November 30, 2009

இரண்டுமாம் ஒன்றுமாம் யாவுமாம்...!



இரண்டடுக்கு கோப்பையாய்
கண்கள் பொங்கி வழிய
கனா காணும் இரவுகளில்.
மிதக்கும் பாய்மரக்கப்பலில்
துடிக்கும் மீனாய்
எண்ணங்கள் ஊசலாட
தொட்டுச்செல்லும் காற்றில்
மலரின் தேனுண்ட மயக்கத்தின்
வண்டாய் மனமது செல்ல...

வாசல் அற்ற வீட்டின்
கதவாய் நானும்
கூரையில்லா வீட்டின்
தரையாய் அவளும்
உருண்டோடும் பூமிப்பந்தில்
ஆளுக்கொரு திசையில்
சிதறி சிக்குண்டு அல்லல்பட்டு
ஆவியும் ஆசையுமற்ற
ஆடாமல் ஆடும் அலையாய்
ஆகிப்போனோம்...

கரை தொடாமல் பின்வாங்கி
பின் தொடராத பகலின் நிழலாய்
நிதர்சனம் பேசிய இரவுகள்
இறக்கையொடிந்த கிளியாய்
கூவிக்கொண்டிருக்கின்றன...
என்றும் எல்லையற்று
தாவல் கொண்ட மனம்
அன்றோ கூனிக்குறுகி
சுருங்கிப்போகிறது விரியத்
தெரிந்தும் விரியாமல்
வீசத்தெரிந்தும் வீசிச்செல்லாத
காற்றின் பிம்பமாய்...

கண்ணுக்கு புலப்படாத
அக்னியின் குளுமையின் பயனாய்
கானல் கொண்ட தரையின்
வெம்மை சுட்டுத்தெறிக்க
அச்சமில்லாமல் ஆசைதீர்த்து
அடங்கிப்போனது அடங்காத
மனப்பறவையின் காலடியில்
காதல் இரண்டுமாம்
ஒன்றுமாம் யாவுமாகி ...


- கவிஞர் வசந்த் ( ஹ ஹ ஹா)

(யூத்ஃபுல் விகடனில்)

83 comments:

பூங்குன்றன்.வே said...

வசந்த்...கைய கொடுங்க. வாழ்த்துக்கள்.பல முறை படித்தும் ரசித்த வரிகள் எது என்று தடுமாற்றம்தான் வந்தது.ஏன்னா முழு கவிதையும் அழகான வார்த்தைகளால் ஆச்சர்யப்படுத்துது.நூறு மார்க் தரலாம்!

cheena (சீனா) said...

அன்பின் வசந்த்

நல்ல கவிதை - ரசித்தேன்
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

க.பாலாசி said...

//வாசல் அற்ற வீட்டின்
கதவாய் நானும்
கூரையில்லா வீட்டின்
தரையாய் அவளும்
உருண்டோடும் பூமிப்பந்தில்
ஆளுக்கொரு திசையில்//

அருமையான வரிகள்....கவிதைக்கான அழகான வரிகளை பொறுக்கிப்போட்ட கவிஞருக்கு (ஹா...ஹா...) வாழ்த்துக்கள்.

பித்தனின் வாக்கு said...

நல்ல கவிதை வசந்த், நான் உங்கள் கவிதைகளுக்காக விருது ஒன்று தந்துள்ளேன். பெற்றுக் கொண்டு சிறப்பிக்கவும். நன்றி.

Anonymous said...

கலக்குறீங்க வசந்து :)

சத்ரியன் said...

//வாசல் அற்ற வீட்டின்
கதவாய் நானும்
கூரையில்லா வீட்டின்
தரையாய் அவளும்
உருண்டோடும் பூமிப்பந்தில்
ஆளுக்கொரு திசையில்
சிதறி சிக்குண்டு அல்லல்பட்டு
ஆவியும் ஆசையுமற்ற
ஆடாமல் ஆடும் அலையாய்
ஆகிப்போனோம்...///

வசந்த்,

மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்.

