November 24, 2009

வேஷம் போடாதே...



இண்டெர்வியூ போக ஒரு உடை,பள்ளிக்கு போக ஒரு உடை,கல்யாணத்திற்க்கு போக ஒரு உடை,விருந்து உபச்சாரத்துக்கு போக ஒரு உடை என ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தனித்தனியா உடையணிந்து செல்வது போல ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு முகம் (உ.தா) சிரிப்பு,அழுகை,சந்தோசம்,வியப்பு,கோபம்,அதிர்ச்சி,என ஒவ்வொரு பிரதிபலிப்புக்கும் இயற்க்கையான முகபாவங்கள் வராதோருக்காக அந்தந்தமுகம் மட்டும் மாற்றிக்கொள்ளும் வசதியாவது கொடுக்கவேண்டும் கடவுளே...

ஒரு சிலர் எவ்வளவு காமெடி பண்ணுனாலும் சிரிக்க மாட்டேன்றாங்க,ஒரு சிலருக்கு அவரவர் உற்றார் உறவினர் இறந்தாலும் அழுகை வருவதில்லை,ஒருசிலர் சோகமான நிகழ்ச்சிக்கும் சிரித்து தொலைகின்றனர்,கடவுளே அவர்களுக்காகவாவது இது மாதிரியான முகமாற்றி வசதி செய்து கொடு...அப்படியாச்சும் திருந்துவாய்ங்களா?

ஏன் இவ்வாறு நிகழ்கிறது அல்லது செயற்கையாக இருக்கவேண்டாமென்று எப்பொழுதும் இருந்துவிடுகிறார்களா? ஏனென்றால் நாம் ஒருவரை பார்த்து சிரித்தால் சும்மா சின்னதா பொய் புன்னகை உதிர்க்கும் பொழுது எனக்கென்னவோ பழிப்பு சொல்வதுபோல்தான் இருக்கிறது அதுக்கு பேசாம சிரிக்காமலே போயிருக்கலாம் என்றே தோணுகிறது..

ஏன் இப்படி இப்படித்தான் இருக்க வேண்டுமா இதுதான் நாகரிகமென்று சொன்னால் தேவையில்லையெனக்கு அந்த பாழாய்ப்போன நாகரீகம்....
இயற்கையா உள்மனத்திலிருந்து சந்தோசத்தையும் மகிழ்ச்சியையும்,அழுகையும்,பகிர்ந்து கொள்ளும் நபர்கள் நண்பர்களாகவோ உறவுகளாகவோ அமையவேண்டுமடா கடவுளே..

பொய் பாராட்டுகளும்,எதையோ எதிர்பார்த்து சொல்லும் பாராட்டி பேசும் மனிதர்களை காணும்போது வயிறு எரிகிறது...

உள்மனசில இருந்து வெளியில் வரும் பெரிய கோபமா வெளிப்படுத்தும் எவரும் எனக்கு ரொம்ப பிடித்து போகிறது மேலும் அவருடன் பிணைப்புத்தான் ஏற்படுகிறதே ஒழிய கோபம் வருவதில்லை...

இப்படி வெளிப்படையா பேசி சிரித்து செல்லும் எவரையும் மிகவும் பிடித்துப்போகிறது...

பொறாமை எனும் பேய் பிடித்து என்னுடைய செயல்கள் நன்றாக இருந்தாலும் அதை ,கிண்டல் பண்ணுபவர்களையும்,பத்து பேரிடம் குறை சொல்லிக்காட்டும் மனிதர்களை காணும் போது அப்படியே கடித்து குதற வேண்டும்போல்
இருக்கிறது....

நான் ஏன் இப்படி இருக்கேன்னு தெரியலைங்க...

