தங்க கோபுரவாசலில்
வலுவாய் இருந்தும்...
திண்டாய் கல்லில் கிடைத்தவனின்
ஆளுமைக்குட்ப்பட்டு வாசலில் அநாதையாய்...
சிக்கியும் சிக்காமல் போகிறவனும்
ஊருக்கு ஒரு வேடமிட்டவனும்
ஒன்றுக்கும் ஒன்பதுக்கும் அடங்கியவனுக்கு
சிறைச்சாலையாய்...
கயமைக்கு பல முறை அடிபணிந்து
சல சல வென்று சில பல முறை மணியடித்து
விழுந்து கிடக்க வாயிலிருக்க
திங்களொருமுறை கூட்டியும் பெருக்கியும்
படைத்தழித்து காத்து
தூணில் துரும்பில் திரிந்தாலும்
சொந்தமாய் நான் மட்டும் யாசிக்க புசிக்க
கறுப்பு வெளுக்க
உ லோகமால்
ஈகைக்காய் சிறைவைத்த
ஈயென்று சிரித்தவனுக்கு
அடிமையாய் நான்
48 comments:
என்ன ஏன் இப்புடி படுத்தற:((
:-)..
//வானம்பாடிகள் said...
என்ன ஏன் இப்புடி படுத்தற:((//
அதான் படுத்துறோம்ன்னு தெரியுதுல்ல போய் படுத்து தூங்கு நைனா....
// கலகலப்ரியா said...
:-)..//
சிரிக்கிறீகளோ...
ஒருத்தன இப்படி லூசா மாத்தி கவிதையெழுத வச்சுட்டீங்க....
இந்த புன்னகைக்கு என்ன அர்த்தம்?
அட!நல்லா இருக்கு வசந்த்.
பாவம்...(இப்படியே maintain பண்ணிட வேண்டியதுதான்...)
வசந்த் யார் அந்த பொண்ணு சொல்லுங்க......உங்கள இந்த நிலமைக்கு ஆளாக்கின அந்த பொண்ண சும்மா விட கூடாது.
நாளைக்கு இதுக்கான விளக்கம் பதிவா போட்ட பிறகு நான் பின்னூட்டம் போடுறேன்..
:)
கவிச்சக்கரவர்த்தி வசந்த் என பேரெடுக்க போறீங்களோ?
சரி...போய்ட்டு அப்புறமா வற்றேன்!
வசந்த் ராத்திரியும் வந்து பாத்தேன்.
இப்பவும் பாக்கிறேன்.வீட்டு வாசல்ல இருக்கிற ஏதோ ஒண்ணைச் சொல்றீங்க.என்னன்னு புரிலப்பா.
உள்ளேன் அய்யா மட்டும்
வலையுலகின் ஷெல்லி வாழ்க....
கொஞ்சம் ஓவர்ஆ இருக்கா...
அட விடுங்க வஸந்த்
பீல் பண்ணாதிங்க....
எப்படி இப்படியெல்லாம்..../
இவ்வளவுதான்ப்பா..இதுக்குப் போயி புரியல அது இதுன்னு..வாழ்க.
கோனார் உரை...எங்கே???
இதன் விளக்கம் தரும் பதிவுக்குக் காத்திருக்கிறேன். சத்தியமாய் எனக்கு புரியல.
வசந்த் வாசிப்புக்கு கடினமா இருக்கு. எனக்கு 3 வரிக்கு மேல கவிதை இருந்தா புரியாது. ஒத்துக்குற்றேன் :)
பின்நவீனத்துவ கவிதையா ? :)
//சிக்கியும் சிக்காமல் போகிறவனும்
ஊருக்கு ஒரு வேடமிட்டவனும்
ஒன்றுக்கும் ஒன்பதுக்கும் அடங்கியவனுக்கு
சிறைச்சாலையாய்...//
இந்த வரிகள் நல்லாருக்கு நண்பா...
ஆனா கடைசிவரை எதப்பத்தின்னு சொல்லவேயில்ல...
என்னன்னு தெரியல வசந்த்...
ஆனா உங்களுக்கு என்னவோ ஆய்டிச்சுன்னு தெரியுது....
avamaanam.....pesukirathaa inthak kavithaiyil..?
muzhusaap puriyala....
avamaanam.....pesukirathaa inthak kavithaiyil..?
muzhusaap puriyala....
ம்ம்ம்..
நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு..?
வசந்த்,
வீட்டுல யாரு சாமி. எவ்வளவு நேரந்தான் இப்பிடியே
//ஏமாளி,ஏமாந்துகொண்டே இருப்பவன்..// இருக்கிறது
என்னான்னு சொல்லிட்டுப் போயிட்டா ... தெரிஞ்சிகிட்டு போயி நிம்மதியா எம்புள்ள குட்டியளோட தூங்குவனே.
எப்படி இப்படியெல்லாம் வசந்த்..
நல்லாருக்கு வசந்த்.
விளக்கம் கொடுத்திருப்பீர்கள் என நினைத்தேன்.காத்திருக்கிறோம் நண்பா.
அவமானம் என்று தலைப்பு இருக்கே.... யாருக்கு ?
படிக்கிறவங்களுக்கா?? எழுதுனவங்களுக்கா??
வசந்த் எனக்கு மெயில் பண்ண முடியுமா shafiullah76@gmail.com அல்லது உங்கள் mail id கொடுங்கள்
ச்சீ அவமானம்.
ஒன்னுமே புரியல.
உன் குசும்புக்கு அளவே இல்லாம போச்சி. இப்போதான் படத்த பார்த்தேன். அங்க மறைவா உக்காந்து க்ளூ குடுத்து கூட ஒருத்தருக்கும் தெரியலன்னு சிரிக்கிறியா? அவ்வ்வ்
ரொம்ப லேட்டா வந்துட்டனோ ... அதனால ஆஜர் மட்டும் சொல்லிக்கிறேன் நண்பா !!