எல்லை மீறிப் போய்க்கொண்டிருக்கிறது........தொடரட்டும்!

பாலா said...

go ahead (enjoy)

அகல்விளக்கு said...

//வாசல் அற்ற வீட்டின்
கதவாய் நானும்
கூரையில்லா வீட்டின்
தரையாய் அவளும்
உருண்டோடும் பூமிப்பந்தில்
ஆளுக்கொரு திசையில்
சிதறி சிக்குண்டு அல்லல்பட்டு
ஆவியும் ஆசையுமற்ற
ஆடாமல் ஆடும் அலையாய்
ஆகிப்போனோம்...//

அருமையான சிந்தனை.

கவிஞர் வசந்த் (ஹ ஹ ஹா) அவர்களுக்கு வாழ்த்துக்கள்

சுசி said...

//கரை தொடாமல் பின்வாங்கி
பின் தொடராத பகலின் நிழலாய்
நிதர்சனம் பேசிய இரவுகள்
இறக்கையொடிந்த கிளியாய்
கூவிக்கொண்டிருக்கின்றன...//

எப்பூடி வசந்த்???

என்னம்மா எழுதி இருக்கீங்க....

கவிஞர் வசந்த்... புது பட்டம் பெயர் பொருத்தமா இருக்குப்பா....

வாழ்த்துக்கள்.

sarathy said...

நல்லாயிருக்கு வசந்த்...

பெயரை மாத்திக்க வேண்டியதுதானே.....

ராமலக்ஷ்மி said...

அருமை வசந்த்.

Kala said...

வசந்...இம்புட்டு..இம்புட்டு அழகா
எழுத...அவக சொல்லிக் கொடுத்தாகளா?
ஒவ்வொரு வரிகளும் உங்கள் மனக் கடலில்
இருந்து ,வெளிப்பட்ட எண்ண அலைகளில்...
ஒதுங்கிய உவமைகளை நான் ருசி பார்க்கின்றேன்.
நன்றி.,

VISA said...

claps..
claps....
claps......
claps.......
claps.........
claps...........
Nice one.

புலவன் புலிகேசி said...

நல்ல கவிதை வசந்த்..படமும் அதற்கு மெருகேற்றியிருக்கிறது..வாழ்த்துக்கள்.

Ashok D said...

கவித கவித.. அருவி மாதிரி கொட்டுது.. பின்றார்ப்பா பின்றார்ப்பா..

vasu balaji said...

போஓஓஒ..ப்போஓஓ..மேல மேலன்னு போய்ட்டே இரு. பட்டைய கிளப்பு. கவிஞர் வசந்த்..பொருத்தமாத்தான் இருக்கு. அப்புறம் கட்டுரையாளர் வசந்த்னு எப்போ மாறலாம்?

நாணல் said...

//வாசல் அற்ற வீட்டின்
கதவாய் நானும்
கூரையில்லா வீட்டின்
தரையாய் அவளும்//

மிகவும் ரசித்த வரிகள்... கவிதை அருமை..

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை....வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

முழுநேரக் கவிஞர் ஆய்ட்டீங்க போல...

கலகலப்ரியா said...

வாழ்த்துகள் வசந்த்..! கவிஞனாயிட்டா.... என்ன சமாச்சாரம்..?

கலகலப்ரியா said...

tamilish ellaarukkum disabled a...`?

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அழகான ஒரு கவிதை. வாழ்த்துக்கள் வசந்த். கவிஞர் தானே. பிறகென்ன ஒரு சிரிப்பு.

Nila Loganathan said...

நல்லாயிருக்கு .....!!!

angel said...

us appa mudiala

but good

ப்ரியமுடன் வசந்த் said...

