November 20, 2009

ஆசையில் ஓர் கடிதம்

அன்புள்ள கண்மணியே...

நான் நலம் அதுபோல் உன் நலமறிய ஆவல்,மையினால் எழுதினால் உன் கண்ணீர் பட்டு அழிந்துவிடுமென்பதால் என் கண்ணீரால் எழுதுகிறேன் உன் விழியால் ப(பி)டித்து கொள்வாய் என்ற நம்பிக்கையில்..

பார்த்ததும் காதல் பற்றிக்கொள்ளும் காதல்களுக்கு மத்தியில் பார்க்காமலே உன் மேல் காதல் கொண்டேன்,அதை நீ அறிவாய் என் ரசனை நோக்கியே இருக்கிறது உன் பயணமும் ஆதாலால் வந்த காதலிதுவாய் இருக்கலாம்.

படபடவென்று பேசுகிறாய் தொலை பேசியில்,நீ பேசும்போது என் இமையும் பட படவென்று துடிக்கின்றது இவள் பெரிய வாயாடியென்று,நீயும் நானும் சுவாசத்தால் தூரத்தால் மட்டுமே பிரிவை அனுபவிக்கிறோம்...

மற்றபடி நீ எதைப்பற்றி இந்நேரம் சிந்தித்து கொண்டிருப்பாயோ அதே சிந்தனையுடன்தான் நானும் சிந்தித்து கொண்டிருக்கிறேன்,நீ எப்பொழுது தூங்குவாய் என்று கேட்டுவிட்டே நானும் தூங்குகிறேன்...

நான் உன்னை தேடும் பொழுது நீ கிடைக்கமாட்டேன் என்கிறாய் நான் என்ன செய்ய கண்ணாமூச்சி விளையாட்டாகவல்லவா இருக்கிறது உன்னுடன் தினமும்...

திடீரென்று ஒரு நாள் உன்னிடம் நீ எப்படியிருப்பாய் என்று நான் கேட்க்க உன் வீட்டு கண்ணாடியில் பார் நான் தெரிவேன் உன் முகமாய் நான் மாறி எவ்வளவு நாளாகிவிட்டது என்கிறாய்..

சரிதான் நீ சொன்னது பார்த்தேன் என்வீட்டு கண்ணாடியில் முழுதும் நீ நான் என்று மாறிக்கிடக்கிறேன் என்னை மாற்றி என் இருப்பையும் என் நினைவுகளையும் எடுத்தவளே என்று நான் உன்னைப்பார்ப்பது ? நிஜ வாழ்க்கையில் முடியுமா?

முடியாமல் போய்விட்டால் சொர்க்கத்திலயாவது நாம் சந்திக்கலாம் உனக்காக ஒரு சொட்டு கண்ணீர் மட்டுமே என்னிடம் இப்பொழுதைக்கு....

இதோ இதைப்படித்துக்கொண்டிருக்கும் பல காதலர்களும் நம் போலவே பார்க்காத காதல் தான் செய்து கொண்டிருக்கின்றார்களடி..அந்த நம்பிக்கையில்தான் நானும் இதை எழுதுகிறேன்...

விடை பெறுகிறேனடி கண்ணே...கண்ணீருடன்...

டிஸ்கி: பின்னூட்டமெல்லாம் தாறுமாறா போய்ட்டு இருக்குறதால ஒண்ணே ஒண்ணுமட்டும் சொல்லிக்கிறேன் இது ஒரு கண்ணு இன்னொரு கண்ணுக்கு எழுதுனதுப்பா கண்டிப்பா எனக்கு காதலிக்கிற தகுதியும் இல்ல நேரமும் இல்லை எல்லாம் கை மீறி போய்டுச்சே அவ்வ்வ்வ்...

49 comments:

அன்புடன் மலிக்கா said...

ஹை நாந்தான் ஃபஸ்ட்.

யாரவுக. அம்மணி சீக்கிரம் பாரும்மா இந்த கடிததை
எங்க சகோ கண்கலங்குறாரு

காதல்னா இப்படித்தானா????????

நிலாமதி said...

என் இருப்பையும் என் நினைவுகளையும் எடுத்தவளே என்று நான் உன்னைப்பார்ப்பது ? நிஜ வாழ்க்கையில் முடியுமா.....
..பார்க்காமலே காதலிக்கிறீர்களா? நல்ல கில்லாடி தான் போங்கள்.
நிழலாக தோன்றுபவள் நிஜமாக வாழ்த்துக்கள். .......

தேவன் மாயம் said...

திடீரென்று ஒரு நாள் உன்னிடம் நீ எப்படியிருப்பாய் என்று நான் கேட்க்க உன் வீட்டு கண்ணாடியில் பார் நான் தெரிவேன் உன் முகமாய் நான் மாறி எவ்வளவு நாளாகிவிட்டது என்கிறாய்..
//

ஆகா!! இதயம் இடம் மாறும்..முகமும் இடம் மாறியதா? சூப்பர்!

