May 22, 2009

வசந்த கால குறிப்புகள்



என்னை இந்த தொடர்பதிவு எழுத அழைத்த என் தோழி திரு.தமிழ் அரசி... தமிழரசி அவர்களுக்கு நன்றி


1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

வசந்த காலத்தில் பிறந்ததால் வசந்த குமார்
அப்ப்டின்னு எங்க அப்பா பேர் வச்சுட்டாருங்க....
மத்தபடி எல்லார்கிட்டயும் பிரியமா இருக்குறதால பிரியமுடன்......வசந்த்


2.கடைசியாக அழுதது எப்பொழுது?

ஜனவரி 27 2008

அழுகையே பிடிக்காத எனக்கும் வந்தது அழுகை....
முதல் முறை என்னோட அப்பா அம்மாவ பிரிஞ்சு வெளி நாட்டு பணிக்கு வரும் பொழுது சென்னை விமான நிலையத்தில்....ஒரே மகன் எப்படி அழுகை வராமலிருக்கும்....

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

அதாங்க எனக்கு எங்கிட்ட ரொம்ப பிடிச்சது
கல்லூரியில் படிக்கும் பொழுது என்னுடய நண்பர்களுக்கும் சேர்த்து நானே பிராக்டிகல் எழுதும்ப்போதுதான் தோணும் ஏண்டா நமக்கு ஆண்டவன் நல்ல கையெழுத்தை கொடுத்தான் என்று....

4.பிடித்த மதிய உணவு என்ன?

ஹை சோறு சாமி சோறு

சிக்கன் பிரியாணி,வறுத்த கோழி,ஆம்லேட்

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

ஒருத்தர் நம்மகிட்ட அறிமுகமானாலே நட்பு தொடருது தானேங்க...

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

தண்ணீரை காதலிக்கும் காதலன் நான்...
அதுலயும் நம்ம குற்றாலத்திலும்,எங்க ஊர் கும்பக்கரை அருவியிலும் குளிப்பது சுகமோ சுகம்....

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்கள்.....உடை.....முகம்....

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்சதுனாக்கா.....தன்னம்பிக்கை
பிடிக்காதது.......கோபம்

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பொண்ணு பாத்துட்டு இருக்காங்கோ....

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

ஒருத்தர் இல்லீங்க அஞ்சுபேர்
அம்மா அப்பா இவங்க இப்ப இந்தியால
அடுத்து என் உடன் பிறவா சகோதரன் அமுதகுமார் எனது வயதையொத்த பிறந்ததிலிருந்து என் ஒவ்வொரு அசைவையும் அறிந்தவன்......இவரு இப்போ சிங்கப்பூர்ல
அடுத்து நண்பன் நவனீதன்...... நட்பின் அடையாளம்.....இவரு இப்போ துபாயில
அடுத்து நண்பன் தர்மா.....இவரு மதுரையில

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

கருப்புபெர்முடாஸ்,சிவப்பு முதலைபனியன்

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

அங்காடி தெருவில் இருந்து.....அவள் அப்படி ஒன்றும் அழகில்லை....

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

வானவில் கலர்ல எழுதுனா எப்பிடியிருக்கும்.....

14.பிடித்த மணம்?

மல்லிகை பூ வாசம் , தூரல் நின்னபிறகு வரும் மண்வாசம்,லாவண்டர்

இன்னொரு மணம் திருமணம்

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

எனக்கு பிடிச்ச இவங்கள பத்தி எல்லாரும் தெரிஞ்சுக்கிடனும்னுதான்

http://kanavukale.blogspot.com
http://veetupura.blogspot.com
http://raghavannigeria.blogspot.com

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?

தமிழோட எல்லா கவிதைகளுக்கும் நான் அடிமை
இதோ இந்த காதல் வலி

17. பிடித்த விளையாட்டு?

கிரிக்கெட்,சதுரங்கம்,வீடியோகேம்ஸ்

18.கண்ணாடி அணிபவரா?

இல்லை,அந்த பாக்கியம் இல்லை ,அணிந்திருப்பவர்களை பிடிக்கும்,

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

காதல், நகைச்சுவை ,அனைத்து விஜய் படங்கள்

20.கடைசியாகப் பார்த்த படம்?

நான் கடவுள்

21.பிடித்த பருவ காலம் எது?

உலக பருவகாலங்களில் வசந்தகாலம்,

என் பருவ காலங்களில் பள்ளி பருவம்..

