October 5, 2009

ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்...

ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்...அவளிடம் என் காதல் விண்ணப்பம் கொடுத்தேன்....(எனக்கு காதல் கடிதம் எழுத வருதான்னு பிராக்டிஸ் பண்ணினேன் இப்போ இல்லாட்டினாலும் கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்பறமாவது பயன் படுமே) காதல் கவிதைதான் எழுத வரமாட்டேன்னுது கடிதமாவது எழுதலாமுன்னுதான்...

பெயர்

பிரியமானவன் (அப்போ நான் பிரியமில்லாதவளான்னு கேக்காதீங்க...)

வயது

உங்கள விட ரெண்டுவயசு எச்சா இருக்கலாம்...

உயரம்

நம்ம சத்யராஜ விட ரெண்டு இஞ்ச்தான் குறைவுன்றதுல சின்ன வருத்தம்...

நிறம்

காக்காவ விட கொஞ்சம் கலர் கம்மிதான்...

வசதி

உக்காரவச்சு சோறு போடுற அளவு இல்லாட்டினாலும் நிக்கவச்சு சோறு போடுவேன் (அதாங்க இன்ஸ்டண்ட் ஃபுட் வாங்கித்தருவேன்னு சொல்லவந்தேன்) உங்களுக்கு மொபைலும் சிம் கார்டும் வாங்கி கொடுக்கும் வசதியும், வாரம் ஒரு சினிமாவுக்கு கூட்டிட்டு போற வசதியும் ,தினமும் ஒரு சுடிதார் வாங்கித்தர வசதியும், இந்த லெட்டர் குடுத்தபின் நீங்க போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் பண்ணி ஈவ் டீசிங்ல ஜெயில்ல போட்டா ஜாமீன்ல வர்ற வசதியும் இருக்கு.எப்படி வசதி?

பொழுது போக்கு

சைட்டே விதின்னு கிடக்குறது,(சைட்டுனா அந்த சைட்டு இல்லப்பா வேலை செய்ற இடம்),ரூமுக்கு வந்தா இது மாதிரி வித்யாசமா லெட்டரும், வெட்டியா ப்ளாக் எழுதுறதும்..என்னைக்கோ அசின் எனக்கு எழுதுன காதல் கடிதத்தை படிக்குறதும்....

வேலை

தொட்டா ஷாக் அடிக்குற உறவோடு உறவாடல் ,இப்போ கொஞ்ச நாளா உங்க வீட்டுல இருக்கும் செடிகளோடும் உறவாடல்...

படிப்பு

பட்டம் விட்டும் பழக்கமில்லை, வாங்கியும் பழக்கமில்லை....இந்த கடுதாசி எழுதுற அளவுக்காவது படிச்சுருக்கேன்னு சந்தோசப்படுங்க...

வீடு

தாயுண்டு தந்தையுண்டு மற்றோர் இல்லை.நீ வந்தால் உனக்கொரு இடமும் உண்டு இல்லத்தில் இல்லை இவர்களின் இதயத்தில்....

காதல் அனுபவம்

உண்டு ஒரு 17 வருஷத்துக்கு முன்னாடி கைகோர்த்து வீதியுலா போனதுண்டு அவளோடு....

கவிதை

சுட்டாலும் எழுத வராது(அப்போ சுடாம எழுத தெரியுமான்னு கேக்கக்கூடாது)
வாசிக்கப்பிடிக்கும்,சிலரோட கவிதைகளும் புரியாது சிலரோட வார்த்தைகளும் புரியாது(கிறுக்கனுக்கு எப்படி புரியும்?)

நீங்க என்னை ரிஜெக்ட் பண்ணிட்டா?

சிரிப்பேன்...வானமே இடிஞ்சு விழுகுற அளவுக்கு...அப்பறமென்ன மழை தான்....

எக்ஸ்ட்ரா குவாலிபிகேஷன்

ஹ ஹ ஹா...... இதோடு , கண்ணடிக்கும் வித்தையும் தெரியும்.சத்தமில்லாம திருக்குறள் வரிகளை படிப்பேன் :))))))

110 comments:

shabi said...

,தினமும் ஒரு சுடிதார் வாங்கித்தர வசதியும்.....///வசதிதான்.....

shabi said...

ME THE FIRST

shabi said...

கத்தார்ல ஒரு சுடிதார் என்ன வெல

Starjan (ஸ்டார்ஜன்) said...

iam third

Starjan (ஸ்டார்ஜன்) said...

/// தாயுண்டு தந்தையுண்டு மற்றோர் இல்லை.நீ வந்தால் உனக்கொரு இடமும் உண்டு இல்லத்தில் இல்லை இவர்களின் இதயத்தில்.... ///

கவிதை கவிதை

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வாழ்த்துக்கள்

பழமைபேசி said...

ஃக ஃக ஃக

vasu balaji said...

/தாயுண்டு தந்தையுண்டு மற்றோர் இல்லை.நீ வந்தால் உனக்கொரு இடமும் உண்டு இல்லத்தில் இல்லை இவர்களின் இதயத்தில்.... /

தனிக்குடித்தனமுன்னு பிட்டு போட்டாச்சா

தினம் ஒரு சூடிதார் துணிக்கடை வச்சிருக்கறவனால கூட முடியாது. ஓவரா ஊதியாச்சா.

