நானும் என் லவ்வரும் மதுரக்காரய்ங்கங்க..ரெண்டுபேரும் ஒரு நாள் குளத்தங்கரையில் உக்காந்திருந்தோம்..என் ஆளு இருக்காளே தொட்டு பேசினா பிடிக்காதுங்க..தொட்டோம்ன்னு வச்சுக்கங்க அவ்ளோதான் நம்ம காணாம போய்டுவோம்..அப்டியே ரெண்டுபேரும் ஒருத்தர ஒருத்தர் பாத்துட்டு ஒட்டி உரசி உக்கார்ந்துட்டு கனவு கண்டுட்டு இருந்தோம்ங்க சூடா இருந்த எனக்கு அவளோட குளுமை இதமாய் இருந்துச்சு...
எனக்கும் அவளுக்கும் கொஞ்சம் கூட பொருத்தமே இல்லீங்க..நான் குண்டா இருப்பேன்..அவ குண்டுமில்லாம ஒல்லியுமில்லாம இருப்பா..நான் பூ மாதிரி மனசு அவள் கொஞ்சம் கடு கடுன்னு இருப்பா..நான் கொஞ்சம் வெள்ளையா இருப்பேன் அவள் ரொம்ப கலரா இருப்பா..இருந்தாலும் எப்டியோ ரெண்டுபேருக்கும் ஒரு நாள் செட்டாயி அன்னிக்கிருந்து ஒரேலவ்வுதான் போங்க..உங்கவீட்டு லவ்வு எங்க வீட்டு லவ்வா ஊர் உலக லவ்வுன்னு வச்சுக்கங்களேன்..
எங்களையே மறந்து நாங்க இருக்கும்போது ஒரு அஞ்சுபேர் வந்தாய்ங்க எங்க இருந்து வந்தாய்ங்கன்னு தெரியலை எப்டி வந்தாய்ங்கன்னும் தெரியலை நாசமத்துபோனவனுங்க..அஞ்சுபேரும் ஒவ்வொரு தினுசா இருந்தாய்ங்க..கிட்ட நெருங்கி வந்துட்டாய்ங்க அவய்ங்க மூஞ்சியும் முகரகட்டைகளும் .டேய் ரெண்டு பேரு சேர்ந்து காதல் பண்றீகளோ? அப்டின்னு கேட்டுட்டு என் ஆள ஒரு மாதிரி பார்த்தாய்ங்க..
திடீர்ன்னு எங்கயோ தூக்கிட்டு போனாய்ங்க பெரிய வாசல்தான் இருந்துச்சு நல்லா ரெண்டு வரிவரியா கதவு போட்டு பிரமாதமா இருந்துச்சுங்க கதவு..கதவப்பார்த்தாலே ஆசைவருமுங்க...எங்கடா எங்களை துக்கிட்டு போறீங்கன்னு நான் அவய்ங்ககிட்ட கேட்டேன்..அதுக்கு ஒருத்தன் சொல்றான் எங்க எஜமானுக்கு ஒரு விதமான ஆச அதான் உன்னோட ஆள தூக்கிட்டு வரச்சொன்னார் நீயும் இருந்தியா சரி உன்னைய ஏன் விடுவானேன் நீ யார்கிட்ட்டயாச்சும் போட்டுகுடுத்திட்டனா அதான் உன்னையும் சேர்த்து தூக்கிட்டோம்ன்னான்..
வாசல்ல ஒரு முப்பதோ கூடயோ குறையோ தெரியல அவ்வளவு செக்யூரிட்டி இருந்தாய்ங்க என்னாங்கடா நாங்க என்ன தீவிரவாதியா இத்தினிபேர் இருக்காய்ங்க செக்கப்புக்குன்னு கேட்டா எங்க எஜமான் ரொம்ப பணக்காரர் அவருக்கு உங்களாலன்னு இல்ல யாராலயும் உயிருக்கு சேதம் வந்துடக்கூடாதுன்னுதான் இத்தனை செக்யூரிட்டி தெரியுமா?ன்னு கேட்டுட்டு செக்யூரிட்டிகிட்ட சொல்லி எங்களையும் செக்பண்ண சொல்லி உள்ளாற அனுப்பிட்டாய்ங்க உங்கவீட்டு செக்கப்பா எங்கவீட்டு செக்கப்பா யம்மாடி குதறியெடுத்துட்டாய்ங்க ....