தேவன் மாயம் said...

4/4

தேவன் மாயம் said...

நம்ம வேலை முடிந்தது வசந்த்!!

Prathap Kumar S. said...

என்ன தல என்னாச்சு...நல்லாத்தானே இருந்த வாத்யாரே... இந்த டாவு மேட்டரே இப்படித்தாம்பா... பாவம் நல்ல இருந்த புள்ள... இப்படி சியான் விக்ரமாயிடுச்சே...

Prathap Kumar S. said...

என்ன தல என்னாச்சு...நல்லாத்தானே இருந்த வாத்யாரே... இந்த டாவு மேட்டரே இப்படித்தாம்பா... பாவம் நல்ல இருந்த புள்ள... இப்படி சியான் விக்ரமாயிடுச்சே...

ஈரோடு கதிர் said...

பாலாண்ண கொஞ்சம் பயபுள்ளைய கவனிங்களேன்

vasu balaji said...

தோ வந்துட்டன். இப்பதான் ஃபார்ம்கு வந்திருக்கான்.அசத்து வசந்து.

ஜெட்லி... said...

காதல் வாழ்க.....

அன்புடன் அருணா said...

நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு!

Unknown said...

அடிக்கடி பார்க்கின்ற யாரையும் நேசிக்கமுடியாது!
நேசிக்கின்ற யாரையும் அடிக்கடி பார்க்க முடியாது! எப்பவோ படிச்ச SMS ஞாபகம் வருது! ரொம்ப ரொம்ப மென்மையா அழகா இருக்கு வசந்த்!

நசரேயன் said...

விடுங்க ஒரு பெண் பிழைச்சிட்டு போகட்டும்

சீமான்கனி said...

ரெம்ப அழகாய் இருக்கு வசந்த் வாழ்த்துகள்....கண்ணாடி முன் ரெம்ப நேரம் நிற்க வேண்டாம்....

ஹேமா said...

வச்ந்து....என்னாச்சுப்பா.சொல்லவேயில்லையே.

கண்களில் காதலின் ஏக்கம்,கண்ணாடியில் காதலின் செய்திகள்,சொல்லாமலேயே காத்திருக்கும் தருணங்கள் அருமை.வசந்துக்குள்ள காதல் வந்தாச்சு !

Admin said...

என்னதான் நடக்குது

Starjan (ஸ்டார்ஜன்) said...

எல்லாம் சரி , கடிதம் போய் சேர்ந்து விட்டதா ....

கலகலப்ரியா said...

எப்டிடா இப்டி எல்லாம்...! கொன்னுட்டா..!

சிநேகிதன் அக்பர் said...

ஹாய்! எழுதுறது எல்லாம் எழுத்திட்டு டிஸ்கி போட்டா நாங்க நம்புவோமா.

வினோத் கெளதம் said...

மச்சி எல்லாம் நல்லா தான் இருக்கு ஆனா கடைசியா டிஸ்கி தான் காமெடி..நம்பனுமா..:)

vasu balaji said...

எங்கள பார்த்த எப்புடீ தெரியுது. இடுகை போட்டு பின்னூட்டம் போட்டப்புறம் டிஸ்கி போடுவியா. அதெல்லாம் முடியாது. எழுதுனது எழுதுனது தான். இப்போ என்னா சொல்லிட்டோம். நாங்களும் ஒரு கண்ணு இன்னோரு கண்ணுக்கு எழுதுனதுன்னு தானே சொன்னோம். அந்த கண்ணுக்கு நீ கண்ணு. என்சாய்.

vasu balaji said...

ங்கொய்யால. விடைபெறுதாம்ல. எங்க ஒரு கண்ணு வடக்கு பக்கம் ஒரு கண்ணு தெக்கயா=))

Krishna said...

இனிமை! ரசித்தேன்.

Kala said...

இன்னும்............கடிதத்தை விடவில்லை?
என்னதான் கூத்தாடினாலும்,
அவங்களிடம் இருந்து காதல்
வரவே வராது கண்ணு...
ஏன் என்றால்.......
இந்தக் காதலுக்கு கண்ணில்லை.

சிவாஜி சங்கர் said...

A long.. But cute Love Letter...
:)

நட்புடன் ஜமால் said...

கண்ணாடி எங்கேப்பா ;)

SUMAZLA/சுமஜ்லா said...

ரொம்பத்தான் உருகறீங்க...உங்க மனைவி கொடுத்து வைத்தவர்கள்...

புலவன் புலிகேசி said...

என்னமா யோசிக்கறீங்க வசந்த்..டிஸ்கி-ல சமாளிச்சிட்டீங்க...

Rajan said...

இந்த கவுஜயே போதும் ....

உங்களுக்கு ஐ லவ் யு பண்ண ஆல் குவாளிபிகேசன்ஸ் இருக்கு

க.பாலாசி said...

