November 22, 2009

ஸ்டார் ஆவேனா?

சும்மா ஒரு நாள் தினமலர் வாசித்துக்கொண்டிருக்கும்பொழுது கண்ணில் பட்ட விளம்பரம்தமிழிஷ் எனும் தளம் ,சரி என்னவென்று உள்ளே நுழைந்து பார்த்தால் எண்ணற்ற சுவாரஸ்யமான எழுத்துக்கள் அப்பொழுதெல்லாம் யார் எவர் பிரபலம் பிரபலமில்லை என்றெல்லாம் தெரியாது அனைவரையும் வாசிக்க ஆரம்பித்தேன்.

அந்த பதிவுகளில் இருந்த சுவாரஸ்யமான பின்னூட்டங்களையும் சேர்த்து படித்தேன்.நாமும் இதுபோல் பின்னூட்டமிடவேண்டும் என்று ஆரம்பித்ததுதான் இந்த வலைத்தளம்.ஆரம்பித்த அன்று அனைவருக்கும் வணக்கம் என்று இரட்டை வார்த்தைகளில் ஆரம்பித்தேன் இன்று இரட்டைசதம் அடிக்கும் வரை வருமென்று கனவிலும் நினைக்கவில்லை.

முதன்முதலில் வாசித்தது பரிசல்காரன் அவர்களின் இடுகைதான்.முதல் முதலாக ஃபாலோவர் ஆனதும் அவரது வலைத்தளத்துக்குத்தான்..பின் ஒரு நாள் அவரே மின்னஞ்சல் பண்ணிய பொழுது அடைந்த மகிழ்ச்சி அளவில்லாதது..

அப்படியே மூன்றுமாதம் கழிந்தது பல இடுகைகளை வாசித்து பின்னூட்டம் மட்டுமே இட்டுவந்து கொண்டிருந்த பொழுது சில கவிதைகள்,ஜோக்ஸ்,கடிகள் என்று நான் படித்தவைகளை இடுகைகளாக வெளியிட்டேன்.

பொதுவா நீங்க திரைப்படம் பார்க்கும் பொழுது ஒருத்தர் ஏதோ ஒரு கூட்டத்தில் துணை நடிகரா வலம் வரும் போது அதை அவர் திரையில் பார்க்கும் பொழுது எவ்வளவு சந்தோசமாக இருக்குமோ அதேபோல் என் வலைப்பதிவு இணையத்தில் இருப்பதை பார்க்கும் பொழுது எனக்கும் சந்தோசம் ஏற்பட்டது.

அந்த நேரத்தில் இராகவன் நைஜீரியா என் வலைத்தள முதல் ஃபாலோவர் ஆனார் அவர்தான் இந்த வேர்ட் வெரிஃபிகேசன் எடுப்பதை பற்றி மெயிலிட்டு அன்று முதல் இன்றுவரை என்னை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்....அதே பாசமுடன்....இந்த இடத்தில்அடுத்தடுத்து துண்டு துக்கடா வேடம் ஏற்க்கும் அண்ணன் ,தங்கை,கேரக்டர் போல என் சில பல இடுகைகள் வெளிவந்தது...

நான் ரசித்த படங்களை வெளியிட்டு கொண்டிருக்கும் பொழுது அதனோடு சில கமெண்ட்ஸும் போட்டு எழுதினேன் கொஞ்சம் வரவேற்பு கிடைத்தது,பின் அதே மாதிரி பல படங்களை மட்டும் வெளியிட்டு வந்து கொண்டிருந்தேன்..இந்த இடத்தில் ஐந்து நிமிடம் வந்து போகும் சின்ன கேரக்டரா மாறியிருந்தேன்..

திடீரென்று ஒரு நாள் எழுத்தோசை தமிழரசி அவர்களிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் இதே மாதிரி படமா போடாதீங்க எல்லாருக்கும் வெறுப்பாயிடும் எழுதுங்க என்று கூறியிருந்தார்..அப்போ நான் ஒரு பத்து நிமிடம் வந்து செல்லும் கேரக்டரா இருந்தேன்...

அவரோட அந்த ஊக்கத்தில் ஆரம்பித்தேன் சின்னதா எழுத ஆரம்பிச்சேன்...எனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர் ரோலை சின்ன காமெடி ரோலா மாற்றி எழுத ஆரம்பித்தேன்..

இதோ இந்த இரண்டாவது சதம் அடிக்கும் வரை எனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர் ரோலை சரியா செய்துட்டு வர்றேன்னு நினைக்கிறேன்....

என்றைக்கு நர்சிம்,கார்க்கி,ஆதி,பரிசல் ஆகியோர் போல் மெயின் ரோல் செய்யப்போறேன்னு தெரியலை எனக்கும் ஆசைதான் ஸ்டார் ஆகணும்ன்னு எதுக்கும் நேரம் காலம் வேண்டுமே...ஆனால் கண்டிப்பா ஒரு நாள் ஸ்டார் ஆவேன்...என்ற நம்பிக்கை உண்டு...

என் இப்பொழுதைய இந்த கேரக்டர் ரோல் வளர்ச்சி வரையிலும் வர மிகுந்த உற்சாகம் அளிக்கும் என் அண்ணன் ஜமால் மிகப்பெரும்பான்மையான பங்கு வகிக்கிறார்...நன்றி ஜமால் அண்ணா...

இந்த 200 வரையிலும் எழுதியதில் 26 இடுகைகளை யூத்ஃபுல் விகடன் வெளியிட்டு என்னை பெருமை படுத்தியது...யூத் ஃபுல்விகடனுக்கு என் மன மார்ந்த நன்றிகள்...

