"என்ன மச்சான் எப்பிடியிருக்க நீ திருந்தவே மாட்டியாடா ?"என்று சிதம்பரத்திடம் தர்மா கேட்டவாறே சிதம்பரத்தின் வாயிலிருக்கும் சிகரெட்டை பிடுங்கி கீழே போட்டான்.
"என்னடா பண்றது ஆசையா டிகிரி முடிச்சு 7 மாசமாச்சு இன்னும் வேலை கிடைச்சமாதிரியில்லை,உனக்கென்ன அப்பா சம்பாதிச்ச சொத்து வச்சு சொந்தமா தொழில் நடத்துற எனக்கு எங்கப்பாரு எனக்கு மூத்த அக்காமார்களை கட்டிக்குடுத்து கரை சேர்க்கவே ரொம்ப கஷ்டப்பட்டாரு இப்போவும் கஷ்டப்படுறாரு இதோட நானும் சம்பாதிச்ச பாடில்லை தெண்டச்சோறு தின்னுட்டுஊரைச்சுத்திட்டுஇருக்கேன்,கோயம்புத்தூரு,மதுரை,திருப்பூரு,மெட்ராஸ்ன்னு எல்லா ஊர்ல இருக்குற கம்பெனிகளுக்கும் அப்ளிக்கேசன் போட்டேன் ஒண்ணுக்கு கூட பதிலில்ல நான் என்னடா பண்றது" என்றவாறு விரக்தியாக தர்மாவிடம் ஏதாவது "உனக்கு தெரிஞ்ச கம்பெனி அட்ரெஸ் இருந்தா குடுடா தர்மா!"ன்னு சிதம்பரம் கேட்க்க..
அதற்க்கு "கொடுக்கிறேன்" என்றவாறே தர்மா தன் பாக்கெட் டயரியை எடுத்தவாறே " திருப்பூர்ல இருக்குற ஒரு பனியன் கம்பெனியில அக்கவுண்டண்ட் வேலை காலியா இருக்குன்னு என்னோட ஃப்ரண்ட் சொன்னான் நீ வேணும்னா ட்ரைப் பண்ணுடா நான் அவன்கிட்ட சொல்லிடுறேன் அவனும் அங்க சீனியர் அக்கவுண்டண்டாதான் இருக்கான்னு" சொல்லிகொண்டே தன் நண்பன் கணேஷின் செல்போன் நம்பர் கொடுத்து "அந்த நம்பருக்கு போன் பண்ணுடான்னு சொல்லிட்டு வாடா டீக்கடைக்கு போயி டீ சாப்ட்டுகிட்டே பேசலாம்ன்னு" டீக்கடைக்கு இருவரும் சென்றனர்.
பஸ்டாண்டு பின்னாடியிருக்குற நண்பர்கள் டீக்கடையில "அண்ணே ரெண்டு டீ என்று தர்மா டீக்கடைக்காரர்கிட்ட சொல்லிட்டு சிதம்பரத்திடம் அவன் அம்மா" அப்பா சின்ன தம்பியின் நலம் விசாரித்தான்.
"எல்லாம் நல்லாயிருக்காங்கடா அப்பறம் உன்வீட்டுல எல்லாரும் நலமா? உனக்கு எப்போடா திருமணம்"ன்னு சிதம்பரம், தர்மாகிட்ட கேட்க்க
"வீட்ல பொண்ணு பாத்துட்டு இருக்காங்கடா தெக்குத்தெரு கணேசன் புரோக்கர் போனவாரம் கூட ஒரு வரன் இருக்கு ஆனா அவங்க வீட்ல ரெண்டு பொண்ணுகளாம் ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்தில கல்யாணம் கட்டி வைக்கணும்ன்னு ஆசைப்படுறாங்களாம் நான் கூட முந்தாநாள் அந்த பொண்ணு நம்ம செட்டியார்கடைக்கு வரும்போது பார்த்தேன் நல்லா அழகாயிருக்காடா நானும் சரி அடுத்த பொண்ணுக்கு வரன் கிடைக்கிற வரைக்கும் வெயிட் பண்றேன்னு சொல்லியிருக்கேன்,அவரும் உனக்குதெரிஞ்ச பையன் இருந்தா சொல்லுன்னு சொல்லியிருக்கார் ,அதான் நம்ம கூட பத்தாப்பு வரைக்கும் படிச்சுட்டு மிலிட்டிரிக்கு போயிருக்கான்ல நம்ம அழகேசன் அவனப்பத்தி புரோக்கர்கிட்ட சொல்லியிருக்கேன் அவன்கிட்டயும் சொல்லியிருக்கேன் நீ என்னடா சொல்ற?"
