November 7, 2009

ஹலோ..(சண்டே எண்டெர்டெயின்மெண்ட்)

குமரன்:ட்ரிங்..ட்ரிங்..ட்ரிங்..

நாராயணன்:ஹலோ என்னா மாப்ள?எப்பிடியிருக்க?என்ன திடீர்ன்னு கால் எல்லாம் பண்ற அதிசியமா இருக்கு..

குமரன் : மாம்ஸ் எப்படியிருக்கீங்க நான் நல்லாயிருக்கேன்..திடீர்ன்னு உங்க ஞாபகம் வந்துச்சு அதான் கூப்ட்டேன்..

நாராயணன் : அப்பறம் வீட்ல மனைவிமார் குழந்தைகள் எல்லாம் எப்பிடியிருக்காங்க?

குமரன் : எல்லாம் நல்லாயிருக்காங்க மாம்ஸ் நாந்தான்..

நாராயணன் : என்னா மாப்பு நீதான்னு இழுக்குற..

குமரன் : இல்லை மாம்ஸ் அம்மா அப்பா நினைவாவே இருக்கு பாத்து ரொம்ப நாளாச்சு நாந்தான் சின்னவன் அவங்களைப்போயி பாக்கணும்ன்னு நினைக்கலை . அவங்க பெரியவங்கதானே என்னை வந்து பாக்கணும்ன்னு நினைக்கலை பாத்தீங்களா?

நாராயணன் : நீதான அவங்களோட சண்ட போட்டுட்டு போன நீதானே போய் பெரியவங்களை பார்க்கணும்..

குமரன் : அதுவுஞ்சரிதான்..இந்த கொஞ்ச நாள்ல என்னை பத்தி எதுவும் கேட்டாங்களா மாம்ஸ்..

நாராயணன் : ம்ம் கேப்பாங்க நீ என்ன பண்ற இப்போ எங்க இருக்கன்னும், உன்னோட குழந்தைகளைப்பத்தியும் விசாரிப்பாங்க..நீ பேசுறது சரியாவே கேக்கலை சிக்னல் நல்லா கிடைக்குதா?

குமரன் : என்ன மாம்ஸ் இப்பிடி சொல்லிட்டீங்க இந்த செல் போன் டவரே நான் இருக்குற இடத்துக்கு பக்கத்துல தான் இருக்கு பின்ன எப்பிடி கேக்காம போகும்..

நாராயணன் : இப்ப சரியா கேக்குது மாப்ள..அது சரி இப்ப நான் என்ன பண்ணனும்?

குமரன் : எனக்கு அப்பாவையும் அம்மாவையும் பாக்கணும் போல இருக்கு இப்ப நான் அவங்கள பாக்க வரலாமான்னு போன் பண்ணி கேட்டு சொல்றீங்களா?

நாராயணன் : சரிடா மாப்ள..கேட்டுட்டு உனக்கு போன் பண்றேன்..வச்சுடுறேன்..

குமரன் : மாத்தி எதுவும் சொல்லி திரும்பவும் பிரச்சனைய கிளப்பிடாத மாம்ஸ் சரியா உன்னோட கால்க்கு வெயிட் பண்ணிட்டு இருப்பேன்..

நாராயணன் : ஹ ஹ ஹா சரிடா..

நாரயணன் : ட்ரிங்..ட்ரிங்..ட்ரிங்..

பரமன் : ஹல்லோ..

நாராயணன் : ஹலோ மச்சான் நான் தான் நாராயணன் பேசுறேன்..

பரமன் : சொல்லு மச்சான் எப்படியிருக்க?

நாராயணன் : நான் நல்லாயிருக்கேன் மச்சான் அக்கா எப்படியிருக்கா?

பரமன் : அவளுக்கென்ன என் பாதி உசிரை எடுத்துட்டு நல்லாத்தான் கெளுத்தியாட்டமிருக்கா

நாராயணன் : மச்சான் இருந்தாலும் உன்னோட ஆட்டம் அடங்கமாட்டேன்னுது பாத்தியா?

