உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில்
கால்கடுக்க கன்னியுன்
கால்தடமறிய ஏங்கி
உன் பார்வை வழியினூடான
கோடான கோடி அணுக்களினூடே
தேவியாய் தரிசனம் கண்டேனுனை...
பூவையரின் பூமனங்கண்டேன்
பூத்ததை சூடாமல் ஏந்திகொள்கிறேனதை
உன்னிடமிருந்து உன்னையறியாமல்
பெற்றேனதை பேணித்திரிவதென்
பொறுப்பன்றோ...
விழைகிறாய் ஏனெதுக்கென்று
மறுப்பேதும் சொல்லாமல்
பெண்ணொருத்தியின் வரவறியா
திரும்பிசெல்ல வழியற்ற
மனக்கூட்டின் ஒற்றை
விடிவிளக்காய் வருகிறாய்...
நிமிடங்கூட வீணாகாமல்
ஊடலும் கூடலும் புரிந்தெனை
மெய்மறக்கச்செய்து
இப்பூவுலக படைப்பின்
மெய்யறிய செய்தாய்...
புசிக்காத படையல்கள்
காவலிருக்க நம்
காதலிதினிதாய் நம்இல்லமே
வெட்கப்புன்னகை சிந்துகிறது
நாமதை சிதறாமல் பிடித்து
சேமிக்க அணிகலனற்று கிடக்கிறோம்
வெட்கமற்று...
சிணுங்கலிசை மீட்டெடுத்துனை
நான் இசைபிரம்மாவாக
நீ ஒலிபெருக்காத பெருக்கியாய்
ஒலிக்கச்செய்ததையென் செவி
மட்டும் கேட்க செய்கிறாயதனூடே
சுவற்றின் பொறாமைக் குரலும்
கேட்கிறதென் காதினில்...
நான் உன் வாசம் நுகர்ந்து
துயிலடைய செல்லும் வேளையில்
மீண்டும் வாவென்று நீயழைக்க
மறுக்க வழியற்றவனாய்
நானுனை மீண்டும் மீட்டெடுத்தந்த
ராகதாலாட்டிலே ஆழ்துயிலடைந்தேன்
துகிலற்றே...
கதிரவனுக்கு முன்நீ விழித்தெழுந்து
மென்முத்தமதனை என்னும் உன்னும்
கன்னம் சிவக்க கொடுத்ததை
திரும்ப வாங்கி கொள்ளும்
வேளையில் கைபிடித்திழுத்து
என் மார்போடு உன்னும்சேர
உனை நானணைத்துகொள்கிறேன்
உறக்கம் கெடுத்த ஊடலுக்காய்..
டிஸ்கி:இதுவரையிலும் நானொரு கவிதையெழுதுபவன் என்றெனை வெளிகாட்டி உங்களை அறுக்க விரும்பியதில்லை ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்க்கு ஆளாகிவிட்டேன்.இனி நான் மட்டும் அறிந்த என் சுயரூபம் உங்களனைவருக்கும் தெரியவரும் இதுபோல் தொடர்ந்து..
75 comments:
இவ்வளவு செந்தமிழில் எனக்கு எழுத தெரியாதுங்க , நீங்கல்லாம் இப்படி எழுதின என்ன போல ஆட்கள் என்ன செய்ய ?
puriyuthu ana puriala
nice
யப்ப்ப்ப்பே.... வலைச்சரத்துல கவிஞன்னு போட்டப்பவே நினைச்சேன்...
நல்ல முயற்சி
வாழ்த்துகள்
என்னாச்சு வசந்த்.. நல்லாதானே இருந்தீங்க நேத்துவரைக்கும்?
இவ்ளோ நாள் போட்ட இரட்டை ஓட்டு... இப்பவும்... எல்லாம் இந்த கவிதைக்கு சரி ஆயிடும்.. =)) ... இன்னும் நல்லா எழுத உன்னால் முடியும்... தம்பி..
எனக்கு ஆச்சரியமில்லை. நிர்பந்தம்னு டிஸ்கி போட்டது என்னையா? அப்படின்னாலும் சந்தோஷம். எழுத்துப் பிழை பாரு ராஜா! அசத்து.
good..!