=))

கபிலன் said...

ஐயா...வசந்த்....
யாரோ ஒருத்தருக்கு காதல் விண்ணப்பம் கொடுத்தேன் என்கிற சாக்கில், நீங்க, அப்படியே பொதுவா சபையில வச்சு, பல பேரை பிடிக்கலாம்னு திட்டமாய்யா... : ) தினமும் ஒரு சுடிதார் வாங்கித் தரேன்னு வேற சொல்லிட்டீங்க...மெயில் ஐடில எக்கச்செக்க ரெஸ்பான்ஸ் வந்திருக்கனுமே ! : )

23 ஆம் புலிகேசில சொல்ற மாதிரி,

ராஜ தந்திரங்களைக் கரைத்துக் குடித்தவனய்யா நீ...
க க போ...! : )

கலகலப்ரியா said...

தம்பி நீ கொஞ்சம் ஓவராதான் போய்க்கிட்டிருக்கா.. நடத்து நடத்து.. இடுகையில் விளம்பரமா.. அபாரம்.. அம்மா தாயே கொஞ்சம் அருள்கூர்ந்து தயை புரிவாய்.. பாவம் புள்ள தவிச்சு போய் இருக்கு..

17 வருஷத்துக்கு முன்னாடி கை கோர்த்து நடந்ததா.. சேரன் ஐயா.. நீங்க ஆட்டோகிராப் எடுத்ததுதான் எடுத்தீங்க.. புள்ளைங்க இப்புடீ ஆயிட்டாய்ங்க.. அவ்வ்வ்வ்வ்வ்...

இன்னும் கொஞ்ச வருஷம் கழிச்சு நீ எப்டி புலம்புவான்னு நினைச்சு பார்க்கறப்போ எனக்கு சிரிப்பா வருது.. ஹ்ம்ம்.. ஆசீர்வாதங்கள்..

ப்ரியமுடன் வசந்த் said...

//ஐயா...வசந்த்....
யாரோ ஒருத்தருக்கு காதல் விண்ணப்பம் கொடுத்தேன் என்கிற சாக்கில், நீங்க, அப்படியே பொதுவா சபையில வச்சு, பல பேரை பிடிக்கலாம்னு திட்டமாய்யா... : ) தினமும் ஒரு சுடிதார் வாங்கித் தரேன்னு வேற சொல்லிட்டீங்க...மெயில் ஐடில எக்கச்செக்க ரெஸ்பான்ஸ் வந்திருக்கனுமே ! : )

23 ஆம் புலிகேசில சொல்ற மாதிரி,

ராஜ தந்திரங்களைக் கரைத்துக் குடித்தவனய்யா நீ...
க க போ...! : )//

அடப்பாவிகளா

இமேஜ சரிச்சுப்புட்டியே மச்சான்

எப்ப பார்த்தாலும் ஒரே மாதிரி கருத்து சொல்லி எழுதுனா போரடிச்சு போகுமுன்னுதான் இப்பிடி கற்பனையா எழுதுனேன்,,

அவரு சொன்னமாதிரியெல்லாம் இல்லீங்கோ இதுல சொல்லியிருக்குறது மொத்தமும் கற்பனை மட்டுமே...

அவ்வ்வ்வ்வ்வ்.....

சுசி said...

வசந்த் லைட்டா ஆரம்பிச்ச சிரிப்பு 'வசதி' வந்ததும் பிச்சுகிச்சு... எக்ஸ்ட்ரா குவாலிபிகேஷனுக்கு எக்ஸ்ட்ராவா சிரிச்சாச்சு...
மொத்த குடும்பமும் முறைக்கிற அளவுக்கு சிரிக்க வச்சிட்டீங்க...

ப்ரியமுடன் வசந்த் said...

// shabi said...
,தினமும் ஒரு சுடிதார் வாங்கித்தர வசதியும்.....///வசதிதான்.....//

shabi எங்க இருந்து வர்றீங்க ப்ரோஃபைல் கிளிக் பண்ணுனா பல்லிளிக்குது.....

ரொம்ப நன்றி சபி

ப்ரியமுடன் வசந்த் said...

//shabi said...
கத்தார்ல ஒரு சுடிதார் என்ன வெல//

பர்தாதான் கிடைக்குது.....

ப்ரியமுடன் வசந்த் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
/// தாயுண்டு தந்தையுண்டு மற்றோர் இல்லை.நீ வந்தால் உனக்கொரு இடமும் உண்டு இல்லத்தில் இல்லை இவர்களின் இதயத்தில்.... ///

கவிதை கவிதை//

கவிதையா

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ப்ரியமுடன் வசந்த் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
வாழ்த்துக்கள்//

தல எனக்கா அவங்களுக்கா வாழ்த்துக்கள்?

நன்றி தல

ப்ரியமுடன் வசந்த் said...

//பழமைபேசி said...
ஃக ஃக ஃக//

இஃகி இஃகி மாறிப்போச்சா அப்போ ஃகஃகஃகக்கு என்ன அர்த்தம் பழமை பேசி அய்யா?

நன்றி சார்

ப்ரியமுடன் வசந்த் said...

