September 30, 2009

ஒரு சிலையின் புலம்பல்கள்..



ஆங் எல்லோருக்கும் வணக்கமுங்க... நான் இந்த கடப்பா பாறைக்கல்லுல செஞ்ச சிலை பேசுறேனுங்கோ... இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னாடி என்னைய மாதிரியே சிலையா இருக்குற மக்கள் எல்லாம் பொதுக்குழு ஒண்ணு கூட்டி சில பல முடிவுகள் எடுத்துருக்கோமுங்கோ.. அது பத்தி விரிவா சொல்லாமுன்னுதான் இங்க வந்தேனுங்கோ.. அதுக்கு முன்னாடி மானசீக மக்களே நான் நல்லா படிப்பேன்னு எல்லாருக்கும் தெரியுமுங்க அதுக்காக நான் புஸ்தகம் படிக்கிற மாதிரியெல்லாம் சிலை வச்சது கொஞ்சம் ஓவரா தெரியலை..

சரி மக்களே நான் ஒண்ணு கேக்குறேன் நான் நல்லா படிப்பேனுங்குறதுக்காக புஸ்தகத்தோட சிலையாக்கிபுட்டீக அதே நான் அடிக்கடி விசயகாந்து மாதிரி கணக்கு வழக்கு பண்ணுறவனா இருந்துருந்தா கால்குலேட்டரோட சிலை வச்சுருப்பீகளோ?

இல்லை நம்ம டீ ஆரு மாதிரி தலைய ஆட்டி ஆட்டி பேசுறவனா இருந்துருந்தா தலைய ஆட்டுற மாதி சிலை வச்சுருப்பீகளோ? ஏன் நான் படிச்சவன் அப்பிடின்ற அகம்பாவம் உங்களுக்குத்தான் இருக்குன்னா சிலையாகிப்போன எனக்கும் அந்த அகம்பாவம் இருக்குற மாதிரி காட்டிப்புட்டீகளே மக்கா இது நியாயமா?இத்தோட இந்த மாதிரி ஐடியாவ எல்லாம் நிப்பாட்டிக்கோங்க அறிவுஜீவிகளேன்னேன்...

அப்பறம் காக்கா குருவிகளுக்கு தனியா கக்கூஸ் கட்டுற தைரியமோ, இல்லை தன்மானமோ இல்லாமத்தான் இப்பிடி அதுங்களுக்கு இலவச கழிப்பறை கட்டிக்குடுத்துட்டீகளோ? என்னே உங்க சிந்தனை?டெய்லி அதுக நாறடிக்குறத தண்ணியாவது ஊத்தி கழுவி விடுறீகளா அதுவும் கிடையாது..எதோ பேருக்கு சிலைய திறந்தோம்ன்னு போனோம்ன்னு ஓடிப்போயிடுறீக அதுக்கு அப்பறம் நாங்க என்ன கஷ்டமெல்லாம் படுறோம்ன்னு தெரியுமா? இல்லை நமக்கு நாமே திட்டம் தீட்டி வச்சுட்டீங்களே மக்கா?

ஏன் சொல்றேன்னா நம்ம சகா ஒருத்தர் தெக்குபக்கத்துல இருந்து பொதுக்குழுகூட்டத்துல ரொம்பவே அழுகாத குறையா பொலம்பித்தள்ளிப்புட்டாரு..என்ன சகா என்னாச்சுன்னு கேட்டா நீ நிம்மதியா படிச்ச வர்க்கம் இருக்குற ஏரியாவா பாத்து வந்து குந்திக்கின நான் இந்த படிக்காத பாட்டாளி மக்கள்கிட்ட படுற பாடும் வாங்குற அடியும் எனக்குத்தானே தெரியும்..அப்பிடின்னு ஒரே புலம்பல்..பாவம் அவரு அவரு நிலமை யாருக்கும் வரக்கூடாதுன்னேன்..

ஒருநாள் என்னடா திடீர்ன்னு இம்புட்டு பேரு வந்து மாலையெல்லாம் போட்டு மரியாதையெல்லாம் பண்றாய்ங்கன்னு பாத்தா அன்னிக்கு எனக்கு பொறந்த நாளாம்..சரி பொறந்த நாளைக்காவது மாலைபோட்டு மரியாதை செய்றாய்ங்கன்னு பாத்தா அந்த மாலையையும் அந்த ரோட்டோர பூ விக்கிற வியாபாரிகிட்ட ஓசியில அடிச்சுட்டு வந்துருக்காய்ங்க...

