ஏலேலோ ஐலசா ...ஏலேலோ ஐலசா...
பூட்டிருக்கு ஏலேலோ ஐலசா...
சாவியில்லை ஏலேலோ ஐலசா...
காலில்லை ஏலேலோ ஐலசா...
காலால வந்தது ஏலேலோ ஐலசா...
சில வானமாய் ஏலேலோ ஐலசா...
சில இரத்தமாய் ஏலேலோ ஐலசா...
கல்யாணமாகலை ஏலேலோ ஐலசா...
தோதான ஆளிருக்கு ஏலேலோ ஐலசா...
ஒரு பிறவிதான் ஏலேலோ ஐலசா...
அதிலே பல மறுபிறவியுண்டு ஏலேலோ ஐலசா...
அடிக்கு அடி வாங்குறதுண்டு ஏலேலோ ஐலசா...
அடித்தால் அழுவதில்லை ஏலேலோ ஐலசா...
பொத்தாம்பொதுவாய் ஆறு உண்டு ஏலேலோ ஐலசா...
உள்ளாற ஒண்ணுமில்லை ஏலேலோ ஐலசா...
மானமிருக்கு ஏலேலோ ஐலசா...
மனமில்லை ஏலேலோ ஐலசா...
உப்பிலனா நார்நாராய் ஏலேலோ ஐலசா...
உப்புறதில்லை ஏலேலோ ஐலசா...
உதவாத கையிருக்கு ஏலேலோ ஐலசா...
உதவுறதுக்கு வழியில்லை ஏலேலோ ஐலசா...
கர்வமிருக்கு ஏலேலோ ஐலசா...
ஆனா அது தலையிலில்லை ஏலேலோ ஐலசா...
மருத்துவம் பார்க்க ஜாதியிருக்கு ஏலேலோ ஐலசா...
மருந்துக்கும் ஜாதியிருக்கு ஏலேலோ ஐலசா...
பின் நவீனமிருக்கு ஏலேலோ ஐலசா...
முன் நவீனமிருக்கு ஏலேலோ ஐலசா...
விளக்கம் தர யார் வேண்டுமானாலும் அழைக்கப்படுகிறார்கள்
41 comments:
ஏலேலோ ஐலசா...
என்ன இது ஐலசா...
கவிதைக்குள்ள ஐலசா...
கருத்திருக்கு ஐலசா...
புரிஞ்சுபோச்சு ஐலசா...
ஓடிப்போறேன் ஐலசா...
//காலில்லை ஏலேலோ ஐலசா...
காலால வந்தது ஏலேலோ ஐலசா...//
இதுக்கு யாராச்சும் விளக்கம் தாங்க. :)
விளக்கம் தர யார் வேண்டுமானாலும் அழைக்கப்படுகிறார்கள்//
அது சரி
//கல்யாணமாகலை ஏலேலோ ஐலசா...
தோதான ஆளிருக்கு ஏலேலோ ஐலசா...
//
நடக்கட்டும்..நடக்கட்டும்
கால் என்பதற்கு இன்னொரு அர்த்தம் உண்டு அதாவது குவார்டர்.
ஆக குவார்டர் அடித்த பிறகு தள்ளாடி தள்ளாடி நடப்பவன் தான் நடக்கவில்லை மிதக்கிறோம் என்று உணர்வான். அவனுக்கு தன் கால்கள் இருப்பதாகவே தோன்றாது.
அதை தான் நம் ஜலசா கவிஞர் வசந்த் அழகுற எடுத்துரைத்திருக்கிறார்.
////காலில்லை ஏலேலோ ஐலசா...
காலால வந்தது ஏலேலோ ஐலசா...//
தள்ளாடி நடக்கும் எனக்கு இப்போது கால் இல்லை.
இது கால்(குவார்ட்டர்)இனால் வந்தது.
pangaali...enya..nallathaana iruntha...thideernu en ipdi...
வயசுப்புள்ள அர்த்த ராத்திரில அலையாதப்பான்னா கேக்குதா? எந்தப் பூசாரிய கூப்பிட்டு வேப்பிலை அடிக்கிறது. அவ்வ்வ்வ். ஏன் வசந்து. நிஜம் சொல்லுங்க. ஐலசா காபி பேஸ்ட் தானே. இத்தினி ஐலசா தப்பில்லாம அடிக்க முடியாதே ராசா. ஒன்னு கூட ஜலசானு வரக்காணமே. :))
நல்லாயிருக்கு ஐலசா
எப்படி இப்படி ஐலசா
வசந்த் மச்சான்...இதுதான் புதுக்கவிதையோ...???
voted.. appaala vanthu padikkiren thambi..
VISA said,
//தள்ளாடி நடக்கும் எனக்கு இப்போது கால் இல்லை.
இது கால்(குவார்ட்டர்)இனால் வந்தது.//
ஆஹா.. பின்னுறீங்க பாஸ்..
நல்லா இருக்கு ஏலேலோ ஐலசா...
பாட்டிருக்கு ஏலேலோ ஐலசா.. பாயின்ட்டும் இருக்கு ஏலேலோ ஐலசா...
அடிச்சி தள்ளு ஐலசா
புடிச்சி தள்ளு ஐலசா,
வண்டித் தள்ளு ஐலசா,
முண்டித் தள்ளு ஐலசா,
ஏலேலோ ஐலசா, ஏலேலோ ஐலசா
முட்டி மோதி யோசித்தாலும் ஏலேலோ ஐலசா
மூளைத்தான் காயுது ஏலேலோ ஐலசா!!
//கல்யாணமாகலை ஏலேலோ ஐலசா...
தோதான ஆளிருக்கு ஏலேலோ ஐலசா...//
அட ஆமா தலைவா....எனக்கும் அப்படித்தான்.....
