ஒஹோ ஹோ ஆஹா தாலே லா தலல்லே லா
ஒஹோ ஹோ ஆஹா தாலே லா தலல்லே லா
மிகாய் ஜகய்யா ஜோன்னாரே வா
மிகாய் ஜகய்யா ஜோன்னாரே வா
(பாட்டுக்கு முன்னாடி எதுனாலும் வரி போட்டா அதையும் சேர்த்துதானே படிக்கிறீங்க அது மாதிரிதான் இதுவும்)
இனி கவிதைக்கு போகலாம் ஜூட்....
நீ சிணுங்க நான் அணைக்க
நான் அணைக்க நீ சிணுங்க
உன் சிணுங்கல்
சில நேரம் சங்கீதமாய்
சில நேரம் பாடலாய்
எந்நேரமும் ரீங்காராமாய் காதோரம்..
சத்தமில்லாமல்
என் காதோடு பேசிப்போகிறாய்
உன் பேச்சு கேட்க ஆளிருந்தும்
என் பேச்சை கேட்க நீ மட்டும்
கோபுரத்தில் வாழும் நீ
தெருவில் இருக்கும் என்னோடும்
சேர்ந்து உலாவுவதில்
கர்வமெனக்கு
பின் இருக்காதா ஒரு
சுயம்வரம் நடத்தியன்றோ
உன்னை கைப்பிடித்தேன்..
என் கையசைவிற்க்கு காத்திருக்கும்
உன் மௌனம்...
காற்றுக்கும் அடங்காத நீ
என் சிறு கட்டளைக்கு அடங்கிவிடுகிறாய்
தபால் காரனும் முகவரியற்றுப்போனான்
உன் வரவால்...
உள்பெட்டி நிரம்பி வழிவது
தெரியாமல் வெளிப்பெட்டியில் நான்
உனக்கென்றொரு
திசையில்லாமல்
என்னோடு என் திசையில்
பயணிக்கிறாய்..
என்
கையையும் பேச வைத்து
கை பேசியானாய்(லொள்)
37 comments:
வசந்து....எப்பிடிப்பா இப்பிடியெல்லாம்.கவிதை...கவிதை.கவிதையை விட முன் வரிகளோடு சிரித்துக் களைச்சுப் போனேன்.
அதுசரி,சரியாத் தூங்குவிங்களா இல்லையா !
hema உங்க பேச்சு கா...
//மிகாய் ஜகய்யா ஜோன்னாரே வா//
இது என்னாது புதுசாருக்கு. எந்த ஊரு பாசை :)
ஸ்ஸ்ஸப்பா முடியல..
லொள்றியா உன்ன சாவடிப்பேன்:))
ஒஹோ ஹோ
//ஒஹோ ஹோ ஆஹா தாலே லா தலல்லே லா
ஒஹோ ஹோ ஆஹா தாலே லா தலல்லே லா//
அற்புதம் அழகான வரிகள் வாழ்த்துகள் நண்பா
காதல் கதை(கவிதை) நல்லாயிருக்கு நண்பரே
முதல் சில வரிகளில் தமிழ் விளையாடுகிறது. இதென்ன Email, SMS பற்றியா?
கவிதைக்கு முன்னாடி போட்ட 'கோரஸ்' சூப்பர்!
//என்
கையையும் பேச வைத்து
கை பேசியானாய்(லொள்)
//
நல்லருக்கு வசந்த்...
கைபேசுதல் காதலோடுதானே...?
பிரபாகர்.
vasanth enna aachu???
ore kaathal kavithaya kotringa.....sari illaye
நீ சிணுங்க நான் அணைக்க
நான் அணைக்க நீ சிணுங்க//
இந்த மேட்டரெல்லாம்
ஓகே மெஸெஜ் எப்ப
டெலிவரியாகுமாம்!!
ட்ரிங்க் ட்ரிங்க்
ஹலோ துபாயா....
//ஒஹோ ஹோ ஆஹா தாலே லா தலல்லே லா
ஒஹோ ஹோ ஆஹா தாலே லா தலல்லே லா
மிகாய் ஜகய்யா ஜோன்னாரே வா
மிகாய் ஜகய்யா ஜோன்னாரே வா//
என்ன ஒரு வார்த்தை நயம், மிக அர்த்தமுள்ள கவிநயமிக்க வரிகள். சான்சே இல்ல வசந்த்.
ஷப்பா ஓவரா கன்னக் கட்டுதே...நல்லா இருக்கு வசந்த்...
அடடா எங்களுக்குள்ளே இப்படி ஒரு கவிஞனா. வாழ்த்துக்கள் வசந்த்.
ரொம்ப நல்ல இருந்திச்சு வசந்த். முதல் வரிகள படிச்சப்ப ஏதோ லவ் போயம்ன்னு நெனச்சேன். கடைசியிலே காப்பாத்திட்டீங்க
அடா அடா அடா !
கவித! கவித !
கவிதை பிரம்மாதம். பெண்ணாக நினைக்க வைத்து முடிவில் கைப்பேசியைத் தான் சொன்னேன் என்று முடிச்சிருக்கீங்க....நல்லா இருக்கு...