நாந்தான் பாவம் அவ தப்பிச்சுட்டா பொண்ணுன்னா பேயே இறங்கும் இவய்ங்க மட்டும் அதுக்கு விதிவிலக்கா என்ன? அவளும் நானும் செக்யூரிட்டி முடிஞ்சு நிக்கும்போதே ஒருத்தன் தள்ளிவிட்டுட்டான் வீட்டுக்குள்ளாற யம்மான்னு ரெண்டு பேரும் போறோம் போறோம் போய்ட்டே இருக்கோம் எவ்வளவு நீளமுன்னே தெரியலை பின்னாடி ஒருத்தன் எங்களை தள்ளிட்டே வந்தான் வளைஞ்சு நெளிஞ்சு ம்மா யப்பான்னு மூச்சு திணறிருச்சுங்க..அவ்ளோ நீளமான வீடுங்க..
கடைசியில தொப்புன்னு ஒரு இடத்தில போய் விழுந்தோம்..அங்க இருந்தாருங்க எஜமான் என்னையும் என் ஆளையும் ஒருமாதிரி பாத்தாரு பின்ன ரெண்டுபேரையும் ஒரே ரூம்ல அடைச்சு வச்சாரு அவ என்னடான்னா புலம்புறா..நான் பொறுமையா இருன்னு சொல்லிட்டு இருக்கும்போதே எதோ ஒண்ணு ரெண்டு பேரையும் அப்புடியே கர கரன்னு அமுக்கி சுத்திகித்தி கூலாக்கிடுச்சு..ரெண்டுபேரோட உசிரும் ஒண்ணா போனதுலயும் ஒரு சந்தோசமுங்க...
விதி வழியது இட்லியா சட்னியா பொறந்தா இப்பிடித்தான் கூலாகி சாவணும்ன்னு..
52 comments:
அனேகமா நாந்தான் முதல்ல என்று நினைக்கிறேன் ....
இல்லையா வசந்த்
kallakkal sir.. i mean story ..
மீ த பர்ஸ்ட்டோய்..
தங்க முடியலடா சாமி...
இட்லி, சட்னியா பொறந்தா இப்படித்தான்..
//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அனேகமா நாந்தான் முதல்ல என்று நினைக்கிறேன் ....
இல்லையா வசந்த் //
ஆமாம் நீங்க தான் பர்ஸ்ட்
ஏன் திடீர்ன்னு கமெண்ட் மாடரேஷன் போட்டுட்டீங்க?
வெரி நைஸ் - கமெண்ட் மாடரேஷன் பற்றி கேள்வி கேட்ட உடனே எடுத்துட்டீங்க.
வஸந்த் எப்படிடா உன்னால மட்டும் முடியுது..:)
வசந்த் சூப்பர் கற்பனை!
appuram vanthu padikkaren.. sry..
அய்யோ அப்படியா....ம்ம்ம் அப்புறம்?
எப்பூடி இப்பிடி எல்லாம் :)
அடக் கடவுளே...இட்லியும் சட்னியுமா !சரியாப்போச்சு.படிச்சு முடிக்கிற வரைக்கும் என்னடா இது காதல் கதைன்னு வாசிச்சிட்டே இருந்தேன்.வசந்து....!
நான் கூட ஓனருக்கு காம பசியோனு நினைச்சிட்டேன் :)
நல்லாருக்கு தம்பி... இதே மாதிரி நீங்க நிறைய எழுதிட்டதால அது என்னான்னுதான் ஆரம்பம் முதலே நினைச்சி படிச்சிட்டு வந்தேன்.
