தன்மானம் காக்க
அன்றொரு நாள்
முறத்தை தூக்கினாள்
மறத்தமிழச்சி
இன்றோ
தமிழ்மானம் காக்க
துப்பாக்கியை தூக்குகிறாள்
மறத்தமிழச்சி..
இளமை,
கனவு,
குடும்பம்,
நாடு,
பாசம்,
சிரிப்பு,
சந்தோசம்,
காதல்,
அழகு,
உறக்கம்,
நிம்மதி,
நாடு,
மக்கள்,
அனைத்தும்
இழந்திவள்..
பெற்ற விருது இந்த ஏகே 47...
பிறந்தோம்
வாழ்ந்தோம்
என்றில்லாமல்
வாழப்பிறந்தவள்...
40 comments:
//பெற்ற விருது இந்த ஏகே 47...//
நச்னு இருக்கு கவிதை
சபாஷ் வசந் பார்த்தவுடன்
கண்ணீருடனும்,ஒரு புத்துணர்ச்சி
கொடிகள் புயலானது...
“வாழப்பிறந்தவள்”
எல்லோர் மனங்களிலும்
எடுத்துக் காட்டுக்கு நன்றி
வாழப் பிறந்தவள் மனதைக் கனக்கச் செய்கிறாள் வசந்த்:(!
அமைதியும், பொறுமையும் காத்து (அடக்கி வாசித்து) பின் புயலாய் எழவேண்டும், இது பதுங்கும் அமைதிக்காலம். இப்ப இந்த கவிதையும் படமும் தேவையில்லை எனபது என் கருத்து. உங்கள் நேக்கம் புரிந்தாலும் இது வேண்டாமே. முள்வேளி மக்களும், அகதிகளும் நாடு திரும்பும் நேரத்தில் இணையத்திலும் சரி, பத்திரிக்கையும் சரி பொறுப்புடன் நடக்க வேண்டும். எனக்குப் பட்டதை சென்னேன். நன்றி வசந்த்.
சாவிலும் சரித்திரம் படைப்பவள்
வீரத்தமிழச்சிக்கு என் வீர வணக்கங்கள்...
சாதிக்கப் பிறந்தவர்கள் தமிழர்கள்... அடங்கிக் கிடப்பவன் தமிலநல்ல என்பதனை உலகுக்கு உணர்த்திய எம் உறவுகள் இவர்கள். என்றும் போற்றுவோம் இவர்களை.
கார்த்திகை மாதத்தில் ,மாவீரர்களை நினைக்கும் உறவுகளோடு ,இன உணர்வு சொல்லி இணைகிறீர்கள் வசந்த்.நன்றி.தமிழோடு இணைவோம் என்றும்.
இந்த ஒரு இடுகைக்கு உனக்கு நான் தலை வணங்குகிறேன் வசந்த். நன்றியும் பாராட்டுகளும்.
நல்லாயிருக்கு மச்சி! ஆனா, கொஞ்சம் லேட்டு!!
No comments :(
//தன்மானம் காக்க
அன்றொரு நாள்
முறத்தை தூக்கினாள்
மறத்தமிழச்சி
இன்றோ
தமிழ்மானம் காக்க
துப்பாக்கியை தூக்குகிறாள்
மறத்தமிழச்சி..//
ரொம்ப சரியாக எழுதியிருக்கீங்க, நல்லதொரு பகிர்வு.
என்று தான் அவர்களுக்கெல்லாம் ஒரு விடிவு காலம் வருமோ/
//பிறந்தோம்
வாழ்ந்தோம்
என்றில்லாமல்
வாழப்பிறந்தவள்...//
வீர வணக்கங்கள்.....
அனைத்தும்
இழந்திவள்..
பெற்ற விருது இந்த ஏகே 47...
கவிதையில் உயிர் வலியின் ஓசை கேட்கிறது வசந்த்..
படம் பார்த்ததும் தோன்றிய உணர்வுகளோ!
வழக்கம் போல கலக்கீட்டிங்க வசந்த்..ஒரு நல்ல கருத்து உள்ள கவிதை தந்தமைக்கு வாழ்த்துக்கள் நண்பா.
ம்ம்.... விருதை அடையத் தூக்கிய வில்லுப்பா இது...! ஆளப் புறப்பட்டவர்கள்.... இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்... ஒவ்வொரு உண்மைத் தமிழின் உள்ளத்திலும்...!