வர்சடைல் நீங்க அப்படின்னு நான் சொன்னதை திரும்ப திரும்ப நிரூபிக்கின்றீர்கள்.
வாழ்த்துகள். கலக்குங்க.. கலக்குங்க
கவிதை அசத்துகிறது நண்பரே....(யாருகிட்டயோ ‘எனக்கு கவிதை எழுத வராது’ன்னு சொன்னதா கேள்விபட்டேன்? ஆனா பின்னிட்டீங்களே தல)
Enna nanba!
arumayaga kavithai ezhuthureenga...
appuram yean kavithai elutha varaathundreenga.
niraya Ezhuthunga nanbaa
:-)
வசந்த் கவிதை அருமை.ஒவ்வொரு வரிகளும் ஊற்றெடுத்த உணர்வில் சொற்களின் விளையாட்டு.இன்னும் நிறைய எழுதுங்க.வாழ்த்துக்கள்.
வசந்தின் இன்னொரு முகம்.
என்ன வசந்த் இப்படி கலக்குறீங்க,சூப்பரு...
பூவையரின் பூமனங்கண்டேன்
பூத்ததை சூடாமல் ஏந்திகொள்கிறேன வெகு சிறப்பான வரிகள்
ஆஹா! ஆஹா!
வாங்க வாங்க வஸந்த்
அன்பின் வசந்த்
ஒன்றுமே புரிய வில்லை - மிகப் பிரயாசைப்பட்டு புரிந்து கொள்ள முயன்றேன்,
சரி
// நிமிடங்கூட வீணாகாமல்
ஊடலும் கூடலும் புரிந்தெனை
மெய்மறக்கச்செய்து
இப்பூவுலக படைப்பின்
மெய்யறிய செய்தாய்...//
//பூவையரின் பூமனங்கண்டேன்
பூத்ததை சூடாமல்
ஏந்திகொள்கிறேனதை
உன்னிடமிருந்து உன்னையறியாமல்
பெற்றேனதை பேணித்திரிவதென்
பொறுப்பன்றோ...//
நான் ரசித்த வரிகள்
நல்வாழ்த்துகள் வச்ந்த்
படம் ஒட்டாத கவிதை. மீண்டும் முயற்சிக்கவும்!
Really nice vasanth! Good! Keep it up!
///உன்னிடமிருந்து உன்னையறியாமல்
பெற்றேனதை பேணித்திரிவதென்
பொறுப்பன்றோ...///
I like this line...
//புசிக்காத படையல்கள் காவலிருக்க நம் காதலிதினிதாய் நம்இல்லமே வெட்கப்புன்னகை சிந்துகிறது நாமதை சிதறாமல் பிடித்து சேமிக்க அணிகலனற்று கிடக்கிறோம் வெட்கமற்று...//
ரசித்த வரிகள் தொடரட்டும்...
வாழ்த்துகள் தல...
வரிகள் அருமை வாழ்த்துகள்
தம்பி மெய்யாலுமே நீ எழுதினதா....?
ஹி... ஹி... சும்மா கேட்டேன். நெசமா சூப்பரா இருக்கு.
வாழ்த்துக்கள்.
பிரபாகர்.
நடக்கட்டும்
200 followers. வாழ்த்துகள் வசந்த்:). இனிமே டமாசுக்குதான். லாஜிக் தேடாதே சரி வராது தம்பி. மாத்து:))
வாழ்த்துக்கள் வசந்த்...சும்மா கலக்கு :-)
ரசிக்கும்படி இருக்கிறது கவிதை.
அடடா அட்டகாசம் வசந்த்!!
என்ன வசந்த் இப்படி????
ம்ம்ம்...வெட்கமா போச்சுன்னு...பொய்சொல்ல மாட்டேன்...ரசித்தேன்.
கவிதை நல்ல இருக்கு. போட்டோ கூட மாத்திட்டீங்க போல...
சகோ சக்கைபோடு போடுறீங்க.. ம்ம்ம்
சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்..
அசத்துறீங்க வசந்த். சூப்பரா எழுதி இருக்கீங்க.
காதல் கவிதை எழுத வைக்கும்பாங்களே... உண்மையா????
//மதார் said...