"ம்ம் சரியான ஆளைத்தான் சொல்லியிருக்க அவனும் நல்ல வேலையிலத்தான் இருக்கான் நல்ல வசதியான குடும்பம் அப்பறமென்ன பேசி முடிச்சுட வேண்டியத்துதான"..ன்னு சிதம்பரம் தர்மாகிட்ட சொல்லிட்டு டீ குடித்த டம்ளரை டீக்கடை மேஜையில வ்ச்சுட்டு பணமெடுக்க பைய துலாவும்போதே தர்மா டீக்கு காசு கொடுத்துவிட்டுஇருந்தான்.
"சரிடா சிதம்பரம் எனக்கு பெரியகுளம் தென்கரையில இருக்குற கோனார்கடையில கொஞ்சம் சாமாஞ்செட்டு வாங்க வேண்டியிருக்கு போயிட்டு வர்றேன் சாயங்காலம் பாக்கலாம்டா நீ மறக்காம அந்த நம்பருக்கு போன் பண்ணி பேசுடா நான் அவன்கிட்ட சொல்லிடுறேன்"..என்றவாறே தர்மா பஜாஜ் எமெயிட்டியை உதைத்து கிளம்பினான்.
நண்பன் கொடுத்த போன்நம்பரையும் பெயரையும் குறித்து வைத்துக்கொண்டு வீடு நோக்கி சென்றான் சிதம்பரம்
அப்பாகிட்ட போன்பேச காசு வாங்கிட்டு பக்கத்துல இருக்குற எஸ்டிடீ பூத்துக்கு போயி நண்பன் குடுத்த நம்பரை டயல் செய்தான்..
"ட்ரிங் ட்ரிங்"..
"ஹலோ யாரு" (எதிர்முனையில்)
"ஹலோ நான் தர்மா ஃப்ரண்டுங்க அதாங்க புதுப்பட்டியில பலசரக்கு கடை வச்சுருக்காரே அவரோட ஃப்ரண்டுங்க.."
"ஓ நீங்கதானா அது?"
"ஆமாங்க.."
"தர்மா உங்களைப்பத்தி சொன்னார்"
"எங்கிட்டயும் உங்களைப்பத்தி சொன்னான் அதான் நான் உங்ககிட்ட விசாரிக்கலாமுன்னு போன் பண்ணேங்க.."
"கேளுங்க.."
"இடமெல்லாம் எப்பிடிங்க?"
"நல்ல இடம் தான் உங்களுக்கேத்த மாதிரியான இடம்தான்"
"எவ்ளோ தருவாங்க?"
"ஒரு பத்து தருவாங்க"
"போகப்போக.."
"போகப்போக நல்லா செய்வாங்க அதுக்கு நான் கியாரண்டி"
"எத்தனை பேரு இருப்பாங்க?"
"மொத்தமா ஒரு பத்து பதினைஞ்சு பேருதான்"
(சின்னக்கம்பெனியா இருக்குமோன்னு மனசுல நினைச்சுக்கிட்டே) "இவ்ளோதானா ?"
"ஆமா கிளை நிறைய இருக்கு எல்லாம் சேர்த்து ஒரு 80, 90 பேர் எப்போவாது ஃபங்சன்னா சந்திப்பாங்க.."