//பூங்குன்றன்.வே said...
வசந்த்...கைய கொடுங்க. வாழ்த்துக்கள்.பல முறை படித்தும் ரசித்த வரிகள் எது என்று தடுமாற்றம்தான் வந்தது.ஏன்னா முழு கவிதையும் அழகான வார்த்தைகளால் ஆச்சர்யப்படுத்துது.நூறு மார்க் தரலாம்!//

நன்றி பூங்குன்றன் :)

ப்ரியமுடன் வசந்த் said...

//cheena (சீனா) said...
அன்பின் வசந்த்

நல்ல கவிதை - ரசித்தேன்
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா//

நன்றி சீனா ஐயா

ப்ரியமுடன் வசந்த் said...

// க.பாலாசி said...
//வாசல் அற்ற வீட்டின்
கதவாய் நானும்
கூரையில்லா வீட்டின்
தரையாய் அவளும்
உருண்டோடும் பூமிப்பந்தில்
ஆளுக்கொரு திசையில்//

அருமையான வரிகள்....கவிதைக்கான அழகான வரிகளை பொறுக்கிப்போட்ட கவிஞருக்கு (ஹா...ஹா...) வாழ்த்துக்கள்.

நன்றி பாலாஜி

ப்ரியமுடன் வசந்த் said...

//பித்தனின் வாக்கு said...
நல்ல கவிதை வசந்த், நான் உங்கள் கவிதைகளுக்காக விருது ஒன்று தந்துள்ளேன். பெற்றுக் கொண்டு சிறப்பிக்கவும். நன்றி.//

நன்றி சுதாகர்

ப்ரியமுடன் வசந்த் said...

//சின்ன அம்மிணி said...
கலக்குறீங்க வசந்து :)//

நன்றிங் அம்மிணி

ப்ரியமுடன் வசந்த் said...

//சத்ரியன் said...
//வாசல் அற்ற வீட்டின்
கதவாய் நானும்
கூரையில்லா வீட்டின்
தரையாய் அவளும்
உருண்டோடும் பூமிப்பந்தில்
ஆளுக்கொரு திசையில்
சிதறி சிக்குண்டு அல்லல்பட்டு
ஆவியும் ஆசையுமற்ற
ஆடாமல் ஆடும் அலையாய்
ஆகிப்போனோம்...///

வசந்த்,

மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்.

எல்லை மீறிப் போய்க்கொண்டிருக்கிறது........தொடரட்டும்!//

எல்லைய தொட்டுட்டேன் மீறல இன்னும் அவ்ளோதான்.. ஹ ஹ ஹா

நன்றி சத்ரியன்

ப்ரியமுடன் வசந்த் said...

// பாலா said...
go ahead (enjoy)//

நன்றி மாப்பி

ப்ரியமுடன் வசந்த் said...

//அகல்விளக்கு said...
//வாசல் அற்ற வீட்டின்
கதவாய் நானும்
கூரையில்லா வீட்டின்
தரையாய் அவளும்
உருண்டோடும் பூமிப்பந்தில்
ஆளுக்கொரு திசையில்
சிதறி சிக்குண்டு அல்லல்பட்டு
ஆவியும் ஆசையுமற்ற
ஆடாமல் ஆடும் அலையாய்
ஆகிப்போனோம்...//

அருமையான சிந்தனை.

கவிஞர் வசந்த் (ஹ ஹ ஹா) அவர்களுக்கு வாழ்த்துக்கள்//

நன்றி அகல் விளக்கு

ப்ரியமுடன் வசந்த் said...

//சுசி said...
//கரை தொடாமல் பின்வாங்கி
பின் தொடராத பகலின் நிழலாய்
நிதர்சனம் பேசிய இரவுகள்
இறக்கையொடிந்த கிளியாய்
கூவிக்கொண்டிருக்கின்றன...//

எப்பூடி வசந்த்???

என்னம்மா எழுதி இருக்கீங்க....

கவிஞர் வசந்த்... புது பட்டம் பெயர் பொருத்தமா இருக்குப்பா....

வாழ்த்துக்கள்.//

நன்றி உடன்பிறப்பே மிக்க மகிழ்ச்சி

ப்ரியமுடன் வசந்த் said...