இவ்வளவு செந்தமிழில் எனக்கு எழுத தெரியாதுங்க , நீங்கல்லாம் இப்படி எழுதின என்ன போல ஆட்கள் என்ன செய்ய ?//
நன்றி மதார் நீங்க எப்பொழுதும் கவிஞர் நான் எப்பவாவது கவிஞர் அவ்ளோதான் சரக்கு என்கிட்ட நீங்க அசத்துங்க...
//angelintotheheaven said...
puriyuthu ana puriala
nice//
நன்றி அம்மு
ஆத்தா கொஞ்சம்நஞ்ச லொள்ளா பெரியவளானா கண்டிப்பா இன்னும் ஜாஸ்தியா லொள்ளு பண்ணுவீங்களாட்டமிருக்கு..
//ஈரோடு கதிர் said...
யப்ப்ப்ப்பே.... வலைச்சரத்துல கவிஞன்னு போட்டப்பவே நினைச்சேன்...
நல்ல முயற்சி
வாழ்த்துகள்//
நன்றிங்ணா
எல்லாம் உங்கள மாதிரி பெரியவங்க ஆசிதான்...
// D.R.Ashok said...
என்னாச்சு வசந்த்.. நல்லாதானே இருந்தீங்க நேத்துவரைக்கும்?//
நன்றி அசோக் சார்
சரியா சொன்னீங்க அவ்வ்வ்வ்
// கலகலப்ரியா said...
இவ்ளோ நாள் போட்ட இரட்டை ஓட்டு... இப்பவும்... எல்லாம் இந்த கவிதைக்கு சரி ஆயிடும்.. =)) ... இன்னும் நல்லா எழுத உன்னால் முடியும்... தம்பி..//
நன்றிக்கா சந்தோசமா இருக்கு உங்ககிட்ட பாராட்டு வாங்குறதுக்கு..
இது வரைக்கும் எழுதுனதெல்லாம் வேஸ்ட்டா அப்போ அவ்வ்வ்வ்
//வானம்பாடிகள் said...
எனக்கு ஆச்சரியமில்லை. நிர்பந்தம்னு டிஸ்கி போட்டது என்னையா? அப்படின்னாலும் சந்தோஷம். எழுத்துப் பிழை பாரு ராஜா! அசத்து.//
கண்டீப்பா உன்னத்தான்...
அதுக்கு உங்களுக்கு நான் தான் நன்றி சொல்லணும்
நன்றி பாலா சார்
//ஜீவன் said...
good..!//
நன்றிங் ஜீவன்
// இராகவன் நைஜிரியா said...
வர்சடைல் நீங்க அப்படின்னு நான் சொன்னதை திரும்ப திரும்ப நிரூபிக்கின்றீர்கள்.
வாழ்த்துகள். கலக்குங்க.. கலக்குங்க//
மிக்க மகிழ்ச்சி ராகவன் அண்ணா
வர்சடைல்ன்னா என்னன்னு நிஜமாவே தெரியலையே அண்ணா அவ்வ்வ்வ்
// க.பாலாசி said...
கவிதை அசத்துகிறது நண்பரே....(யாருகிட்டயோ ‘எனக்கு கவிதை எழுத வராது’ன்னு சொன்னதா கேள்விபட்டேன்? ஆனா பின்னிட்டீங்களே தல)//
நன்றி பாலாஜி
மேர்ரேஜ்ல எங்க தமிழரசி சொன்னாங்களா?
//அகல்விளக்கு said...
Enna nanba!
arumayaga kavithai ezhuthureenga...
appuram yean kavithai elutha varaathundreenga.//
நன்றி கார்த்திக்
// ஹேமா said...
வசந்த் கவிதை அருமை.ஒவ்வொரு வரிகளும் ஊற்றெடுத்த உணர்வில் சொற்களின் விளையாட்டு.இன்னும் நிறைய எழுதுங்க.வாழ்த்துக்கள்.
வசந்தின் இன்னொரு முகம்.//
வாங்க தாயி சவுக்யமா?