பரமன் : உண்மையத்தன சொன்னேன்..அது சரி எதும் விஷயமில்லாம போன் பண்ண மாட்டியே இப்ப என்ன விஷயம் சொல்லு..

நாராயணன் : குமரன் போன் பண்ணுனான் மச்சான் அதான் உம்மவன்..உன்னையும் அக்காவையும் பாக்கணும் போல இருக்காம்..

பரமன் : அவந்தான் ரோஷக்காரனச்சே இப்ப என்னவாம் துரைக்கு பாசம்?

நாராயணன் : என்ன மச்சான் அவந்தான் சின்னப்பையன் நீங்களாவது விட்டுக்குடுத்து போகக்கூடாதா?

பரமன் : ம்ம் எதுக்கும் பெரியவன் கணேஷ கேட்டுட்டு சொல்றேன்...

நாராயணன் : இப்போ அவன் எங்க இருக்கான் ?

பரமன் : அவன் எங்கயாச்சும் எதுனாலும் மரத்தை ஆராய்ச்சி பண்றேன்னுட்டு ஊரெல்லாம் சுத்திட்டு இருப்பான்..

நாராயணன் : சரி மச்சான் கேட்டுட்டு எனக்கு போன் பண்ணு உம்மவன் வெயிட் பண்ணிட்டு இருக்கான்...

பரமன் : ட்ரிங்..ட்ரிங்..ட்ரிங்..

கணேஷ் : ஹலோ என்னப்பா இந்நேரத்துல கூப்டுற சாப்பாடுரெடியா?

பரமன் : தின்னிப்பயலே தின்றதுலயே இரு இப்பிடி தின்னு தின்னுதான் பானை மாதிரி வயித்த வச்சுட்டு திரியுற...

கணேஷ் : சீ போப்பா உனக்கு எப்பவுமே கிண்டல்தான்.. என்ன விஷயம்ன்னு சொல்லு?

பரமன் : எலேய் உன் தொம்பி நம்மளைப்பாக்கணுமாம் வரச்சொல்லவா?

கணேஷ் : என்னப்பா எங்கிட்ட போயி கேட்டுட்டு வரச்சொல்லுங்க..

பரமன் : என்னடா உனக்கு கோபமில்லியா?

கணேஷ் : ஏன் அவன் தான சண்டை போட்டுட்டு போனான் நானா சண்டை போட்டேன்..?

பரமன் : அதுசரி..சரிடா அப்ப அவன நாளைக்கு வரச்சொல்றேன் ஊர் ஊரா சுத்தாம நாளைக்காச்சும் வீட்ல இருடா..பின்ன திரும்பவும் சண்டை போட்டுட்டு போயிடப்போறான்..

கணேஷ் : சரி சரி..

பரமன் : ட்ரிங்...ட்ரிங்..

நாராயணன் : என்ன மச்சான் மூத்தவன்ட்ட பேசுனியா ?

பரமன் : பேசுனேன் நாளைக்கு வரச்சொல்லு மச்சான் அவன..வரும்போது பேரப்புள்ளைகளையும் கூட்டிட்டு வரச்சொல்லு..

நாராயணன் : சரி சரி தாத்தா பாசம் பொங்கி வழியுது போல வச்சுடுறேன்..

நாராயணன் : ட்ரிங் ட்ரிங்..

குமரன் : என்ன மாம்ஸ் என்ன சொன்னாரு அப்ஸ்?

நாராயணன் : ம்ம் எல்லாம் நல்ல விஷயம்தான் நாளைக்கு உன்னை வரச்சொன்னாரு க்குடவே புள்ளைகளையும் கூட்டிட்டு போ மாப்ள..

