September 8, 2009

ஆறாவது அறிவு



நமக்கெல்லாம் ஆறாவது அறிவு இருந்து என்ன செஞ்சுக்கிட்டு இருக்கோம்ன்றது ஊரறிஞ்ச விஷயம்......

வாயில்லா பிராணிகளான சில விலங்குகளுக்கு நம்மமாதிரியே ஆறாவது அறிவு ?இருந்தா என்ன பண்ணும்ன்னு கொஞ்சம் கற்பனைய சிதற விடுவோமா?

மாட்டுக்கு ஆறாவது அறிவும் பேசும் திறமையும் இருந்திருந்தா...

1.பெண்களுக்கு மட்டுமே பால் கறக்கும் அனுமதியளித்திருக்கும்...

2.பாலுக்கு விலை மாடுதான் நிர்ணயிச்சிருக்கும்...

3.வைக்கோலுக்கும்,புண்ணாக்குக்கும் உப்பு போட்டு சாப்பிட்டுருக்கும்.

4.கன்றுக்குட்டி அம்மான்னு வந்தா தாய்பசு மகளேன்னு சொல்லி ஆரத்தழுவியிருக்கும்.

5.மாட்டுக்கொட்டகையில் டாய்லெட் கட்டியிருக்கும்

6.வெளியூருக்கு அடிமாடா ஏற்றிச்செல்லும் மாடுகளின் வண்டிய மறிச்சு சக மாடு நண்பர்கள் மறியல் செய்து போராட்டம் நடத்தியிருக்கும்,

7.மனுஷன் சாப்பிடுவதற்க்காக மாட்டை வெட்டும்போது `அய்யோ கொலை பண்றாங்க`ன்னு கத்தியிருக்கும்

8.மாட்டுப்பொங்கல் நாமக்கொண்டடுற மாதிரி அது மனுஷ பொங்கல் கொண்டாடியிருக்கும்.



நாய்க்கு ஆறாவது அறிவும் பேசுற சக்தியும் இருந்திருந்தா

1. கல் எடுத்து அடிச்சவன லொள் லொள்ன்னு கத்தாம டேய் புண்ணாக்கு.மொள்ளமாரி.கயிதன்னு திட்டியிருக்கும்,

2.நன்றின்னு வாய் திறந்து சொல்லும் வாலை ஆட்டாம

3.ஒருத்தரையும் கடிக்காது..

4.காவல் வேலை செய்றதுக்கு எஜமான்கிட்ட சாப்பாட்டோட சம்பளமும் கேட்ருக்கும்

5.தங்களுக்குள்ள கூட்டம் போட்டு தெருவுக்கு ஒரு கட்சி ஆரம்பிச்சிருக்கும்

6.உச்சா மட்டும் போஸ்ட்லதான் அடிக்கும்(ஏன்னா நம்மளும் அது மாதிரிதான் பண்றோம்)

7.தங்களுக்குன்னு தனியா வீடுகட்டி அங்கதான் செக்ஸ் வச்சுட்டு இருக்கும் ஏன்னா புண்ணிய பூமியில நிறைய பேர் கேமராவோட அலையுறானுகளாம்.

8.நம்ம வீட்டுல சமைச்சுட்டு இருக்கும் போது என்னம்மா கறிச்சோறான்னு கேக்கும்?(மோப்பசக்தியிருக்கே அதான்)

அடுத்து எந்த விலங்கு....? இல்ல மனுஷனுக்கு அஞ்சறிவு இருந்தா என்ன பண்ணிட்டு இருப்பான்னு போடலாமோ?(அதான இப்போ பண்ணிட்டு இருக்கோம்ன்னு நீங்க சொல்றது கேக்குது)






44 comments:

vasu balaji said...

ஆஹா. நான் முதல்ல. ஏஞ்சாமி. ஏன் இந்த கொலவெறி.=))இவ்வளவு குசும்பு ஆகாது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அண்ணா நீங்க பிரவிலையே இவ்ளோ அறிவா இல்ல திடீர்னு இந்த ஞானம் வந்ததா?

Starjan (ஸ்டார்ஜன்) said...

/// அடுத்து எந்த விலங்கு....? இல்ல மனுஷனுக்கு அஞ்சறிவு இருந்தா என்ன பண்ணிட்டு இருப்பான்னு போடலாமோ?(அதான இப்போ பண்ணிட்டு இருக்கோம்ன்னு நீங்க சொல்றது கேக்குது) ////

supppperrrrrrrr....

ஆட்டை கடிச்சி மாட்டை கடிச்சி நாயக் கடிச்சி அடுத்து மனுசனா ....

ரொம்ப சூப்பர்

கலகலப்ரியா said...