ஆமாம் நமக்கேன் விஜயை அஜித்தை கிண்டல்
செய்ய தோணுது ??
வாழ்க்கை தொடரும் என்ற நம்பிக்கையில் நாம்.
உணர்வின் பதிவு.நன்றாகவே!
???
ம்ஹூம்...நல்லா இருக்கு வசந்த்...ஆனா இந்த விருதுகள் தவிர்க்கப்பட வேண்டும்
இனிவரும் காலங்களிலாவது.
நல்லதொரு கவிதை !!!
கவிதையும் புகைப்படமும் சேர்ந்து மனதைப் பிசைகின்றன.
இன்னிக்கு தூக்கம் அவ்ளோதான்.
//பிறந்தோம்
வாழ்ந்தோம்
என்றில்லாமல்
வாழப்பிறந்தவள்...//
உண்மைதான் வசந்த். எனக்கு வேற வார்த்தைகள் வரல....
//அனைத்தும்
இழந்திவள்..
பெற்ற விருது இந்த ஏகே 47...//
:(((((
எல்லாம் சில பாழும் அரசியல் நாய்களால் வசந்த்...
பிரபாகர்.
very nice....வாழ்த்துக்கள்!!!
யதார்த்தம்
me the 1st.....
//இழந்திவள்..
பெற்ற விருது இந்த ஏகே 47...//
மிகவும் ரசித்த வரிகள் வசந்த்...அருமை வாழ்த்துகள்...
தமிழச்சி வாழ்க
அன்றே போருக்கு மகனை வீரத்துடன் அனுப்பியவள் .........................பெண் மட்டுமே பிள்ளை பெறுகிறாள் .....அவள் பொங்கி எழுந்தால் ....யாரு சொன்னது பெண்களால் முடியாது என்று
ஏதோ நல்ல விஷயம் சொல்ல வர்றீங்கன்னு தெரியுது. ஆனா, என்ன அது? ;)
நல்லா இருக்குங்க.
//அனைத்தும்
இழந்திவள்..
பெற்ற விருது இந்த ஏகே 47...//
வசந்த்,
நல்ல முயற்சி. விரைவில் ஒரு "சிறந்த" கவிஞரை அடையவிருப்ப(த்)தில் மட்டற்ற மகிழ்ச்சி நண்பா.
கவிதை அருமை வசந்த்.
ஒரு சின்ன சந்தேகம்.
//தன்மானம் காக்க
//அன்றொரு நாள்
//முறத்தை தூக்கினாள்
//மறத்தமிழச்சி
புலியை முறத்தால் அடித்து விரட்டியது எப்படி தன்மானம் ஆகும். எனக்கு புரியவில்லை. வீரத்தைக் காட்டும் விஷயம் தானே ?
வசந்த் - வார்த்தைகள் தேடுகிறேன் ...
சந்தோஷமும் வருத்தமும் ஒரு சேர நிற்கிறது
பெண்ணே... பிறந்து இருந்தால் உன்னை போல் பிறந்து இருக்கவேண்டும். வாழ்ந்து இருந்தால் உன்னை போல் வாழ்ந்து இருக்க வேண்டும். இறந்து இருந்தால் போர்களத்தில் இறந்து இருக்க வேண்டும்
பெண்ணே... பிறந்து இருந்தால் உன்னை போல் பிறந்து இருக்கவேண்டும். வாழ்ந்து இருந்தால் உன்னை போல் வாழ்ந்து இருக்க வேண்டும். இறந்து இருந்தால் போர்களத்தில் இறந்து இருக்க வேண்டும்
எனக்கு மிக பிடித்த... மிக வலிமையான கவிதை இது. படம் மிக மிக கம்பீரம்.
மனம் வலிக்கிறது....
கார்த்திகை, மாவீரருக்கான மாதம் . பொருத்தமான பதிவு.நன்றி.
புகைப்படமே தனியொரு தலை சிறந்த கவிதையாகவும் கவிதை ஒரு நல்ல
புகைப்படம் போன்ற வாழ்க்கைப் பதிவாகவும் உள்ளது.
நெகிழ்வுகள் !
www.susenthilkumaran.blogspot.com
Post a Comment