இதுவரையில் இந்த பதிவுலகத்தில் ஏராளமான நண்பர்கள் கிடைத்திருக்கின்றனர்.உறவுகள் கிடைத்திருக்கின்றனர்.என் எல்லா இடுகைக்கும் மறக்காமல் வாசித்து உற்சாகப்படுத்தும் நவாஷூதீன்,தமிழரசி,இராகவன் நைஜீரியா,நட்புடன் ஜமால்,ஹேமா,கலையரசன்,வானம்பாடிகள் பாலா சார்,சுசி,கதிர்,கலகலப்ரியா,மேனகாசத்யா,தேவன்மயம்சார்,ஜீவன், விசா,வினோத் கவுதம்,,சஃபி,யாழினி,கிஷோர்,ரம்யா,கார்த்திகை பாண்டியன்,பிரியங்கா,வலைமனை சுகுமார்,இன்னும் நிறைய நண்பர்கள் அனைவர் பெயர்களும் வெளியிட்டால் பதிவு பெரியதாகி விடும் என்பதால் அவர்களின் பெயர் வெளியிடாததற்க்காக மன்னிக்கவும்அனைவருக்கும் இவ்வேளையில் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்....

இந்த 200 இடுகைகளை வெளியிட்ட நேரத்தில் தமிழர்ஸ் தளத்தில் இவ்வாரதமிழர் விருதும் , வலைச்சரத்தில் அப்பாவி முரு, வீட்டுப்புறா சக்தி,தமிழரசி,அத்திரி,ஜீவன்,ஆகியோர் என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளனர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

அவர்களோடு மட்டுமல்லாது இந்த 200 வரை என்னுடன் பயணிக்கும் 190 ஃபாலோவர்ஸ்க்கும் மிக்க நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்...

இந்த இடைப்பட்ட காலத்தில் நான் எழுதிய இடுகையோ அல்லது பின்னூட்டமோ யாரின் மனதையாவது புண் படுத்தியிருந்தால் தயவு கூர்ந்து மன்னிக்கவும்.மறப்போம் பழசை...

தொடர்ந்து இன்னும் நல்லா எழுது என்று தொடர் ஊக்கமளிக்கும் என் பதிவுலக
ஆசான் நர்சிம் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...

பதிவுலகம் சாராத தாமரைச்செல்வி,விஜய் ,கலாஆகியோருக்கும் என் நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்,

தமிழிஷ் ,தமிழ்மண திரட்டிகளுக்கும்,இவற்றில் தொடர்ச்சியா வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றிகள்...

இதுவரை கேரக்டர் ரோல் செய்துவரும் என்னையும் மதித்து தொடர்ந்து வருகைபுரிந்து உற்சாகமளிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் நன்றிகள் என்றைக்கு ஸ்டார் ஆவேனோ! தெரியாது வெயிட் பண்ணுங்கப்பா...

ஸ்டார் ஆகும் பொழுது உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திக்கிறேன்...நன்றி நட்புகளே..

நன்றியுடன்...

கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்

ப்ரியமுடன்...வசந்த்

நன்றி மீண்டும் வருக

88 comments:

ஸ்ரீ.கிருஷ்ணா said...

ஸ்டார் தான் தல நீங்க ...
...

கலகலப்ரியா said...

வாழ்த்துகள் வசந்த்...! ஸ்டார் ஆயிட்டா...! அப்புறம் என்ன கேள்வி..!

Anonymous said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் வசந்த்.

சீமான்கனி said...

வாழ்த்துகள்...வசந்த்...நீங்கள் இப்போதே ஸ்டார் தான்..என்று எனக்கு தோனுகிறது...இன்னும் வளர வாழ்த்துகள்....இன்னும் பல இடுக்கைகளோடு...எங்களை அசத்திகொண்டே.. இருங்கள்...நன்றி..

Admin said...

இனிய வாழ்த்துக்கள். இன்னும் பல நல்ல படைப்புக்கள் வந்து சேரட்டும்.

பா.ராஜாராம் said...

யாருனே தெரியாது வசந்த் உங்களை.கிட்டத்தட்ட பதிவு விடாமல் ஓட்டும்,பின்னூட்டமும் பார்க்க வாய்க்கிறது.போக,அண்ணே என்கிறீர்கள்,பாரா அண்ணே என்கிறீர்கள்.என் ஒவ்வொரு பதிவும் தமிழ்மணத்திலோ,தமிலிஷிலோ முகப்புக்கு வரும் எனில் உங்களையும் நினைவு கொள்கிறேன்.

இப்படி,எந்த தளத்துக்கு போனாலும் ஏதோ ஒரு ரூபத்தில் உங்கள் முத்திரை இருக்கு.இதுக்கு ஒரு பிரியமும் மனசும் வேணும்.அது உங்களுக்கு நிறைய இருக்கு வசந்த்.

இந்த வலைதளத்தை ஒரு குடும்பம் போல என மன ரீதியாக உணர்வதற்கு நிறைய நண்பர்கள்,காரணம்.அதில் முக்கியமான நண்பரும் உறவும் நீங்கள்!

எனக்கு மட்டும் இல்லை வசந்த்!வலை தளத்தை கூர்ந்து அவதானித்து வரும் யாருக்கும் இதை உணர வாய்க்கும்.ஆன்மாவில் இருந்து கை நீட்டும் உங்கள் அன்பிற்கு முன்னால்,இலக்கியமாவது மயிராவது.