இப்போ கூட இந்த இடுகை நல்லாருக்குன்னா நல்லாருக்குன்னு சொல்லுங்க நல்லாயில்லைன்னா நல்லாயில்லைன்னு சொல்லிடுங்க நான் அதத்தான் எதிர் பார்க்கிறேன்..நியாயமான விமர்சனங்கள் என்னை மேலும் செம்மை படுத்தும் சிற்பி உளியால செதுக்கும் போது சிலையானது அந்த வுளியால அடி வாங்கின பிறகுதானே அழகாய் கிடைக்குது கடைசியில...

44 comments:

பா.ராஜாராம் said...

//சிற்பி உளியால செதுக்கும் போது சிலையானது அந்த வுளியால அடி வாங்கின பிறகுதானே அழகாய் கிடைக்குது கடைசியில...//

அவ்வளவே..போய் கொண்டிருங்கள் சகோதரா..

vasu balaji said...

/உள்மனசில இருந்து வெளியில் வரும் பெரிய கோபமா வெளிப்படுத்தும் எவரும் எனக்கு ரொம்ப பிடித்து போகிறது மேலும் அவருடன் பிணைப்புத்தான் ஏற்படுகிறதே ஒழிய கோபம் வருவதில்லை.../

/பொறாமை எனும் பேய் பிடித்து என்னுடைய செயல்கள் நன்றாக இருந்தாலும் அதை ,கிண்டல் பண்ணுபவர்களையும்,பத்து பேரிடம் குறை சொல்லிக்காட்டும் மனிதர்களை காணும் போது அப்படியே கடித்து குதற வேண்டும்போல்
இருக்கிறது..../

ஹேய் வசந்த். நீ தானா போன இடுகைல ஸ்டார் ஆவணும்னு ஏங்கி காமெடி பீசுன்னு சொல்லிகிட்டது? இந்த எழுத்தை விடவா?

/நான் ஏன் இப்படி இருக்கேன்னு தெரியலைங்க.../

மனுசனா இருக்க. நீ சொன்ன முகமூடி இல்லாத தேவையில்லாத மனுசனா இருக்க. இப்புடியே இரு.

என்ன அழகா சொல்றய்யா? மனசார நேர்ல இருந்தா கட்டி பிடிச்சி இப்படித்தான் சொல்லி இருப்பேன்.

கலகலப்ரியா said...

//ஒரு சிலர் எவ்வளவு காமெடி பண்ணுனாலும் சிரிக்க மாட்டேன்றாங்க//

சீரியஸ் டைம்ல காமெடி பண்ற உன்னிய சொல்ல மறந்துட்டியே வசந்து...

//உள்மனத்திலிருந்து//

இதாம்பா இப்போ இருக்கிற பெரிய குறைபாடு..! புடிக்கலன்னா போய்க்கிட்டே இருக்கலாம்ல..! சில பேரு தேடித் தேடி.. மொக்கை இடுகைய மட்டும் ஆகா ஓஹோன்னு சொல்லிட்டு காணாம போறாய்ங்க... மைனஸ் ஓட்டுப் போடுறவன் பரவால்ல போ..! =))..
உன்னோட பாணில நீ நல்லாத்தான் சொல்லி இருக்கா..! மத்ததெல்லாம் கடாசு அப்பனே...! மொக்கைக்கெல்லாம் உன் மூக்கில குத்தாம நாம விட மாட்டோம்டியோ..!

கடைக்குட்டி said...

என்ன திடீர்ன்னு ????

அரே ஹோ பாபாஜி..

வஸந்திடமிருந்து என்னைக் காப்பாற்று..

சாருவை நானே பார்த்துக் கொள்கிறேன். :-)

சீமான்கனி said...

என்னை பொறுத்தவரை நாம் அனைவரும் ஏதோ ஒரு முகமூடியில் தான் சிலசமையம் அழைக்கிறோம்...நல்லா இருக்கு...

இராகவன் நைஜிரியா said...

// நியாயமான விமர்சனங்கள் என்னை மேலும் செம்மை படுத்தும் சிற்பி உளியால செதுக்கும் போது சிலையானது அந்த வுளியால அடி வாங்கின பிறகுதானே அழகாய் கிடைக்குது கடைசியில..//

ரொம்ப நல்லாச் சொல்லியிருக்கீங்க வசந்த்.