// sarathy said...
நல்லாயிருக்கு வசந்த்...

பெயரை மாத்திக்க வேண்டியதுதானே.....//

ஆளே மாறிப்போச்சு பேர்மாறி என்ன செய்ய ஹ ஹ ஹா நன்றி சாரதி

ப்ரியமுடன் வசந்த் said...

//ராமலக்ஷ்மி said...
அருமை வசந்த்.//

நன்றி ராமலக்ஷ்மி மேடம்

ப்ரியமுடன் வசந்த் said...

// Kala said...
வசந்...இம்புட்டு..இம்புட்டு அழகா
எழுத...அவக சொல்லிக் கொடுத்தாகளா?
ஒவ்வொரு வரிகளும் உங்கள் மனக் கடலில்
இருந்து ,வெளிப்பட்ட எண்ண அலைகளில்...
ஒதுங்கிய உவமைகளை நான் ருசி பார்க்கின்றேன்.
நன்றி.,//

ம்ஹ்ஹும் நாந்தான் அவளுக்கு சொல்லிக்குடுக்கணும் ஹ ஹ ஹா

நன்றி கலா என்ன போன ரெண்டு போஸ்ட்க்கும் ஆளக்காணோம் பிஸியா இல்ல நன்றி நவிலவில்லை என்ற சினமா?

ப்ரியமுடன் வசந்த் said...

//VISA said...
claps..
claps....
claps......
claps.......
claps.........
claps...........
Nice one.//

நன்றி விசா :)

ப்ரியமுடன் வசந்த் said...

// புலவன் புலிகேசி said...
நல்ல கவிதை வசந்த்..படமும் அதற்கு மெருகேற்றியிருக்கிறது..வாழ்த்துக்கள்.//

நன்றி பண்டிட் டைகர்KC

ப்ரியமுடன் வசந்த் said...

// D.R.Ashok said...
கவித கவித.. அருவி மாதிரி கொட்டுது.. பின்றார்ப்பா பின்றார்ப்பா..//

நன்றி அசோக் சார்

ப்ரியமுடன் வசந்த் said...

//வானம்பாடிகள் said...
போஓஓஒ..ப்போஓஓ..மேல மேலன்னு போய்ட்டே இரு. பட்டைய கிளப்பு. கவிஞர் வசந்த்..பொருத்தமாத்தான் இருக்கு. அப்புறம் கட்டுரையாளர் வசந்த்னு எப்போ மாறலாம்?//

ம்ம் போறேன்...கொஞ்சம் மெதுவாத்தான் போவோமே என்ன அவசரம் இன்னும் வயசிருக்குள்ள?
நன்றி நைனா

ப்ரியமுடன் வசந்த் said...

//நாணல் said...
//வாசல் அற்ற வீட்டின்
கதவாய் நானும்
கூரையில்லா வீட்டின்
தரையாய் அவளும்//

மிகவும் ரசித்த வரிகள்... கவிதை அருமை..//

நன்றி நாணல் நலமா?

ப்ரியமுடன் வசந்த் said...

//T.V.Radhakrishnan said...
அருமை....வாழ்த்துக்கள்//

நன்றி ராதாகிருஷ்ணன் சார்

ப்ரியமுடன் வசந்த் said...

//ஸ்ரீராம். said...
முழுநேரக் கவிஞர் ஆய்ட்டீங்க போல...//

வேற வழியில்லாமத்தான் இப்பிடியாயிட்டேன் அவ்வ்வ்

நன்றி ஸ்ரீராம்

ப்ரியமுடன் வசந்த் said...

//கலகலப்ரியா said...
வாழ்த்துகள் வசந்த்..! கவிஞனாயிட்டா.... என்ன சமாச்சாரம்..?//

ம்ஹ்ஹூம் சொல்லமாட்டேனே...

நன்றிங்க்கா...

ப்ரியமுடன் வசந்த் said...