நிறைய மனங்களின் ஸ்டார் நீங்கள் வசந்த்!

நண்பர் எனும் ஸ்டார்!

சகோதரன் எனும் ஸ்டார்!

உண்மை எனும் ஸ்டார்!

மற்றபடி,இன்று உங்களை நீங்களை அறிமுகம் செய்து கொண்ட எழுத்தில் முன்பு எப்போதும் இல்லாத முதிர்ச்சி காண வாய்க்கிறது.உண்மையில் உங்களுக்கு எழுத தெரிகிறது.நீங்கலாக வேறு எழுத்து எழதுகிறீர்கள்.கொஞ்சம் சீரியஸ் ஆர்டிகலும் எழுதணும் வசந்த.

இது உங்கள் அண்ணனின் விருப்பமாகவோ,பாராவின் விருப்பமாகவோ எடுக்கலாம்.

டபுள் செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள் வசந்த!

ஹேமா said...

வசந்து.....உங்களுக்குள்ள பெரிய ஸ்டார் எல்லாரும் ஒளிஞ்சிருக்காங்க.இந்தப் பதிவே பாருங்க ஒரு கனமான பதிவு.நகைச்சுவையோடு சிந்தனையையும் சேர்த்துத் தர எல்லாரும் முடியாது.இப்பவே நீங்க ஒரு ஸ்டார்தான் தலைவரே !

Unknown said...

எல்லோரும் சொல்ற மாதிரிதான் நானும் சொல்றேன், இப்போவே நீங்க ஸ்டார்தான்!வேணும்னா இன்னும் பெரிய ஸ்டார் ஆகனும்னு வாழ்த்துகிறேன் வசந்த்! (உங்கள் பதிவுகளை நான் மட்டும் படிப்பதில்லை என் குடும்பமே படிக்குது, நீங்கள் போடும் வித்தியாசமான படங்கள் என் பையனுக்கு ரொம்ப பிடிக்கும், அவர் வீக் என்ட் மட்டும் பார்ப்பார்)

பிரபாகர் said...

முதலில் வாழ்த்துக்கள் தம்பி. ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க.

தலைப்பு மாதிரியான கேள்விகளை தள்ளி வெச்சிட்டு ஒய்வில சும்மா வழக்கம்போல எழுதிகிட்டே இருங்க... எல்லாம் தானே வரும்...

ஒரு முக்கியமான ரகசியம்... யாருக்கும் சொல்ல வேணாம்... நமக்கு நாமே ஸ்டார்தான்!

இரு நூறு என்பது ஒரு அருமையான மெயில் கல். எழுதுங்கள். முன்னூறில் விரைவில் சிந்திப்போம்....

மீண்டும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

பிரபாகர்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள் வசந்த்

ராமலக்ஷ்மி said...

இப்போதே நட்சத்திரம்தான் என்றாலும் நீங்கள் விரும்பும் நட்சத்திரமாகிட என் வாழ்த்துக்கள்:)! யூத் விகடனின் ‘குட் ப்ளாக்ஸ்’ பிரிவில் தொடர்ந்து உங்கள் பதிவுகள் இடம் பெற்று வர அங்கிருந்துதான் முதலில் தங்கள் வலைப்பூவுக்குள் நுழைந்தேன். வித்தியாசமான சிந்தனைகள் பிரமிக்கவும் பாராட்டவும் வைத்த வேளையில் வருபவர் தம்மை மறந்து சிரிந்து அந்த சிலநிமிடங்கள் ரிலாக்ஸ் பண்ணிக் கொள்ள்வும் வைத்தது எனக்குப் பிடித்தது. பா ரா அவர்கள் சொன்னது போல 'பிரியமுடன்' செல்லும் தளங்களுக்கு வாக்களிக்க நீங்கள் தவறுவதேயில்லைதான். அதற்கும் இங்கு என் நன்றிகள். இப்போது போல எப்பொதும் ஜொலித்திருங்கள்!

malarvizhi said...

வாழ்த்துக்கள். இந்த புது தோழியையும் உங்கள் நண்பர்கள் பட்டியலில் சேர்க்கலாமே ! என் புதிய வலைதளத்திற்கு உங்களை வரவேற்கிறேன் .

செந்தில் நாதன் Senthil Nathan said...

நீங்க இப்பவே ஸ்டார் தான்!! மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

சரவணகுமரன் said...

பாஸ், நீங்க இப்பவும் ஸ்டார்தான்... :-)

pudugaithendral said...

வாழ்த்துக்கள் வசந்த்

பித்தனின் வாக்கு said...

அன்பு நண்பா இடுகைகளில் பல நூறும், பிந்தொடருவர்களில் பல நூறும் பெறவும், ஆயுளில் ஒரு நூறும் பெற வாழ்த்துகின்றேன். வாழ்க, வளர்க. நன்றி.

ஈரோடு கதிர் said...

இருநூறு இடுகை என்பது குறிப்பிடத் தகுந்த சாதனை வசந்த்...

வாழ்த்துகள் வசந்த்

vasu balaji said...