உங்களைப் பார்த்தா கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கு. யூ ஆர் வர்சடைல். என்னை மாதிரி கும்மி அடிக்காம, நேரிடியா எழுதியிருக்கீங்க பாருங்க, ரியலி யூ ஆர் கிரேட்.

ஆனால், எனக்கு கும்மி பிடிச்சு இருக்கு வசந்த். சீரியஸ் எழுத்துக்கள், கவிதைகளை விட, கும்மி பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு வசந்த். நான் சரியில்லையோ?

சுசி said...

//வாழும் வரை மனைவி என் பின்னூட்டவாதி//

இது எப்போதிருந்து??? சொல்லவேல்ல....

சுசி said...

//இயற்கையா உள்மனத்திலிருந்து சந்தோசத்தையும் மகிழ்ச்சியையும், அழுகையும்,பகிர்ந்து கொள்ளும் நபர்கள் நண்பர்களாகவோ உறவுகளாகவோ அமையவேண்டுமடா கடவுளே..//

இதுதான் என் வேண்டுதலும்.

சுசி said...

சூப்......................................................................பரா எழுதி இருக்கீங்க வசந்த்.

(நானும் பலசமயம் முகமூடியோடதான் சுத்தறேன், மத்தவங்கள பாதிக்காத வகையில்)

Anonymous said...

//கடைக்குட்டி said...

என்ன திடீர்ன்னு ????

அரே ஹோ பாபாஜி..

வஸந்திடமிருந்து என்னைக் காப்பாற்று..

சாருவை நானே பார்த்துக் கொள்கிறேன். :-)
//

ரசித்தேன்

ஹேமா said...

வசந்து...எப்போருந்து "பின்னூட்டவாதி"களைக் கண்டு பிடிச்சீங்க.வர வர நல்லாவே மூளை வளருதுப்பா உங்களுக்கு.

வசந்து...வாழ்க்கைல ரொம்ப பேர் நடிப்போடதான் நகர்ந்துகிட்டு இருக்காங்க.உண்மையா உங்களைப்போல இருக்கிறவங்க எப்பிடியோ கண்டுபிடிச்சு உங்களை மாதிரியே இருக்கணும்ன்னு கடிக்கிறீங்க.கஸ்டம்தான்.

உங்க சிந்தனைகள் வளம் பெறுது.பதிவுகளின் தரம் அழகாயிருக்கு.வாழ்த்துக்கள் தோழா.

blogpaandi said...

நல்லாருக்கு :)

ஆ.ஞானசேகரன் said...

//இப்படி வெளிப்படையா பேசி சிரித்து செல்லும் எவரையும் மிகவும் பிடித்துப்போகிறது...//

சூதனமா இருங்க அப்பு,... அப்படி ஏமாந்தவனில் நானும் ஒருவன்

ஜெட்லி... said...

வஸந்த் என்னோட அடுத்த இடுகை கூட
பின்னூட்டத்தை பற்றிதான்...பார்ப்போம்...

ஆரூரன் விசுவநாதன் said...

உண்மைதான் நண்பா.....பல நேரங்களில் நம் இயல்பே நம்மை விட்டு விலகி.....நாமே வேறு யாரோவாய் தெரியும் நிலையும் இங்கே இயல்பாகி விட்டது....

ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு வசந்த். மிகவும் பிடித்திருக்கிறது, மேலே பின்னூட்டப் பெட்டி வாசகங்களும்.

VISA said...

ஏன் இந்த கொல வெறி. ஒரே தத்துவ பதிவா எழுதி தள்றேள். கண்டிப்பா அடுத்த பதிவு காமெடி பதிவு தான் எழுதணும். இல்லேன்னா நான் அழுதுடுவேன்.

VISA said...

