இயற்கையுடன் சில நேரம் உரையாடலாம் என்று காலார நடந்து தோட்டத்தில் உலாவினேன்..
உலாவலின் முதல் சந்திப்பில்
கண்ணுக்கு அகப்படாமலே செல்லும் காற்று என் பேச்சுக்கு அகப்பட்டது
ஏய் காற்றே நில் எங்கு செல்கிறாய்?இப்படி நான் கேட்க..
நானென்ன மனிதனா எதையாவது அடைய ? இப்படி காற்று கேட்க..
உனக்கென்று தேடல் இல்லையா ? இப்படி நான் கேட்க..
தேடல் தேவை மனிதனுக்கு எனக்கில்லை! இப்படி காற்று கூற..
அடுத்த தேடலாய் மலரத்துடிக்கும் மொட்டிடம் சென்று
எப்பொழுது பூ பூப்பாய்? என்று நான் கேட்க..
சீ தூன்னு துப்பி மனுசபுத்திய காட்டிட்டியேன்னு...மொட்டு சொல்ல..
அவமானத்தோடு காற்றுக்கு இரு கை கூப்பி வணக்கம் தெரிவிப்பது போல் இருக்கும் இரட்டை தென்னைகளிடம் என்ன செய்கிறீர்கள்? என்று நான் கேட்க..
மானங்கெட்டவனே உள்ளே வரும்பொழுது சொல்லிட்டு வருவதில்லை அந்த சின்ன மொட்டு திட்டியுமா உனக்கு புத்தி வரலைன்னு? மரம் கேட்க..
ரோசம் வராமல் ரோஜாவிடம் சென்றேன் நான்..
முள் இருப்பது உங்களுக்கு பிடிச்சிருக்கான்னு? நான் கேட்க..
முடி இருக்குறது உங்களுக்கு பிடிச்சுருக்கான்னு நானும் கேட்கவா? இப்படி ரோஜா கேட்க..
முகத்தில் அறைவாங்கியவனாய் நான் மியாவ் மியாவிடம் குட் மார்னிங் சொல்ல..
பேட் மார்னிங் சொல்லியது பூனை..
ஏன்னு நான் கேட்க..
காலையில் நான் மனிதர்கள் முகத்தில் விழிப்பதில்லையென்ற பதில் பூனையிடம்..
விழி பிதுங்கி விடியலை தரும் சூரியனிடம் ஏன் இப்படி சுட்டெரிக்கிறாய்ன்னு? நான் கேட்க..
உங்களை மாதிரி எரித்து சுடவில்லையே என்ற பதில் சூரியனிடம்..
சூரியனிடம் கிடைத்த சூட்டை அணைக்க தண்ணீரிடம் சென்றேன்..
இப்படி உனக்கென்றோரு வழியில்லாமல் கிடைத்த வழியிலெல்லாம் செல்கிறாயே ஏன் என்று? நான் கேட்க...
எனக்கேதாவது வழிசொல்லுங்கன்னு குறி கேட்க சாமியார் கிடைக்கலைன்னு தண்ணீர் கூற..
தண்ணீரின் பதிலில் மூழ்கிப்போன என்னை மீட்டெடுத்த மீனிடம் எப்படியிருக்கிறாய்ன்னு?நான் கேட்க...
துள்ளி குதிச்சு சந்தோசமாயிருக்கேன்னு மீன் சொல்ல
காலில்லாமல் எப்படி குதிப்பாய்? என்று நான் குறும்பாய் கேட்க..
காலிருந்தாலும் உன்னால தண்ணீரில் குதிக்க முடியுமான்னு? மீன் கேட்க..
வாயடைத்து போனேன் நான்..
34 comments:
வசந்த்,மனிதனை விட இயற்கையும் பூச்சி புழுக்களும் கூட மனிதனைக் கேவலமாகக் கிண்டல் பண்ற அளவுக்குத்தானே இன்று மனிதனின் செயற்பாடுகள்.அவைகளை வரிசைப்படுத்தியிருக்கிறீர்கள்.தேடல் தேடல்.சமூகச் சிந்தனை.அருமை.
ஐயா.. ராசா.. வசந்து.. நல்லா இருய்யா..
நல்லா இருக்குய்யா.. :-)
வாவ்வ்வ் மிக அருமை நண்பா.... கர்ப்பனையுடன் கருத்தும் சொல்லமுடியும் என்பதை புரிந்துக்கொண்டேன்... நன்றிபா
அட.. பிரஃபைல்ல ஃபோட்டோவ மட்டுமில்ல உங்களைப் பத்தியும் மாத்தி மாத்தி எழுதி அசத்துறீங்க...
பதிவ பத்தி வேற என்ன சொல்ல...
எப்டி இப்டி எழுதுறீங்கன்னு பிரமிப்பில
//வாயடைத்து போனேன் நான்..//
வசந்த்து என்ன ஆச்சு?.... இறந்தவர் பார்வை, டயருங்க பேசிக்கிறது, இப்போ இயற்கையோட...
ரொம்ப அருமையா இருக்கு. மொட்டு, தென்னை கொஞ்சம் விரசம் ஆனாலும் ரசிக்கும்படியாய் யாவும் இதமே...
பிரபாகர்.