இதுமட்டும்தான் புரிஞ்சிது....(வயசு அப்படி)
ஆகா கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க, இது மப்புக் கவிதைகள் என்ற மரபுக்கவிதைகளா
பின் நவீனமிருக்கு ஏலேலோ ஐலசா...
முன் நவீனமிருக்கு ஏலேலோ ஐலசா...
/////////
பின்னும் முன்னும் இருக்கு அப்புறம் என்ன ?
//கல்யாணமாகலை ஏலேலோ ஐலசா...
தோதான ஆளிருக்கு ஏலேலோ ஐலசா...//
விளக்கம் இந்த வரியில் இருக்கு. எல்லாரும் கவனிச்சுக் கொள்ளுங்கோ.வசந்துக்கு என்னமோ ஆகிப் போச்சு.
//கால் என்பதற்கு இன்னொரு அர்த்தம் உண்டு அதாவது குவார்டர்.
ஆக குவார்டர் அடித்த பிறகு தள்ளாடி தள்ளாடி நடப்பவன் தான் நடக்கவில்லை மிதக்கிறோம் என்று உணர்வான். அவனுக்கு தன் கால்கள் இருப்பதாகவே தோன்றாது.
அதை தான் நம் ஜலசா கவிஞர் வசந்த் அழகுற எடுத்துரைத்திருக்கிறார்.//
super ;;))
வசந்த்.. உண்மையில் ஹேமா பிண்ணிட்டாங்க...
piriyamudan vasanth
eemarramudan vasanthm niingathaana
enna ethavathu fery il poi vanthiirgalaa
ore ilasava irukku
nice vasanth
//பூட்டிருக்கு ஏலேலோ ஐலசா...
சாவியில்லை ஏலேலோ ஐலசா...//
உங்க மனச பூட்டிட்டு சாவியையும் எடுத்துட்டு போய்ட்டாங்களா... சோ சாட்.
//காலில்லை ஏலேலோ ஐலசா...
காலால வந்தது ஏலேலோ ஐலசா...//
தூ...ரத்தில பேயா தெரிஞ்சது பக்கத்தில வந்ததும் பொண்ணா ஆயிடுச்சா.
//கல்யாணமாகலை ஏலேலோ ஐலசா...
தோதான ஆளிருக்கு ஏலேலோ ஐலசா...//
அப்புறம் என்ன கெட்டிமேளம் கொட்டட்டட்டும்...
//ஒரு பிறவிதான் ஏலேலோ ஐலசா...
அதிலே பல மறுபிறவியுண்டு ஏலேலோ ஐலசா...//
இது சத்தியமா உண்மை..
//பின் நவீனமிருக்கு ஏலேலோ ஐலசா...
முன் நவீனமிருக்கு ஏலேலோ ஐலசா...//
ஏலேலோ ஐலசா! ஏலேலோ ஐலசா!! ஏலேலோ ஐலசா!!! ஏலேலோ ஐலசா!!!! ஏலேலோ ஐலசா!!!!! .....
//அடிக்கு அடி வாங்குறதுண்டு ஏலேலோ ஐலசா...
அடித்தால் அழுவதில்லை ஏலேலோ ஐலசா...//
நீங்க ரெம்ப நல்லவரு வசந்த்... அவ்வ்வ்வ்....
ஐலசா ஐலசா - விளக்கம் தரனுமா - ஐலசா ஐலசா ...
ஜலசா னு படிச்சுட்டேன்
ஓ... ஐலசா வா...
சரி சரி
நீங்களே சொல்லுங்க வசந்த
என்ன இதுன்னு
//பொத்தாம்பொதுவாய் ஆறு உண்டு ஏலேலோ ஐலசா...
உள்ளாற ஒண்ணுமில்லை ஏலேலோ ஐலசா...//
ஆறுவுக்கு பதில் தலையின்னு வந்திருக்கலாமோ???
பொத்தாம்பொதுவாய் தலை உண்டு ஏலேலோ ஐலசா...
உள்ளாற ஒண்ணுமில்லை ஏலேலோ ஐலசா..
இப்போ படிச்சு பாருங்க...
எதோ நீங்க அழைச்சத்துக்காக வந்தேம்பா...
இவ்ளோதான் எனக்கு புரிஞ்சுது.
நீங்க கமன்ட்ச சேமிச்சு வச்சிருக்கிறதால மத்தவங்க என்ன சொன்னாங்கன்னும் தெரியல.
நல்லாதானடா இருந்ந்ந்ந்தததத.....?
ஏலேலோ ஐலசா...
என்ன இது ஐலசா...
புரியலையே....எனக்குத் தெரியலயே...
பூட்டிருக்கு ஏலேலோ ஐலசா...
சாவியில்லை ஏலேலோ ஐலசா
வசந்த் இதுக்கு என்ன
அர்த்தம்ன எனக்கு தெரிஞ்ச ரெண்டு அர்த்தம் சொல்றேன்
ஒன்னு வாழ்க்கைக்கான சந்தொசம்ன்குற சாவிய
தொலைசுட்டோம்ன்குற மாதிரி
அப்புறம்
கடவுளை அடைவதற்கான வழி எப்படி அந்த சாவி இல்லைங்குற மாதிரி
இன்னொன்னு இருக்கு அது பச்சையா இருக்கும் அதனால
வேணாம்
முத்து கவிதை மொத்தமாய் அழகு
பின்னூட்டம் அளித்து உற்சாகமூட்டும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி
இந்த இடுகைக்கான விளக்கம் இங்கே..
http://priyamudanvasanth.blogspot.com/2009/10/blog-post_14.html
வீட்டுப்பாடம் எழுதத் தெரிலை!!!!!
யப்பா இதையும் விட்டு வைக்கலையா நீ?
Post a Comment