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

தானை தலைவி தாமரையின் சந்திர கற்கள்

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

தினமும்

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடிச்ச சத்தம்...பாட்டுசத்தம்,குழந்தை சிரிப்பு

பிடிக்காத சத்தம்...தகர கிரீச்சல்

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

இங்க தானுங்க கத்தார்

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

பேப்பர் கிராப்ட்ஸ்,படம் வரைவது,

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் விடும் பிள்ளைகள்

காதலுக்கு இருக்கும் எதிர்ப்பு

ஜாதி மத வேறுபாடுகள்,இன்னும் நிறைய

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

காதல் இது எப்போ எவளிடம் பூதமாக வெளியேறப்போகிறதோ?..

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

மதுரை மீனாட்சியம்மன் கோவில் ,மெரீனா கடற்க்கரை

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

ஒரு நல்ல மனிதனாக

வாழ்க்கையில ஒரு அனாதை குழந்தையை தத்து எடுப்பது அல்லது வளர உதவுவது லட்ச்சியம்

31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

பதில் தர உரிமயில்லை இருப்பினும்

அவளுக்காக காத்திருப்பது

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழ்க்கை வாழ்வதற்க்கே..

life is beautiful

born to win

உன்னால் முடியும்

இந்த வார்த்தைகள் எனக்கு தினமும் உத்வேகத்தை உற்ச்சாகத்தை வாழ்க்கையை ரசித்து வாழ வேண்டும் என்று கூறுகின்றன...

இதுவரைக்கும் பொறுமையா வாசித்த நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகள்

21 comments:

கடைக்குட்டி said...

http://kanavukale.blogspot.com//

எங்கள் டாஅக்டர் தலையை அழைத்ததற்க்கு நன்றி :-)

கடைக்குட்டி said...

உங்க பதில்களில் மிளிரும் இயல்பு --

அ ழ கு !!

கார்க்கிபவா said...

சுவை..

ஆனா கேள்விகள் நிறைய இருப்பது சற்று பொறுமையை சோதிக்குது :))

அப்புறம் சகா, அந்த கார்னர் படம்.. சான்ஸ்லெஸ்.. இபப்டி போடனும்..நானும் இதை போடரேன்..

ஆனா கார்னர்னு வைக்கனுமா?

வேற தலைப்பு?

Anonymous said...

பதில்கள் எல்லாம் short and cute type...27வது பதில் ரொம்ப பொருப்பான பதில்...ஆமாப்பா நம் சமுதாய முன்னேற்றத்தின் தாமதம் இதால கூடன்னு சொல்லலாம்...வாழ்த்துக்கள் வசந்த்.....

கலையரசன் said...

நீங்க ரொம்ப நல்லவருங்கண்ணா!
ஓக்காந்து பொருமையா 32 கேள்விகளுக்கு
பதில் சொல்லியிருக்கீங்க பாருங்க...
/பாராட்டுக்கள்! (படிச்ச எனக்குதான்)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தல.. கேள்வில சாய்ஸ் ஏதும் கிடையாதா?

ஞாயிறு திங்கள் கிழமைகளில் பதில் கொடுத்துவிடுகிறேன்.

அழைத்தமைக்கு நன்றி

Unknown said...

உங்கள் “ஒரு கொசுவின் கதை” குங்குமம் இதழ்
லேட்டஸ்ட் 28-05-09 பக்கம் 27 (செளந்தர்ய ரஜனி
அட்டைப்படம்) பிரசுரமாகி உள்ளது.

வாழ்த்துக்கள்.

சுந்தர் said...

விரைவில் உங்களுக்கேற்ற பெண் கிடைக்க வாழ்த்துக்கள் நண்பா., ஆமா ,நீங்க எந்த ஸ்கூல், காலேஜ் படிச்சீங்க?

இராகவன் நைஜிரியா said...

வணக்கம்.

தங்களின் அழைப்பு இரண்டாவதாக வந்து இருக்கின்றது.

இதற்கு முன் தம்பி அபுஅஃப்ஸர் அழைத்து விட்டார்.

நாங்க எல்லாம் இரண்டு வாரத்துக்கு ஒரு இடுகைப் போடுவதுதான் வழக்கம். அதனால, இன்னும் ஒரு வாரம் அதற்கு பாக்கி இருக்கு. போட்டுடலாம்.

விரைவில் திருமணம் நடக்க வாழ்த்துகள்.

//28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

காதல் இது எப்போ எவளிடம் பூதமாக வெளியேறப்போகிறதோ?..//

பூதமா... என்னங்க இது இப்பவே பூதம் அப்படி இப்படின்னு சொல்லிகிட்டு.

கார்த்திகைப் பாண்டியன் said...

வெளிப்படையான பதில்கள் நண்பா.. நல்லா இருக்கு..:-)

ப்ரியமுடன் வசந்த் said...