//உங்களை மாதிரி எரித்து சுடவில்லையே என்ற பதில் சூரியனிடம்..
//
இது தான் வஸந்த் டச்
நல்ல சிந்தனை.எல்லாம் அதன் இடத்தில் இருக்க நாம்தான் உலவிக்கொண்டிருக்கிறோம்.வாயடைத்து போவதற்கும் ஞானம் வேண்டும்!
நல்ல கற்பனை
நல்ல கற்பனை
'இயற்கையுடன் வசந்த்'.. அருமை:)!
/இயற்கையுடன் சில நேரம் உரையாடலாம் என்று காலார நடந்து தோட்டத்தில் உலாவினேன்..
./
:-))))
இயற்கை கற்றுத் தரும் பாடங்களை நாம் உணர்வதே இல்லை. உணர்த்தி இருக்கிறீர்கள்.
உங்கள் கற்பனை திறனுக்கு நான் ரசிகன் .... எது எழுதினாலும் ரசிக்கும் படியா இருக்கு... மொட்டு பதில் அருமை...
காலிருந்தாலும் உன்னால தண்ணீரில் குதிக்க முடியுமான்னு? மீன் கேட்க..
excellent humour and best final touch VASANTH
காலிருந்தாலும் உன்னால தண்ணீரில் குதிக்க முடியுமான்னு? மீன் கேட்க..
excellent humour and best final touch VASANTH
//ஐயா.. ராசா.. வசந்து.. நல்லா இருய்யா..
நல்லா இருக்குய்யா.. :-)//
repeatea......
vote poatachu
வசந்த், அசந்து போக வைத்து விட்டீர்கள். சூப்பர்.
-வித்யா
நானும்தான் வசந்து. வாயடைச்சுப் போனேன். அப்புறம் ஏன் எழுதமாட்டேன்னு பிட்ட போட்ட.
இயற்கையுடன் உங்களின் உரையாடல் அழகு.
பூனை - நெத்தியடி, மனிதர்களுக்கு.
கருத்து கந்தசாமி வஸந்த் வாழ்க
// velji said...
நல்ல சிந்தனை.எல்லாம் அதன் இடத்தில் இருக்க நாம்தான் உலவிக்கொண்டிருக்கிறோம்.வாயடைத்து போவதற்கும் ஞானம் வேண்டும்!//
என் பதிலும் இதுதான் நண்பா....
நல்ல இடுகை....
மீனும் பூனையும் வசந்துக்கு சரியான போட்டிங்கோ
யப்பா!!!
///காலையில் நான் மனிதர்கள் முகத்தில் விழிப்பதில்லையென்ற பதில் பூனையிடம்..///
...top
காலையில் நான் மனிதர்கள் முகத்தில் விழிப்பதில்லையென்ற பதில் பூனையிடம்..//
மிக ரசித்தேன் ... நல்லாயிருக்கு.
நல்லாருக்கு வசந்து.. !
வசந்த், தங்களோடு சேர்ந்து இயற்கையை ரசித்தேன், படங்களோடு போட்டு இருந்தால் அதில் வசந்த் பன்ச் இருந்திருக்குமே!!
ரொம்ப நல்லா இருக்கு வசந்த்!கலக்குங்க...ஆனால் பதிவு எழுதுவதை நிறுத்த போறதா பயம் மட்டும் காட்டாதீங்க, உங்க பதிவுகளுக்கு நானும் ஒரு ரசிகை!
மிக ரசித்தேன்
ஆகா, ரொம்ப நல்லா இருக்கு வசந்த்
நன்றி ஹேமா
நன்றி சுரேஷ்குமார்
நன்றி பா.ரா.
நன்றி ஞானசேகரன்
நன்றி சுசி ( ஹ ஹ ஹா)
நன்றி பிரபாகர்(நீங்க நம்ம கேரக்டரையே புரிஞ்சுகிடலை என்னோட எல்லா இடுகையுமே கற்பனைகள் தாம் கொஞ்சம் முன்னாடி போயி வாசிங்கப்பு)
நன்றி ஜெட்லி சரவணன்
நன்றி வேல் ஜி
நன்றி அத்திரி
நன்றி சந்ரு
நன்றி ராமலக்ஷ்மி மேடம்
நன்றி இயற்கை (அவ்வ்வ்வ்)
நன்றி ஸ்ரீராம்
நன்றி சீமாங்கனி
நன்றி தேனம்மைலக்க்ஷ்மணன்
நன்றி விசா
நன்றி வித்யா
நன்றி பாலா சார்
நன்றி பின்னோக்கி
நன்றி அபு
நன்றி பாலாசி
நன்றி நவாஸ்
நன்றி நாஸியா
நன்றி ஜீவன்
நன்றி கருணாகரசு
நன்றி பிரியா
நன்றி சஃபி
நன்றி தாமரை மேடம் (மிக்க மகிழ்ச்சி)
நன்றி மேனகா மேடம்
நன்றி தியா
நல்லாத்தான் யோசிக்கறீங்க.... :))
"இயற்கையுடன் சில நேரம்"
நல்ல அருமையான சிந்தனை.
பாராட்டுக்கள் வசந்த்.
அர்த்தமோடு ஒரு ஆவேதனை..
Post a Comment