எனக்கு மட்டும் தற்கொலை பண்ணுற தைரியம் இருந்துச்சு எப்பயோ டுமீல் டுமீல்ன்னு நானே சுட்டு செத்துபோயிருப்பேன் மனுசனா பிறந்தாலாவது இயற்கையா சாவு வரும் நான் சிலையாவுல பொறந்துட்டேன் சாவும் வராதே..அதான் நாங்க உங்களுக்கு சாணியடிச்சு செருப்பு வீசி சாகடிக்குறோம்ன்னு நீங்க சொல்றதும் கேக்குது அப்பிடி நீங்க பண்றதுனாலதான் சாகவே தோணுது...

மனுசனா நான் பொறந்து சில பல நல்லது செஞ்சு உங்க மனசுலயிருந்தாலே போதும் அதுக்காக இப்பிடி சிலையெல்லாம் வச்சு எங்களோட வயித்தெரிச்சல வாங்கிகட்டிக்காதீக,,,

கேட்டா உங்களை கவுரவிக்கிறோம்ன்னு சொல்லுவீக வேணாம்பா நீங்க குடுக்குற கவுரவம் என்னான்னு தெரியும் ரவுண்டானாவுக்கு வழியில்லாட்டி என்னைய கொண்டுபோயி அங்க உக்கார வச்சுருவீங்க..இல்லாட்டினா உங்க இனத்து ஓட்டு வாங்கணுன்னா ஊருக்கு ஒரு சிலை திறப்பீக..

இத்தோட நிப்பாட்டிக்கங்க இல்லை நாங்க அப்பிடித்தான் சிலை திறப்பு பண்ணுவோம்ன்னு நினைச்சீங்கன்னா எங்க பொதுக்கூட்டத்துல நீங்களும் கலந்துகிட்டு இப்படி பொலம்ப வேண்டியிருக்கும் காலமும் வரும்ன்னு நினைச்சு பாத்துக்கோங்க மக்களா.. சிந்திப்பீர் செயல்படுவீர் ஊர்ல இருக்குற சிலையெல்லாம் தூக்கிட்டு அந்த இடத்துல ஒரு மரத்தையாவது நட்டு வைங்க அதாவது வாழ்க்கையில உருப்படியா நீங்க செஞ்ச நல்ல காரியமா இருந்துட்டு போகட்டும்.. கும்புட்டுக்கிறேன்...

37 comments:

velji said...

/ஊர்ல இருக்குற சிலையெல்லாம் தூக்கிட்டு அந்த இடத்துல ஒரு மரத்தையாவது நட்டு வைங்க அதாவது வாழ்க்கையில உருப்படியா நீங்க செஞ்ச நல்ல காரியமா இருந்துட்டு போகட்டும்.. கும்புட்டுக்கிறேன்/

சரியாச் சொன்னீங்க..அப்படியே நமக்கு நாமே திட்டத்தில் கொடுத்துக்கொண்ட அண்ணா விருதப் பத்தி சொல்லியிருக்கலாம்.

Admin said...

நல்ல சிந்தனை வசந்த்...

ராமலக்ஷ்மி said...

சிலையின் புலம்பல்கள் யாவும் நியாயமானவை.

//அந்த இடத்துல ஒரு மரத்தையாவது நட்டு வைங்க//

ரொம்பச் சரி.

பழமைபேசி said...

நேர்த்தியா இருக்கு!

Anonymous said...

யோசிக்க வச்சாச்சு

ஸ்ரீராம். said...

அப்படியே மாயாவதி அக்காக்கும் இதுல ஒரு காபி அனுப்புங்க...

ஜெட்லி... said...

//ரவுண்டானாவுக்கு வழியில்லாட்டி என்னைய கொண்டுபோயி அங்க உக்கார வச்சுருவீங்க..//

நூத்துக்கு நூறு உண்மை வஸந்த்.....

நல்ல கற்பனை

kishore said...

அருமை வசந்த் ..

கலையரசன் said...

அதுக்கு ஏன்டா அண்ணா சிலை படத்தை போட்ட?
இதுல சைடுகுத்து ஒன்னும் இல்லையே!!

கலையரசன் said...

அதுக்கு ஏன்டா அண்ணா சிலை படத்தை போட்ட?
இதுல சைடுகுத்து ஒன்னும் இல்லையே!!