பிரபாகர்.
kalakkal vasanth
நல்ல கற்பனை. நன்றி வசந்த்.
கடைசியில் ட்விஸ்ட் இருக்கும்னு நினைச்சேன்....
ஆனா இட்லி சட்னினு நினைக்கில வஸந்த்.
கலக்கல்.
//விதி வழியது இட்லியா சட்னியா பொறந்தா இப்பிடித்தான் கூலாகி சாவணும்ன்னு..//
முடியல
அருமை:)!
வெத்தலை பாக்குன்னு நினைச்சேன்...இட்லி சட்னி நல்ல ட்விஸ்ட்!! ;-))))
தக்காளீ சட்னி தர்ணா பண்ணுதாம் வசந்த். =))
கலகிடிங்க வசந்த் சிரிபூ சிரிப்பு இத 10 நபர்களிடம் சொனா தான் அடங்க்கும்
அட, அட, அட அட!
ஆகா...ரொம்ப எதிர்பார்த்து ஏமாந்துட்டனே. நல்ல கற்பனை நண்பா....
ஹஹஹஹ படிக்கும் போதே தெரிந்தது இன்னைக்கு எதையோ வம்புக்கு இழுத்து இருக்கன்னு...கடைசி வரை புத்திக்கு எட்டவேயில்லை இருந்தால் தானே எட்ட என்பது வேறு விஷயம்..ஐயா ராசா ஏன் ஏன் இப்படி எப்படி எப்படி இப்படியெல்லாம்....வேணாம் அழுதுடுவேன்.....
//விதி வழியது இட்லியா சட்னியா பொறந்தா இப்பிடித்தான் கூலாகி சாவணும்ன்னு..//
ஐய்யா சாமி முடியல. இனி மேல் தான் இட்லியோ சட்னியோ சாப்பிட போறதே இல்ல. லவ்வர்ஸ் வாழ்க....
மகனே! இப்ப நீ சட்னியாக போற...
என்னவோ ஏதோன்னு நினைச்சேன். வழக்கம் போல ட்விஸ்ட் வெச்சுட்டீங்களா...
ஆனா, இட்லி சட்னிக்கு இந்த பில்டப் கொஞ்சம் அதிகம். :)
Super-a Irunthathu Story..
:)))
Avvvvvvvvvvv.....
mudiyala saami....
Avvvvvv...
உங்க வீட்டுக் காதலா?
எங்க வீட்டுக் காதலா?
இரண்டும் இல்லாத அதற்கும்
அப்பால் பட்ட காதல்....
வசந்தோட...புதுமைக் காதல் இது.
கவனம் அப்புறம் சாம்பார்
சண்டைக்கு வரும்...
ஏங்க!தளதளவென்று நான் இருக்கும்
போது அந்த காரமா இருக்கிற
முளகா மூஞ்சிதான் வேணுமா?
என்றால்!!{சக்களத்தி சண்டையில}....
இட்லி பாடு சட்னிதான்.
யப்பா, யப்பபா...... தாங்கமுடியலை......எப்படி ...இப்படி.ரூம் போட்டு உட்கார்ந்து யோசிப்பாயோ.....ஹ.ஹா.
//ஒரு அஞ்சுபேர் வந்தாய்ங்க //
//முப்பதோ கூடயோ குறையோ தெரியல அவ்வளவு செக்யூரிட்டி இருந்தாய்ங்க//
இந்த ஏரியாவிலேயே தெரிஞ்சுபோச்சு இது சாப்பிடுற மேட்டர்னு
வசந்து கொசந்து..
:-)))
மிக அருமை வஸந்த்.
ரொம்ப இரசிச்சேன்.
ரைட்டு விடு. இனி ஒன்னும் பண்ண முடியாது :- )
இட்லி சட்னியா ?.. விட மாட்டேங்குறிங்களே.