// வானம்பாடிகள் said...
/தாயுண்டு தந்தையுண்டு மற்றோர் இல்லை.நீ வந்தால் உனக்கொரு இடமும் உண்டு இல்லத்தில் இல்லை இவர்களின் இதயத்தில்.... /

தனிக்குடித்தனமுன்னு பிட்டு போட்டாச்சா

தினம் ஒரு சூடிதார் துணிக்கடை வச்சிருக்கறவனால கூட முடியாது. ஓவரா ஊதியாச்சா.

=))//

ம்கும்
பெரியமனுசரு பேசுற பேச்சா இது?

தனிக்குடித்தனம் ஒத்தையா பெறந்தவன் நான் போனா அதுக்கு பதிலா செத்துப்போயிடலாம்..

ப்ரியமுடன் வசந்த் said...

//கலகலப்ரியா said...
தம்பி நீ கொஞ்சம் ஓவராதான் போய்க்கிட்டிருக்கா.. நடத்து நடத்து.. இடுகையில் விளம்பரமா.. அபாரம்.. அம்மா தாயே கொஞ்சம் அருள்கூர்ந்து தயை புரிவாய்.. பாவம் புள்ள தவிச்சு போய் இருக்கு..

17 வருஷத்துக்கு முன்னாடி கை கோர்த்து நடந்ததா.. சேரன் ஐயா.. நீங்க ஆட்டோகிராப் எடுத்ததுதான் எடுத்தீங்க.. புள்ளைங்க இப்புடீ ஆயிட்டாய்ங்க.. அவ்வ்வ்வ்வ்வ்...

இன்னும் கொஞ்ச வருஷம் கழிச்சு நீ எப்டி புலம்புவான்னு நினைச்சு பார்க்கறப்போ எனக்கு சிரிப்பா வருது.. ஹ்ம்ம்.. ஆசீர்வாதங்கள்..//

ஆகா யக்கோவ் இதுமட்டும் எங்க வீட்ல பாத்து வச்சுருக்குற பொண்ணுக்கு கேட்டுச்சு கல்யாணத்துக்கப்பறம் என் காத அறுத்துடுவா.

நன்றி

ப்ரியமுடன் வசந்த் said...

// சுசி said...
வசந்த் லைட்டா ஆரம்பிச்ச சிரிப்பு 'வசதி' வந்ததும் பிச்சுகிச்சு... எக்ஸ்ட்ரா குவாலிபிகேஷனுக்கு எக்ஸ்ட்ராவா சிரிச்சாச்சு...
மொத்த குடும்பமும் முறைக்கிற அளவுக்கு சிரிக்க வச்சிட்டீங்க...
//

நல்லா சிரிச்சா சரித்தேன்

நன்றி சுசி

ஹேமா said...

//என்னைக்கோ அசின் எனக்கு எழுதுன காதல் கடிதத்தை படிக்குறதும்....//

டூப்பு டூப்பு.என்னாதிது.சும்மாதானே !

//தினமும் ஒரு சுடிதார்//

இது அடுத்த டூப்பு நம்பாதீங்க.இந்த ஆம்பிளைங்களே இப்பிடிதான் !

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

எல்லா வரிகளிலும்
நிரம்பி வழிகிறது
நகைச்சுவை!
பிரமாதம் வசந்த்!

தேவன் மாயம் said...

படிப்பு

பட்டம் விட்டும் பழக்கமில்லை, வாங்கியும் பழக்கமில்லை....இந்த கடுதாசி எழுதுற அளவுக்காவது படிச்சுருக்கேன்னு சந்தோசப்படுங்க...
///

காதல் லாண்டாப் பட்டம் வசந்த்!! விடத்தெரியாட்டி அவ்வளவுதான்!!

kishore said...

// ஒரு 17 வருஷத்துக்கு முன்னாடி கைகோர்த்து வீதியுலா போனதுண்டு அவளோடு....//

ரொம்ப பழைய பீஸ் போல இருக்கு... பாட்டிய விசாரிச்சதா சொல்லுங்க தாத்தா

remove word verification pls..

VISA said...

//ஏமாளி,ஏமாந்துகொண்டே இருப்பவன்//

இந்த அபவுட் மீ க்கும் கவிதைக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கா?

VISA said...

தினம் ஒரு திருக்குறள் மாதிரி தினம் ஒரு சுடிதாரா?

உங்கள் தோழி கிருத்திகா said...

நீங்க போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் பண்ணி ஈவ் டீசிங்ல ஜெயில்ல போட்டா ஜாமீன்ல வர்ற வசதியும் இருக்கு.எப்படி வசதி?/////
love letternu merattal kaditham eluthirukkinga????
anyways nallarukku

தமிழ் அமுதன் said...

நல்லா இருக்கு ...!;;)
இப்படித்தான் இருக்கோனும் ...!

Veliyoorkaran said...

யோவ் பங்காளி..பிரிசிருக்கயா..இதுக்கு பேருதான் ஒய் வீடு கட்டறது...பொண்ணுங்கள பிக் அப் பத்திரி ரைடு எப்டி பண்றதுன்னு அடுத்த பதிவுல ஆடிஎன்சுக்கு ஐடியா குடுக்கறது...(ஆமாம்,உன் ரெண்டாவது மகன் காலேஜ்ல படிக்கறதா சொன்னியே..இப்போ நல்லா படிக்கிராப்லையா...காலம் போன கடைசீல உமக்கு லவ் லெட்டர் ஒரு கேடு..கொமட்டுல குத்தனும்.)