ஏன்..? நல்லாதானே போய்க்கிட்டிருக்கு..? ஆ?

Anonymous said...

யார்கிட்ட இருந்து இந்த மிருகபாஷையேல்லாம் கத்துக்கிட்டீங்க

அப்பாவி முரு said...

ஏய், யாராவது இந்த பயலுக்கு ஒரு கால்கட்டைப் போட்டு ஊருக்கு அனுப்பி வைங்கப்பா. தாங்கமுடியலை...

அன்புடன் நான் said...

நல்லாத்தான் இருக்கு...........
ஏனுங்க வசந்த்... இந்த கோத்தபாயவுக்கும், நாசபச்சே... இச்சே ராசபச்சேவுக்கும் ஆறறிவு இருந்தா எப்படி பேசிக்குவானுவோ?

தேவன் மாயம் said...

நான் முன்னாடியே சொல்லீட்டேன்! வசந்துக்கு எக்ஸ்ட்ரா மூளை இருக்கு!
4/4 ஓட்டும் போட்டாச்சு...

Unknown said...

///மாட்டுப்பொங்கல் நாமக்கொண்டடுற மாதிரி அது மனுஷ பொங்கல் கொண்டாடியிருக்கும்

நம்ம வீட்டுல சமைச்சுட்டு இருக்கும் போது என்னம்மா கறிச்சோறான்னு கேக்கும்?(மோப்பசக்தியிருக்கே அதான்)///

இத நாங்க ரொம்ப ரசிச்சோம்,குட் வசந்த்!

கண்மணி/kanmani said...

:)))

Anonymous said...

சிந்தனை சிற்பியே சீறும் சிங்கமே அறிவின் களஞ்சியமே ஆற்றலின் உறைவிடமே......ம்ம்ம்ம்ம் மேடை போட்டு இருந்தா இன்னும் பாராட்டி இருப்பேன் வசந்த்.....

Anonymous said...

U R SOMETHING SPECIAL VASANTH GREAT..................

Anonymous said...

அப்பாவி முரு said...
//ஏய், யாராவது இந்த பயலுக்கு ஒரு கால்கட்டைப் போட்டு ஊருக்கு அனுப்பி வைங்கப்பா. தாங்கமுடியலை...//



ஆமா நாங்க வசந்த் கிட்ட படும் பாட்டை அவளும் பெற வாழ்த்துகிறோம்....

Anonymous said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அண்ணா நீங்க பிரவிலையே இவ்ளோ அறிவா இல்ல திடீர்னு இந்த ஞானம் வந்ததா?

ஆமா எப்படி இந்த ஞானம்?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நானெல்லாம் எதற்கு.... நான் பேசறதே எனக்கு புரியலை....

லோகு said...

அட்டகாசம்.. எப்படி இப்படியெல்லாம் யோசிக்கறீங்க.. சூப்பர்..

நாணல் said...

எப்படி வசந்த் இப்படியெல்லாம்..உங்க கற்பனைக்கு அளவே இல்லை போங்க... ;)

யோ வொய்ஸ் (யோகா) said...

ரொம்பவே ரசித்தேன்..

மனிதருக்கு பல மெசேஜ் இதிலே மறைமுகமா கொடுத்திருக்கீங்க

Vidhoosh said...

பேசமுடியல..அதிர்ச்சில வாய் குழறுது... முடியல.. தாங்கல...யாராவது காப்பாத்துங்க..

--வித்யா

கலையரசன் said...

என்னமாய் யோசிக்கிறாயடா உடன்பிறப்பே!!

ஈரோடு கதிர் said...

வசந்த்... உங்களுக்கு ஆறறிவு இல்லீங்க..
அதுக்கும் மேலோ

ஏழோ...ம்ம்ம்ம் ஏழரையாவோ இருக்கும்ம்ம்ம்ம்ம்னு நினைக்கிறேன்

அ.மு.செய்யது said...

//சிந்தனை சிற்பியே சீறும் சிங்கமே அறிவின் களஞ்சியமே ஆற்றலின் உறைவிடமே......ம்ம்ம்ம்ம் மேடை போட்டு இருந்தா இன்னும் பாராட்டி இருப்பேன் வசந்த்.....//

இதுக்கு மேல நான் என்ன‌ பாராட்டுறது ???