//ஜெஸ்வந்தி said...
அழகான ஒரு கவிதை. வாழ்த்துக்கள் வசந்த். கவிஞர் தானே. பிறகென்ன ஒரு சிரிப்பு.//

நன்றி ஜெஸ்ஸம்மா...

ப்ரியமுடன் வசந்த் said...

//tharshayene said...
நல்லாயிருக்கு .....!!!//

நன்றி தர்ஷாயினி

ப்ரியமுடன் வசந்த் said...

//angelintotheheaven said...
us appa mudiala

but good//

வாங்க மேடம் நன்றி

balavasakan said...

வாசல் அற்ற வீட்டின்
கதவாய் நானும்
கூரையில்லா வீட்டின்
தரையாய் அவளும்
உருண்டோடும் பூமிப்பந்தில்
ஆளுக்கொரு திசையில்
சிதறி சிக்குண்டு அல்லல்பட்டு
ஆவியும் ஆசையுமற்ற
ஆடாமல் ஆடும் அலையாய்
ஆகிப்போனோம்...


அருமை வசந்த் ...

Menaga Sathia said...

அருமை வசந்த்.

அன்புடன் அருணா said...

சுத்தம்!

வினோத் கெளதம் said...

கவிதை எல்லாம் பயங்கரமா இருக்கு..Photo வேற மாறிக்கிட்டே இருக்கு..ஒன்னும் சரி இல்லயே..:))

ரோஸ்விக் said...

புரொ ஃபைல்-ல படம் மாறுன அப்பவே நினச்சேன் ஏதோ ஒரு இடி மழை இருக்குனு....கலக்குங்க வசு... :-)

தமிழ் உதயம் said...

காதல் கவிதை எழுத தனி ஆளுமை வேண்டும். அது உங்களிடம் உள்ளது. எல்லாராலும் காதலிக்க முடியும். எல்லாராலும் கவிதை எழுத முடியுமா?

நிலாமதி said...

அழகான கவிதைக்கு ஒரு ....பின்னூட்டம் . உங்கள் திறமையை மேலும் வளர்த்துக்கொள்ளுங்க.
என் பாராடுக்கள்.

ப்ரியமுடன் வசந்த் said...

//Balavasakan said...
வாசல் அற்ற வீட்டின்
கதவாய் நானும்
கூரையில்லா வீட்டின்
தரையாய் அவளும்
உருண்டோடும் பூமிப்பந்தில்
ஆளுக்கொரு திசையில்
சிதறி சிக்குண்டு அல்லல்பட்டு
ஆவியும் ஆசையுமற்ற
ஆடாமல் ஆடும் அலையாய்
ஆகிப்போனோம்...


அருமை வசந்த் ...//

நன்றி பாலவாசகன்

ப்ரியமுடன் வசந்த் said...

// Mrs.Menagasathia said...
அருமை வசந்த்.//

நன்றி சகோ..

ப்ரியமுடன் வசந்த் said...

//அன்புடன் அருணா said...
சுத்தம்!//

பிரின்ஸ் திட்டுறீங்களா பாராட்டுறீங்களான்னு தெரியலியே..அவ்வ்வ் ஆனா உங்க போட்டோ பாத்துட்டு பயந்துட்டேன் முதல்ல ஃபேஸ்புக்ல போட்டவ மாத்துங்க...

ப்ரியமுடன் வசந்த் said...

//வினோத்கெளதம் said...
கவிதை எல்லாம் பயங்கரமா இருக்கு..Photo வேற மாறிக்கிட்டே இருக்கு..ஒன்னும் சரி இல்லயே..:))//

ம்க்கும் ஒண்ணும் இல்ல வினு சும்மா...

நன்றி வினோத்...

ப்ரியமுடன் வசந்த் said...

//
ரோஸ்விக் said...
புரொ ஃபைல்-ல படம் மாறுன அப்பவே நினச்சேன் ஏதோ ஒரு இடி மழை இருக்குனு....கலக்குங்க வசு... :-)//

நன்றி ரோஸ் விக்

ப்ரியமுடன் வசந்த் said...