ஈரோடு கதிர் said...

//நீங்க என்னை ரிஜெக்ட் பண்ணிட்டா?//

உங்க தங்கச்சிட்ட கொடுப்பேன்

சிரிக்கக் கூடாது... அடுத்து முயற்சி செய்யவேணும்

ஷங்கி said...

ஃபோட்டாவில உள்ள பொண்ணைப் பார்த்தப்புறம்தான் இதை எழுதினீங்களா?
எதுக்கும் குடுத்துப் பாருங்க இந்தக் கடிதத்தை.

யோ வொய்ஸ் (யோகா) said...

//.என்னைக்கோ அசின் எனக்கு எழுதுன காதல் கடிதத்தை படிக்குறதும்//

என்னது அசின் அங்கையும் அப்ளிகேஷன் போட்டிருக்கா?? எனக்கும் அசின் முன்னர் இப்படி காதல் கடிதம் எழுதியிருக்காங்க வசந்த்..

கலையரசன் said...

அடிங்..! வாரத்துக்கு ஒரு படமா? அப்ப மொக்க படத்தைகூட விடாம பாக்கனுமேடா!! ஒரு நாளுக்கு ஒரு சுடிதாரா? ஏன் ஒரு வாட்டி போட்டதை மறுநாளைக்கு போடக்கூடாதா..

கலையரசன் said...

என்னமோ போ! ஒரே காதல் பீலீங்ஸ்சா இல்ல இருக்கு? முதல்ல உங்க வீட்டுல சொல்லி கல்யாணம் பண்ணாதான் அடங்குவ போல..

Vidhoosh said...

//
சிரிப்பேன்...வானமே இடிஞ்சு விழுகுற அளவுக்கு...அப்பறமென்ன மழை தான்...///
இதையே லைட்டா மடக்கி மடக்கி எழுதியிருந்தா கவுஜதான..

:))

--வித்யா

லோகு said...

எல்லாம் சரி தான்.. ஆனா தொடக்கத்துல 'உபயகுசலோபரி' போட மறந்துட்டீங்க..

Anonymous said...

என்னாது தினம் ஒரு சுடிதாரா பார்த்துப்பா அவசரப்பட்டு வாய விடாத அப்பறம் அவதி பாடாத!!!

ஒரு மார்க்கமாத்தான் இருக்க நீ...ஹஹஹ்ஹஹ்

சத்ரியன் said...

//கவிதை

சுட்டாலும் எழுத வராது(அப்போ சுடாம எழுத தெரியுமான்னு கேக்கக்கூடாது)
வாசிக்கப்பிடிக்கும்,சிலரோட கவிதைகளும் புரியாது சிலரோட வார்த்தைகளும் புரியாது(கிறுக்கனுக்கு எப்படி புரியும்?)

வசந்த்,

பிரியத்த வெட்டிட்டேன். சுட்டா "படம்" மட்டும் வருமோ? என் "மாப்பு" ஜமால கூப்பிட்டு பஞ்சாயத்து வெக்காம விடமாட்டேன். நான் ஊருக்கு போயிருந்த சமயமாப் பாத்து இந்த புள்ள படத்த சுட்டிருக்க.

வெட்டியா ப்ளாக் எழுதறதுன்னு சொல்லி குட்டியளுக்கு பிட்டு போடுறியளோ?

கெளப்புங்கய்யா.!

யாசவி said...

:)

யாசவி said...

:)

S.A. நவாஸுதீன் said...

வசந்த். இங்கே போஸ்ட் போட்ட கையோடு ஸ்டாம்ப் ஒட்டி அவங்களுக்கும் அனுப்பிடுங்க.

பின்றீங்களே வசந்த்.

பாலா said...

தாயுண்டு தந்தையுண்டு மற்றோர் இல்லை.நீ வந்தால் உனக்கொரு இடமும் உண்டு இல்லத்தில் இல்லை இவர்களின் இதயத்தில்....

yov nenja nakkathaiyaa mapla

Beski said...

தினம் ஒரு சுடிதாரா?
பெரிய ஆளுதான் மச்சி....

ஜெட்லி... said...

//என்னைக்கோ அசின் எனக்கு எழுதுன காதல் கடிதத்தை படிக்குறதும்....

//

இப்பவே கண்ணே கட்டுதே வஸந்த்
19th vote is mine

Beski said...

//சத்தமில்லாம திருக்குறள் வரிகளை படிப்பேன்//
இதுக்கு இன்னா அர்த்தம்னு ஓபனா சொல்ல முடியுமா மச்சி?

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அது சரி. இன்றுவரை எத்தனை விண்ணப்பம் வந்தது என்று ரகசியமாய் சொல்ல முடியுமா? எனக்கென்னமோ அந்தப் 17 வருடத்துக்கு முந்தின கதையைத் தணிக்கை செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. முன்னப் பின்ன அனுபவமில்லாத வேலை செய்ய முதல் யாரிடமும் அறிவுரை கேட்கலாமோ , இல்லையோ?

ஸ்ரீராம். said...