வ‌ச‌ந்த் !!! தாறுமாறா யோசிக்கிறீங்க‌..!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

தம்பி வசந்த்! இந்தப் பதிவைப் பார்த்து எனக்கு ஒரே ஏமாற்றமாய்ப் போய் விட்டது. உமது கற்பனையில் இந்த மிருகங்களுக்கு எல்லாம் ஆறாவது அறிவு இல்லை என்று நீர் தீர்மானித்து , இருந்தால் மனிதர் செய்வதெல்லாம் செய்யும் என்று .........ஹா ஹா ஹா ......ஆமா நீர் சொல்லிற இந்த ஆறாவது அறிவு மூளையில் எந்தப் பக்கம் இருக்கு என்று தெரியுமா?
நம்ம விட அதுகளுக்கு அறிவு கூடித்தான் மனிதர் செய்கிற பாவனைகளை அதுகள் செய்யாமலிருக்கு........எனக்குப் பதிவு போடா ஒரு கரு கிடைத்து விட்டது.

இது நம்ம ஆளு said...

அடுத்து எந்த விலங்கு....? இல்ல மனுஷனுக்கு அஞ்சறிவு இருந்தா என்ன பண்ணிட்டு இருப்பான்னு போடலாமோ?(அதான இப்போ பண்ணிட்டு இருக்கோம்ன்னு நீங்க சொல்றது கேக்குது)

கலக்கல் அடி!

எப்படி இப்படி !

Anonymous said...

//சிந்தனை சிற்பியே சீறும் சிங்கமே அறிவின் களஞ்சியமே ஆற்றலின் உறைவிடமே......ம்ம்ம்ம்ம் மேடை போட்டு இருந்தா இன்னும் பாராட்டி இருப்பேன் வசந்த்.....//

ரிபிட்டேஏஏஏஏய்

Raju said...

ஏன் வசந்த்.. நல்லாத்தான இருந்தீங்க..!
திடீர்ன்னு என்ன ஆச்சு..?

:-)

Raju said...

hayya...Me the 25.

ஹேமா said...

வசந்த்,சிரிச்சு முடில.உங்களுக்குத் ஆறு அறிவைத் தாண்டி தலை முழுக்கவும் மூளையோ!நாய் பாஷை...எங்க வசந்த் படிச்சீங்க.

இந்தப் பதிவை இவங்க ரெண்டு பேரும் பாக்கணுமே.அப்புறம்...
சொல்ல வார்த்தைகளே இல்ல.
அவ்ளோ பாராட்டுக் கிடைக்கும்.
நன்றியும் சொல்லுவாங்க எங்களைப் புரிஞ்சுக்கிட்ட மனுசன் நீங்கதான்னு.

க.பாலாசி said...

//8.மாட்டுப்பொங்கல் நாமக்கொண்டடுற மாதிரி அது மனுஷ பொங்கல் கொண்டாடியிருக்கும்.//

இது நச் நண்பா....

உட்காந்து யோசிப்பீங்களோ?

நல்ல சுவை நண்பா...அருமை...

S.A. நவாஸுதீன் said...

வைக்கோலுக்கும்,புண்ணாக்குக்கும் உப்பு போட்டு சாப்பிட்டுருக்கும்.
********************
ஹா ஹா ஹா. நண்பா இதுக்கு மேலே போறதுக்கு கொஞ்சம் டைம் ஆச்சு. என்னமா யோசிக்கிறீங்க. பாராட்ட சத்தியமா என்னிடம் வார்த்தைகள் இல்லை. ஒவ்வொன்றும் மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமை.

S.A. நவாஸுதீன் said...

காவல் வேலை செய்றதுக்கு எஜமான்கிட்ட சாப்பாட்டோட சம்பளமும் கேட்ருக்கும்
*****************
கிளாஸ் வசந்த்

சுசி said...

//கன்றுக்குட்டி அம்மான்னு வந்தா தாய்பசு மகளேன்னு சொல்லி ஆரத்தழுவியிருக்கும்.//
டச்சிங்

//7.மனுஷன் சாப்பிடுவதற்க்காக மாட்டை வெட்டும்போது `அய்யோ கொலை பண்றாங்க`ன்னு கத்தியிருக்கும்//
கிலி...

//ஒருத்தரையும் கடிக்காது..//
அப்பாடா....

மாட்டோட சிரிப்பு சூப்பர்...

மொத்தத்துல கலக்கல் வசந்த்.

சத்ரியன் said...

வசந்த்...,

"ஐந்தறிவு உயிரினங்களின் முன்னேற்றக் கழகம்"(கலகம் இல்லப்பா) ஆரம்பிக்கலாம்ற முடிவுக்கு வந்துட்டேன்.

இந்த மனுசபய கூட்டத்துல இனிமே கட்சி ஆரம்பிச்சி கரைசேர முடியாது.

கட்சித் தலைவரா மட்டும் நான் இருந்துக்கறேன். வசந்த், நீங்க கொள்கைப் பரப்பு செயலாளரா இருங்க.( நிறைய யோசிக்கிறீங்க இல்ல அதான்.ஹி... ஹி... ஹி).