ஆமா இன்னொருமுகம் இந்த முகமே யாருக்கும் பிடிக்கல இதுல இன்னொரு முகமா வேணாம்டா சாமீகளா ஆள விடுங்க
ஆமா வழக்கமா வசந்துன்னு தானே சொல்வீங்க இன்னிக்கு என்ன புதுசா வசந்த்..வசந்துன்னே கூப்பிடுங்க மேடம்......
// Mrs.Menagasathia said...
என்ன வசந்த் இப்படி கலக்குறீங்க,சூப்பரு...//
மிக்க நன்றி சகோ....
// tamiluthayam said...
பூவையரின் பூமனங்கண்டேன்
பூத்ததை சூடாமல் ஏந்திகொள்கிறேன வெகு சிறப்பான வரிகள்//
நன்றி தமிழுதயம்
// நட்புடன் ஜமால் said...
ஆஹா! ஆஹா!
வாங்க வாங்க வஸந்த்//
வாங்க ஜமாலண்ணா நன்றிங்ணா
//cheena (சீனா) said...
அன்பின் வசந்த்
ஒன்றுமே புரிய வில்லை - மிகப் பிரயாசைப்பட்டு புரிந்து கொள்ள முயன்றேன்,
சரி
// நிமிடங்கூட வீணாகாமல்
ஊடலும் கூடலும் புரிந்தெனை
மெய்மறக்கச்செய்து
இப்பூவுலக படைப்பின்
மெய்யறிய செய்தாய்...//
//பூவையரின் பூமனங்கண்டேன்
பூத்ததை சூடாமல்
ஏந்திகொள்கிறேனதை
உன்னிடமிருந்து உன்னையறியாமல்
பெற்றேனதை பேணித்திரிவதென்
பொறுப்பன்றோ...//
நான் ரசித்த வரிகள்
நல்வாழ்த்துகள் வச்ந்த்
//
தங்கள் வாசிப்புக்கு மிக்க நன்றி சீனா ஐய்யா,
தலைவன் தலைவிக்கிடையேயான ஊடல்தான் இந்த கவிதை..
// Vinitha said...
படம் ஒட்டாத கவிதை. மீண்டும் முயற்சிக்கவும்!//
எப்பவாது ஒரு நாள் வந்துட்டு லொள்ளா?
படத்த தூக்கிட்டேன் அம்மிணி
நெம்ப நன்றி
// Thamarai selvi said...
Really nice vasanth! Good! Keep it up!
///உன்னிடமிருந்து உன்னையறியாமல்
பெற்றேனதை பேணித்திரிவதென்
பொறுப்பன்றோ...///
I like this line...//
பிரியமான சகோதரியே..தங்கள் தொடர் வருகையும் வாசிப்பும் மிக்க சந்தோசமா இருக்கு...மாம்ஸ் எப்டி இருக்காரு ? குட்டிபாப்பவையும் கேட்டதா சொல்லுங்க..
நன்றி
//seemangani said...
//புசிக்காத படையல்கள் காவலிருக்க நம் காதலிதினிதாய் நம்இல்லமே வெட்கப்புன்னகை சிந்துகிறது நாமதை சிதறாமல் பிடித்து சேமிக்க அணிகலனற்று கிடக்கிறோம் வெட்கமற்று...//
ரசித்த வரிகள் தொடரட்டும்...
வாழ்த்துகள் தல...//
மிக்க நன்றி சீமாங்கனி
//ஆ.ஞானசேகரன் said...
வரிகள் அருமை வாழ்த்துகள்..//
மிக்க நன்றி சேகர்
//ஜெட்லி said...
நடக்கட்டும்//
ம்ம் நன்றி சரவணன்
//வானம்பாடிகள் said...
200 followers. வாழ்த்துகள் வசந்த்:). இனிமே டமாசுக்குதான். லாஜிக் தேடாதே சரி வராது தம்பி. மாத்து:))//
மாத்திடுவோம்..
50% லொள்ளு 50% ஜொள்ளு சரியா?
//சிங்கக்குட்டி said...
வாழ்த்துக்கள் வசந்த்...சும்மா கலக்கு :-)//
ம்ம் நன்றி சிங்ககுட்டி
// பூங்குன்றன்.வே said...
ரசிக்கும்படி இருக்கிறது கவிதை.//
நன்றி பூங்குன்றன்
// SUFFIX said...