Resume னாலே பாதி பொய்யாகத்தான் இருக்கும்...இங்க எப்படியோ....காதல் Resume ல லொள்ளுதான் ஜாஸ்தி இருக்கு.

Admin said...

/*தாயுண்டு தந்தையுண்டு மற்றோர் இல்லை.நீ வந்தால் உனக்கொரு இடமும் உண்டு இல்லத்தில் இல்லை இவர்களின் இதயத்தில்....
*/

உங்களுக்கு மட்டும் எப்படி இப்படியல்லாம் தோனுது.....

shabi said...

shafiullah76@gmail.com என் மெயில் id இப்ப அபுதாயில இருக்கேன் உங்க mail id இப்ப இல்ல்யே

shabi said...

profile லாம் நமக்கு இல்லபா அந்த அளவுக்கு நான் இல்ல எனக்கு blog இல்ல

shabi said...

me the 50 ...................

குறை ஒன்றும் இல்லை !!! said...

:))))))))))

வான்முகிலன் said...

மேல இருக்க பொண்ணு யாருப்பா? யாராவது சொல்லுங்களேன்... நல்லாயிருப்பீங்க

Anonymous said...

17 years???

அன்புடன் மலிக்கா said...

இத்தைனையும் சொல்லியும் கிடைக்கலைன்னா எப்படி

க.பாலாசி said...

//சிரிப்பேன்...வானமே இடிஞ்சு விழுகுற அளவுக்கு...அப்பறமென்ன மழை தான்....//

நீங்க நம்ம கட்சி தலைவா.......அருமை....படம் இன்னும் அருமை....

Menaga Sathia said...

தினம் ஒரு சுடிதார் வாங்கி தருவிங்களா? அப்போ கொடுத்து வச்ச பொண்ணுதான்.... அப்போ நகைலாம் வாங்கித் தரமாட்டீங்களா????

வால்பையன் said...

அது என்ன திருக்குறள் வரிகள்!

எனக்கும் அடிக்கடி தேவைப்படுது!

Anonymous said...

எப்படியும் வசந்த் காதல் வெற்றி பெற வாழ்த்துக்கள்

வினோத் கெளதம் said...

அட்டகாசம்..

பதிவை பற்றி சொல்லவேண்டுமா என்ன..!!
எல்லாமே நல்லா இருக்கு மச்சி..:)

SUFFIX said...

All the best!! வண்டி டாப் கியரில் போக ஆரம்பிச்சுடுச்சே வசந்த்!!

Anonymous said...

வசந்த் உங்களுக்கு திருமணமாகி கல்லூரி படிக்கும் வயதில் இரண்டு குழந்தை இருப்பதாக எதோ ஒரு ப்ளாக்கில் படித்தேனே?நிஜமாலுமே உங்களுக்கு திருமணமாகவில்லையா?

படத்தில் இருக்கற இந்த பொண்ணு ஒரு சீரியல் அர்டிச்டு தான வசந்த்?

அன்புடன்,

அம்மு.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கலக்கல் கவிதை வசந்த். இந்தக் கடிதத்த மட்டும் கொடுத்தீங்கன்னா போதும்.. அந்த பொண்ணு உங்கள ஓகே சொல்லிடும் :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

!!!!!!

ப்ரியமுடன் வசந்த் said...

//ஹேமா said...
//என்னைக்கோ அசின் எனக்கு எழுதுன காதல் கடிதத்தை படிக்குறதும்....//

டூப்பு டூப்பு.என்னாதிது.சும்மாதானே !

//தினமும் ஒரு சுடிதார்//

இது அடுத்த டூப்பு நம்பாதீங்க.இந்த ஆம்பிளைங்களே இப்பிடிதான் !//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஹேமா இருங்க மாம்ஸ்கிட்ட சொல்றேன்...

ப்ரியமுடன் வசந்த் said...

// NIZAMUDEEN said...
எல்லா வரிகளிலும்
நிரம்பி வழிகிறது
நகைச்சுவை!
பிரமாதம் வசந்த்!//

நன்றி நிஜாமுதீன்

ப்ரியமுடன் வசந்த் said...

// தேவன் மாயம் said...
படிப்பு

பட்டம் விட்டும் பழக்கமில்லை, வாங்கியும் பழக்கமில்லை....இந்த கடுதாசி எழுதுற அளவுக்காவது படிச்சுருக்கேன்னு சந்தோசப்படுங்க...
///

காதல் லாண்டாப் பட்டம் வசந்த்!! விடத்தெரியாட்டி அவ்வளவுதான்!!//

நன்றிங்க சார்

ப்ரியமுடன் வசந்த் said...

//KISHORE said...
// ஒரு 17 வருஷத்துக்கு முன்னாடி கைகோர்த்து வீதியுலா போனதுண்டு அவளோடு....//

ரொம்ப பழைய பீஸ் போல இருக்கு... பாட்டிய விசாரிச்சதா சொல்லுங்க தாத்தா

remove word verification pls..//

அடிங்..உனக்கு சப்போர்ட் பண்ணுனா என்னையே கலாய்க்கிறியா?

நன்றி கிஷோர்

ப்ரியமுடன் வசந்த் said...