குமரன் : ரொம்ப சந்தோசம் மாம்ஸ் மாம்ஸ்னா அது நீதான் சண்டை போட்ட குடும்பத்தையும் ஒண்ணா சேத்து வச்சுட்டியே தாங்ஸ் மாம்ஸ்..நாளைக்கு அந்தப்பக்கம் நீ வந்துடாத..வந்தா கொன்ன்னே போடுவேன்...

நாராயணன் : ஹ ஹ ஹா....

(குமரன்=முருகன்,நாராயணன்=நாராயணன்,பரமன்=பரமசிவன்.கணேஷ்=விநாயகன்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க)

33 comments:

கலகலப்ரியா said...

//(குமரன்=முருகன்,நாராயணன்=நாராயணன்,பரமன்=பரமசிவன்.விக்னேஷ்=விநாயகன்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க)//

இது ஆரம்பத்லயே தெரிஞ்சிடுத்து அப்பு... இந்த வாட்டி சஸ்பென்ஸ் சரியா வரலை.. ஆனாலும் பேரப்புள்ளைக மேட்டரு நல்லாத்தான் கீது.. ஹிஹி...

ஆ.ஞானசேகரன் said...

கொஞ்சம் சுவாரிசம்.... ஓகே பரவாயில்லை

Anonymous said...

நல்லாத்தான் இருக்குது கற்பனை.

ஹேமா said...

வசந்து...நல்லாத்தானிருக்கு.புதுசா ஒரு முயற்சி.ஆனாலும் உங்க பதிவில என்னமோ ஒண்ணு குறையிற ஒரு உணர்வு.நகைச்சுவை இல்லாவிட்டாலும் விறுவிறுப்பைக் காணோமே.என்ன சோர்வு ?

சீமான்கனி said...

(குமரன்=முருகன்,நாராயணன்=நாராயணன்,பரமன்=பரமசிவன்.கணேஷ்=விநாயகன்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க)

நம்ப மாட்டோம்...
நல்ல இருக்கு வசந்த் நகைச்சுவை கம்மி...

பிரபாகர் said...

//அவளுக்கென்ன என் பாதி உசிரை எடுத்துட்டு நல்லாத்தான் கெளுத்தியாட்டமிருக்கா
//
இந்த இடத்துல புடிச்சிட்டேன், தம்பி என்ன சொல்ல வர்றீங்கன்னு. கடைசியில பாத்துட்டு அப்புறம்தான் தொடர்ந்தேன். அழுகுணி ஆட்டம்?... ஹி...ஹி...

மத்தபடி சகோதரி ப்ரியா சொல்றதுதான் நம்ம கருத்தும்.

பிரபாகர்.

தேவன் மாயம் said...

(குமரன்=முருகன்,நாராயணன்=நாராயணன்,பரமன்=பரமசிவன்.கணேஷ்=விநாயகன்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க)
///


அட!! நம்ம மண்டைக்கு இப்போதான் புரியுது!!

ஜெட்லி... said...

சிவா... சிவா... நல்லா இருக்கு முருகா ஸாரி வஸந்த்

Admin said...

நல்லாருக்கு வசந்த்.... ஆனால் உங்க பதிவுல ஏதோ ஒன்று குறையிற மாதிரித்தான் தெரியுது.

kishore said...

மனைவி மாருங்கனு வரும் போதே டவுட் ஆனேன்.. ஓகே.

சிங்கக்குட்டி said...

நல்ல முயற்சி வாழ்த்துக்கள் :-)

சந்தனமுல்லை said...

நல்ல கற்பனை! :))

நாஸியா said...

(குமரன்=முருகன்,நாராயணன்=நாராயணன்,பரமன்=பரமசிவன்.கணேஷ்=விநாயகன்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க)

ஹிஹி... எனக்கு நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் புரிஞ்சுதுப்பா.

கலையரசன் said...

ஃபுல் பார்ம்ல இருக்கியேப்பா...