அட போங்கப்பா !
நான் ஏற்கனவே "மொரட்டு கட்டிங்" போட்ட லெவல்ல தான் இருக்கேன் !
மிக்க மகிழ்ச்சி நண்ப
சிவாலய நந்தியை பற்றி எழுதி என்னை பரவசப்படுத்தி உள்ளீர்கள்
பிரமிக்கிறேன் வசந்த்..
வசந்த்,இன்னும் பதில் சொல்லலியா ?சொல்லுங்கப்பா.
சேர்க்கை சரியில்லை. வேறென்ன சொல்ல... :))
என்னங்கப்பா இதப்போயி புரியலைன்னு சொல்லிட்டீங்க
என்னாலயும் இதுமாதிரி எழுதமுடியும்
என்ன பிரயோஜனம் பலரோட வயித்தெரிச்சல் வாங்கிகட்டிக்கிட்டதுதான் மிச்சம் இனிமேல் இதுமாதிரி எழுத மாட்டேன்
மன்னிக்கவும் நண்பர்களே
இங்கு கூறியிருப்பது கோவிலில் வைக்கப்பட்டிருக்கும் உண்டியலைப்பற்றித்தான்...
//தங்க கோபுரவாசலில்
வலுவாய் இருந்தும்...
திண்டாய் கல்லில் கிடைத்தவனின்
ஆளுமைக்குட்ப்பட்டு வாசலில் அநாதையாய்...//
கோவிலின் வாசலில் கல்லில் செதுக்கப்பட்ட இறைவனின் ஆளுமையின் கீழ் உடன் யாருமின்றி தனியாய்
//சிக்கியும் சிக்காமல் போகிறவனும்
ஊருக்கு ஒரு வேடமிட்டவனும்
ஒன்றுக்கும் ஒன்பதுக்கும் அடங்கியவனுக்கு
சிறைச்சாலையாய்...//
சிலருக்கு கிடைக்கும் சிலருக்கு கிடைக்காமலிருக்கும்
ஊருக்கு ஒரு பெயரில் வடிவிலிருக்கும் பணத்திற்க்கு சிறைச்சாலையாய்
//கயமைக்கு பல முறை அடிபணிந்து
சல சல வென்று சில பல முறை மணியடித்து
விழுந்து கிடக்க வாயிலிருக்க//
திருட்டுக்கு பல முறை ஆட்பட்டு
சில்லரை விழும் பொழுது கேட்க்கப்படும் சல சலவென்ற சத்தம்
சில்லரை காசுகள் விழுந்து கிடக்க சிறிய துவாரம்
//திங்களொருமுறை கூட்டியும் பெருக்கியும்
படைத்தழித்து காத்து
தூணில் துரும்பில் திரிந்தாலும்
சொந்தமாய் நான் மட்டும் யாசிக்க புசிக்க//
மாதத்துக்கு ஒருமுறை திறந்து இதன் உள்ளிருக்கும் பணம் எண்ணப்டுவது
படைத்தல்,காத்தல்,அழித்தல் புரிந்தாலும் இறைவன் யாசிக்கிறான் என்பது...
//கறுப்பு வெளுக்க
உ லோகமால்
ஈகைக்காய் சிறைவைத்த
ஈயென்று சிரித்தவனுக்கு
அடிமையாய் நான்//
கறுப்பு பணம் வெள்ளையாக
மாறுகிறது
இரும்பால் செய்யப்பட்ட
தானம் செய்ய பயன் படும்
புன்னகை புரிந்தவாறே இருக்கும்
இறைவனின் அடிமை
அம்புட்டுத்தான் இதுக்கு போயி...யோசிச்சுக்கிட்டு...
நன்றி பாலா
நன்றி பிரியா
நன்றி ராஜாண்ணே
நன்றி ஸ்ரீராம்
நன்றி விசா :)
நன்றி கணேஷ்
நன்றி யோகா(நஹி)
நன்றி வேல்ஜி
நன்றி ஹேமா
நன்றி கதிர்
நன்றி ஜெட்லி
நன்றி அமுதா
நன்றி நர்சிம் அண்ணா
நன்றி கருணாகரசு
நன்றி பின்னோக்கி
நன்றிஅமித்து அம்மா
நன்றி பாலாஜி
நன்றி சுசி
நன்றி ரசிகை
நன்றி உழவன்
நன்றி கார்த்திகேயபாண்டியன்
நன்றி சத்ரியன்
நன்றி மேனகா
நன்றி விக்னேஷ்வரி
நன்றி சபி (மெயில் பண்ணிட்டேன்)
நன்றி பெஸ்கி
நன்றி ஜெனோவா
நன்றி ராஜன்
நன்றி நேசமித்ரன் (அவ்வ்வ்வ்வ்)
நன்றி ஜெரி(அவ்வ்வ்வ்வ்)
நன்றி துபாய் ராஜா
நீ மாட்ன, சட்னிதாண்டியே. திமிர பாரு. இம்புட்டு பேர பைத்தியமாக்கிட்டேன்னு லிஸ்ட் போடுறாரு.=))
நல்லதாப் போச்சு நான் லேட்ட வந்தது, இல்லாட்டி....
நல்லாருக்கு வசந்த்
இந்த உண்டியல் எப்படி என் கண்ணில் படாமல் போச்சு! வசந்த் வித்தியாசமான சிந்தனை. நல்லா இருக்கு நண்பா.
கொஞ்ச நாளா வசந்தைக் காணவில்லை!கண்டு பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ஒரு பின்னூட்டம் இலவசம்!
Post a Comment