அல்லோ. கொஞ்ச நாள் முன்னாடி எழுத மாட்டன்ன. இப்போ ஸ்டார் ஆவலங்கற. மொத மொத பார்க்குறப்ப நைனா கைல அடி வாங்காத. நீ சொல்ற யாரையும் கேட்டுப்பாரு. நீங்க ஸ்டாரான்னு. உன் எழுத்து உனக்கு பிடிக்கலன்னா அதுதான் தப்பு. இந்த காமெடி பீஸ் வேலையெல்லாம் வேணாம். சிலர் ரஜனி மாதிரி, கமல் மாதிரின்னா நீ நாகேஷ் மாதிரி. படம் ஃபுல்லா சிரிக்க வெச்சாலும் 2 நிமிஷத்துல மொத்த பேரையும் காணாம அடிச்சுடுவாரு அந்தாளு. நீ அப்படிப் பட்ட ஆளு. வேலையப்பாரு ஓய். கொய்யாலே நான் எழுத ஆரம்பிச்சி 9 மாசமாவல 300 தொடப்போறன். நீ இவ்ளோ நாளா எழுதி 200. அதுக்கு பாராட்டணும். ஆனா நிஜம்மா அசத்திட்ட வசந்துன்னு என்கிட்ட பாராட்டு வாங்கணும்னு நினைச்சா(இன்னும் 100 நாள்ள 100 இடுகை நச் நச்னு போடு ராசா) ஆல் த பெஸ்ட் மை ஸ்டார் பையா.

நாஸியா said...

அட, அட, அட.. படிக்கும்போது யாராச்சும் வசந்த் அண்ணனுக்கு ஒரு பாட்டல் சோடாவை உடைச்சுக்கொடுங்கப்பான்னு சொல்லனும்னு தோணிச்சு..

மெயின் ரோலில் வந்து கலக்க வாழ்த்துக்க்ள் சகோதரரே

யாரோ ஒருவர் said...

வாழ்த்துக்கள் வசந்த்.இன்னும் பல கனமான பதிவுகளை இந்த பதிவுலகம் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறது.

செ.சரவணக்குமார் said...

அருமை வசந்த், நல்லா எழுதியிருக்கீங்க.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ஏற்கனவே நீங்க ஒர் கிரியேட்டிவிட்டி ஸ்டார் தான் வசந்த் :))

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் நண்பா,... நீங்களும் ஒரு ஸ்டார்தான்

சந்தனமுல்லை said...

நீங்க ஏற்கெனவே ஸ்டார்ன்னு தானே நினைச்சுக்கிட்டு இருக்கேன்!! தொடர்ந்து எழுதுங்க!! வாழ்த்துகள்!! :-)

இராகவன் நைஜிரியா said...

மீ த 25த் ?

இராகவன் நைஜிரியா said...

இரட்டை சதத்திற்கு வாழ்த்துகள் வசந்த்.

S.A. நவாஸுதீன் said...

பிரியமுள்ள வசந்த்!

ரொம்ப சந்தோசமா இருக்கு. 200-க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இப்பவே நீங்க ஸ்டார் தான் மக்கா. உங்க கிரியேட்டிவிட்டி, நகைச்சுவை உணர்வு, பொதுநலம், உங்க நல்ல மனசு எல்லாமே எங்களுக்கு தெரியும். என்ன கொஞ்சம் எமோசனலான ஆளு. சட்டுன்னு கோவம் வந்திடும். ஆனால் அது கடுகளவுதான். மலையளவு நல்ல மனசுக்கு முன்னாடி அது ஒன்னுமில்லை.

இனியும் தொடர்ந்து நிரைய எழுதனும். பா.ரா சொன்னதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவும். உங்களால் முடியும்

மீண்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள் வசந்த்.

கிரி said...

வாழ்த்துகள் வசந்த் :-)

க.பாலாசி said...

வாழ்த்துக்கள் நண்பா....இவர மாதிரி...அவர மாதிரில்லாம் இல்லாம உங்க ரூட்லயே தெளிவா போங்க....

அ.மு.செய்யது said...

டபுள் செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள் வசந்த்..!!!

யாரு வேணாலும் ஸ்டாரா இருந்துட்டு போவட்டும்...!!! நம்ம ஏன் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டா ஆவணும்.

நம்மள பொறுத்தவரைக்கும் நம்ம தான் ஸ்டார்..நம்ம தான் ஹீரோ
அப்படி நினைச்சிட்டு எழுதுங்க..!!!

சில நேரங்களில் தலைக்கனம் அவசியம் !!!

புலவன் புலிகேசி said...

இரட்டை சதத்திற்கு வாழ்த்துக்கள் வசந்த்...

ஹுஸைனம்மா said...

நீங்களும் இன்னிக்கு 200-ஆ? வாழ்த்துக்கள் வசந்த்.

கலையரசன் said...

கிடைக்கும்ன்றது கிடைக்காம போகாது! இதுக்கு எல்லாம் பிளிரிகிட்டு இருக்க?...

''பி கூல் மேன்''

வாழ்த்துக்கள் 200க்கு!!

Starjan (ஸ்டார்ஜன்) said...

200 என்ன 2000.... எழுதினாலும் நீங்க தான் ஸ்டார் ..

ஏன்னா நான் உங்க கூட இருக்கேன்ல ...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வசந்த் ...

Kala said...

வசந்!மீண்டும்,மீண்டும் வலம்வர,வளம்பெற
வழமைகள் மிளிர.இதனுடன் வலை நட்சத்திரமாய்
ஜொலிக்க..என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உங்கள் அன்பான நன்றிக்கு என் பணிவான
சிரம் தாழ்த்தல்.