//பிறந்ததிலிருந்து தாய் என்பின்னூட்டவாதி,வளரும்போது தந்தை என்பின்னூட்டவாதி,படிக்கும்போதுஆசிரியர் என் பின்னூட்டவாதி,வளர்ந்த பின் நண்பன் என் பின்னூட்டவாதி,வாழும் வரை மனைவி என் பின்னூட்டவாதி,எழுதும் வரை என் எழுத்துக்கு நீங்கள் பின்னூட்டவாதி...//

பின்னூட்டம் போடுற எடத்துலையும் தத்துவமா?

ஈரோடு கதிர் said...

Peoples are peoples

மனிதர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளப் பழகுவதைத் தவிர வேறு வழியில்லை

புலவன் புலிகேசி said...

தல நீங்களும் என்னை மாதிரிதானா??? நல்லது தல எந்த விசயத்தையும் வெளிப்படையா பேசுறவங்களுக்கு தொல்லைகள் வேணும்னா வரலாம் ஆனா நிச்சயம் கவலைகள் வராது...நல்லது தல

Anonymous said...

அன்புள்ள வசந்த் இந்த இடுகையில் உங்கள் உள்ளகிடக்கை அப்படியே வெளிப்படுத்தியிருக்கீங்க இதில் கருத்து சொல்ல ஒன்றுமில்லை..ஏன் இப்படி இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு நான் நினைக்கும் பதில் இது மனிதனின் இயல்பாய் இருக்கலாம் அல்லது சூழ்னிலையும் ஒரு காரணமாகலாம்...பொருளாக என்றில்லை என்றாலும் ஏதோ ஒரு எதிர்ப்பார்பில் வாழ்வது தான் மனித வாழ்வின் எதார்த்தம் என நினைக்கிறேன்..be cool vasanth..

Ashok D said...

என்னென்மோ சொல்லறீங்க... தொடரட்டும் பணி.. நடத்துங்க....வசந்த

Malini's Signature said...

/பிறந்ததிலிருந்து தாய் என்பின்னூட்டவாதி,வளரும்போது தந்தை என்பின்னூட்டவாதி,படிக்கும்போதுஆசிரியர் என் பின்னூட்டவாதி,வளர்ந்த பின் நண்பன் என் பின்னூட்டவாதி,வாழும் வரை மனைவி என் பின்னூட்டவாதி,எழுதும் வரை என் எழுத்துக்கு நீங்கள் பின்னூட்டவாதி.../

:-)

ஸ்ரீராம். said...

முன்னாடி ஊட்ட்மாப் படிச்சுட்டா பின்னூட்டம் தவிர்க்கவே முடியாது...! அது சரி பின்னூட்டம் இடுபவர்களை நீங்கள் எப்படிப் பிரிப்பீர்கள்? வகைப் படுத்துங்கள்...

ஸ்ரீராம். said...

உண்மையைச் சொல்லணும்னா பின்னூட்ட இடத்தில் நிறைய எண்ணிக்கையைப் பார்த்தால் நாமும் இதில் போட்டால் கவனிக்கப் படுமா, அல்லது எண்ணிக்கையைப் பார்த்து விட்டு அடுத்த இடுகைக்குப் போய் விடுகிறார்களா என்று தோன்றும்...

S.A. நவாஸுதீன் said...

நீங்க என்ன செஞ்சாலும் அடுத்தவங்க கருத்து எப்படி இருக்கும்னு தோனும். இது மனித இயல்பு. நமக்குள்ளே இருந்து வரும் பின்னூட்டம் நமக்கு திருப்தியா இருக்கான்னு மட்டும் பார்த்தால் போதும். ஏன்னா எல்லாரையும் திருப்திப் படுத்துறது ரொம்ப கஷ்டம். மாற்றுக்கருத்துடையவர்கள் உள்ளது போல் நம்மை ஒத்த கருத்துள்ளவர்களும் ஏராளமுண்டு வசந்த்.

விக்னேஷ்வரி said...