ஹீ..ஹீ..நான் படிச்சப்போ, மல்லிகைப்பூ+அல்வான்னு நினைச்சேன்
அப்போ அடுத்து பொங்கல்-சாம்பார், பூரி-கிழங்கு காதல் கதைகள் வரிசையா வருமா வசந்த்....... :))
//ஒரு அஞ்சுபேர் வந்தாய்ங்க //
"இந்த ஏரியாவிலேயே தெரிஞ்சுபோச்சு இது சாப்பிடுற மேட்டர்னு".ஆமாம் எனக்கும்.
நல்லாச் சட்னி அரைக்கறீங்க வசந்த்
நல்ல கற்பனை வசந்த்!!
இருந்தாலும் உங்களுக்கு இவ்ளோ கற்பனை ஆகாது வசந்த்.
சூப்பர்.
கற்பனை நல்லா இருக்கு வசந்த் இப்போ எல்லாம் ஈசியா கண்டு பிடிக்கமுடிஉது வசந்த்....
இட்லிக்கு ஒரு காதலா ......................வசந்த் முடியல
அடப்பாவிகளா!
எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்கப்பா....
நன்றி *** Star ஜான் (நீங்கதான் அநேக முதல் மிக்க நன்றிப்பா)
நன்றி *** ஸ்ரீகிருஷ்ணா
நன்றி *** ராகவன் சார் (கோ இன்சிடென்ஸ் நான் எடுக்குற நேரத்துல நீங்க அந்த பின்னூட்டம் போட்டீங்க என்ன ஒற்றுமை சில பல காரணங்களுக்காக ஒரு சில இடுகைகளுக்கு பின்னூட்ட மட்டுறுத்தல் பண்ண வேண்டியிருக்கே...எல்லாரும் தங்களை மாதிரி தங்க மனசுக்காரர்களாக இருப்பதில்லையே இப்போ எல்லாம் நீங்க அடிக்கடி வருவதில்லை என்னன்னு தெரியலை)
நன்றி *** வினோத் உன்னைவிடவாடா
நன்றி ***ஆண்டோ முதல்வருகைக்கு..
நன்றி ***ப்ரியா (இதுமாதிரி நிறைய வாட்டி சொல்லிட்டு போயிட்டக்கா ஆனா நீ திரும்பவும் வர்றதேஇல்லை)
நன்றி *** ஹர்ஷிணி அம்மா ஆனாலும் நான்போதும்ன்னு நிறுத்துனப்பிறகும் நீங்க அப்புறம்ன்னு போட்டு சிரிப்பை வர வச்சுட்டீங்க
நாட்டி கேர்ள் :)))
நன்றி *** சின்ன அம்மிணி மிக்க மகிழ்ச்சிப்பா தொடர் வருகைக்கும் உற்சாகமூட்டலுக்கும்
நன்றி *** ஹேமா ...ம்ம்ம்...
நன்றி *** பிரசன்ன குமார் நினைப்பு பொழப்ப கெடுக்கும் ஆமா சொல்லிப்புட்டேன் :)
நன்றி *** பிரபாகர் (இனி எழுத மாட்டேன் எப்பவாது ஒண்ணுதான் இது மாதிரி எழுதுவேன் என்னோட ஸ்டைல் மாத்திக்கிறேன் அண்ணா புரிய வச்சதுக்கு நன்றிண்ணா)
நன்றி *** ராதாகிருஷ்ணன் சார்
நன்றி *** பித்தனின் வாக்கு சுதாகர்
நன்றி *** ஜெட்லி சரவணன்:) ஹ
ஹ ஹா
நன்றி *** வேல் ஜி
நன்றி *** ஞானசேகரன் :))
நன்றி *** ராமலக்ஷ்மி மேடம்
நன்றி *** சந்தன முல்லை (வெற்றிலை வெள்ளையாவா இருக்கும்?)
நன்றி *** நைனா புரியுதுடி
நன்றி *** யாதவன் சொல்லுங்க சொல்லுங்க
நன்றி *** நாஸியா
நன்றி *** பாலாசி ஹ ஹ ஹா
நன்றி *** தமிழரசி ரொம்ப பேசுறீங்க கவியரசி...
