November 15, 2009
கருவிலிருந்து கரியாகும் வரை...
கருவில் தொற்றிய பயம்
பிறப்போமா
பிறக்கமாட்டோமா என பயம்...
பிறந்து விட்டால்
நடப்போமா என பயம்...
நடக்க துவங்கினால்
கீழே விழுந்துவிடுமோ என பயம்...
நடந்ததும் ஸ்கூலுக்கு
அனுப்பிடுவாங்களோன்னு பயம்...
ஸ்கூலுக்கு போனால்
ஆசிரியர் வீட்டுப்பாடம் கொடுப்பாரோ என பயம்...
வீட்டுப்பாடம் எழுதினாலும்
தேறுவோமா என பயம்...
தேறினாலும் கல்லூரியில்
இடம் கிடைக்குமா என பயம்...
கல்லூரியில் இடம் கிடைத்தாலும்
பிகர் இருக்குமா என பயம்...
பிகர் இருந்தாலும்
சைட் அடிக்க பயம்...
சைட் அடித்தாலும்
பிகர் திட்டிவிடுமோ என பயம்...
திட்டினதுக்கு அப்பறம்
அடி விழுமோ எனபயம்...
திட்டாமல் சிரித்துவிட்டால்
காதல் வந்துவிடுமோ என பயம்...
காதல் வந்துவிட்டால்
கல்யாணம் பண்ண பயம்...
கல்யாணம் பண்ணிவிட்டால்
குழந்தை பிறக்குமா என பயம்...
குழந்தை பிறந்தால்
ஆணா பெண்ணா என பயம்...
பெண்ணாக இருந்தால்
படிக்குமோ படிக்காதோ என பயம்...
படித்துவிட்டால்
மாப்பிள்ளை கிடைக்குமா என பயம்...
மாப்பிள்ளை கிடைத்தாலும்
வரதட்சிணை கேட்பாரோ என பயம்...
வரதட்சிணை கேட்டாலும்
கொடுக்கமுடியுமா என பயம்...
கொடுத்தாலும் வாங்குவாரோ என பயம்...
வாங்கினாலும் திரும்ப
கேட்பாரோ என பயம்...
கேட்டாலும் முடியாதுன்னு
சொல்ல பயம்...
சொன்னால் மகள் பிறந்தவீடு
திரும்பிடுவாளோன்னு பயம்...
திரும்பினாலும் என் உயிர்
இருக்குமான்னு பயம்...
உயிர் போனாலும்
புதைக்கப்படுமா எரிக்கப்படுமான்னு பயம்...
புதைச்சாலும் மண்புழு
திங்குமோ என பயம்...
எரிச்சாலும் சூடு தாங்க
முடியுமோ என பயம்...
எல்லாம் பயமெனக்கு கருவிலிருந்து
கரியாகும் வரை...
இப்படி பயந்து பயந்து சாவறதுக்கு பதில்
கருவிலே செத்து தொலைகிறேன்....
(நோ ஃபீலிங்ஸ் உண்மையத்தான் சொன்னேன்....)
Subscribe to:
Post Comments (Atom)
39 comments:
வாப்பா புது தெனாலி.:)). எண்ட கதிர்காம கந்தா. இந்தப் புள்ளாண்டானுக்கு வேப்பிலை அடிக்க தோஹால எங்க போய் தேடுறது! பல்ல கடிச்சிக்க ராசா. இன்னும் ரெண்டு மாசம். எல்லாம் சரியாய்டும்.
ப்ரியமுடன் தெனாலி...! என்னை விட நீ ரொம்பப் பயந்தாங்குளியா இருக்கியே.. =))... நல்லாருக்கு வசந்து..!
vaanampaadi sir.. ipdi poattikku pinnoottam podurathu nallaa illa sollitten...!!
tamilmanam sothappal... appaala vanthu pottukkaren vottu.. varta..!
appaadaa voted.. :D
வசந்து என்னாச்சுப்பா.தெனாலி கமல் மாதிரி பிரியமுடன் வசந்த் இப்பிடிப் புலம்புறார்.
அந்தக் கருவில இருக்கிற பெண்குழந்தைக்குச் சொல்லி வையுங்க.இந்தக் காலத்தில இப்பிடிப் பெரிசா எல்லாத்துக்கும் பயப்பிடத் தேவையில்ல.தன்னம்பிக்கை வேணும்.நல்லா படிக்கவேணும்.
வாழ்க்கையில உயரலாம்ன்னு.
நல்ல முன்சிந்தனைதான் வசந்துக்கு.
ஒரு உயிர்க்குள் இவ்ளோ பயமா???பயமா இருக்கு வசந்த் ...
அம்மா சோறு ஊட்டும் பொது பயமும் சேர்த்து தானே ஊட்டுறாங்க......
தாங்கமுடியலடா சாமி...
பயம்.. பயம்..
ஏற்கனவே கவிதை என்றாலே பயம்...
இப்ப இந்த கவிதை படிச்ச பிறகு பயம் டபுள் பயம்..
மொத்தத்தில நீங்க கல்யாண பயத்தில இருக்கீங்கன்னு தெரியுது....
அதெல்லாம் தானா பயம் போயி துணிவு வந்துடும்பா..... லூஸ்ல விடுங்க... :))))
எல்லாரும் சொல்லியிருக்கமாதிரி ப்ரியமுடன் தெனாலின்னு பேர் மாத்திருங்க :)
:-)))
'ப்ரியமுடன் தெனாலி' இது நல்லாயிருக்கே!
பயங்களின் துரத்தல்தானே பிழைக்காவது வைக்கிறது!