"சரி,தங்குற வசதியெல்லாம் எப்படி?"
"அதுவா அதுக்கென்னங்க நல்லா ஏஸி போட்ட ரூம் இருக்கு , நல்ல லெட்ரின் பாத்ரூம் வசதியெல்லாம் இருக்கு.."
"ம் சாப்பாடு வசதியெல்லாம்?"
"அட நீங்க என்னங்க வாட்ச்மேனுக்கே மூணுவேளை சாப்பாடு குடுக்குறாங்க உங்களுக்கு இல்லாமலா?"
"சரி அப்ப எப்போ வரணும்ன்னு சொல்லுங்க ?"
"வர்ற வெள்ளிக்கிழமை நாள் நல்லாயிருக்கு அன்னிக்கு வர்றீங்களா?"
"ம்ம் கொஞ்சம் அட்ரஸ் குடுக்க முடியுமா?"
"ம்ம் சொல்றேனே நம்பர் 367, "
"ம்"
"நேதாஜி தெரு"
"ம்"
"புதுப்பட்டி,பெரியகுளம்,தேனி மாவட்டம்."
"என்னது புதுப்பட்டியா,தேனி மாவட்டமா?"
"ஆமாங்க"
"திருப்பூர்லல வேலைன்னு சிதம்பரம் சொன்னான்"
"என்னது வேலையா?"
"ஆமாங்க நான் பிகாம் முடிச்சுருக்கேன் அதுக்கு திருப்பூர்ல என் ஃப்ரண்ட் கணேசன் இருக்கான் அவன் கிட்ட சொல்லி உனக்கு வேலை வாங்கித்தர்றேன்னு சொன்னான் நீங்க என்னடான்னா?"
"அட நான் புரோக்கர் கணேசன்பா தர்மா ஃப்ரண்டு ஒருத்தர் இருக்கார் அவர அவருக்கு பாத்துவச்சுருக்கிற பொண்ணோட தங்கைக்கு பேசி முடிக்கலாம் அவன் கிட்ட உங்க போன் நம்பர் குடுத்து பேச சொல்றேன்ல சொன்னார் நானும் சரி நீங்கதான் மாப்பிள்ளையா இருக்கும்ன்னு பொண்ணு வீட்டப்பத்தித்தான் கேக்குறீங்களோன்னு நினைச்சு பதில் சொல்லிட்டு இருந்தேன்.."
"அடப்பாவிகளா? வேலையே இல்லியாமா இதுல பொண்ணு ஒரு கேடா? சாரிங்க அவன் நம்பர் மாத்திக்குடுத்துட்டான் போல .."
"அய்யோ பாவம்.." எதிர் முனையில் போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது
திருப்பூர் ஃப்ரண்ட் கணேசன் நம்பர் குடுப்பதற்க்கு பதிலாக புரோக்கர் கணேசனின் நம்பரை சிதம்பரத்திடம் கொடுத்துவிட்டிருந்தான் தர்மா...
வரட்டும் மவனே இன்னிக்கு வச்சுக்கிறேன்ன்னு தர்மாவோட வருகையை எதிர்பார்த்தவாறே குளத்தங்கரை மரத்தடி திண்ணையில் சிகரெட்டை ஊதியபடியே சிதம்பரம் வானத்தை வெறித்துக்கொண்டிருந்தான்...
டிஸ்கி:என்னோட சிறுகதை எழுதுவதற்க்கான பிராக்டிக்கல் எப்பிடியிருக்குன்னு நீங்கதான் சொல்லணும்,இந்த இடுகையை என்னுடைய 150 ஃபாலோவருக்கு சமர்ப்பிக்கிறேன் நன்றி....
34 comments:
கத நல்லாத்தான் இருக்கு - ஆனா வேலை இல்ல வேறே ஏதோ நடக்கப் போகுதுன்னு தெரிஞ்சிடுது
ம்ம்ம் - நல்வாழ்த்துகள்
புனைவுதான் வசந்து.. அசத்திப்புட்டா..
tamilmanam la unnoda vote missing.. unakke nee vote podalainnaa epdi hihi..