தினேஷ் said...

அடடா...

சுரேஷ்குமார் said...

சம்மந்தப் பட்டவர்கள் யோசிப்பார்களா?.நல்ல பதிவு.

Suresh Kumar said...

sinthikka oru pathivu

vasu balaji said...

எத்தன பஸ் ஸ்டேண்டுக்கு புது பேரு வைக்கணும். அதுக்கு என்னல்லாம் கலவரம் உண்டாகும்? Land markனா உடனே டக்குன்னு சொல்ல எங்கள விட்டா வேற இருக்கா? இதெல்லாம் யோசிக்க வேணாமா? :)). மரத்துக்கு மாலை போட முடியுமா? ஆனாலும் நல்ல இடுகை. பாராட்டாம இருக்க முடியல.

ஈரோடு கதிர் said...

சிந்தனைத் தூண்டும் இடுகை

உண்மையிலேயே சிலைகள் பாவம்தான்

இறக்குவானை நிர்ஷன் said...

வித்தியாசமான சிந்தனை வசந்த்.

VISA said...

//ஊர்ல இருக்குற சிலையெல்லாம் தூக்கிட்டு அந்த இடத்துல ஒரு மரத்தையாவது நட்டு வைங்க அதாவது வாழ்க்கையில உருப்படியா நீங்க செஞ்ச நல்ல காரியமா இருந்துட்டு போகட்டும்.. கும்புட்டுக்கிறேன்...//

ஒரு மரத்த வச்சு அதுக்கு தலைவர் பெயர வச்சு வளக்கலாம். கிளோபல் வார்மிங்கிக்கு நல்லது.

யோ வொய்ஸ் (யோகா) said...

கலக்குறீங்க வசந்த்.

க்ரியேட்டிவிட்டி என்றால் அது நீங்க தான்..

S.A. நவாஸுதீன் said...

சிரிக்கிற மொழியில் எழுதி இருந்தாலும் நிறைய சிந்திக்கிற விஷயங்கள் சொல்லி இருக்கீங்க வசந்த்.

//ரவுண்டானாவுக்கு வழியில்லாட்டி என்னைய கொண்டுபோயி அங்க உக்கார வச்சுருவீங்க..

ஊர்ல இருக்குற சிலையெல்லாம் தூக்கிட்டு அந்த இடத்துல ஒரு மரத்தையாவது நட்டு வைங்க//

சும்மா “நச்”சுன்னு இருக்கு.

Starjan (ஸ்டார்ஜன்) said...

என்னே உங்க சிந்தனை? ....

ரொம்ப சூப்பர் ...

லோகு said...

ம்ம்ம்ம்ம்ம்ம்... உண்மைதான்.. எப்படி இப்படியெல்லாம் கான்செப்ட் புடிக்கறீங்க..

சுசி said...

//மனுசனா நான் பொறந்து சில பல நல்லது செஞ்சு உங்க மனசுலயிருந்தாலே போதும் அதுக்காக இப்பிடி சிலையெல்லாம் வச்சு எங்களோட வயித்தெரிச்சல வாங்கிகட்டிக்காதீக,,,//

சரியா சொன்னீங்க வசந்த்...
சூப்பர்.

அமுதா கிருஷ்ணா said...

மாயாவதி கன்ஷிராமுடன் சேர்ந்து தனக்கு ஊர் பூராவும் சிலை வைச்சுட்டு இருக்காராம் உ.பி யில்....

கலகலப்ரியா said...

very good.. vasanth..

அமிர்தவர்ஷினி அம்மா said...

சூப்பர்

அப்புறம் இன்னொன்னும் சொல்லியிருக்கலாம்,

எனக்கு நூற்றாண்டு விழா எடுக்கறேன்னு சொல்லி உங்கள பத்தியே பெருமையா பேசச் சொல்றத கொஞ்சம் நிப்பாட்டிக்கலாம் அப்படின்னு.

க.பாலாசி said...

//அப்பறம் காக்கா குருவிகளுக்கு தனியா கக்கூஸ் கட்டுற தைரியமோ, இல்லை தன்மானமோ இல்லாமத்தான் இப்பிடி அதுங்களுக்கு இலவச கழிப்பறை கட்டிக்குடுத்துட்டீகளோ?//

அதானே நண்பா உண்மை. பிறந்தநாள் இறந்தநாள் தவிர வேறெந்த நாட்களிலிலும் எந்த புண்ணியவான்களும் எட்டி பார்க்கிறதில்ல.