மத்தத அடுத்த கூட்டத்துல பேசிக்கலாம். எல்லாருக்கும் வசந்த் சார்பா ஒன்னு சொல்லிக்க விரும்புறேன்.

"ஒன்னு".!

Menaga Sathia said...

எப்படி வசந்த் உங்களால் மட்டும் இப்படி யோசிச்சு எழுதுறீங்க.கலக்கல்
////மாட்டுப்பொங்கல் நாமக்கொண்டடுற மாதிரி அது மனுஷ பொங்கல் கொண்டாடியிருக்கும்// ரசித்தேன் வசந்த்.

முனைவர் இரா.குணசீலன் said...

நல்லாருக்கு வசந்த்...

மனுஷன் சாப்பிடுவதற்க்காக மாட்டை வெட்டும்போது `அய்யோ கொலை பண்றாங்க`ன்னு கத்தியிருக்கும்



நல்ல நகைச்சுவை.

முனைவர் இரா.குணசீலன் said...

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது.

அன்புடன் அருணா said...

போதிமரம் உங்க வீட்டிலெ எத்தனை????இப்புடி அறிவை குத்தகைக்கு எடுத்துருக்கீஙக!

sarathy said...

எத்தனை பேர் கொண்ட டீம் வச்சிருக்கீங்க இப்படியெல்லாம் யோசிக்க???

கூட்டத்தில் சொல்ல தயக்கமாக இருந்தால் எனக்கு தனியா மெயிலுங்கோ வசந்த்.

தீப்பெட்டி said...

:)))

கலக்கல் பாஸ்..

SUFFIX said...

//5.தங்களுக்குள்ள கூட்டம் போட்டு தெருவுக்கு ஒரு கட்சி ஆரம்பிச்சிருக்கும்//

ஆமா அப்புறம் நாய் மாதிரி அதுங்க அலையும்!!

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி @ பாலா சார்

நன்றி @ ரமேஷ்(பிறவியிலே அப்டித்தான்)

நன்றி @ சேக்

நன்றி @ ப்ரியா

நன்றி @ சின்ன அம்மிணி :)

நன்றி @ முரு(சீக்கிரம் ப்லாக் க்லோஸ் பண்ணலாம்ன்னு இருக்கேன்)

நன்றி @ கருணாகரசு(இப்போ அதுதானே அவங்க பண்றாங்க)

நன்றி @ தேவாசார்

நன்றி @ தாமரைசெல்வி

நன்றி @ கண்மணி

நன்றி @ தமிழரசி (ரொம்ப மகிழ்ச்சி அரசி நீங்க எழுதுற கவிதை வச்சுப்பாக்கும்போது நானெல்லாம் தூசு)

நன்றி @ லோகு

நன்றி @ நாணல்

நன்றி @ யோகா

நன்றி @ வித்யா

நன்றி @ கலையரசன்

நன்றி @ கதிர் :)

நன்றி @ செய்யது(மிக்க மகிழ்ச்சி)

நன்றி @ ஜெஸ்வந்தி

நன்றி @ இது நம்ம ஆளு

நன்றி @ அண்ணாச்சி

நன்றி @ ராஜூ(இப்பொ மட்டும்? )

நன்றி @ ஹேமா

நன்றி @ பாலாஜி

நன்றி @ நவாஸ்(மிக்க மகிழ்ச்சி நவாஸ்)

நன்றி @ சுசி

நன்றி @ சத்ரியன்

நன்றி @ மேனகா

நன்றி @ சந்ரு

நன்றி @ குணா

நன்றி @ அருணா பிரின்ஸ்

நன்றி @ சாரதி (உஷ் ரகசியம்)

நன்றி @ தீப்பெட்டி

நன்றி @ சஃபி :)

"உழவன்" "Uzhavan" said...

வாழைப்பழத்தில் ஊசியேற்றியதுபோல் பல இடங்களில் சுரீரென சொல்லியிருக்கிறீர்கள். என்ன செய்வது. மனிதனின் இயலாமையை சாடியிருக்கும் விதம் அருமை.

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி உழவன்

Paleo God said...

கலக்கல்..வசந்த்..::))

cheena (சீனா) said...

அன்பின் வசந்த்

நகைச்சுவையின் உச்சம் - நல்லாவே இருக்கு - உச்சா போறது ( மாறாதோ ) - நாம் எல்லாம் டீசண்ட் இல்லயா ? சரி சரி - வாழ்க வளமுடன் ( ஆமா ப்பெசி முடிச்சவுடன் நல்வாழ்த்துகள் - வாழ்க வளமுடன் - இப்படி எல்லாம் சொல்லாதோ ) - நட்புடன் சீனா