//VISA said...
//ஏமாளி,ஏமாந்துகொண்டே இருப்பவன்//

இந்த அபவுட் மீ க்கும் கவிதைக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கா?//

இருக்கு விசா

நன்றி

ப்ரியமுடன் வசந்த் said...

//உங்கள் தோழி கிருத்திகா said...
நீங்க போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் பண்ணி ஈவ் டீசிங்ல ஜெயில்ல போட்டா ஜாமீன்ல வர்ற வசதியும் இருக்கு.எப்படி வசதி?/////
love letternu merattal kaditham eluthirukkinga????
anyways nallarukku//

நன்றி கிருத்திகா.....

ப்ரியமுடன் வசந்த் said...

// ஜீவன் said...
நல்லா இருக்கு ...!;;)
இப்படித்தான் இருக்கோனும் ...!//

நன்றி ஜீவன் நீங்களாவது புரிஞ்சுட்டீங்களே.....

ப்ரியமுடன் வசந்த் said...

//Veliyoorkaaran.. said...
யோவ் பங்காளி..பிரிசிருக்கயா..இதுக்கு பேருதான் ஒய் வீடு கட்டறது...பொண்ணுங்கள பிக் அப் பத்திரி ரைடு எப்டி பண்றதுன்னு அடுத்த பதிவுல ஆடிஎன்சுக்கு ஐடியா குடுக்கறது...(ஆமாம்,உன் ரெண்டாவது மகன் காலேஜ்ல படிக்கறதா சொன்னியே..இப்போ நல்லா படிக்கிராப்லையா...காலம் போன கடைசீல உமக்கு லவ் லெட்டர் ஒரு கேடு..கொமட்டுல குத்தனும்.)//

மாப்ள பின்னூட்டத்திலயே சிரிக்க வைக்கிறய்யா..நன்றி

ப்ரியமுடன் வசந்த் said...

// கதிர் - ஈரோடு said...
//நீங்க என்னை ரிஜெக்ட் பண்ணிட்டா?//

உங்க தங்கச்சிட்ட கொடுப்பேன்

சிரிக்கக் கூடாது... அடுத்து முயற்சி செய்யவேணும்//

நன்றி கதிர்

தங்கச்சி இல்லாட்டி இன்னா பண்றது?

ப்ரியமுடன் வசந்த் said...

// ஷங்கி said...
ஃபோட்டாவில உள்ள பொண்ணைப் பார்த்தப்புறம்தான் இதை எழுதினீங்களா?
எதுக்கும் குடுத்துப் பாருங்க இந்தக் கடிதத்தை.//

கிழிச்சு போட்டுட்டாங்க ஷங்கி

நன்றி

ப்ரியமுடன் வசந்த் said...

// கலையரசன் said...
அடிங்..! வாரத்துக்கு ஒரு படமா? அப்ப மொக்க படத்தைகூட விடாம பாக்கனுமேடா!! ஒரு நாளுக்கு ஒரு சுடிதாரா? ஏன் ஒரு வாட்டி போட்டதை மறுநாளைக்கு போடக்கூடாதா..//

வா மாப்பி உனக்கு தெரியாததா?

படமா பாத்தீங்க லவ் பண்ணும்போது?

நன்றி

ப்ரியமுடன் வசந்த் said...

// யோ வாய்ஸ் (யோகா) said...
//.என்னைக்கோ அசின் எனக்கு எழுதுன காதல் கடிதத்தை படிக்குறதும்//

என்னது அசின் அங்கையும் அப்ளிகேஷன் போட்டிருக்கா?? எனக்கும் அசின் முன்னர் இப்படி காதல் கடிதம் எழுதியிருக்காங்க வசந்த்..//

உங்களுக்குமா?

நல்லாருடி..

நன்றி யோகா

ப்ரியமுடன் வசந்த் said...

// Vidhoosh said...
//
சிரிப்பேன்...வானமே இடிஞ்சு விழுகுற அளவுக்கு...அப்பறமென்ன மழை தான்...///
இதையே லைட்டா மடக்கி மடக்கி எழுதியிருந்தா கவுஜதான..

:))

--வித்யா//

நன்றிங்க

மடிச்சு எழுதிருக்கலாம்...

ப்ரியமுடன் வசந்த் said...

// லோகு said...
எல்லாம் சரி தான்.. ஆனா தொடக்கத்துல 'உபயகுசலோபரி' போட மறந்துட்டீங்க..//

அப்பிடின்னா என்னா லோகு?

காதல் மன்னன் கிட்டதானே கேக்க முடியும்?

நன்றிப்பா

velji said...

you have natural,light hearted way of writing!never lose it and enjoy yourself!

interesting bio-data!

ப்ரியமுடன் வசந்த் said...

//
தமிழரசி said...
என்னாது தினம் ஒரு சுடிதாரா பார்த்துப்பா அவசரப்பட்டு வாய விடாத அப்பறம் அவதி பாடாத!!!

ஒரு மார்க்கமாத்தான் இருக்க நீ...ஹஹஹ்ஹஹ்//

நன்றி நான் அவஸ்தப்படுறத பாக்கணுமா?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தமிழே நன்றி

ப்ரியமுடன் வசந்த் said...