அடடா அட்டகாசம் வசந்த்!!//
வாங்க சஃபி இப்போ உடல் நிலை எப்படியிருக்கு? சுகம்தானே...
//தியாவின் பேனா said...
என்ன வசந்த் இப்படி????//
நன்றி தியா
ஆமா சகோதரா நல்லாயில்லியா?
// சி. கருணாகரசு said...
ம்ம்ம்...வெட்கமா போச்சுன்னு...பொய்சொல்ல மாட்டேன்...ரசித்தேன்.//
சரியா புரிஞ்சுட்டீங்க கருணாகரசு
மிக்க நன்றிங்க
// ஸ்ரீராம். said...
கவிதை நல்ல இருக்கு. போட்டோ கூட மாத்திட்டீங்க போல...//
ம்ம் மாறித்தான் போச்சு...
நன்றி ஸ்ரீராம்
//அன்புடன் மலிக்கா said...
சகோ சக்கைபோடு போடுறீங்க.. ம்ம்ம்
சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்..//
ம்ம் பின்ன உங்கள் உடன் பிறப்பாச்சே
நன்றி மலிக்கா...
// சுசி said...
அசத்துறீங்க வசந்த். சூப்பரா எழுதி இருக்கீங்க.
காதல் கவிதை எழுத வைக்கும்பாங்களே... உண்மையா????//
சீ போக்கா வெட்க்கமா இருக்கு...
நன்றிக்கா..
//பிரபாகர் said...
தம்பி மெய்யாலுமே நீ எழுதினதா....?
ஹி... ஹி... சும்மா கேட்டேன். நெசமா சூப்பரா இருக்கு.
வாழ்த்துக்கள்.
பிரபாகர்.//
எனக்கு நடிக்க வராதுங்ணா...
நன்றிங்ணா..
நண்பரே நான் தங்களுக்கு ஒரு சிறிய விருதினை அளித்துள்ளேன், அதைப் பெற்றுக் கொண்டு என்னைச் சிறப்பிக்கவும். நன்றி
ஏஞ்ச்சாமி....? இதுவேறையா,? நடத்து நடத்து!!
லொள்ளு இல்லீங்கண்ணா... அசிங்கமான கெரகத்தே எதுக்கு அங்கே வசுகிட்டுன்னு... :-)
வசந்த்,
-திற்கு வாழ்த்தும் , வசையும்.....
எனக்கு அப்பவே தெரியும். இப்படி அசத்துவாய் என்று. (அதனால் தான் முன்பொருமுறை பின்னூட்டத்தில் , "மிகச்சிறந்த கவிஞர்கள்" பட்டியலில் வசந்தும் சேரவிருக்கிறார் என்று சொல்லியிருந்தேன். )
என் தோழனை பாராட்டும் உரிமையும் , தவற்றைச் சுட்டிக்காட்டும் உரிமையும் எனக்கு உண்டு என்றே நம்புகிறேன்.
"உடம்பொடும் உயிரென உற்று வாழ் நாட்களில் ..." என்றுதானே வரவேண்டும். அதென்ன "உடம்பெடும்..."....?
எழுத்துப் பிழைகள் நிறைய தெரிகிறது. நிவர்த்திப்பாய் நண்பா.!
வசந்த்,
.... நண்பன் 'லேட்டா" வந்தாலும், "வேட்டோட" வந்தோம்ல...!
வசந்த்,
"மேட்ரிமோனியல்"-ல வரவேண்டிய போட்டோ வலைப்பதிவு பக்கித்தில போட்ட்ருக்கீங்களே என்ன விஷேசம் , ராசா..?
//பித்தனின் வாக்கு said...
நண்பரே நான் தங்களுக்கு ஒரு சிறிய விருதினை அளித்துள்ளேன், அதைப் பெற்றுக் கொண்டு என்னைச் சிறப்பிக்கவும். நன்றி//
நன்றி சுதாகர்
//கலையரசன் said...
ஏஞ்ச்சாமி....? இதுவேறையா,? நடத்து நடத்து!!//
வாடா மூனுநாளா கூத்தா?
நன்றி மச்ச்சி
//Vinitha said...