பண்ணாத அழிம்பு பண்ணி இடுகை போட்டு நீ திருந்த மாட்டியான்னு போட்ட பின்னூட்டத்த வச்சே கதைய ஆரம்பிச்ச ஸ்டைல் சூப்பரு. கதை நல்லாருக்கு. கொஞ்சம் ஃபார்மட்டிங் பார்க்கலாமே!
முதல் முயற்சி வெற்றி கிடைத்திருக்கிறது வசந்த். வாழ்த்துக்கள்
150 வாழ்த்துகள்
அப்படியே இந்த 101க்கும் இதே போல ஒரு கதை போடுங்க....
//எழுதப்போறதுக்கு முன்னாடியே எழுதுனதுக்கு நன்றி நண்பர்களே....//
புரியலையே?
நல்வாழ்த்துகள்
தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.
மூணு வேளை சோறு..., இது எப்படியிருக்கு
இனிய தீபஒளி நாள் வாழ்த்துக்கள் வசந்த்.இண்ணைக்கு சிரிக்க வைக்காம என்ன சிறுகதை முயற்சில இறங்கிட்டீங்க.உங்களுக்கும் நகைச்சுவைக்கும் நிறையப் பொருத்தமா இருக்கு.இதிலயும் கலக்க வாழ்த்துக்கள்.
முதல் முயர்ச்சிக்கு வாழ்த்துக்கள் வசந்த்.தீபாவளிக்கும்!
நல்லா வந்திருக்கு வசந்த்.keep it up!150 தொடர்ச்சியாலர்களுக்கும் அன்பு நிறைய.
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் வசந்த். ஆரம்ப முயற்ச்சி நல்லா வந்திருக்கு, தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் வசந்த்!
முதல் கதைக்கு வாழ்த்துக்கள் நண்பா....
கலக்குங்க வசந்த்...
தீபாவளி வாழ்த்துக்கள்...
//வானம்பாடிகள் said...
கதை நல்லாருக்கு. கொஞ்சம் ஃபார்மட்டிங் பார்க்கலாமே!//
நானும் அவரை வழிமொழிகிறேன். எழுத்துப் பிழைகள் மற்றும் இன்னும் சில இடங்களை ட்ரிம் பண்ணி வெளியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். இது உங்கள் முதல் கதையா? அப்படியானால் ஓகே. போக போக கதை எழுதுவது உங்களுக்கே கைவந்த கலையாகிவிடும். தொடர்ந்து எழுதுங்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள் கூறி ஒன்பதாவது ஓட்டை போட்டு உங்கள் இடுகையை பிரபலமாக்கிய கையோடு,
ரேகா ராகவன்
.
உண்மையா நல்ல கதைகள் விரும்புவர்கள் பாட்டியின் வலைத்தளத்திற்க்கு சென்று அவரின் முயற்சிக்கு உறுதுணையாய் இருக்க வேண்டுகிறேன்..நிஜமாவே,,,
http://chuttikadhai.blogspot.com/2009/10/blog-post_17.html
இதுதான் சுட்டி
அருமை
வாழ்த்துகள் நண்பா
வாழ்த்துக்கள் முதல் முயற்சிக்கு..
நல்லாருக்கு வசந்த்... இன்னும் கொஞ்சம் ட்விஸ்ட் சேர்த்திருந்தால் மிகவும் நன்றாக வந்திருக்கும்... சரியா பாருங்கள். நண்பனை பார்த்து டென்ஷன் ஆனவுடன் அவன் சொல்லுகிறான் இன்றையை தேதியை பார் என்று.
பிரபாகர்.
வசந்தின் இன்னொரு திறமை.. அருமை.
ம்.. அசத்துங்க... அசத்துங்க...