கடைக்குட்டி said...
உங்க பதில்களில் மிளிரும் இயல்பு --

அ ழ கு !!

நன்றி கடைக்குட்டி

ப்ரியமுடன் வசந்த் said...

//கார்க்கி said...
சுவை..

ஆனா கேள்விகள் நிறைய இருப்பது சற்று பொறுமையை சோதிக்குது :))

அப்புறம் சகா, அந்த கார்னர் படம்.. சான்ஸ்லெஸ்.. இபப்டி போடனும்..நானும் இதை போடரேன்..

ஆனா கார்னர்னு வைக்கனுமா?

வேற தலைப்பு?//

நன்றி கார்க்கி சகா

வேற தலைப்பு இருந்தா சொல்லுங்களேன்

ப்ரியமுடன் வசந்த் said...

//தமிழரசி said...
பதில்கள் எல்லாம் short and cute type...27வது பதில் ரொம்ப பொருப்பான பதில்...ஆமாப்பா நம் சமுதாய முன்னேற்றத்தின் தாமதம் இதால கூடன்னு சொல்லலாம்...வாழ்த்துக்கள் வசந்த்.....//

நன்றி தமிழ்

ப்ரியமுடன் வசந்த் said...

//கலையரசன் said...
நீங்க ரொம்ப நல்லவருங்கண்ணா!
ஓக்காந்து பொருமையா 32 கேள்விகளுக்கு
பதில் சொல்லியிருக்கீங்க பாருங்க...
/பாராட்டுக்கள்! (படிச்ச எனக்குதான்)//

நன்றி கலை

ப்ரியமுடன் வசந்த் said...

//கே.ரவிஷங்கர் said...
உங்கள் “ஒரு கொசுவின் கதை” குங்குமம் இதழ்
லேட்டஸ்ட் 28-05-09 பக்கம் 27 (செளந்தர்ய ரஜனி
அட்டைப்படம்) பிரசுரமாகி உள்ளது.

வாழ்த்துக்கள்.//

தகவலுக்கு மிக்க நன்றி ரவி

ப்ரியமுடன் வசந்த் said...

//தேனீ - சுந்தர் said...
விரைவில் உங்களுக்கேற்ற பெண் கிடைக்க வாழ்த்துக்கள் நண்பா., ஆமா ,நீங்க எந்த ஸ்கூல், காலேஜ் படிச்சீங்க?//

லட்சுமிபுரம் மேல் நிலைப்பள்ளி

தங்கம் முத்து தொழில் நுட்ப கல்லூரி பெரியகுளம்

நன்றி சுந்தர்

ப்ரியமுடன் வசந்த் said...

//இராகவன் நைஜிரியா said...
வணக்கம்.

தங்களின் அழைப்பு இரண்டாவதாக வந்து இருக்கின்றது.

இதற்கு முன் தம்பி அபுஅஃப்ஸர் அழைத்து விட்டார்.
//


நாங்க எல்லாம் இரண்டு வாரத்துக்கு ஒரு இடுகைப் போடுவதுதான் வழக்கம். அதனால, இன்னும் ஒரு வாரம் அதற்கு பாக்கி இருக்கு. போட்டுடலாம்.

விரைவில் திருமணம் நடக்க வாழ்த்துகள்.

//28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

காதல் இது எப்போ எவளிடம் பூதமாக வெளியேறப்போகிறதோ?..//

பூதமா... என்னங்க இது இப்பவே பூதம் அப்படி இப்படின்னு சொல்லிகிட்டு.//

மாட்டிக்கிட்டீங்க

நன்றி ராகவன்

ப்ரியமுடன் வசந்த் said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
வெளிப்படையான பதில்கள் நண்பா.. நல்லா இருக்கு..:-)//

நன்றி கார்த்திகேய பாண்டியன்

ப்ரியமுடன் வசந்த் said...

//SUREஷ் said...
தல.. கேள்வில சாய்ஸ் ஏதும் கிடையாதா?

ஞாயிறு திங்கள் கிழமைகளில் பதில் கொடுத்துவிடுகிறேன்.

அழைத்தமைக்கு நன்றி//

ரொம்ப கஷ்டமான கேள்வியெல்லாம் கிடயாதுங்க

எப்ப வேணும்னாலும் எழுதுங்க

நசரேயன் said...

ரசித்தேன் வசந்த நினைவுகளை

நிலாரசிகன் said...

வசந்த கால குறிப்புகள்
"வசந்த்" கால குறிப்புகள் என்றிருந்தால் இன்னும் பொருந்தி இருக்கும். பதில்கள் அனைத்தும் அழகு.வாழ்வெல்லாம் வசந்தம் வீசட்டும்.வாழ்த்துகள்