மீண்டும் ஏமாற்றம். என்னமோ ஏதோன்னு படிச்சா...டிஸ்கி போட்டா பதில் சொல்றது....

S.A. நவாஸுதீன் said...

அருமை வசந்த். நல்ல வேளை லேட்டா வந்தேன். உங்க டிஸ்கி படிச்சதால நோ கன்ஃப்யூசன்

செ.சரவணக்குமார் said...

பதிவு பிடித்திருந்தது நண்பரே..

Ashok D said...

அல்லோ எச்குச்சும்மி.. என்னையும் உங்க டீம்ல சேத்துபிங்களா...-;

Ashok D said...

25th vote cheers....

அன்புடன் மலிக்கா said...

அப்பாடா நாம போட்ட முதல் வெடி நல்லாதான் வெடிக்குது.. வந்தவேலை முடிஞ்சிரிச்சி..

டிஸ்கிக்கெல்லாம் நாங்க அசரமாட்டோமுல்ல...

சிங்கக்குட்டி said...

அருமை வசந்த்.

டிஸ்கி எல்லாம் போட்டு தப்பிக்க முடியாது, யார் அந்த "கண்மணி"... எப்படியோ நல்லா இருந்தா சரிதான் :-)

Anonymous said...

இதயங்கள் இடம் மாறும் நேரத்தில்.... என்ன ஆச்சு முகங்கள் இடம் மாறிடிச்சு! கலக்கு வசந்து கலக்கு.

அன்புடன் நான் said...

திடீரென்று ஒரு நாள் உன்னிடம் நீ எப்படியிருப்பாய் என்று நான் கேட்க்க உன் வீட்டு கண்ணாடியில் பார் நான் தெரிவேன் உன் முகமாய் நான் மாறி எவ்வளவு நாளாகிவிட்டது என்கிறாய்..//

நல்ல உவமையாய் இருக்கிறது என்று பாராட்டத்தான் வந்தேன்...ஆனா முடிவுல போங்கைய்யா உங்க ஆராட்சியும் நீங்களும் சொல்ல தோன்றினாலும்கூட....... பதிவு ரசிக்கும் படியுள்ளதால் பாராட்டுகள் வசந்த்.

கடைக்குட்டி said...

ஹிஹி.. நம்பிட்டேன்...

சும்மா ஊத்தாதீங்க தல.. லவ் லெட்டர்ன்னு சொல்லியே எழுதுங்க..

என்ன ஃபீலிங்கு ???? :-)

ரோஸ்விக் said...

அண்ணே நீங்க நல்லவரா? கெட்டவரா?
டிஸ்கி படிக்கிறவரை கண் கலங்க வச்சுட்டீங்கப்பூ...
பார்த்து நிறைய பயபுள்ளக சிக்கிரப் போவுது....வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

கடிதம் சரியான இடத்திற்க்கு போகட்டும்

யாழினி said...

நான் நம்பிற்றன் நீங்க கண்ணுக்கு கண்ண பாத்து தான் எழுதியிருக்கிறீங்க என்டத! அருமை வசந்த்!! இப்படி வித்தியாசம் வித்தியாசமா சிந்திக்க உங்களால் மட்டும் தான் முடியும். வாழ்த்துக்கள் வசந்த்!

தமிழ் உதயம் said...

இன்னொரு கண்ணுக்கு எழுதப்பட்டவையாக இருந்தாலும்
சிறப்பா இருக்கு.

பின்னோக்கி said...

வித்தியாசமான சிந்தனை. அருமையான எழுத்து. கலக்குறீங்க வசந்த்.

டிவிஸ்ட் கதை, கவிதைகள் வாங்க எங்கிட்ட வாங்கன்னு போர்டு போட்டுடலாம்க.

சந்தான சங்கர் said...

//உன் வீட்டு கண்ணாடியில் பார் நான் தெரிவேன் உன் முகமாய் நான் மாறி எவ்வளவு நாளாகிவிட்டது என்கிறாய்..//

அருமை.
வசந்த்.
எங்க பக்கமும் வந்துட்டு
போங்க பிரியமுடன்...

பா.ராஜாராம் said...

கிர்ர்ரர்ர்ர்

சுசி said...

டிஸ்கி போட்டா விட்டுடுவோமா???

உண்மைய சொல்லுங்க வசந்த். என்னாச்சு???

(நான் யாருன்னு கேக்கலை)

சுசி said...

ரொம்ப டச்சிங்கா எழுதி இருக்கீங்க.. படமும் சூப்பர்.

Anonymous said...

ஆஹா பிடிச்சிட்டோமுன்னு நினைக்கும் போது எஸ்கேப் ஆயிட்ட வசந்த்...அம்மாடி இப்படி எந்த டாபிக்கும் விட்டு வைக்காமா எப்படி சாமி முடியுது....