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல கற்பனை நண்பா.. நிறைய விஷயங்களை புதுசா யோசிச்சு பண்றீங்க.. அதுக்கே ஒரு கைகுலுக்கல்.. கலக்குங்க

தேவன் said...

ஆமா பேரப்புள்ளங்க யாரு ??

SUFFIX said...

மச்சான், மாப்ஸ்....ஹா ஹா இங்கேயுமா!!

vasu balaji said...

முருயன் மேல உனக்கென்னா கோவம் வசந்து. ரெண்டு பொண்டாட்டிக்காரன் மொத்து படணுமோ?=))

Prathap Kumar S. said...

ஹஹஹஹஹ. தல திருவிளையாடல்ல கூட ரீமிக்ஸா...நல்ல சுவாரஸ்யம்...கலக்கல்.

S.A. நவாஸுதீன் said...

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் ரீமிக்ஸ் கேட்டமாதிரி இருக்கு வசந்த்

Ashok D said...

ஹிஹி நமக்கும் கட்ச்சிலதான் புரிஞ்சுது

அன்புடன் அருணா said...

அடடே ...எனக்கு சஸ்பென்ஸ் கடைசி வரைக்கும் இருந்துச்சிப்பா!!!

பா.ராஜாராம் said...

வாவ்!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

இது என்ன புதுக் கதை. பேரப் பிள்ளை எல்லாம் இருக்கா?

Menaga Sathia said...

நல்ல இருக்கு வசந்த்

ரோஸ்விக் said...

ங்கொக்கா மக்கா...கலக்குங்க ராசா...உங்க ட்ரிங்...ட்ரிங்...நல்லாத்தான் இருக்கு.

சுசி said...

அடப்பாவி.... நான் நெனச்சே பாக்கல...

சூப்பர் வசந்த்...

பின்னோக்கி said...

அட வழக்கம் போல ஏமாந்துட்டேன். நல்ல ஐடியா எழுத்து. வாழ்த்துக்கள்

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி ப்ரியா ( பின்னாடி கவனிச்சீங்களா?)

நன்றி ஞானம்

நன்றி சின்ன அம்மிணி

நன்றி ஹேமா மேடம்

நன்றி சீமாங்கனி

நன்றி பிரபாண்ணே (பொறாமையா இருக்கு ஹ ஹ ஹா)

நன்றி தேவா சார்

நன்றி ஜெட்லி சரவணன்`

நன்றி கிஷோர்

நன்றி சிங்க குட்டி

நன்றி சந்தனமுல்லை

நன்றி நாஸியா

நன்றி கலையரசன் (என்னால என்னையே நம்ப முடியல மாப்பி)

நன்றி கார்த்தி

நன்றி சஃபி

நன்றி நைனா

நன்றி பிரதாப்

நன்றி நவாஸ்

நன்றி அஷோக்

நன்றி அருணா மேடம்`

நன்றி பா,ரா.

நன்றி ஜெஸ்வந்தி

நன்றி மேனகா மேடம்

நன்றி ரோஸ்விக்

நன்றி சுசி( யக்கா சும்மா தானே சொல்ற)

நன்றி பின்னோக்கி...

Kasu Sobhana said...

சற்றேறக் குறைய இருபத்தைந்து சதவிகிதம் படித்தவுடனேயே - என்னன்னு எனக்கு வெளங்கிடிச்சு. நல்ல கற்பனை. பேரப் பசங்க யாருன்னுதான் இன்னும் புரியல.

துபாய் ராஜா said...

வித்தியாசமான கற்பனை. அருமை வசந்த்.... :))

angel said...

ithula nan oru kuti change pandren ok

குமரன்=eluthar vasanth
நாராயணன்=kavingar vasanth
பரமன்=ordinary vasanth


nice isn't it
just for fun
don't be tensed

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி ராஜா

நன்றி ஏஞ்சல் (ரொம்ப டேமேஜ் ஆக்கிட்டீங்க அவ்வ்வ்வ்வ்வ்?