீங்க. அசத்துங்க வசந்த்.
பணம் பத்தும் செய்யும்னுதான் 10 பாயிண்ட் போட்டீங்களா?
சீக்கிரம் வசந்த் வீட்டுக்கும் கூட்டிட்டு போங்க
நல்லாயிருக்கு நண்பா...தங்களின் சிந்திக்க வேண்டிய பதிவு....உங்களின் அடுத்த தொடர்ச்சிதான் மிக முக்கியமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்...வாழ்த்துக்கள்...
கலக்கல் வசந்த்
நல்லா இருக்கு வசந்த்..
எப்டி இப்படில்லாம்..
உங்க கதைய ketkka காத்திருப்போம்...
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
சிந்தனைக்கு உரிய பதிவு வசந்த். சீக்கிரமா வசந்தையும் அனுப்புங்க...
ஏன் வசந்த்? நல்லாதான போய்கிட்டு இருந்துச்சு?
வசந்த் டச்சைக் காணோமே!!!!
பின்னுட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றிகள்
ஒஹ்!! வித்யாசமா இருக்கு வஸ்ந்த், நல்ல கருத்துக்களை சொல்லி இருக்கீங்க.
Post a Comment