நன்றி *** விசா ஏன் ஏன் இப்டி நாந்தான் இங்க இட்லியும் சட்னியும் கிடைக்காம தவிச்சுட்டு இருக்கேன் கிடைச்ச்சும் நீங்க ஏன் சாப்டாம இருக்கீங்க சாப்டுங்க நல்லா....:))
நன்றி *** கலையரசன் உன்னோட இந்த பின்னூட்டத்தை நான் எதிர் பார்த்தேன்...
நன்றி *** விக்னேஷ்வரி ஆமாங்க
நன்றி *** சென்22 முதல் வருகைக்கும்
நன்றி *** சிவாஜிசங்கர் :))))))
நன்றி *** கலா போட்டுத்தாக்குறீங்க சக்காளத்தி சண்டை வேறயா அவ்வ்வ்வ்வ்வ்வ்...
நன்றி *** டக்ஹென் ஆமாம்மா ரொம்ப யோசிக்கிறேனோ..
நன்றி *** நவாஸ் நன்றிப்பா இதை நீங்க கண்டுபிடிக்கணும்ன்னு எழுதல ஒரு ரசனைக்காக கடைசி வரி படிச்சுட்டு இனி மேல இருந்து படிங்கன்னு முன்னாடியே சொல்லபோறேன் அப்புறம் படிச்சாலும் ரசனை ஒண்ணுதான்...
நன்றி *** பா.ரா. ஹ ஹ ஹா சின்னகுழந்தை மாதிரியே இன்னும் நீங்க...
நன்றி *** ஜமால் அண்ணா நலமா?
நன்றி *** உழவன் :)))
நன்றி *** பின்னோக்கி எல்லாரையும் விடச்சொல்லுங்க நானும் விட்டுடுறேன்..
நன்றி *** துபாய்ராஜா ஹ ஹ ஹா
நன்றி *** மாதேவி அதானே நீங்கதான் சமையல் மகாராணியாச்சே :)))
நன்றி *** கதிர் டேஸ்ட்டா இருந்துச்சா இல்லியா :)))
நன்றி *** மேனகா மேடம் :))
நன்றி *** சுசி ஆகாதுதான் என்ன செய்ய கற்பனை பண்றதை தவிர ..எனக்கும் நர்சிம்,கார்க்கி,ஆதி,பரிசல் இவங்கள மாதிரி எழுதணும்ன்னு ஆசைதான் ஆனா சர்க்கில்லையே என்கிட்ட நான் என்ன செய்வேன்? அவ்வ்வ்வ்வ்வ்வ்..... இன்னும் கொஞ்சம் நாளைக்கு இப்டியே கற்பனையிலே காலத்தை ஓட்ட வேண்டியதுதான் நடிகர்திலகம்,மக்கள் திலகம் மாதிரி கற்பனை திலகம்ன்னு பேர்வாங்குற வரைக்கும்...
நன்றி *** சீமாங்கனி மகிழ்ச்சியா இருக்கு..
நன்றி *** வெண்ணிற இரவுகள்
நன்றி *** பிரின்ஸ் ஹ ஹ ஹா
நன்றி *** சந்ரு ம்ம்ம்...
மிக அருமை வசந்த்
இதையும் கொஞ்சம் பாருங்கள்
http://theyaa.blogspot.com/2009/11/blog-post_20.html
சூப்பர் அப்பு..
நல்ல டுவிஸ்ட் கதையில....
ஏய் வெள்ளக்கலர் இட்லி - நல்லா கத எழுதறேப்பா - கடசிலே நச்சுன்னு இட்லி சட்னின்னு பாத்த உடனே அய்யோ இப்படியும் எழுதலாமான்னு ஆசரியப்பட்டேன்
நல்வாழ்த்துகள் வசந்த்
நட்புடன் சீனா
Post a Comment