இதே மாதிரி பெண்ணாக நினைக்க வைத்து, சிகரெட்டாக முடித்த கவிதைகளும் படிச்சிருக்கென்.. : )
தபால் காரனும் முகவரியற்றுப்போனான்
உன் வரவால்...
சரியாச் சொன்னீங்க வசந்த்
கவிதையா பாடலா வசந்த் (லொள்ளை ரசித்தேன்),
போட்டோல நடிகர் ஸ்ரீகாந்த் போல இருக்கப்பா.
என்னவோ நினைச்சிட்டு வந்தா கடைசில என்ன இது ட்விஸ்ட்? கிர்ர்ர்
நான் கூட முதலில்
தப்பாக நினைத்து விட்டேன்...
வஸந்த் நீயுமா??கலக்கல்
ம்ம்ம்ம்ம்... நல்லா சிக்னல் கிடைக்குது... பேசறது கேக்குதுங்க
//தபால் காரனும் முகவரியற்றுப்போனான்
உன் வரவால்...
உள்பெட்டி நிரம்பி வழிவது
தெரியாமல் வெளிப்பெட்டியில் நான்//
இது டாப் மோஸ்ட்......காதல் வரிகளில் வழியுது!!
லல்லல்லா...டட்டட்டா...
பப்பப்பா...தனனன்னா...
லல்லல்லா...டட்டட்டா...
பப்பப்பா...தனனன்னா...
லல்லல்லா...டட்டட்டா...
பப்பப்பா...தனனன்னா...
அடுத்த வரி வரமாட்டேங்குது.
//சத்தமில்லாமல்
என் காதோடு பேசிப்போகிறாய்
உன் பேச்சு கேட்க ஆளிருந்தும்
என் பேச்சை கேட்க நீ மட்டும்//
கவிதையில் ரசித்தேன். அழகான வரிகள்...
வவ் வவ் வவ்...
கிர்..................
grrr...............
என்னதான் நீங்க செல் ஃபோன்னு கடைசீல சொன்னாலும்... ம்ம்ம்....
அழகான கவிதை வசந்த்.
விஜயாட்டம் ஃ போட்டோ போட்டதுமே நினைச்சேன்...
இப்போ கன்ஃபர்ம் !!!
//மிகாய் ஜகய்யா ஜோன்னாரே//
இதுக்கு ஜப்பானிய மொழியில் மிளகாய் ஜாங்கிரி ஜோரா இருக்குன்னு அர்த்தமாமே!
ஒரு பக்கக் கதைகளில் முடிவில் ஏமாத்துவோம், அதை மாதிரி இங்கே கவிதையில் ஏமாத்திட்டீங்க! ம்..ம்..ஜமாயுங்க!
ரேகா ராகவன்
//ஒஹோ ஹோ ஆஹா தாலே லா தலல்லே லா...///
வசந்த்,
தலைப்பே தலையப் பிச்சிக்க சொல்லுது.
கைத்தொலைப்பேசியில இப்பிடி சூடாகுற வரைக்கும் பேசிட்டு ...ஐஸ் வக்க ஒரு இடுகைய போட்டுட்டா எல்லாம் சரியாயிடுமா...?
புதுசுபுதுசா கிளப்புறயேப்பா. எல்லாம் அந்த அருவியில இருந்தாக் கொட்டுது.?
ரசிச்சேன் சாமி.
(இந்த தலைப்புகளக் கொஞ்சம் கடன் குடுக்கறியாப்பா?)
வசந்த்.. கலக்கல்.. :)
உணமையிலேயே சூப்பரா இருக்கு
ஒரு புதிய வரவு...ஒரு பழமையை (கடிதம்) அழிக்கிறது... கவிதை நல்லாயிருக்குங்க.
இன்னும் சிரிச்சிட்டு இருக்கேன்,உங்கள் ஆரம்பவரிகளை நினைத்து,குட்!
நன்றி ஹேமா :( (4ஹவர் தூக்கம் மட்டும்)
நன்றி சின்ன அம்மிணி :)
நன்றி பிரியா
நன்ற் பாலா நைனா
நன்றி ஞானம்
நன்றி பழமை ஐயா
நன்றி ஸ்ரீராம்
நன்றி வேல்ஜி
நன்றி பிரபாண்ணா
நன்றி கிருத்திகா
நன்றி சங்கர்(இல்லை கத்தார்)
நன்றி யோகா
நன்றி புலிகேசி
நன்றி சந்ரு
நன்றி விசா
நன்றி ராஜன்ரத்னமாலன்
நன்றி கபிலன்
நன்றி நவாஸ்
நன்றி அசோக் ( ஹிஹிஹி)
நன்றி விக்னேஷ்வரி
நன்றி ஜெட்லி
நன்றி கதிர் அண்ணே
நன்றி சஃபி
நன்றி செல்வகுமார்
நன்றி பாலாசி
நன்றி சுசி
நன்றி ராகவன்
நன்றி சத்ரியன் (அஸ்கு புஸ்கு)
நன்றி செந்தில் அண்ணா
நன்றி கருணாகரசு
நன்றி தாமரை மேடம்(நலமா?)
நன்றி ராஜேஸ்வரி
நன்றி ஸ்டார்ஜன்
நன்றி...
மெசேஜ் கவிதை சூப்பர் ...அதவிட மெசேஜ் டோன் சுபெரோ....சூப்பர்...
Post a Comment