நன்றி என்றவுடன் பல நாட்களாய் என் மனதில்
வைத்திருக்கும் ஒரு நெருடலின் ஞாபகம்
சில வலைப் பதிவாளர்கள் இடும் இடுகைக்கு
கருத்துரைத்தால் ஒரு நன்றிகூடச் சொல்லாமல்...
தொடர்ந்து செல்கிறார்கள் ...
அவர்கள் முற்றம் தேடி போகும் அவர்களை
நன்றி சொல்லி வரவேற்காததேன்?
நன்றி-- மீண்டும்,மீண்டும்{கருத்துரைப்பவர்கள்}
வந்து போக நீங்கள் கொடுக்கும் ஒரு ஊட்டச் சத்து
அவர்களைப் பார்க்கும் போது உங்களுக்கும்
ஒரு உற்சாகம்,துடிப்பு தன்னால் வரும்.
அதனால் .....உங்கள் வலைத் தளம் உலகமெங்கும்
தவழ்ந்து வரும்.
{இது அவரவர் சொந்த விருப்பம் நான் நுழைய
முடியாது,இருந்தாலும்...மனம் கேட்கவில்லை
தவறென்றால் மன்னிக்கவும்}

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

200 பதிவுக்கு வாழ்த்துக்கள் வசந்த். உன் பதிவுகள் தனித்துவமானவை . யாரையும் போல் எழுத வேண்டும் என்று எண்ணாமல் உன் எழுத்திலேயே கனமான பதிவுகளை எழுதப்பா. என்னைப் பொறுத்த வரை நீ ஏற்கனவே ஸ்டார் தான்பா. இந்த எழுத்துநடை மிக நன்றாக இருக்கிறது.

அப்துல்மாலிக் said...

வாழ்த்துக்கள் வஸந்த்

தொடர்ந்து கலக்குங்க‌

சத்ரியன் said...

வசந்து ,

நீ ஏற்கனவே 'ஸ்டார்; தான்யா..!

அன்புடன் அருணா said...

நீங்களும் இன்னிக்கு 200-ஆ? வாழ்த்துக்கள் வசந்த்!

அன்புடன் மலிக்கா said...

சாரி சகோ நான் லேட்.
இருந்தாலும் வாழ்த்துவது சகோவின் கடமையல்லவா.

200.வது பதிவுக்கும்.ஸ்டாருக்கும். என்மனமர்ந்த பாராட்டுக்கள்.
இன்னும் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்..


அத்தோடு 200 வருடத்திற்குமேல் நல்லபடியாக வாழ்ந்து பலநல்ல சாதனைகள்படைக்கனுமுன்னு இந்த சகோவின் வாழ்த்துக்கள்...

Menaga Sathia said...

வாழ்த்துக்கள் சகோ 200வது பதிவுக்கு!!

நீங்கள் இப்பவே ஸ்டார் தான் அதில் என்ன சந்தேகம்.உங்கள் பதிவுகளில் எங்களை சிரிக்க வைத்திருக்கிங்க.

மேலும் நீங்கள் பிரபலம் ஆகவும்,எழுத்துநடை வளரவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

blogpaandi said...

இரட்டை சதம் அடித்தமைக்கு வாழ்த்துக்கள்.

சுசி said...

//இதோ இந்த இரண்டாவது சதம் அடிக்கும் வரை எனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர் ரோலை சரியா செய்துட்டு வர்றேன்னு நினைக்கிறேன்....//

இது ஓவர் அவையடக்கம் சொல்லிட்டேன்.

இருந்தாலும் நான் தொடர் பதிவுக்கு கூப்ட வேளையில இத எதிர்பார்க்கல....

தனித்தனியா வாழ்த்து சொன்னா கமன்ட் பதிவு சைசுக்கு வந்திடும்கிரதால மொத்தமா மனதார வாழ்த்திக்கிறேம்பா...

இன்னும் நிறைய எழுதுங்க....

யாழினி said...

நிட்சயமா Star ஆவீர்கள் வசந்த் எனக்கு ரெம்ப ரெம்ப பிடிச்ச Blogகே உங்களுடையது தான். இதை நான் வெறும் புகழ்ச்சிக்காக சொல்லவில்லை, உண்மையாகவே சொல்லுகிறேன். என்ன தான் வேலைப் பழு இருந்தாலும் உங்கள் Blogஐ நான் வாசிக்க தவறியதே இல்லை.

யாழினி said...

வாழ்த்துக்கள் வசந்த் இரு நூறுகளை எட்டிப் பிடித்ததற்கு எனது மன மார்ந்த வாழ்த்துக்கள்! :)

சுண்டெலி(காதல் கவி) said...

உங்களைப் போல் ஒருவன் நான்.புதிதாக எழுத ஆரம்பித்திருக்கிறேன்.உன் பதிவைப் படித்தவுடன் என்னுள்ளும் நம்பிக்கை பூக்கிறது.

வாழ்த்துக்கள்.

சுண்டெலி(காதல் கவி) said...

உங்களைப் போல் ஒருவன் நான் .புதிதாக எழுத ஆரம்பித்திருக்கிறேன்.உங்கள் பதிவை படித்த பின் என்னள்ளும் நம்பிக்கை துளிர்க்கிறது.நன்றி.



***வாழ்த்துக்கள்******

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துகள் தல.. என்றும் உங்கள் பயணத்தில் உங்களோடு நானும்..:-)))

வினோத் கெளதம் said...

மச்சி நீ ஏற்க்கனவே ஸ்டார் தான்..இந்த பதிவுல முதல் ரெண்டு பேரா அப்படியே எனக்கும் பொருந்தும் ..:)

thiyaa said...

வாழ்த்துகள் வசந்த்..