யாமிருக்க பயமேன்
சரவணன் இருக்க பயமேன் !!!
இவ்வளவு பயம்! வாழ்கையே பயமென்றால்
வாழ்வதெப்படி?
அதுவும் ஒரு ஆண் சிங்கம் ச்சச்சேசே....அசிங்கம்
“வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்”
துன்பம், துயரம்,சோகம்,துக்கம்,
தோல்வி,பயம் இவற்றுக்கு
எதிர்நீச்சல் போட வேண்டும்
ஆமாஆஆ பயம் என்றால்
அது என்ன வசந்த்?
எனக்கு சுத்தமா........தெரியாது
உங்களுக்கே தெரியும் வசந்த்.
பதிவு எழுதுவதில் எத்தனை பயம்.
முதலில் பதிவு முழுதும் எழுதி முடிக்க முடியுமா என்ற பயம்.
எழுதினால் பிழைகள் இருக்குமோ என்று பயம்.
பதிவு போட்ட பிறகு ஓட்டு போடுவார்களா என்ற பயம்.
பின்னூட்டம் வருமா என்ற பயம்.
ஹிட்ஸ் கிடைக்குமா என்ற பயம்.
அனானிகள் சிலரின் அக்கப்போருக்கு பயம்.
பிரபல இடுகை ஆகுமா என்ற பயம்.
எல்லாம் நடந்துவிட்டால் அடுத்த இடுகை இதை விட சிறப்பாக இருக்கவேண்டுமே என்ற பயம்.
இத்தனை பயங்களையும் தூக்கி போட்டுவிட்டு தொடர்ந்து பதிவு எழுத துணிவு உங்களுக்கு எங்கிருந்து வருகிறதோ அங்கிருந்தே வாழ்க்கை வாழவும் துணிவு வரும்.அதனால் வாழ்க்கையை துணிவோடு எதிர்கொள்ளுங்கள்
அய்யயோ ரொம்ப மொக்கை போட்டுட்டனோ.......சாரி தல....
:)))
தெனாலி பார்த்த எஃபெக்டா?!!
இதுக்குத்தான் நான் அப்பவே கமல் படம் எல்லாம் பாக்குறதேட நிறுத்திக்கேன்னு சொன்னன் கேட்டியா? இப்படியா எங்களை பயமுறுத்துவது.
இந்த எல்லாப் பயம் இருந்தாலும் வாழ்ந்து தானே ஆக வேண்டும். நல்லா இருக்கு கவுஜை.
நன்றி வசந்த்.
பராசக்தி சிவாஜி
தெனாலி கமல்..
ஆகிய இருவரையும் மிஞ்சிவிட்டீர்கள்..
என்ன கொடுமை சரவணன்..
குழந்தை, கருவிலே சாதல் தவிர ஓகே வசந்த்.
பிரபாகர்.
இடுகை போட்டவுடனே முதல் ஓட்டு
பாசிட்டிவா வருமா / நெகடிவ்வா வருமா?
தெனாலி படம் தான் நினைவுக்கு வருகிறது. நல்லா இருக்கு வசந்த்
நல்ல பதிவு தெனாலி
முடிவ படிக்கிற வரைக்கும், என்ன முடிவோன்னு பயம்....
தல உமக்குள்ள இவ்வளவு பயமா?? பாத்துப்பா பதிவுலகம் பயந்துடப்போது...:-))
//கல்லூரியில் இடம் கிடைத்தாலும்
பிகர் இருக்குமா என பயம்...
பிகர் இருந்தாலும்
சைட் அடிக்க பயம்...//
ரொம்ப முக்கியமான பயமே இதுதான்.
நல்லாருக்கு நண்பா....
டச்சிங் டச்சிங்... நல்லாயிருக்கு தோழா!!
ரொம்ப பயங்காட்டுறீங்களே மக்கா
//இப்படி பயந்து பயந்து சாவறதுக்கு பதில்
கருவிலே செத்து தொலைகிறேன்....//
முடிவு அருமை வசந்த் ..................
நகைச்சுவையுடன் கூடவே வலியை சொல்றீங்க எப்படி ?????
அப்பாடி இவ்வளவு பயமா ?
//சைட் அடித்தாலும்
பிகர் திட்டிவிடுமோ என பயம்...
சும்மாத்தானே சொன்னீங்க ??.. திட்டுறதுக்கு எல்லாம் பயப்படுற மாதிரி தெரியலையே
ஏற்கனவே பயம்
இந்த பதிவைப் படித்ததும் பயம் இன்னும் அதிகமாயிடுச்சு..
ஆமா தெனாலிதான் ஞாபகம் வந்துச்சு வசந்த்
:-))))
வழக்கம் போல் கலக்கல் மச்சான்
ரொம்பதான் பயம்..!
நல்ல படைப்பு வசந்த்!!
பயப்படுவதற்கு நான் பயந்ததே இல்லைனு நான் தான் அடிக்கடி தெனாலி மாதிரி சொல்லிட்டு திரியுவேன், நீங்களுமா? சூப்பர்!
பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த அன்பு கலந்த நன்றிகள்...
//திட்டாமல் சிரித்துவிட்டால்
காதல் வந்துவிடுமோ என பயம்...//
ஆமா சிரிச்சிட்டாலும் :)
கிட்டத்தட்ட எல்லா பயத்தையும் கவர் பண்ணி கலக்கி விட்டீர்கள்..
தெனாலி படம் பார்த்த மதுரியே இருக்கு நண்பா... கலக்குங்கோ
Post a Comment