//tamiluthayam said...
காதல் கவிதை எழுத தனி ஆளுமை வேண்டும். அது உங்களிடம் உள்ளது. எல்லாராலும் காதலிக்க முடியும். எல்லாராலும் கவிதை எழுத முடியுமா?//

ஏன் முடியாது காதல் வந்தா தானா அருவி மாதிரி கொட்டும்ங்க கவிதை

நன்றி தமிழுதயம்

ப்ரியமுடன் வசந்த் said...

// நிலாமதி said...
அழகான கவிதைக்கு ஒரு ....பின்னூட்டம் . உங்கள் திறமையை மேலும் வளர்த்துக்கொள்ளுங்க.
என் பாராடுக்கள்.//

ம்க்கும் இதுக்கு நீங்க பிடிக்கலைன்னே சொல்லியிருக்கலாம் ஹ ஹ ஹா

நன்றிங்க

சீமான்கனி said...

நல்ல கவிதை - ரசித்தேன்
நல்வாழ்த்துகள்...
உங்கள் உள்ளே தூங்கி கொண்டிருன்ந்த இன்ன மிருகத்தை உசுப்பியது யாரு.. வசந்த

thiyaa said...

//

கரை தொடாமல் பின்வாங்கி
பின் தொடராத பகலின் நிழலாய்
நிதர்சனம் பேசிய இரவுகள்
இறக்கையொடிந்த கிளியாய்
கூவிக்கொண்டிருக்கின்றன...

//

வசந்த் உண்மையில் நீங்கள் நல்ல கவிதான்
அருமையோ அருமை தொடர்ந்து
நல்ல கவிதைகள் படைக்க வாழ்த்துகிறேன்.

Anonymous said...

கவியானவுடன் காதல் சொன்னவனே
தெரியாது என்றே தேர்வில் வென்றுவிட்டாய்...
அறிவுக்கு எட்டியதெல்லாம் அறிவதற்கு தான் நாளாகிறது...
கவிதை களத்தில் இறங்கிவிட்டாய்
இன்னும் எத்தனை களம் தான் காணப் போகிறாயோ....
வாழ்த்துக்கள் வசந்த்

அமிர்தவர்ஷினி அம்மா said...

அட!

Starjan (ஸ்டார்ஜன்) said...

கவிஞர் வசந்த் வாழ்க

அன்புடன் மலிக்கா said...

செம சூப்பரான கவிதை,
கவிஞரான பிரியமுள்ள சகோ வாழ்த்துக்கள்
கவிதைக்கும் கவிஞனுக்கும்...

Menaga Sathia said...

////tamiluthayam said...
காதல் கவிதை எழுத தனி ஆளுமை வேண்டும். அது உங்களிடம் உள்ளது. எல்லாராலும் காதலிக்க முடியும். எல்லாராலும் கவிதை எழுத முடியுமா?//

ஏன் முடியாது காதல் வந்தா தானா அருவி மாதிரி கொட்டும்ங்க கவிதை//அப்போ நீங்க இப்போ காதலிக்கிறீங்க.அதான் உங்களுக்கு காதல் கவிதை அருவி மாதிரி கொட்டுது.பொண்ணு யாரு வசந்த் எனக்கு மட்டும் சொல்லுங்க...

200வது பாலோவர்ஸ்க்கு வாழ்த்துக்கள் சகோ!!

தேவன் மாயம் said...

கவிதை அழகு வசந்த்!! வாழ்த்துக்கள்!

கலகலப்ரியா said...

http://kalakalapriya.blogspot.com/2009/12/blog-post_01.html

கலகலப்ரியா said...

comment publish panna mudiyala..:(.. moderation eduthutten.. ippo poattukka vasanthu..

ப்ரியமுடன் வசந்த் said...