லொள்ளு இல்லீங்கண்ணா... அசிங்கமான கெரகத்தே எதுக்கு அங்கே வசுகிட்டுன்னு... :-)//
இல்லீங்க படம் போடும்போதே மனசில்லாமதான் இருந்துச்சு அப்பறம் நீங்கவேற சொல்லியாச்சா அதான் தூக்கிட்டேன் சுட்டிக்காட்டியதுக்கும் நன்றிங்க...
சத்ரியன் தங்களுக்கு இல்லாத உரிமையா ஒரு சிலர் போல் கிண்டல் பண்ணாமல் குறையிருக்கிறது என்று சுட்டிக்காட்டிய உங்கள் நேர்மை பிடித்திருக்கிறது
மகா கவியின் தனிமை இரக்கம் எனும் கவிதை முதன் முதலில் அச்சிலேறிய கவிதை படித்திருக்கிறீர்களா?
இணையெழுத்துக்கள் மூலம் வடித்திருப்பார் இக்கவிதை போலவே நானும் இணையெழுத்திலெதியிருக்கிறேன்...
இந்தக்கவிதையின் ஒரு வரிதான் என் கவிதையின் தலைப்பு
நான் தப்பென்றால் பாரதியும் தப்பாய் போகிறானே சத்ரியா...
குயிலனாய் நின்னொடு குலவியின் கலவி
பயில்வதிற் கழித்த பன்னாள் நினைந்துபின்
இன்றெனக் கிடையே எண்ணில்யோ சனைப்படும்
குன்றமும் வனமும் கொழுதிரைப் புனலும்
மேவிடப் புரிந்த விதியையும் நினைத்தால்
பாவியென் நெஞ்சம் பகீரெனல் அரிதோ?
கலங்கரை விளக்கொரு காவதம் கோடியா
மலங்குமோர் சிறிய மரக்கலம் போன்றேன்
முடம்படு தினங்காள்! முன்னர்யான் அவளுடன்
உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில்
வளியெனப் பறந்தநீர் மற்றியான் எனாது
கிளியினைப் பிரிந்துழிக் கிரியெனக் கிடைக்கும்
செயலையென் இயம்புவல் சிவனே!
மயிலையிற் றென்றெவர் வகுப்புரங் கவட்கே?
மிக்க நன்றி சத்ரியா...
//வசந்த்,
"மேட்ரிமோனியல்"-ல வரவேண்டிய போட்டோ வலைப்பதிவு பக்கித்தில போட்ட்ருக்கீங்களே என்ன விஷேசம் , ராசா..?//
ஒரு நல் மனதால் வெளுக்கப்படுகிறேன் சத்ரியா :)))
அறியாமையின் வெளிப்பாடே இப்படின்னா....?
ஐய்யா சாமி பார்த்துப்ப்பா இங்க நானும் கவிதை எழுதறேன் பேர்வழின்னு பேர் பண்ணிட்டு இருக்கேன்....கொஞ்சம் எனக்கும் விட்டு வையுங்க கவிஞரே..ஹேய் வசந்த் என்ன மேரேஜ் பிக்ஸ் ஆயிடுச்சா....
மெய்யாலுமே நீ எழுதினதா....?
ஹி... ஹி... சும்மா கேட்டேன். நெசமா சூப்பரா இருக்கு.
வாழ்த்துக்கள்.
பிரபாகர்.
என்னங்க வசந்த் இப்படி கேட்டுட்டீங்க வசந்தின் பதிவுகளை புரட்டுங்களேன்...
பிரியமுடன்...வசந்த் said...
// க.பாலாசி said...
கவிதை அசத்துகிறது நண்பரே....(யாருகிட்டயோ ‘எனக்கு கவிதை எழுத வராது’ன்னு சொன்னதா கேள்விபட்டேன்? ஆனா பின்னிட்டீங்களே தல)//
நன்றி பாலாஜி
மேர்ரேஜ்ல எங்க தமிழரசி சொன்னாங்களா?
ஹேய் அடிவிழும் நீ தான் எங்க பார்த்தாலும் எப்ப பார்த்தாலும் புலம்புவ ....ஆனால் திறமையை எத்தனை நாள் தான் ஒளித்து வைப்பாய் அதான் இங்கே கவிதை மழை...
Post a Comment