பேசாமக் கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டு புருஷன் வேளை பார்க்க வேண்டியதுதானே..
heey unmaiya sol un kathaiya...hhahaha nalla iruku vasanth...veena velai illathavan vayetrerichalai vangi kitta....
தீபத்திருநாள் வாழ்த்துக்களோடு,
சிறுகதை எழுத முயச்சிக்கிக்கும் சிந்தனைக்கும் வாழ்த்துக்கள்.
நல்லா இருக்கு! வாழ்த்துக்கள்..
முதல் முயற்சி நல்லாருக்கு. இன்னும் நல்லா நிறைய எழுதுங்க. ஆயிரம் வாசகர்களைக் கொன்னா தான் அரை எழுத்தாளன் ஆகலாம். :)
முதல் முயற்சி அருமையே..
அட 150 நம்ம ஆரூரனா?
கதை கொண்டு சென்ற விதம் அழகாக இருக்கின்றது..
ஆனால் முடிவு சரியாக அமையவில்லை என நினைக்கின்றேன்.
கதை சுமார்தான்.
கடைசி வரை வந்து, மீண்டும் மேலே சென்று படிக்க வைக்கக்கூடிய கதை. மீண்டும் மேலே சென்று படிக்கும்போது வர வேண்டிய ஆச்சர்யம் வரவில்லை. மேலும், பொதுவான தலைப்பு வைப்பதை தவிர்க்கவும்; தலைப்பும் முக்கியம்.
முதல் முயற்சிக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதிப் பழகவும்.
யாரு அந்த 150வது ப்லொயர் வசந்த். பழைய நம்மள எல்லாம் கண்டுக்க மாட்டீங்களா?
சிறுகதை முயற்சி நன்று. முயற்சி திருவினையாக்கும்.
முதல் முயற்சி நல்லாருக்கு
நல்லா இருக்கு நண்பா.. இன்னும் எழுத எழுத கண்டிப்பாக முன்னேறி விடுவீர்கள்.. வாழ்த்துகள்..
முதல் முயற்சிக்கு வாழ்த்துக்கள் வசந்த்!!வாழ்த்துக்கள்!!
நன்றி சீனா ஐயா(நானும் மதுரைக்கு பக்கந்தேன் ஐயா)
நன்றிபிரியாக்கா
நன்றி நைனா(ஃபார்மெட்டிங் பண்ணத்தெரிஞ்சுருந்தாத்தேன் எப்பயோ பெரியாளாயிடுப்பேன்ல)
நன்றி நவாஸ்
நன்றி பழமை பேசி(நீங்க என்னோட 35 ஃபாலோவர் மறக்கமாட்டேன் :))
அப்பிடின்னா பின்னூட்டம் எழுதப்போறதுக்கு முன்னாடியே அதுக்கு நன்றி)
நன்றி டி.வி.ஆர்
நன்றி துபாய் ராஜா
நன்றி தல
நன்றி ஹேமா(உனக்கு கதையெல்லாம் எழுத வரலைன்னு சூசகமா சொல்லிட்டீங்க அவ்வ் :(
நன்றி ராஜா அண்ணா
நன்றி யாழினி
நன்றி ஜெட்லி
நன்றி சாரதி
நன்றி ராகவன்சார்
நன்றி தியா
நன்றி கவுதம்
நன்றி பிரபாகர்
நன்றி சுசி
நன்றி ஸ்ரீராம்
நன்றி தமிழ்
நன்றி மலிக்கா
நன்றி நாஸியா
நன்றி விக்னேஷ்வரி
நன்றி கதிர்
நன்றி ராகவன் சார்
நன்றி பெஸ்கி (இப்போதானே இனிமேல சரியா எழுதுறேன்
)
நன்றி யோகா
நன்றி அமித்து அம்மா
நன்றி கார்த்திகேயபாண்டியன்
நன்றி மேனகா மேடம்
நன்றி குறை ஒன்றும் இல்லை
hmm very nice frnd...
Post a Comment