உள்மனதிலிருந்து ஒரு அழகான பதிவு.

சிநேகிதன் அக்பர் said...

நல்ல சிந்தனை

Starjan (ஸ்டார்ஜன்) said...

மனிதனுக்கு எப்படில்லாம் தோணுது பாத்தீங்களா ...

க.பாலாசி said...

ரொம்ப ஃபீல் பண்றீங்கண்ணு நினைக்கிறேன். கவலையே படாதீங்க...நல்லதே நடக்கும்...

Unknown said...

நெஜமாவே நல்ல இருக்குங்க...

சந்தனமுல்லை said...

நல்லாருக்கு!! :-))
இடுகையையும் பின்னூட்டங்களையும் ரசித்தேன்!

கலையரசன் said...

உண்மையை சொன்னா ஏத்துக்காது நண்பா இந்த உலகம்... அதனால, முகமுடியோடையே சுத்து!!

கலையரசன் said...

உண்மையை சொன்னா ஏத்துக்காது நண்பா இந்த உலகம்... அதனால, முகமுடியோடையே சுத்து!!

வினோத் கெளதம் said...

மச்சி மனசுல இருந்து நேரடியா வந்த பதிவு போல இருக்கு..:)

Priya said...

//உள்மனசில இருந்து வெளியில் வரும் பெரிய கோபமா வெளிப்படுத்தும் எவரும் எனக்கு ரொம்ப பிடித்து போகிறது மேலும் அவருடன் பிணைப்புத்தான் ஏற்படுகிறதே ஒழிய கோபம் வருவதில்லை...//
உண்மைதான், உள்ளதை உள்ளபடியே வெளிப்படுத்துவதால் வரும் கோபம் எனக்கும் பிடிக்கும்... நல்லதொரு பதிவு!

அன்புடன் நான் said...

மிக நல்லாவே இருக்குங்க வசந்த்.

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி பா.ரா.

நன்றி வானம்பாடிகள் பாலா சார்

(ஹ ஹ ஹா ரசித்தேன்...)

நன்றி பிரியாக்கா

(மூக்குலயே குத்திட்ட பின்ன இன்னும் என்ன? அவ்வ்வ்வ்வ்)

நன்றி கடைக்குட்டி

ரசித்தேன் தம்பி....

நன்றி சீமாங்கனி

வாஸ்தவம்தான்...

நன்றி இராகவன் நைஜீரியா

கும்மி சங்கத்தலைவர்ன்னு பேர் வாங்கிட்டீங்க இன்னும் என்ன?
நீங்க உங்க ராஜ்யத்த ஆளுங்க அண்ணா..பின்னூட்ட சூறாவளியே..

நன்றி சுசிக்கா

பார்த்துக்கா கொள்ளைக்காரின்னு போலீஸ் தூக்கிட்டு போயிடப்போறாங்க..ஹ ஹ ஹா

நன்றி சின்ன அம்மிணி

உங்க பேர் தெரிஞ்சுகிடணும்ன்னு ரொம்ப நாள் ஆசை...

நன்றி ஹேமா

உண்மையாவா?
அவ்வ்வ்..
கிடைச்சாச்சே....

நன்றி ப்லாக் பாண்டி

நன்றி ஜெட்லி

நன்றி சேகரன்

ம்ம்..சரிப்பா...

நன்றி ஆரூரன்

ம்ம் என்ன செய்ய?

நன்றி ராமலக்ஷ்மி மேடம்

மிக்க சந்தோசம்...

நன்றி விசா

எங்க போன போஸ்ட்டுக்கு ஆளக்காணோம்...

நன்றி கதிர்

ம்ம்..ஞாபகத்தில் வச்சுக்கிறேன்..

நன்றி புலவன் புலிகேசி

ஆம் நண்பா..

நன்றி தமிழரசி

வாங்க தாயி

ரொம்ப நாளா ஆளையே காணோம்..

சொல்லாம கொல்லாம? ஓடிடுறீங்க..