சிந்தனை இடுகை நண்பா....

அப்துல்மாலிக் said...

அனைத்து சிலைகளுக்கும் முதல் எதிரி நான்

தெளிவா சொல்லிருக்கீங்க தல

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சிலைகள் புலம்பல்களை செவியேற்று,
'சிலைகள் வைப்பது வீண் வேலை'
என்ற அருமையான கருத்து
(சொன்ன உங்களுக்கு அழகிய
சிலை வைக்கலாம் என்று இருக்கிறேன்).

Menaga Sathia said...

superrrrrr vasanth!!

pls see this link

http://sashiga.blogspot.com/2009/10/blog-post.html

Anonymous said...

சிலைக்கும் இத்தனை ஆதங்கமா? சிலையாய் இவர்களாவது நிம்மதியா இருக்காங்கன்னு பார்த்தா இவர்களுக்கும் நிம்மதியில்லையா?

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்லா இருக்கு நண்பா

ஹேமா said...

கல்லுகூட ஒருநாள் பேசும்ன்னு சொன்னாங்க.பேசுதுங்கோ !

सुREஷ் कुMAர் said...

//
நான் நல்லா படிப்பேனுங்குறதுக்காக புஸ்தகத்தோட சிலையாக்கிபுட்டீக அதே நான் அடிக்கடி விசயகாந்து மாதிரி கணக்கு வழக்கு பண்ணுறவனா இருந்துருந்தா கால்குலேட்டரோட சிலை வச்சுருப்பீகளோ?
//
நல்லா கேக்குறாங்கய்யா டீடேலு..

सुREஷ் कुMAர் said...

//
ஏன் சொல்றேன்னா நம்ம சகா ஒருத்தர் தெக்குபக்கத்துல இருந்து பொதுக்குழுகூட்டத்துல ரொம்பவே அழுகாத குறையா பொலம்பித்தள்ளிப்புட்டாரு..
//
உங்க அந்த சகா அது எந்த சிலைபா..

அடுத்த வரிகள்ள சொல்லீருக்கீயலோ..
படிச்சு அது யாருன்னு கண்டுக்கிறேன்..

सुREஷ் कुMAர் said...

//
எனக்கு மட்டும் தற்கொலை பண்ணுற தைரியம் இருந்துச்சு எப்பயோ டுமீல் டுமீல்ன்னு நானே சுட்டு செத்துபோயிருப்பேன்
//
ஹீ.. ஹீ..
அன்பின் சிலை அவர்களே..

துப்பாக்கியால சுட்டு கஷ்டப்படவேனா..

உங்க சைடுலையோ முன்னாலையோ,பின்னாலையோ சாஞ்சிங்கனா போதும் கீழ விழுந்து தெரிச்சுடுவிங்க..

ட்ரை பண்ணி பாருங்க..

सुREஷ் कुMAர் said...

நல்லா யோசிக்குரிங்கப்பூ..
வாழ்த்துக்கள்..

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி வேல் ஜி

நன்றி சந்ரு

நன்றி ராமலக்ஷ்மி மேடம்

நன்றி பழமை பேசி ஐயா

நன்றி தூயா ( சிரிப்பு இன்னும் அடங்கலை)

நன்றி ஸ்ரீராம்

நன்றி ஜெட்லி சரண்

நன்றி கிஷோர்

நன்றி கலையரசன்

நன்றி சூரியன்

நன்றி சுரேஷ்குமார்

நன்றி சுரேஷ் குமார்

நன்றி பாலா சார்

நன்றி கதிர்

நன்றி நிர்ஷன்

நன்றி விசா

நன்றி யோகா

நன்றி நவாஸ்

நன்றி ஷேக்

நன்றி லோகு

நன்றி சுசி

நன்றி அமுதாகிருஷ்ணா

நன்றி கலகலப்ரியா(யக்கா ரொம்ப பிஸியா)

நன்றி அமித்து அம்மா

நன்றி பாலாஜி

நன்றி அபு

நன்றி நிஜாமுதீன்

நன்றி மேனகா மேடம்

நன்றி தமிழ் அம்மா

நன்றி கார்த்திகைபாண்டியன்

நன்றி ஹேமா

நன்றி சுரேஷ் :)))))