தமிழ் உதயம் said...

எல்லா வலைப்பதிவர்களும் ஆரம்ப காலத்தில் ஒரே மாதிரியான பிரச்சனைகள். வளர்ந்த பதிவருக்கு வளரும் பதிவரின் வாழ்த்துக்கள்.

நசரேயன் said...

வாழ்த்துகள் வசந்த்

வெண்ணிற இரவுகள்....! said...

நாளைய சூப்பர் ஸ்டார் இன்றைய தல வசந்த் வாழ்க ,,,,இவண்.......
பதிவு எண்: 1333 வசந்த் பதிவுலக இட்லி சட்னி காதல் படித்து ரசிகரான மன்றம்

Unknown said...

டபுள் சதம் அடிச்சதுக்கு வாழ்த்துக்கள் தல... இப்படியே ஸ்டார் ஆகி சூப்பர் ஸ்டார் ஆகி சி .எம் ஆக வாழ்த்துக்கள்...

வால்பையன் said...

நீங்க சேவாக் மாதிரி இரட்டை சதத்தை படு வேகமா அடிச்சிருக்கிங்க!

எனகெல்லாம் ரெண்டு வருசமே ஆச்சு!

Sukumar said...

Good THala.....
WIsh u many more success

நாகா said...

வாழ்த்துக்கள் வசந்த்..

பின்னோக்கி said...

இரட்டை சதத்திற்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து சிரிக்கவும் சிந்திக்கவும் வையுங்கள்.

Beski said...

வாழ்த்துக்கள் வசந்த்.
தொடர்ந்து கலக்குங்க.

sarathy said...

வாழ்த்துக்கள்...வசந்த்...

தொடர்ந்து எழுதுங்க...

கல்யாணி சுரேஷ் said...

200 வது பதிவிற்கு வாழ்த்துகள். இப்பவே நீங்க ஒரு ஸ்டார் தான் வசந்த்.
அன்புடன்
உங்கள் சகோதரி
கல்யாணி சுரேஷ்.

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி @@ ஸ்ரீகிருஷ்ணா

நன்றி @@ பிரியா

நன்றி @@ சின்ன அம்மிணி

நன்றி @@ சீமாங்கனி

நன்றி @@ சந்ரு

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி @@ பாரா

என்னை மிகவும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கிவிட்டீர்கள்
எனக்கும் மிகவும் கனமான இடுகைகள் எழுத வேண்டும் என்ற ஆசைதான் ஆனால் வயது தடுக்கிறது சின்னப்பையன் இவன் என்ன சொல்வதுன்னு சொல்லிடுவாங்களோன்னு பயம் அவ்வளவுதான் கண்டிப்பா அந்த வயது அனுபவம் வரும் பொழுது நீங்கள் சொன்ன மாதிரியே கனமான இடுகைகள் எழுதுவேன்

பாசக்கடலில் மூழகடித்திட்டிர்கள் என்ன சொல்றதுன்னே தெரியலை...

ரொம்ப சந்தோசமா இருந்துச்சு..

இதே சந்தோசம் நம்ம ரெண்டுபேர்கிட்டயும் கடைசி வரையிலும் இருக்கணும்ன்னு ஆண்டவன கேட்டுக்கொள்கிறேன்..

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி @@ ஹேமா

தலைவியே மிக்க நன்றிப்பா என்னை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறீர்கள் இடுகைவிடாமல் உங்கள் பின்னூட்டமும் ஓட்டும் அதைவிட பாசமும் நேசமும் அந்த குழந்தைத்தனமான பின்னூட்டங்களும் ரசிக்கவைக்கின்றன..

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி @@ தாமரை செல்வி

உங்களை போன்ற பதிவுலகம் சாராத வாசகர்களின் பின்னூட்டமும் ஆசியும் கிடைக்கும் பொழுதுதான் நான் முழு பதிவராக நான் அடையாளம் கொள்கிறேன், என்றும் பாசமும்,நன்றியும்

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி @@ பிரபாகர்

உங்களை மாதிரி சிந்திக்க எனக்கு தெரியலையே அதை நான் ஒற்றுக்கொள்கிறேன்...
தங்களது தொடர்ச்சியான பின்னூட்டங்களுக்கும் ஓட்டுகளுக்கும் நன்றிகள்

நன்றி @@ டி.வி.ஆர்

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி @@ ராமலக்ஷ்மி

இந்த "க்ஷ்" தமிழ்ல டைப் பண்ண கற்றுக்கொண்டதே உங்களால் தான் மேடம்.அதுமட்டுமில்லாமல் உங்கள் கவிதைகள் கட்டுரைகள் யூத்ஃபுல் விகடனில் வரும்பொழுதுதான் எனக்கும் அது மாதிரியெல்லாம் எழுதணும்ன்னு ஆசை வந்தது...தொடர்ச்சியான் வருகைகளுக்கும் வாசிப்புக்கும்,பின்னூட்டங்களுக்கும்,
சகோதர பாசத்துக்கும் மிக்க நன்றிகள் ராமலக்ஷ்மி மேடம்..

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி @@ மலர் விழி

வருகிறேன்...