நன்றி அசோக் சார்

நன்றி ஸ்ரீராம்

நன்றி ஹர்ஷினி அம்மா

நன்றி நவ்வஷூதீன்

சரியான கருத்துக்கள் சகோதரா..

நன்றி விக்னேஷ்வரி

நன்றி அக்பர்

நன்றி ஸ்டார்ஜன்

நன்றி பாலாஜி

நன்றி பேநாமூடி

நன்றி சந்தனமுல்லை

நன்றி கலையரசன்

நன்றி வினோத்

நன்றி பிரியா

நன்றி கருணாகரசு

நன்றி மேனகா சத்யா

Santhini said...

சிற்பியும் தயார் ! உளியும் தயார் ! ப்ரியமான வசந்த் பாறையாக தயாரா ?
என்னிடம் உண்மையின் முகம் இருக்கிறது. பொய்களை கிழித்துபோடுவது என்னவென்று சொல்லிதர ....மனமும் இருக்கிறது. தேவையென தோன்றினால் தொடர்பு கொள்ளுங்கள்

Anonymous said...

வசந்து யார் உன்னை அழ வைக்கவில்லையோ அவர்கள் எல்லாம் உன்னுடன் நடித்துக்கொண்டிருக்கிறார்கள்,உன்னை என்றும் கல்லாய் பார்க்க ஆசைப்படுபவர்கள்.யாரால் நீ காயப்படுத்தப்பட்டாயோ அவர்கள் தான் உன்னை சிலையாய் ரசிக்க ஆசைபடுபவர்கள்.பாத்து வசந்து பாத்து!

சத்ரியன் said...

//பொய் பாராட்டுகளும்,எதையோ எதிர்பார்த்து சொல்லும் பாராட்டி பேசும் மனிதர்களை காணும்போது வயிறு எரிகிறது...//

வசந்த்,

நீ கனி மரம் ராசா. க(சொ)ல்லடிகள் விழத்தான் செய்யும். ("அவர் நாண நன்னயம் செய்துவிடு")

ப்ரியமுடன் வசந்த் said...

//Nanum enn Kadavulum... said...
சிற்பியும் தயார் ! உளியும் தயார் ! ப்ரியமான வசந்த் பாறையாக தயாரா ?
என்னிடம் உண்மையின் முகம் இருக்கிறது. பொய்களை கிழித்துபோடுவது என்னவென்று சொல்லிதர ....மனமும் இருக்கிறது. தேவையென தோன்றினால் தொடர்பு கொள்ளுங்கள்//

அப்டியா vasanth1717@gmail.com
இதுதான் என் மின்னஞ்சல் முகவரி..மொத்தலாம்...

நன்றிங்க

ப்ரியமுடன் வசந்த் said...

//
Thirumathi JayaSeelan said...
வசந்து யார் உன்னை அழ வைக்கவில்லையோ அவர்கள் எல்லாம் உன்னுடன் நடித்துக்கொண்டிருக்கிறார்கள்,உன்னை என்றும் கல்லாய் பார்க்க ஆசைப்படுபவர்கள்.யாரால் நீ காயப்படுத்தப்பட்டாயோ அவர்கள் தான் உன்னை சிலையாய் ரசிக்க ஆசைபடுபவர்கள்.பாத்து வசந்து பாத்து!//

ம்ம் புரிஞ்சுட்டேன் மேடம் நன்றி

ப்ரியமுடன் வசந்த் said...

// சத்ரியன் said...
//பொய் பாராட்டுகளும்,எதையோ எதிர்பார்த்து சொல்லும் பாராட்டி பேசும் மனிதர்களை காணும்போது வயிறு எரிகிறது...//

வசந்த்,

நீ கனி மரம் ராசா. க(சொ)ல்லடிகள் விழத்தான் செய்யும். ("அவர் நாண நன்னயம் செய்துவிடு")//

சூப்பர்ண்ணே ....

எங்க ஆளக்காணோம் பிஸியா?