// சத்ரியன் said...
//கவிதை

சுட்டாலும் எழுத வராது(அப்போ சுடாம எழுத தெரியுமான்னு கேக்கக்கூடாது)
வாசிக்கப்பிடிக்கும்,சிலரோட கவிதைகளும் புரியாது சிலரோட வார்த்தைகளும் புரியாது(கிறுக்கனுக்கு எப்படி புரியும்?)

வசந்த்,

பிரியத்த வெட்டிட்டேன். சுட்டா "படம்" மட்டும் வருமோ? என் "மாப்பு" ஜமால கூப்பிட்டு பஞ்சாயத்து வெக்காம விடமாட்டேன். நான் ஊருக்கு போயிருந்த சமயமாப் பாத்து இந்த புள்ள படத்த சுட்டிருக்க.

வெட்டியா ப்ளாக் எழுதறதுன்னு சொல்லி குட்டியளுக்கு பிட்டு போடுறியளோ?

கெளப்புங்கய்யா.!//

சத்தி

நீ பஞ்சாயத்ததான் கூட்டுவ

நான் சுப்ரீம் கோர்ட்டுக்கே போவேன்

தெரியும்ல...

நன்றி சத்ரியன்

ப்ரியமுடன் வசந்த் said...

//யாசவி said...
:)//

நன்றி யாசவி

ப்ரியமுடன் வசந்த் said...

//S.A. நவாஸுதீன் said...
வசந்த். இங்கே போஸ்ட் போட்ட கையோடு ஸ்டாம்ப் ஒட்டி அவங்களுக்கும் அனுப்பிடுங்க.

பின்றீங்களே வசந்த்.//

எல்லாம் உங்க ஆசிர்வாதம்தான் நவாஸ்

நன்றி நவாஸ்

ப்ரியமுடன் வசந்த் said...

//பாலா said...
தாயுண்டு தந்தையுண்டு மற்றோர் இல்லை.நீ வந்தால் உனக்கொரு இடமும் உண்டு இல்லத்தில் இல்லை இவர்களின் இதயத்தில்....

yov nenja nakkathaiyaa mapla//

யோவ் உன்னைய மாதிரி கவிததான் எழுத முடியலை கடிதம் எழுதிருக்கேன் அதுவும் உனக்கு பிடிக்கலியா?

ப்ரியமுடன் வசந்த் said...

// ஜெட்லி said...
//என்னைக்கோ அசின் எனக்கு எழுதுன காதல் கடிதத்தை படிக்குறதும்....

//

இப்பவே கண்ணே கட்டுதே வஸந்த்
19th vote is mine//

நன்றி ஜெட்லி

ப்ரியமுடன் வசந்த் said...

//எவனோ ஒருவன் said...
//சத்தமில்லாம திருக்குறள் வரிகளை படிப்பேன்//
இதுக்கு இன்னா அர்த்தம்னு ஓபனா சொல்ல முடியுமா மச்சி?//

ஏம்பா அதான் பொது இடத்துல தடை பண்ணிருக்காங்கன்றது உனக்கு தெரியாதா?

நன்றி பெஸ்கி

ப்ரியமுடன் வசந்த் said...

//ஜெஸ்வந்தி said...
அது சரி. இன்றுவரை எத்தனை விண்ணப்பம் வந்தது என்று ரகசியமாய் சொல்ல முடியுமா? எனக்கென்னமோ அந்தப் 17 வருடத்துக்கு முந்தின கதையைத் தணிக்கை செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. முன்னப் பின்ன அனுபவமில்லாத வேலை செய்ய முதல் யாரிடமும் அறிவுரை கேட்கலாமோ , இல்லையோ?//

நான் யாரையும் இதுவரைக்கும் சரியா புரிஞ்சுட்டது இல்லை அம்மா மெயில் கிடைத்தது மிக்க நன்றி...

ப்ரியமுடன் வசந்த் said...

//ஸ்ரீராம். said...
Resume னாலே பாதி பொய்யாகத்தான் இருக்கும்...இங்க எப்படியோ....காதல் Resume ல லொள்ளுதான் ஜாஸ்தி இருக்கு.//

நன்றி ஸ்ரீராம்

ப்ரியமுடன் வசந்த் said...

//இரா.சுரேஷ் பாபு said...
/*தாயுண்டு தந்தையுண்டு மற்றோர் இல்லை.நீ வந்தால் உனக்கொரு இடமும் உண்டு இல்லத்தில் இல்லை இவர்களின் இதயத்தில்....
*/

உங்களுக்கு மட்டும் எப்படி இப்படியல்லாம் தோனுது.....//

தோணுது என்னா பண்றது

நன்றி சுரேஷ்

ப்ரியமுடன் வசந்த் said...

//shabi said...
shafiullah76@gmail.com என் மெயில் id இப்ப அபுதாயில இருக்கேன் உங்க mail id இப்ப இல்ல்யே//

மெயிலுறேன்

ப்ரியமுடன் வசந்த் said...

// shabi said...
shafiullah76@gmail.com என் மெயில் id இப்ப அபுதாயில இருக்கேன் உங்க mail id இப்ப இல்ல்யே//

சீக்கிரம் ஸ்டார்ட் பண்ணுங்க சபி ரெடி ஜூட்

ப்ரியமுடன் வசந்த் said...