நன்றி @@ செந்தில்நாதன்

நன்றி @@ சரவணகுமரன்

நன்றி @@ புதுகைதென்றல்

நன்றி @@ பித்தனின் வாக்கு சுதாகர்

நன்றி @@ கதிர்

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி @@ வானம்பாடிகள் பாலா சார்

இந்த பதிவுலகம் வந்து என்னோட எழுத்து வளர்ந்துச்சோ தெரியாது ஆனா உன்னை மாதிரி பாசக்கார அப்பா கிடைச்சதுல ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு
நீங்க என்னை திட்டலாம்,வாழ்த்தலாம் எல்லாத்துக்கும் உங்களுக்கு உரிமையிருக்கு.மெட்ராஸ் வரும்போது மெட்ராஸவே கலக்குவோம் சரியா எதிர்பார்த்துக்கிட்டே இரு இன்னும் 60 நாள்தான்....

கண்டிப்பா உன் கிட்ட நான் தோத்துட்டேன் எனக்கு பெருமைதான்...

ஆனா இப்போ எனக்கு 26 வயசுதான் ஆகுது உன் வயசு வரும்போது உன்னையே பீட் பண்ணியிருப்பேனே...

உங்களின் தொடர்ச்சியான வருகைக்கும்,பின்னூட்டங்களுக்கும்,மிக்க நன்றிகள்...

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி @@ நாஸியா

ஆகா சோடா உடைச்சு குடுக்க சொல்லியிருக்கலாம்..
சகோதரிக்கு நன்றிகள்

நன்றி @@ திருமதி.ஜெயசீலன்

கண்டிப்பா எழுதுவேன் எதிர் பாருங்க மேடம்...

நன்றி @@ சரவணக்குமார்

நன்றி @@ செந்தில் அண்ணா

என்னதான் இருந்தாலும் உங்களை மாதிரி எழுத முடியலைன்னும்போது வருத்தமா இருக்கு...தொடர் வருகைக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றிகள் அண்ணா....

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி @@ ஞானசேகரன்

நன்றி @@ இராகவன் நைஜீரியா சார்

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி @@ S.A.நவாஷூதீன்

நன்றி நண்பா நீங்கள் என்னை சரியா புரிஞ்சுருக்கீங்க..

யாருன்னே தெரியாத அனைவரையும் தொடர்ச்சியா ஊக்கப்படுத்தல் மட்டுமே என்பதே முடியாத விஷயம் உங்களால் முடிகிறது...

பின்னூட்டம் போடுறதையே அவமானமா சிலர் நினைக்குறாங்க

பதில் பின்னூட்டம் எதிர்பார்க்கும் பதிவுலகத்தில் பின்னூட்ட எதிர்பார்ப்பு எதுவுமே இல்லாம எல்லாரையும் சின்னவங்க பெரியவங்கன்னு பார்க்காமல் ஊக்கப்படுத்தல் என்பது பெரிய விஷயம்...

அது உங்களால் முடிகிறது அந்த ஊக்கப்படுத்தலுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்..

என் எழுத்து வாழும் வரை மறக்க மாட்டேன்...

மிக்க நன்றிகள்...

அன்புடன் நான் said...

வாழ்த்துக்கள் வசந்த். கலக்குங்க.

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி @@ கிரி

நன்றி @@ பாலாஜி

சரிங்க

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி @@ அ.மு.செய்யது

என் ஒவ்வொரு இடுகைக்கும் உங்கள் பின்னூட்டம் எதிர்பார்த்து ஏமாந்துபோவேன் நண்பா..
சரியான பதிவுகள் எல்லாத்தையும் பிரிச்சு மேய்றீங்க நான் ஆழ்ந்து கவனிச்சுருக்கேன் உங்களின் அந்த வாசிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது..

தலைக்கனம் வேண்டாம் எனக்கு...
எப்பவும் எல்லாரையும் உங்களைப்போலவே தலைக்கனம் இல்லாம வாசிக்கணும் அதுக்கான நேரந்தான் கிடைப்பதில்லை...

நன்றி நண்பா...

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி @@ புலவன் புலிகேசி

நன்றி @@ ஹூசைனம்மா

நன்றி @@ கலையரசன்

உன்னோட பின்னூட்டம் என்னை சில நேரம் கோபப்படுத்தினாலும் அடுத்த நிமிசமே சிரித்து களைத்துபோவேண்டா எப்படியெல்லாம் சிரிக்க வைக்கிற நீ வாழ்க உன் நகைச்சுவையுணர்வு...

பூங்குன்றன்.வே said...

அன்பு தோழா, வாழ்த்துக்கள்.

வருகின்ற மாவீரர் தினத்திற்காக நம் அனைத்து பதிவர்களும் அன்றைய தினம் ஒரு நாள் எழுதுகிற படைப்புக்கள் அனைத்தும் நம் அன்பு சகோதர்களை பற்றியே இருக்க வேண்டுமென்ற நோக்கத்தில் ஒரு பதிவை-வேண்டுகோளை விடுத்திருக்கிறேன்.சரி எனில், உங்களின் ஆதரவை தருமாறும்
கேட்டுகொள்கிறேன்.

http://poongundran2010.blogspot.com/2009/11/blog-post_24.html

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி @@ ஸ்டார்ஜன்

மிக்க மகிழ்ச்சி நண்பா

நன்றி @@ கலா

முதல்ல உங்களின் பின்னூட்டம் எப்பவும் எனக்கு வேண்டும்ன்னு சொல்லிக்கிறேன்..

