May 4, 2009

கணிணி ஆண்பாலா? பெண்பாலா?

ஸ்பெயின் தேசத்தில் ஒரு வகுப்பில் ஆசிரியர் ஸ்பானிஷ் பொழியைப பற்றி விளக்கும்போது கூறினார் " ஸ்பானிஷ் மொழியில் பொருட்களுக்கான பெயர்கள் ஆண்பாலாகவோ அல்லது பெண்பாலாகவோ இருக்கலாம். உதாரணமாக வீடு என்ற சொல் பெண்பால் பென்சில் என்ற சொல் ஆண்பால்".

ஒரு மாணவன் கேட்டான் " கணிணி எந்த பாலைச் சேர்ந்தது?"

இந்தக் கேள்விக்கு நேரடியாக விடை அளிக்காமல் ஆசிரியர் ஆண் மாணவர்களை ஒரு குழுவாகவும் பெண் மாணவர்களை மற்றொரு குழுவாகவும் பிரித்து அவர்களை விடை அளிக்கச் சொன்னார்.

ஆண்கள் குழு கணிணி என்பது பெண்பாலே என்று தீர்மானித்தது. ஏனெனில்

1. அதன் உள் அமைப்புகளை அதனை உருவாக்கியவர் தவிர வேறு யாருக்கும் புரிவதில்லை.

2. மற்ற கணிணிகளுடன் அளவளாவ அவை பயன் படுத்தும் மொழிகள் வேறு யாருக்கும் புரிவதில்லை.

3. சிறு தவறுகள் கூட இவைகளின் ஞாபக சக்தியில் சேமிக்கப் படுகிறது பின்னால் பயன் படுத்த

4. ஒரு கணிணியை வாங்கியவுடன் அதனைச் சேர்ந்த உபகரணங்களுக்கும் நிறைய செலவு செய்ய வேண்டி இருக்கிறது.

பெண்கள் குழு தீர்மானித்தது கணிணி ஆண்பாலே என்று. ஏனெனில்

1. இவைகளிடம் பல விஷயங்கள் இருந்தாலும் இவைகளால் சொந்தமாக சிந்திக்க முடியாது.

2. எந்த ஒரு விஷயத்திலும் இவைகளை முடிக்கி விட வேணடும்.

3. இவைகள் நமது பிரச்னைகளைத் தீர்க்க வல்லவை. ஆனால் பெரும்பாலும் இவைகளே பிரச்னைகளாகி விடுகின்றன.

4. ஒரு கணிணியை வாங்கத் தீர்மானித்தவுடன் மார்கெட்டில் வேறொரு மாடல் வெளி வந்து அதை வாங்க தூண்டும்.

பெண்கள் குழுவே வென்றது

1 comment:

Anonymous said...

அது 9. அதுகு ஆம்புளை சொருகியும் இருக்கு, பொம்புள சொருகியும் இருக்கு.