//seemangani said...
நல்ல கவிதை - ரசித்தேன்
நல்வாழ்த்துகள்...
உங்கள் உள்ளே தூங்கி கொண்டிருன்ந்த இன்ன மிருகத்தை உசுப்பியது யாரு.. வசந்த//

இது யாரும் உசுப்பிவிடுவாங்களா என்ன?

எல்லாம் கனவுதேவதைதான்..

நன்றி சீமாங்கனி

ப்ரியமுடன் வசந்த் said...

//தியாவின் பேனா said...
//

கரை தொடாமல் பின்வாங்கி
பின் தொடராத பகலின் நிழலாய்
நிதர்சனம் பேசிய இரவுகள்
இறக்கையொடிந்த கிளியாய்
கூவிக்கொண்டிருக்கின்றன...

//

வசந்த் உண்மையில் நீங்கள் நல்ல கவிதான்
அருமையோ அருமை தொடர்ந்து
நல்ல கவிதைகள் படைக்க வாழ்த்துகிறேன்.//

நன்றி தியா

ப்ரியமுடன் வசந்த் said...

//தமிழரசி said...
கவியானவுடன் காதல் சொன்னவனே
தெரியாது என்றே தேர்வில் வென்றுவிட்டாய்...
அறிவுக்கு எட்டியதெல்லாம் அறிவதற்கு தான் நாளாகிறது...
கவிதை களத்தில் இறங்கிவிட்டாய்
இன்னும் எத்தனை களம் தான் காணப் போகிறாயோ....
வாழ்த்துக்கள் வசந்த்//

ஹ ஹ ஹா

வாம்மா தமிழம்மா

நன்றி தமிழரசி

ப்ரியமுடன் வசந்த் said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
அட!//

நன்றி அ.அ.

ப்ரியமுடன் வசந்த் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
கவிஞர் வசந்த் வாழ்க//

நன்றி ஸ்டார்ஜன்

ப்ரியமுடன் வசந்த் said...

//Mrs.Menagasathia said...
////tamiluthayam said...
காதல் கவிதை எழுத தனி ஆளுமை வேண்டும். அது உங்களிடம் உள்ளது. எல்லாராலும் காதலிக்க முடியும். எல்லாராலும் கவிதை எழுத முடியுமா?//

ஏன் முடியாது காதல் வந்தா தானா அருவி மாதிரி கொட்டும்ங்க கவிதை//அப்போ நீங்க இப்போ காதலிக்கிறீங்க.அதான் உங்களுக்கு காதல் கவிதை அருவி மாதிரி கொட்டுது.பொண்ணு யாரு வசந்த் எனக்கு மட்டும் சொல்லுங்க...

200வது பாலோவர்ஸ்க்கு வாழ்த்துக்கள் சகோ!!//

ஏன் சகோ காதலிக்காமலே கூட கவிதை வருமே...

நன்றி மேடம்....

ப்ரியமுடன் வசந்த் said...

//தேவன் மாயம் said...
கவிதை அழகு வசந்த்!! வாழ்த்துக்கள்!//

நன்றி சார்

ப்ரியமுடன் வசந்த் said...

//கலகலப்ரியா said...
comment publish panna mudiyala..:(.. moderation eduthutten.. ippo poattukka vasanthu..//

சின்ன பொடியன் கமெண்டெல்லாம் போய் எதிர் பார்த்துட்டு போக்கா...போங்க நீங்க சொல்லாமலே வருவோம்ல...

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள்... ரசித்தேன்

கமலேஷ் said...

ரசித்து படிக்க முடிகிற கவிதை...

நல்ல வரிகள்...

விக்னேஷ்வரி said...

இது நிஜமாவே வசந்த் எழுதினதாப்பா... கலக்குறீங்க கவிஞரே.

அறிவு GV said...

மிக மிக அருமை வசந்த்.

///வாசல் அற்ற வீட்டின்
கதவாய் நானும்
கூரையில்லா வீட்டின்
தரையாய் அவளும்
உருண்டோடும் பூமிப்பந்தில்
ஆளுக்கொரு திசையில்///

வரிகள் சூப்பர்.