அப்புறம் என்னுடைய வேலை நேரத்தை கூறுவதில் சங்கடமாக இருந்தாலும் கூறுகிறேன்..காலையில 4 மணிக்கு போறவன் ஈவ்னிங் 6 க்கு வருவேன் பின்ன சமைக்கணும் இதுக்குன்னு 8 மணி ஆயிடும் அப்பறம் நண்பர்கள் ப்அதிவெல்லாம் படிச்சு பின்னூட்டம் போட்டு முடிய மணி பார்த்தா 12 ஆயிருக்கும் காலையில டேமேஜர் கண் முன்னாடி வந்து நிக்கும்போதே தூங்கிபோவேன்..
இந்த இடைப்பட்ட நேரத்தில பதிவெழுதணும் வேற,,,இருந்தாலும் நான் எனக்கு பின்னூட்டமிடும் அனைவருக்கும் நன்றி சொல்லிவிடுவதுண்டு ஏதோ ஒரு சில பின்னூட்டங்கள் மிஸ் ஆகியிருக்கலாம் அதுக்காக கண்டிப்பா மன்னிப்பு கேட்டுக்கிறேன்...
கண்டிப்பா யாராச்சும் எக்ஷ்ட்ரா டைம் இருந்தா கொஞ்சம் கடன் குடுத்தீங்கன்னா நல்லாயிருக்கும்..திரும்ப தந்திடுவேன்பா,,,,தங்களின் ஆதங்கம் புரிகிறது கலா..
ஒரு வேளை ஆபிஸ்ல கம்ப்யூட்டர் தட்டுற வேலை கிடைச்சுருந்தா நீங்க சொல்ற மாதிரி பின்னூட்டம் போடுற அனைவருக்கும் தனித்தனியா நன்றி சொல்லியிருப்பேனோ என்னவோ எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலியே..

கண்டிப்பா திரும்ப வாங்க...

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி @@ ஜெஸ்வந்தி மதர்

மிக்க மகிழ்ச்சியா இருக்கு...

நன்றி @@ அபு

சந்தோசம் நண்பா நலமா?

நன்றி @@ சத்ரியன்

:)

நன்றி @@ பிரின்ஸ்

பூங்கொத்து காணோம் நான் அழுவேன்..

நன்றி @@ மலிக்கா

மிக்க மகிழ்ச்சி சகோ...

நன்றி @@ மேனகா சத்யா

ரொம்ப சந்தோசமா இருக்கு சகோ..

நன்றி @@ ப்லாக் பாண்டி

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி @@ சுசி

நாலு நாள் பதிவு போடாம இருந்தா மெயில் பண்ணி ஏன் இடுகை போடலைன்னு கேக்குற உங்க சகோதர பாசத்துக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது மிக்க நன்றி சகோ..தொடர்ந்து வாருங்கள்..எழுத்துலகில் ஒரு புதிய சரித்திரம் படைக்கும் வரை..
இது கொஞ்சம் ஓவரா தெரியுதுல்ல..

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி @@ யாழினி

ரொம்ப சந்தோசமா இருக்கு யாழினி
தொடர்ச்சியான உங்களை மாதிரியான பாசமிக்க நண்பர்கள் இருப்பதினால தான் இன்னும் சிறப்பா எழுதணும்ன்னு தோணுது யாழினி தொடர்ச்சியா வாருங்கள் பின்னூட்டம் தேவையில்லை நீங்கள் வாசித்து ரசித்து லேசா சிரித்து சென்றாலே போதும் அந்த பதிவு வெற்றிதான்..

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி @@ காதல் கவி

புதியவரவா? வருக கவிஞரே வலையுலகம் சார்பில் வரவேற்கிறேன்...

நன்றி @@ கார்த்திகேயபாண்டியன்

மிக்க மகிழ்ச்சி நண்பா

நன்றி @@ வினோத் கவுதம் மச்சி

நன்றி @@ தமிழுதயம்

நன்றி @@ நசரேயன்

நன்றி @@ வெண்ணிற இரவுகள் கார்த்திக்

:))))

நன்றி @@ பேநாமூடி

உங்கள் பெயர் போலவே பின்னூட்டத்தையும் ரசித்தேன்...

நன்றி @@ வால் சார்

நன்றி @@ சுகுமார்

நன்றி @@ நாகா

நன்றி @@ பின்னோக்கி

நன்றி @@ அதிபிரதாபன்

நன்றி @@ சாரதி

நன்றி @@ கல்யாணி சுரேஷ்

நன்றி @@ கருணாகரசு

நன்றி @@ பூங்குன்றன்

நல்ல எண்ணம்

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி @@ தியா

தங்கள் பதிவில் கொடுத்த அறிமுகத்துக்கும் மிக்க நன்றிகள்...

Malini's Signature said...

வாழ்த்துகள் வசந்த் ...இந்த 200 இன்னும் 2000, 20000, 200000 என தொடர வாழ்த்துகள்.

Anonymous said...

200வது இடுக்கைக்கு வாழ்த்துக்கள் வசந்த்..

வலையிலகில் நீ நட்சத்திரமில்லை வானவில்லடா

உன் வரவு வசந்தமடா....

இங்கு நீ மேலும் வளம் வர வாழ்த்துவோமடா....

பரிசல்காரன் said...

நீங்கள் குறிப்பிட்டுள்ள எல்லாரையும்விட புகழ் பெறலாம்... இப்போதிருக்கும் இதே வேகம் எப்போதுமிருப்பின்!

வாழ்த்துகள் வசந்த்!

Zero to Infinity said...

Bosssss....neenga SINGLE STAR illa...FIVE STAR

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி ஹர்ஷினி அம்மா

நன்றி கிருஷ்ணா அண்ணா

நன்றி தமிழ்

நன்றி ராஜ்குமார்