// குறை ஒன்றும் இல்லை !!! said...
:))))))))))//

நன்றி ராஜ குமாரன்

ப்ரியமுடன் வசந்த் said...

//வான்முகிலன் said...
மேல இருக்க பொண்ணு யாருப்பா? யாராவது சொல்லுங்களேன்... நல்லாயிருப்பீங்க//

அது தெரிஞ்சா நான் ஏன் இங்க போஸ்ட் பண்றேன்..

நன்றிப்பா

ப்ரியமுடன் வசந்த் said...

// ♥ தூயா ♥ Thooya ♥ said...
17 years???//

நன்றி

ப்ரியமுடன் வசந்த் said...

//அன்புடன் மலிக்கா said...
இத்தைனையும் சொல்லியும் கிடைக்கலைன்னா எப்படி//

ஹ ஹ ஹா

நன்றி மலிக்கா

ப்ரியமுடன் வசந்த் said...

//க.பாலாஜி said...
//சிரிப்பேன்...வானமே இடிஞ்சு விழுகுற அளவுக்கு...அப்பறமென்ன மழை தான்....//

நீங்க நம்ம கட்சி தலைவா.......அருமை....படம் இன்னும் அருமை....//

நன்றி கதிர்

ப்ரியமுடன் வசந்த் said...

//க.பாலாஜி said...
//சிரிப்பேன்...வானமே இடிஞ்சு விழுகுற அளவுக்கு...அப்பறமென்ன மழை தான்....//

நீங்க நம்ம கட்சி தலைவா.......அருமை....படம் இன்னும் அருமை....//

சாரி பேர் மாறிபோச்சு நன்றி பாலாஜி

ப்ரியமுடன் வசந்த் said...

// Mrs.Menagasathia said...
தினம் ஒரு சுடிதார் வாங்கி தருவிங்களா? அப்போ கொடுத்து வச்ச பொண்ணுதான்.... அப்போ நகைலாம் வாங்கித் தரமாட்டீங்களா????//

நகை வேறயா?

தாங்காது சிஸ்டர் தாங்காது...

நன்றி மேனகா

ப்ரியமுடன் வசந்த் said...

// வால்பையன் said...
அது என்ன திருக்குறள் வரிகள்!

எனக்கும் அடிக்கடி தேவைப்படுது!//

நக்கலு..

நன்றி வாலு..

ப்ரியமுடன் வசந்த் said...

//Thirumathi JayaSeelan said...
எப்படியும் வசந்த் காதல் வெற்றி பெற வாழ்த்துக்கள்//

நன்றிங்க மேடம்

ப்ரியமுடன் வசந்த் said...

மீ த 100

பதிவெழுதி 7, 8 மாசமாயி இன்னிக்குத்தான் 100வது கமெண்ட்..
நன்றி மக்களே...

ப்ரியமுடன் வசந்த் said...

// வினோத்கெளதம் said...
அட்டகாசம்..

பதிவை பற்றி சொல்லவேண்டுமா என்ன..!!
எல்லாமே நல்லா இருக்கு மச்சி..:)//

நன்றி வினோத்

ப்ரியமுடன் வசந்த் said...

// ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...
All the best!! வண்டி டாப் கியரில் போக ஆரம்பிச்சுடுச்சே வசந்த்!!//

ஆமா சஃபி ஆனா பள்ளம் மேடு நிறையா இருக்கே....

நன்றி சஃபி

ப்ரியமுடன் வசந்த் said...

// Ammu Madhu said...
வசந்த் உங்களுக்கு திருமணமாகி கல்லூரி படிக்கும் வயதில் இரண்டு குழந்தை இருப்பதாக எதோ ஒரு ப்ளாக்கில் படித்தேனே?நிஜமாலுமே உங்களுக்கு திருமணமாகவில்லையா?

படத்தில் இருக்கற இந்த பொண்ணு ஒரு சீரியல் அர்டிச்டு தான வசந்த்?

அன்புடன்,

அம்மு.//

இது வேறயா புரளி வேற கிளப்பிட்டாய்ங்களா?

நன்றி அம்மு

ப்ரியமுடன் வசந்த் said...

//ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
கலக்கல் கவிதை வசந்த். இந்தக் கடிதத்த மட்டும் கொடுத்தீங்கன்னா போதும்.. அந்த பொண்ணு உங்கள ஓகே சொல்லிடும் :)//

நன்றிங்க அண்ணா

ப்ரியமுடன் வசந்த் said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
!!!!!!//

கரீக்ட்டு

தேவையான்னு நினைச்சேன் இந்த பதிவு

நன்றி அமித்து அம்மா

ப்ரியமுடன் வசந்த் said...

//velji said...
you have natural,light hearted way of writing!never lose it and enjoy yourself!

interesting bio-data!//

நன்றி வேல்ஜி....

கண்ணகி said...

வசந்த் தம்பி இந்த பயோடேட்டாவைப பார்த்து மங்கின புள்ளையா அது?

விக்னேஷ்வரி said...

நல்லாருக்கு வசந்த். இப்படியெல்லாம் எழுதி பொண்ணு வொர்க் அவுட் ஆச்சா இல்லையா...

அன்புடன் அருணா said...

ஊஹும்....உங்களுக்கு கடிதமும் வரல்லையே வசந்த்!!